கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஓரியோ சன் சிங்கர் பாட்டுப் போட்டியில் இரண்டு குழுந்தைகள் "தூது செல்ல ஒரு தோழி இல்லை எனத் துயர் கொண்டாயோ தலைவி" என்றப் பாடலைப் பாடினர்.
அதைப் பார்த்ததும், தமிழ் இலக்கியத்தில் தலைவியின் உள்ளக்கிடக்கையைத் தலைவனுக்கு உணர்த்தவும் தலைவியின் சார்பாகத் தூது செல்லவும் 'தோழி' ஒருத்தி இருந்திருக்கின்றாள், ஆனால் தலைவனின் சார்பாகத் தூது செல்ல 'தோழன்' என்பவன் இருந்ததில்லையே... அது ஏன் என்று ஒரு ஐயம் மனதில் தோன்றியது? :)
பழந்தமிழர் வாழ்வில் காதலை எடுத்துச் சொல்ல உண்மையில் 'தோழி' என்று ஒருத்தி இருந்தாளா இல்லையா என்று அறிந்து கொள்ள வரலாற்றுச் சான்றுகள் இல்லாது போனாலும் (அவ்வாறு இருந்தாலும் நான் கேள்விப் பட்டதில்லை), தமிழ் இலக்கியங்களில் 'தோழி' எனும் ஒரு பாத்திரம் உள்ளது.
தலைவிக்கு ஒரு 'தோழி' போல தலைவனுக்கு ஒரு 'தோழன்' ஏன் இல்லை? தோழியைப் போல தூது செல்ல தோழன் நம்பகமானவன் இல்லையா?
உங்கள் கருத்து என்ன?