"எண்டே கண்ட்ரி யுனைட்டெட் கிங்டம், எண்டே சிட்டி லண்டன், எண்டே அம்மே எலிசபெத் அம்மே, எண்டே ஆஹாரம் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்" அப்படீங்கற விஷயங்கள் எல்லாம், கடையை மூடிட்டுப் போய் சில வருஷம் ஆனாலும் என்னோடு தொடர்புல இருக்கற சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம். "டேய்! நீ இருக்கற ஊரு லண்டனா?" அப்படின்னு விஷயம் தெரிஞ்சவங்க சிலர் கேக்கலாம். லண்டன்னா லண்டனே இல்லை...லண்டனுக்குப் பக்கத்துல...லண்டனுக்கு மிக அருகாமையில்...லண்டனின் திருவள்ளூர்னு சொல்லலாம்.
அப்படியாகப் பட்ட லண்டன் மாநகரிலே...சரி...சரி...லண்டனின் திருவள்ளூர் நகராட்சியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்னு நெனைக்கிறேன். சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆனதுக்கப்புறம் இப்ப ஏன்...?
இவ்வளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம் "Writer's Block" அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கறேன். ஆனா "ரைட்டர்ஸ் ப்ளாக்" எல்லாம் ரைட்டருங்களுக்குத் தானே..."பீட் காண்ஸ்டபிள்" ஒனக்கு என்ன கேடுன்னு என் மனசாட்சி வந்து லந்து பண்ணுது. இருந்தாலும் பீட் காண்ஸ்டபிளுக்கும் ப்ளாக் வரும்னு எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துன ஆண்டிப்பட்டிக்காரங்க சில பேரோட ஒரே மன உறுதியைப் பாராட்டி கம்பெனி தர்ற அன்புப் பரிசு தான் இந்தப் பதிவு.
"ஹலோ! உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" - எதோ ஒரு வேலையா தெருவுல நடந்துப் போயிட்டு இருந்த என்னை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தது ஒரு நாற்பத்தஞ்சு வயசு மதிக்கத் தக்க ஒரு வெள்ளைக்காரர்.
கண்ணாடி போட்டு தாடி வச்சிருந்த அந்த மனிதர் எதுவும் முகவரி கேக்கத் தான் நம்மக் கிட்ட பேசப் போறாருன்னு நெனைச்சேன். நானே வெளிநாட்டுக்காரன்...அது ஏன் என்னைப் பாத்து பேசனும்ங்கிறாருங்கிற ஒரு வித சந்தேகத்தோடயே பேச ஆரம்பிச்சேன்.
"யெஸ்! ப்ளீஸ் டெல் மீ" - இது நான்,
"இந்த ஊருல யாருக்கும் மனுசங்க மேலே மரியாதையே இல்லை" அப்படின்னாரு.
முகவரி தான் கேக்கப் போறாருன்னு நெனைச்சுப் பேச ஆரம்பிச்ச எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. அதுக்கு மேலே அவர் கிட்ட பேசனுமா வேணாமான்னு ஒரு சந்தேகம் வேற.
இருந்தாலும் "ஏன் அப்படி சொல்றீங்க"ன்னு கேட்டு வச்சேன்.
"இங்கே இங்கிலாந்துல யார் கிட்டயாச்சும் சும்மா பேசப் போனா, பேசக் கூட மாட்டேங்கிறாங்க"
வெறுமனே தலையாட்டிக்கிட்டு அவர் சொல்றதை கேட்டுட்டு இருந்தேன். "உன் கிட்ட யாரும் பேசலைன்னா அதுக்கு நான் என்னய்யா பண்ணறது?"ன்னு மனசுக்குள்ளே நெனச்சுக்கிட்டேன்.
"இங்கே பணக்காரங்களுக்கு மட்டும் தான் மரியாதை. நல்ல பணம் இருந்து ஒரு ஃபெராரி கார் ஓட்டிக்கிட்டு வந்தா இந்த ஊரு பொண்ணுங்க பேசுவாங்க"
"அடப் பாவி மனுஷா! இங்கிலாந்துப் பொண்ணுங்க உன் கிட்ட பேசலைங்கிற ஆதங்கத்தை ஒரு இந்தியா காரனைப் புடிச்சு மொக்கைப் போட்டுத் தீர்த்துக்கிட்டிருக்கியா?"ன்னு ஹை பிட்ச்சுல கேட்டது என் மைண்ட் வாய்ஸ் தான்.
"எங்க நாட்டுல எல்லாம் அப்படி கெடையாது தெரியுமா?"
"நீங்க எந்த நாடு?
"இத்தாலி. ஐ ஆம் ஃப்ரம் மிலன். நீங்க?" அப்படின்னாரு அவரு.
இந்தியான்னு சொன்னா சண்டைக்கு வருவாரோன்னு ஒரு சின்னப் பயம் வேற இருந்தது. ஏன்னா இத்தாலி கடற்படையைச் சேர்ந்த ரெண்டு வீரர்கள் கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு கைது பண்ணி வச்சு அப்போ கொஞ்ச நாள் தான் ஆகி இருந்தது.
இருந்தாலும் உண்மையைச் சொன்னேன்.
