01.01.2000-2004 : புது தில்லி
01.01.2005-2006 : இந்தூர்
01.01.2007 : அகமதாபாத்
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிச்சிக்கறது என்னன்னா, கடந்த ஏழாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 'வடக்கப் பாக்க' நம்ம புத்தாண்டு அமைஞ்சு போச்சுங்க. ஒன்னாம் தேதி வேலை நாள்ங்கிறதாலே 'ஒன்னாம் தேதி கூட ஆபிஸ் வந்து கடமை கருப்பசாமியா வேலை செய்யறான்பா'ன்னு புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஃபோன் செஞ்சவங்க கிட்டேருந்து ஒரு நல்ல பேரு, ஒரு சர்டிபிகேட் ...ஒரு...ஒரு...பரிதாபம்...ஒரு...ஒரு...பச்சாதாபம் (எப்படி வேணா வச்சிக்கலாம்) இதெல்லாம் கெடச்சதுங்க. அதை தவிர்த்து கொட்டாய்ல தான் பாக்க முடியலை, ஓசியிலே டிவியிலயாச்சும் பாக்கலாம்னு நெனச்சி வச்சிருந்த 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' கூட பாக்க முடியாம...அட சன் டிவி பக்கமே தலை வைக்க முடியாம, எல்லா நாளையும் போலத் தான் போச்சு புத்தாண்டு நாள். ஆனாலும் 2006 ஆம் ஆண்டின் கடைசி நாள் செம சூப்பரா அமைஞ்சதுங்க. இதுக்கு முன்னாடி நினைவு வச்சிக்கிற மாதிரி அமைஞ்ச டிசம்பர் 31ன்னு பாத்தா, 1994ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்னிக்குச் சென்னை தேவி தியேட்டரில் சாயங்கால ஆட்டம் பாத்த 'தேவர் மகன்' படத்தைச் சொல்லலாம். படத்தைப் பாத்துட்டுத் திரும்ப வரும் போது என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங் தான் போங்க. அங்கேருந்து வேகமா ஃபாஸ்ட் பார்வர்டு செஞ்சி ஒரு 'ட்வெல்வ் இயர்ஸ்' ஓட்டுனா இந்தப் பதிவோட சிச்சுவேசனான 31 டிசம்பர் 2006 வருதுங்க. இந்த வட்டம் தலையைச் சீவற ஃபீலிங் எல்லாம் வரலைன்னாலும் மனதில் சந்தோஷச் சீவல்களைச் சில்லறையாய் சிதறச் செய்தச் சில்லென்ற டிசம்பர் மாத அந்திப் பொழுதா அமைஞ்சதுங்க அது.
பில்டப்பு போதுங்க...மேட்டர் என்னன்னா முப்பத்தொன்னாம் தேதி வடக்கு அகமதாபாத்ல இருக்கற காங்கரியா ஏரிக்கு(Kankaria Lake), நானும் என்னோட தமிழ் நண்பரும் போனோம்ங்க. சும்மா என்ன தான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்னு போனது, பல தரப்பட்ட அனுபவங்களை ஒரே மாலைப் பொழுதில் ஒரு நான்கு-ஐந்து மணி நேரத்துக்குள் தருவதாக அமைஞ்சது.
காங்கரியா ஏரி இருக்கறது, நாங்க இருக்கற எடத்துலேருந்து ஒரு 15 கி.மீ.தூரத்துல. வீட்டுலேருந்து ஆட்டோல போறப்ப, வண்ணம் தீட்டுன யானையைப் படம் புடிக்கலாம்னு ஓடற ஆட்டோலேருந்து அவசர அவசரமா ஃபோகஸ் பண்ணி எடுத்த படம்.
ஜனவரி 14 நாடெங்கும் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப் படுகிறது. எப்போதும் நம்ம பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரே நாள்ல தான் வரும். ஆனா இந்த வாட்டி மகர சங்கராந்தி பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்துடுச்சு. மகர சங்கராந்தி அன்னிக்கு இந்தப் பக்கம் பின்பற்றப்படுகிற சடங்கு/வழக்கம் அப்படின்னு பாத்தா அது பட்டம் விடறதுங்க. போன பொங்கலுக்கு ஐதராபாத் போயிருந்த போதும் இதப் பாக்க முடிஞ்சது. தீபாவளிக்குப் பட்டாசு கடை போல இந்தப் பக்கம் எல்லாம் கீழே பாக்கற மாதிரி அங்கங்கே 'பட்டம்' விக்கிற கடைங்க முளைச்சுடுது.
பட்டம் விடற நூலுக்காக 'மாஞ்சா' போடறாங்க.
காங்கரியா ஏரியில் 'புலி'யுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் குழந்தைகள். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
ஏரியில் சூரியன் மறையும் ஒரு சில்ஹுவெட் படம்.
இன்னொரு சில்ஹுவெட் படம். க்ளிக் செஞ்சு பாத்தீங்கன்னா படம் பெருசாத் தெரியும். இந்தப் படம் மட்டுமில்ல...எல்லாப் படங்களுமே.
மேற்கு பக்கத்தில் சில்ஹுவெட். கிழக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஏரியின் நடுவில் ஒரு ஃபவுண்டேனும், படகுகளும். நாங்களும் தோணியிலே ஏரியைச் சுத்தி ஒரு ரவுண்டு போனோம்.
மரத்தின் மீது அமர்ந்திருக்கும் கார்மரண்ட்(Cormorant) பறவைகள். இந்த வகை பறவைகளை இதற்கு முன் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் எதோ ஒரு வித்தியாசமான பறவை தான், அநேகமாக குளிர்காலத்தில் இனப் பெருக்கத்திற்காக வேற்று கண்டங்களுக்கு வரும் 'migratory' பறவைகளாக இருக்கக் கூடும் என்று படம் பிடித்துத் தள்ளினேன்.
மேற்கு புறம் திரும்பியதும், ஏரியில் ஒரு கொம்பின் மீது அமர்ந்திருந்த ஒரு கார்மரண்ட் குடும்பம்.
கார்மரண்ட் பறவை பற்றித் தெரிந்து கொள்ள விகிபீடியாவைப் பார்த்ததில் அறிந்து கொண்டது : குளிர்காலத்தில் இடம் பெயரும் பறவைகள் ஆனாலும் கார்மரண்டு பறவைகள் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இப்பறவைகளை மீன்களைப் பிடித்து வரப் பழக்குவார்களாம். மீனை கார்மரண்ட் விழுங்கி விடாமல் இருக்க அதன் கழுத்தில் ஒரு வளையத்தை அணிவிப்பார்களாம்.
ஒன்பது மீட்டர் ஆழம் வரை மூழ்கி அருமையாக மீன் பிடிக்குமாம் இப்பறவை. படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால், ஒரு கார்மரண்ட் நீரில் நீந்துவதைக் காணலாம்.
வாத்து போல நீந்தினாலும், மிக அருமையாகப் பறக்கவும் செய்யுமாம் கார்மரண்ட். இப்பறவையின் அறிவியல் பெயரான 'Phalocrocorax என்பதன் பொருள் லத்தீன் மொழியில் 'நீர் காகம்'(Water Raven) என்பதாகும்.
