Wednesday, September 12, 2007

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...


படம் :அவதாரம்
பாடல் :வாலி்
இசை:இளையராஜா
பாடியது:இளையராஜா, S ஜானகி


தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா


(நினைவலைகளில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அடாலஜ், குஜராத், ஜனவரி 2007)



உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக்கண்ணே..

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது


(அலமண்டா மலரின் அழகை ரசிக்கும் கொசு, சென்னை, செப்டம்பர் 2006)

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

(கல்வாழை பூவுக்குள்ளே, சென்னை, செப்டம்பர் 2006)

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல
ஒடும் அது ஒடும் இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.

(கார் விண்ட்ஸ்க்ரீனில் இருந்த ஸ்டிக்கர் நீல வானத்தை கருநீலமாக்கியது, கே ஆர் புரம் தொங்கு பாலம், பெங்களூர், ஜூலை 2007)


தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

(வாழைப்பூவில் அமர்ந்திருக்கும் வண்டு, சென்னை, அக்டோபர் 2006)

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது


(பால்சம் மலர்கள், சென்னை, ஜனவரி 2007)


குயிலே குயிலினமே அந்த இசையாய் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா

(கொம்பில் அமர்ந்திருக்கும் நீர்காகங்கள், காங்கரியா ஏரி, குஜராத், டிசம்பர் 2006)


கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

(தேசிய நெடுஞ்சாலை எண் 76, உதய்பூர், அக்டோபர் 2006)

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன


(Flickr-இல் அடுத்தவர்களின் புகைப்படங்களைப் பார்த்து கிடைத்த எண்ணங்கள், செப்டம்பர் 2007)

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
தமிழில் புகைப்படக் கலை - செப்டம்பர் 2007, வண்ணங்கள் தலைப்பிலான போட்டிக்காகன்னு - என்னென்னமோ ஐடியா பண்ணி வச்சேன்...தேதி முடிஞ்சுடுச்சா? அட! கடவுளே :(
முதல் இரு படங்களும் போட்டிக்கான படங்கள்.

50 comments:

மனதின் ஓசை said...

நல்ல ரசனையான படங்கள்..

நானும்தான் அப்பப்ப் KRபுரம் பாலத்த கடக்கிறேன் டிரப்பிக் பற்றின எரிச்சலோட...ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் ஞானம் வேணும் :-)

கூடவே கேமராவும் வேணும் :-))))

SurveySan said...

in my opinion, Ilayaraja's best ever!

What a composition, what a score - totally awesome! better than Thiruvasagam, better than Guru, better than How to Name it....

உங்க படமும், அருமை. குறிப்பா அந்த குளமும், கலர் பென்ஸிலும் ;)

அனுப்பியாச்சா போட்டிக்கு? லேட்டா? சிபாரிசு தேவையா?

அனுசுயா said...

வண்ண வண்ணமாய் இருக்குதம்மா கைப்புள்ள படங்கள் அருமையாய் :)
சூப்பர் புகைப்படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க

கைப்புள்ள said...

//நல்ல ரசனையான படங்கள்..//

வாங்க எம்ஜிஆர்,
ரொம்ப நாளைக்கப்புறம் வர்றீங்க. ரொம்ப நன்றிங்க :)

//நானும்தான் அப்பப்ப் KRபுரம் பாலத்த கடக்கிறேன் டிரப்பிக் பற்றின எரிச்சலோட...ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் ஞானம் வேணும் :-)

கூடவே கேமராவும் வேணும் :-))))//

கேமரா இருந்துச்சின்னா கிறுக்கு புடிச்சி படமா புடிச்சி தள்ளிட்டிருப்போம்ல. முதல்ல ஒரு பொட்டி வாங்குங்க. அப்புறம் நீங்களே உங்க திறமையைப் பாத்து ஆச்சரியப் பட்டுப் போவீங்க.
:)

கைப்புள்ள said...

//in my opinion, Ilayaraja's best ever!

What a composition, what a score - totally awesome! better than Thiruvasagam, better than Guru, better than How to Name it....//

வாங்க சர்வேசன்,
பெரியவங்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம். இந்த போட்டியோட அறிவிப்பு வந்த நாளா இந்த பாட்டைத் தான் மனசுல ஓட விட்டுட்டு இருக்கேன்.

