கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆபீஸ்லேருந்து கெஸ்ட் அவுஸுக்குக் கார்ல திரும்பி வந்துட்டு இருக்கும் போது காரோட விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்த காட்சி பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அது என்னன்னா எங்க வண்டிக்கு முன்னாடி ஸ்கூட்டி ஓட்டிட்டுப் போயிட்டிருந்த ஒரு பொண்ணு(காலேஜ் படிக்கிற வயசு இருக்கும்னு நெனக்கிறேன்)காதுல மொபைலை வச்சிப் பேசிட்டுப் போச்சு. டூ வீலர்ல மொபைல்ல பேசிட்டே வண்டியே ஒட்டிட்டுப் போறதுன்னா எப்படின்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு காதுக்கும் தோள்பட்டைக்கும் நடுவுல மொபைலுக்கு முட்டுக் கொடுத்து ரோட்டையும் பாத்து வண்டியையும் ஓட்டிக்கிட்டு பேசிட்டுப் போவணும். பேசி முடிச்சிட்டு ஒத்தை கையால வண்டியை ஓட்டிக்கிட்டே, மொபைலை எடுத்து ஜீன்ஸ் பின் பாக்கெட்ல சொருவி வச்சிக்கிச்சு. எங்க வண்டி எப்படியும் ஒரு நாப்பதுல போயிட்டிருந்துருக்கும்...எங்க முன்னாடி அந்த ஸ்கூட்டி போனதுனால அநேகமா அதுவும் அந்த வேகத்துல தான் போயிருக்கும். அதே வேகத்துல போன்ல பேசிக்கிட்டே ஒரு சிக்னல்ல வண்டியையும் அந்த பொண்ணு திருப்புச்சு. அந்த நேரம் எதிர் பக்கத்துலேருந்து ஒரு வண்டி வேற வந்துச்சு...ஸ்கூட்டி லைட்டா ஆட்டம் வேற கண்டுச்சு. நாங்க பின்னாடி கார்ல வந்துக்கிட்டு இதப் பாத்துக்கிட்டே இருந்தோம். இதப் பாத்ததும் எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, ஒரு பக்கம் செம கோபம். மொபைல்ல பேசற அந்த ரெண்டு நிமிஷம் வண்டியை ரோட்டு ஓரமா நிறுத்திட்டு பேசிட்டு போனாத் தான் என்னான்னு? அதுவும் அந்த பொண்ணு ஓட்டிட்டு போனது நடு ரோட்டுல...வலது கை பக்கமா...வேகமா நகர்ற வாகனங்கள் போற லேன் அது.
கைபேசியில் பேசும் போது நம்ம கவனம் எல்லாம் பேச்சுல தான் இருக்கும், அதனால வண்டி ஓட்டும் போது மொபைல்ல பேசாதீங்கன்னு எவ்வளவு விளம்பரம் பண்ணறாங்க...ஆபத்துன்னு தெரிஞ்சே எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கனும்...அதோட இத படிச்சவங்களே பெரிய நகரங்கள்ல இருக்கறவங்க கூட பண்ணறாங்களேன்னு ஒரு ஆதங்கம். என் வாய் சும்மா இருக்காம "இந்த மாதிரி போன்ல பேசிட்டே வண்டியை ஓட்டறவங்களைப் போலீஸ் புடிச்சி ரோட்டோரத்துல வச்சி கன்னத்துலேயே ரெண்டு அறையனும்" அப்படின்னேன். எங்க கூட வண்டியில வந்துட்டிருந்த எங்க சீனியர் "ஏம்ப்பா உனக்கு அந்த பொண்ணு மேல என்னப்பா கோவம்?" அப்படின்னு சிரிச்சிட்டே கேட்டாரு. நான் சொன்னேன்"சார்! பொண்ணுங்கிறதுனால கன்னத்துல அறையனும்னு சொல்லலை. இந்த மாதிரி வண்டி ஓட்டும் போது போன் பேசறது, நம்ம உயிருக்கும் அடுத்தவங்க உயிருக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சே செய்யறாங்க பாருங்க...அவங்க ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி அவங்களுக்கு இந்த தண்டனை தரனும்"னு சொன்னேன். அதுக்கு அவரு"அதுக்குத் தானேப்பா மொபைல்ல பேசினா ஃபைன்னு சட்டம் எல்லாம் இருக்கு"ன்னு சொன்னாரு. நானும் அப்ப கொஞ்சம் டென்சனா இருந்ததுனால "இல்லீங்க சார்! இந்த மாதிரி தப்புக்கு எல்லாம் 5000 ரூபாய் ஃபைன்னு சொன்னீங்கன்னா 500 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டு போயிடுவாங்க...500 ரூபாய் ஃபைன்னு சொன்னா 50 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டுத் தப்பிச்சிடுவாங்க. ரோட்டுலேயே நாலு பேருக்கு நடுவுல செவுள்லேயே ஒன்னு வுட்டீங்கன்னா நாளைக்கு அந்த அவமானத்துக்குப் பயந்துக்கிட்டு யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்க"னு சொன்னேன். அதை கேட்ட அவரு "Mohanraj! You have a point. But it also goes to prove that you are becoming an old man"அப்படின்னாரு. எனக்கா இதை கேட்டு பயங்கர ஷாக்...ஏன்னா சொன்னவரு எப்பவும் சீரியஸாப் பேசறவரு...கிண்டல், நக்கல் இதெல்லாம் பண்ணாதவரு. "எதனால சார் அப்படி சொல்றீங்க?"ன்னு கேட்டேன். "இந்த மாதிரி ரோட்டுல வச்சி பொளேர்னு அரையறதைப் பத்தி எல்லாம் வயசானவங்க தான் யோசிப்பாங்க. நான் பல முறை அந்த மாதிரி யோசிச்சிருக்கேன்" அப்படின்னாரு. ஆஹா! என்னடா இது...55 வயசு ஆனவரு நம்மளையும் அவரோட லிஸ்டுல சேத்துட்டாரேன்னு நெனச்சேன். ஆனா இத பத்தி நானே ஓரிரு சமயங்கள்ல யோசிச்சிருக்குறேன். நாம தனியா ரூம்புக்குள்ள ஒக்காந்து யோசிச்சதை, ஒருத்தரு சபையிலே வச்சி கேட்டுருக்காரே ஒரு வேளை உண்மையா இருக்குமோ அப்படின்னு ஒரு analysisக்குத் தான் இந்தப் பதிவு.
போன மாசத்துல ஒரு நாள், சாயந்திரம் ஒரு எட்டரை மணி இருக்கும். எட்டரை மணி பிரைம் டைம் ஸ்லாட்டுல இருந்த சூப்பர் 10 கவுண்ட் டவுன், பெப்சி உமாவின் உங்கள் சாய்ஸ், திரை விமர்சனம், நீங்கள் கேட்ட பாடல் இதெல்லாத்தையும் மெகா சீரியலுக்குக் கெடக்கிற மெகா துட்டுக்கு ஆசை பட்டு ஒட்டு மொத்தமா ஞாயித்துக் கெழமைக்கு மாத்துன சன் டிவியின் உலக மகா பேராசையைக் கரிச்சுக் கொட்டிட்டே ரிமோட்டை வச்சி நோண்டிக்கிட்டு இருந்தேன்(ஆமதாபாளையத்துலயும் சன்னை விட்டா வேற ஒரு தமிழ் சேனலும் வர்றதில்லை). அப்போ சோனி டிவியில "பூகி-ஊகி"ன்னு (Boogie-Woogie)ஒரு நிகழ்ச்சி வந்தது. சன் டிவியில் முன்ன வந்துட்டு இருந்த "தில்லானா தில்லானா" மாதிரியான ஒரு நடனப் போட்டி நிகழ்ச்சி இந்த பூகி-ஊகி. எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி இது. பங்கேற்கும் போட்டியாளர்களின் திறமையையும், அவர்களுடைய உத்வேகத்தையும் கண்டு பல முறை மலைத்துப் போயிருக்கிறேன். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வந்து கலந்து கொள்ளும் போது பார்க்கணுமே? மிக அருமையாக இருக்கும். குழந்தைகள் ஆடும் வேகத்தைப் பெரியவர்களால் கூட பல சமயம் ஈடு கொடுக்க முடியாது. அதனுடன் சிறு குழந்தைகள் செய்யும் முகபாவங்களைப் பார்க்க வேண்டுமே...மிகவும் அழகாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அன்று நான் பார்த்ததும் குழந்தைகள் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியை நான் பார்க்க ஆரம்பித்த நேரம் ஒரு பெண் குழந்தை ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அதை கண்டதும் எனக்கு ஒரு அதிர்ச்சி. காரணம், அக்குழந்தை ஆடிய பாடல் அத்தகைய பாடல்.
ஹிந்தி படங்களில் குறிப்பாக பீஹாரை மையமாக வைத்து வரும் படங்களில் வரும் ஒரு குலுக்கு நடனப் பாடல். பல கிராமத்து ஆண்கள் அமர்ந்து ரசிக்க அரைகுறை உடை அணிந்த ஒரு பெண் ஆடுவது போல அமைந்த ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட பாடல். அதை விட கொடுமை அப்பாடலுக்கு அக்குழந்தை அணிந்திருந்த உடை...சினிமாவில் வருவது போல முதுகு முழுவதும் தெரிவது போல அமைந்த ஒரு சிறிய மார்பு கச்சை. ஆடும் போது அக்குழந்தை காட்டிய முகபாவங்களும் அத்தகைய பாடல்களுக்கு, சினிமாவில் எப்படியிருக்குமோ அது போலவே இருந்தது(எப்படியென்று மேலும் விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்). அக்குழந்தை பாடலோடு ஒன்றி நன்றாக ஆடியிருந்த போதும் ஏனோ என்னால் அதை ரசிக்க முடியவில்லை. அதை காணும் போது வருத்தமாக இருந்தது. ஆடி முடித்த பின்னர் நடுவராக அமர்ந்திருந்த நடன இயக்குநர் ஜாவீத் ஜாஃப்ரி அக்குழந்தையைப் பார்த்து "இப்பாடலை உனக்கு செலக்ட் பண்ணி கொடுத்தது யார்" எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை "எங்க மம்மி" என மழலையில் சொன்னது. மிஞ்சி மிஞ்சிப் போனால் அக்குழ்ந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். சரியாகப் பேசக் கூட இன்னும் பயிலாத குழந்தையை மார்பு கச்சையோடு பார்க்கும் போது உண்மையிலேயே மனம் வேதனை அடைந்தது. இதை எப்படி பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஜாவீத் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் "நல்லா ஆடுச்சு உங்க பொண்ணு. ஆனா பாடலைக் கொஞ்சம் பார்த்து தேர்வு பண்ணுங்க. இந்த மாதிரி அர்த்தம் கொண்ட பாடல்களுக்குக் குழந்தைகள் ஆடுனா நல்லாருக்காது. அதோட குழந்தையே இந்த பாடலுக்கு ஆடறேன்னு சொன்னா கூட நீங்க தடுக்கனும். குழந்தைகள் குழந்தைகளா இருக்கும் போது தான் நல்லாருக்கும்" அப்படின்னார். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரையே அழகு என்பதே என் எண்ணமும். குழந்தைகள் அறிவுப்பூர்வமாகப் பேசுவதை ரசிக்கலாம், சுட்டித் தனம் செய்வதை ரசிக்கலாம், ஓடி விளையாடுவதை ரசிக்கலாம். வயதுக்கு மீறிய செயல்களைச் செய்யும் போது ஏனோ ரசிக்க முடிவதில்லை. கவலையில்லாத குழந்தைப் பருவம் என்பது அதிகப் பட்சம் போனால் 10 அல்லது 11 வயது வரையிருக்கும். அதற்கு பிறகு அவர்கள் மீதும் பல எதிர்பார்ப்புகள் திணிக்கப் படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த 10-11 ஆண்டு காலத்தை அவர்கள் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதே நல்லதல்லவா?
