பஸ் பயணங்களில் #1 இங்கேயிருக்கு...படிச்சிப் பாருங்க
The Whole is Greater than the sum of its Partsனு சொல்லுவாங்க. "Whole" ஆகிய பேருந்து பயணத்தினை முழுமையாக்கும் "Parts"கள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள், செக்கிங் இன்ஸ்பெக்டர் இன்னும் நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றவர்கள். ஆனால் சில சமயம் இந்த பார்ட்ஸ்களைத் தனித் தனியே கவனிப்பதும் சுவாரசியமாகவே இருக்கும். உதாரணத்துக்கு இந்த நடத்துனர்களை எடுத்துக்கங்களேன்...தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் காவி வேட்டி கட்டிய நடத்துனர்கள் 'யார் சீட்டு...கேட்டு வாங்கிக்க' என்று கேட்பதிலாகட்டும், கோயம்புத்தூரில் சேரன்(முன்னாள்) பேருந்துகளில் ரைட்டு சொல்வதற்குப் பதிலாகத் தந்தி அடிப்பதிலாகட்டும், சென்னையில் நடத்துனர்கள் 'ரேய் ரேய்'வும் 'எறங்கி ஏறு'வும் 'அடுத்த ஸ்டேஜ்ல செக்கிங் வராங்க"ன்னுசொல்வதிலாகட்டும், கூட்டம் நிறைந்த வேளைகளில் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி நடத்துனர்கள் கீழே இறங்கி 'பேகே இள்றி' என்று துரிதப் படுத்துவதிலாகட்டும், புது தில்லியில் டிடிசி(DTC) நடத்துனர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஹரியான்வி(கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பேசற மொழி) மொழியில் 'டிகிட் போள் பாய்' எனக் கூறுவதிலாகட்டும், நடத்துனர்களின் 'மேனரிசங்களைக்' கவனிப்பதும் ஒரு தனி ஜாலி தான். டிக்கட் கிழிப்பதிலும் நகரத்திற்கு நகரம், நடத்துனர்களுக்குள் பல விதமான வேறுபாடுகள். முன்னாள் திருவள்ளுவர்(இந்நாள் அரசு விரைவுப் பேருந்து, தமிழ்நாடு) பேருந்துகளில் நெயில்கட்டர் போன்ற ஒரு கருவி கொண்டு டிக்கட்டில் ஸ்டேஜை பஞ்ச் பண்ணி கொடுப்பார்கள். நம்ம சென்னை பேருந்து நடத்துனர்களின் டிக்கட் கிழிக்கும் வேகம் சும்மா சொல்லக் கூடாது...செம ஃபாஸ்ட். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்சர்ருன்னு கையாலேயே டிக்கட் கிழிச்சி குடுத்துட்டு "யாரு டிக்கட் யாரு டிக்கட்"னு கூட்டமான வண்டிக்குள்ளேயும் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருப்பாங்க. இதுவே தில்லியை எடுத்துக்கிட்டீங்கன்னா அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் வண்டி கெளம்பும் போது மட்டும் தான் சீட்டுக்கு வந்து டிக்கெட் குடுப்பாங்க, அதுக்கப்புறம் உக்காந்த எடத்தை விட்டு எந்திரிச்சு வர மாட்டாங்க. மும்பை பெஸ்ட்(BEST) பேருந்துகளின் நடத்துனர்களைப் பாத்தீங்கன்னா சீருடையிலேயே ஒரு ஒழுங்கு தெரியும். சட்டையிலே பெயர் பலகை(Name Plate) குத்தியிருக்கும், சட்டை பட்டன்கள் கூட போலிஸ் சீருடையில் இருக்கற மாதிரி உலோக பட்டன்கள் இருக்கும், அதோட டிக்கட்களை அடுக்கி வச்சிக்க உலோகத்திலான ஒரு பலகை வச்சிருப்பாங்க.
நகரத்துக்கு நகரம் நடத்துனர்களுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே நகரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு நடத்துனருக்குன்னும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில பேரு பல நாள் ஆனாலும் நம்ம நினைவுலேயே நிப்பாங்க. அது மாதிரி சென்னையில் திருவல்லிக்கேணியிலிருந்து தி.நகர் செல்லும் 13 எண் வழித்தடத்தில் வரும்(இந்நேரம் ஓய்வு பெற்றிருப்பாரு) ஒரு நடத்துனர், 'I knew him well and every truant knew' மாதிரியான மனிதர். ஏன்னா அந்த ரூட்டுல போறவங்க எல்லாருக்கும் அவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும். என்னோட பதிவுக்கு அப்பப்ப வரும் கல்லூரி நண்பன் ஜனாவுடன் கல்லூரி முடிந்து வீடு வரும் போதும் அவரைப் பத்திப் பேசிப்போம். ஏனோ அப்ப அவரோட பேரைக் கேட்டுக்கணும்னு தோணலை. எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருப்பார்...அவர் அந்த பேருந்துல இருக்கறது பயணிகள் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டே இருக்கும். நடத்துனராக இருப்பதைப் பெருமையாகக் கருதுபவர் என அவரைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். கம்மி சம்பளம், சில சமயம் பண்டிகை நாட்களில் கூட வேலை என்றிருந்தாலும் மகிழ்ச்சியாகத் தன் பணியைச் செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் அதிசயமாகவும், சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும். பஸ் பாஸ் எடுத்து நீட்டும் பிள்ளைகளிடம் "நீயே பஞ்ச் பண்ணிக்க பாப்பா" எனச் சிரித்து விட்டு சிநேகமாகக் கண்ணடிப்பார். ஸ்கூல் குழந்தைகள் எறங்கும் போது ஓட்டுநர் அவசரப் படுத்தி வண்டியை எடுக்க முயற்சிக்கும் போது "யோவ் இருய்யா...புள்ளைங்கள்லாம் எறங்குதில்ல? என்ன அவசரம்" என்று ஓட்டுநரைக் கடிந்து கொள்வார். பாரதி சாலை(Pycrofts Road) தணிகைவேலன் இனிப்பகம் வந்ததும் "வண்டியைக் கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிக்கய்யா, மதியான சாப்பாட்டுக்கு பொகடா வாங்கிட்டு வந்துர்றேன்"அப்படீம்பாரு. கேக்கறதுக்கே காமெடியா இருக்கும். அதோட எப்பவும் "ரைட்டு ரைட்டு" என்றும் "ஹோல்ட் ஆன்" என்றும் திருத்தமாகத் தான் சொல்வார். டபுள் விசில், ஷார்ட் விசில் என்று உதட்டு நுனியிலிருந்து விசில் அடிக்கும் இளம் வயது நடத்துனர்களின் மத்தியில் நம்மாளு தனியாத் தெரிவாரு. பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் "பெரிய தெரு புள்ளார் கோயில் எல்லாம் எறங்கு" அப்படின்னு சத்தமா சொல்லுவார். என்ன அதுல விசேஷம்னா அவரு சொல்றது Pullaar இல்லை Bullaar. அதைக் கேட்டதும் உங்களையும் அறியாமல் உங்கள் உதட்டில் ஒரு புன்னகை வந்து தொற்றிக் கொள்ளும். வழுக்கைத் தலையும், பெரிய உதடுகளும், சோடாபுட்டிக் கண்ணாடியும் போட்ட ஒரு வயதான நடத்துனர் தான் என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவர் வாழ்வில் கடுகளவேனும் மகிழ்ச்சியை விதைக்கும் அத்தகையவர்கள் 'வாழும் முன்னாபாய்கள்' தான்.
