Saturday, October 21, 2006

தீபாவளி ஏன் கொண்டாடுறாங்க?

"தோடா! வந்ட்டாருடா வெண்ரு...அகமதாபாத்துலேருந்து அர்த்தம் சொல்ல. தீபாவளி கொண்டாடுறதுக்கான காரணம் அஞ்சாப்பு பையன் கூட சொல்லிடுவான்யா"ன்னு மக்கள்ஸ் எல்லாம் முணுமுணுப்பது நல்லா தெளிவா கேக்குதுங்க. அது என்னன்னா போன வருஷம் கிட்டத்தட்ட இதே நேரம் நம்ம ஆங்கில வலைப்பூவுல ஒரு பதிவு போட்டேன். அது இப்போ இந்நேரத்துல நியாபகம் வந்து தீபாவளி ஸ்பெசல் பதிவு ஒன்னு போடு போடுன்னு மனுசனை இம்சை பண்ணுது.

தீபாவளின்னா நம்மூர்ல நரகாசுரன்ங்கிற அரக்கனை ஸ்ரீ கிருஷ்ணர் கொன்னதை குறிக்கறதுக்குத் தானே கொண்டாடுறோம்? ஆனா வட இந்தியாவுல ராமர் ராவணனைக் கொன்னுட்டு, வெற்றிகரமா அயோத்திக்கு திரும்பி வந்ததை குறிக்கறதுக்கு கொண்டாடுறாங்க. எதேச்சையா டெல்லியில் நண்பன் ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது இந்த காரணத்தைக் கேட்டு உண்மையிலேயே ஆச்சரியப் பட்டுப் போனேன். அதே மாதிரி அவங்க, நரகாசுரனைக் கிருஷ்ணர் கொன்னதைக் குறிக்கறதுக்கு தீபாவளி கொண்டாடப் படுகிறது என்ற காரணத்தைக் கேள்வி பட்டதே இல்லையாம்.

அதோட தீபாவளி, அஞ்சு நாள் பண்டிகையா வடக்குல கொண்டாடப் படுது.
முதல் நாள் "தன் தேரஸ்" - அதாவது தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் மாதத்தில் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்(அதாவது பதின்மூன்றாம் நாள்) தன் தேரஸ் கொண்டாடப் படுகிறது. "தன்" என்றால் செல்வம். இந்நாள் பாத்திரங்கள், நகைகள் வாங்க உகந்த நாளாகக் கருதப் படுகிறது. இவ்வருடம் நேற்று தன் தேரஸ் கொண்டாடப் பட்டது(19.10.2006)

இரண்டாம் நாள் "நரக சதுர்தசி" - அமாவாசைக்கு பதினான்காம் நாள் நரக சதுர்தசி என்று கொண்டாடப் படுகிறது. சிறப்பாக இந்நாளில் என்ன செய்வார்கள் என அறிந்து கொள்ள முடியவில்லை.

மூன்றாம் நாள் "தீபாவளி" - அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப் படுகிறது.

நான்காம் நாள் "புது வருடம்" - வட இந்திய நாட்காட்டியில் புது வருட நாளாக இந்நாள் கருதப் படுகிறது.

ஐந்தாம் நாள் "பாயி தூஜ்" - ரக்ஷா பந்தன் அன்று சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டுக்கு வந்து ராக்கி கயிறு கட்டிக் கொள்வார்கள். ஆனால் இத்தினத்தன்று சகோதரிகள் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து சந்திப்பதற்கான நாளாகக் கருதப் படுகிறது.

ஹையா! வட நாட்டுல இருந்தா ஜாலி...அஞ்சு நாளும் லீவு கெடைக்கும்னு நெனைக்காதீங்க சாமிங்ளா! அது தான் இல்ல. லீவு என்னமோ ஒரு நாள் தான்...தீபாவளி அன்னிக்கு. இதுல முதல் நாளான தன் தேரஸ் விசேஷமாகக் கொண்டாடப் படும், ஆபிசில் லீவு கிடைக்காவிட்டாலும். அதே மாதிரி "பாயி தூஜ்" ஒரு முக்கியமான பண்டிகையாகக் கருதப் படுகிறது. அத்தினத்தன்று ஆபீசுக்குப் பல பேர் மட்டம் போட்டு விடுவார்கள்.

