Sunday, October 29, 2006

நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்

"சித்தூர்கட் செலவு" காட் ப்ராமிஸா...இத்தோட முழுசா செலவாவுதுங்க. இதுக்கு முந்தைய செலவுகள்

எனது சித்தூர்கட் செலவு
தொண்டையில் தண்ணி பாக்கலாம்

தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. எப்பவுமே லீவுக்கு வூட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வர்ற மொத சில நாளு கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆஃப் பாகிஸ்தானா(எல்லாம் ஒரு சேஞ்சுக்குத் தான்...ஹி...ஹி...) இருக்கும். ஆனா கொஞ்ச நாள்லேயே, இங்க நமக்குன்னு வைக்கிற ஆப்புலயும், அடிக்கிற ரிவெட்லயும் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பஞ்சா பறந்துடும். புது பிராஜெக்ட் இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு...அதுனால ரெண்டு நாளா ஒரே மீட்டிங்ஸ் ஆஃப் குஜராத் தான். மீட்டிங்ஸையும் நாங்கல்லாம் ரொம்ப எஞ்சாய் மாடறோம்னு நெனச்சிக்கிட்டாங்களோ என்னவோ...பசங்க வேலை செய்யிறாங்களா இல்லையான்னு பாக்க வந்த எங்க கம்பெனியோட பெரிய தலை ஒருத்தரு(ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் மேல) நேத்து ஒரு மணி நேரம் ஒக்கார வச்சி ஒரே அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டாரு. நீங்கல்லாம் நெறய படிக்கணும், நெறைய தெரிஞ்சிக்கனும் அப்படின்னவரு திடீர்னு உங்கள்ல யாராச்சும் "தி கோல்" புஸ்தகம் படிச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. எல்லாரும் திரு திருன்னு முழிச்சோம். "I want, all my Client facing Consultants(அலைகடலென திரண்டு வரும் ஆப்புகளை வோல்சேலாக வாங்கிய பின்னும் வலிக்குதான்னு கேட்டா 'லைட்டா'ன்னு சொல்ற வீராதி வீர பரம்பரை) to go to Crossword, pick up a copy of 'The Goal' and start reading it. Its a very good book, you guys should know what has been written in it"அப்படின்னாரு. "சும்மா சொல்லிட்டு விட்டுட்டேன்னு நெனக்காதீங்க, அடுத்த வாரம் அதுலேருந்து கேள்வி கேப்பேன்"னு வேற பயமுறுத்திட்டு போயிருக்காரு. அத எழுதுனவரு பேரு கூட எதோ "தங்க எலி"யாம்(Goldrat). புக்கோட வெலை 350 ரூவா தானாம். நான் கேக்குறேன்...இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்...350 ரூவா காசு போட்டு புஸ்தகம் வாங்கி படிக்கிற வயசாய்யா இது? எதோ ப்ளாக்கைப் படிங்க, பின்னூட்டம் போடுங்கன்னு சொன்னா பெருந்தன்மையா பண்ணிட்டுப் போறோம்? அத விட்டுப் போட்டு கோலைப் படிங்க, கோலியைப் படிங்கன்னு என்னப் பேச்சு இது சின்னப்பில்லத் தனமா? கொஞ்சம் யோசிக்க வேணாம்? இருந்தாலும் இதெல்லாம் வயித்துப் பொழப்பு மேட்டரு...யாருன்னா அந்த பொஸ்தகத்தைப் படிச்சிருந்தா தங்கஎலி சொல்லிருக்குற கதையைக் கொஞ்சம் சொல்லுங்கய்யா...ஒங்களுக்குப் புண்ணியமா போவும்.


'முகத்தில் முகம் பாக்கலாம்'ங்கிற மாதிரி 'தொண்டையில் தண்ணி பாக்கலாம்'னு கிண்டலா போனப் பதிவுக்குப் பேரை வச்சிட்டாலும் ராணி பத்மினியோட வரலாறை எழுதுனதுனால ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு. மே மாசம் மொத மொதலா சித்தூர்கட் போனதுலேருந்து கோட்டைக்கு நாலு வாட்டி போயிருக்குறேங்க. அப்பவும் சில இடங்களை இன்னும் பாக்கலை(ஜெயின் தீர்த்தங்கரர்களின் கோயில்கள்). ஒவ்வொரு வாட்டியும் கோட்டையைப் பத்தி எதாச்சும் புதுசா ஒன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. குறிப்பா ராணி பத்மினியைப் பத்தி ஒவ்வொரு தடவையும் எதாச்சும் ஒரு புது தகவல் கெடைக்கும். அதான் கெடச்சது எல்லாத்தையும் போன பதிவுல கொண்டாந்து கொட்டியாச்சு. கீழே இருக்குறது சித்தூர்கட் அரசு அருங்காட்சியகம். 1950கள்ல அரச பரம்பரையைச் சேர்ந்த யாரோ ஒருத்தரு இந்த மாளிகையைக் கட்டுனாராம்...ஆனா அதுல யாரும் வசிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அருங்காட்சியகம் ஆகிடுச்சாம். ஏழடி உயரம் உள்ள துப்பாக்கி, ஆளையே கூறு போடும் வல்லமை கொண்ட பல பயங்கரமான கத்திகள், கவசங்கள், கேடயங்கள், அலாவுதீன் கில்ஜி அழித்த சிலைகளின் மிச்சங்கள் ஆகியவை அங்கிருந்தன. சாஃப்ட்வேர் கம்பெனியெல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஆ ஊன்னா ஆன்சைட்டுக்குக் கத்தி தூக்கிட்டு கெளம்பிடுவாங்க போலிருக்கு.


ராணி பத்மினியின் மாளிகைக்கு அருகாமையில், ஒட்டக சவாரி செய்றதுக்கு வசதி இருக்கு. பாரம்பரிய ராஜஸ்தானி டிரெஸ் போட்டுக்கிட்டு ஒட்டகத்து மேல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். கீழே இருக்குற படத்துல இருப்பது ஒட்டகமும் நானும். இப்பவே சொல்லிட்டேன் லெஃப்ட் சைடுல இருக்குறது தான் ஒட்டகம்:). இந்த படம், கடைசி தரம் கோட்டைக்குப் போன போது ஃபிரெண்டு ஒருத்தன் எடுத்தது. படம் எடுத்துட்டு இருக்கும் போதே படம் எடுத்தவன் கூட நின்னுட்டிருந்த இன்னொருத்தன் "டேய் டேய் பின்னாடி திரும்பி பாருடா பாருடா"னு ஒரு பேய் கத்து கத்துனான். எனக்கா ஒரு பக்கம் பயம்... எப்படியோ பயப்படாத மாதிரி நடிச்சி படத்துக்குப் போஸ் குடுத்துட்டு வந்து படத்தைப் பாத்தா...ஐயோ சாமி! ஒட்டகத்துக்கு மம்புட்டி மம்புட்டியா பல்லு! நல்லா காலம்...நான் திரும்பி கிரும்பி பாக்கலை. அந்த ஒட்டகம் இந்தியன் படத்துல வர்ற சீலோ மாதிரி எங்கயாச்சும் கடிச்சி கிடிச்சி வச்சிருதுச்சுன்னா என்னாகியிருக்கும் என் நெலமை?முதல் முறை மே மாசம் கோட்டைக்குப் போன போது, வெயிலுக்குப் பயந்துக்கிட்டு, சாயந்திரம் 6.30 மணிக்குக் கிளம்பி கீழே படத்துல இருக்குற கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்தோம். இந்த கோயிலோட பேரு 'காலிகா மந்திர்'. இந்த கோயிலைக் கட்டிருக்குறதைப் பாத்தா நம்ம ஊரு பக்கத்து வேலைபாடு மாதிரி இருந்தது. பொதுவா வட இந்தியாவுல கோயில்களைப் பாத்தா கல் வேலைபாடு எல்லாம் அவ்வளவா இருக்காது. ஆனா இந்த கோயிலைப் பாத்ததும் தமிழ்நாட்டு கோயில்கள் தான் நியாபகம் வந்துச்சு. இந்த கோயில் உள்ள படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால கோயில் வெளியே இருந்து எடுத்த ஒரு படம்.


