அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தேன். எத்தனையோ முறை மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திருவான்மியூர் கடற்கரைக்கு ஒரு சில முறை தான் சென்றிருக்கிறேன். அங்கே எடுத்த படம் இது. சிறுவயதில் ரசித்த விஷயங்களை சிறிது வயதான பிறகு மறுபடியும் கண்டுகொள்வதென்பதும் ஒரு மகிழ்ச்சி தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சென்னையில் இது போல தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை. கடற்கரையில் சென்றால் மட்டும் காணும் வாய்ப்பிருக்கிறது. முன்னாளில் பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் விற்றுக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் பேட்டரி விளக்கின் வெளிச்சத்தில் விற்பதைக் காணலாம். சோன் பப்டி வாங்கிச் சாப்பிடத் தோன்றவில்லை என்றாலும், அக்காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள கண்டிப்பாகத் தோன்றியது.
பெங்களூரில், எங்கள் வீட்டின் அருகில் தனியாக நின்றிருந்தத் தள்ளுவண்டி. கார்களும், பேருந்துகளும் சாலையில் ஏற்படுத்திய வெளிச்சத்தில் இவ்வண்டியைத் தனியாகப் படம் பிடித்துக் கொள்ளத் தோன்றியது. வண்டிக்குச் சொந்தக்காரர் சுற்றும் முற்றும் தென்படாததும் வசதியாக அமைந்தது.
இரண்டு ரூபாய்க்குச் சோளம் வாங்கிக் கொண்டு க்ளிக்கிய படம் இது. சோளத்தைத் தெளிவாகப் ஃபோகஸ் செய்ததால், சாலையில் செல்லும் வாகனங்களினால் படத்திற்குப் பெரிதாக இடையூறு ஏதுமில்லை.
தங்கமணி காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு ஓரமாக நின்று கொண்டு க்ளிக்கித் தள்ளியதில் தேறிய ஒரு படம். தெருவில் செல்பவர்களையும், இது போன்று பொருள்களை விற்பவர்களையும் படத்திற்குப் போஸ் தரச் சொல்லிக் கேட்பதில் இருக்கும் கூச்சம் இன்னும் விலகிய பாடில்லை. தங்க்ஸ் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த தைரியத்தில் எடுத்த படங்கள் இவை.
க்ளிக்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த உரையாடல்.
தங்க்ஸ் : "ஏங்க! காலிஃப்ளவர் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "வாழைக்காய் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "முள்ளங்கி வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "சேப்பங்கிழங்கு வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "அது தான் உங்களுக்குப் பிடிக்காதே?"
நான் : "பரவால்லை...வாங்கு...வாங்கு..."(மனதில் எக்ஸ்போசர், காம்போசிஷன், சப்ஜெக்ட், ஃபோகஸ் இது பற்றிய கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன...சேப்பங்கிழங்கு என்பது ஷட்டர் ஸ்பீடு என்று அநேகமாகக் காதில் விழுந்திருக்க வேண்டும்)
தங்க்ஸ் : "வாங்கி முடிச்சாச்சு. காசு குடுங்க"
சே! இவ்வளவு சீக்கிரம் வாங்கி முடிச்சாச்சான்னு நெனச்சிக்கிட்டே காசைக் கொடுத்துக் கொண்டே...வாங்கி வைத்திருந்த காய்கறிகளைப் பார்க்கிறேன்.
நான் : "சேப்பங்கிழங்கு தான் புடிக்காதுன்னு தெரியுமில்லை. அதை போய் வாங்கிருக்கே?"
தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"
நான் : (
48 comments:
/தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"//
இதை சொல்லுறேப்பவே நச்'னு தலையிலே ஒன்னும் விழுந்துருக்குமே அதை ஏன் பதிவிலே எழுதலை தல?? :))
super kaips!!!! nallaa irukku ellaam!!!
//இதை சொல்லுறேப்பவே நச்'னு தலையிலே ஒன்னும் விழுந்துருக்குமே அதை ஏன் பதிவிலே எழுதலை தல?? :))//
அதெல்லாம் சொல்லித் தான் தெரியனுங்கிறதில்லை. எதுக்கு வீணா கம்ப்யூட்டரோட ராமைச்(RAM) செலவழிச்சு எல்லாருக்கும் தெரிஞ்சதை எழுதனும்னு லூசுல விட்டுட்டேன்.
:)
//super kaips!!!! nallaa irukku ellaam!!!//
வளர நன்னி சங்கீதபூசணியே...சாரி...சாரி...சங்கீதபூஷணமே!!