//உங்க படமும், அருமை. குறிப்பா அந்த குளமும், கலர் பென்ஸிலும் ;)//
ரொம்ப நன்றிங்க. சந்தோஷமா இருக்கு.

//அனுப்பியாச்சா போட்டிக்கு? லேட்டா?//

ஆமாங்க லேட்டாயிடுச்சு தான். 15 ஆம் தேதி கடைசி நாள்னு நெனச்சி கோட்டை விட்டுட்டேன். ஒழுங்கா என்னோட ரெண்டு படம் இதுன்னு முதல்லயே போட்டியில சேர்ந்திருக்கலாம். (நிறைய படங்கள் ஒரு வருசத்துக்கு முந்தி எடுத்தது). ஏதாவது வித்தியாசமா செய்யனும்னு நெனச்சி காமெடியில முடிஞ்சுடுச்சு. ஓவரா ஃபிலிம் காட்ட நெனக்கிறவங்களுக்கு என் கதை ஒரு பாடமா இருக்கட்டும்...பாடமா இருக்கட்டும்(திருவிளையாடல் சாவித்ரி ஸ்டைல்ல படிங்க)

//சிபாரிசு தேவையா?//
ஒரு விதத்துல...ஆமாம். PIT ஆசிரியர் குழு பாத்து எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தையோ குறை நிறைகளயோ சொன்னா சந்தோஷப் படுவேன்.

நன்றி.

கைப்புள்ள said...

//வண்ண வண்ணமாய் இருக்குதம்மா கைப்புள்ள படங்கள் அருமையாய் :)
சூப்பர் புகைப்படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க//

வாங்க அனுசுயா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றிங்க.
:)

Expatguru said...

This was one of the best compositions of Ilaiyaraja. Thanks for posting the lyrics.

SurveySan said...

சிபாரிசு செஞ்சுருக்கேன். பாப்போம். நடுவர் குழு ஏற்கனவே வேலைய ஆரம்பிச்சிட்டாங்கன்னா, கஷ்டம்தேன்.

இருந்தாலும், இந்த ரெண்டு படம்னு அங்கன ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க. பாத்து செய்வாங்க.

அட்லீஸ்ட், நல்ல வாக்காவது சொல்லுவாங்க ;)

Anand V said...

பென்ஸில் படத்தை கொஞ்சம் ஷார்ப்பா போகஸ் பண்ணி போட்டிக்கு அனுப்பி இருந்தால் நிச்சயம் என் ஓட்டு விழுந்து இருக்கும் !

Anand V said...

கைப்பு
உங்க படங்களை சேர்த்துகிறதுல எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஜீவ்ஸ்க்கும் சரி என்றால் எனக்கு ஒகேதான். முதல் இரண்டு படங்களா ?

siva gnanamji(#18100882083107547329) said...

ஒளிஓவியர் கைப்ஸிற்கு
வாழ்த்துகள்!

கைப்புள்ள said...

//This was one of the best compositions of Ilaiyaraja. Thanks for posting the lyrics//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி குரு சார்.

கைப்புள்ள said...

//அட்லீஸ்ட், நல்ல வாக்காவது சொல்லுவாங்க ;)//

நன்றி சர்வேசன்.

கைப்புள்ள said...

//கைப்பு
உங்க படங்களை சேர்த்துகிறதுல எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஜீவ்ஸ்க்கும் சரி என்றால் எனக்கு ஒகேதான். முதல் இரண்டு படங்களா ?//

நன்றி ஆனந்த். நடுவர்கள் ரெண்டு பேருக்கும் என்னை ஆட்டையில சேர்த்துக்கறது ஓகேன்னா முதல் ரெண்டு படங்களையும் கணக்கில் எடுத்துக்கங்க.

கைப்புள்ள said...

//ஒளிஓவியர் கைப்ஸிற்கு
வாழ்த்துகள்!//

நன்றி சிவஞானம்ஜி சார்.

இராம்/Raam said...

தல,

சூப்பரு.... :)

கைப்புள்ள said...

நன்றிப்பா ராயல்.

நாகை சிவா said...