நடத்துனர்களைப் போலவே ஓட்டுநர்களுக்குன்னு சில பழக்கங்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். பயணிகள் ஏறி இறங்கும் வழியாகச் சுலபமாக ஏற முடிந்தாலும் சில ஓட்டுநர்கள் ஓட்டுநர் சீட் அருகில் இருக்கும் சிறிய கதவு வழியாகத் தான் கஷ்டப் பட்டு ஏறுவார்கள். கியர் பாக்ஸ் மேல் யாராவது உக்காந்தா ஓட்டுநர்களுக்குச் செம கோபம் வரும். ஒரு முறை ஒரு பயணி 'நிக்கிறதுக்குக் கஷ்டமா இருக்குன்னு தானே உக்காருறோம், இதுக்குப் போய் கோவப் படறீங்களே" எனக் கேக்க "எங்களுக்கு சோறு போடற தெய்வம்யா அது, அது மேல உக்காருறேன்னு சொல்றியே" என வெடுக்கென்று பதிலளித்தார். அதே போல பேருந்தில் தூங்குபவர்களைக் கண்டால் ஓட்டுநர்களுக்கு ஆகவே ஆகாது. கிண்டியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 45B வழித்தடத்தில் நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. கூட்டமான அந்த பேருந்தில் டிரைவருக்கு அருகாமையில் ஒருவர் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த டிரைவருக்கு வந்ததே கோபம் "என்னா சார்? நின்னுக்கிட்டே சாமியாடுறீங்களா? நான் சாமியாடுனா எல்லாரும் சாமியாட வேண்டியது தான்" என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டார்கள். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரின் பொறுப்பு ஒரு ஓட்டுநரிடத்தில் இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் மத்தியான சாப்பாடு கூட சரியா சாப்புட மாட்டாங்க...சாப்பிட்டா தூக்கம் வந்துடும்னு. அதோட உக்காந்தே வேலை பார்ப்பதனால் பைல்ஸ் நோய் ஓட்டுநர் வேலை பார்ப்பவர்களை மிக எளிதாகத் தாக்குகிறது என்று எப்போதோ படித்திருக்கிறேன். ஓட்டுநர்களை வித்தியாசப் படுத்திக் காட்டும் ஸ்டைல் விஷயம்னு பாத்தா அது கியர் போடுவதும், ஸ்டியரிங் வீலைப் பிடிப்பதிலும் தான். மற்றபடி ரோட்டைப் பார்த்து கவனமாக ஓட்டுவதில் ஓட்டுநர்களின் கவனம் இருக்கும் என்பதால் அதிகமாகப் பேசமாட்டார்கள். அதனால நடத்துனர்களைப் பத்தி எழுதுன அளவுக்கு ஓட்டுநர்களைப் பத்தி எழுதுறதுக்கு விஷயம் கெடைக்கறது கஷ்டம் தான்.
சென்னையின் பேருந்துகளில் பேருந்து வழித்தட எண்களைத் தவிர்த்து பேருந்துகளின் பக்கங்களிலும் பின்புறத்திலும் ADH505, TAG972, PRA912 போன்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு. உதாரணமாக AD என்பது அடையாறு பணிமனையையும், TA என்பது தாம்பரம் பணிமனையையும், PR என்பது பெரம்பூர் பணிமனையையும் குறிக்கும் குறியீடு. பணிமனையைக் குறிக்கும் அந்த இரண்டு எழுத்துகளுக்குப் பின் வரும் G,H என்னும் எழுத்துகள் போக்குவரத்து கழகத்தில் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அளிக்கப்படும் ஒரு சிரீஸ்(series). அதன் பின்னர் வரும் எண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் வித்தியாசப்படும். நீங்கள் உங்கள் ரூட்டில் வரும் பேருந்துகளை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த எண்களும் நினைவில் நின்றுவிடும். பலமுறை பேருந்துகளின் பக்கவாட்டில் இந்த எண்களை அடையாளம் கண்டு கொண்டே பேருந்துசை ஓடிச் சென்று பிடித்த அனுபவங்களும் உண்டு. ஆனால் சில சமயம் ஒரே பணிமனையைச் சேர்ந்த பேருந்துகளை வேறு வழித்தடத்தில் மாத்தி விட்டுடுவாங்க...அப்போ மட்டும் உங்களுக்கு மனப்பாடம் ஆனது வேஸ்ட் ஆயிடும். என்னங்க ரொம்ப போர் அடிக்குதா? இந்த மாதிரி 'பொழுது போகாத பொம்மு' வேலை நெறைய பண்ணிருக்கோம்ல? இத மாதிரி பல பொ.போ.பொ வேலைகள்ல நம்ம கிட்ட அதிகமா மாட்டிக்கிட்டு முழிச்சவனும் ஜனா தான். அதெல்லாமும் வரலாற்றுல எடம் பெற்றுத் தானே ஆகனும்? அதான் இன்னிக்கு வச்சி ப்ளேடு போட்டாச்சு :)
"எல்லாம் சரி தான்...ஆனா பயணிகள் இல்லாத பேருந்து என்னய்யா பேருந்து. அத பத்தி நீ ஒன்னுமே எழுதலியே"னு கேள்வி கேக்கறீங்க...எனக்கும் அது புரியாம இல்லை. ஆனா பாருங்க திவ்யாவுக்கு ஆன்லைன்ல வந்து அட்வைஸ் பண்ண 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர்' நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. எல்லா ரம்பத்தையும் ஒரே பதிவுல போடாதே...1, 2, 3ன்னு நம்பர் போட்டு போடுன்னு அருள்வாக்கு சொன்னாருங்க. அதுனால 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'யோட ரெண்டு சிங்கிளை முடிச்ச நம்ம பேருந்து, ஓட்டுநர் கண்டக்டர் டீ சாப்புட்டுட்டு வந்ததும் மூனாவது சிங்கிளை சீக்கிரமாவே ஆரம்பிக்கும்ங்க.