இந்த கோயிலை நிர்வாகம் பண்ணறவங்க நாகா சாதுக்கள்னு எங்க கைடு சொன்னாரு. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம். எதோ நாகா சாதுக்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி கரை கண்டுட்டா மாதிரி "நாகா சாதுன்னு சொல்லறீங்க? இங்க இருக்குறவங்க டிரெஸ் எல்லாம் போட்டுருக்காங்க?"னு கேட்டுத் தொலைச்சிட்டேன். எங்க கைடு என்ன படுகேவலமா ஒரு லுக் விட்டுட்டு "அரே பாய்! ஹமாரி மா பெஹ்னோன் கோ இதர் நஹி ஆனா ஹை கியா?(நம்ம வீட்டு பெண்கள்(அம்மா, தங்கச்சி) அவுங்கல்லாம் வர்ற எடத்துல எப்படி டிரெஸ் இல்லாம இருப்பாங்க)ன்னு கேட்டுட்டாரு. இதை கேட்டுட்டு கூட இருந்தவனுங்க எல்லாம் சிரிச்சிட்டானுங்க. அவனுங்க சிரிச்சதும் எனக்கு ஒரே வெக்க வெக்கமாப் போச்சு. இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.


கோயில் வாசல்லயும் கோட்டை மேல பல எடங்கள்லயும் இந்த நீளமான வால் உள்ள கறுப்பு முகம் கொண்ட குரங்குகளைப் பெரும் எண்ணிக்கையில பாக்கலாம். இந்தூர்ல இருக்கும் போது எங்க ஆபிஸ்ல புகுந்ததுன்னு சொன்னேனே...அதுவும் இதே மாதிரியான குரங்கு தான்...ஆனா கொஞ்சம் பெரிய சைஸு.ராணா கும்பாங்கிற மகாராஜா(மீரா பாயோட வீட்டுக்காரரு) குஜராத் சுல்தான் மேல படை எடுத்து ஜெயிச்ச வெற்றியைக் கொண்டாடுறதுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், கீழே இருக்குற "விஜய் ஸ்தம்ப்". இது அக்காலத்துல ஒரு காவல் கோபுரமாவும் பயன் பட்டுருக்கு. ஏழு மாடி கொண்ட இந்த 53மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு படிக்கட்டுகளின் மூலமாகச் செல்லலாம். இக்கோபுரத்தின் ஏழாவது தளத்திலிருந்து பாத்தால் சித்தூர்கட் கோட்டையின் நால் புறங்களும் வெகு அழகாகத் தெரியும்.விஜய் ஸ்தம்ப் எதுக்கு கட்டுனாங்கன்னு கீழே படிச்சிக்கோங்க.11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சம்வித்தேஷ்வரா கோயில்" சித்தூர்கட் கோட்டையில் காண வேண்டிய ஒரு முக்கியமான பாயிண்ட்(கைடு பாஷையில). முதல் இரு முறைகள் கோட்டைக்கு கைடு இல்லாமல் சென்றதால் போது சம்வித்தேஷ்வரா கோயில், மீரா கோயில் போன்ற முக்கியமான இடங்களைக் காணாமல் வந்து விட்டோம், மூன்றாம் முறை கைடுடன் சென்ற போது அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிந்து கொண்டதோடு இவ்விடங்களைக் காண்பதும் நன்றாக இருந்தது. ஆனா நாலாவது முறை புதிதாக வந்த நண்பருடன் சென்ற போது அதான் நீ இருக்கியே அப்புறம் எதுக்கு கைடுன்னு சொல்லி, கைடுக்குக் கொடுக்க வேண்டிய அந்த காசை மிச்சம் புடிச்சிட்டாங்க :(சம்வித்தேஷ்வரா கோயிலின் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு.பிரம்மா, சிவன், விஷ்ணு - சம்வித்தேஷ்வரா கோவிலின் உள்ளேகோயிலின் சுவற்றில் யானை, குதிரை, ஒட்டகம் மூன்றுடனும் போருக்குச் செல்லும் வீரர்கள். இது எதோ "குட்லக் சைன்" அப்படின்னு கைடு சொன்னாரு. க்ளிக் பண்ணிப் பாத்தீங்கன்னா பெருசாத் தெரியும்.மாலையில், இருட்டும் நேரத்தில் எடுத்த படம் இது. இந்த குளத்தின் பெயர் "கோமுக்"(Gaumukh). கோ என்றால் பசு, முக் என்றால் முகம். இதை ஒரு புனித தீர்த்தமாகக் கருதுகிறார்கள். நாங்கள் இருந்ததே மலை உச்சி தான். மலை உச்சியின் மீது அவ்வளவு வேகமாகக் கொட்டுகிற நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம்.கும்மிருட்டில் எதை எடுக்கிறோம் என்றே தெரியாமல், கேமரா ஃப்ளாஷினை மட்டுமே நம்பி எடுத்த ஒரு படம். கோமுக் தீர்த்தத்தில் மிக வேகமாகத் தண்ணீர் கொட்டுகிறது. மழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் தீர்த்தத்தின் அருகில் இருந்த சிவலிங்கம் நீரில் மூழ்கி விட்டது.

கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு.கோமுக் தீர்த்தத்தில் தான் ராணியர் நீராடுவார்களாம். நீராடிவிட்டு மேலே சொன்ன சிவலிங்கத்தை வழிபடுவார்களாம். அதை வழிபட்டு முடித்ததும் சதி தேவியின் கோவிலில் பூஜிப்பார்களாம். கீழே சதி தேவியின் கோயிலுக்குள்ளே தற்போது இருக்கும் "ராணி பத்மினியின் கற்பனை உருவம்"(Imaginary Statue). "என்னுடைய இந்த அழகினால் தானே என் நாடு அழிந்தது, என்னுடைய மக்கள் மாண்டார்கள்" என ராணி பத்மினி தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வருந்துவது போல அமைக்கப் பட்டுள்ளதாம் இச்சிலை.சித்தூர்கட்டின் முழு வரலாற்றையும் இப்பலகையில் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.
ஜோதிகா புடவை, நயந்தாரா புடவைன்னு நம்ம ஊருல புடவைளுக்குப் பெயர் வைப்பது போல இங்கிருக்கும் கைவினைப் பொருட்கள் கடையில் "ராணி பத்மினி புடவை" என்ற ஒன்றை விற்கிறார்கள். அப்புடவையில் லேசாகத் தண்ணியைத் தெளித்து முகர்ந்து பார்த்தால் நறுமணம் வீசும் என்கிறார்கள். அப்போதைக்கு அவர்கள் செய்து காட்டும் போது நறுமணம் வீசத் தான் செய்கிறது. இது உண்மையாகவே நீடிக்குமா இல்லை ஏமாற்று வேலையா எனத் தெரியவில்லை. ஆனால் கிடைக்கும் கலர்கள் என்னமோ அடிக்கும் கலர்களான ரத்த சிவப்பு, கரும்பச்சை ஆகியவை. அதோடு ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் வெகு அருகில் இருப்பதால் ஜிங்க்கினால்(துத்தநாகம்) ஆன வளையல்கள், துத்தநாகத் தூள் தூவி புனையப்பட்ட சேலைகள் ஆகியவற்றை இங்கு வாங்கிக் கொள்ளலாம். ஆண்களுக்குன்னு குறிப்பா வாங்குற மாதிரி ஒன்னும் இந்த கடைகளில் இல்ல...அதுனால எதுவும் சொல்லலை. ஒடனே என்கூட சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. மொத்தத்தில்...சித்தூர்கட்டுக்குப் பணி நிமித்தம் சென்றாலும், அங்கு சென்று கண்டவை, கேட்டவை யாவும் மிக மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. அதைத் தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சியே.

-------------------சுபம்------------------------

68 comments:

இலவசக்கொத்தனார் said...

//-------------------சுபம்------------------------//

ரொம்ப தாங்க்ஸ்பா.


அட! சுபம் போட்டதுக்குன்னு தப்பா நினைக்காதீங்க. இவ்வளவு நல்ல தகவல்களும் புகைப்படங்களும் தந்ததுக்காகத்தான் தாங்க்ஸ்!! :-D

அனுசுயா said...

//இப்பவே சொல்லிட்டேன் லெஃப்ட் சைடுல இருக்குறது தான் ஒட்டகம்//
நல்ல வேலை தெளிவா சொல்லீட்டீங்க. சித்தூர் கட் செலவுகள் நல்லா எழுதியிருக்கீங்க. அங்க நேர்ல போய் பார்க்கற மாதிரி எழுதியிருக்கீங்க. ஒரு சின்ன சந்தேகம் சித்தூர்கட்ல வேல செய்ய போயிருந்தீங்களா? இல்ல ஊர் சுத்தி பாக்க போயிருந்தீங்களா? :))

கைப்புள்ள said...

//நல்ல வேலை தெளிவா சொல்லீட்டீங்க. சித்தூர் கட் செலவுகள் நல்லா எழுதியிருக்கீங்க.அங்க நேர்ல போய் பார்க்கற மாதிரி எழுதியிருக்கீங்க.//
வாங்க அனுசுயா! படிச்சிட்டு கருத்து சொன்னதுக்கு ரொம்ப டேங்ஸுங்க.

//ஒரு சின்ன சந்தேகம் சித்தூர்கட்ல வேல செய்ய போயிருந்தீங்களா? இல்ல ஊர் சுத்தி பாக்க போயிருந்தீங்களா? :))//

ஊர் சுத்துனதுக்கு நடுவுல கொஞ்சம் கொஞ்சம் வேலை செஞ்சேன். உங்களை எல்லாம் மாதிரி யூகே யூஎஸ்னா நாங்க ஆன்சைட் போறோம்? எல்லாம் உள்ளூரு தான்...அதையாச்சும் கொஞ்சம் சுத்தி பாப்போமேன்னு ஒரு நப்பாசை தான்.
:)

கைப்புள்ள said...

//ரொம்ப தாங்க்ஸ்பா.
அட! சுபம் போட்டதுக்குன்னு தப்பா நினைக்காதீங்க. இவ்வளவு நல்ல தகவல்களும் புகைப்படங்களும் தந்ததுக்காகத்தான் தாங்க்ஸ்!! :-D //

என்னங்க அப்படியெல்லாம் நெனப்போமா? ஆரம்பக் காலத்துலேருந்து ஆதரவளிச்சிட்டு இருக்குற பெரியவராச்சே நீங்க? இப்ப புதுசா விகிபசங்க ஆரம்பிச்சு இளமையா வேற ஆயிட்டீங்க?
:)

இலவசக்கொத்தனார் said...

பாசமிகு தல, அண்ணன் கைப்பு அவர்களுக்கு புதிதாய் மலர்ந்து நடை பழகிக் கொண்டிருக்கும் எங்கள் வலைப்பூவிற்கு இப்படி ஒரு இலவச விளம்பரம் தந்து பேருதவியாற்றியமைக்கு விக்கிபசங்க குழுமத்தின் சார்ப்பிலே தங்கள் பெருந்தன்மையைப் பாராட்டி, ஒரு மிகப் பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டேங்ங்ங்ங்ங்ஸ்ஸ்ஸ்ஸுங்க்க்கோவ்வ்!!!

நன்றி மறப்பது நன்றன்று என்ற தமிழ்க் கொள்கையிலே சிறு வயது முதல் ஊறி வளர்ந்தமையால், இந்த பேருதவி புரிந்த தாங்கள் இடைச்சொருகியிருக்கும் உ.கு.வை கண்டுகொள்ளாமல், அதனை பெரிது படுத்துப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவிப்பது என்ற எங்கள் தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றாது செல்கிறோம்.

நன்றி வணக்கம்.

நாமக்கல் சிபி said...

தல,
நேர்ல பார்த்த எஃபக்ட் கொண்டு வந்துட்டீங்க...

உங்களை இந்த மாதிரி இன்னும் நிறைய ஊருக்கு அடிக்கடி அனுப்பினால் தமிழ்மண வாசகர்கள் உங்க கம்பெனிக்கு நன்றி சொல்வார்கள்...

The Goal நான் பெங்களூர்ல இருக்கும் போது என் ரூமெட் படிச்சிட்டு இருந்தான். ரொம்ப அருமையான புக்னு சொல்லிட்டு இருந்தான்... கண்டிப்பா வாங்கி படிக்கவும் :-)

siva gnanamji(#18100882083107547329) said...

சித்தூர்கட்டிற்கு அழைத்து சென்றதுக்கு
நன்றி...

கைப்புள்ள said...