அபி அப்பா said...
super kaips!!!! nallaa irukku ellaam!!!//
repeateeeee
// //இதை சொல்லுறேப்பவே நச்'னு தலையிலே ஒன்னும் விழுந்துருக்குமே அதை ஏன் பதிவிலே எழுதலை தல?? :))//
அதெல்லாம் சொல்லித் தான் தெரியனுங்கிறதில்லை. எதுக்கு வீணா கம்ப்யூட்டரோட ராமைச்(RAM) செலவழிச்சு எல்லாருக்கும் தெரிஞ்சதை எழுதனும்னு லூசுல விட்டுட்டேன்.
:)
July 07, 2008 6:07 PM
Blogger கைப்புள்ள said...
//super kaips!!!! nallaa irukku ellaam!!!//
வளர நன்னி சங்கீதபூசணியே...சாரி...சாரி...சங்கீதபூஷணமே//
double repeataeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeey
கைப்புள்ள
உங்க பேருக்காகவே நீங்க எழுதியதை எல்லாம் படிக்கப்போறேன்.
சோன்பப்டி படம் நல்லாருக்கு.
பீச் காத்தின் சுகம் படத்தில் தெரியுது.
இதுதான் தலைப்புக்கு ஏத்த படம்.
வாழ்த்துக்கள்.
//double repeataeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeey//
ஹி...ஹி...வளர நன்னி ஜீவ்ஸ் அண்ணாச்சி.
:)
//கைப்புள்ள
உங்க பேருக்காகவே நீங்க எழுதியதை எல்லாம் படிக்கப்போறேன்.//
வாங்க கார்த்திக்,
ரொம்ப நன்றி. படிச்சிப் பாத்துட்டுச் சொல்லுங்க.
:)
//சோன்பப்டி படம் நல்லாருக்கு.
பீச் காத்தின் சுகம் படத்தில் தெரியுது.
இதுதான் தலைப்புக்கு ஏத்த படம்.
வாழ்த்துக்கள்.//
வாங்க மேடம்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
//சிறிது வயதான பிறகு //
ரொம்பவே வயசானதினாலேனு வந்திருக்கணுமோ?? அது சரி, இந்தப் பதிவு எழுதினது எப்போ?? சாப்பிட்டுத் தூக்கத்திலா???
தங்கமணி "நச்"னு கொடுக்கும்போது காமிராவைப் பக்கத்திலே யார் கிட்டேயாவது கொடுக்கக் கூடாதோ?? :P :P
கைப் படங்கள் அருமை அதிலும் தனியாக இருக்கும் தள்ளு வண்டி
//நான் : "சேப்பங்கிழங்கு தான் புடிக்காதுன்னு தெரியுமில்லை. அதை போய் வாங்கிருக்கே?"
தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"//
இந்த ரெண்டுத்துக்கும் நடுவுல சில வார்த்தைகள் மிஸ் ஆகுதே? சென்சார் பண்ணிட்டீங்களா;)
படம் எல்லாம் சூப்பர். பழைய நினைவுகளை தூண்டி விடுது!
//ரொம்பவே வயசானதினாலேனு வந்திருக்கணுமோ??//
அடடே!!! வாங்க...வாங்க...உலகத்தின் ஆறாவது கீதா சாம்பசிவம் மேடம் :)
எங்க தலைவியின் ஆறு விட்ட தங்கச்சி நீங்கன்னு எங்க தலைவியே உங்களைப் பத்தி நெறைய சொல்லிருக்காங்க. என்ன தான் வயசானாலும் உங்களை விட ஒரு அறுபத்தியஞ்சு வயசு கம்மி தானே?
//அது சரி, இந்தப் பதிவு எழுதினது எப்போ?? சாப்பிட்டுத் தூக்கத்திலா???//
ஆமா...நீங்க மத்தியானம் நல்லா சாப்புட்டுட்டு தூங்கிட்டு இருக்கறப்போ தான் எழுதுனேன்:)
//தங்கமணி "நச்"னு கொடுக்கும்போது காமிராவைப் பக்கத்திலே யார் கிட்டேயாவது கொடுக்கக் கூடாதோ?? :P :P//
கொடுத்துட்டு என்ன பண்ண சொல்றீங்க?
:)
//கைப் படங்கள் அருமை அதிலும் தனியாக இருக்கும் தள்ளு வண்டி//
வாங்க ஜாக்கி,
எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் அது. வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.