Sunday, December 03, 2006
பஸ் பயணங்களில் #2
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
படிக்கட்டில தொங்கிகிட்டிருந்த பசங்களைப்பார்த்து நடத்துனர் ஒருவர் டென்சனாகிக் கத்தினார்
"ஏஞ்சாமிகளா எல்லாரும் வீட்ல சொல்லிட்டிவந்திடீங்களா?"
தொங்கிக் கொண்டிருந்தவனில் ஒருத்தன் சொன்னான்.
" அதெல்லாம் சொல்லாம வருவமா - அரசு பேருந்துலையில்ல போகவேண்டியிருக்கு!"
நடத்துனர் விடவில்லை
"அது சரி, நீ கீழ விழுந்து தொலை
ச்சீன்னா உதவிசெய்றதுக்கு அரசு வராது!"
"அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டுத்தான வந்திருக்கோம்1"
"ஏற்பாடா, என்ன சாமி ஏற்பாடு?"
அவன் சொன்னான்
"வெளிய எட்டிப் பாருங்க தலைவரே!"
பேருந்தின் பின்னால் தற்செயலாக வந்துகொண்டிருந்தது ஒரு அம்புலன்ஸ்
அப்ப ( அதாவது கன காலத்துக்கு முந்தி) ஒரு நடத்துனர் சென்னையிலே
ரொம்ப அழகாத் தமிழ் பேசுவார். இலக்கண சுத்தமுன்னாப் பாருங்க.
பயணச்சீட்டு வாங்கிவிட்டீரா? ன்னு கேப்பார். அவரைக் கலாய்க்கவே
நாங்க அவரோட பேருந்துலே( நன்றி மா.சி) ஏறுவோம். "நடத்துனரே இருபத்தைந்துப்
புதுக்காசுகளுக்குரிய பயணச்சீட்டு வேண்டும்"
"நடத்துனரே, நிறுத்துங்கள் . நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது"
அப்புறம் ஒரு நாள் தெரிஞ்சது, அவர் உண்மையிலேயே தமிழ் படித்தவர்ன்னு
புலவர் படிப்புப் படிச்சவராம்.
பேருந்து ஒன்றில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து உள்ளே வரும்படி சொல்லிச் சளைத்துப்போன நடத்துனர் ஒருவர், டென்சனாகிச் சொன்னார்
"ஏஞ்சாமிகளா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்தீட்டிங்களா?
தொங்கிக் கொண்டிருந்தவனில் ஒருவன் சொன்னான்
"அதெல்லாம் சொல்லாம வருவமா - அரசு பஸ்லைல போக வேண்டியிருக்கு!"
"அது சரி! நீ கீழ விழுந்து தொலைசீன்னா, உதவிக்கு அரசு வராது!"
"அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டுதானே வந்திருக்கோம்"
"ஏற்பாடா, என்ன சாமி ஏற்பாடு?"
"வெளீய ஏட்டிப் பாருங்க தலைவரே"
நடத்துனார் பின்புறக் கண்ணாடி வழியாக் எட்டிப் பார்த்தார்
ஒரு அம்புலன்ஸ் வண்டி தற்செயலாகப் பஸ்ஸைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது!
பஸ் பயணம் நல்லாயிருக்குங்க கைப்புள்ள. பஸ் ட்ரைவர்களவிட கண்டக்டர் படற பாடு பெரும்பாடு.
வாங்க வாத்தியார் ஐயா,
ஜோக்குகள் மற்றும் துணுக்குகளின் சுரங்கம் போல நீங்க :)
//நடத்துனர் விடவில்லை
"அது சரி, நீ கீழ விழுந்து தொலை
ச்சீன்னா உதவிசெய்றதுக்கு அரசு வராது!"
"அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டுத்தான வந்திருக்கோம்1"
"ஏற்பாடா, என்ன சாமி ஏற்பாடு?"//
நீங்க ஜோக்ல சொன்ன நடத்துனர் ரொம்ப நல்ல மாதிரி போல. சில நடத்துனர்கள் நல்லாத் திட்டி விட்டுடுவாங்க.
//"நடத்துனரே, நிறுத்துங்கள் . நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது"
அப்புறம் ஒரு நாள் தெரிஞ்சது, அவர் உண்மையிலேயே தமிழ் படித்தவர்ன்னு
புலவர் படிப்புப் படிச்சவராம்//
அடடா! தமிழ் புலவர்களையும் கலாய்த்த எங்கள் பின்னூட்ட நாயகி துளசியக்கா வாழ்க வாழ்க!
:)
//பஸ் பயணம் நல்லாயிருக்குங்க கைப்புள்ள. பஸ் ட்ரைவர்களவிட கண்டக்டர் படற பாடு பெரும்பாடு//
நன்றிங்க அனுசுயா. ஆமாங்க மக்களைப் பேசி சமாளிக்கிறதுங்கறது எப்பவும் கஷ்டமான விஷயம் தாங்க.
தல!
ஓட்டுனர பத்தியும் சொல்றதுக்கு நிறைய இருக்கு தல. ஆனால் வாடிக்கையா அதே பேருந்துல பயணம் செஞ்சா மட்டுமே ஓட்டுனர் பத்தி தெரிஞ்சிக்க முடியும்.
பல நல்ல நடத்துனர்கள பாத்திருக்கேன் சில மோசமான நடத்துனர்கள பாத்திருக்கேன்.