இறக்கைகளை விரித்து காற்றில் உலர்த்தும் பழக்கத்தினை உடையது கார்மரண்ட். விகிபீடியாவில் எழுதியிருந்தது போலவே இறக்கை விரித்து படம் பிடிக்கக் கார்மரண்ட் பறவை போஸ் கொடுத்ததும் நம் அதிருஷ்டம் என்றே கொள்ள வேண்டும்.
கார்மரண்ட்களைப் போதும் போதும் எனும் அளவிற்குப் படம் எடுத்துவிட்டு அங்கேயே நடைபெற்ற ஒலி-ஒளி லேசர் கண்காட்சியையும் கண்டுகளித்தோம்.
காங்கரியா ஏரிக்கு எதிரிலேயே ஒரு மீன் கண்காட்சியகம் இருந்தது. அங்கே எடுத்த சில படங்கள் கீழே. மீன் பெயரைச் சரியாகக் கவனிக்கவில்லை.
உதட்டழகி. பேர் தெரியாததால் இந்த சப்பை கட்டு.
கேமராவின் ஃபிளாஷை நிறுத்தாததால் பாழான பல படங்களில் இதுவும் ஒன்று. பிரன்ஹா(Piranha) என்று பெயர் இடப் பட்டிருந்தது இந்த மீன் தொட்டியின் மீது. பிரன்ஹா ஆளைக் கடிக்கிற ஒரு முரட்டு மீனுன்னு கேள்வி பட்டுருக்கேன். ஆனா இதைப் பாத்தா அப்படி எதுவும் தெரியலை இல்லை?
இது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச தங்க மீன். தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தப் பெயர் பலகையில் இருந்த பெயர் 'Bubble eyed Gold fish'.
இப்படியாக யானை, பட்டம், மாஞ்சா, குழந்தைகள், கார்மரண்ட், ஏரி, ஒலி-ஒளி, மீன் கண்காட்சி அப்படின்னு பலவிதமான அனுபவங்களோடு செவிக்கும் விழிக்கும் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு மாலை பொழுதாக அமைஞ்சதுங்க 31 டிசம்பர் 2006.
(பி.கு : New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.)
Thursday, January 04, 2007
கார்மரண்டுகளுடன் புதுவருட ஏவாள்
Subscribe to:
Post Comments (Atom)
75 comments:
சூப்பர் பதிவு தல...
பேசாம நம்ம சன் டீவில வர விஜயசாததிக்கு பதிலா உங்கள போட்டுடலாம்... நல்லா ஊர் சுத்தி காட்டறீங்க ;)
//சூப்பர் பதிவு தல...//
ரொம்ப டேங்கீஸ்பா பாலாஜி.
//பேசாம நம்ம சன் டீவில வர விஜயசாததிக்கு பதிலா உங்கள போட்டுடலாம்... நல்லா ஊர் சுத்தி காட்டறீங்க ;)//
ஹி...ஹி...டக்குன்னு பாக்கும் போது விஜயசாந்தி மாதிரி இருந்துச்சு. பயந்துட்டேன். ஆனா எனக்குப் பின்னாடி நடந்துக்கிட்டே ஒரே மூச்சுல தம் பிடிச்சு பேச வராதே?
:)
வழக்கம்போல படங்களப்போட்டு கலக்கலா ஊர் சுத்திக்காமிச்சிட்டீங்க...
நல்ல பதிவு.
//
என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங்
//
அது தானே,தேவர்மவனப் பாத்துட்டு ஒரு கொல வெறி கூட வரலேனா எப்பிடி... :)
//
'புதுவருட ஏவாள்'
//
சான்ஸேயில்ல... என்னமா யோசிக்கிறாய்ங்க :)
//வழக்கம்போல படங்களப்போட்டு கலக்கலா ஊர் சுத்திக்காமிச்சிட்டீங்க...
நல்ல பதிவு//
வாங்க அருண்,
டேங்ஸுங்கோ.
//
என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங்
//
அது தானே,தேவர்மவனப் பாத்துட்டு ஒரு கொல வெறி கூட வரலேனா எப்பிடி... :)//
ஹி...ஹி...அடுத்த புத்தாண்டு வேலூர் ஜெயில்ல பாக்க ஆசைன்னா அதை கூட பண்ணிப் பாக்கலாம்.
//
'புதுவருட ஏவாள்'
//
சான்ஸேயில்ல... என்னமா யோசிக்கிறாய்ங்க :)//
"எய்தவன் எங்கோ இருக்க....". உண்மையில மொழிபெயர்த்து குடுத்த புண்ணியவானைத் தான் பாராட்டனும்.
:D
போட்டோவெல்லாம் சூப்பரு தலை..
யானை. மீன். காக்கா. அப்புறம் அது என்ன கார் மண்டு..
யப்பா ஒரே டிஸ்கவரி சேனல் எஃபக்ட்..
ஏரி தெரிஞ்சுகிட்டேன்..சில்ஹுவெட் பார்த்துப்புட்டேன் கண்மணி என் கண்மணி!
கார்மரண்டு புரிஞ்சுடுச்சு!போட்டோல ப்ளாஷ்லைட் தெரிஞ்சுடுச்சு கண்மணி என் கண்மணி!
;)
ஒன்னாம் தேதி கூட உன்னை ஆணி புடுங்கவிட்டவனுங்கள சும்மா விடக்கூடாது தல :)
//போட்டோவெல்லாம் சூப்பரு தலை..//
ரண்டி பிளேடு காரு. பாகுன்னாரா? வாழ்த்துலுக்கு டேங்ஸுலு.
:)
//யானை. மீன். காக்கா. அப்புறம் அது என்ன கார் மண்டு..//
கார் மண்டும் இல்ல பஸ் மண்டும் இல்லை...அது கார்மரண்ட். ஃபாரின் காக்கான்னு வச்சிக்கலாம்.
:)
//யப்பா ஒரே டிஸ்கவரி சேனல் எஃபக்ட்...//
ஹி...ஹி...எல்லாம் வயித்துப் பொழப்புக்காகத் தான்.
:)
//ஏரி தெரிஞ்சுகிட்டேன்..சில்ஹுவெட் பார்த்துப்புட்டேன் கண்மணி என் கண்மணி!
கார்மரண்டு புரிஞ்சுடுச்சு!போட்டோல ப்ளாஷ்லைட் தெரிஞ்சுடுச்சு கண்மணி என் கண்மணி!
;)//
படிக்காதவன்னு ப்ரூவ் பண்ணிட்டேப்பா கப்பி...அடுத்தது படிக்காத மேதையா?
:)
//வீட்டுலேருந்து ஆட்டோல போறப்ப, வண்ணம் தீட்டுன யானையைப் படம் புடிக்கலாம்னு ஓடற ஆட்டோலேருந்து அவசர அவசரமா ஃபோகஸ் பண்ணி எடுத்த படம்.//
அதாவது யானையை விட்டுப்புட்டு பின்னாடி இருக்கும் ஆளையும் காரையும் போகஸ் பண்ணி எடுத்த படம் அப்படின்னு சொல்லுங்க!!!! :)))
//ஒன்னாம் தேதி கூட உன்னை ஆணி புடுங்கவிட்டவனுங்கள சும்மா விடக்கூடாது தல :)//
நீயே வந்து இந்த நியாயத்தைக் கேளுப்பா கப்பி. நீ புடுங்கறதே தேவையில்லாத ஆணி தான்...இதுல ஒன்னாம் தேதி என்ன ஒன்பதாம் தேதி என்னன்னு குறுக்கு கேள்வி கேக்கறாய்ங்கப்பா.