என்ன தான் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தை வளர்ந்து சீக்கிரம் பெரியவனாக/பெரியவளாக ஆக வேண்டும்...அதை கண் குளிர பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் "பருவத்தே பயிர் செய்" என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். இதே போன்று, வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுவது கண்டு எரிச்சல் உண்டானது "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தைக் கண்டு. இப்படத்தைப் பற்றி சர்ச்சையைக் கிளப்புவதல்ல என் நோக்கம். மணி ரத்னத்தின் பல படங்களை நானும் ரசித்திருக்கிறேன்...இப்படத்திலேயே பல எதார்த்தங்களினூடே நானும் ஒன்றிப் போயிருக்கிறேன். மணி ரத்னத்தின் படம் என்பதாலேயே குளிரையும் பொருட்படுத்தாமல் தில்லியில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படம் திரையிடப்பட்ட போது தனியாகச் சென்று பார்த்தேன். முதற் பாதியில் வெகுவாக மனதைக் கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பகுதியில் தன்னுடைய உண்மையான தாயை இலங்கையில் சென்று தேடும் போது, அக்குழந்தை பேசும் வயதுக்கு மீறிய பேச்சுகளும் செய்கைகளும் எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல காலம் அப்போது என் கூட யாரும் வரவில்லை. வந்திருந்தால் அவனைப் படம் பார்க்க விடாமல் புலம்பி தீர்த்திருப்பேன். யார் என்றே பார்த்திராத தன்னுடைய உண்மையானத் தாயைத் தேடும் போது சிம்ரனைப் பார்த்து கீர்த்தனா பேசும் "நீங்க எங்க அம்மா இல்ல. எங்க அம்மா இலங்கையில இருக்காங்க"ன்னு சொல்றதெல்லாம் டூ மச்சாகப் பட்டது. இது போல இன்னும் சில வசனங்கள் அது சினிமாவில் வரும் ஒரு கற்பனை உரையாடல் என்ற உண்மையையும் தாண்டி படம் பார்த்த என்னை கோபம் கொள்ளச் செய்தது. பேபி கீர்த்தனாவைக் குறை சொல்லவில்லை. இயக்குநர் சொல்லிக் கொடுத்த மாதிரி கீர்த்தனா வசனம் பேசி அழகாக நடித்திருக்கிறாள். என்ன தான் கதை என்றாலும் இது வரை சீராட்டிப் பாராட்டி வளர்த்த தன் தாயைப் பார்த்து "நீங்க எங்க அம்மா இல்ல" என்று சொல்லும் தைரியமும் முதிர்ச்சியும் ஒரு ஒன்பது வயது குழந்தைக்கு உண்மையில் வருமா என்பதே என்னுடைய கேள்வி. ஒரு வேளை இந்த காலத்து குழந்தைகள் அவ்வாறு யோசிக்குமா? அவ்வாறு யோசித்தாலும் பெற்றோர் என்னும் ஒரு பாதுகாப்பை விட்டு விட்டு வேறு ஒரு இடம் தேடும் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்குமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
இது வரை நம்ம பதிவுல வராத கோப தாப மேட்டர் எல்லாம் இன்னிக்குப் போட்டாச்சு. சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுங்கிறதை இது வரைக்கும் பதிவுகள்ல உபயோகிச்சதில்லை. இன்னிக்கு அதை செயல்லயும் காட்டியாச்சு...சொல்லியும் காட்டியாச்சு. வூடு பூந்து அடிக்கிறவங்க கொஞ்சம் மெதுவா அடிங்க...ஓகேவா? சரி...இதெல்லாம் படிச்சிட்டு ஒரு 'angry young man' இல்லன்னா ஒரு 'angry old man' இமேஜ் உண்டாகியிருக்கும்னு நெனக்கிறேன். அப்படி எதுவும் உருவாகியிருந்தால் ஒன்னும் செய்ய முடியாது :) அதுக்கு முன்னாடி என் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு படு பயங்கரமான உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன். ஆனா தயவு செய்து இளகிய இதயம் கொண்டவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். அதை படித்து விட்டு சொல்லொணா துயரத்தில் உங்கள் மனம் ஆழ்ந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. போன வருடத்தில் ஒரு நாள், பழைய கம்பெனியில் இந்தூரில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், வேலை நிமித்தமாக இந்தூரிலிருந்து ரயிலில் மும்பை செல்ல வேண்டியிருந்தது. ப்ளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும், பேச்சிலர் பசங்களுக்கே உரிய செய்கையான ரிசர்வேஷன் லிஸ்டைச் சரி பார்த்தலை முதல் வேலையாகச் செய்தேன். நம்ம பேரு லிஸ்ட்ல வந்துருக்கான்னு பாக்கற ஆர்வத்தை விட, ரயில் பயணத்துல கூட கடலை போட எதாவது ஃபிகர் இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் தான் அது:) நம்ம லக்கு பாருங்க அன்னிக்குன்னு பாத்து நம்ம சீட்டு நம்பருக்குப் பக்கத்து நம்பர்கள்ல ஒரு பொண்ணோட பேரும் இருந்தது. சரின்னு வண்டிக்குள்ள ஏறி உக்காந்தா இந்த பதிவுல பல இடங்களில் எழுதியிருக்கும் அதே ஷாக் மெகாவாட் கணக்குல அடிச்சது. காரணம் "வந்தது வந்தாள் துணையுடன் வந்தாள்". சரி...இதெல்லாம் நமக்கு சகஜம் தானே? நம்ம லக்குக்கும் நம்ம மோரக்கட்டைக்கும் எத்தனை ரயில் பயணங்கள்ல நாம கடலை போட்டுட்டே போயிருக்கோம்னு நெனச்சி என்னை நானே தேத்திக்கிட்டேன். அந்த பெண்ணின் கணவனுக்கு என்னை விட மிஞ்சிப் போனால் ஒரு வயது குறைவாக இருக்கும். (வட நாட்டுல தான் சின்ன வயசிலேயே கதற கதற புடிச்சி கட்டி வச்சிடுவாங்களே?) நல்ல உயரமாக இருந்தார், நல்ல நிறம். ரயில் பயணத்தில் என்னிடம் அவர்களும் பேசவில்லை நானும் பேசவில்லை. இப்படியே சென்றது அப்பயணம். இரவு படுக்கும் நேரம் வந்தது. அப்போது தான் அந்த பெண்ணின் கணவர் என்னிடம் முதல் முறையாகப் பேசினார். அவர் கேட்டது "அங்கிள்! என் வைஃப் பிரெக்னெண்டா இருக்கா. எங்க ரெண்டு பேருக்கும் அப்பர் பெர்த் குடுத்துருக்காங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க லோயர் பெர்த்தை எக்சேஞ்ச் பண்ணிக்கிட்டு கொஞ்சம் மேல படுத்துக்குறீங்களா?"ன்னு. இதை கேட்டதும் ஒரு பேச்சிலர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. கண்ணாடி போட்டு, மீசை வச்சிருக்கறவங்க எல்லாம் அங்கிளாடா? அப்படி பாத்தா எங்க ஊருக்கு வந்து பாத்தீன்னா பாதி பேரு அங்கிள் தாண்டான்னு சத்தமா கத்தனும் போல இருந்தது. ஆனா நம்ம நெஞ்சாங்கூட்டுக்குள்ள இருக்கறது சாதாரண் ஹார்ட் இல்லியே...எதையும் எந்த விதமான மெகா ஆப்பையும் தாங்கும் லயன் ஹார்ட்டாச்சே? அதனால அங்கிள் என்னும் அவப்பெயர் பெற்ற பின்னும் ஒன்னும் பேசாமல் அப்பர் பெர்த்ல போயி படுத்துக்கிட்டேன். இப்போ வார்னிங்கையும் மீறி மேலே படிச்சவங்க எத்தனை பேரு கோ கொள்ளன்னு அழுதீங்கன்னு உண்மையைச் சொல்லுங்க.
மேலே நம்ம கோபதாபங்களையும் நம்ம லயன்ஹார்ட் ரயில் அனுபவத்தையும் படிச்சிருப்பீங்க. எல்லாமே நியாயமானது தான்...எல்லாத்துலயும் பொண்ணுங்களைப் பத்தி எழுதிருந்தாலும் அது அவங்களுக்கு எதிரா எழுதுனது இல்லன்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க அதுக்கெல்லாம் ரொம்ப நன்றி:). ஏற்கனவே இந்த பொற்கொடி பாப்பா நம்மளை "கைப்பு அங்குள் கைப்பு அங்குள்"னு கூப்பிடுது. Again at the risk of being branded "Uncle" உங்க கிட்ட எல்லாம் ஒரு கேள்வி - இதையெல்லாம் படிச்சா ஒங்களுக்கு என்னங்க தோணுது? நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயத்தைப் பாத்து கோவம் வருது? கார்ல என்கூட இன்னும் நாலு பேரு இருந்தாங்க...அவங்களுக்கெல்லாம் ஒன்னும் தோணலியே? அதே மாதிரி ஊரே கொண்டாடற நேஷனல் அவார்டு வாங்கின "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் ஏன் எனக்கு எரிச்சலாப் படனும்? உண்மையிலேயே நமுக்கு வயசாயிடுச்சாங்க?:)
Thursday, November 16, 2006
வயசாயிடுச்சாங்க?
Subscribe to:
Post Comments (Atom)
109 comments:
I enjoyed reading your post.
You are NOT OLD. You are just caring person. Keep posting
கைப்ஸ்,
காரில் இருந்த மத்தவுங்க நாலு பேரும் ப்ளாக் எழுதற தில்ல அதான். ;)
அது சரி, இப்படி செவுள்ள அடிக்கனும் சொல்றதெல்லாம் உணர்ச்சிவசப்படறது. அது தப்புங்க. மொத்தமா லா'வ மதிக்க என்ன செய்யனுமோ அதை செய்யனும்.
தல,
வயசான இப்படித்தான் பிரச்சனையெல்லாம் வரும்...நீ ஒன்னும் கவலைப்படாதே ;)
தல,
முன்னாடி எல்லாம் நான் இப்போ யோசித்து இல்ல இந்த பதிவை பாத்து ஒரு வேளை சரியோன்னு தோணுது எனக்கு(சங்கத்துல யாருப்பா அது இளமையான தலை ரெடிபண்ணுங்கப்பா).
//மொபைல்ல பேசற அந்த ரெண்டு நிமிஷம் வண்டியை ரோட்டு ஓரமா நிறுத்திட்டு பேசிட்டு போனாத் தான் என்னான்னு? //
என்ன பேச்சு பேசறீங்க தலை எந்த பொண்ணாவது 2 நிமஷத்துல போன் பேசி முடிச்சி இருக்கா?
//அதுவும் அந்த பொண்ணு ஓட்டிட்டு போனது நடு ரோட்டுல...வலது கை பக்கமா...வேகமா நகர்ற வாகனங்கள் போற லேன் அது. //
சரி அதுக்கு என்னா இப்போ ரோடுன்னா நாலு பேர் நாலு விதமா போவாங்க நீங்க தான் பாத்து போகணும்.. ஊட்ல உஷாரா இருந்துகோங்க இல்லாட்டி பெண்ணியக்க கோஷ்டி சாமான் செட்டோட வந்துடப்போறாங்க அவங்க உரிமையை நீங்க மீருகிறீர்கள் என்று.
தல பாதி படிக்கரத்துக்குள்லயே கண்ண கட்டிடுச்சு...இப்போதைக்கு முதல் ரெண்டு சம்பவம் பற்றி சொல்றேன்...மொபைல் மேட்டர் உனக்கு வயசு ஆயிடுச்சுனு காட்டுது சரிதான்...
சின்ன குழந்தைக்கு அந்த மாதிரி டிரஸ் போட்டு கண்ட கண்ட பாட்டுக்கு ஆடுறது தப்புனு என்ன மாதிரி காலேஜ் படிக்கும் பசங்களுக்கும் தெரியும் :-)
மீதிய கண்ணு ரெடி ஆனப்புறம் படிச்சிட்டு சொல்றேன் :-)
appa Kaippu,
ennathan solla vara nee.
@ தல,
கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்ன்.. இதுக்கு போய் பீல் பண்ணிகிட்டு லைக் எ சைல்ட்..
நாங்க எல்லாம் இங்கே அருவா மீசையை மழிச்சிட்டு கான்டாக்ட்ஸ் போட்டுகிட்டு எதுக்கு தூழாவிக்கிட்டு இருக்கோம்னு நினைக்குறே ?
உன் பிட் அ உனக்கே போட்றேன்னு நினைக்காதே, இந்த சுலோகத்தை வாய்ல நிறுத்து எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்..
சிங் இன் எ ரைன்...ஐ அம் சொய்ங் இன் தெ ரைன்...
@ தல,
என்னிய 'அனானிமஸ்' பேர் ல
// You are NOT OLD. You are just caring person. // அப்படினு 1st கமென்ட் போட சொன்னியே, அப்புறம் இந்த தம்பிய நம்பாம நீயே போட்டுடியே ஏன்ணெ ?
எல்லோரையும் கலாய்க்கும் / எல்லோராலும் கலாய்க்கப்படும் கைப்புள்ளைக்கு இப்படி ஒரு (நல்ல) மறுபக்கம் இருப்பது கண்டு வியந்தேன். மற்றவர் மீது இருக்கும் அக்கறைக்கு வாழ்த்துகள்.
(பொற்கொடி அக்கா போல) யாரேனும் அங்க்கிள் என்று அழைத்தால் a rose will smell sweet even if you call by any other name என்று sportive-ஆக எடுத்துக்கொள்ளுங்கள்:-)))
Uncle லயன்ஹார்ட் KaiPulla,
What's up buddy...oopss..uncle?
கைப்புள்ளெ,
இன்னிக்கு பொழுது விடிஞ்சு நான் படிச்ச முதல் பதிவு இது. கொஞ்சமே கொஞ்சம்
டென்ஷனா இருந்தது போயே போச்,போயிந்தே.
சரளமான எழுத்து நடைப்பா. ரொம்பவே ரசிச்சேன்.
சரி. அது இருக்கட்டும், இப்ப பாயிண்டுக்கு வரலாம்.
நானும் ச்சென்னையிலே இப்படி செல்பேசிக்கிட்டே ஓட்டுற அபாயத்தைப்
பார்த்து நொந்து போயிட்டேன்.ஆனா அறை விடணுமுன்னு தோணலை(-:
( இன்னும் ஓல்ட் ஆகலைன்றதுக்கு அடையாளம்?)
இங்கே 2006 லே நடந்த பல சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளிலே இந்த
'கஜுராரே' பாட்டுத்தான் பிச்சு வாங்கிக்கிட்டு இருக்கு. கடைசியாப் போன
ரெண்டு இடங்களிலே இந்தப் பாட்டுக்கு ஆடுனது ஒரு ஆறு வயசுக் குழந்தை.
மனசு நொந்து போச்சு. அதுலேயும் நிகழ்ச்சிகள் களைகட்டணுமுன்னு
விசில் அடிச்சுப் பட்டையைக் கிளப்புற கூட்டம்னு ஒண்ணு ( எல்லா இடத்துலேயும்
இருக்குமே) அது பாட்டுக்குத் தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. பார்க்க
ஒரே கோராமைதான் போங்க.