//இந்த ரெண்டுத்துக்கும் நடுவுல சில வார்த்தைகள் மிஸ் ஆகுதே? சென்சார் பண்ணிட்டீங்களா;)//
வாங்க நைனா,
எதோ டபுள் மீனிங்க்ல பேசறா மாதிரி இருக்கே? பாத்துங்க லேடீஸ்லாம் வந்து போற எடம். அப்புறம் கெட்ட பையன்னு முத்திரை குத்திடுவாங்க:)
////படம் எல்லாம் சூப்பர். பழைய நினைவுகளை தூண்டி விடுது!//
மிக்க நன்னி ராமசாமிகாரு :)
தல தல ஃபோட்டோ அருமையா கீது தல!
சூப்பரு தல!
//கைப்புள்ள
உங்க பேருக்காகவே நீங்க எழுதியதை எல்லாம் படிக்கப்போறேன்.//
தல! உன் பேருக்காகவே என் புரொஃபைல் படத்தை மாத்திகிட்டேன் தல!
sooper thali!!
//சோன்பப்டி //
ithu puriyuthu..aana flickrla vera etho puriyaatha peru sonneenga?? :))
முதல் போட்டோ நல்லா இருக்கு.
அப்படியே "கேமெரா, கைப்புள்ள மற்றும் பலர்" ஒரு தொடரா எழுதலாம் போல இருக்கே. கான்செப்ட் நல்லா இருக்கு, அசத்துங்க!
//எதோ டபுள் மீனிங்க்ல பேசறா மாதிரி இருக்கே?//
ச்சே ச்சே! யு பார் மிஸ்டேக்! மீ 'டபுள் மீனிங்' நோ! ஐ டெல் ஒன்லி பார் ஸ்டெரைட் மீனிங், லைக் "என்ன நக்கலா?", "ஒடம்பு எப்படி இருக்கு?", "பொண்டாட்டிய விட்டுட்டு யார் யாரையோ படம் பிடிச்சா இப்படிதான்", "லூசா பா நீ?";)
சேப்பங்கிழங்கு சமைக்கறது ரொம்ப கஷ்டமோ ? :-)
//நாமக்கல் சிபி said...
தல! உன் பேருக்காகவே என் புரொஃபைல் படத்தை மாத்திகிட்டேன் தல!//
sooooper :-)
எல்லாரும் தங்கமணி பத்தி சொல்லிட்டாங்க. அதனால அதை சாய்ஸில் விடறேன்.
ஆனா ஒண்ணு. கல்யாணம் ஆனாலும் ஆச்சு. அப்புறம் பதிவுன்னு இப்படி பாதி ராத்திரியில் எடுத்த படம் நாலை போட்டு ஒப்பேத்தறதுன்னு ஆயிருச்சு போல.
நான் தங்கமணிக்கு ரெக்கமெண்ட் பண்ணி வாரத்திற்கு சில மணி நேரங்களாவது வாங்கித் தரவா? உண்மையான பதிவுகள் போட?
//தல தல ஃபோட்டோ அருமையா கீது தல!
சூப்பரு தல!//
வாங்க தள,
நல்லாருக்கா? டேங்கீஸ் :))
//தல! உன் பேருக்காகவே என் புரொஃபைல் படத்தை மாத்திகிட்டேன் தல!//
சும்மா சொல்லக் கூடாது...சிலிண்டர்ரு படம் ரொம்ப பொருத்தமாத் தான் இருக்கு
:)
//ithu puriyuthu..aana flickrla vera etho puriyaatha peru sonneenga?? :))//
அது தான்யா அதோட ஒரிஜினல் பேரு. இப்ப நீ ரெண்டு ஐடி வச்சிக்கிட்டு ரெண்டு பேருல கமெண்ட் போடறேல்ல? அதே மாதிரி தான் சோன்பப்டியும் Sohan Papdiஉம் ஒன்னு தாங்கிறேன்.
:)
//முதல் போட்டோ நல்லா இருக்கு.
அப்படியே "கேமெரா, கைப்புள்ள மற்றும் பலர்" ஒரு தொடரா எழுதலாம் போல இருக்கே. கான்செப்ட் நல்லா இருக்கு, அசத்துங்க!//
ஹி...ஹி...டேங்கீஸ்பா திரு
:)
//ச்சே ச்சே! யு பார் மிஸ்டேக்! மீ 'டபுள் மீனிங்' நோ! ஐ டெல் ஒன்லி பார் ஸ்டெரைட் மீனிங், லைக் "என்ன நக்கலா?", "ஒடம்பு எப்படி இருக்கு?", "பொண்டாட்டிய விட்டுட்டு யார் யாரையோ படம் பிடிச்சா இப்படிதான்", "லூசா பா நீ?";)//
இதுக்கு நாலு அடி அடிச்சிருக்கலாம். டோட்டல் டேமேஜ். ஒவ்வொரு தங்கமணிக்கும் எடுத்துக் குடுக்க இந்த மாதிரி ஒரு பிரதரு இருந்தா போதும்...வெளங்கிரும்.
//சேப்பங்கிழங்கு சமைக்கறது ரொம்ப கஷ்டமோ ? :-)//
12பி,
அனுபவம் பேசுது போல?
:)
\\தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை\\
சென்னை சிடில இல்லையோ என்னமோ இன்னும் தாம்பரம் போன்ற இடங்களில் உண்டு.. நல்லா இருக்கு புகைப்படம் :) காய்கறி வாங்குற புகைப்படம் ரொம்பவே இயல்பா இருக்கு..
//ஆனா ஒண்ணு. கல்யாணம் ஆனாலும் ஆச்சு. அப்புறம் பதிவுன்னு இப்படி பாதி ராத்திரியில் எடுத்த படம் நாலை போட்டு ஒப்பேத்தறதுன்னு ஆயிருச்சு போல.
நான் தங்கமணிக்கு ரெக்கமெண்ட் பண்ணி வாரத்திற்கு சில மணி நேரங்களாவது வாங்கித் தரவா? உண்மையான பதிவுகள் போட?//
வாங்க கொத்ஸ்,
எல்லாம் "மை ஓன்" சோம்பேறித்தனம் தான் காரணம். பெருசா எழுதனும்னு நெனைச்சாலே மலைப்பா இருக்கு.
:(
//ச்சே ச்சே! யு பார் மிஸ்டேக்! மீ 'டபுள் மீனிங்' நோ! ஐ டெல் ஒன்லி பார் ஸ்டெரைட் மீனிங், லைக் "என்ன நக்கலா?", "ஒடம்பு எப்படி இருக்கு?", "பொண்டாட்டிய விட்டுட்டு யார் யாரையோ படம் பிடிச்சா இப்படிதான்", "லூசா பா நீ?";)//
வாழ்க, வளர்க, சத்தியா அவர்களே, கிட்டே இருந்து ஒட்டுக் கேட்டிருப்பார் போலிருக்கே?? :P :P :P ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
//நான் தங்கமணிக்கு ரெக்கமெண்ட் பண்ணி வாரத்திற்கு சில மணி நேரங்களாவது வாங்கித் தரவா? உண்மையான பதிவுகள் போட?//
இதுவன்றோ உண்மை நட்பு??? :P :P
நான் தங்கமணிக்கு ரெக்கமெண்ட் பண்ணி வாரத்திற்கு சில மணி நேரங்களாவது வாங்கித் தரவா? உண்மையான பதிவுகள் போட?
இதுவன்றோ உண்மை நட்பு?? :P:P
அது என்னமோ கமெண்டறச்சே, we are sorry, we are unable to fulfill your request appadinu error message varuthu, ellaam en neram, unga athirushtam!! vere ennathai solrathu? konja nala comenta kuda mudiyalai enge ponalum! :P
//இதை சொல்லுறேப்பவே நச்'னு தலையிலே ஒன்னும் விழுந்துருக்குமே //
தலைல மட்டும் தானா? :p
சேப்பங்கிழங்கை வேக வைக்கறத்துகுள்ள தாவு தீர்ந்துடும் இல்ல? இனிமே குக்கர்ல வைங்க தல. :))
//நான் தங்கமணிக்கு ரெக்கமெண்ட் பண்ணி வாரத்திற்கு சில மணி நேரங்களாவது வாங்கித் தரவா? உண்மையான பதிவுகள் போட?
இதுவன்றோ உண்மை நட்பு?? //
@geetha paati, என்ன செய்ய? எல்லாரும் சாம்பு மாமா மாதிரி பொறுமைசாலியா இருந்துட்டா எப்போதும் இணையம் தான். :p
//அது என்னமோ கமெண்டறச்சே, we are sorry, we are unable to fulfill your request //
கடவுள் இருக்கார்னு அப்பப்ப காட்டிடுவாராரு இல்லையா கைப்பு? :p
போட்டிப் படம் அசத்தல்.
//சிறுவயதில் ரசித்த விஷயங்களை சிறிது வயதான பிறகு மறுபடியும் கண்டுகொள்வதென்பதும் ஒரு மகிழ்ச்சி தான்.//
உண்மைதாங்க.
//இப்போதெல்லாம் தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை.//
அப்போதெல்லாம் பெட்ரோமேக்ஸ் மட்டுமில்லாமல் வண்டிக்கு அடியில் ஒரு பெரிய மணியும் தொங்க விட்டிருப்பார்கள். 'டிங்டிங்' ஓசை வரும் முன்னே சோன்பப்டி வரும் பின்னே. இதற்கு பெயரே அப்போ 'டிங்டிங் மிட்டாய்'தான்.
காய்கறிக்கடை கலாட்டா நல்ல கலகலப்பு:))!
கடசியா ஒரு அமாவாசைப் படம் போட்டிருப்பீங்களோன்னு பாத்தேன்.போடல:)))!
சோன் பப்டி ருசியா இருக்குதுங்க.
@கீதா:
//வாழ்க, வளர்க, சத்தியா அவர்களே, கிட்டே இருந்து ஒட்டுக் கேட்டிருப்பார் போலிருக்கே?? :P :P :P //
வாழ்த்துக்கு நன்றிங்க! ஒட்டெல்லாம் கேக்கலை! இதெல்லாம் எங்களுக்கு சகஜம் தானே! வீட்டுக்கு வீடு வாசப்படி;)
//இதுவன்றோ உண்மை நட்பு?? :P:P//
ஆமாமா. அவரு கோப்பு. நான் பிசிறு :)
//அது என்னமோ கமெண்டறச்சே, we are sorry, we are unable to fulfill your request appadinu error message varuthu, ellaam en neram, unga athirushtam!! vere ennathai solrathu? konja nala comenta kuda mudiyalai enge ponalum! :P//
விதி வலியது. எப்படியோ கமெண்டு வந்திடுச்சு பாத்தீங்களா?
//சென்னை சிடில இல்லையோ என்னமோ இன்னும் தாம்பரம் போன்ற இடங்களில் உண்டு.. நல்லா இருக்கு புகைப்படம் :) காய்கறி வாங்குற புகைப்படம் ரொம்பவே இயல்பா இருக்கு..//
வாங்க ரம்யா மேடம். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
//@geetha paati, என்ன செய்ய? எல்லாரும் சாம்பு மாமா மாதிரி பொறுமைசாலியா இருந்துட்டா எப்போதும் இணையம் தான். :p//
ரிப்பீட்டேய் டு தி பவர் இன்ஃபினிட்டி
:)
//போட்டிப் படம் அசத்தல்//
வாங்க மேடம்! வாழ்த்துக்கு நன்றி.
//அப்போதெல்லாம் பெட்ரோமேக்ஸ் மட்டுமில்லாமல் வண்டிக்கு அடியில் ஒரு பெரிய மணியும் தொங்க விட்டிருப்பார்கள். 'டிங்டிங்' ஓசை வரும் முன்னே சோன்பப்டி வரும் பின்னே. இதற்கு பெயரே அப்போ 'டிங்டிங் மிட்டாய்'தான்.//
அதே அதே! நான் சொல்ல மறந்ததை நீங்க சொல்லிட்டீங்க. சோன்பப்டி வண்டிக்கும் குல்ஃபி வண்டிக்கும் டிங்டிங் மணி தானே அடையாளமே?
//காய்கறிக்கடை கலாட்டா நல்ல கலகலப்பு:))!//
ஹி...ஹி...டேங்கீஸ் :)
//கடசியா ஒரு அமாவாசைப் படம் போட்டிருப்பீங்களோன்னு பாத்தேன்.போடல:)))!//
டின்னு கட்டிடுவாங்களோன்னு ஒரு சின்ன பயம் தான்
:)
//சோன் பப்டி ருசியா இருக்குதுங்க.//
மிக்க நன்றி ராஜ நடராஜன்.
:)
//வாழ்த்துக்கு நன்றிங்க! ஒட்டெல்லாம் கேக்கலை! இதெல்லாம் எங்களுக்கு சகஜம் தானே! வீட்டுக்கு வீடு வாசப்படி;)//
ஓ அப்படியா சங்கதி! ஃப்ளிக்ஆர் ப்ரொஃபைல் படத்தைப் பாத்தா காலேஜ் பையன் மாதிரி இருக்கீங்களா...நான் கூட அதை பாத்து ஏமாந்துட்டேன். இப்ப தானே தெரியுது சத்தியா "எஞ் சோட்டு பொண்டு"ன்னுட்டு
:D:D:D
முதல் மழை என்னை நனைத்ததே..
ச்சே. முதல் படம் என்னைக் கவர்ந்ததே..
அதையே போடுங்க தல..
சோன்பப்டீஈஈஈஈஈஈ... :-(((((((
Post a Comment