இப்போ எனக்கு ஒரு சந்தேகம்...ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தின அவதாரம் தானே? அப்போ தீபாவளி முத முதல்ல கொண்டாடுனது யாரு? ராமரா? கிருஷ்ணரா? ராமகிருஷ்ணன்னு சொல்லிக் கலாய்ச்சிடாதீங்கப்பா. என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்க.
நாம எல்லாம் கிருஷ்ணருன்னு சொல்லறோம், வடக்குல ராமருன்னு சொல்லறாங்க.


ராமரோ கிருஷ்ணரோ...குடும்பத்தோடயும் நண்பர்களோடயும் புது துணி உடுத்தி பலகாரம் சாப்பிட்டு சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க. வாழ்த்துகள்.

இங்கன போனீங்கன்னா தீபாவளி கொண்டாடுறதுக்கான அஞ்சு வெவ்வேறு காரணத்தைச் சொல்றாங்க. டப்பாசு வெடிச்சி ஓய்ஞ்சதுக்கப்புறம் டைம் கெடச்சாப் பாருங்க.

17 comments:

Unknown said...

வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழருக்கு பழக்கமான செய்தி இது தலை.ஆனா நம்மூரில் நிறைய பேருக்கு தெரியாது.

என்னை கேட்டா ராமர் திரும்பி வந்த நாளை ஒரு தீபாவளியாவும், நரகாசுரன் செத்த நாளை இன்னொரு தீபாவளி நாளாவும் கொண்டாடணும்னு சொல்வேன். அப்ப தான வருஷத்துக்கு ரெண்டு தடவை தீபாவளி வரும்?:-))

கப்பி | Kappi said...

தலி..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

அவங்க 5 நாள் தீபாவளி கொண்டாடறாங்கன்னு ஃபீல் பண்ணாத..நமக்கெல்லாம் தினம் தினம் தீபாவளி தான் ;)

கதிர் said...

வலையுலகின் யுனிவர்சல் ஹீரோ கைப்புள்ளைக்கு எனது இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கால்கரி சிவா said...

வடநாட்டு தீபாவளி தென்னாட்டுக்கு வர்ரதுகுள்ளே அடுத்த அவதாரம் வந்திருச்சி. அதனாலே தான் அங்கே ராமர் இங்கே கிருஷ்ணர்.

அதே நேரத்திலே நம்மாளு முருகர் பத்மாசாரனே கொன்றது கூட தீபாவளிக்கு ஒருவாரம் கழிச்சிதான்.

எது எப்படி இருந்தாலும் தீபாவளி ஜாலிதான். துணி, ஸ்வீட், பட்டாசு, வாழ்த்துகள் என ஜாலிதான்

ஹாப்பி தீவாளி

Anonymous said...

அப்படியானால் ராவண சதுர்தசி அல்லவா கொண்டாட வேண்டும். ஏன் நரக சதுர்தசி கொண்டாடுகிறார்களாம்?

இலவசக்கொத்தனார் said...

அதான் கொண்டாடியாச்சில்ல. அப்புறம் என்ன? ஓ! நான் வாழ்த்து சொல்லலையா? சரி சரி, இதோ சொல்லிட்டேன்யா. உமக்கு, உம்ம சங்க சிங்கங்கள் எல்லாருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இப்போ தீபாவளி நல்லா நடந்தா மாதிரி பீலிங் வருதா. போயி வேலையைப் பாருங்கப்பா....

siva gnanamji(#18100882083107547329) said...

தீபாவளி வாழ்த்துகள்!