இங்கே (கோவையில்) அவனாசி ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நகரப் பேருந்துகளிலெல்லாம் கூட்டம் அலைமோதும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் அந்தத் தெருவில் 10ற்கும் மேற்பட்ட பெரிய கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இருப்பதால் பெரும்பாலும் பயணிப்பவர்கள் மாணவர்களும் மாணவிகளும்தான்
ஒரு கல்லூரி மாணவி, சில புத்தகங்கள், அதோடு சிறிய எவ்ர்சில்வர் டாப்பாவில் மதிய உணவு - இரண்டையும் சேர்த்து ஒரு கையில் பிடிததவாறும், மற்றொரு கையால் மேற் கம்பியைப் ப்டித்தவாறும் நிற்கின்றாள்
அருகில் இருந்த 3 மாணவர்களில் ஒருவன் இன்னொருவனிடம் கிசுசுக்கின்றான்.
"என்னடா மாப்ளே, டப்பா சின்னதா இருக்கே, அக்காவிற்குப் போதுமா?"
"இல்லை சாப்பாடு மத்தியானம் வீட்லேயிருந்து வரும்?"
"அப்ப இது என்ன?"
"இது ஊறுகாய்!"
அந்தப் பேண் திரும்பிப் பார்த்துவிட்டு, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் சொன்னாள்,
"இல்லை தம்பிங்களா, சாப்பாடு வீட்டிலேருந்து வராது. B2 ஸ்டேசன்லயிருந்துதான் வரும். எங்க அப்பா அங்கதான் S.I yaa இருக்காரு - வர்ரீங்களா, உங்களுக்கும் சேர்த்துக் கொண்டாரச் சொல்லட்டுமா?"
அப்புறம்?
அப்புறம் என்ன - அந்த மூன்று பையன்களும் அடுத்த நிறுத்ததில் இறங்கி விட்டார்கள்!
தன் வேலையை நேசிக்கும் நடத்துனர் பணியாற்றும் பேருந்தில் பயணிப்பதே தனி அனுபவம்தான்.
எல்லோரையும் பேருந்துகளில் போக வைத்த உங்கள் நினைவுகளுக்கு நன்றிகள்.
அன்புடன்,
மா சிவகுமார்
//பேருந்துகளில் நெயில்கட்டர் போன்ற ஒரு கருவி கொண்டு டிக்கட்டில் ஸ்டேஜை பஞ்ச் பண்ணி கொடுப்பார்கள்//
டவுன் பேருந்தில் பொதுவா ஸ்டேஜ் எண்ணைக் கிழிச்சுக் கொடுப்பாங்க.
//அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு.//
இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களே!
ஹாய் கைப்ஸ்,
அது சரி, எல்லாரும் பஸ்ல ஏறினா "பிகருங்கலை" தான் மொதல்ல தேடுவாங்க, ஆனா அதோட மட்டும் இல்லாம இவ்வளவு ரிசர்ச் பண்ணியிருக்கீங்களே, பிடிங்க உங்களுக்கு ஒரு "டாக்டர்" பட்டம்.
ரொம்பவே நல்லாதான் இருந்திருக்கு ஆராய்ச்சியெல்லாம்..சென்னை பஸ் பயணங்கள் மறக்க முடியாத அனுபவங்களை எனக்குத் தந்திருக்கின்றன. நான் பயணிகளைத்தான் அதிகமாய் கவனித்து, படிக்க முயன்றிருக்கிறேன். ஆண்களுக்கு என்று ஒரு சில பொது வழக்கங்கள் - நோட்டை நீட்டீ டிக்கெட் கேட்பது, சீட் கிடைத்தவுடன் ஆனந்த நித்திரை ..பெண்களுக்கு என்று சில வழக்கங்கள். அது சரி, நண்பா, லேடீஸ் ப்ஸ்ஸில் ஏறி (தெரியாமதான்) அசடு வழிந்த (பின் இறங்கிய) அனுபவம் இருக்கா..? எனக்கு உண்டு..:-)
I like the way you have compared different State Transport experiences..Write More..
Endaa Eppadidhaan Thamizhla Ezhudhure, Idha Type Pannave Enakku Oru Mani Neram Aiyduchu!!
நீண்ட பயணங்களின்போது நடத்துனர்களும் ஓட்டுனர்களும் சக பயணிகளிடம் பேசிக் கொண்டு வருவதைக் கேட்டிருக்கீங்களா? பெரும்பாலும் தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றிய புலம்பல்களாக இருக்கும்..அல்லது அந்த வழித்தடத்தில் உள்ள பிரச்சனைகள் தங்களின் அன்றைய பிரச்சனைகளைக் கூறிக்கொண்டு வருவார்கள்....
இரவுகளில் நடத்துனர் டிரைவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு அடிக்கடி விசில் அடிப்பதுபோல் சத்தம் எழுப்புவார்...ஓட்டுநர் விழிப்புடன் இருக்க...
தொடர் கலக்கலா போயிட்டிருக்கு தல :)
கைப்புள்ள அண்ணே!
என்ன உங்க சங்கத்து ஆளுகளையெல்லாம் காணோம் ?
ஞாயிற்றுக்கிழமைன்னா வரமாட்டாகளா?
வந்தா, அவுக கண்டக்டர்ககிட்ட அடிச்சு ஆடுன ஆட்டத்தைச் சொல்வாகன்னு பார்த்தேன்!
ஒருததரையும் காணோமே!
சிபிதான் புது வீட்டில ஸேவை செஞ்சு வச்சுகிட்டு வர்ரவங்களுக்குப் பறிமாறுவதற்காகக் காத்துக்கிட்டிருக்கார்னா - மத்தவங்கல்லாம் எங்கின பொய்ட்டாக?
//தல!
ஓட்டுனர பத்தியும் சொல்றதுக்கு நிறைய இருக்கு தல. ஆனால் வாடிக்கையா அதே பேருந்துல பயணம் செஞ்சா மட்டுமே ஓட்டுனர் பத்தி தெரிஞ்சிக்க முடியும்.//
சரியாத் தான் சொல்றீங்க தம்பி. டிரைவரைக் கவனிக்கனும்னா டிரைவர் பக்கத்துல நாம இருக்கனும். ஒக்காருறதுக்கு வசதியா ஒரு சீட்டு கெடச்சா ஏன் டிரைவர் சீட் பக்கம் போகப் போறோம்?
//பல நல்ல நடத்துனர்கள பாத்திருக்கேன் சில மோசமான நடத்துனர்கள பாத்திருக்கேன்.//
ஹ்ம்ம்...பேருந்துல வர்ற பயணிகளும் சில சமயம் நடத்துனர்களைப் பாடாப் படுத்துறதை நான் பாத்துருக்கேன்.