வண்ணங்களை மிக அருமையாக காட்டிய மிக அருமையான பாடலுடன் பதிவை போட்டு அசத்திட்டீங்க போங்க... அருமை அருமை....

வாழ்த்துக்கள், போட்டில சேர்த்துக் கொள்வார்கள் போல இருக்கே....

நாகை சிவா said...

இதுல எனக்கு மிகவும் பிடிச்சது கல்வாழை பூ தான் என்ன கலர் என்ன கலரு... அருமையா இருக்கு....


அலமண்டா மலரில் இருக்கும் நீர் துளிகளும், அதன் அழகை ரசிக்க வந்த கொசுவும், நம்ம இனப் பெருமை தூக்கி நிறுத்தும் விதமாக அந்த கொசுவை சேர்த்து படம் பிடித்த பாங்கு என்னை மெய் சிலிர்க்க வைக்குது அய்யா... மெய் சிலிர்க்க வைக்குது...

CVR said...

AWESOME photos!!!
I had commented for these fotos in flickr itself!!

sema colors!!

வல்லிசிம்ஹன் said...

வெகு நேர்த்தியான படங்கள் கைப்பூள்ள.
பாட்டும் படமும் என்னமாய் இணைந்து இழைகின்றன!!!

அருமையான கண் விருந்தும், கருத்து விருந்தும் கொடுத்ததற்கு நன்றி.

Sundar Padmanaban said...

superb photos!

kal vaazhaiyum, vaazhaipoo photos are the best.

Best wishes to be the winner of this month in PiT.

கப்பி | Kappi said...

தல,

மதியம் சாப்பிட்டு வந்து உங்க பதிவை பார்த்தேன்..அப்பயிருந்து இன்னும் உங்க படங்கள் கண்ணுலயே இருக்கு..உதட்டுல 'தென்றல் வந்து தீண்டும் போது' :)

கெலிச்சா ட்ரீட் மெட்ராஸ்லயா பெங்களூருலயா? :)))

முகவை மைந்தன் said...

அத்தனையும் முத்துக்கள். கடைசியா வந்தாலும் கண்ல ஒத்துற மாதிரி படங்கள். கடைசி இரண்டும் அருமை என்றால், மூன்றாவது படத்தை விட்டு கண் அகல மறுக்கிறது. திரைசேமி(screen saver) யிலிருந்து வண்ணக் கலவை தொடர்ந்து கொட்டுவதைப் போன்ற உணர்வு.

போட்டி முடிந்ததற்குப் பின் ஒவ்வொரு பதிவுகளாக பின்னூட்டமிடலாம் என இருந்தேன். கட்டுப்படித்த முடியவில்லை.

Athi said...

Kalakkal fotos... esp that Pencil... (Konjam sharpness kammiyo?) Anyway, Vaazhthukkal.

geenila said...

i have kept just a small rose amidst huge huge poochchendu,yep i am mentioning my entry in sep foto contest.....i think u have squeezed in,ravi varma,into your camera.good gallery.

கைப்புள்ள said...

//வண்ணங்களை மிக அருமையாக காட்டிய மிக அருமையான பாடலுடன் பதிவை போட்டு அசத்திட்டீங்க போங்க... அருமை அருமை....

வாழ்த்துக்கள், போட்டில சேர்த்துக் கொள்வார்கள் போல இருக்கே....//

இந்த பாராட்டுகள் எல்லாம் ஒரு டானிக் மாதிரி இருக்குப்பா. மேலும் மேலும் உடம்பை ரணகளமாக்கிக்க ஊக்கம் பெறக்குது. ரொம்ப நன்றி.

ஆமாம். சேத்துக்கிட்டாங்க போலிருக்கு.

கைப்புள்ள said...

//இதுல எனக்கு மிகவும் பிடிச்சது கல்வாழை பூ தான் என்ன கலர் என்ன கலரு... அருமையா இருக்கு....//

எனக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ இது. ரொம்ப பெரிய பூப்பா அது. கிட்டத்தட்ட பூவுக்குள்ள கேமராவை நுழைச்சு இந்த போட்டோவை எடுத்தேன்.
:)

//அலமண்டா மலரில் இருக்கும் நீர் துளிகளும், அதன் அழகை ரசிக்க வந்த கொசுவும், நம்ம இனப் பெருமை தூக்கி நிறுத்தும் விதமாக அந்த கொசுவை சேர்த்து படம் பிடித்த பாங்கு என்னை மெய் சிலிர்க்க வைக்குது அய்யா... மெய் சிலிர்க்க வைக்குது... //
உன் கமெண்டை படிச்சிட்டு எனக்கும் தான்யா மெய்சிலிர்க்குது.