சென்னை வந்துட்டீங்களா?

ஒரு சந்திப்பு போட்ருக்கலாமே!

ALIF AHAMED said...

த(லை)ல தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்

சரவணன் said...

தீபாவளி நல்வாழ்த்துகள்...

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள் கைப்புள்ள

கைப்புள்ள said...

//வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழருக்கு பழக்கமான செய்தி இது தலை.ஆனா நம்மூரில் நிறைய பேருக்கு தெரியாது.//

வாங்க செல்வன்,
எனக்கும் டெல்லியில் இருந்த ஐந்தாவது வருடம் தான் இது தெரிய வந்தது. அதை கேட்ட போது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

//என்னை கேட்டா ராமர் திரும்பி வந்த நாளை ஒரு தீபாவளியாவும், நரகாசுரன் செத்த நாளை இன்னொரு தீபாவளி நாளாவும் கொண்டாடணும்னு சொல்வேன். அப்ப தான வருஷத்துக்கு ரெண்டு தடவை தீபாவளி வரும்?:-))//

ஹி...ஹி...நல்ல ஐடியா தான். ஆனா லீவு கெடக்கிறது ஏற்கனவே குதிரை கொம்பா இருக்கு...ரெண்டு தீபாவளின்னா கஷ்டம் தான்.
:)

கைப்புள்ள said...

//தலி..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!//

மிக்க நன்றி கவிஞ்சரே!

//அவங்க 5 நாள் தீபாவளி கொண்டாடறாங்கன்னு ஃபீல் பண்ணாத..நமக்கெல்லாம் தினம் தினம் தீபாவளி தான் ;) //

அப்படீங்கறே? அப்பச் சரி
:)

கைப்புள்ள said...

//வலையுலகின் யுனிவர்சல் ஹீரோ கைப்புள்ளைக்கு//
ஆஹா என்னதிது? உச்சி குளுந்துடுச்சப்பா
:)

//எனது இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி தம்பி.

கைப்புள்ள said...

//வடநாட்டு தீபாவளி தென்னாட்டுக்கு வர்ரதுகுள்ளே அடுத்த அவதாரம் வந்திருச்சி. அதனாலே தான் அங்கே ராமர் இங்கே கிருஷ்ணர். //

ஹி...ஹி...நல்ல கணிப்பு. என் ஐயப்பாட்டை நீக்கும் அற்புத கருத்துகள். யாரங்கே! கால்கரியாருக்கே ஆயிரம் பொற்காசுகள்னு சொல்ல ஆசையா தான் இருக்கு
:)

//அதே நேரத்திலே நம்மாளு முருகர் பத்மாசாரனே கொன்றது கூட தீபாவளிக்கு ஒருவாரம் கழிச்சிதான்.

எது எப்படி இருந்தாலும் தீபாவளி ஜாலிதான். துணி, ஸ்வீட், பட்டாசு, வாழ்த்துகள் என ஜாலிதான்

ஹாப்பி தீவாளி //

கண்டிப்பா...ராமரோ, கிருஷ்ணரோ, முருகரோ...தீபாவளின்னாலே ஹாப்பி தான். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஹாப்பி தீபாவளி.

கைப்புள்ள said...

//அப்படியானால் ராவண சதுர்தசி அல்லவா கொண்டாட வேண்டும். ஏன் நரக சதுர்தசி கொண்டாடுகிறார்களாம்? //

வாங்க வாங்க நரகாசுரன்,
நியாயமான கேள்வி தான். யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பு.
:)

கைப்புள்ள said...

கொத்ஸ், சிவஞானம்ஜி, மாயுரம் சரவணன், மின்னல், தூயா!
வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னுடைய உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

Porkodi (பொற்கொடி) said...

அங்குள், புது ட்ரெஸ்ஸ போட்டு இனிப்ப சாப்பிடுவீங்களா, அத விட்டுட்டு என்ன கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு :)