"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"
"பஸ்லியா? டிரெயின்லயா?"
ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -
மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.
ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.
"நாய் சேகராகிய நான்
11.11.2003
கிம்ச்சீ நினைவுகள்
நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா ராயலைக் கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.
அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி ""ஹியர் டு கோ"ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?
கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..."
இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது.
இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.
அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.
11 comments:
ஏன் சத்தமே இல்லைன்னு கேட்க மாட்டேன்!
பாரிஸ் வந்திருக்கீக!! அதுவும் தனியா வந்திருக்கீக!! எஞ்சாய்!!
என் ஜாயா உன் ஜாயா, எஞ்சாய் மாமே!!
கவலையா இருந்ததுகாணோமேனு , சரி, பாரிஸுக்குத் தனியா வந்திருக்கீங்க, முன்னாலேயே சொல்லி இருந்தா, அண்ணா பையர் கிட்டே கேட்டுச் சாப்பாடு வசதி எல்லாம் தெரிவிச்சிருப்பேன். ஆனால் உங்களுக்குத் தெரியாததா???
கொத்தனாரை வன்மையாய்க் கண்டிக்கிறேன், அர்ச்சனா அம்மா, எங்கே இருந்தாலும் சபைக்கு வாங்க சீக்கிரமா! :P:P:P:P:P:P::P
ஆகா...தல அடுத்த வாரம் ரிட்டனா!! வந்தவுடன் மெயில் போடுங்கள் ;))
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது.அதைவிட உங்கள் பெயர் மிக அருமை. எனக்கு கைப்புள்ளையை ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப நாளா ஆளையே காணோம்? விடுமுறைய நல்லா என்சாய் பண்ணிட்டு வாங்க :)
archana eppadi irukkaa?
//என் ஜாயா உன் ஜாயா, எஞ்சாய் மாமே!!//
:))))))
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
//அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.
"நாய் சேகராகிய நான்
11.11.2003
//
தல, இந்த தேதிக்கும், நீங்க குறிப்பிட்ட வருஷத்துக்கும் சம்பந்தமே இல்லை.
பதிவுல பெரிய்ய லாஜிக் பிழை உள்ளது. எனக்கு தெரிஞ்சு நீங்க பதிவுலகத்துக்கு வந்ததே 2006ல தான். :)
தல, இந்த தேதிக்கும், நீங்க குறிப்பிட்ட வருஷத்துக்கும் சம்பந்தமே இல்லை. பதிவுல பெரிய்ய லாஜிக் பிழை உள்ளது. எனக்கு தெரிஞ்சு நீங்க பதிவுலகத்துக்கு வந்ததே 2006ல தான்.
சரி, இப்ப இதுவா முக்யம், பாரீஸ்ல தான் ராப் அக்கா இருக்காங்க. ஈபில் டவர் முன்னாடி நின்ன்னுகிட்டு ராப்ப்ப்னு சவுண்டு விட்டு பாருங்க. சிக்கனோட அக்கா வந்தாலும் வருவாங்க. :))
கொத்தனார் சொன்னதையும் பரிசீலிக்கவும். இப்படிபட்ட பாக்யம் எல்லாம் ரொம்ப அரிதாக தான் அமையும். :p
ஏன் கைப்பு,இப்படி விறைப்பா, ரொம்ப முறைப்பா நிக்கறீங்க... அர்ச்சனா பாப்பா பார்த்து பயந்திடப்போறா.... :))
Post a Comment