//நம்ம இனப் பெருமை தூக்கி நிறுத்தும் விதமாக அந்த கொசுவை சேர்த்து படம் பிடித்த//

நாமெல்லாம் கொசு இனம்னு சொல்ல வர்றியா என்ன?

கைப்புள்ள said...

//AWESOME photos!!!
I had commented for these fotos in flickr itself!!

sema colors!! //

வாங்க சிவிஆர்,
ஃப்ளிக்ஆரில் கமெண்டு கொடுத்ததற்கும் இங்கு வந்து ஊக்கப் படுத்தியதுக்கும் ரொம்ப நன்றிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசமா இருக்கு படங்கள் ...
வாழ்த்துக்கள்.கைப்ஸ்.

கைப்புள்ள said...

//வெகு நேர்த்தியான படங்கள் கைப்பூள்ள.
பாட்டும் படமும் என்னமாய் இணைந்து இழைகின்றன!!!//

வாங்க வல்லி மேடம்,
நல்லா கவனிச்சிருக்கீங்க. எந்த வரிகளுக்கு எந்த படங்கள் பொருத்தமா இருக்கும்னு யோசிச்சி தான் இந்த பதிவைப் போட்டேன். அதை சரியா கணிச்சு பாராட்டுனதுக்கு ரொம்ப நன்றிங்க.

//அருமையான கண் விருந்தும், கருத்து விருந்தும் கொடுத்ததற்கு நன்றி//
என்ன சொல்றது? சந்தோஷக் கடலில் ஆழ்த்திட்டீங்க. மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//superb photos!

kal vaazhaiyum, vaazhaipoo photos are the best.

Best wishes to be the winner of this month in PiT//

வாழ்த்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி சுந்தர் சார்.

கைப்புள்ள said...

//மதியம் சாப்பிட்டு வந்து உங்க பதிவை பார்த்தேன்..அப்பயிருந்து இன்னும் உங்க படங்கள் கண்ணுலயே இருக்கு..உதட்டுல 'தென்றல் வந்து தீண்டும் போது' :)//

ஜாவா பாவலரே!
வாங்க. போட்டி அறிவிச்ச நாளா நானும் இந்த பாட்டைத் தான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கேன். ரொம்ப நன்றி.

//கெலிச்சா ட்ரீட் மெட்ராஸ்லயா பெங்களூருலயா? :)))//
நான் போட்டிக்கு சேர்த்துக்கற படங்கள் தேறுதா இல்லியான்னு பாப்போம். ஏன்னா அதை பத்தி யாரும் ஒன்னும் அதிகமா சொல்லலை.
:)

கைப்புள்ள said...

//அத்தனையும் முத்துக்கள். கடைசியா வந்தாலும் கண்ல ஒத்துற மாதிரி படங்கள். கடைசி இரண்டும் அருமை என்றால், மூன்றாவது படத்தை விட்டு கண் அகல மறுக்கிறது. திரைசேமி(screen saver) யிலிருந்து வண்ணக் கலவை தொடர்ந்து கொட்டுவதைப் போன்ற உணர்வு//
அடடா! ரொம்ப ரசிச்சு சொல்லிருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

//போட்டி முடிந்ததற்குப் பின் ஒவ்வொரு பதிவுகளாக பின்னூட்டமிடலாம் என இருந்தேன். கட்டுப்படித்த முடியவில்லை//
மிக்க நன்றி சார். மற்ற பதிவுகளையும் நேரம் கெடைக்கும் போது படிச்சிப் பாருங்க. வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

கைப்புள்ள said...

//Kalakkal fotos... esp that Pencil...//
வாங்க ஆதி. மிக்க நன்றி.

//(Konjam sharpness kammiyo?)//
ஆமாங்க வெளிச்சத்தை கவனிச்சு இன்னும் கொஞ்சம் நல்லா போகஸ் பண்ணிருக்கனும் போலிருக்கு.