//"இல்லை தம்பிங்களா, சாப்பாடு வீட்டிலேருந்து வராது. B2 ஸ்டேசன்லயிருந்துதான் வரும். எங்க அப்பா அங்கதான் S.I yaa இருக்காரு - வர்ரீங்களா, உங்களுக்கும் சேர்த்துக் கொண்டாரச் சொல்லட்டுமா?"
அப்புறம்?
அப்புறம் என்ன - அந்த மூன்று பையன்களும் அடுத்த நிறுத்ததில் இறங்கி விட்டார்கள்!//
இதுலேருந்து வாத்தியார் ஐயா மக்களுக்கு சொல்ல விரும்பற கருத்தை நான் கப்புன்னு புடிச்சிக்கிட்டேன். இப்ப அதை மக்களுக்காகச் சொல்றேன்...சரியா இருக்கான்னு பாத்து சொல்லுங்க.
"போலீஸ்காரன் மகள் கிட்ட ஊறுகாய் கேட்டா கட்டி உத்தரத்துல தொங்க விட்டுருவாங்க"ன்னு சொல்ல வர்றீங்க. சரி தானே?
//தன் வேலையை நேசிக்கும் நடத்துனர் பணியாற்றும் பேருந்தில் பயணிப்பதே தனி அனுபவம்தான்.//
ஆமாங்க சிவகுமார். அந்த மாதிரி நடத்துனர்களின் பேருந்துகளில் செல்லும் போது ஒரு 'Feel good factor' வரும்.
//எல்லோரையும் பேருந்துகளில் போக வைத்த உங்கள் நினைவுகளுக்கு நன்றிகள்//
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
//டவுன் பேருந்தில் பொதுவா ஸ்டேஜ் எண்ணைக் கிழிச்சுக் கொடுப்பாங்க.//
வாங்க மேடம்,
சரியாச் சொல்றீங்க. டிக்கட் பரிசோதகர்கள் அதை வச்சித் தான் வாங்குன டிக்கட்டுக்கு மீறி பயணம் செஞ்சிருக்கமான்னு தெரிஞ்சிக்குவாங்க.
//அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு.//
இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களே!//
ஹி...ஹி...அதான் சொன்னேனே...பொழுது போகாத பொம்முன்னு. அது தான்.
:)
//ஹாய் கைப்ஸ்,
அது சரி, எல்லாரும் பஸ்ல ஏறினா "பிகருங்கலை" தான் மொதல்ல தேடுவாங்க, ஆனா அதோட மட்டும் இல்லாம இவ்வளவு ரிசர்ச் பண்ணியிருக்கீங்களே, பிடிங்க உங்களுக்கு ஒரு "டாக்டர்" பட்டம். //
வாங்க மேடம்,
டாக்டர் பட்டம் குடுத்துட்டீங்களா? ரொம்ப நன்றி. நமக்கு இந்த மருந்து மாத்திரையிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் ரொம்ப கண்டிப்பான டாக்டர். அதுனால நாளையிலேருந்தே ஊசி குத்த ஆரம்பிச்சிடறேன். அடுத்த வாரம் என்னோட நூறாவது ஓப்பன் ஹார்ட் சர்ஜரியை நீங்கத் தான் வந்து ஓப்பன் பண்ணி வைக்கணும்.
:)
//ரொம்பவே நல்லாதான் இருந்திருக்கு ஆராய்ச்சியெல்லாம்..சென்னை பஸ் பயணங்கள் மறக்க முடியாத அனுபவங்களை எனக்குத் தந்திருக்கின்றன. நான் பயணிகளைத்தான் அதிகமாய் கவனித்து, படிக்க முயன்றிருக்கிறேன். ஆண்களுக்கு என்று ஒரு சில பொது வழக்கங்கள் - நோட்டை நீட்டீ டிக்கெட் கேட்பது, சீட் கிடைத்தவுடன் ஆனந்த நித்திரை ..பெண்களுக்கு என்று சில வழக்கங்கள். அது சரி, நண்பா, லேடீஸ் ப்ஸ்ஸில் ஏறி (தெரியாமதான்) அசடு வழிந்த (பின் இறங்கிய) அனுபவம் இருக்கா..? எனக்கு உண்டு..:-) //
வா மச்சி,
நல்லாத் தான் நீயும் நோட் பண்ணியிருக்க. நானும் ஸ்கூல் படிக்கும் போது ஒரு வாட்டி அவசரத்துல லேடீஸ் ஸ்பெஷல்ல ஏறிருக்கேன். ஆனா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் யாரும் கேள்வி கேக்கலை. நானாவே என் தவறை உணர்ந்து மனந்திருந்தி கீழே எறங்கிட்டேன்.
:)
//I like the way you have compared different State Transport experiences..Write More..//
தேங்கீஸ் மச்சி. ஆனா என்ன சோகம்னா இப்பல்லாம் பஸ்லேயே ஏறுறதில்லையே? :( இதெல்லாமே பழைய சரக்கு.
//Endaa Eppadidhaan Thamizhla Ezhudhure, Idha Type Pannave Enakku Oru Mani Neram Aiyduchu!!//
ஹி..ஹி...எல்லாம் ஈ-கலப்பையும் கைப் பழக்கம் தான்.
:)
கைப்பு,
நல்லாப் பார்த்துதான் எழுதி இருக்கீங்க.
துளசி சொன்ன நடத்துனரை நானும் பார்த்திருக்கேன்.
அப்பவெல்லாம் சிரிப்பு வரும்.
இப்போ யோசிக்க வைக்கிறார்.
பின்னூட்டங்களுக்காகவே மீண்டும் ஒரு முறை படித்தேன்.
//நீண்ட பயணங்களின்போது நடத்துனர்களும் ஓட்டுனர்களும் சக பயணிகளிடம் பேசிக் கொண்டு வருவதைக் கேட்டிருக்கீங்களா? பெரும்பாலும் தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றிய புலம்பல்களாக இருக்கும்..அல்லது அந்த வழித்தடத்தில் உள்ள பிரச்சனைகள் தங்களின் அன்றைய பிரச்சனைகளைக் கூறிக்கொண்டு வருவார்கள்....//
உண்மை தான் கப்பி. நானும் கவனிச்சிருக்கேன். அதோட டிரைவர், கண்டக்டர்னு அவங்களைக் கூப்புடறதுக்குப் பதிலா 'சார்'னு கூப்பிட்டுப் பாருங்களேன்...உங்களுக்குக் கெடக்கிற மரியாதை தனியா இருக்கும்.
