Wednesday, March 06, 2013

தோழி உண்டு தோழன் இல்லை

கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஓரியோ சன் சிங்கர் பாட்டுப் போட்டியில் இரண்டு குழுந்தைகள் "தூது செல்ல ஒரு தோழி இல்லை எனத் துயர் கொண்டாயோ தலைவி" என்றப் பாடலைப் பாடினர்.

அதைப் பார்த்ததும், தமிழ் இலக்கியத்தில் தலைவியின் உள்ளக்கிடக்கையைத் தலைவனுக்கு உணர்த்தவும் தலைவியின் சார்பாகத் தூது செல்லவும் 'தோழி' ஒருத்தி இருந்திருக்கின்றாள், ஆனால் தலைவனின் சார்பாகத் தூது செல்ல 'தோழன்' என்பவன் இருந்ததில்லையே... அது ஏன் என்று ஒரு ஐயம் மனதில் தோன்றியது? :)

பழந்தமிழர் வாழ்வில் காதலை எடுத்துச் சொல்ல உண்மையில் 'தோழி' என்று ஒருத்தி இருந்தாளா இல்லையா என்று அறிந்து கொள்ள வரலாற்றுச் சான்றுகள் இல்லாது போனாலும் (அவ்வாறு இருந்தாலும் நான் கேள்விப் பட்டதில்லை), தமிழ் இலக்கியங்களில் 'தோழி' எனும் ஒரு பாத்திரம் உள்ளது.
தலைவிக்கு ஒரு 'தோழி' போல தலைவனுக்கு ஒரு 'தோழன்' ஏன் இல்லை? தோழியைப் போல தூது செல்ல தோழன் நம்பகமானவன் இல்லையா?
உங்கள் கருத்து என்ன?

9 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல கேள்வி கைப்புள்ள...

ஆண் - பெண் சார்ந்த மனோதத்துவ புத்தகங்கள் சிலவற்றை படித்ததில் எனக்கு தோன்றியவை :- ஆண் எப்போதுமே தன் திறமையை, அறிவை உலகிற்கு பறைசாற்றும் உந்துதலோடு வாழ்பவன். மற்றவர் துணையோடு, உதவியோடு ஒரு காரியத்தில் வெற்றியடைவதை அவன் விரும்புவதில்லை. உணர்வு ரீதியாகவும் தன் சுக, துக்கங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் அவனுக்கு தோழன் தேவைப்படவில்லை...

ஆனால் பெண்கள் உணர்வுரீதியாக வாழ்பவர்கள். அவர்களுக்கு வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அதனை பகிர்ந்துக்கொள்ள ஒரு துணை தேவை. அதனால் தலைவன் இல்லாத சமயங்களில் தோழியுடன் தன் சுக, துக்கங்களை பகிர்ந்துக்கொள்கிறாள்.

Of course, there may be some exceptional cases :)

Anonymous said...

Thala,
May be our guys don't believe in allaguys, they dealt direct,
Welcome back, Music start
Maran

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, தோழன் எதுக்கு? நேரடியா நாமே சொல்லிடலாம்னு இருந்திருப்பார் தலைவர். தோழனைப் பார்த்துத் தோழிக்குக் காதல் உண்டாக, அப்புறமா அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு தோழனையும், தோழியையும் தேட வேண்டி வந்துடும். அதான். தோழியே போதும்னு இருந்திருக்காங்க. :))))))))

எங்களை எல்லாம் நினைவில் இருக்கா? :P:P:P:P:P

Naga Chokkanathan said...

தோழன் நன்றாக உண்டு, அவனுக்குப் பாங்கன் என்று பெயர், ஏராளமான சங்கப் பாடல்களில் வருவான், தலைவனுக்குத் துணை புரிவான்.

சொல்லப்போனால், தோழியைவிட பாங்கன் ஒரு படி உசத்தி, ’ஊர் மேயும்’ தலைவனுக்காகத் தலைவியிடம் தூது போய் அவமானப்படுவான் :)

கைப்புள்ள said...

//ஆனால் பெண்கள் உணர்வுரீதியாக வாழ்பவர்கள். அவர்களுக்கு வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அதனை பகிர்ந்துக்கொள்ள ஒரு துணை தேவை. அதனால் தலைவன் இல்லாத சமயங்களில் தோழியுடன் தன் சுக, துக்கங்களை பகிர்ந்துக்கொள்கிறாள்.
//

நல்ல விளக்கம் பிரபாகரன். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//May be our guys don't believe in allaguys, they dealt direct,
Welcome back, Music start//

'எதுக்கு சொந்த செலவுல சூனியம்' அப்படீங்கறீங்க? :)

கைப்புள்ள said...

//தோழிக்குக் காதல் உண்டாக, அப்புறமா அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு தோழனையும், தோழியையும் தேட வேண்டி வந்துடும். அதான். தோழியே போதும்னு இருந்திருக்காங்க. :))))))))
//

ஆமாம் மேடம்! ஷேக்ஸிபியரின் 'The Twelfth Night' முதல் ராஜீவ் மேனனின் 'மின்சார கனவு' வரை இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன :)

//எங்களை எல்லாம் நினைவில் இருக்கா? :P:P:P:P:P//

'அபூர்வ சகோதரர்கள்' படம் பார்த்துருக்கீங்களா? அதுல 'ராஜா கைய வச்சா' பாட்டுல வர்ற ஒரு வரி தான் நினைவுக்கு வந்தது உங்க கேள்வியைப் படிச்சதும்.

"பேரு வெச்ச ஆத்தாவை மறப்பேனா?" நீங்க இதை மறந்துருக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன் :)

கைப்புள்ள said...

//சொல்லப்போனால், தோழியைவிட பாங்கன் ஒரு படி உசத்தி, ’ஊர் மேயும்’ தலைவனுக்காகத் தலைவியிடம் தூது போய் அவமானப்படுவான் :)//

ஹி...ஹி...சேர்க்கை சரியா இருந்தா ஏன் அவமானப் படறான்? :)

பாங்கன் - தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாத்திரப் படைப்பைப் பற்றி உங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிந்து கொண்டேன். நன்றி சொக்கநாதன் :)

Devi said...

தோழனை தூது சொல்ல தேடும் ஆண் தைரியம் இல்லாதவனாகவும், தோழியின்றி நேரே காதலை சொல்லும் பெண் நாணம் இல்லதவாள் என்றும் நினைதுவிடகூடதென்று இருக்கலாம்.