//பாசமிகு தல, அண்ணன் கைப்பு அவர்களுக்கு புதிதாய் மலர்ந்து நடை பழகிக் கொண்டிருக்கும் எங்கள் வலைப்பூவிற்கு இப்படி ஒரு இலவச விளம்பரம் தந்து பேருதவியாற்றியமைக்கு விக்கிபசங்க குழுமத்தின் சார்ப்பிலே தங்கள் பெருந்தன்மையைப் பாராட்டி, ஒரு மிகப் பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

நன்றிக்கு ரொம்ப டேங்ஸுங்க. ஆனா சந்தடி சாக்குல என்னைய அண்ணனாக்கி நீங்க சின்னப்பையன் ஆனது தான் கொஞ்சம் ஒதைக்குது.
:)

//தாங்கள் இடைச்சொருகியிருக்கும் உ.கு.வை கண்டுகொள்ளாமல், அதனை பெரிது படுத்துப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவிப்பது என்ற எங்கள் தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றாது செல்கிறோம்//

ஆனா பின்னூட்டத்தைப் பாத்தா அப்படி தெரியலியே?
:)

கைப்புள்ள said...

//தல,
நேர்ல பார்த்த எஃபக்ட் கொண்டு வந்துட்டீங்க...//
ரொம்ப டேங்கீஸ்பா.


//உங்களை இந்த மாதிரி இன்னும் நிறைய ஊருக்கு அடிக்கடி அனுப்பினால் தமிழ்மண வாசகர்கள் உங்க கம்பெனிக்கு நன்றி சொல்வார்கள்...//
ஹ்ம்ம்ம். இது சொல்லவே தேவையில்ல. எங்களை எல்லாம் ஒவ்வொரு எடத்துக்குத் தொரத்தறதுக்குன்னே ஒரு அம்மாவுக்குச் சம்பளம் குடுத்து வச்சிருக்காங்க எங்க கம்பெனியில. பெஞ்சுல ஒக்காரவங்களைக் கண்டா அந்தம்மாவுக்கு ஆவாது...ஏன்னா அது அவுங்க அப்ரைசல் சமாசாரமாச்சே. இதுல தமிழ்மண வாசகர்களும் நன்னி சொன்னாங்கன்னா நீ சென்னைக்கே வர வேணாம்னு சொல்லிடுவாங்க.
:)

//The Goal நான் பெங்களூர்ல இருக்கும் போது என் ரூமெட் படிச்சிட்டு இருந்தான். ரொம்ப அருமையான புக்னு சொல்லிட்டு இருந்தான்... கண்டிப்பா வாங்கி படிக்கவும் :-)//
ரொம்ப நல்ல புஸ்தகம் போல. கண்டிப்பா வாங்கி படிக்கறேன்.
:)

கைப்புள்ள said...

//சித்தூர்கட்டிற்கு அழைத்து சென்றதுக்கு
நன்றி...//

வாங்க சிவஞானம்ஜி,
வந்து வாழ்த்துனதுக்கு ரொம்ப நன்றி சார்.

Anonymous said...

The Goal - இந்த கதை இப்பொழுது விகடனில் தொடர் கதையாக வருகிறது. அதிலும் படிக்கலாம்.

கைப்புள்ள said...

//The Goal - இந்த கதை இப்பொழுது விகடனில் தொடர் கதையாக வருகிறது. அதிலும் படிக்கலாம்.//

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி குமார் அவர்களே!

Geetha Sambasivam said...

கைப்புள்ள, படிச்சேன், இந்த நாகா சாது தான் இடிக்கிறாரு. கொஞ்சம் பொறுங்க, தகவல் சேகரிக்கலாம். மழை விடட்டும் கொஞ்சம். மத்த விஷயங்கள் எல்லாம் இடது பக்கம் நிக்கிற நீங்க உள்பட :D நல்லா இருக்கு. நீங்க தெளிவாக்கலைனா வலது பக்கம் இருக்கிறதுதான் நீங்கன்னு நினைச்சிருப்பேன். :D

பி.கு: உண்மையிலே நீங்க வரலாற்று ஆசிரியராப் போகலாம். வரலாறு எனக்கும் பிடித்தமான பாடம். நல்லாத் தெரிஞ்சு வச்சுக் கொண்டு எழுதறீங்க.

Anonymous said...

//The Goal - vikadan la naanum padichean indha week than thodarkadhai start ageirukku ....romba nalla irundhathu..neengalum time irukkum podhu padichu parunga //

கைப்புள்ள said...

//கைப்புள்ள, படிச்சேன், இந்த நாகா சாது தான் இடிக்கிறாரு. கொஞ்சம் பொறுங்க, தகவல் சேகரிக்கலாம். மழை விடட்டும் கொஞ்சம். //

வாங்க மேடம்! தலைவி வரலையேன்னு ஆவலா எதிர்பாத்துட்டு இருந்தேன். நாகா சாது பத்தி இன்னும் தகவல் சேகரிச்சி தர்றீங்களா? தாங்க தாங்க.

//மத்த விஷயங்கள் எல்லாம் இடது பக்கம் நிக்கிற நீங்க உள்பட :D நல்லா இருக்கு. நீங்க தெளிவாக்கலைனா வலது பக்கம் இருக்கிறதுதான் நீங்கன்னு நினைச்சிருப்பேன். :D//
இத மாதிரியான சந்தேகம் மக்களுக்கு வரும்னு எதிர்பாத்து தானே முன்னெச்சரிக்கையா பதிவுலேயே எழுதுனோம்? :D

//பி.கு: உண்மையிலே நீங்க வரலாற்று ஆசிரியராப் போகலாம். வரலாறு எனக்கும் பிடித்தமான பாடம். நல்லாத் தெரிஞ்சு வச்சுக் கொண்டு எழுதறீங்க.//
வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம கைடு கதை சொன்னாரு. அதை தான் இங்கே கொண்டாந்து கொட்டிருக்கேன். மத்தபடி நமக்கு தெரிஞ்ச வரலாறும் கம்மி தான்.
:)

கைப்புள்ள said...

////The Goal - vikadan la naanum padichean indha week than thodarkadhai start ageirukku ....romba nalla irundhathu..neengalum time irukkum podhu padichu parunga //

வாங்க சுந்தரி,
உங்களோட முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பா படிச்சு பாக்கறேன்.

Prasanna Parameswaran said...

kaipulla,
unga blogukku eppa vandhalum, click to activate a control oru popu message varudhu - adha konja paartheenganna nalla irukkum, padhivu appurama padichhutu vandhu pinuttam idugiraen!

கதிர் said...

நல்லா இருந்திச்சி படிக்க! நானெல்லாம் தமிழ்நாடு பார்டர்கூட தாண்டினதில்ல. என்னய அப்படியே புடிச்சி இங்க பார்சல் பண்ணிட்டாங்க. சொம்மாங்காட்டியும் சொல்லல, மெய்யாவே நேரா பாத்தா மாதிரி கீதுபா!

தருமி said...

//பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது.//

சே! படிச்சா இப்படியல்லவா படிச்சிருக்கணும்; என்ன ஒரு நினைவாற்றல் அய்யா ! ஆச்சரியமாத்தான் இருக்கு..!

பெத்தராயுடு said...