"இந்தியா ரொம்ப அழகான நாடு"
"நீங்க இந்தியாக்குப் போயிருக்கீங்களா?"ன்னு கேக்க நெனைச்சாலும் கேக்கலை. சோனியா காந்தியோட சொந்தக்காரரா இருப்பாருன்னு நெனைச்சிக்கிட்டேன்.
"இத்தாலியும் அழகான நாடு தான். நான் ரோமுக்கும் பைசாவுக்கும் போயிருக்கேன்"அப்படின்னேன்.
"ஓ! அப்படியா" அதுக்கு மேல அவரு நாட்டைப் பத்திப் பேசறதுல விருப்பம் காட்டலை. மறுபடியும் சமுதாயப் பிரச்சினைக்கே திரும்ப வந்தாரு.
"ஒருத்தன் கிட்டப் பணம் இருக்கான்னு மட்டும் தான் இந்த ஊருப் பொண்னுங்க பாக்கறாங்க. அவன் கிட்ட இருக்கற நல்ல மனசை அவங்க பாக்கறதில்லை. தே டோண்ட் சீ த குட் ஹாற்ட்ட்(Heart)"
ஹார்ட்ங்கிறதை அவர் 'ஹாற்ட்ட்'னு சொல்றப்போ தான் கவனிச்சேன் இத்தாலி மொழி பேசறவங்க ஆங்கிலம் பேசும் போது அதிகமா வல்லினம் உபயோகிக்கறாங்கன்னு.
"எங்க நாட்டுல பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா அட்லீஸ்ட் பேசவாவது செய்வாங்க. புடிக்கலியா ஒதுங்கிக்குவாங்க. I respect that. ஆனா இங்கேயோ நம்மைப் பார்த்ததும் நீ இங்கிலாந்து நாட்டவன் கெடையாது. உன் கிட்டெல்லாம் பேச முடியாது"ன்னு சொல்லுவாங்க.
"அதையும் மீறிப் பேச முயற்சிப் பண்ணா I will call the Police"ன்னு கத்துவாங்க.
இங்கே வந்தப் புதுசுல வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் இங்கிலீஷ் பேசுவான்னு பல முறை நினைச்சதுண்டு. ஆனா இங்கிலாந்துல குறிப்பா லண்டன் சுத்துவட்டாரத்துல ஆங்கிலம் தெரியாத மத்த ஐரோப்பிய நாட்டவர்கள் பலர் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா வெள்ளையா இருக்கறவனைப் பாத்து இவன் இங்கிலாந்து காரனா இல்லை மத்த ஐரோப்பிய நாட்டவனான்னு கண்டுபிடிக்கிற தெறமை இன்னும் எனக்கு வரலை. ஆனா அப்படி கண்டுபிடிக்க முடியும்னு இங்கேயே பல வருஷங்களா இருக்கற சில இந்தியர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.
"ஒருத்தர் கிட்டப் பேசாமலேயே அவன் நல்லவனா கெட்டவனான்னு எப்படி சொல்ல முடியும்? பேசிப் பாருங்க...புடிக்கலைன்னா விட்டுடுங்க. They are very rude and they have hurt me many times"அப்படின்னு தன்னோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.
"இந்தாளு இதையே ஒரு வேலையா வச்சிட்டுத் தான் சுத்தறாரு போல"ன்னு நெனச்சிக்கிட்டேன்.
"உங்க நாட்டுல எப்படி? பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா பேசுவாங்களா? Are they friendly?"அப்படின்னு கேட்டார்.
"Yes! Yes! எங்க நாட்டுல எல்லாம் பொண்ணுங்கக் கிட்டப் போய் பேசுனீங்கன்னா உடனே பேசிடுவாங்க" அப்படின்னு சும்மா அடிச்சு விட்டேன்.
நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.
பின்னே"போய் பேசித் தான் பாரேன். சப்பல்ஸ் பிஞ்சிப் போயிடும்டா படுவா"ன்னு உண்மையையாச் சொல்ல முடியும்?
"பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்" - அப்படிங்கிறது உண்மை தான் போலிருக்கு?
"Thanks for your time. Thanks for speaking to me. Have a nice day" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா பேரன் பேத்திக்கெல்லாம் பேறு காலம் நடந்திட்டு இருக்கும். அப்பேர்ப்பட்ட ஒரு ஆள் சுயமா தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத, அம்மா அப்பா பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச ஒரு பையனைப் பார்த்துப் புலம்பிவிட்டுப் போவதை காலக் கொடுமை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
"தனி ஒருவனுக்கு கேர்ள் ஃப்ரெண்டு இல்லையெனில் தனி ஒருவனாக இல்லாது துணைக்கு ஆள் சேர்த்துப் புலம்பிடுவோம்"னு இத்தாலியின் பாரதியார் யாராச்சும் எழுதி வச்சிருக்காங்களா தெரியலையே? :)

3 comments:
welcome back thala
வாங்க, வாங்க, வாங்க, வாங்க, நல்வரவு. நல்வரவு. நல்வரவு. இன்னமும் எழுதிக் குவிக்கணும். முகநூலிலே நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே வரலைனு தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன். :)
அண்ணே, டச் விட்டுப் போச்சு என்னா? எளுதிக்கிட்டே இருந்தாத்தானே...
Post a Comment