:(
கைப்பு உன் படங்கள் அருமையா இருக்குப்பா.. குறிப்பா ஏரி சில் அவுட் படங்கள்... நீ போஸ் கொடுத்த அந்த பழைய சில் அவுட் படமும் நினைப்பு வருதுப்பா:)
அனந்த விகடனுக்கு வேலைக்கு சேருங்கள்.....kaipullai sir...இல்லைனா சினிமாவில சேருங்க...அருமை......????? அருமை....oru small blog irundhum ungaluku anomonys la adikavendiya sulnilai mr kai....... pullai.
//அதாவது யானையை விட்டுப்புட்டு பின்னாடி இருக்கும் ஆளையும் காரையும் போகஸ் பண்ணி எடுத்த படம் அப்படின்னு சொல்லுங்க!!!! :)))//
ஹி...ஹி...வாங்க கொத்ஸ். யானைக்குக் குறி வச்சதுல ஆளும் காரும் தானா வந்து மாட்டிக்கிட்டாங்க.
:)
//கைப்பு உன் படங்கள் அருமையா இருக்குப்பா.. குறிப்பா ஏரி சில் அவுட் படங்கள்... நீ போஸ் கொடுத்த அந்த பழைய சில் அவுட் படமும் நினைப்பு வருதுப்பா:) //
வாப்பா தேவு,
டேங்ஸ்பா. பழசை நான் மறந்தாலும் நீங்கல்லாம் மறக்க மாட்டீங்க போலிருக்கு. நல்லாருந்தா சரி தான்.
:)
//அனந்த விகடனுக்கு வேலைக்கு சேருங்கள்.....kaipullai sir...இல்லைனா சினிமாவில சேருங்க...அருமை......????? அருமை....oru small blog irundhum ungaluku anomonys la adikavendiya sulnilai mr kai....... pullai. //
வாங்க அனானி,
வந்து பாத்துட்டு கருத்து சொன்னதுக்கு நன்றிங்க. ஆனா ஆனந்த விகடன் எல்லாம் நம்ம லெவலுக்கு ரொம்ப அதிகம்னு நெனக்கிறேன். ஏங்க உங்க ப்ளாக் பீட்டா பிரச்சனைல மாட்டிக்கிச்சா என்ன? அப்படின்னா தமிழ்மண முகப்புலயே பொன்ஸ் உதவிக்கரம் நீட்டிருக்காங்க படிச்சிப் பாருங்க.
தல,
படமெல்லாம் சூப்பரா இருக்கு. அத விட ஒன்னோட கமெண்டரி'தான் சூப்பரப்பு.
போர்வாள் சொன்னது மாதிரி ஒன்னோட பழைய சில்-அவுட் போட்டோ'தான் இன்னிக்கு வரைக்கும் டாப் சூப்பர்.
யார் இந்த ஏவாள்னு நான் கேட்க மாட்டேன். எனக்குத் தான் தெரியுமே!:D
அப்புறம், அஹமதாபாத்திலே நான் இருந்தது சும்மா ஊர் சுத்திப் பார்க்க ஒரு 2,3 நாள் தான். இந்த ஏரி எல்லாம் அப்போப் பார்க்க முடியலை. இன்னொரு முறை வந்தாப் பார்க்கலாம். சபர்மதி ஆசிரமம் தான் போனோம். அங்கேயே நேரம் சரியாப் போச்சு, அப்புறம் சில கோவில்கள். அங்கே பக்கத்திலே 2, 3 மணி நேரத்தில் "அம்பாஜி" கோவில் இருக்கு. கட்டாயம் போயிட்டு வாங்க. 51 சக்திபீடங்களையும் இந்த ஒரே இடத்தில் பிண்டி ரூபத்தில் தரிசிக்கலாம் என்பார்கள். "பிண்டி ரூபம்" லிங்க ரூபம் மாதிரி உருவமற்ற அருவம். நாங்க இன்னும் போகலை. அங்கே வந்தால் கட்டாயம் போகணும்னு இருக்கோம். பார்க்கலாம்.
நல்ல snaps. படங்கள் எல்லாம் போட்டு கலக்கறீங்க! புது வருடத்தில் இன்னும் நிறைய இடங்களைப் பார்த்து, cameraவுக்குள் அடக்கி எங்களுக்கு தரவும்!
- தீக்ஷ்
//படமெல்லாம் சூப்பரா இருக்கு. அத விட ஒன்னோட கமெண்டரி'தான் சூப்பரப்பு.//
ரொம்ப டாங்கீஸ்பா ராயலு.
//போர்வாள் சொன்னது மாதிரி ஒன்னோட பழைய சில்-அவுட் போட்டோ'தான் இன்னிக்கு வரைக்கும் டாப் சூப்பர்//
அட பாவிங்களா! ஒரு மனுஷனோட ஹிஸ்டரியை ஞாபகப் படுத்தி அவனை அழ வைக்கிறது தான் உங்க வேலையா?
:(
//யார் இந்த ஏவாள்னு நான் கேட்க மாட்டேன். எனக்குத் தான் தெரியுமே!:D//
அது என்ன நீங்க கண்டுபுடிச்ச மாதிரி ஒரு பந்தா? நானே தான் சொல்லிருக்கேனே...புது வருட நங்கையான New Year Eveஐ தான் தெற்கு ஹெமிஸ்பியரில் உக்காந்திருக்கும் ஒரு பன்மொழி வித்தகர் அப்படி சொன்னாருன்னு?
:)
//
அப்புறம், அஹமதாபாத்திலே நான் இருந்தது சும்மா ஊர் சுத்திப் பார்க்க ஒரு 2,3 நாள் தான். இந்த ஏரி எல்லாம் அப்போப் பார்க்க முடியலை. இன்னொரு முறை வந்தாப் பார்க்கலாம். சபர்மதி ஆசிரமம் தான் போனோம். அங்கேயே நேரம் சரியாப் போச்சு, அப்புறம் சில கோவில்கள். அங்கே பக்கத்திலே 2, 3 மணி நேரத்தில் "அம்பாஜி" கோவில் இருக்கு. கட்டாயம் போயிட்டு வாங்க. 51 சக்திபீடங்களையும் இந்த ஒரே இடத்தில் பிண்டி ரூபத்தில் தரிசிக்கலாம் என்பார்கள். "பிண்டி ரூபம்" லிங்க ரூபம் மாதிரி உருவமற்ற அருவம். நாங்க இன்னும் போகலை. அங்கே வந்தால் கட்டாயம் போகணும்னு இருக்கோம். பார்க்கலாம். //
தலைவிஜி...உங்க கிட்ட புடிச்சதே உங்க நினைவுகளையும் விரிவாப் பகிர்ந்துகிட்டு சந்தோஷப் படுத்தறீங்க பாருங்க...அது தான். நீங்க சொன்ன இடங்களையும் பார்க்க முயற்சிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//நல்ல snaps. படங்கள் எல்லாம் போட்டு கலக்கறீங்க! புது வருடத்தில் இன்னும் நிறைய இடங்களைப் பார்த்து, cameraவுக்குள் அடக்கி எங்களுக்கு தரவும்!
- தீக்ஷ் //
வாங்க தீக்ஷ்,
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
//அட பாவிங்களா! ஒரு மனுஷனோட ஹிஸ்டரியை ஞாபகப் படுத்தி அவனை அழ வைக்கிறது தான் உங்க வேலையா?//
என்ன தல இப்பிடி சொல்லிட்டே??
நீதானே வரலாறு முக்கியமின்னு சொன்ன ஆளு?? இப்போ மாத்தி பேசினா என்னா ஆவுறது???
;)
Hi KP
Coming here after some time. Feel bad about missing it.
Fabulous photos and informative description. Thanks and wish you a happy new year
Cheers
SLN
தல!!!
Wish you and your family a happy new year !!!
படங்கள் சூப்பர்!! வர்ணணை அத விட சூப்பர்!! என்ன ஒரு சின்ன வருத்தமனா .... எல்லாதையும் படம் பிடிச்ச நீங்க நம்ப முன்னோர்களை படம் பிடிச்சு போடலியே!!!
படங்கள் அனைத்தும் அருமை மோகன். ஆனால் அனைத்து படத்தையும் ஒரே பதிவா போடுவதால் லோட் ஆக ரொம்ப லேட்டாகுது. கடைசி சில படங்கள் வரவில்லை. கிராஸ் மார்க் தான் வரது. பிறகு தனியாக திறந்து பாக்க வேண்டியது இருக்கு.
//பி.கு : New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.) //
சத்தியமா கேட்க மாட்டோம். இது மாதிரி எல்லாம் யோசிக்க யாரால முடியும் எங்களுக்கு நல்லாவே தெரியும்.
தல ஐ அக்ரீ வித் வெட்டி....நம்ம ஊர்ல இப்படி எல்லாம் அருமையான இடங்கள் இருக்குனு நிறைய பேருக்கு தெரியாமயே இருக்கு...இதுவே இங்க அமெரிக்கால இவனுக ஹிஸ்டாரிக்கல்,ஜியாகரபிக்கல் னு செமயா விளம்பரம் பண்ணி ஊர கூட்டிடுவாங்க.... :-)
சின்ன வயசுல இருந்தே படம் வரஞ்சு பாகம் குறிக்கறதுல கெட்டி தல நீயி...
:-)
தலைப்பைப் பார்த்து பயந்துபோய்த் தான் ரெண்டு நாளா இந்தப்பக்கமே தலைகாட்டல, தெரியுமா? ஏதோ நமக்குப் புரியாத பதிவா இருக்குமோன்னு தான்.. வேறென்ன! பறவையைப் பத்தி விசயங்கள் தெரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம் தான் உஸ்ஸ்ஸ் அப்பாடான்னு இதுக்கா பயந்துபோனோம்னு இருக்கு.
//New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.)//
கிள்ளி ரைட்டுன்னா என்ன? ஆனாலும் தமிழ் மொழிபெயர்ப்பு தெரியாததையும் தெரிஞ்சிக்கிட்டு தமிழிலேயே எழுதணும்னு நினைக்கிற உங்க எண்ணத்தை நிச்சயம் வாழ்த்தணும்.
//ஒன்னோட பழைய சில்-அவுட் போட்டோ'தான் இன்னிக்கு வரைக்கும் டாப் சூப்பர்//
ரெண்டு பேர் இந்தப் பழைய படத்தை ரொம்ப சிலாகிச்சுப் பேசிட்டாங்களே.. நான் பார்க்கல, அதனால லிங்க் ப்ளீஸ்!
கலக்கல் படங்கள் தல, சில்ஹவுட் படங்கள் குறிப்பாக...
என்ன காமிரா தல யூஸ் பண்றீங்க...
Maamu... nalla posting daa... kalakitta po... Aanaalum Devar magan paathuttu nee appadi feel panninadha en kitta irundu marachitta... Gowthamiya pathiyum rendu vaarthai pugazhndhu paesi irukkalaam... Anyway, nall posting machi...
மொதல்ல சலாம் போட்டுக்றேன்..அப்பாலிக்கா வந்து ரெகுலரா ஆட்டைல கலந்துக்றேன்
ஏதோ கைப்புள்ளனு பேர் வச்சிறருக்காரே அடிக்கடி உதார் வுட்டு ஆப்பு வாங்கரதையே தொழிலா கொண்டவர் போலன்னு neனச்சேன்.பிறகு"சிலசமயம் எடுப்பார் கைப்புள்ள"ன்னு சொன்neங்க...அதெல்லாம் சும்மா.neங்க நல்ல விஷயங்களை பக்குவமா எடுத்து சொல்லும் எங்கள் அன்பு "கிளிப்புள்ள"
சுப்பர் படங்கள்!!
என்னமோ ஒன்னுமே இல்லாட்டியும் எனக்கும் அகமதாபாத் ரொம்ப பிடிக்கும். அதுவும் அங்கு கிடைக்கும் சாப்பாடு ரொம்பவே பிடிக்கும். இரண்டு தடவை போயிருக்கிறேன். மே மாதம் ஒரு தரம் போய் அடித்த வெய்யிலில் மூக்கிலிருந்து ரத்தம் வந்து விட்டது.
//என்ன தல இப்பிடி சொல்லிட்டே??
நீதானே வரலாறு முக்கியமின்னு சொன்ன ஆளு?? இப்போ மாத்தி பேசினா என்னா ஆவுறது???
;) //
ஏலே ராயல்! நான் எப்போ சொன்னேன்? என்ன இது சின்னப்பில்லத் தனமா?
//Hi KP
Coming here after some time. Feel bad about missing it.
Fabulous photos and informative description. Thanks and wish you a happy new year
Cheers
SLN //
வாங்க SLN,
உங்க வருகைக்கு மிக்க நன்றி. வருத்தப்பட என்னங்க இருக்கு? நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்க. உங்க பின்னூட்டத்தைப் பாத்து சந்தோஷமா இருந்துச்சு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
//தல!!!
Wish you and your family a happy new year !!!
படங்கள் சூப்பர்!! வர்ணணை அத விட சூப்பர்!! என்ன ஒரு சின்ன வருத்தமனா .... எல்லாதையும் படம் பிடிச்ச நீங்க நம்ப முன்னோர்களை படம் பிடிச்சு போடலியே!!! //
வாங்க சுதா,
ரொம்ப நன்றி. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
என்னங்க பண்ணறது? ஏரியைச் சுத்தி நம்ம முன்னோர்கள் யாரும் காணக் கெடக்கலையே? கெடைச்சிருந்தா கண்டிப்பா படம் புடிச்சிருப்பேன்.
:)
//படங்கள் அனைத்தும் அருமை மோகன். ஆனால் அனைத்து படத்தையும் ஒரே பதிவா போடுவதால் லோட் ஆக ரொம்ப லேட்டாகுது. கடைசி சில படங்கள் வரவில்லை. கிராஸ் மார்க் தான் வரது. பிறகு தனியாக திறந்து பாக்க வேண்டியது இருக்கு.//
ரொம்ப நன்றி சிவா. அடுத்த பதிவுகள்ல முடிஞ்ச வரைக்கும் இதை சரி செய்ய முயற்சிக்கறேன்.
:)
//சத்தியமா கேட்க மாட்டோம். இது மாதிரி எல்லாம் யோசிக்க யாரால முடியும் எங்களுக்கு நல்லாவே தெரியும். //
ரைட்டேய்ய்ய்ய்...புலி சொன்னா சரி தான்.
:)
//தல ஐ அக்ரீ வித் வெட்டி....நம்ம ஊர்ல இப்படி எல்லாம் அருமையான இடங்கள் இருக்குனு நிறைய பேருக்கு தெரியாமயே இருக்கு...இதுவே இங்க அமெரிக்கால இவனுக ஹிஸ்டாரிக்கல்,ஜியாகரபிக்கல் னு செமயா விளம்பரம் பண்ணி ஊர கூட்டிடுவாங்க.... :-)//
வாங்க 12பி,
உண்மை தாங்க. இந்தியாவுலே நாம தெரிஞ்சிக்க இன்னும் நெறைய இடம் இருக்கு. ஆனா அமெரிக்கா காரங்க அளவுக்கு நம்ம ஊருல இந்த மாதிரி சுற்றுலா தலங்கள்ல பராமரிப்பு இருக்காது. அதனால நம்ம ஆளுங்க ஊரைக் கூட்டறது இல்லைன்னு நெனக்கிறேன்.
:)
//சின்ன வயசுல இருந்தே படம் வரஞ்சு பாகம் குறிக்கறதுல கெட்டி தல நீயி...
:-) //
ஹி...ஹி...பல தடவை 'redraw' வாங்குன அனுபவமும் உண்டு. எலி வரைஞ்சு தவளை மாதிரி போனதும் உண்டு.
:)
//தலைப்பைப் பார்த்து பயந்துபோய்த் தான் ரெண்டு நாளா இந்தப்பக்கமே தலைகாட்டல, தெரியுமா? ஏதோ நமக்குப் புரியாத பதிவா இருக்குமோன்னு தான்.. வேறென்ன! பறவையைப் பத்தி விசயங்கள் தெரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம் தான் உஸ்ஸ்ஸ் அப்பாடான்னு இதுக்கா பயந்துபோனோம்னு இருக்கு//
தலைப்பைப் பாத்து பயப்படலாமா? நம்ம கிட்ட எல்லாம் பிலிம் காட்டற விஷயம் தான் இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?
:)
//கிள்ளி ரைட்டுன்னா என்ன? ஆனாலும் தமிழ் மொழிபெயர்ப்பு தெரியாததையும் தெரிஞ்சிக்கிட்டு தமிழிலேயே எழுதணும்னு நினைக்கிற உங்க எண்ணத்தை நிச்சயம் வாழ்த்தணும்.//
சின்ன வயசுல ஸ்கூல்ல காட் ப்ராமிஸ் யாராச்சும் போடச் சொன்னா கையில ஒரு தடவை சத்தியம் பண்ணனும், அதுக்கப்புறம் ஒரு டபுள் கன்ஃபர்மேஷனுக்கு யாருக்கு சத்தியம் பண்ணித் தரோமோ அவங்க உள்ளங்கையில் ஒரு கிள்ளு கிள்ளிட்டு நம்ம விரலாலேயே ஒரு ரைட்டு போடணும்(டிக் போடனும் - அதாவது டிக் மாதிரி வரையனும்). அதாவது நாம பண்ணற காட் ப்ராமிஸை எக்காரணத்தைக் கொண்டும் மீற மாட்டோம்னு சத்தியம் பண்ணிக் குடுக்கறவங்களுக்கு ஒரு உத்தரவாதம்னு வச்சிக்கலாம். சத்தியம் வாங்கறவனுக்கு நீங்க சத்தியத்தை மீறிடுவீங்களோன்னு ஒரு சின்ன டவுட் வந்தா "டேய் நில்லு! கிள்ளி ரைட்டு போட்டுட்டு போ"னு சொல்ல வாய்ப்பிருக்கு. இப்ப புரியுதா...நான் பண்ணிக் குடுத்த சத்தியத்தோட ஃபவர்?
:)
//ரெண்டு பேர் இந்தப் பழைய படத்தை ரொம்ப சிலாகிச்சுப் பேசிட்டாங்களே.. நான் பார்க்கல, அதனால லிங்க் ப்ளீஸ்!//
ஐயோ...ஐயோ! சொந்த செலவுல சூனியம் வச்சிக்க என்கிட்டவே நேரடியாச் சொல்றீங்க. ஹ்ம்ம்...ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்னு அவ்வையார் சும்மாவாச் சொன்னாங்க. இந்தாங்க லிங்க் :(
http://kaipullai.blogspot.com/2006/03/blog-post_11.html
//கலக்கல் படங்கள் தல, சில்ஹவுட் படங்கள் குறிப்பாக...
//
ஆகா! ஒளி ஓவியரே பாராட்டிருக்காரு. அடியேன் தன்யனானேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
//என்ன காமிரா தல யூஸ் பண்றீங்க... //
பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா தான். குழல் திருப்பற கேமரா வச்சி படம் புடிக்கணும்னு ஆசை தான். ஆனா ஆனை வெலை குதுரை வெலை இல்ல விக்குது? அதோட நெறைய படிக்கணும் அதெல்லாம் உபயோகிக்க. என்கிட்ட இருக்கறது Canaon Digital Ixus 750.
//Maamu... nalla posting daa... kalakitta po... Aanaalum Devar magan paathuttu nee appadi feel panninadha en kitta irundu marachitta... Gowthamiya pathiyum rendu vaarthai pugazhndhu paesi irukkalaam... Anyway, nall posting machi... //
டேய்!
ஆனாலும் இதெல்லாம் ஓவரு சொல்லிட்டேன். என்னோட சின்ன வயசுக்கு எதோ அசின், பாவ்னா இவுங்க பேரைச் சொல்லிருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன். உன்னோட கமெண்டை நான் வன்மையா கண்டிக்கிறேன்...ஆனா ரொம்ப நல்லவன்னு வேற சொல்லிட்டே...அதனால பொழச்சிப் போ.
:)
//ஏதோ கைப்புள்ளனு பேர் வச்சிறருக்காரே அடிக்கடி உதார் வுட்டு ஆப்பு வாங்கரதையே தொழிலா கொண்டவர் போலன்னு neனச்சேன்.பிறகு"சிலசமயம் எடுப்பார் கைப்புள்ள"ன்னு சொன்neங்க...அதெல்லாம் சும்மா.neங்க நல்ல விஷயங்களை பக்குவமா எடுத்து சொல்லும் எங்கள் அன்பு "கிளிப்புள்ள"//
வாங்க அபிஅப்பா,
உங்க பேரு ரொம்ப வித்தியாசமா இருக்குங்க. கோலங்கள் சீரியல் பாத்து வச்சிக்கிட்ட பேரா...இல்ல வேற எதாவது காரணப்பேரா? :)
ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க. நம்ம பதிவுகள்லாம் எப்படின்னு படிச்சிட்டு ஒரு வார்த்தை சொல்லுங்க.
//சுப்பர் படங்கள்!!
என்னமோ ஒன்னுமே இல்லாட்டியும் எனக்கும் அகமதாபாத் ரொம்ப பிடிக்கும். அதுவும் அங்கு கிடைக்கும் சாப்பாடு ரொம்பவே பிடிக்கும். இரண்டு தடவை போயிருக்கிறேன்.//
வாங்க டுபுக்கு சார்,
நீங்க அகமதாபாத் போன கதை தான் தெரியுமே :) நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சு மும்பைல இருந்தவங்க எல்லாம் வீட்டைப் பூட்டிட்டு கெளம்பி போனதும் அப்புறம் நீங்க அகமதாபாத் போனதையும் தான் நான் உங்க ஆர்க்கைவ்ஸைத் தோண்டி படிச்சிருக்கேனே? அடைக்கலம் குடுத்த ஊராச்சே? புடிக்காம இருக்குமா?
:)))
// மே மாதம் ஒரு தரம் போய் அடித்த வெய்யிலில் மூக்கிலிருந்து ரத்தம் வந்து விட்டது. //
ஐயோ! ரொம்ப பயமுறுத்தறீங்களே? இப்போ குளிர் காலம் அதுனால நல்லாருக்கு. நானும் இங்கே மே மாசம் வரைக்கும் இருப்பேன். வெயிலை எப்படி சமாளிக்கப் போறேன்னு நெனச்சாத் தான் பயமாயிருக்கு.
//கோலங்கள் சீரியல் பாத்து வச்சிக்கிட்ட பேரா...//
கைப்ஸ்.. உங்களுக்கு ஆனாலும்.......!! பாவம் அபி அப்பா.
//கைப்ஸ்.. உங்களுக்கு ஆனாலும்.......!! பாவம் அபி அப்பா.//
ஐயயோ...நீங்க சொல்றதைப் பாத்தா எதோ தப்பா கேட்டுட்டேன் போலிருக்கே. அபி அப்பா சார்...நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நான் தெரியாம தான் கேட்டேன். சாரி.
நீங்க தப்பா எல்லாம் கேட்கல. எனக்கு பயங்கர சிரிப்பு அதைப் படிச்சிட்டு :-D
கானன் Ixus நல்ல காமிரா தல, பாயிண்ட் அண்ட் ஷூட் குடும்பத்தில்.
ஆர்வம் தான் முக்கியம், அது உன்கிட்ட நிறையவே இருக்கு தல. இந்த முடிவுக்கு ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்.எப்படினு கேட்குறியா, கீழே கிளிக் செய்யவும். கீழேனா இங்கெ கீழே...
Thala
ஸ்ரீகாந்த், போட்டோவை இப்படிக் கொண்டாந்து இங்கே போட்டுட்டீங்களே! அந்தப் பதிவைப் பார்த்துட்டு சிரிச்சு முடிக்கல நான் இன்னும்.. இப்ப இங்கே போட்டோ வேறயா? :-D
//நீங்க தப்பா எல்லாம் கேட்கல. எனக்கு பயங்கர சிரிப்பு அதைப் படிச்சிட்டு :-D//
எதைப் படிச்சிட்டுன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க? அபி அப்பா வந்து என்னை என்ன பண்ணப் போறாரோன்னு நெனக்கும் போது எனக்கு ஒதறுது.
:(
//கானன் Ixus நல்ல காமிரா தல, பாயிண்ட் அண்ட் ஷூட் குடும்பத்தில்.//
ரொம்ப டாங்கீஸ்பா. வெலை அதிகம் குடுத்து இந்த காமரா வாங்கிருக்கேன்னு என்னை வெறுப்பேத்துறவனுங்க கிட்ட ஒளி ஓவியரே சர்டிபிகேட் குடுத்துட்டாருன்னு இனிமே சொல்லிக்கிருவேன்.
//ஆர்வம் தான் முக்கியம், அது உன்கிட்ட நிறையவே இருக்கு தல. இந்த முடிவுக்கு ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்.எப்படினு கேட்குறியா, கீழே கிளிக் செய்யவும். கீழேனா இங்கெ கீழே...
Thala //
அட பாவிங்களா...யூ டூ ப்ரூட்டஸ்?
:(
//எதைப் படிச்சிட்டுன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க? அபி அப்பா வந்து என்னை என்ன பண்ணப் போறாரோன்னு நெனக்கும் போது எனக்கு ஒதறுது.//
அவர் பேருக்கும் கோலங்கள் சீரியலுக்கும் முடிச்சுப்போட்ட உங்க ஸென்ஸ் ஆப் ஹியூமர் தான் சிரிக்கவச்சுது. கவலைப்படாதீங்க அவரும் சிரிச்சிட்டு கண்டுக்காம போயிடுவார்னு நினைக்கிறேன். எதுக்கும் எதுனா கோவிலுக்கு மொட்டை போட்டுக்கிறேன்னு வேணா வேண்டிக்கோங்க அட்வான்ஸா. (எப்படி ஐடியா?)
//வாங்க அபிஅப்பா,
உங்க பேரு ரொம்ப வித்தியாசமா இருக்குங்க. கோலங்கள் சீரியல் பாத்து வச்சிக்கிட்ட பேரா...இல்ல வேற எதாவது காரணப்பேரா? :)//
காரணப்பேர்தான்.என் செல்ல குட்டி பேர் அபிராமி.கோலங்கள் சீரியல்கு முன்னயே என் பேர் அபிஅப்பாதான். காப்பி ரைட் எனக்குதான். இருந்தாலும் பல ஒற்றுமைகள் எங்களுக்குள் உண்டு.
1. என் பெயர் தொல்காப்பியன்(தொல்ஸ்),வீட்டுகாரி சிவில் இஞ்ஜினீயரிங்(டிப்ளமா),என் குட்டி பேர் அபிராமி,நான் Bsc(maths),நான் வொர்க் பன்னுவது construction field,etc...etc
2. திருமுருகன் கோலங்களில் தொல்ஸ்(எ)தொல்காப்பியன்,அவர்வீட்டுகாரம்மா சிவில் இஞ்ஜினீயரிங்(டிப்ளமா),அவர் குட்டி பேரும் அபிராமி,(மற்றும் நாயகி பேரும் அதுதான்),அவரும் முதலில் Bsc(maths)தான் (பின்பு MA),கோலங்களில் அவரும் civil construction தான் etc..etc
மேலும் 1 வருஷம் முன்பு அவர் கொடுத்த ஆ.வி பேட்டி பல நன்பர்களை எனக்கு போன் செய்ய தூண்டியது.
இதெல்லாம் போகட்டும், காப்பிரைட் என்னுடையது என்பதில் ஒரு சின்ன மகிழ்வு. ஏனனில் நான் அவரைவிட 2 வருஷம் சீனியர்.
//கைப்ஸ்.. உங்களுக்கு ஆனாலும்.......!! பாவம் அபி அப்பா. //
//ஐயயோ...நீங்க சொல்றதைப் பாத்தா எதோ தப்பா கேட்டுட்டேன் போலிருக்கே. அபி அப்பா சார்...நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நான் தெரியாம தான் கேட்டேன். சாரி.//
//நீங்க தப்பா எல்லாம் கேட்கல. எனக்கு பயங்கர சிரிப்பு அதைப் படிச்சிட்டு //
என்னயவச்சி எதும் காமடி கீமடி பன்னலையே..
சேதும்மா, போன பின்னூட்டத்திலெ விளக்கம் கிடைச்சுதா?...
கைப்ஸ், ஏம்பா..பாடி ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம் வீக்கா?
(ஐ...நானும் ஆட்டைல மிங்கிள் ஆயிட்டனே...)
//ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க. நம்ம பதிவுகள்லாம் எப்படின்னு படிச்சிட்டு ஒரு வார்த்தை சொல்லுங்க.//
கைப்ஸ், எல்லாத்தையும் படிச்சுட்டேன்..ரொம்ப அருமை. வாழ்த்துக்கள். இப்போ "தம்பி" வீட்டுக்கு போறேன்.அவர் உதவியுடன் சீக்கிரம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்களாம் என்று எண்னம். உங்கள் அணைவரின் வாழ்த்துகளும் வேண்டும்.
மேலும் இங்கு கிருஷ்ணகுமாரி - அங்கு கிருஷ்ணவேணி என்றும் கேள்வி+ஒரே மாவட்டம்(தஞ்சை மாவட்டம்)...ரொம்ப மூச்சிரைக்குது...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கரேன்....
Happy new year.
Disney channel dayavula finding nemo padam vaarathukku rendu thadava paakradhaala, indha thotti meen padam mattum konjam kashtama irundhuchu.. kankaria lake padam ellam super.. NID, IIM campus pakkam ellam poneengala.. Gopi dining Hall, Saurashtra Dining hall la ellam saapteengala.. Municipal market la navrathri time la snacks vaangi saapteengalaa? Anga irukkara Woodlands la namma oor masala dosaya yaana vela kuduthu saapteengala.. Paldi area pakkam vara bridge kitta irukara udupi hotel la saapteengala..
Sanskriti, Gurjari la ellam shopping pannineengala? Prem Darwaza, Dilli Darwaza pakkam poneengala..
//(ஐ...நானும் ஆட்டைல மிங்கிள் ஆயிட்டனே...)//
அபி அப்பா, வெல்கம் டூ தி கிளப். நானும் கைப்புள்ளயின் இல்லாத காதலிக்காக பதிவுக்கு வந்து தாங்க முதன்முதல்ல ஆட்டையில மிங்கிள் ஆனேன்! :-) உங்க வலைப்பூவுக்குப் பூஜை போடுங்க, வந்துடறோம்.
சும்மாவே நமக்கு இந்த ப்ளாக்கர் சொதப்பல் பண்ணும். இப்போ கேட்கவே வேணாம். நீங்க வேறே படம் எல்லாம் போட்டு, அப்பா, திறக்கவே முடியலை. புதுசா ஒண்ணும் எழுதலியா? இல்லாட்டி வழக்கம்போல எனக்குச் சொதப்பலா தெரியலை, எதுக்கு நாளைக்கு இணைப்பு இருந்தா வந்து பார்க்கறேன்.
//என்னயவச்சி எதும் காமடி கீமடி பன்னலையே..
சேதும்மா, போன பின்னூட்டத்திலெ விளக்கம் கிடைச்சுதா?...
கைப்ஸ், ஏம்பா..பாடி ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம் வீக்கா?
(ஐ...நானும் ஆட்டைல மிங்கிள் ஆயிட்டனே...)//
நீங்க சொன்னதை எல்லாத்தையும் படிச்சேன். நீங்க சொல்றதையெல்லாம் பாத்தா தப்பா தான் கேட்டுட்டேன் போலிருக்கு. கோலங்கள் சீரியலைப் பாத்து நீங்க அபி அப்பான்னு பேரு வச்சிக்கிட்டீங்களான்னு கேட்டது தப்பு தான். உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் உங்க வீட்டுல ஒரு 'கோலங்கள்' சீரியலோடயே வாழறீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
:)
//கைப்ஸ், எல்லாத்தையும் படிச்சுட்டேன்..ரொம்ப அருமை. வாழ்த்துக்கள். இப்போ "தம்பி" வீட்டுக்கு போறேன்.அவர் உதவியுடன் சீக்கிரம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்களாம் என்று எண்னம். உங்கள் அணைவரின் வாழ்த்துகளும் வேண்டும்//
சீக்கிரமே ஆரம்பிங்க. கண்டிப்பா வந்துடுறோம்.
:)
//அபி அப்பா, வெல்கம் டூ தி கிளப். நானும் கைப்புள்ளயின் இல்லாத காதலிக்காக பதிவுக்கு வந்து தாங்க முதன்முதல்ல ஆட்டையில மிங்கிள் ஆனேன்! :-) உங்க வலைப்பூவுக்குப் பூஜை போடுங்க, வந்துடறோம். //
மேடம்,
அடியேன் தன்யனானேன். ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு. நன்றி.
//கவலைப்படாதீங்க அவரும் சிரிச்சிட்டு கண்டுக்காம போயிடுவார்னு நினைக்கிறேன். எதுக்கும் எதுனா கோவிலுக்கு மொட்டை போட்டுக்கிறேன்னு வேணா வேண்டிக்கோங்க அட்வான்ஸா. (எப்படி ஐடியா?)//
நல்லா தான் மேடம் உசுப்பேத்தறீங்க. யப்பா...பெரிய ஆளு தான் போங்க. சைக்கிள் கேப்ல எனக்கு மொட்டை போட்டு அழகு பாக்கணும்னு ப்ளான் பண்ணீட்டிங்களே?
:D
//உங்க வீட்டுல ஒரு 'கோலங்கள்' சீரியலோடயே வாழறீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.//
அபி அப்பா தப்பா எடுத்துக்கலன்னு தெரிஞ்சதும் தைரியமா கலாய்க்கிறாப்ல தெரியுது? :-D
//சைக்கிள் கேப்ல எனக்கு மொட்டை போட்டு அழகு பாக்கணும்னு ப்ளான் பண்ணீட்டிங்களே?//
ஆகா.. கற்பனை பண்ணிப் பாருங்க....... ஒரு மொட்டை, அந்த மொட்டையோட ஒரு சில்ஹுவெட் படம்....... ஆனா சில்ஹுவெட்ல மொட்டைமண்டைக்குப் பின்னாடி தான் சூரியன் தெரியணும், இப்பவே சொல்லிப்புட்டேன், ஆமா!
//Happy new year.//
வாங்க டேட்ரீமர்,
உங்க வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
//Disney channel dayavula finding nemo padam vaarathukku rendu thadava paakradhaala, indha thotti meen padam mattum konjam kashtama irundhuchu.. //
நான் அந்த சீரியல் பாத்ததில்லை. அதுனால எதுனால கஷ்டமா இருந்துச்சுன்னு சொல்றீங்கன்னு புரியலை. மீனைத் தொட்டில அடைச்சி வச்சிருக்காங்கன்னு ஒரு வருத்தம்னு நெனக்கிறேன்.
//kankaria lake padam ellam super.. NID, IIM campus pakkam ellam poneengala.. Gopi dining Hall, Saurashtra Dining hall la ellam saapteengala.. Municipal market la navrathri time la snacks vaangi saapteengalaa? Anga irukkara Woodlands la namma oor masala dosaya yaana vela kuduthu saapteengala.. Paldi area pakkam vara bridge kitta irukara udupi hotel la saapteengala.. //
அடடா! அகமதாபாத்தைக் கரைச்சி குடிச்சிருப்பீங்க போலிருக்கே? நீங்க இப்பவும் அகமதாபாத்ல தான் இருக்கீங்களா? NID போகலை. IIM Campus ஃபுட் ஃபெஸ்டிவல் நடக்கும் போது போனேன். நல்ல அனுபவம். நவராத்திரி நேரத்துல நான் சித்தூர்கட்ல இருந்தேன். குஜராத்ல இன்னும் விமரிசையா இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன். நீங்க சொன்ன உணவகங்கள் எதுலயும் சாப்பிட்டதில்லை. எங்க வீடு வைட் ஆங்கிள் மல்டிப்ளெக்ஸ் பக்கத்துல இருக்கு. அதுனால எஸ்.ஜி.ரோடுல இருக்குற சங்கல்ப், தாசப்பிரகாஷ் இங்கெல்லாம் சாப்பிட்டிருக்கேன். சமீபத்துல தாசப்பிரகாஷ்ல தோசா ஃபெஸ்டிவல் ஒன்னு போட்டிருந்தாங்க. நீங்க சொல்ற மாதிரியே யானை வெலை - ஒரு தோசை 80ரூ குடுத்து சாப்பிட்டோம். நீங்க சொன்ன உணவகங்களையும் கூடிய சீக்கிரம் முயற்சி பண்ணி பாக்குறேன்.
//Sanskriti, Gurjari la ellam shopping pannineengala? Prem Darwaza, Dilli Darwaza pakkam poneengala.. //
அடடா! இந்த எடம் பக்கம் எல்லாம் நான் போனதில்லீங்களே. சமீபத்துல நல்சரோவர் லேக் போனேன், ரெண்டு மாசம் முந்தி சபர்மதி ஆஷ்ரமம் போனேன். நீங்க சொன்ன எடங்களையும் நெனவுல வச்சிக்கிறேன். அகமதாபாத் பத்தி இன்னும் சில பதிவுகள் வர வாரங்கள்ல வரவிருக்கு. நேரம் கெடக்கும் போது வந்து படிச்சி உங்க கருத்துகளைச் சொல்லுங்க. மிக்க நன்றி.
//அபி அப்பா தப்பா எடுத்துக்கலன்னு தெரிஞ்சதும் தைரியமா கலாய்க்கிறாப்ல தெரியுது? :-D//
ஐயோ...அவரே ஒன்னும் நெனக்கலைன்னா கூட நீங்க எனக்கு குழி தோண்டாம விட மாட்டீங்க போலிருக்கே?
:)
//ஆகா.. கற்பனை பண்ணிப் பாருங்க....... ஒரு மொட்டை, அந்த மொட்டையோட ஒரு சில்ஹுவெட் படம்....... //
ஐடியா நல்லாத் தான் இருக்கு...
//ஆனா சில்ஹுவெட்ல மொட்டைமண்டைக்குப் பின்னாடி தான் சூரியன் தெரியணும், இப்பவே சொல்லிப்புட்டேன், ஆமா! //
...ஆனா இதுக்கு உத்தரவாதம் குடுக்க முடியாது.
:)))-
finding nemo, ஒரு சீரியல் இல்ல. டிஸ்னி/பிக்சார் படம். சூப்பரா இருக்கும். முடிஞ்சா பாருங்க.
வாங்க சேது மேடம்,
நேமோ பத்தி தகவல் சொன்னதுக்கு நன்றி. கண்டிப்பா பாக்கறேன்.
//ஐயோ...அவரே ஒன்னும் நெனக்கலைன்னா கூட நீங்க எனக்கு குழி தோண்டாம விட மாட்டீங்க போலிருக்கே?
:)
//ஆகா.. கற்பனை பண்ணிப் பாருங்க....... ஒரு மொட்டை, அந்த மொட்டையோட ஒரு சில்ஹுவெட் படம்....... //
ஐடியா நல்லாத் தான் இருக்கு...//
அர்ஜன்ட் மொட்டைக்கு அனுகவும் = "தம்பி"(எதோ dove shampoo) வச்சிருக்கார்
//(ஐ...நானும் ஆட்டைல மிங்கிள் ஆயிட்டனே...)//
அபி அப்பா, வெல்கம் டூ தி கிளப். நானும் கைப்புள்ளயின் இல்லாத காதலிக்காக பதிவுக்கு வந்து தாங்க முதன்முதல்ல ஆட்டையில மிங்கிள் ஆனேன்! :-) உங்க வலைப்பூவுக்குப் பூஜை போடுங்க, வந்துடறோம்.//
கைப்புள்ளையின் இல்லாதகாதலின்னு சொல்லக்கூடாது சேதுமேடம். எந்த புத்துல எநத பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும். கைப்புள்ளையின் (பெரிய கேப்) "இல்லாதகாதலி" பதிவு அப்டீன்னு இருக்கனும் சரியா?
அபி அப்பா, ஆட்டையில நல்லாவே மிங்கிள் ஆயிட்டீங்க.. தம்பியோட டவ் ஷாம்பூவை சரியான நேரத்துல ஞாபகம் வச்சி எழுதுறதிலிருந்தே தெரியுதே :) அப்புறம்.. இல்லாத காதலியப் பத்தி கைப்பு எழுதியிருக்கதை அவசியம் படிச்சுப் பாருங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அன்னிக்கு இருந்து கைப்பு வலைப்பூ ரசிகை நான். இந்த ரேட்டுல போனா டுபுக்கு டிசைப்பிள் மாதிரி கைப்பு டிசைபிள் ஆகிடுவேனோ என்னாவோ. (அப்புறம்.. அபி அப்பா, டுபுக்கு டிசைப்பிள் பக்கம் பார்க்கிறப்ப அபி அம்மா இல்லாத நேரமாப் பாருங்க, சரியா? :))
Finding Nemo: Tholainju pona kutti meena appa meen kadal kadandhu poi thedi kandupidikara cinema.. Kadathapatta kutti meen a oru pall doctor (naasamaa poga) azhagukaaga oru thotti la pottu clinic la vechu iruppaan.. appa meen east australian current short cut la poondhu poi payyana kandupidikkara padam.. adhaan meen thotti ya paatha andha baadhippu.. Naan oru 8 varushathukku munnadi ahmedabad la oru 5 varusham garbage clear panni irukken (adhaanga kuppa kotti irukkennu naagareegama solli iruken..onyx la vela paathen nu wrong aa nenaikaadeenga. ellam namma guru vadivel baadhippu thaan)..super oor super people. time kedaikarappa ellam suthi paarunga.. padhivenna...book e podalaam..
Post a Comment