அருமையான தகவல்கள்.

//இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.//

அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே தல...

கைப்புள்ள said...

//kaipulla,
unga blogukku eppa vandhalum, click to activate a control oru popu message varudhu - adha konja paartheenganna nalla irukkum, padhivu appurama padichhutu vandhu pinuttam idugiraen!//

வாங்க ஏஞ்சல்,
என்னோட மத்த பதிவுகள்ல எம்பி3 பாடல்களும், வீடியோ படங்களும் இருப்பதால் அதை நீங்கள் என்னுடைய ப்ளாக்கிலிருந்தே பார்க்க விரும்பினால் இந்த அக்டிவ்-எக்ஸ் கண்ட்ரோல்ஸ் தேவைப்படும் என நினைக்கிறேன். அதனால் தான் இந்த மெசேஜ் வருகிறது எனவும் நினைக்கிறேன். மற்றபடி எனக்கும் இது பற்றி ஐடியா இல்லை. யாருக்காச்சும் இந்த மெசேஜைப் பற்றியும் அதனுடைய (அதிபயங்கர :)) விளைவுகளைப் பற்றியும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கப்பா.

கைப்புள்ள said...

//நல்லா இருந்திச்சி படிக்க! நானெல்லாம் தமிழ்நாடு பார்டர்கூட தாண்டினதில்ல. என்னய அப்படியே புடிச்சி இங்க பார்சல் பண்ணிட்டாங்க. சொம்மாங்காட்டியும் சொல்லல, மெய்யாவே நேரா பாத்தா மாதிரி கீதுபா!//

வாங்க தம்பி,
நம்ம கதையும் அப்படி தாங்க. 21 வயசு வரைக்கும் தமிழ்நாட்டுக்கு அந்தாண்ட் இந்தாண்ட போனதில்லை. தமிழ்நாட்டுக்குள்ளயும் கூட பெருசா எதுவும் பாத்ததில்லை. அதுனால நம்மளை இங்கே வட நாடு பார்சல் பண்ணதும், பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பாத்தா மாதிரி நான் பாத்ததை எல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன். உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//சே! படிச்சா இப்படியல்லவா படிச்சிருக்கணும்; என்ன ஒரு நினைவாற்றல் அய்யா ! ஆச்சரியமாத்தான் இருக்கு..!//

வாங்க தருமி ஐயா,
உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி. ஆனா சில விஷயங்கள், அதுவும் சில சமயம் தான் இந்த மாதிரி ஸ்கூல்ல படிச்சதெல்லாம் நினைவுக்கு வரும்.

கைப்புள்ள said...

//அருமையான தகவல்கள்.//

வாங்க பெத்தராயுடு,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

//இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.//

அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே தல... //
:)))

ambi said...

//அலைகடலென திரண்டு வரும் ஆப்புகளை வோல்சேலாக வாங்கிய பின்னும் வலிக்குதான்னு கேட்டா 'லைட்டா'ன்னு சொல்ற வீராதி வீர பரம்பரை//

கலக்கல் தல! இந்த கைப்பு டச்சுக்காக தான் ஆபிஸ்ல மேனஜர் பக்கத்துல இருக்கும் போதே ரிஸ்க் எடுத்து உங்க தளத்துக்கு வறோம்!

*ahem* சரி, உங்க படம் மட்டும் போட்டா எப்படி? அண்ணி படம் எங்கே? (அதான், ராஜஸ்த்தான்லேருந்து தள்ளிகிட்டு வந்தீங்களே!)

இராம்/Raam said...

தல,

சூப்பரா இருக்கு இந்த பதிவு.... :-)

இராம்/Raam said...

//ஆனா சில விஷயங்கள், அதுவும் சில சமயம் தான் இந்த மாதிரி ஸ்கூல்ல படிச்சதெல்லாம் நினைவுக்கு வரும். //


இதுக்கு பேரு என்னோமோ ஒரு வியாதின்னு சொல்லுவாங்க தல...

சரி மால்பூவா அண்ணி போட்டோவே காணோம்...
:-))))

Geetha Sambasivam said...

கைப்புள்ள, இந்த "நாகா சாதுக்கள்" கிட்டத் தட்ட (எனக்குத் தெரிந்த வரை) நம்ம தமிழ்நாட்டிலே காபாலிகர்கள், காளாமுகர்கள் வகையைச் சேர்ந்தவர்கள்னு நினைக்கிறேன். 99-ல் நாங்க காசிக்குப் போனபோது இந்த வகை சாதுக்கள் கூட்டம் கூட்டமாக வந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. அப்போ ப்ளாக் எல்லாம் தெரியாதுங்கறதாலே அவ்வளவா ஆர்வம் காட்டலை. ஆனால் "BHOL BHUM" என்று சொல்லிக் கொண்டு கிட்டத்தட்ட சிவன் மாதிரியே அலங்காரம் செய்து கொண்டு கத்திக் கொண்டு வருவார்கள்.இவங்களுக்குச் சிவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் கடவுள் இல்லை. அவங்கதான் நீங்க குறிப்பிடறீங்க அப்படின்னு நினைக்கிறேன்.
மேற்கொண்டு கூகிளாண்டவர்கிட்டே கேட்டதுக்கு அவர் இந்த சாதுக்கள் எல்லாம் மஹாசிவராத்திரி அன்று குஜராத்தில் உள்ள ஜுனாகட்டில் கிர்னார் மலையில் (ஜாம்நகருக்குக் கொஞ்சம் கிட்டே) உள்ள MRIGI KUNDற்கு வந்து பூஜை, செய்வார்கள் என்றும் அந்தக் குண்டத்தில் உள்ள தண்ணீரில் கூட்டம், கூட்டமாகக் குளிப்பார்கள் என்றும் அத்தனை கூட்டத்திலும், குறைந்தது மூன்று பேர் அந்தத் தண்ணீரில் மறைந்து போவார்கள் என்றும், இன்றளவு அப்படி நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள். அந்தத் தண்ணீரில் sulphur இருக்கிறதாகவும் சொல்கிறார்கள். மேலும் ஒரு சந்நியாசியின் தகவலின்படி யாருக்கு அழைப்பு வருகிறதோ அவர்கள் தான் அங்கே வந்து குளிக்க முடியும் என்றும், குளிப்பவர்கள் உண்மையான சாது என்றால்தான் குளிக்க முடியும் என்றும், மேலும் அழைப்பு வருபவர்களில் சிலர் அந்தத் தண்ணீரில் கீழே உள்ள குகை வழியாக வேறு ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள் என்றும் அந்த இடம் மிக ரகசியமானது என்றும் உண்மையான சந்நியாசிகளில் சிலருக்குத் தான் உள்ளே போக அழைப்பு வரும் என்றும் கூறுகிறார்கள். இவர்களில் சிலர் உடைகூட இல்லாமல் எல்லாவற்றையும் துறந்து இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யச் சபதம் எடுத்தவர்கள்.

SLN said...

மீண்டும் ஒரு அற்புதமான பதிவு. நேரில் பார்ப்பதைப் போல் இருந்தது. மிக்க நன்றி.

நானும் வட இந்தியாவில் கல் வேலைப்பாடுகள் மிகக் குறைவு என்றே நினைத்திருந்தேன், இதைப் பார்க்கும் வரை (large pictures, maybe very slow, but dont miss)

http://skyscrapercity.com/showthread.php?t=125826

இது போல் மேலும் சிலபல (Girnar, Junagadh..) உள்ளன என்று கேள்வி

cheers
SLN

Srikanth said...

மிக அருமையான பதிவு மோகன்ராஜ், எல்லோரும் குறிப்பிட்டது போல பல அறிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பிடும்படியான எழுத்து நடை.

லெப்ட், ரைட் எது னு குழப்பிக்கிறவங்களூக்கு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டு போட போனவன் மாதிரி நம்ப தலைய பார்த்து பயந்து உயரமா நிக்குதே அது தான் ஒட்டகம்.

மு.கார்த்திகேயன் said...

ellam intha geetha medaththai sollanum.. ore north india puraanamaa irukku..

BTW, romba nalla irukku unga post kaipulla...

ambi said...

//லெப்ட், ரைட் எது னு குழப்பிக்கிறவங்களூக்கு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டு போட போனவன் மாதிரி நம்ப தலைய பார்த்து பயந்து உயரமா நிக்குதே அது தான் ஒட்டகம்.
//

ஹைய்யா! ஆரம்பிச்சுட்டாங்க.

தலைல டர்பன் எல்லாம் போடாம இருக்கே அது தானே ஒட்டகம்? :)


//ore north india puraanamaa irukku..
//

எலேய்! என்ன நார்த் இந்தியானா சும்மாவா? அங்கே தான் பஞ்சாப், பஞ்சாப் இருக்கு! ராஜஸ்தான் இருக்கு! என்ன கைப்பு, சரி தானே? :)

Geetha Sambasivam said...

@கார்த்திக், என்ன ரொம்பத் தீசல் வாசனையா வருது? என்ன விஷயம்? :D

Hariharan # 03985177737685368452 said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க!
அஜ்மீர்ல 1991ல் சில வாரம் இருந்திருக்கேன். புஷ்கர் ,ஜெய்ப்பூர்ன்னு கொஞ்சம் ராஜஸ்தான் பார்த்திருக்கேன்.

கூட இருந்த நண்பன் வரமாட்டேன்னு சண்டித்தனம் பண்ணதிலே உதய்ப்பூர், தார் பாலைவனம் பாக்கமுடியாமப் போச்சு!

இந்தியாவுக்கு வர்ற டூரிஸ்டுகளின் ஹாட் பேவரிட் மாநிலம் ராஜஸ்தான் தாங்க!

கொஞ்சம் ப்ளாஷ் பேக் ஆகிடுச்சு.
நல்லா இருந்தது மோகன் படிக்க.

Srikanth said...

@ மிஸ்டர் அம்பி,

// ஹைய்யா! ஆரம்பிச்சுட்டாங்க //

எத ஆரம்பிச்சுடோம்னு தெளிவா சொல்லுங்க, நான் ஏகதுக்கும் பயப்பட வேண்டி இருக்கு...

// தலைல டர்பன் எல்லாம் போடாம இருக்கே அது தானே ஒட்டகம்? :) //

தலைல டர்பன் போட்டு இருக்கே அது தான் தல. :))

கப்பி | Kappi said...

மேட்டர் மாணிக்கமாக மாறி சித்தூர்கட் பற்றி கமர்கட் மாதிரி இனிக்க இனிக்க நிறைய தகவல்கள் சொன்னதுக்கு சுக்கு காபி தல...ச்சே...சுக்ரியா தல! ;)

கைப்புள்ள said...

//கலக்கல் தல! இந்த கைப்பு டச்சுக்காக தான் ஆபிஸ்ல மேனஜர் பக்கத்துல இருக்கும் போதே ரிஸ்க் எடுத்து உங்க தளத்துக்கு வறோம்!//

வேலைக்கு உலை வைக்கும் ரிஸ்கையும் எடுத்து என் பதிவை எல்லாம் படிக்கும் என்னப்பன் ஞான்பண்டிதன் அருள் பெற்ற தனுர் லக்னத்துத் தெய்வ குழந்தை சுல்தான் அம்பியுத்தீன் கில்ஜி வாழ்க வாழ்க!!
:)

//*ahem* சரி, உங்க படம் மட்டும் போட்டா எப்படி? அண்ணி படம் எங்கே? (அதான், ராஜஸ்த்தான்லேருந்து தள்ளிகிட்டு வந்தீங்களே!) //
அட பாவி! நானே தொப்பை விழுந்துட்டுது..இனி ஒரு ஃபிகரும் பாக்காதுன்னு வருத்தத்துல இருக்கேன்...வெந்த புண்ணுல வேலாய்யா பாச்சுறே?
:(

கைப்புள்ள said...

//தல,

சூப்பரா இருக்கு இந்த பதிவு.... :-) //

வாய்யா ராயலு!
ரொம்ப டேங்கீஸ்யா
:)

//இதுக்கு பேரு என்னோமோ ஒரு வியாதின்னு சொல்லுவாங்க தல...//
செலக்டிவ் அம்னீஷியாவா?

//சரி மால்பூவா அண்ணி போட்டோவே காணோம்...
:-))))//
அதுக்கெல்லாம் வழியிருந்தா நான் ஏன் ஒட்டகத்துப் படத்தை எல்லாம் போட்டுட்டு ஒக்காந்துருக்கேன்?
:(

கைப்புள்ள said...

தலைவின்னா தலைவி தான்! நாகா சாதுக்களைப் பத்தி ஒரு என் சைக்கிளப் பிடியாவையே கொண்டாந்துட்டீங்களே?
:)

//99-ல் நாங்க காசிக்குப் போனபோது இந்த வகை சாதுக்கள் கூட்டம் கூட்டமாக வந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. அப்போ ப்ளாக் எல்லாம் தெரியாதுங்கறதாலே அவ்வளவா ஆர்வம் காட்டலை. //
அப்படின்னா ப்ளாக் எழுத ஆரம்பிச்சதும், இப்பல்லாம் ஒரு இண்டர்வியூவாவது எடுக்காம விடறதில்லைன்னு சொல்லுங்க.

//மேலும் அழைப்பு வருபவர்களில் சிலர் அந்தத் தண்ணீரில் கீழே உள்ள குகை வழியாக வேறு ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள் என்றும் அந்த இடம் மிக ரகசியமானது என்றும் உண்மையான சந்நியாசிகளில் சிலருக்குத் தான் உள்ளே போக அழைப்பு வரும் என்றும் கூறுகிறார்கள். இவர்களில் சிலர் உடைகூட இல்லாமல் எல்லாவற்றையும் துறந்து இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யச் சபதம் எடுத்தவர்கள். //

நல்ல தகவல்கள்! மிக்க நன்றி மேடம்.

கைப்புள்ள said...

//மீண்டும் ஒரு அற்புதமான பதிவு. நேரில் பார்ப்பதைப் போல் இருந்தது. மிக்க நன்றி. //

வாங்க எஸ் எல் என்,
தங்கள் வாழ்த்துகளுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

//நானும் வட இந்தியாவில் கல் வேலைப்பாடுகள் மிகக் குறைவு என்றே நினைத்திருந்தேன், இதைப் பார்க்கும் வரை (large pictures, maybe very slow, but dont miss)

http://skyscrapercity.com/showthread.php?t=125826
//

ஆமாங்க வடக்குல குறிப்பா டெல்லி பக்கம் எல்லாம் கல் வேலைப்பாடுன்னெல்லாம் ஒன்னும் கெடயாது. ஆனா ராஜஸ்தான் இந்த விஷயத்துல பரவால்லை. நீங்க குடுத்த லிங்கை இப்ப பாத்துட்டு இருக்கேன். ரானக்பூர் கோவில் படங்கள் தெறந்து கொண்டிருக்கு. லிங்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார்.

//இது போல் மேலும் சிலபல (Girnar, Junagadh..) உள்ளன என்று கேள்வி//
இப்ப நான் இருக்குற அகமதாபாத்துலேருந்து இந்த எடம் எல்லாம் கிட்டத்துல தான் இருக்கு...பாப்போம் போய் பாக்க வாய்ப்பு கெடைக்குதான்னு.

கைப்புள்ள said...

//மிக அருமையான பதிவு மோகன்ராஜ், எல்லோரும் குறிப்பிட்டது போல பல அறிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பிடும்படியான எழுத்து நடை.//

வாங்க வாங்க ஸ்ரீகாந்த்,
ஆஹா இப்படி பாராட்டறீங்களே! அப்படியே பறந்துட்டு இருக்கேன். நன்றி.

//லெப்ட், ரைட் எது னு குழப்பிக்கிறவங்களூக்கு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டு போட போனவன் மாதிரி நம்ப தலைய பார்த்து பயந்து உயரமா நிக்குதே அது தான் ஒட்டகம்//

ஆமாமா...ஒட்டகம் கண்ணாடியும் போடலை.

இந்த ஆங்கிள்லேருந்து பாக்கறதுக்கு, நீங்க சில்லுன்னு ஒரு காதல் சூரியா மாதிரியே இருக்கீங்க.

Arunkumar said...

padangalum vilakkangalum arumai..

kalakkureenga kaipullai...

namma kadai pakkam oru visit pending :P

ambi said...

//நானே தொப்பை விழுந்துட்டுது..இனி ஒரு ஃபிகரும் பாக்காதுன்னு வருத்தத்துல இருக்கேன்...//

@kaipullai, அப்ப, இது வரைக்கும் என்னவோ எல்லா பிகரும் பார்த்துண்டு இருந்ததோ? :)

LOL on Srikanth's comment. :)

G.Ragavan said...

நம்மளையும் அப்படியேக் கூட்டீட்டுப் போனாப்புல இருந்துச்சு.

வடக்குல இன்னும் பல எடங்கள் பாக்கனும். நீங்க இருக்குறப்பவே அங்க ஒரு வாட்டி போயிட்டு வந்திட்டாக் கூட வசதிதான்.

ஒரு நல்லதொரு பயணக்கட்டுரை படிச்ச திருப்திதான் போங்க.

// கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு. //

யய்யா இதெல்லாம் நல்லா நெனவிருக்குது போல. பிரமாதம். பிரமாதம். இதுல பாருங்க....ஆபுத்திரன் விட்டுட்டுப் போன அமுதசுரபிதான் பின்னால மணிமேகலை கைக்கு வந்துச்சு.

Syam said...

//அந்த ஒட்டகம் இந்தியன் படத்துல வர்ற சீலோ மாதிரி எங்கயாச்சும் கடிச்சி கிடிச்சி வச்சிருதுச்சுன்னா என்னாகியிருக்கும் என் நெலமை?//

அது கடிச்சே வெச்சுருந்தாலும் போட்டோவுக்கு போஸ் குடுக்கறதுனு வந்துட்டா...தெகிறியமா இருக்கர மாதிரியே நடிச்சு இருக்கியே...அதுனால தான்யா நீ எங்களுக்கு எல்லாம் தல :-)

Syam said...

//The Goal //

இப்புடி எல்லாம் நாலு நல்ல பொஸ்தகம் படிச்சு இருந்தா...நாம எல்லாம் எதுக்கு பிளாக் எழுதி கமெண்ட் போடுறத புல் டைம் ஜாப்பா வெச்சு இருக்கோம் :-)

கைப்புள்ள said...

//ellam intha geetha medaththai sollanum.. ore north india puraanamaa irukku..//

வாங்க வைட்டு :))
என்னங்க பண்ணறது? வயித்து பொழப்பு...சே ப்ளாக் பொழப்புக்கு பீடா சேட்டு ஆகனும்னாலும் ஆகித் தானே ஆகனும் :)

//BTW, romba nalla irukku unga post kaipulla... //
ரொம்ப நன்றி கார்த்திக்.

கைப்புள்ள said...

//நம்மளையும் அப்படியேக் கூட்டீட்டுப் போனாப்புல இருந்துச்சு.

வடக்குல இன்னும் பல எடங்கள் பாக்கனும். நீங்க இருக்குறப்பவே அங்க ஒரு வாட்டி போயிட்டு வந்திட்டாக் கூட வசதிதான்.

ஒரு நல்லதொரு பயணக்கட்டுரை படிச்ச திருப்திதான் போங்க//

வாங்க ஜிரா,
உங்களோட பின்னூட்டத்தைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. மிக்க நன்றி.

//யய்யா இதெல்லாம் நல்லா நெனவிருக்குது போல. பிரமாதம். பிரமாதம். இதுல பாருங்க....ஆபுத்திரன் விட்டுட்டுப் போன அமுதசுரபிதான் பின்னால மணிமேகலை கைக்கு வந்துச்சு//
என்னமோ கோமுகி ஆறு பேரு நினைவுக்கு வந்துட்டுது. அடடா! இவ்வளவு நாளா, ஆபுத்திரன் மணிமேகலையோட பையன்னு இல்ல நினைச்சிட்டு இருந்தேன்? உங்க கிட்டேருந்து இன்னிக்கு ஒரு புது சேதி தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி.

கைப்புள்ள said...

//ஹைய்யா! ஆரம்பிச்சுட்டாங்க.

தலைல டர்பன் எல்லாம் போடாம இருக்கே அது தானே ஒட்டகம்? :)//

அட பாவிகளா! ஒட்டகத்தையும் என்னையும் வச்சி காமெடி கீமெடி பண்ணிடுவீங்கன்னு தான் ஒரு முன்னெச்சரிக்கைக்கு அந்த மாதிரி எழுதுனேன். அப்பவும் விட மாட்டேங்கறீங்களே?
:)

கைப்புள்ள said...