:)
//தொடர் கலக்கலா போயிட்டிருக்கு தல :)//
அடப்பாவி...தொடர்னு முடிவே பண்ணியாச்சா? :)
'அருள்மிகு பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'
:))
//கைப்புள்ள அண்ணே!
என்ன உங்க சங்கத்து ஆளுகளையெல்லாம் காணோம் ?
ஞாயிற்றுக்கிழமைன்னா வரமாட்டாகளா?//
வாத்தியார் ஐயா,
இன்னிக்கு ஞாயித்துக் கிழமை ஆச்சே? இன்னிக்கு நம்ம பசங்க எல்லாம் அசந்து தூங்கிக்கிட்டு இருப்பாங்க. சங்க அலுவலகத்துல கூட 'பிரதி ஞாயிறு விடுமுறை'ன்னு போர்டு போட்டுருக்குமே? நீங்க பாக்கலையா?
:)
//வந்தா, அவுக கண்டக்டர்ககிட்ட அடிச்சு ஆடுன ஆட்டத்தைச் சொல்வாகன்னு பார்த்தேன்!
ஒருததரையும் காணோமே!//
ஆமாங்க...எல்லாம் நாளைக்கு வருவாங்கன்னு நெனக்கிறேன். டிக்கட் எடுக்கச் சொன்னா ரத்தக் களரி ஆக்குற முரட்டுப் பசங்களாச்சே நம்ம பசங்க? கண்டிப்பா அடிச்சு அடிபட்டு ஆடுன ஆட்டம் எல்லாம் நாளைக்கு வெளியே வரும்னு எதிர்பார்ப்போம்.
:))
//கைப்பு,
நல்லாப் பார்த்துதான் எழுதி இருக்கீங்க.//
மிக்க நன்றி வல்லி மேடம்.
//துளசி சொன்ன நடத்துனரை நானும் பார்த்திருக்கேன்.
அப்பவெல்லாம் சிரிப்பு வரும்.
இப்போ யோசிக்க வைக்கிறார்.//
அப்போ நீங்களும் துளசியக்காவும் 'Partners in crime'ஆ? கூட்டணி போட்டுக்கிட்டு கலாய்ப்பீங்க போலிருக்கே? துளசியக்காவையும் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?
:))
//பின்னூட்டங்களுக்காகவே மீண்டும் ஒரு முறை படித்தேன்//
இன்னும் ஒரு மைசூர் ஸ்பெசல் நன்றி.
:))
தல,
அருமையா எழுதி எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசைய தூண்டிட்டீங்க...
சீக்கிரம் எழுதறேன்!!!
Kaipullai anna,
Neenga padikarathuku kage bus la poveengala ellai bus la porathukage padipeengala? appurem neenga intha 29 c, 27 d bus route nadathunar ellam parthathae ellaiyaa? ayoo pavam...
Chancey illa. Nice post. Liked it. Some observations :
1) 'I knew him well and every truant knew' - Very impressive reference. Liked it.
2)//அடுத்தவர் வாழ்வில் கடுகளவேனும் மகிழ்ச்சியை விதைக்கும் அத்தகையவர்கள்// nalla eluthi irukinga.. Such interesting ppl are very very rare. They say "God cant be present everywhere, so he made mothers", I would like to differ to this, such nice people are there instead of God being present everywhere, another reminder of God's love.
3)// "எங்களுக்கு சோறு போடற தெய்வம்யா அது, அது மேல உக்காருறேன்னு சொல்றியே" // 100kku 100 unmai. Intha thozhil bakthi niraiya peridam parthirukirain.. nice feeling. (hee hee thinam kalaila keyboardla kai vaikirathuku munala oru kutty prayer sollvain nan!)
4) //என்னங்க ரொம்ப போர் அடிக்குதா? இந்த மாதிரி 'பொழுது போகாத பொம்மு' வேலை நெறைய பண்ணிருக்கோம்ல? // Bore elam ilinga, thinam nammala suthi irukira vishayangal kitta irunthu puthusu puthusa ethuna research pannanum, kandu pudikanum.. antha thedal than - all about life's going!
GOOD POST - KAIYAI KODONGA.. LIKED IT.
-Deeksh
ரை ரைப் போலாம் ரை...
கைப்பு கொஞ்சம் நீளத்தைக் குறைச்சி எழுது ராசா.. ரெண்டு பாகம் வேணும்ன்னாலும் போடு படிக்கிறோம்ய்யா.. தம் கட்டி எழுதியிருக்க.. ஒர்ரே மூச்சுல்ல படிக்க முடியல்ல ப்ளிஸ்
//நீங்கள் உங்கள் ரூட்டில் வரும் பேருந்துகளை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த எண்களும் நினைவில் நின்றுவிடும். பலமுறை பேருந்துகளின் பக்கவாட்டில் இந்த எண்களை அடையாளம் கண்டு கொண்டே பேருந்துசை ஓடிச் சென்று பிடித்த அனுபவங்களும் உண்டு.//
தல ..சூப்பர் ஐடியா வா இருக்கு.. சரி...... கவிதா மாதிரி தூர இருக்கறத படிக்க முடியாத..கண்ணு தெரியாதவங்களுக்கு பயன்படும்.. டாக்ஸ்.. !! :)
Nice writing kapulla, unakku immmuuuttu arivaaaaa? :)
//அது சரி, எல்லாரும் பஸ்ல ஏறினா "பிகருங்கலை" தான் மொதல்ல தேடுவாங்க,//
kaipulla Uncle, pls ans this qstn. :)
என்ன இது? உங்க பக்கத்தைத் திறந்துக்கிட்டு வர இவ்வளவு கஷ்டப் பட வேண்டி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் இந்த "மாநரகப் பேருந்து" கள் பத்தி எழுதி இருக்கிறதாலேன்னு புரிஞ்சுது. பஸ்ஸிலே ஏறக் கஷ்டமா இருக்கிறப்பலே உங்க பதிவுக்கு வரவும் கஷ்டப்படற மாதிரி ஒரு செட்டப்பா? :D
உங்க மருமகன் அம்பி கேட்ட கேள்விக்கு என்ன பதிலே சொல்லலை?
தல,
பஸ் டே னு ஒன்னு
கொண்டாடுவாய்ங்களே, அனுபவம் ஏதும் உண்டா ? இருந்தா பதிவு - 3 ல சேர்த்து எழுதும். நல்லா சோக்கா இருக்கும்...
:)
Sorry for typing in English.
I used to travel by B21 (21b, 21J, 21JJ nu it had quite a few name changes) from Tambaram to QMC. On the way back from college (College finishes at around half 2 or so), between Guindy and Pallavaram (non-stop), oru conductor used to sing/hum SPB songs. In fact, we friends used to keep guessing what could be today's special? Your post made me recollect quite a few intersting incidents! Thanks for it!
//தல,
அருமையா எழுதி எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசைய தூண்டிட்டீங்க...
சீக்கிரம் எழுதறேன்!!!//
ரொம்ப சந்தோஷம் பாலாஜி. திறமையா எழுதற நீங்கல்லாம் பட்டையக் கெளப்பிடுவீங்க. சீக்கிரம் எழுதுங்க. படிக்க ஆவலா இருக்குறேன்.
:)
//Kaipullai anna,
Neenga padikarathuku kage bus la poveengala ellai bus la porathukage padipeengala? appurem neenga intha 29 c, 27 d bus route nadathunar ellam parthathae ellaiyaa? ayoo pavam... //
வாங்க புனித்,
படிக்க போகும் போது பஸ்சையும் படிச்சிக்கிட்டது தான். நீங்க சொல்ற ரெண்டு பஸ்சும் ஜெமினி கிட்டயும் மறுபடியும் புரசைவாக்கத்துலயும் சந்திக்கும் இல்ல? அந்த வழித்தடங்கள்ல போயிருக்கேன். ஆனா அது நம்ம வழக்கமான ரூட் கெடயாது. அதனால அந்த ரூட் கண்டக்டர்களை அவ்வளவா கவனிச்சதில்ல. எதனா ஸ்பெஷல் இருக்குங்களா 29Cக்கும் 27Dக்கும்?
//அதனால நடத்துனர்களைப் பத்தி எழுதுன அளவுக்கு ஓட்டுநர்களைப் பத்தி எழுதுறதுக்கு விஷயம் கெடைக்கறது கஷ்டம் தான். //
அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க. நம்ம திருவான்மியூர் டிப்போவில் 41V பேருந்து ஓட்டுபவர் ஒருவர், நல்ல ஜாலி டைப். காலரில் கர்சீப் சொருகிக் கொண்டு கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு அமர்க்களமா இருப்பார். காலேஜ் பசங்களை அவரு நல்ல ஹேண்டில் பண்ணுவாரு. அவர் பேரு தெரியாது, ஆனா நாங்க வெச்ச பேரு 'தி மேன்'. அவரோட பேசிக்கிட்டே வருவோம். அவர் வண்டியில் மட்டும் முன்னாடி புட் போர்ட். (மத்தவங்க சரியா ஓட்டாம நாங்க விழுந்தா பின்னாடி வீல் ஏறிடுமுன்னு அங்க எல்லாம் பின்னாடி புட்போர்ட்தான்.) நல்லா பேசிக்கிட்டே வருவாரு, காலேஜ் வாசல், தியேட்டர், வீடு என ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் எல்லாம் வண்டி ஸ்லோவாகும், நாங்க இறங்கிக் கொள்ளவென்றே. இவரை மாதிரி இன்னும் எத்தனையோ பேர்.
//அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு.//
ஆமாம் நாங்க இதுல எல்லாம் அப்போ எக்ஸ்பேர்ட். எல்லா டிப்போவும் தெரியும். அதே மாதிரி நாங்க வழக்கமா போகும் வண்டிகளில் அந்த வண்டி இல்லாது வேறு வண்டி வந்தால் ஓட்டுநரிடம் போய் 'உங்க' வண்டி என்னாச்சி? இந்த கண்டெம் (கயலான் கடைக்கு போக வேண்டிய அப்படின்னு பொருள்) வண்டியை எடுத்துட்டீங்கன்னு கேட்டா அன்னிக்கு பூராவும் பதில் சொல்லுவாரு. மெயிண்டனன்ஸ், ஸ்பேர்பார்ட் ஊழல், வேறு கட்சிக்காரனுக்கு நல்ல வண்டி கிடைப்பது என பல விஷயங்கள் வரும்.
கைப்புள்ள,
காசு இல்லாம பஸ்ல ஏறி போய் இருக்கீங்களா,
பள்ளியில் படிக்கும் போது, வீட்டுல பஸ்ஸுக்கு கொடுக்கற காசுக்கு மிட்டாய், குச்சி ஐஸ் வாங்கி தின்னுட்டு,
பஸ்ல காசு இல்லாம ஏறி காசு தேடற மாதிரி நடிச்சு, நடிப்பில் நடத்துனரை சிரிக்க வைத்து... ம்ம்ம்ம்
கோவையில் 1C, 5, 7 எண் பஸ்கள் எல்லாம் பிரபலம். அப்புறம் அவினாசி ரோட்டில் சாந்தாமனி, NJK,scp,திருச்சி ரோட்டில் தங்கமலர்,DS, ராஜா.
கோவை பஸ்கள் மிகவும் சுத்தமாக வேறு இருக்கும். பஸ்ஸுக்குள் ஒரு மினி சவுண்ட் சிஸ்டமமும் இருக்கும்.
யே புள்ள கருப்பாயி ... பாட்டு கேட்டு கொண்டு கல்லூரி போனது எல்லாம் இப்போ நினைத்தாலும் மகிழ்ச்சியை தருகின்றன.
தொடர் நன்றாக போய் கொண்டு உள்ளது வாழ்த்துகள்.
அமெரிக்கால பஸ் கண்டக்டெரே கிடையதுங்க..!என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் பஸ் தான் இத்தனை அனுபவங்களை தர முடியும்.!
அருமையான தொடர்..ரசித்துப் படித்தேன்..! தொட்ரட்டும் பஸ் பயண்ம்..
//Chancey illa. Nice post. Liked it. Some observations ://
நன்றி தீக்ஷ். மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தது தங்கள் கமெண்ட்.
//1) 'I knew him well and every truant knew' - Very impressive reference. Liked it.//
நானும் மிகவும் ரசித்து எழுதினேன். உங்களுக்கும் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி.
