படம் :அவதாரம்
பாடல் :வாலி்
இசை:இளையராஜா
பாடியது:இளையராஜா, S ஜானகி
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

(நினைவலைகளில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அடாலஜ், குஜராத், ஜனவரி 2007)
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக்கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
(அலமண்டா மலரின் அழகை ரசிக்கும் கொசு, சென்னை, செப்டம்பர் 2006)
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அது போல
ஒடும் அது ஒடும் இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே...
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது
(பால்சம் மலர்கள், சென்னை, ஜனவரி 2007)
கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா
(கொம்பில் அமர்ந்திருக்கும் நீர்காகங்கள், காங்கரியா ஏரி, குஜராத், டிசம்பர் 2006)
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன
(Flickr-இல் அடுத்தவர்களின் புகைப்படங்களைப் பார்த்து கிடைத்த எண்ணங்கள், செப்டம்பர் 2007)
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
தமிழில் புகைப்படக் கலை - செப்டம்பர் 2007, வண்ணங்கள் தலைப்பிலான போட்டிக்காகன்னு - என்னென்னமோ ஐடியா பண்ணி வச்சேன்...தேதி முடிஞ்சுடுச்சா? அட! கடவுளே :(
முதல் இரு படங்களும் போட்டிக்கான படங்கள்.