நமக்கோ இந்த 'ஆண்ட்டி, அங்கிள்' அந்தஸ்த்து இருக்கறதாலே அதையே வச்சு (!)
நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சவங்ககிட்டே, கொஞ்சம் புலம்பிட்டு, குழந்தையோட அம்மாகிட்டேயும்
சொல்லிட்டு வந்தேன். சமீபத்துலே வந்த வட இந்தியக் குடும்பம்தான் அவுங்க.
இங்கே வெள்ளைக்காரங்க எல்லாம் எப்பவும் ஃபர்ஸ்ட் நேம் வச்சே கூப்புடறதுதான் பழக்கமுன்னு
உங்களுக்கெல்லாம் தெரியுமே. அது ஒரு விதம் நல்லதுன்னாலும், ஒரு விதம் .....ஊஹூம்....
மூணு வயசுப் பொடிசு, 'ஹாய் டுல்சி'னு சொல்றதைக் கேக்குறப்ப ஒரு 'ச்விக்'.
இதுக்கு அந்த ஆண்ட்டி, அங்கிள் தேவலையோன்னு இருக்குப்பா:-)))
பின்னூட்டம் நீண்டதுக்கு ஒரு சாரி. ( வயச்சாயிருச்சு!)
//சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுங்கிறதை இது வரைக்கும் பதிவுகள்ல உபயோகிச்சதில்லை. //
உனக்கு சூன்யம் வைக்கறதுக்குத்த்தான் நாங்க இருக்கமே தல :))
//இப்போ வார்னிங்கையும் மீறி மேலே படிச்சவங்க எத்தனை பேரு கோ கொள்ளன்னு அழுதீங்கன்னு உண்மையைச் சொல்லுங்க.
//
நான் கோ கொள்ளன்னு அழுவலை..ஹி ஹின்னு ரசிச்சு சிரிச்சேன்..தப்பான ரியாக்ஷனா தல?? ;)
நல்ல பதிவு கைப்ஸ்!
அங்குள்ன்னு கூப்பிடதுக்கு வந்த கோபத்தைத் தவிர மற்ற கோபங்கள் அனைத்தும் நியாயமான, வர வேண்டிய கோபங்களே :)
செல்போன்ல பேசிட்டு போனது தெரிஞ்சே சில தவறுகள் செய்வோமே அதில ஒன்னு....மக்களுக்கு பொறுப்புணர்வு அதிகமாகனும்.
சின்ன பசங்களை இப்படி ஆடவைப்பதைப் பார்த்து நானும் பலமுறை கோபப்பட்டிருக்கிறேன்..இந்த விஷயத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திருந்த வேண்டும்...டிவி நிகழ்ச்சியானாலும் தயங்காமல் இடித்துரைத்த ஜாவீத் ஜாஃப்ரிக்கு ஒரு சல்யூட்!
'கன்னத்தில் முத்தமிட்டால்'ல சில இடங்களில் ஓவர் ரியாக்சனாக தோன்றினாலும் இதுபோல் குழந்தைகள் பேசவும் வாய்ப்பிருக்கு..அந்த நிலையில் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என மனவியல் ஆய்வாளர்கள் தான் சொல்லனும்...
அங்குள்ன்னு கூப்பிட்ட அந்த பெண்ணோட கணவன் மேல கோபப்படறதை விட நமக்கு தேவையானபடி சீட் கொடுக்காத ரயில்வே துறை மேல தான் கோபப்படனும்! :)
அண்ணே, வயசாகிறதுக்கு முன்னாடி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறுங்கண்ணே
அவர் அங்கிள்னு உங்களே கூப்பிட்டதால் சேப்பா நான் அண்ணே என கூப்பிடேறேன். என்னப் பார்த்தா தாத்தன்னு கூப்பிட்டாலும் கூப்பிடுவான் உங்க ரயில் சிநேகிதன்
தல
வெல்கம் டு த கிளப்!
அடுத்த பதிவு சமீபத்தில் 1950 அப்படின்னு ஆரம்பிக்கப் போகுதா?
கைப்புள்ள நீங்க நினச்சதுல எந்த தப்பும் இல்ல.. வேதா சொன்ன மாதிரி ஒலுங்க துப்பட்டா போடாம போற பெண்களை பாத்தாலே எரிச்சல், கோபம் தான் வரும்.. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பல்லாவரம் ரயில்வே கேட்டை போன் பேசிக்கிட்டே போன பார்வதிங்கிற பொண்ணு ரயில்ல அடிபட்டு இறந்து போன சம்பவம் தான் ஞாபகத்துல வருது.. இரபது வருஷம் கஷ்டப்பட்டு அவ பெற்றோர் வளர்த்தது இதுக்காகவா..
கொடுமை.. வேற என்ன சொல்ல கைப்புள்ள
என்ன அங்கிள் இதுக்கெல்லாமா கவலைபடறது.
பி.கு: என் வயது 35 தான்
:))))))))
கைப்ஸ்!
வேல ரொம்ப போர் அடிக்குதோ :-))))
மொத நிகழ்ச்சிக்கு சரியான ரியாக்ஷன் தான்.
தல, society conscious இருக்கற யாராக இருந்தாலும் அவர்களுக்கு இப்படி எல்லாம் தோணும், அதற்கு வயது முக்கியமல்ல, ஆனா, எழுதின விஷயம் எல்லாமே பெண்களை பற்றி இருக்கறதால.. நீங்க அதிகம் பெண்களை கவனிக்கறீங்க என்று வேணும்னா வைத்துக்கொள்ளலாம்.
//நீங்க அதிகம் பெண்களை கவனிக்கறீங்க என்று வேணும்னா வைத்துக்கொள்ளலாம்.//
தல அம்மணி என்ன இப்படி சொல்லிட்டாங்க உங்கள.. ஓவராத்தான் பாக்கறீங்களோ...?!! கொஞ்சம் குறைச்சிக்கோங்க.. நம்மல யாரும் நாக்கு மேல பல்லப் போட்டு ஒன்னும் சொல்லிடக்கூடாது பாருங்க..
அம்மணிக்கு தெரியல நீங்க பெண்களை சைட் அடிக்கல அவங்களை பத்தி ஆராய்ச்சி (research) பண்றீங்கன்னு.. அம்மணிய பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே.. சரியா பொறாமை புடிச்சவங்கன்னு... விடுங்க..விடுங்க.. நீங்க எப்பவும் போல கண்டினியூ வாட்ச்சிங் Girls.. ok.. I guide you if u want.. :)
//உண்மையிலேயே நமுக்கு வயசாயிடுச்சாங்க?:)//
உங்களுக்கே சந்தேகம் வந்துருச்சில்ல? கிழிஞ்சுது போங்க :))
அப்புறம்... நான் நீண்ட விடுமுறைல இருந்து திரும்பிவந்துட்டேன். உள்ளேன் ஐயா!! :)
//இந்த மாதிரி தப்புக்கு எல்லாம் 5000 ரூபாய் ஃபைன்னு சொன்னீங்கன்னா 500 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டு போயிடுவாங்க...500 ரூபாய் ஃபைன்னு சொன்னா 50 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டுத் தப்பிச்சிடுவாங்க. ரோட்டுலேயே நாலு பேருக்கு நடுவுல செவுள்லேயே ஒன்னு வுட்டீங்கன்னா நாளைக்கு அந்த அவமானத்துக்குப் பயந்துக்கிட்டு யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்க"//
தல,
அந்நியன் படம் பார்த்துட்டு படுத்தியா?
ஷங்கர் படமெல்லாம் பார்த்தீன்னா மறுநாள் நீ பாக்கற அரசு அதிகாரிங்கள எல்லாம் குத்தி கொல்லணும்னு தோணும் அவன் நல்லவனா, கெட்டவனான்னு எல்லாம் யோசிக்க முடியாது.
போக போக சரியாயிடும் தல,
நம்ம எல்லாம் "என்றும் பதினாறுதான்"
அப்புறம் இன்னொரு மேட்டர்,
ஏன் தல இப்படி வயசானவங்க பேசற மாதிரி பதிவு இத்தா பெருசு இருக்கு?
நீ வாரத்துக்கு ரெண்டு என்னா மூணு பதிவு கூட போடு, ஆனா ரெண்டு வாரத்துக்கும் சேர்த்து இப்படி மொத்தமா போடறியே இது நியாயமா?
போன வாரம் சன் டீ.வில மலரும் மொட்டும்னு ஒரு நிகழ்ச்சி போட்டாங்கப்பா,
குழந்தைகள் பேசறது எவ்ளோ அழகா இருந்துச்சி தெரியுமா நிலா நிலா ஓடி வா பாட்டையே அஒரு குழந்தை பாடும்போது எவ்ளோ வித்தியாசம் இருந்துச்சி தெரியுமா நிகழ்ச்சிய தொகுத்து வழங்கிய திருமதி.புஷ்பவனம் குப்புசாமியும் எவ்வளவு பொறுமையா குழந்தைகள் கூட பேசினாங்க, அடுத்து மாறுவேட போட்டி ஒண்ணு வந்தது, பாரதி, ராணி மங்கம்மா, போலீஸ்,னு பட்டைய கெளப்புச்சுங்க.
கடைசியா வந்ததே ஒரு பொண்ணு கொறத்தி வேஷம் போட்டுகினு சின்னூண்டு பாவாடை, சின்னூண்டு ரவிக்கை, கன்னம் வரிஅக்கும் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு
ஓ ஷாமியோ....
ஓ ஷாமியோ....
நாங்க ஊஷி மணி பாஷி மணி விக்குறோமுங்க ஷாமியோ ன்னு ஒரு டால்டா டின்ன(மஞ்ச கலர்) தோள்ல தொங்க விட்டுகினு டமுக்குடப்பாங் டாயாலோன்னு ஒரே ஆர்பாட்டம்
துபாயில சன் டீவி தவிர 100 சேனலுக்கு மேல வருது, என்ன எழவு நமக்கு தெரிஞ்சது ஒரே மொழி அதுனால வேற வழியே இல்லாம பாத்து தொலச்சேன்.
சும்மா சொல்லக்கூடாது குழந்தைங்க எல்லாம் எவ்வளவு அழகா பாடறாங்க, பேசறாங்க தெரியுமா!
தல !!!!
தள தளன்னு ஜீன்ஸ்ச ரசிக்கிறத வுட்டு புட்டு என்னா இது கலாட்டா?? ஆமா நெசம்மாலுமே அதுதான் கொவமா இல்லை முகத்தை பார்க முடியலையேன்னு ஏதாச்சும் ;)))))))
தல சின்ன புள்ள தானே எப்படி ட்ரெஸ் பண்ணினா என்ன?
தல நீங்க ஓண்ணை புரிஞ்சுக்கணும் . சின்ன புள்ளைங்க போடுக்குற ட்ரெஸைதான் நம்ம நடிகைக போட்டுக்குறாங்களே தவிர அவங்க ட்ரெஸை சின்ன புள்ளைங்க போடுக்குறதில்லை !! :))))
கவலைய விடுங்க தல. இதுகெல்லாம் கவலைப்பட்டா அரசியல் பண்ண முடியாது !!! :))
கைப்பு அங்கிள் கைப்பு அங்கிள்,
நான் கூட அங்கிள்னு கூப்பிட்டா
என்ன கோச்சிப்பிங்களா , பவன் http://www.pavanspictures.blogspot.com/
//வயசாயிடுச்சாங்க?:)//
சத்தியமா, கல்யாணம் பண்ணிக்கிற வயசாகிடுச்சு. கைப்பு, எல்லாருக்கும் வர நியாயமான கோவம்தான். எனக்கு இது மாதிரி நிறைய தடவை தோணி இருக்கு. அத்தோட மட்டுமில்லாம அவுங்ககிட்ட போய் சண்டை வேற போடுவேன். விதிகளை மீறுவாங்க இல்லே, அப்போ வரும் பாருங்க கோவம். பாவம் அவுங்க பரம்பரை வாயில வந்து உழும். இதெல்லாம் நியாயம்தான், நாம் கோவப்படலைன்னா யாரு படறது? நம்ம நாடு, நம்ம தேசம். ஒருதடவை திட்டிப்பாருங்க அடுத்தமுறை அதே தப்பை செய்ய யோசனை செய்வான், அதுதான் இதுல முக்கியம். ஒரு வரியில சொன்னா Hatsoff to You, you are caring for others, like to be.
தல,
உன்னோட பீலிங்ஸ் பார்த்து எனக்கு ஆனந்தகண்ணிரு முட்டிக்கிட்டு வருது!!!!!
//இதையெல்லாம் படிச்சா ஒங்களுக்கு என்னங்க தோணுது? நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயத்தைப் பாத்து கோவம் வருது? கார்ல என்கூட இன்னும் நாலு பேரு இருந்தாங்க...அவங்களுக்கெல்லாம் ஒன்னும் தோணலியே?//
தல,
அப்பிடிதான் உன்னை மாதிரியே நியாயஸ்த்தனா இருந்தா கொதிக்கதான் செய்யும்!!!
//அதே மாதிரி ஊரே கொண்டாடற நேஷனல் அவார்டு வாங்கின "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் ஏன் எனக்கு எரிச்சலாப் படனும்?//
ஒவ்வொருத்துங்க பார்வையிலே ஒவ்வொன்னும் பலவிதமாதான் தெரியும்... ஒனக்கு அது கொஞ்சம் ஓவராத் தெரிச்சிருக்கு அவளோதான். ஆனா ஒரு சில காட்சிகளை தவிர கீர்த்தனா அதிலே அசத்திருப்பா.!
// உண்மையிலேயே நமுக்கு வயசாயிடுச்சாங்க?:) //
உங்க வீட்டிலே போன் பண்ணி சொல்லுறேன், உனக்கு கல்யாண வயசாயிடுச்சின்னு!!! ;)
Chittappu, உன்னோட பீலிங்ஸ் பார்த்து எனக்கு ஆனந்தகண்ணிரு முட்டிக்கிட்டு வருது!!!!!
//I enjoyed reading your post.
You are NOT OLD. You are just caring person. Keep posting//
மிக்க நன்றி அனானி நண்பரே! என்னை புரிந்து கொண்டமைக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.
//கைப்ஸ்,
காரில் இருந்த மத்தவுங்க நாலு பேரும் ப்ளாக் எழுதற தில்ல அதான். ;)//
ஹி...ஹி...உண்மை தாங்க. அவுங்க யாருக்கும் தமிழும் தெரியாது.
//அது சரி, இப்படி செவுள்ள அடிக்கனும் சொல்றதெல்லாம் உணர்ச்சிவசப்படறது. அது தப்புங்க. மொத்தமா லா'வ மதிக்க என்ன செய்யனுமோ அதை செய்யனும்//
ஆமாங்க நீங்க சொல்றது சரி தான். அந்த நேரத்துல கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன். யாரையும் அடிச்சி திருத்த முடியாதுங்கிறதும் உண்மை தான். உயிரைப் பணயம் வெச்சி போன் பேசனுமான்னு தோனுன ஆதங்கத்துல சொன்னது அது. மத்தபடி உங்களுக்குத் தான் தெரியுமே நமக்கு அடி வாங்கித் தான் பழக்கம்...அடிச்சிப் பழக்கம் இல்ல.
:)
//தல,
வயசான இப்படித்தான் பிரச்சனையெல்லாம் வரும்...நீ ஒன்னும் கவலைப்படாதே ;) //
எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்...நீ கவலைபடாதேன்னு சொல்ல வர்றே? இளைய தளபதி இருக்க பயமேன்?
:)
//தல,
முன்னாடி எல்லாம் நான் இப்போ யோசித்து இல்ல இந்த பதிவை பாத்து ஒரு வேளை சரியோன்னு தோணுது எனக்கு(சங்கத்துல யாருப்பா அது இளமையான தலை ரெடிபண்ணுங்கப்பா)//
ஆஹா! இப்படி ஒரு பதிவைப் போட்டதுக்கே நம்பிக்கை இல்லா தீர்மானமா? யாருப்பா அங்கே எளைய தலை? முன்னால வாங்கப்பா
:)
//என்ன பேச்சு பேசறீங்க தலை எந்த பொண்ணாவது 2 நிமஷத்துல போன் பேசி முடிச்சி இருக்கா?//
ஆமா...அப்படி வேற ஒன்னு இருக்கில்ல?
:)
//சரி அதுக்கு என்னா இப்போ ரோடுன்னா நாலு பேர் நாலு விதமா போவாங்க நீங்க தான் பாத்து போகணும்.. ஊட்ல உஷாரா இருந்துகோங்க இல்லாட்டி பெண்ணியக்க கோஷ்டி சாமான் செட்டோட வந்துடப்போறாங்க அவங்க உரிமையை நீங்க மீருகிறீர்கள் என்று//
எதுக்கும் நான் தூங்கும் போது கூட ஹெல்மெட் போட்டுக்கிட்டே தூங்கறேன். யார்னா ரவுண்டு கட்டுவாங்கன்னு ஒரு பயத்துல தான் பதிவுல அங்கங்கே டிஸ்கியை அள்ளித் தெளிச்சிருக்கோம். கொஞ்சம் நல்லாப் பாருங்க சந்தோஷ்.
:)
//தல பாதி படிக்கரத்துக்குள்லயே கண்ண கட்டிடுச்சு...இப்போதைக்கு முதல் ரெண்டு சம்பவம் பற்றி சொல்றேன்...மொபைல் மேட்டர் உனக்கு வயசு ஆயிடுச்சுனு காட்டுது சரிதான்... //
அதை தான் ஊரே கூடி கும்மியடிச்சிருக்கே? புதுசா எதாச்சும் சொல்லுப்பா 12பி
//சின்ன குழந்தைக்கு அந்த மாதிரி டிரஸ் போட்டு கண்ட கண்ட பாட்டுக்கு ஆடுறது தப்புனு என்ன மாதிரி காலேஜ் படிக்கும் பசங்களுக்கும் தெரியும் :-)//
சைக்கிள் கேப்ல ஓட்டினியே ஒரு ஆட்டோ? சரி சரி நல்லாரு :)
//மீதிய கண்ணு ரெடி ஆனப்புறம் படிச்சிட்டு சொல்றேன் :-) //
இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் படலை?
//appa Kaippu,
ennathan solla vara nee. //
அது ஒன்னும் இல்லீங்க பூங்குன்றனாரே! எனக்கு வயசாயிடுச்சா இல்லியான்னு ஊரைக் கூட்டி கேள்வியால ஒரு வேள்வி நடத்திட்டிருக்கேன். வேறொன்னுமில்ல.
:)
//கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்ன்.. இதுக்கு போய் பீல் பண்ணிகிட்டு லைக் எ சைல்ட்..//
ஏய்! இதே மாதிரி தாம்பா எம் பிரதர் மார்க் கூட சொன்னான்
//நாங்க எல்லாம் இங்கே அருவா மீசையை மழிச்சிட்டு கான்டாக்ட்ஸ் போட்டுகிட்டு எதுக்கு தூழாவிக்கிட்டு இருக்கோம்னு நினைக்குறே ?//
எனக்குத் தெரியாதா? "Honey! Say Cheese"னு சொல்றதுக்கு.
:)
//உன் பிட் அ உனக்கே போட்றேன்னு நினைக்காதே, இந்த சுலோகத்தை வாய்ல நிறுத்து எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்..
சிங் இன் எ ரைன்...ஐ அம் சொய்ங் இன் தெ ரைன்... //
ஓகே. இப்பவே நிறுத்திக்கிறேன் "சிங் இன் தி ரைன்...ஐ ஆம் ஸ்வேயிங் இனி தி ரைன்..."
:))
கைப்ஸ்
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... மீண்டும்...வர்ரேன்..இப்ப present Sir மட்டும்
//இந்த மாதிரி ரோட்டுல வச்சி பொளேர்னு அரையறதைப் பத்தி எல்லாம் வயசானவங்க தான் யோசிப்பாங்க.//
அப்படி ஒட்டு மொத்தமா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேங்க...ஏன்னா எனக்கு அந்த மாதிரி தோணுனதில்லை. வேற மாதிரி, ஒண்ணு செய்ய தோணும்; ஆனா இதுவரைக்கும் அதில ஜெயிக்க முடியலை. திறமைசாலிகளா தான் இருக்காங்க. அது என்னன்னா, எப்படியாவது குறுக்கு மறுக்கா வண்டிய ஓட்டி அட் லீஸ்ட் அந்த செல்போனை கீழ விழ வைக்கணும்னு ட்ரை பண்றதுதான். ஒரே தடவை பாதி நடந்தது. ஆனா செல் அந்த ஆளு மடியில விழுந்து பொழச்சுது.
இது ரொம்ப தப்புத்தான். இருந்தாலும் i will keep trying...
//என்னிய 'அனானிமஸ்' பேர் ல
// You are NOT OLD. You are just caring person. // அப்படினு 1st கமென்ட் போட சொன்னியே, அப்புறம் இந்த தம்பிய நம்பாம நீயே போட்டுடியே ஏன்ணெ ? //
யப்பா! என்னப்பா இது பொழப்பு நடக்கற எடத்துல இப்படி ஒரு வில்லங்கமான கமெண்ட்டு. நான் நாளைக்கு ஊருக்குள்ள எப்படித் தலை நிமிர்ந்து நடக்கறது?
//எல்லோரையும் கலாய்க்கும் / எல்லோராலும் கலாய்க்கப்படும் கைப்புள்ளைக்கு இப்படி ஒரு (நல்ல) மறுபக்கம் இருப்பது கண்டு வியந்தேன். மற்றவர் மீது இருக்கும் அக்கறைக்கு வாழ்த்துகள்.//
வாங்க லதா மேடம்,
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. உங்க கமெண்டைப் படிச்சிட்டு ஒரே சந்தோஷம்ஸ் ஆஃப் இந்தியா தான் போங்க
:)
//(பொற்கொடி அக்கா போல) யாரேனும் அங்க்கிள் என்று அழைத்தால் a rose will smell sweet even if you call by any other name என்று sportive-ஆக எடுத்துக்கொள்ளுங்கள்:-)//
அப்படீங்கறீங்க? ஏ! பொற்கொடி பாப்பா...பாத்துக்க இனிமே என்னைய அங்கிள் கிங்கிள்னு எல்லாம் கிண்டல் பண்ணப்பிடாது. லதா மேடமே சொல்லிட்டாங்க நானும் "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ"தான்.
:)
//Uncle லயன்ஹார்ட் KaiPulla,
What's up buddy...oopss..uncle? //
யாருப்பா அது...சின்னப்பில்லத் தனமா?
:)
என்ன அக்குரமம் இது. பெயருலயே கைப்புள்ளன்னு இருக்குற உங்களை அங்கிள்னு சொன்ன அந்தச் சின்னப் பையனை மன்னிச்சு விட்டுறலாம். போனாப் போகுது சின்னப் பையந்தானே :-) ஒங்களுக்கெல்லாம் வயசே ஆகாதுய்யா. என்றுமே நீர் கைப்பிள்ளை.
எனக்கும் காதுல போன வெச்சிக்கிட்டே வண்டி ஓட்டுறது பிடிக்காது. அப்படி யாராவது செஞ்சா வேணுக்குன்னே அவங்க பக்கத்துல பைக்ல போயி ஹார்ன் பயங்கரமா அடிப்பேன். வண்டியோட்டும் போது மொபைல் பேசுறது தப்பு. தப்பு. தப்பு. வயசானாலும்..ஆகலைன்னாலும்...தப்பு தப்பு தப்பு.
//கைப்புள்ளெ,
இன்னிக்கு பொழுது விடிஞ்சு நான் படிச்ச முதல் பதிவு இது. கொஞ்சமே கொஞ்சம்
டென்ஷனா இருந்தது போயே போச்,போயிந்தே.
சரளமான எழுத்து நடைப்பா. ரொம்பவே ரசிச்சேன்.//
வாங்க துளசிக்கா,
உங்களோட வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
//நானும் ச்சென்னையிலே இப்படி செல்பேசிக்கிட்டே ஓட்டுற அபாயத்தைப்
பார்த்து நொந்து போயிட்டேன்.ஆனா அறை விடணுமுன்னு தோணலை(-:
( இன்னும் ஓல்ட் ஆகலைன்றதுக்கு அடையாளம்?)//
ஹி...ஹி... அறை விடனும்னு தோணுனது அந்த நேரத்துல ஏற்பட்ட ஒரு டென்சன்னால தான். போன் எப்ப வேணாலும் பேசலாம்...ஆனா ஒரு மனித உயிரை விட போன் பேசறது ஒன்னும் பெருசில்ல. அதை உணராம இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறாங்களேன்னு ஒரு கோபம் தான். இப்ப பேக் டு நார்மல்.
:)
//இங்கே 2006 லே நடந்த பல சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளிலே இந்த
'கஜுராரே' பாட்டுத்தான் பிச்சு வாங்கிக்கிட்டு இருக்கு. கடைசியாப் போன
ரெண்டு இடங்களிலே இந்தப் பாட்டுக்கு ஆடுனது ஒரு ஆறு வயசுக் குழந்தை.
மனசு நொந்து போச்சு. அதுலேயும் நிகழ்ச்சிகள் களைகட்டணுமுன்னு
விசில் அடிச்சுப் பட்டையைக் கிளப்புற கூட்டம்னு ஒண்ணு ( எல்லா இடத்துலேயும்
இருக்குமே) அது பாட்டுக்குத் தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. பார்க்க
ஒரே கோராமைதான் போங்க.//
உண்மை தான். கஜுரா ரே வை விட மோசமான அர்த்தமும் மூவ்மெண்ட்ஸும் கொண்ட பாடல்களுக்கும் சின்ன குழந்தைகள் ஆடத் தான் செய்யுது. அதையெல்லாம் தப்பா பாக்காதீங்கன்னு சிலர் சொன்னாலும்...நம்ம மனசுக்கு ஏனோ கேக்க மாட்டேங்குது. கஷ்டமா இருக்கு.
//நமக்கோ இந்த 'ஆண்ட்டி, அங்கிள்' அந்தஸ்த்து இருக்கறதாலே அதையே வச்சு (!)
நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சவங்ககிட்டே, கொஞ்சம் புலம்பிட்டு, குழந்தையோட அம்மாகிட்டேயும்
சொல்லிட்டு வந்தேன். சமீபத்துலே வந்த வட இந்தியக் குடும்பம்தான் அவுங்க.//
நீங்க சொன்னதோட உண்மையான தாத்பரியத்தை அவங்க புரிஞ்சிக்கிட்டாங்கன்னா நல்லது தான்.
//இங்கே வெள்ளைக்காரங்க எல்லாம் எப்பவும் ஃபர்ஸ்ட் நேம் வச்சே கூப்புடறதுதான் பழக்கமுன்னு
உங்களுக்கெல்லாம் தெரியுமே. அது ஒரு விதம் நல்லதுன்னாலும், ஒரு விதம் .....ஊஹூம்....
மூணு வயசுப் பொடிசு, 'ஹாய் டுல்சி'னு சொல்றதைக் கேக்குறப்ப ஒரு 'ச்விக்'.
இதுக்கு அந்த ஆண்ட்டி, அங்கிள் தேவலையோன்னு இருக்குப்பா:-)))//
அந்த ஊரு கல்ச்சரு அப்படி போலிருக்கு. சின்ன குழந்தைகள் ஆண்ட்டி, அங்கிள்னு கூப்பிட்டா சந்தோஷமாத் தான் இருக்கும்.
//பின்னூட்டம் நீண்டதுக்கு ஒரு சாரி. ( வயச்சாயிருச்சு!) //
என்னங்கக்கா இப்படி சொல்லிட்டீங்க? என்னோட பாக்கியம் அது.
//தல
வெல்கம் டு த கிளப்!//
என்னா பெருசு,
உங்களையும் புள்ளத்தாச்சி பொண்டாட்டி இருக்கறவன் எவனாச்சும் அங்கிள்னு சொல்லிட்டானா?
:)
//அண்ணே, வயசாகிறதுக்கு முன்னாடி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறுங்கண்ணே//
ஹி...ஹி...அதெல்லாம் அவன் செயல். நம்ம கையில என்ன இருக்கு?
:)
//அவர் அங்கிள்னு உங்களே கூப்பிட்டதால் சேப்பா நான் அண்ணே என கூப்பிடேறேன். என்னப் பார்த்தா தாத்தன்னு கூப்பிட்டாலும் கூப்பிடுவான் உங்க ரயில் சிநேகிதன்//
ரயில் சிநேகிதனா? அவன் ஒரு ரயில் எனிமி சிவா சார். பிரதிபலன் எதிர்பார்க்காம உதவி செய்யற ஒருத்தர அங்கிள்னு கூப்பிடறவன் நண்பனா சார்? எனிமி சார் அவன்.
ஹாய் கைப்பு,
அந்த செல்போன் விஷயத்திலும் சரி,அந்த சின்ன குழந்தை ஆடின விஷயத்திலும் சரி, நீங்க கோபப் பட்டது நியாயம் தான்,இதுக்கு எல்லாம் வயசு தேவயே இல்ல. தப்பான ஒரு விஷயத்த யார் வேனுமானாலும் கேக்கலாம்.
2. "கன்னத்தில் முத்தமிட்டால்", டவுட்டு எனக்கும் இருக்கு. ஒரு அம்மா அதுவும் ஒரு குழந்தையை விரும்பி தத்து எடுத்த பிறகு அந்த சின்ன குழந்தையிடம் இதை சொல்லுவாங்களா?
அதே மாதிரி, அந்த குழந்தையும் இவ்வளவு கஷ்டங்கலுக்கு அப்பறமும் தன் அம்மாவை தேடிக்கிட்டு போகுமா?
ஒரு வேளை இது படத்துக்குங்றதால எடுத்து கொண்ட கதையா? தெரியல.
அப்பறம், டிரெய்ன்ல உங்கல அங்கில்னு கூப்பிட்டாங்கலேன்னு ஏன் கவலப்படரீங்க, ஷ்யாம் கூட என்ன 17th சென்சுரி ஆளுன்னு சொன்னாரு,இதுக்கெல்லாம் போயி கவலப் பட்டுகிட்டு..விடுங்க தல..
துளசி மேடம் சொன்னா மாதிரி, 3 வயசு குழந்தை கூட நம்மள பேர் சொல்லாம இருந்தா போதாதா..?
அன்புள்ள தோழா,
நான் ரங்கா… உன் சமீபத்திய பதிவு படித்தேன்…
ஏற்கனவே சொன்னபடி (, எனக்குச் சுருக்கமான, அவசரமான விமர்சனங்களில் நம்பிக்கை இல்லை. அதனால், சற்று விலாவாரியாக…
இன்று இளமை என்ற பெயரிலும், கலாசார மாற்றம் என்ற பெயரிலும் நடந்து வரும் கொடுமைகளை, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.
நிஜம். இன்றைய நாளில், சட்டம் என்பது மாட்டாத வரை என்றாகிவிட்டது. போலீஸ்காரன் இல்லன்னா, டிராபிக் சிக்னலைக் கடக்கலாம், யாரும் பாக்கலைன்னா, Triples போகலாம் இப்படி ஆகிப்போச்சு. இது மாற வேண்டும்.
மாற வேண்டுமா ? என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு வரிந்து கட்டிப் பேசிய உன்மையான பல அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், சமூக நல்லியலாளர்களும் இன்று தொட்டதற்கெல்லாம் குறை கூறுவது ஏன் ? அவர்களுக்கு வயசாகிவிட்டதா ? கண்டிப்பாக இல்லை. சமூகம் மாறிவிட்டது.
போதனைகளும், அறிவுரைகளும் அலுத்துவிட்டன அல்லது மலிந்துவிட்டன. பாரதியும், காமராஜும் எத்தனை நாள் ஓடியது ? சாணக்யாவும், குத்து படமும்தான் நன்றாக ஓடுகிறது. சுவாரஸ்யமாகத் தரவேண்டும் என்பதற்காக பாரதி கதையில் இரண்டு சண்டையும், ஒரு கானா பாட்டும் வைக்க முடியுமா ? அதுபோல்தான் இதுவும். சமூகம் சீரழிகிறது என்பதற்காக நாமும் அவர்களுக்கு வக்காலத்து வாங்க முடியுமா ? அல்லது இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்தான் இருக்க முடியுமா ? நிச்சயமாக இயலாத விஷயம்.
ரௌத்ரம் பழகு என்பது என் கவிஞன் வாதம். எதனைக் கண்டு ? என்பதில்தான் குழப்பமே. எப்பவாவது ஒருமுறை நீ பார்த்ததுபோல் ஒரு பெண்ணைப் பார்த்து “ ஏம்மா… ஒரு ஓரமா நின்னு பேசக்கூடாதா ? “ என்று கேட்டுப் பார். பிறகு தெரியும், அவர்கள் எதனிடம் ரௌத்ரம் பழகுகிறார்கள் என்பது. கலந்துகட்டிய ஆங்கிலத்தில் சரமாரியாகத் திட்டுவார்கள், இல்லையெனில், நம்மையே முட்டாளாக்கும்படி சிரிப்பார்கள்.
அந்த இரண்டாவது நிகழ்ச்சியில் ஒரு எச்சரிக்கை உள்ளது. குழந்தைகளை வளர்ப்பது என்பது உலகிலேயே இரண்டாவது கஷ்டமான காரியம். முதல் கஷ்டமானதும் அதுவே. உண்மைதான், இன்றைய குழந்தைகளுக்கு, டி.வி, படிப்பு, விளையாட்டு என்று எத்தனையோ கவனக்கலைப்புகள் இருக்கிறதுதான், இருந்தாலும், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பிறக்கின்றன. நல்ல குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன.
அந்த மூன்றாவது நிகழ்ச்சியில், எனக்கென்னவோ அந்தக் கணவன் நம் அனனவரின் பிரதிநிதி என்றே தோன்றுகிறது. நாமும் அப்படித்தான் இருக்கிறோம். எப்போதுமேவா அல்லது எப்பவாவதா ? என்பதுதான் மாறுபடுகிறது.
மொத்தத்தில், சமுதாயக் கோபம் கூடாது என்பதோ, கண்டுகொள்ளாதே என்பதோ என் வாதமல்ல. வேண்டும். ஆனால் அறையும் அளவிற்கு அல்ல.
யோசிக்கிறேன். யோசியுங்கள். யோசிப்போம்.
+ நேசத்துடன்… இரா. அரங்கன்
//வயசாயிடுச்சாங்க?// :-(((.. அழுவாதீங்க..
கைப்புக்கு ஒன்னுன்னா யாருக்கும் மனசு தாங்க மாட்டேங்குது போல..
நீங்க நினைக்குறது தான் நானும் நினைக்குறேன்.. குழந்தை குழந்தையா இருந்தா தான் நல்லா இருக்கும்.. அத தான் ரசிக்கவும் முடியும்..
நல்லா இருக்கு...
எங்க! say Cheese and carry on ur adventure
வயசான காலத்துல இதெல்லாம் சகஜம்தான அங்கிள்!
இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? பி.பி ஏறிடப்போகுது!
யோவ்! அநியாயத்துக்குப் புளுகறியே!
நானா உன்னை அங்கிள்னு கூப்பிட்டேன்! உம்மை அப்படிக் கூப்பிட்டது என்னோட அப்பா!
டிரெயின்லயாவது டிக்கெட் எடுக்குற பழக்கம் உண்டா? இல்லை டி.டி.ஆருக்கும் லஞ்சமா?
//அந்த ரெண்டு நிமிஷம் வண்டியை ரோட்டு ஓரமா நிறுத்திட்டு பேசிட்டு போனாத் தான் என்னான்னு? //
ம்.நிறுத்தி நிதானமா சைட் அடிக்கலாம்ணு ஐடியா! பலே!
என்ன நண்பா! உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு!
அதெல்லாம் ஒரு காலம் கைப்புள்ளை! நாம எல்லாம் ஒண்ணாப் படிச்சி, ஒண்ணா விளையாண்டு!
அடடா! உன்னைப் போயி அங்கிள்னு சொல்லிட்டாங்களா?
தல,
உண்மையாலுமே நீங்க சொன்ன இடத்துல நானும் அப்படித்தான் ஃபீல் பண்ணுவேன்...
யூத்க்குத்தான் அடிச்சி பேசற கோபம் வரும்... வயசான பேசி தீத்துக்கலாம்னு யோசிப்பாங்க...
செல்போன்ல வண்டில போகும் போது வெட்டி கடலை போடறவங்களால ரோட்ல எல்லாருக்கும் பிரச்சனைதான். ரைனு ஒண்ணு விட்டா தப்பே இல்லை.
இவனால எவனுக்காது எதாவது ஆச்சினா யார் பொறுப்பு?
அந்த சின்ன பொண்ணு டேன்சிக்கு நமக்கு அந்த பொண்ணோட அம்மாவைத்தான் ரைனு ஒண்ணு விடனும்னு தோணும்...
மணி படத்துல சின்ன பசங்க சில சமயம் அப்படித்தான் இருப்பாங்க. அஞ்சலி பாக்கலையா?
பொற்கொடி அக்கா உங்களை அங்கிள்னு சொன்னாங்களா? சரி கல்யாண சந்தோஷத்துல அப்படி சொல்லியிருப்பாங்க... இனிமே அவுங்களே ஆண்ட்டிதான் :-) (வாழ்த்துக்கள் பொற்கொடி ஆண்ட்டி)
இதனால் சொல்வது என்னவென்றால் தன்னை யூத் என்று காண்பிக்க கைப்பு முயலுவதாக மக்கள் யாரும் நினைக்க வேண்டாம் ;)
அவர் என்றுமே யூத்தான் :-)
கைப்புள்ளை! அருமையான பதிவு! உங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறீர்கள்!
தவிர உங்கள் கோபமெல்லாம் நியாயமானதே!
கைப்பேசியில் பேசியபடி வண்டியோட்டுவது அவர்க்கு மட்டுமல்ல! அடுத்தவர்க்கும் சிரமமே!
இளசுகள் பார்வையில் அது தவறில்லை என்றுதான் படும்! நமக்குத்தான் இவர்களுக்கெல்லாம் பொளேர் என்று ஒரு அறை விட வேண்டுமென்ன்று நியாயமான கோபம் தோன்றும்! தோன்ற வேண்டும்! ஏன்னா இது வயோதிக வயசு! எதையும் நிதானமாக சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வயசு!
//ஜாவீத் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் "நல்லா ஆடுச்சு உங்க பொண்ணு. ஆனா பாடலைக் கொஞ்சம் பார்த்து தேர்வு பண்ணுங்க. இந்த மாதிரி அர்த்தம் கொண்ட பாடல்களுக்குக் குழந்தைகள் ஆடுனா நல்லாருக்காது. அதோட குழந்தையே இந்த பாடலுக்கு ஆடறேன்னு சொன்னா கூட நீங்க தடுக்கனும். குழந்தைகள் குழந்தைகளா இருக்கும் போது தான் நல்லாருக்கும்" அப்படின்னார்//
நியாயமான நடுவர்தான். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும்!
நான் கூட சிறுவயதில் "சின்ன ராணி சிலுக்கு மேனி" என்ற பாடலுக்கு அதே மாதிரி நடனம் ஆட முயற்சி செய்து வீட்டில் அடி வாங்கி இருக்கிறேன்.
குழந்தைகளின் இயல்புக்கு மீறின முதிர்ச்சியான செய்கைகள்(நடிப்பு) மணிரத்னம் படத்தில் வழக்கமான ஒன்றுதான். படத்தை கொடுத்த காசுக்கு அனுபவிக்காமல் ஆராய்வதை விட்டுவிட்டால் தேவலாம்!
அங்கிள், அண்ணே ன்னு கூப்பிடறதெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு என்ஜாய் பண்ணுங்க! என்னையெல்லாம் அங்கிள்னு கூப்பிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் எனக்கு! தவிர கோவமெல்லாம் படமாட்டேன்!
Kaippu,
Tell me your Age. I will tell you whether you are a Kila Bold or a New Nutt...
:))))))))
- Ravi
கண்ணுக்குக் குளிர்ச்சியா, குளு குளுன்னு கலர் பார்க்குற வயசுல ஏன் தம்பி உனக்கு இப்படிப்பட்ட தேவை இல்லாத கவலை எல்லாம்?
(எங்க ஊருலயெல்லாம் கூல்டிரிங்க்ஸை கலர்னுதான் சொல்லுவோம்)
sariyana karnathukku thaan roudram pazhagi irukeenga .. aduhukkaga oru chinna thyagam .. vayasanavar pattam ..
kaips kovam vazhga vazhga
இங்க பாருங்க எல்லோரும்...நம்ம முருகவேல் சிபி சொல்றத கேளுங்க...நல்லா இருந்தாரு இப்ப பழனி மலைக்கு போனதுல இருந்து எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு :-)
//நம்ம முருகவேல் சிபி //
ஆஹா! கந்தனின் கரம் தாங்கும் வேலோடு என் பெயரா?
முருகா! என்னே உன் திருவருள்!
மிக்க நன்றி ஷியாம். புதியதோர் பெயர் சூட்டியமைக்கு!
//ரயில் பயணத்துல கூட கடலை போட எதாவது ஃபிகர் இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் தான் அது//
ரொம்ப கரீட்டு தல :-)
ரயில் பயனத்துல உன்ன அங்கிள் னு கூப்புட்டவன் கட்டதொரை யோட ஆளா இருப்பானோ :-)
//உனக்கு சூன்யம் வைக்கறதுக்குத்த்தான் நாங்க இருக்கமே தல :)) //
வேணாம்...இது நல்லால்ல
//நான் கோ கொள்ளன்னு அழுவலை..ஹி ஹின்னு ரசிச்சு சிரிச்சேன்..தப்பான ரியாக்ஷனா தல?? ;)//
தப்பைப் பண்ணிப்புட்டு சிரிப்பாச் சிரிக்கிறே...அயோக்கிய அப்ரெண்டீசா
//அங்குள்ன்னு கூப்பிடதுக்கு வந்த கோபத்தைத் தவிர மற்ற கோபங்கள் அனைத்தும் நியாயமான, வர வேண்டிய கோபங்களே :)//
வாங்க கவிஞரே!
நக்கலா ரெண்டு கமெண்டு...நேர்மையா ஒரு கமெண்டு தானா?
//செல்போன்ல பேசிட்டு போனது தெரிஞ்சே சில தவறுகள் செய்வோமே அதில ஒன்னு....மக்களுக்கு பொறுப்புணர்வு அதிகமாகனும்.
சின்ன பசங்களை இப்படி ஆடவைப்பதைப் பார்த்து நானும் பலமுறை கோபப்பட்டிருக்கிறேன்..இந்த விஷயத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திருந்த வேண்டும்...டிவி நிகழ்ச்சியானாலும் தயங்காமல் இடித்துரைத்த ஜாவீத் ஜாஃப்ரிக்கு ஒரு சல்யூட்!//
கரெக்ட் தான். நம்ம ரெண்டு பேரும் கருத்து ஒத்து போவுதே? சேம் பிஞ்ச். ஜாவீத் அந்த மாதிரி சொல்லிருக்கலைன்னா இன்னும் கஷ்டமா போயிருக்கும் அன்னிக்கு.
//'கன்னத்தில் முத்தமிட்டால்'ல சில இடங்களில் ஓவர் ரியாக்சனாக தோன்றினாலும் இதுபோல் குழந்தைகள் பேசவும் வாய்ப்பிருக்கு..அந்த நிலையில் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என மனவியல் ஆய்வாளர்கள் தான் சொல்லனும்...//
இந்த கேள்விக்கு தாம்ப்பா யார்னா பதில் சொல்லுவாங்கன்னு பாத்தேன். இன்னும் யாரும் சொல்லலை.
//அங்குள்ன்னு கூப்பிட்ட அந்த பெண்ணோட கணவன் மேல கோபப்படறதை விட நமக்கு தேவையானபடி சீட் கொடுக்காத ரயில்வே துறை மேல தான் கோபப்படனும்! :)//
ஏன்யா சொல்ல மாட்டீங்க? உங்களை அங்கிள்னு கூப்பிட்டிருந்தா அப்புறம் தெரியும் சங்கதி?
//அடுத்த பதிவு சமீபத்தில் 1950 அப்படின்னு ஆரம்பிக்கப் போகுதா?//
நாலு நாள் தாமதத்துக்கு மன்னிக்கனும் கொத்ஸ். எங்கள் தானைத் தலைவர் வேளாண் தமிழர் இளா சொல்ற மாதிரி சொல்லனும்னா "நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்"
:)
//என்ன அக்குரமம் இது. பெயருலயே கைப்புள்ளன்னு இருக்குற உங்களை அங்கிள்னு சொன்ன அந்தச் சின்னப் பையனை மன்னிச்சு விட்டுறலாம். போனாப் போகுது சின்னப் பையந்தானே :-) //
ஜிரா,
இது ஒங்களுக்கே நல்லாருக்குதா? ஒரு சின்ன பையனுக்கோ பொண்ணுக்கோ இந்நேரம் அப்பா ஆகியிருக்கக் கூடியவனை நீங்க சின்னப் பையன்னு சொல்றது ஒரு பேச்சிலர் மனசுல வேல் பாய்ச்சுறது போல இருக்கு.
:(
//ஒங்களுக்கெல்லாம் வயசே ஆகாதுய்யா. என்றுமே நீர் கைப்பிள்ளை//
வேல் பாஞ்ச எடத்துல கொஞ்சமா ஐஸ் வச்ச மாதிரி இருக்கு. இப்ப நோ கிரையிங்
//எனக்கும் காதுல போன வெச்சிக்கிட்டே வண்டி ஓட்டுறது பிடிக்காது. அப்படி யாராவது செஞ்சா வேணுக்குன்னே அவங்க பக்கத்துல பைக்ல போயி ஹார்ன் பயங்கரமா அடிப்பேன். வண்டியோட்டும் போது மொபைல் பேசுறது தப்பு. தப்பு. தப்பு. வயசானாலும்..ஆகலைன்னாலும்...தப்பு தப்பு தப்பு//
ஆமாங்க ரொம்ப தப்பு தான். தப்பைக் கண்டிக்கிறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டெக்னிக்கு...ஒங்களுக்கு ஹார்ன் அடிக்கிறது போலிருக்கு
:)
//கைப்புள்ள நீங்க நினச்சதுல எந்த தப்பும் இல்ல.. வேதா சொன்ன மாதிரி ஒலுங்க துப்பட்டா போடாம போற பெண்களை பாத்தாலே எரிச்சல், கோபம் தான் வரும்.. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பல்லாவரம் ரயில்வே கேட்டை போன் பேசிக்கிட்டே போன பார்வதிங்கிற பொண்ணு ரயில்ல அடிபட்டு இறந்து போன சம்பவம் தான் ஞாபகத்துல வருது.. இரபது வருஷம் கஷ்டப்பட்டு அவ பெற்றோர் வளர்த்தது இதுக்காகவா..
கொடுமை.. வேற என்ன சொல்ல கைப்புள்ள //
வாங்க கார்த்திக்,
கண்டிப்பாங்க. நீங்க சொல்ற அந்த சம்பவத்தைப் பத்தி நானும் படிச்சிருக்கேன். ரொம்ப பரிதாபம் தான். பெத்தவங்க இந்த மாதிரியான கஷ்டம் எல்லாம் அனுபவிக்கக் கூடாதுன்னு பசங்க நெனச்சாலே போதும்...அதுக்கப்புறம் பொறுப்பா நடந்துக்குவாங்க.
//என்ன அங்கிள் இதுக்கெல்லாமா கவலைபடறது.
பி.கு: என் வயது 35 தான்
:))))))))//
ஆமாங்க...உங்களை மாதிரி சின்ன வயசு காரங்க சொல்லலாம். அந்த பய எப்படிங்க என்னை அங்கிள்னு சொல்லலாம்?
:)
//கைப்ஸ்!
வேல ரொம்ப போர் அடிக்குதோ :-))))//
நீங்க எங்க பாஸுக்கு வேண்டியப் பட்டவரா? பயமாருக்குதுங்களே வாயைத் தொறக்கறதுக்கு?
:)
//மொத நிகழ்ச்சிக்கு சரியான ரியாக்ஷன் தான்//
என் கருத்தைப் புரிந்து கொண்டு ஆமோதித்ததற்கு நன்றி ஒற்றர் படைத் தலைவரே!
:)
//தல, society conscious இருக்கற யாராக இருந்தாலும் அவர்களுக்கு இப்படி எல்லாம் தோணும், அதற்கு வயது முக்கியமல்ல, ஆனா, எழுதின விஷயம் எல்லாமே பெண்களை பற்றி இருக்கறதால.. நீங்க அதிகம் பெண்களை கவனிக்கறீங்க என்று வேணும்னா வைத்துக்கொள்ளலாம்//
வாங்க கவிதாம்ம,
பாராட்டற மாதிரி பாராட்டிட்டு கேப்ல கடா வெட்டிட்டீங்களே? இனிமே எனக்கு யாரு பொண்ணு குடுப்பா?
:(
முக்கால் செஞ்சுரி அடித்த சங்கத்து டிராவிட் கைப்புள்ளைக்கு வாழ்த்துக்கள்!
//அம்மணிக்கு தெரியல நீங்க பெண்களை சைட் அடிக்கல அவங்களை பத்தி ஆராய்ச்சி (research) பண்றீங்கன்னு.. அம்மணிய பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே.. சரியா பொறாமை புடிச்சவங்கன்னு... விடுங்க..விடுங்க.. நீங்க எப்பவும் போல கண்டினியூ வாட்ச்சிங் Girls.. ok.. I guide you if u want.. :)//
அனிதா,
நீ நம்ம செட்டு. ஆனா அம்மணி ஒத்தை கமெண்டைப் போட்டு நம்ம இமேஜையே டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாங்க. உஹூம்...நீ தான் மெச்சிக்கனும். ஒரு தடிப்பயலை என்னைய அங்கிள்னு சொல்லிட்டான்...இதுல இனிமே நான் bird watching...சே...girl watching பண்ணி என்னத்த சாதிக்கப் போறேன்?
:(((
//உங்களுக்கே சந்தேகம் வந்துருச்சில்ல? கிழிஞ்சுது போங்க :))//
இந்த உலகம் ஒரு மனுஷனை இளைஞனாக் கூட வாழ வுட மாட்டேங்குது...சந்தேகம் வராம என்ன பண்ணும்?
:(
//அப்புறம்... நான் நீண்ட விடுமுறைல இருந்து திரும்பிவந்துட்டேன். உள்ளேன் ஐயா!! :)//
வாங்க மேடம்...மூனு மாசம் நாலு மாசம் லீவெல்லாம் எடுக்கறீங்க...பெரிய தலை தான் நீங்க
:)
//அந்நியன் படம் பார்த்துட்டு படுத்தியா?
ஷங்கர் படமெல்லாம் பார்த்தீன்னா மறுநாள் நீ பாக்கற அரசு அதிகாரிங்கள எல்லாம் குத்தி கொல்லணும்னு தோணும் அவன் நல்லவனா, கெட்டவனான்னு எல்லாம் யோசிக்க முடியாது//
அட பாவி,
லைட்டா கோவப்பட்டதுக்கே வேலூர் ஜெயில்லுக்கா வழி சொல்லறே நீயு?
மக்களே! என்னை மதிச்சு நல்ல கருத்துள்ள பின்னூட்டம் எல்லாம் போட்டுருக்கீங்க? ஒரு வாரமா கொஞ்சம் டைட்டு...அதனால ஒடனே பதில் போட முடியலை. இன்னிக்கு இன்ஸ்டால்மெண்ட்ல கஷ்டப்பட்டு கொஞ்சம் பதில் போட்டேன். ரொம்ப சாமியாடுது...அதனால மன்னிப்பு கேட்டுக்கிட்டு உத்தரவு வாங்கிக்கறேன். ப்ளீஸ் நெக்ஸ்டு இதே பதிவும் மீட் பண்ணறேன்.
அங்கிள், அங்கிள், எனக்கும் தான் அங்கிள் இப்படி எல்லாம் தோணுது, அதுக்காக எனக்கும் வயசாயிடுச்சுன்னு சொல்லாதீங்க அங்கிள், எனக்கு என்றும் பதினாறுதான் அங்கிள், உங்களுக்குத் தான் தெரியுமே அங்கிள். நீங்க என்கிட்டே சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் அங்கிள், சரியா அங்கிள்? :D
கைப்புள்ள, இப்போ கொஞ்சம் சீரியஸா பார்ப்போம்.. "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நிறைய unlogical scenes இருக்கு. அதைச் சொல்லப் போனால் சரியா இருக்காதுன்னு தான் நானும் அதைப் பத்தி எதுவும் சொல்லலை. ஆனால் இந்த மொபைல் வந்ததில் இருந்து எல்லாரும் மொபைலும் கையுமாவே அலையறாங்க, அதுவும், குரோம்பேட்டை ரயிலடியிலும், இன்னும் பல்லாவரத்திலும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் வரை ரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறார்கள். அதுக்கு அப்புறமும் கூட இம்மாதிரித் தான் நடக்கிறது.