//Anyway, Vaazhthukkal//
நன்றிங்க ஆதி.

கைப்புள்ள said...

//i have kept just a small rose amidst huge huge poochchendu,yep i am mentioning my entry in sep foto contest.....i think u have squeezed in,ravi varma,into your camera.good gallery//

வாங்க ஜெனிலா மேடம்,
பேரைச் சரியா சொல்லிருக்கேனாங்க? இவ்வளவு பாராட்டுக்கும் தகுதியானவனானு தெரியலை. நானும் இன்னும் கத்துக்கிட்டுத் தான் இருக்கேன். என்னோட படங்களைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கான ஒரு வாயிலாக அமைந்திருக்கிறது இப்புகைப்படப் போட்டி. மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//அட்டகாசமா இருக்கு படங்கள் ...
வாழ்த்துக்கள்.கைப்ஸ்//

வாங்க மேடம்,
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

ஜொள்ளுப்பாண்டி said...

தல கலர்கலரா கலக்குறீங்க !!! எப்படி இப்படியெல்லாம் ??
கைப்ஸ் கைவண்ணம் கலக்குதுங்கோவ்வ் ... :)))))

geenila said...

thambi kaipullai!naan jenila illai ,G-nila.kaipullaiyaanathaaley mannitheyn.en gallerykku oru visit adikrathu...

Unknown said...

Mams All the best daa

காரூரன் said...

படங்கள் பிரமாதம்!
என்ன படப்பெட்டி பாவிர்க்கிறீர்கள்?

கைப்புள்ள said...

//தல கலர்கலரா கலக்குறீங்க !!! எப்படி இப்படியெல்லாம் ??
கைப்ஸ் கைவண்ணம் கலக்குதுங்கோவ்வ் ... :)))))//

நன்றிப்பா பாண்டி. "கலர்களின் காவலனே" வந்து வாழ்த்தறதைக் கேக்கும் போது பெருமிதமா இருக்கு.
:)

கைப்புள்ள said...

//thambi kaipullai!naan jenila illai ,G-nila.kaipullaiyaanathaaley mannitheyn//

பெரிய மனசு பண்ணி இந்தத் தம்பியை மன்னிச்சதுக்கு நன்றி நிலா அக்கா.

//en gallerykku oru visit adikrathu...//

உங்க கேலரிக்கு விசிட் அடிச்சேனே...பிள்ளையார் படத்துலயும் கட்டடங்கள் படத்துலயும் கமெண்ட் கூட போட்டேனே. நானும் ரெண்டு நாளா உங்க ப்ளாக்கை வந்து வந்து பாக்கறேன் என் கமெண்டைத் தான் காணோம்.
:(

கைப்புள்ள said...

//Mams All the best daa//

தேங்க்ஸ்டா மச்சி.

கைப்புள்ள said...

//படங்கள் பிரமாதம்!
என்ன படப்பெட்டி பாவிர்க்கிறீர்கள்?//

நன்றி காரூரன் சார். நான் உபயோகிக்கும் படப்பெட்டி கேனான் டிஜிட்டல் இக்ஸஸ் 750. (Canon Digital Ixus 750, சில நாடுகளில் இதை Canon Powershot SD550 என்றும் அழைக்கிறார்கள்).

இதை பாருங்கள்.
http://www.flickr.com/cameras/canon/powershot_sd550/

இலவசக்கொத்தனார் said...

படங்கள் நல்லா வந்திருக்கு. முக்கியமா அந்த பென்சில் படம். ஆனா அதை எல்லாம் விட உங்க கமெண்டுதான் சூப்பர். :)

Deekshanya said...

Liked all the pics brother, but my favourite is the "வாழைப்பூ" - good timing and clarity.

Anonymous said...

Hi kaippullai,

Jumped here from Srikanth's Blog.

I love the song "Thendral vandhu".

By the way, were the photos snapped by you?

They look great.

Voracious Blog Reader

Srikanth said...

thala,

epadipoo irukeenga ? adaadadaa paatum sooper photos um sooper...kuripaa antha top photo top..

:)

கார்த்திக் பிரபு said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி