Wednesday, July 18, 2007

தமிழில் புகைப்படக் கலை - ஜூலை2007 போட்டிக்கு

பொக்கேயில் சாமந்திப்பூக்கள்


சாமந்திப்பூ, என் வீட்டுத் தோட்டத்தில், ஜனவரி 2007

பொக்கே எங்கேயிருக்குன்னு தானே தேடறீங்க? - Bokeh இங்கிருக்கு


டேக் ஆஃப்

டேக் ஆஃப் செய்து கொண்டிருக்கும் சைபீரிய நாரைகள், நால்சரோவர் பறவைகள் சரணாலயம் குஜராத், ஜனவரி 2007

ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் பக்கம் வந்ததுனால ஒரு கவிதை :

சூளுரை

ஆயிரமாயிரம் ஆணி சூரியன்கள்
சுட்டெரித்த போதிலும்
சாம்பலிலிருந்து உயிர்த்தெழும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
ஆணி புடுங்கி மீள்வேன்

37 comments:

அபி அப்பா said...

வாங்க புது மாப்ள! ரெடியா ஆட்டத்துக்கு?

முத்துகுமரன் said...

welcome Back

பேச்சு இலர் வாழ்க்கை எப்படி இருக்கிறது

இராம்/Raam said...

தல,

வெல்கம் பேக்...... ;)

அந்த பூரிகட்டை ஒடைச்சி போச்சா??? இன்னொன்னு வாங்கி அனுப்புறேன்... :)

கைப்புள்ள said...

//வாங்க புது மாப்ள! ரெடியா ஆட்டத்துக்கு?//

ஒரு மாசத்துக்கு மேல ஆவுது அசாருதீன் ஐயா...இன்னுமா புது மாப்ளே? என்னையும் மெயின்ஸ்ட்ரீம்ல சேத்துக்கங்கய்யா

கைப்புள்ள said...

//welcome Back

பேச்சு இலர் வாழ்க்கை எப்படி இருக்கிறது//

வாங்க கவிஞரே,
நல்லா போயிட்டிருக்குங்க :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

கப்பி | Kappi said...

thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

கைப்புள்ள said...

//
அந்த பூரிகட்டை ஒடைச்சி போச்சா??? இன்னொன்னு வாங்கி அனுப்புறேன்... :)//

அட படுபாவி ராயல்,
நீ தானா அந்த கோடாலி காம்பு :(
எதுவா இருந்தாலும் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வருங்கிறதை மட்டும் மறந்துடாதே.

ஏன்யா...வந்த மூனு பேரும் படத்தைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே ஏன்? இல்லை தனிமனிதத் தாக்குதல் நடத்துறதுன்னு முடிவோட கெளம்பிருக்கீங்களா?
:)

கைப்புள்ள said...

ஜாவா பாவலரே,
ஏன்யா இப்படி நீட்டி முழக்குறே? வை திஸ் கொலை வெறி?
:)

முத்துகுமரன் said...

//ஏன்யா...வந்த மூனு பேரும் படத்தைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே ஏன்? இல்லை தனிமனிதத் தாக்குதல் நடத்துறதுன்னு முடிவோட கெளம்பிருக்கீங்களா?
:)
//

குயில் நல்லாதான் பாடுதுனு குயில்கிட்ட சொல்லுவாங்கலா

மயில் அழகாத்தான் ஆடுதுனு யாராச்சும் மயில்கிட்ட சொல்லுவாங்களா

வழக்க்ம் போல அருமை

கைப்புள்ள said...

//குயில் நல்லாதான் பாடுதுனு குயில்கிட்ட சொல்லுவாங்கலா

மயில் அழகாத்தான் ஆடுதுனு யாராச்சும் மயில்கிட்ட சொல்லுவாங்களா

வழக்க்ம் போல அருமை//

அப்படியே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க. ரொம்ப நன்றிங்க முத்துகுமரன்.
:)

ILA (a) இளா said...

வாங்க புது மாப்ளே! செளக்கியமா? பிலாக் எழுத கூட நேரம் இருக்கா?
//ஃபீனிக்ஸ் பறவையாய்
ஆணி புடுங்கி மீள்வேன்//
நமக்கு எப்பவுமே சண்டைதான் அப்படீங்கிறதுக்கு இது உதாரணம்

ஆணி புடுங்க ஃபீனிக்ஸ்லிருந்து
பறவையாய் மீண்டேன்.