அப்புறம் இந்தக் குழந்தைகளைப் பாழ்படுத்துவது பெற்றோர் தான். துளசி அவர்கள் சொல்வது போல் பேர் சொல்வது என்பது இப்போ ரொம்பவே ஃபாஷன் ஆகி விட்டது. எங்க பள்ளியிலே ஆசிரியைகளைப் பேர் சொல்லலாம். ஆனால் எப்போ என்றால் மற்ற ஆசிரியைகளிடம் குறிப்பிடும்போது சொல்லுவோம். இப்போ அப்படி இல்லை. கலாசாரச் சீரழிவு என்பது இது தான் என்பது புரியாமலேயே முன்னேற்றம் என்றால் சில மாற்றங்கள் இருக்கும் என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எழுதினால் ரொம்பவே பெரிசாப் போயிடும். அதனால் நிறுத்திக்கிறேன்.
உங்கள் ஆதகங்கள் அனைத்தும் நியாமானதே, மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும் ரசிக்கும் படியான உங்கள் எழுத்து நடை கடைசி வரி வரைக்கும் வாசிக்க தூண்டியது!!
அங்கிள், உங்கள் ஆதகங்கள் அனைத்தும் நியாமானதே, வயசாயிட்டா பொறுப்பு வந்துடும். நிதானம் வரும்.
இப்ப என்ன உங்க டாடிக்கு தெரியனும், உங்களுக்கு வயசாயிடுத்து! ஹிஹி, அதானே!
எலேய் போடுங்கடா போனை.
அங்கிள்! அங்கிள்!னு மிங்கிள் ஆறேனா தல?
இதுக்கு தான் எங்களை மாதிரி குழந்தைகள் தினம் கொண்டாடனும்! (என் வூட்டுக்கு வந்து பாருங்க தெரியும் சங்கதி)
Madura has left a new comment on your post "வயசாயிடுச்சாங்க?":
கைப்ஸ், கொஞ்சம் சீரியசாத் தான் பதில் தோணுது, ஜாலி அடிக்கணும்னு ஆசை இருந்தாலும் :))) ... நல்ல பதிவு.
நிஜமாவே நீங்க தெரிஞ்சக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பதில் கிடைக்காத கேள்விக்கு முதல்ல வர்றேன்.
நான் நிஜமாவே, சின்னப் புள்ளையில, "ஏனக்கு வேற அம்மா இருக்காங்களோ, அவங்க வந்து கூட்டிட்டு போவாங்களோ"ன்னு கனவு கண்டிருக்கேன். உண்மைதான். இத பயங்களும் பண்ணுவாங்கன்னு நான் மச்சான் மச்சான் நண்பர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சிருக்கேன். பஸ் ஏறி போற கனவு இருந்தது - போகலை ஆனா - தைரியம் இல்ல - அப்படின்னு நினைக்கிறேன். இல்ல எப்படி டிக்கட் வாங்கணும் எப்படி போவணும்னு கரெக்டா தெரியல. அவ்வளவுதான்.
ரொம்ப சேட்டை பண்ணி அடி வாங்குன அன்னைக்கு இந்த கனவு காட்டுத்தனமா வளந்து போகும்! :)))) ... படிச்ச கதையெல்லாம் சேந்து, ரொம்ப தூரம் போனா ஒரு காடு இருக்கும், அந்த காட்டுல சாக்லேட்லயே வீடு கட்டி, கேக்க்லையே ஜன்னல் செஞ்சு இருக்கும், அப்படின்னு கனவு கண்டது இன்னும் ஞாபகம் இருக்குது. அஞ்சலி படத்தில வர்ற பறக்கிற சைக்கிள், ஐஸ்க்றீம்ல குளிக்கிறது, எல்லாமே அல்பத்தனனமா (இல்ல சின்னப் புள்ளத்தனமா) நான் யோசிச்சிருக்கேன். நிஜமா இலங்கை போயிரப்பனான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிஞ்சா போயிருப்பேன். அது பெரிய தனம் இல்ல கைப்ஸ். கொஞ்ச ரொம்ப கனவு காணும் பச்ச புள்ள தனம். அதுலயும் அம்மாக்கிட்ட எல்லா புள்ளைங்களும் ரொம்ப ராங்க் காட்டும். அன்பின் ஒரு பரிமாணம்தான் அது போல. எனக்கு எங்க அம்மா இன்னைக்கு தெய்வம். இது தான் பெரிய புள்ள தனம். :)))) .... இப்ப நினைச்சா ரொம்ப கேவலமா தான் இருக்கு இவங்கள விட்டுட்டு போக ஆசைப்பட்டமேன்னு. ஆனா அப்படி நினைச்சது உண்மைதான்.
அருந்ததி ராய் அவார்டு வாங்குனது இதுக்குத்தான். ரொம்ப உண்மையா ஒரு பொண்ணு நினைக்கிறது அவ்வளவையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க. உலகம் பூரா அந்த உண்மைய ஆனந்தமா அனுபவிச்சு படிச்சதுனால தான் அவங்களுக்கு அவார்டு! நிறைய பேருக்கு அவங்க எழுதினது பிடிகாம போனதுக்கு காரணம் யாரும் அந்த ரேஞ்சுக்கு உண்மை சொல்ல பயப்படுறதுதான். உண்மை பகிரப்படாததால நிறைய பேர் உண்மை இல்லன்னு நினைக்கிறாங்க. மணி சார் பெண்கள் விஷயத்தில இது வரைக்கும் ஒரு அவுன்ஸ் கூட தப்பா கணக்கு போடலை. நானே கலங்கி போயிருக்கேன், இந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்னு. சுஹாஸினி கிட்ட தான் கேக்கணும். சுஹாஸினி உண்மை பேசுறவங்க தைரியமா, புருஷனோட எல்லாம் சொல்லிருப்பாங்க.
ரொம்ப நீண்டுருச்சு சாரி! :) ... சும்மா சொல்லலாம்னு தோணுச்சி. அவ்வளவுதான். மத்தபடி நீங்க கோபப்பட்டதோட உள் அர்த்தம், "ஏன் இப்படி" அப்படின்ற உள்ளார்ந்த அக்கறை மிகுந்த கேள்வி இருந்ததாலதான் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
//போன வாரம் சன் டீ.வில மலரும் மொட்டும்னு ஒரு நிகழ்ச்சி போட்டாங்கப்பா,//
//
சும்மா சொல்லக்கூடாது குழந்தைங்க எல்லாம் எவ்வளவு அழகா பாடறாங்க, பேசறாங்க தெரியுமா!//
தம்பி,
உங்க நீண்ட பின்னூட்டங்களுக்கு எல்லாம் பதில் போடாம இருக்கோமேன்னு கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கிட்டே இருந்தேன். இன்னிக்கு எவ்வளவு செலவானாலும் பதில் போட்டுடறதுன்னு முடிவு பண்ணியாச்சு தம்பி. நீங்க சொல்ற மாதிரி சின்ன குழந்தைகளைப் பார்த்து ரசிக்கிறது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் தான். மலரும் மொட்டும் நிகழ்ச்சி நேரம் கெடச்சால் நானும் பாக்கறதுண்டு.
//தல சின்ன புள்ள தானே எப்படி ட்ரெஸ் பண்ணினா என்ன?
தல நீங்க ஓண்ணை புரிஞ்சுக்கணும் . சின்ன புள்ளைங்க போடுக்குற ட்ரெஸைதான் நம்ம நடிகைக போட்டுக்குறாங்களே தவிர அவங்க ட்ரெஸை சின்ன புள்ளைங்க போடுக்குறதில்லை !! :))))//
பாண்டி உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கிறேன். ஆனா என்னமோ அந்த காட்சியைப் பாக்க கஷ்டமாத் தான் இருந்தது.
//கைப்பு அங்கிள் கைப்பு அங்கிள்,
நான் கூட அங்கிள்னு கூப்பிட்டா
என்ன கோச்சிப்பிங்களா , பவன் http://www.pavanspictures.blogspot.com/ //
பெரிய ஆளுங்களே அங்கிள்னு கூப்பிடும் போது கைக்குழந்தை நீ கூப்பிட்டா கோச்சிப்பேனா?
:))
//எல்லாருக்கும் வர நியாயமான கோவம்தான். எனக்கு இது மாதிரி நிறைய தடவை தோணி இருக்கு. அத்தோட மட்டுமில்லாம அவுங்ககிட்ட போய் சண்டை வேற போடுவேன். விதிகளை மீறுவாங்க இல்லே, அப்போ வரும் பாருங்க கோவம். பாவம் அவுங்க பரம்பரை வாயில வந்து உழும். இதெல்லாம் நியாயம்தான், நாம் கோவப்படலைன்னா யாரு படறது? நம்ம நாடு, நம்ம தேசம். ஒருதடவை திட்டிப்பாருங்க அடுத்தமுறை அதே தப்பை செய்ய யோசனை செய்வான், அதுதான் இதுல முக்கியம். ஒரு வரியில சொன்னா Hatsoff to You, you are caring for others, like to be. //
மிக்க நன்றி இளா. பொதுவுல கோபத்தை வெளிக்காட்டுனது ரொம்ப குறைவு தான். ஆனாலும் உங்க யோசனை வர்க் அவுட் ஆகும்னு தான் தோணுது.
//தல,
அப்பிடிதான் உன்னை மாதிரியே நியாயஸ்த்தனா இருந்தா கொதிக்கதான் செய்யும்!!!//
ஹி..ஹி...டேங்கீஸ்பா ராயல்
//ஒவ்வொருத்துங்க பார்வையிலே ஒவ்வொன்னும் பலவிதமாதான் தெரியும்... ஒனக்கு அது கொஞ்சம் ஓவராத் தெரிச்சிருக்கு அவளோதான். ஆனா ஒரு சில காட்சிகளை தவிர கீர்த்தனா அதிலே அசத்திருப்பா.!//
ஆமாம்பா உண்மை தான்பா.
//வீட்டிலே போன் பண்ணி சொல்லுறேன், உனக்கு கல்யாண வயசாயிடுச்சின்னு!!! ;)//
இதானே வேணாங்கிறது?
:))
//Chittappu, உன்னோட பீலிங்ஸ் பார்த்து எனக்கு ஆனந்தகண்ணிரு முட்டிக்கிட்டு வருது!!!!!//
டேங்கீஸ் பா தேவு
:)
//அப்படி ஒட்டு மொத்தமா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேங்க...ஏன்னா எனக்கு அந்த மாதிரி தோணுனதில்லை. வேற மாதிரி, ஒண்ணு செய்ய தோணும்; ஆனா இதுவரைக்கும் அதில ஜெயிக்க முடியலை. திறமைசாலிகளா தான் இருக்காங்க. அது என்னன்னா, எப்படியாவது குறுக்கு மறுக்கா வண்டிய ஓட்டி அட் லீஸ்ட் அந்த செல்போனை கீழ விழ வைக்கணும்னு ட்ரை பண்றதுதான். ஒரே தடவை பாதி நடந்தது. ஆனா செல் அந்த ஆளு மடியில விழுந்து பொழச்சுது.//
வாங்க தருமி ஐயா,
நீங்க சொல்றது உண்மை தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதயும் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு.
நீங்க கார் ஓட்டிட்டு போகும் போது மொபைல்ல பேசறவங்களைப் பத்தி சொல்றீங்கன்னு நெனக்கிறேன்
//இது ரொம்ப தப்புத்தான். இருந்தாலும் i will keep trying... //
பாத்து பண்ணுங்க. நீங்க குறுக்கும் மறுக்குமா போயி எதாச்சும் அசம்பாவிதம ஆகக் கூடாதில்லயா?
//ஹாய் கைப்பு,
அந்த செல்போன் விஷயத்திலும் சரி,அந்த சின்ன குழந்தை ஆடின விஷயத்திலும் சரி, நீங்க கோபப் பட்டது நியாயம் தான்,இதுக்கு எல்லாம் வயசு தேவயே இல்ல. தப்பான ஒரு விஷயத்த யார் வேனுமானாலும் கேக்கலாம்.//
வாங்க மேடம்,
மிக்க நன்றி
//2. "கன்னத்தில் முத்தமிட்டால்", டவுட்டு எனக்கும் இருக்கு. ஒரு அம்மா அதுவும் ஒரு குழந்தையை விரும்பி தத்து எடுத்த பிறகு அந்த சின்ன குழந்தையிடம் இதை சொல்லுவாங்களா?
அதே மாதிரி, அந்த குழந்தையும் இவ்வளவு கஷ்டங்கலுக்கு அப்பறமும் தன் அம்மாவை தேடிக்கிட்டு போகுமா?
ஒரு வேளை இது படத்துக்குங்றதால எடுத்து கொண்ட கதையா? தெரியல.//
இன்னிக்கு அந்த படத்தோட சில காட்சிகளை டிவியில பார்த்தேன். சில காட்சிகள்ல பயங்கர எதார்த்தம். மேலே நீங்க சொல்லிருக்கற விஷயங்களை எல்லாம் அந்த வயசுல நாம அனுபவிக்காததுனால வர்ற ஆதங்கம் தான்னு நெனக்கிறேன்.
//அப்பறம், டிரெய்ன்ல உங்கல அங்கில்னு கூப்பிட்டாங்கலேன்னு ஏன் கவலப்படரீங்க, ஷ்யாம் கூட என்ன 17th சென்சுரி ஆளுன்னு சொன்னாரு,இதுக்கெல்லாம் போயி கவலப் பட்டுகிட்டு..விடுங்க தல..
துளசி மேடம் சொன்னா மாதிரி, 3 வயசு குழந்தை கூட நம்மள பேர் சொல்லாம இருந்தா போதாதா..? //
ஹி...ஹி...டிரெயின்ல அங்கிள்னு கூப்பிட்டதுக்குக் கவலையெல்லாம் படலீங்க. அத கேட்டதும் அப்பவே எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு.