//nalla eluthi irukinga.. Such interesting ppl are very very rare. They say "God cant be present everywhere, so he made mothers", I would like to differ to this, such nice people are there instead of God being present everywhere, another reminder of God's love//
உண்மை தான். வளம் சேர்த்ததற்கு நன்றி தீக்ஷ்.
//100kku 100 unmai. Intha thozhil bakthi niraiya peridam parthirukirain.. nice feeling. (hee hee thinam kalaila keyboardla kai vaikirathuku munala oru kutty prayer sollvain nan!)//
கணினித் துறையிலும் பலபேரும் இது போல குட்டி ப்ரேயர் சொல்லிக் கொண்டு தான் தங்கள் நாளைத் துவங்குகிறார்கள்.
//Bore elam ilinga, thinam nammala suthi irukira vishayangal kitta irunthu puthusu puthusa ethuna research pannanum, kandu pudikanum.. antha thedal than - all about life's going!//
ஐயோ! ஒரே goosebumps தான் போங்க. ஹேப்பி...ஹேப்பி.
//GOOD POST - KAIYAI KODONGA.. LIKED IT.
-Deeksh //
மறுபடியும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தீக்ஷ்.
Kaipullai Uncle,
ippothaan ungaloda ella post yum padichen seri naa chinna ponnu pa nu ungala uncle nu koopidalum mudivu panni iruken..
29 c 27 d.. ella ponnunga college yum sutthi varumae.. theriyadha? ungaluka?
தல
எத்தினி ஊரு பஸ்ல போயிக்கிற பா நீ, நம்ப மெட்ராஸு அப்புறம் பெங்களூரு டில்லி பாம்பேயின்னு.. கலக்கி கீற போ..
நாமெல்லாம் பஸ் ஏறுனா ரஷ் கீதோ இல்லியோ புட்போர்டுதான்..
கண்டக்டரு கலாய்ச்சாருன்னாதான் உள்ள ஏறுறதே...
காக்கி சட்டையும் தாண்டி கண்டக்டருக்குள்ள ஒரு மனுசன் இருக்கான்னு கண்டுக்ன பாரு.. எங்கியோ போயிட்ட பா..
ஹார்ட்ட டச் பண்ணிட்ட...
நீங்க வித்தவுட்டா, இல்ல வித் டிக்கட்டா..
நான் வித்தவுட்டுதான்..
தப்புன்றியா...
பாஸ் வெச்சிருப்பேன் இல்ல... ஹி.. ஹி...
இப்பிடிக்கி
அரை பிளேடு
//ஆனா பாருங்க திவ்யாவுக்கு ஆன்லைன்ல வந்து அட்வைஸ் பண்ண 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர்' நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. எல்லா ரம்பத்தையும் ஒரே பதிவுல போடாதே...1, 2, 3ன்னு நம்பர் போட்டு போடுன்னு அருள்வாக்கு சொன்னாருங்க. அதுனால 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'யோட ரெண்டு சிங்கிளை முடிச்ச நம்ம பேருந்து, ஓட்டுநர் கண்டக்டர் டீ சாப்புட்டுட்டு வந்ததும் மூனாவது சிங்கிளை சீக்கிரமாவே ஆரம்பிக்கும்ங்க.//
தல இதிலே இருக்கிற விறகு வெட்டிஸ்வரர் நம்ம இளையதளபதி கட்டர் பாயா???
:-)))
// ella ponnunga college yum sutthi varumae.. theriyadha? ungaluka? //
எனக்குத்தெரிந்தது 45 கிண்டி - அண்ணா சதுக்கம் தடத்தில் கிண்டி செல்லம்மாள், சைதை டீச்சர், தேனாம்பேட்டை SIET (NO ANAGRAMS PLEASE), போயஸ் தொட்டம் ஸ்டெல்லா, ஐஸ் ஹௌஸ் குயின், மெரினா ப்ரெசிடென்ஸி, தூர்தர்ஷன் ராமானுஜம், அண்ணா சதுக்கம் யூனிவர்சிட்டி இவைதாம்.
:-)))
//Kaipullai Uncle,
ippothaan ungaloda ella post yum padichen seri naa chinna ponnu pa nu ungala uncle nu koopidalum mudivu panni iruken..
29 c 27 d.. ella ponnunga college yum sutthi varumae.. theriyadha? ungaluka?//
சின்னப் பொண்ணா? நான் புனித்னு பேரைப் பாத்ததும் கன்னட நடிகர் ராஜ்குமார் பையன் புனித் ராஜ்குமார் நியாபகம் வந்துட்டது. அது என்னங்க பேரே புனித் தானா? இல்லை எதனா ஷார்ட் ஃபார்மா? தெரியும். ஆனா நம்ம லக்கு...அந்த பஸ்ல எல்லாம் போற பாக்கியம் நமக்கு கெடக்கலை.
:)
//ரை ரைப் போலாம் ரை...
கைப்பு கொஞ்சம் நீளத்தைக் குறைச்சி எழுது ராசா.. ரெண்டு பாகம் வேணும்ன்னாலும் போடு படிக்கிறோம்ய்யா.. தம் கட்டி எழுதியிருக்க.. ஒர்ரே மூச்சுல்ல படிக்க முடியல்ல ப்ளிஸ்//
மூனாவது பதிவுல கொறச்சிட்டேன் ராசா. நன்றி.
//தல ..சூப்பர் ஐடியா வா இருக்கு.. சரி...... கவிதா மாதிரி தூர இருக்கறத படிக்க முடியாத..கண்ணு தெரியாதவங்களுக்கு பயன்படும்.. டாக்ஸ்.. !! :) //
அனிதா நீயும் கவிதாவும் போன ஜென்மத்துல டாம் அண்ட் ஜெர்ரியா இருந்தீங்களா? அவுங்களை இந்த வாரு வாருறே?
:)
//Nice writing kapulla, unakku immmuuuttu arivaaaaa? :)//
அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு?
//kaipulla Uncle, pls ans this qstn. :)//
கொஸ்டின் பாஸ்.
:)
இன்னும் யாரும் 50ஆவது பின்னூட்டம் போடலைன்னா நான் போட்டுக்கறேன். :)
kaipullai uncle,
en pera pathi enna sonninga? naaan agmark tamil perudaiya ponnu, "Punitha" karaikal punithavathi ammaiyar theriyuma? avunga perkondavalakkum...;)
Post a Comment