Boston Bala said...

ரெண்டாவது படம்(மும்) சூப்பர்!

Unknown said...

Thalai.... Welcome Backuuuuuuuu...

2nd inningsa.... Start Muzik...

பாலராஜன்கீதா said...

முதல் படத்தில் ஒரு மஞ்சள் குருவி வாயில் ஒரு மஞ்சள் polo மிட்டாய் வைத்திருப்பதுபோலத் தெரிகிறது.
:-)

கைப்புள்ள said...

//வாங்க புது மாப்ளே! செளக்கியமா? பிலாக் எழுத கூட நேரம் இருக்கா? //
வாங்க விவ்! சௌக்கியமா இருக்கேன். இன்னும் ஏன்யா அந்த அடைமொழி...வுட மாட்டீங்களா? ரொம்ப லேட்டாகிப் போச்சு குரூ :)
அதான் தம் கட்டி எப்படியோ எழுதிட்டோம்ல? அதனால இப்படியெல்லாம் கேக்கப்பிடாது :)

//நமக்கு எப்பவுமே சண்டைதான் அப்படீங்கிறதுக்கு இது உதாரணம்

ஆணி புடுங்க ஃபீனிக்ஸ்லிருந்து
பறவையாய் மீண்டேன். //

அரிசோனா மாவட்டம் அந்தியூர் வட்டம் பண்ணாரி போஸ்ட் ஃபீனிக்ஸ் கிராமத்தைச் சேர்ந்த எங்க அண்ணாத்தே வேளாண்தமிழன் விவ் களை புடுங்க சாரி ஆணி புடுங்க வாறாரையா வாறாரு...இல்ல ஏற்கனவே வந்துட்டீங்களா(?). நம்பர் அதே நம்பர் தானா?

கைப்புள்ள said...

//ரெண்டாவது படம்(மும்) சூப்பர்!//

வாங்க பாபா,
ரொம்ப நன்றிங்க. பின்னூட்டத்தில் பாபா டச் தெரியுதுல்ல?
:)

கைப்புள்ள said...

//Thalai.... Welcome Backuuuuuuuu...

2nd inningsa.... Start Muzik...//
ரைட்டு...ரொம்ப தேங்க்ஸப்பு
:)

ILA (a) இளா said...

//அரிசோனா மாவட்டம் அந்தியூர் வட்டம் பண்ணாரி போஸ்ட் ஃபீனிக்ஸ் கிராமத்தைச்//
ஆமாமாம். அந்த ஃஃபீனிக்ஸ்லிருந்து கிளம்பி வேற ஊருக்கு போயிட்டேன். ஃபீனிக்ஸ் சூடு தாங்காம ஓடீஈஈஈஈ வந்துட்டேன்,

ALIF AHAMED said...

"மொத" "இன்னிங்க்ஸ்" வெற்றி பெறவும்

ரெண்டாவது ஆட்டம் களைகட்டவும் வாழ்த்துக்கள்

:)

கதிர் said...

மீண்டும் வலைப்பதிய வந்ததுக்கு நன்றி.

தினமும் ரெண்டு பதிவாச்சும் போடுங்க தல...

தல போட்டோ எடுத்ததால் அந்த சைபீரிய பறவைக்கே பெருமை.
ஆமா தல

அது சைபீரியாலருந்தான் வந்ததுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Hi Kaipu,

First of all, "Happy married life". I am a big fan of yours and been a regular visitor of your blog. Your pics have been excellent and looks lot pro type. (Ok, odane PC Sriram, Baalu Mahendra leveluku yosikka venam). I am interested in writing in tamil. Can you help me in that? Please forward any link which will help me in this regard. my id is krishna.madras@gmail.com. FYI, I am in Bangalore now. looking forward to your response. Thanks - Krishna

ilavanji said...

யோவ் கைப்புள்ள,

எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்யாணமாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்! (நாங்கெல்லாம் மானஸ்தருங்க! கூப்புடாத கல்யாணத்துக்கு வரமாட்டோம்.. ஆமா! அப்படியே பந்திக்கு முந்துனாலும் பின்னாடி வழியாத்தான் வந்து அட்டனெஸ்சு போடுவோம்!) நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!

ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா போட்டிக்கு வந்த போட்டோங்க எல்லாம்?! :)

Pavals said...

வாங்க வாங்க வூட்ல எல்லாம் செளக்கியமா :)

கைப்புள்ள said...

//ஆமாமாம். அந்த ஃஃபீனிக்ஸ்லிருந்து கிளம்பி வேற ஊருக்கு போயிட்டேன். ஃபீனிக்ஸ் சூடு தாங்காம ஓடீஈஈஈஈ வந்துட்டேன்//

வந்துட்டீயளா...சொல்லவே இல்லை?

கைப்புள்ள said...

//"மொத" "இன்னிங்க்ஸ்" வெற்றி பெறவும்

ரெண்டாவது ஆட்டம் களைகட்டவும் வாழ்த்துக்கள்//

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிய்யா மின்னலு.
:)

கைப்புள்ள said...

//மீண்டும் வலைப்பதிய வந்ததுக்கு நன்றி//

என்னப்பா நன்றி கின்றின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு.

//தினமும் ரெண்டு பதிவாச்சும் போடுங்க தல...//
மாசத்துல ஒன்னு போடவே நாக்கு தள்ளுது. தினமும் ரெண்டா? கொஞ்சம் ஓவரா இல்ல? தினமும் ரெண்டு வேளை சோறு திங்க சொல்ற மாதிரி இல்ல சிம்பிளா சொல்லிட்ட?

//தல போட்டோ எடுத்ததால் அந்த சைபீரிய பறவைக்கே பெருமை.
ஆமா தல//
இது ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? :)

//அது சைபீரியாலருந்தான் வந்ததுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?//
இப்ப கேட்டியே இது கேள்வி. இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் கைப்புள்ள வேணுங்கிறது...இது என் லெவலுக்கு ரொம்ப சிம்பிள் கேள்விமா...இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்க...அந்த நாரை இருக்கு இல்ல நாரை...அதோட பேக்சைட்ல "மேட் இன் சைபீரியா"ன்னு ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சும்மா...அது அப்படியே என் ஞானக் கண்ணுல தெரிஞ்சிடுச்சும்மா...அதான் இப்படி நச் நச்சுன்னு அடிக்கிறேன். இப்ப புரியுதாம்மா.
:)

கைப்புள்ள said...

//Hi Kaipu,

First of all, "Happy married life". I am a big fan of yours and been a regular visitor of your blog. //
வாங்க வாங்க கிருஷ்ணகுமார். உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

//Your pics have been excellent and looks lot pro type. (Ok, odane PC Sriram, Baalu Mahendra leveluku yosikka venam). //
சே! கொஞ்சம் சந்தோஷம் பட்டுக்க விட மாட்டீங்களே
:)

//I am interested in writing in tamil. Can you help me in that? Please forward any link which will help me in this regard. my id is krishna.madras@gmail.com. FYI, I am in Bangalore now. looking forward to your response. Thanks - Krishna //

தமிழில் எழுத இ-கலப்பைங்கிற சாஃப்ட்வேர் வேணுங்க. தமிழில் எழுத ஸ்டெப் பை ஸ்டெப் என்ன பண்ணனும்னு தெரிய இந்த வலைப்பூவைப் பாருங்க

http://thamizhblog.blogspot.com/2006/09/20.html

இந்த தகவல் உபயோகமா இருந்திருக்கும்னு நம்பறேன். நன்றி.

Paavai said...

Welcome back, Congratulations

பொன்ஸ்~~Poorna said...

கைப்ஸ்,,
இங்க தான் இருக்கீங்களா?!

அந்த சூரியனைப் பார்த்தாப்புல ஒரு போட்டோவில் நிப்பீங்களே.. அதையும் போட்டியில சேர்த்துடுங்க.. வாத்தியார் சொல்லுறது மாதிரி, அதைவிட அற்புதமான போட்டோ கெடைக்கவே கெடைக்காது...

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

தல கைப்பு, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

ஏதோ உங்க பேர சொல்லி இன்னக்கி ஆரம்பிக்கிறேன். இனிமே என்னை கடவுள் தான் காப்பதணும். என்னால முடிஞ்சவரைக்கும் உங்க பேர காப்பாத்த முயற்சி பண்ணறேன்.

வணக்கம்
கிருஷ்ணா

Sridhar V said...

குதூகல திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

ராம் ஹோல்சேல்ல பூரிக்கட்டை விக்கறாப்பல. கொஞ்சம் உஷாராவே இருங்க :-))

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அந்த இரண்டாவது படத்திற்க்கு மிகவும் காத்திருக்க வேண்டி இருந்ததா? ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் எடுக்க வேண்டீ இருந்ததா?

கைப்புள்ள said...

காலந் தாழ்த்தி பதிலளிப்பதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன் நண்பர்களே!

//Welcome back, Congratulations//

வாங்க பாவை மேடம், வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

கைப்புள்ள said...

//நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு நெம்ப நன்னி வாத்தியாரே:)

//ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா போட்டிக்கு வந்த போட்டோங்க எல்லாம்?! :) //

மை இமேஜ் டோட்டல் டேமேஜ்
:(

கைப்புள்ள said...

//வாங்க வாங்க வூட்ல எல்லாம் செளக்கியமா :)//

எல்லாரும் நல்ல சௌக்கியம். அங்கன எப்படிங்ணா?
:)

கைப்புள்ள said...

//அந்த சூரியனைப் பார்த்தாப்புல ஒரு போட்டோவில் நிப்பீங்களே.. அதையும் போட்டியில சேர்த்துடுங்க.. வாத்தியார் சொல்லுறது மாதிரி, அதைவிட அற்புதமான போட்டோ கெடைக்கவே கெடைக்காது...//

வாங்க பொன்ஸ்,
நல்லாருக்கீங்களா? Public memory is shortனு சொன்ன அந்த அறிவுஜீவி மட்டும் என் கையில கெடச்சான்னு வையுங்க...ஹ்ம்ம்ம் :(
என்னா மெமரிப்பா ஒவ்வொருத்தருக்கும்?

கைப்புள்ள said...

//தல கைப்பு, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

ஏதோ உங்க பேர சொல்லி இன்னக்கி ஆரம்பிக்கிறேன். இனிமே என்னை கடவுள் தான் காப்பதணும். என்னால முடிஞ்சவரைக்கும் உங்க பேர காப்பாத்த முயற்சி பண்ணறேன்.

வணக்கம்
கிருஷ்ணா //

நன்னி சொன்னதுக்கு நன்றிங்க கிருஷ். ரைட்டு ஸ்டார்ட் தி மீஜிக்.
:)

கைப்புள்ள said...

//குதூகல திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்.


//ராம் ஹோல்சேல்ல பூரிக்கட்டை விக்கறாப்பல. கொஞ்சம் உஷாராவே இருங்க :-))//
அவருக்கென்ன இப்ப எல்லாம் தான் விப்பாரு...அவருக்குன்னு வரும் போது தானே தெரியும்?

//படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அந்த இரண்டாவது படத்திற்க்கு மிகவும் காத்திருக்க வேண்டி இருந்ததா? ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் எடுக்க வேண்டீ இருந்ததா?//
உண்மையில் உங்களுக்கு உடனே பதிலளிக்க முடிய வில்லையே என வருந்துகிறேன். இது போல யாராவது ஆர்வமாக கேட்பார்களா என்று பல முறை ஏங்கியதுண்டு. கிட்டத் தட்ட ஒன்னரை மணி நேரம் அந்த ஏரியில் ஒரு சிறிய படகில் சுற்றிப் பிடித்த படம் இது. நீங்கள் சொல்வது மிகச் சரி. மிகவும் பொறுமையாக பறவைகளை பயமுறுத்தாமல் வெகுதூரத்திலிருந்து வெகு நேரம் காத்திருந்து எடுத்த படங்களிலிருந்து ஒன்று தான் அது. கிட்டத்தட்ட 100 மீ தூரத்திலிருந்து எடுத்ததால் கேமராவின் ஆப்டிகல் ஜூமை உபயோகப்படுத்த வேண்டி இருந்தது.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீதர்.