//@கார்த்திக், என்ன ரொம்பத் தீசல் வாசனையா வருது? என்ன விஷயம்? :D //

அப்படி நல்லா கேளுங்க மேடம்
:)

கைப்புள்ள said...

//ரொம்ப நல்லா இருந்ததுங்க!
அஜ்மீர்ல 1991ல் சில வாரம் இருந்திருக்கேன். புஷ்கர் ,ஜெய்ப்பூர்ன்னு கொஞ்சம் ராஜஸ்தான் பார்த்திருக்கேன்.

கூட இருந்த நண்பன் வரமாட்டேன்னு சண்டித்தனம் பண்ணதிலே உதய்ப்பூர், தார் பாலைவனம் பாக்கமுடியாமப் போச்சு!//

வாங்க ஹரிஹரன்,
ராஜஸ்தான்ல நீங்களும் பல இடங்கள் பாத்து இருக்கீங்க போல. அதே பிரச்சனையை நானும் எதிர்கொண்டிருக்கேங்க. சில சமயம் கம்பெனி இல்லாத காரணத்தால சில பயணத் திட்டங்களைக் கைவிட வேண்டியதாப் போயிடும்.

//இந்தியாவுக்கு வர்ற டூரிஸ்டுகளின் ஹாட் பேவரிட் மாநிலம் ராஜஸ்தான் தாங்க!

கொஞ்சம் ப்ளாஷ் பேக் ஆகிடுச்சு.
நல்லா இருந்தது மோகன் படிக்க. //
உண்மை தாங்க. மும்பையிலிருந்து உதய்பூர் செல்லும் விமானத்தில் 50% வெளிநாட்டவர்கள் தான் இருப்பார்கள். தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல பதிவு கைப்புள்ள.

தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. //
அதுக்காகவே இங்கே போனீர்களொ.
எப்படியோ வீட்டில இருந்தபடி கடிக்காத ஒட்டகத்தையும், வாசனை(?) வீசும் தலைப்பாகையும் பார்க்க
முடிகிறது. நன்றி நன்றி.
பேசும்படங்கள் கொடுத்தற்கு.

கைப்புள்ள said...

//தலைல டர்பன் போட்டு இருக்கே அது தான் தல. :))//

ஆமா...இப்ப அது ரொம்ப முக்கியம்??!!
:))

கைப்புள்ள said...

//மேட்டர் மாணிக்கமாக மாறி சித்தூர்கட் பற்றி கமர்கட் மாதிரி இனிக்க இனிக்க நிறைய தகவல்கள் சொன்னதுக்கு சுக்கு காபி தல...ச்சே...சுக்ரியா தல! ;) //

சுக்ரியாவுக்கு தன்னியவாத் கப்பி நிலவரே! மிக்க நன்றி அதாவது டேங்ஸ்னு சொன்னேன்.
:)

கைப்புள்ள said...

//padangalum vilakkangalum arumai..

kalakkureenga kaipullai...

namma kadai pakkam oru visit pending :P//

வாங்க அருண்குமார்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்க கடை பக்கமும் வரேன்.
:)

கைப்புள்ள said...

//@kaipullai, அப்ப, இது வரைக்கும் என்னவோ எல்லா பிகரும் பார்த்துண்டு இருந்ததோ? :)//

இப்படியெல்லாம் சபைல வச்சி கேட்டா "இல்லை"ன்னு நான் உண்மையை எப்படி சொல்றதாம்?
:)

கைப்புள்ள said...

//அது கடிச்சே வெச்சுருந்தாலும் போட்டோவுக்கு போஸ் குடுக்கறதுனு வந்துட்டா...தெகிறியமா இருக்கர மாதிரியே நடிச்சு இருக்கியே...அதுனால தான்யா நீ எங்களுக்கு எல்லாம் தல :-) //

ஆமாம்யா! இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் ஒடம்பு ரணகளமா இருக்கு.
:(

கைப்புள்ள said...

//நல்ல பதிவு கைப்புள்ள.

தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. //
அதுக்காகவே இங்கே போனீர்களொ.
எப்படியோ வீட்டில இருந்தபடி கடிக்காத ஒட்டகத்தையும், வாசனை(?) வீசும் தலைப்பாகையும் பார்க்க
முடிகிறது. நன்றி நன்றி.
பேசும்படங்கள் கொடுத்தற்கு. //

வாங்க வல்லி மேடம்,
வாசனை வீசும் தலைப்பாகையை மட்டும் தான் பாத்தீங்களா? கழுத்துல கெடக்குற துண்டைப் பத்தி ஒன்னுமே சொல்லலை? தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல படங்கள் நல்ல தகவல்கள்; வெற்றிக் கோபுரம் மிக அழகு!!
யோகன் பாரிஸ்

ILA (a) இளா said...

I am the Present.
மீதியெல்லாம் அப்பாலிக்கா.

கவிதா | Kavitha said...

கைப்பூ..நீங்க 2 ஆவது படத்தை விட 4 ஆவது படத்தில் ரொம்ப அழகா இருக்கீங்க..

துளசி கோபால் said...

யானை இருக்குல்லே?
அப்ப அது 'குட் லக்' சைன் தான். இதுலே என்ன சந்தேகம்?

தொடர் அருமை கைப்புள்ளெ.

வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க.

கைப்புள்ள said...

//நல்ல படங்கள் நல்ல தகவல்கள்; வெற்றிக் கோபுரம் மிக அழகு!!
யோகன் பாரிஸ்//

வாங்க யோகன் ஐயா,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//I am the Present.
மீதியெல்லாம் அப்பாலிக்கா. //

வாங்க இளா,
ஐ ஆம் தி வெயிட்டு
:)

கைப்புள்ள said...

//கைப்பூ..நீங்க 2 ஆவது படத்தை விட 4 ஆவது படத்தில் ரொம்ப அழகா இருக்கீங்க.. //

தெரிஞ்ச சேதி தானே? ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் எல்லாம் போட்டு மேனியைப் பதப் படுத்தி வச்சிருக்கோம்ல...அப்ப அழகாத் தானே இருப்போம்? எதாவது புதுசா சொல்லுங்க...கூட இருக்கற சகாக்களைப் பத்தி எதுவுமே சொல்லலை? அவனுங்கல்லாம் இப்ப வருத்தப்படறாங்க பாருங்க...
:)

கைப்புள்ள said...

//யானை இருக்குல்லே?
அப்ப அது 'குட் லக்' சைன் தான். இதுலே என்ன சந்தேகம்?//

ஹி..ஹி...யானை ரசிகை நீங்க சொன்னா சரி தான்.
:)

//தொடர் அருமை கைப்புள்ளெ.

வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க. //

மிக்க நன்றிக்கா.

Anonymous said...

Kaipulla... that was a great wriet up on bus travel.. I cant stop recollecting the episode of getting out to watch a movie in Anand Theater with our workshop dress (Khaakki khaakki)... adhu enna rendu khakki? It is nothing but khaakki pant and khaakki shirt...That was a memory that is still etched in my mind....

Naai Sekar

Ashok said...

neenga romba nalla ezhuduringa