:)
//அன்புள்ள தோழா,
நான் ரங்கா… உன் சமீபத்திய பதிவு படித்தேன்… //
//இன்று இளமை என்ற பெயரிலும், கலாசார மாற்றம் என்ற பெயரிலும் நடந்து வரும் கொடுமைகளை, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.//
வாங்க ரங்கா,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
//
ரௌத்ரம் பழகு என்பது என் கவிஞன் வாதம். எதனைக் கண்டு ? என்பதில்தான் குழப்பமே. எப்பவாவது ஒருமுறை நீ பார்த்ததுபோல் ஒரு பெண்ணைப் பார்த்து “ ஏம்மா… ஒரு ஓரமா நின்னு பேசக்கூடாதா ? “ என்று கேட்டுப் பார். பிறகு தெரியும், அவர்கள் எதனிடம் ரௌத்ரம் பழகுகிறார்கள் என்பது. கலந்துகட்டிய ஆங்கிலத்தில் சரமாரியாகத் திட்டுவார்கள், இல்லையெனில், நம்மையே முட்டாளாக்கும்படி சிரிப்பார்கள். //
அப்படி வேற இருக்கா? இது வரைக்கும் அந்த அனுபவம் இல்லீங்க. எடுத்து சொன்னா இந்த நெலமைக்குத் தான் ஆளாவோம்னு நெனக்கிறேன்.
//அந்த இரண்டாவது நிகழ்ச்சியில் ஒரு எச்சரிக்கை உள்ளது. குழந்தைகளை வளர்ப்பது என்பது உலகிலேயே இரண்டாவது கஷ்டமான காரியம். முதல் கஷ்டமானதும் அதுவே. உண்மைதான், இன்றைய குழந்தைகளுக்கு, டி.வி, படிப்பு, விளையாட்டு என்று எத்தனையோ கவனக்கலைப்புகள் இருக்கிறதுதான், இருந்தாலும், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பிறக்கின்றன. நல்ல குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன.//
நீங்கள் தங்கள் கருத்துகளை வைத்திருக்கும் விதமும், விளக்கிய விதமும் வெகு சிறப்பு. உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்.
//மொத்தத்தில், சமுதாயக் கோபம் கூடாது என்பதோ, கண்டுகொள்ளாதே என்பதோ என் வாதமல்ல. வேண்டும். ஆனால் அறையும் அளவிற்கு அல்ல.
யோசிக்கிறேன். யோசியுங்கள். யோசிப்போம்.
+ நேசத்துடன்… இரா. அரங்கன் //
அறைவதைப் பற்றி யோசித்ததற்காக சில சமயம் வருத்தப் படுகிறேன். கண்டிப்பாக அது தவறு தான். செயல்படுத்தக் கூடிய வழியும் அதுவல்ல. தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
//நீங்க நினைக்குறது தான் நானும் நினைக்குறேன்.. குழந்தை குழந்தையா இருந்தா தான் நல்லா இருக்கும்.. அத தான் ரசிக்கவும் முடியும்..//
வாங்க மேடம்,
மிக்க நன்றி
//நல்லா இருக்கு...
எங்க! say Cheese and carry on ur adventure //
அது எங்க நின்னுச்சு? பல்பு வாங்கறது தான் நம்ம டெய்லி வேலையாச்சே? சீஸோ சீஸ் தான்.
:)
//வயசான காலத்துல இதெல்லாம் சகஜம்தான அங்கிள்!
இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? பி.பி ஏறிடப்போகுது! //
ஐயோ பயமாருக்கு,
படத்தை மாத்து...பி.பி. ஏறுது.
:))
//செல்போன்ல வண்டில போகும் போது வெட்டி கடலை போடறவங்களால ரோட்ல எல்லாருக்கும் பிரச்சனைதான். ரைனு ஒண்ணு விட்டா தப்பே இல்லை.
இவனால எவனுக்காது எதாவது ஆச்சினா யார் பொறுப்பு?//
வாப்பா வெட்டி,
ஆனா அத வண்டி ஓட்டறவங்க யோசிச்சா தாம்பா எதனா உருப்படியா பண்ண முடியும்.
//மணி படத்துல சின்ன பசங்க சில சமயம் அப்படித்தான் இருப்பாங்க. அஞ்சலி பாக்கலையா?//
ஆமாமா
:))
//பொற்கொடி அக்கா உங்களை அங்கிள்னு சொன்னாங்களா? சரி கல்யாண சந்தோஷத்துல அப்படி சொல்லியிருப்பாங்க... இனிமே அவுங்களே ஆண்ட்டிதான் :-) (வாழ்த்துக்கள் பொற்கொடி ஆண்ட்டி)//
என் செல்லம். என்னைய வுட்டுக் குடுக்காம பேசறியே? நல்லாருப்பா நல்லாரு.
:0
//இளசுகள் பார்வையில் அது தவறில்லை என்றுதான் படும்! நமக்குத்தான் இவர்களுக்கெல்லாம் பொளேர் என்று ஒரு அறை விட வேண்டுமென்ன்று நியாயமான கோபம் தோன்றும்! தோன்ற வேண்டும்! ஏன்னா இது வயோதிக வயசு! எதையும் நிதானமாக சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வயசு! //
தளபதியாரே!
நீங்களுமா?
:))
//நியாயமான நடுவர்தான். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும்!
நான் கூட சிறுவயதில் "சின்ன ராணி சிலுக்கு மேனி" என்ற பாடலுக்கு அதே மாதிரி நடனம் ஆட முயற்சி செய்து வீட்டில் அடி வாங்கி இருக்கிறேன்.//
அதனால தான் இப்ப தெளிவா இருக்கீங்க
:))
//அங்கிள், அண்ணே ன்னு கூப்பிடறதெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு என்ஜாய் பண்ணுங்க! என்னையெல்லாம் அங்கிள்னு கூப்பிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் எனக்கு! தவிர கோவமெல்லாம் படமாட்டேன்!//
அப்படி கூப்புட்டதுக்காக கோபமெல்லாம் படலை தள. ஒரு வேளை நான் எழுதுன விதம் அப்படி இருக்கோ என்னவோ? அத கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு.
:)
//sariyana karnathukku thaan roudram pazhagi irukeenga .. aduhukkaga oru chinna thyagam .. vayasanavar pattam ..
kaips kovam vazhga vazhga//
வாங்க மேடம்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//கைப்ஸ், கொஞ்சம் சீரியசாத் தான் பதில் தோணுது, ஜாலி அடிக்கணும்னு ஆசை இருந்தாலும் :))) ... நல்ல பதிவு.//
வாங்க மதுரா,
உங்க பின்னூட்டத்தைப் பப்ளிஷ் பண்ணும் போது ப்ளாக்கர் சொதப்புனதால மெயில்லேருந்து எடுத்து போட்டிருக்கேன். ஜாலி அடிச்சிருக்கலாம்ல? :)) தங்கள் பாராட்டுக்கு நன்றி.
//அஞ்சலி படத்தில வர்ற பறக்கிற சைக்கிள், ஐஸ்க்றீம்ல குளிக்கிறது, எல்லாமே அல்பத்தனனமா (இல்ல சின்னப் புள்ளத்தனமா) நான் யோசிச்சிருக்கேன். நிஜமா இலங்கை போயிரப்பனான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிஞ்சா போயிருப்பேன். அது பெரிய தனம் இல்ல கைப்ஸ். கொஞ்ச ரொம்ப கனவு காணும் பச்ச புள்ள தனம். அதுலயும் அம்மாக்கிட்ட எல்லா புள்ளைங்களும் ரொம்ப ராங்க் காட்டும். அன்பின் ஒரு பரிமாணம்தான் அது போல. எனக்கு எங்க அம்மா இன்னைக்கு தெய்வம். இது தான் பெரிய புள்ள தனம். :)))) .... இப்ப நினைச்சா ரொம்ப கேவலமா தான் இருக்கு இவங்கள விட்டுட்டு போக ஆசைப்பட்டமேன்னு. ஆனா அப்படி நினைச்சது உண்மைதான். ///
உங்களிடமிருந்து கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தையின் மனநிலையை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் காணலாம் எனத் தெரிந்து கொண்டேன் மதுரா. ஆனால் நான் அந்த வயதில் அந்த மாதிரி இல்லாததனாலும், அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்ததன் காரணமே அந்த எரிச்சல் என எண்ணுகிறேன்.
//அருந்ததி ராய் அவார்டு வாங்குனது இதுக்குத்தான். ரொம்ப உண்மையா ஒரு பொண்ணு நினைக்கிறது அவ்வளவையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க. உலகம் பூரா அந்த உண்மைய ஆனந்தமா அனுபவிச்சு படிச்சதுனால தான் அவங்களுக்கு அவார்டு! நிறைய பேருக்கு அவங்க எழுதினது பிடிகாம போனதுக்கு காரணம் யாரும் அந்த ரேஞ்சுக்கு உண்மை சொல்ல பயப்படுறதுதான். உண்மை பகிரப்படாததால நிறைய பேர் உண்மை இல்லன்னு நினைக்கிறாங்க. //
நீங்க சொல்றது உண்மை தான். நமக்கு தெரியாததுனால ஒரு விஷயத்தைத் தப்புன்னு சொல்றது தப்பு தான். ஆனா இந்த ஞானமும் அனுபவம் கத்துக் குடுத்தது தான்.
:)
//மணி சார் பெண்கள் விஷயத்தில இது வரைக்கும் ஒரு அவுன்ஸ் கூட தப்பா கணக்கு போடலை. நானே கலங்கி போயிருக்கேன், இந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்னு. சுஹாஸினி கிட்ட தான் கேக்கணும். சுஹாஸினி உண்மை பேசுறவங்க தைரியமா, புருஷனோட எல்லாம் சொல்லிருப்பாங்க.//
புதிய கண்ணோட்டம், புதிய கருத்துகளைத் தெரிய தந்ததற்கு நன்றி மதுரா.
//ரொம்ப நீண்டுருச்சு சாரி! :) ... சும்மா சொல்லலாம்னு தோணுச்சி. அவ்வளவுதான். மத்தபடி நீங்க கோபப்பட்டதோட உள் அர்த்தம், "ஏன் இப்படி" அப்படின்ற உள்ளார்ந்த அக்கறை மிகுந்த கேள்வி இருந்ததாலதான் அப்படின்னு நான் நினைக்கிறேன். //
நீளல்லாம் இல்லீங்க. மதிச்சு இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டுருக்கீங்களே? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.
//அங்கிள், அங்கிள், எனக்கும் தான் அங்கிள் இப்படி எல்லாம் தோணுது, அதுக்காக எனக்கும் வயசாயிடுச்சுன்னு சொல்லாதீங்க அங்கிள், எனக்கு என்றும் பதினாறுதான் அங்கிள், உங்களுக்குத் தான் தெரியுமே அங்கிள். நீங்க என்கிட்டே சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் அங்கிள், சரியா அங்கிள்? :D //
தலைவிஜி,
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராப் படலை?
:)
//ஆனால் இந்த மொபைல் வந்ததில் இருந்து எல்லாரும் மொபைலும் கையுமாவே அலையறாங்க, அதுவும், குரோம்பேட்டை ரயிலடியிலும், இன்னும் பல்லாவரத்திலும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் வரை ரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறார்கள். //
உண்மை தான் மேடம். அதன் பின் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர் நிலையை யோசித்துப் பாருங்கள். அதை பிள்ளைகள் உணர்வதில்லை.
//அப்புறம் இந்தக் குழந்தைகளைப் பாழ்படுத்துவது பெற்றோர் தான். துளசி அவர்கள் சொல்வது போல் பேர் சொல்வது என்பது இப்போ ரொம்பவே ஃபாஷன் ஆகி விட்டது. எங்க பள்ளியிலே ஆசிரியைகளைப் பேர் சொல்லலாம். ஆனால் எப்போ என்றால் மற்ற ஆசிரியைகளிடம் குறிப்பிடும்போது சொல்லுவோம். இப்போ அப்படி இல்லை. கலாசாரச் சீரழிவு என்பது இது தான் என்பது புரியாமலேயே முன்னேற்றம் என்றால் சில மாற்றங்கள் இருக்கும் என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எழுதினால் ரொம்பவே பெரிசாப் போயிடும். அதனால் நிறுத்திக்கிறேன். //
ஹ்ம்ம்...கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
//உங்கள் ஆதகங்கள் அனைத்தும் நியாமானதே, மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும் ரசிக்கும் படியான உங்கள் எழுத்து நடை கடைசி வரி வரைக்கும் வாசிக்க தூண்டியது!!//
வாங்க திவ்யா,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
superngo! amanga ipo elam intha colege pasanga, school kutties elam uncle auntynu namala koopdaraatha ninaichaa kadupaa varthu! apdi koopta evlo vethanaiya irukumnu therium -- same blood ?
:) Deeksh
104 comments - kalakuringa thala!
You felt like slapping her for the behaviour. If it was me I would have done it :)
- Unmai
Mohana,
i think even my friends had a conversation along the same lines.my point is
You are very caring person.
I wont call you as old, but it could be termed as very mature / thoughtful person.
BTW welcome to the club Bro.
evandaaa athu singatha seendi vittathu paaru singam tension ayidichi ;) ammu
என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா!!) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது!!
உங்க ஆதங்கம் சரிதான் கைப்புள்ள. ஆனா இதை சொல்வதினால் வயதாகிடுச்சுன்னா this is too much. ஒரு சமூக அக்கறை கொண்ட ஒருவன் எந்த வயசிலையும் இது மாதிரி விசயங்களுக்கு கோபப்படுவான்.
Post a Comment