Thursday, September 07, 2006

சவுத் இண்டியன்ஸால மட்டும்...?

பெனாத்தலார் வ.வா.சங்கத்தில் எழுதிய அட்லாஸ் வாலிபன்? பதிவைப் பார்த்ததும் ஒரு பதிவு நினைவுக்கு வந்துச்சு. மின்னஞ்சல்களில் ஃபார்வர்டுகள் தாராளமாக வந்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து எனக்கு வந்த ஒரு ஆங்கில படைப்பு. எழுதுனது யாருன்னு தேடிப் பாத்ததுல தெரிஞ்சது, அதை எழுதுனது ஒரு வலைப்பதிவர்னு ...அவரோட பேரு சிடின் வடுகுட். எக்கச்சக்கமா படிச்சுப் போட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில வேலை பாத்துப்புட்டு, அதெல்லாம் புடிக்காம இப்ப ஒரு முழு நேர ப்ளாக்கர்/எழுத்தாளர் ஆகிட்டாரு. அவரைப் பத்தி தி ஹிண்டுல கூட செய்தி வந்துருக்கு. நெறைய பேருக்கு இவரைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.

http://www.hindu.com/2006/07/25/stories/2006072515020200.htm

பெனாத்தலாரோட பதிவைப் பாத்த உடனே, இந்தப் பதிவு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பதிவுல எழுதியிருக்குற மேட்டர் என்னன்னா "நம்ம சவுத் இண்டியன் பசங்களால மட்டும் ஏன்யா ஒரு கேர்ள்பிரெண்டு தேத்த முடிய மாட்டேங்குறது தான்". பீட்டரான இங்கிலீசுல தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில கலக்கலா எழுதியிருப்பாரு.
அவரோட பதிவுலேருந்து ஒரு சிறு பகுதி :

"Our futures are shot to hell as soon as our parents bestow upon us names that are anything but alluring. I cannot imagine a more foolproof way of making sure the child remains single till classified advertisements or that maternal uncle in San Francisco thinks otherwise. Name him "Parthasarathy Venkatachalapthy" and his inherent capability to combat celibacy is obliterated before he could even talk. He will grow to be known as Partha. Before he knows, his smart, seductively named northy classmates start calling him Paratha. No woman in their right minds will go anyway near poor Parthasarathy. His investment banking job doesn't help either. His employer loves him though. He has no personal life you see.

By this time the Sanjay Singhs and Bobby Khans from his class have small businesses of their own and spend 60% of their lives in discos and pubs. The remaining 40% is spent coochicooing with leather and denim clad muses in their penthouse flats on Nepean Sea Road. Business is safely in the hands of the Mallu manager. After all with a name like Blossom Babykutty he cant use his 30000 salary anywhere. Blossom gave up on society when in school they automatically enrolled him for Cookery Classes. Along with all the girls."

முழு பதிவையும் படிக்க இங்கே சுட்டுங்க :
"The Travails of Single South Indian men of conservative upbringing"

நம்ம பெனாத்தலாரும் இதே மேட்டரைப் பத்தி நேத்து எழுதிட்டாரா? அதை படிச்சதும் இந்த பேச்சலர் மனச்சுக்கு ஒரே "ஃபீலிங்ஸ் ஆஃப் சித்தூர்கட்" ஆகிப் போச்சு நைனா. சிடினோட ஆங்கிலப் பதிவை அப்படியே தமிழ்ல உல்டா பண்ணி நம்மூரு காரப் புள்ள காவ்யா விஸ்வநாதன் பண்ண ப்லெஜியரிஸம்ங்கிற கில்மா வேலை பண்ணிடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா அப்படிப் பட்ட கில்மா வேலை பண்ணறதுக்கு இப்படி பட்ட கில்மா வேலை எல்லாம் பண்ணலாம்னு ரோசனை குடுத்த கோவி.கண்ணனுக்கு நன்றி. எல்லாப் பதிவுகளையும் படிச்சுப் பாருங்க...நல்லாருக்கும்.

19 comments:

மனதின் ஓசை said...

எத்தன?

Amar said...

கைபுள்ள என்ற பெயரின் ரகசியமும் சிடின் வடுகுட் அவரின் பராத்தா கதை மாதிரி தானா அன்னே?

கைப்புள்ள said...

//எத்தன?//

மாவீரர் அமீது! என்னங்க எத்தனை? இப்படி மொட்டை தாத்தா குட்டைல விழுந்த மாதிரி எத்தனைன்னா நான் என்னான்னு சொல்லுவேன்?
:)

கைப்புள்ள said...

வாங்க சமுத்ரா!
மிலிட்டரி பத்தி பெரிய மேட்டர் எல்லாம் எழுதற நீங்க என்னைய அண்ணேங்கிறதா? அவ்வளவா நல்லால்லீங்க :)

//கைபுள்ள என்ற பெயரின் ரகசியமும் சிடின் வடுகுட் அவரின் பராத்தா கதை மாதிரி தானா அன்னே? //
ஹி...ஹி...அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. பராத்தாவுக்கும் கைப்புள்ளக்கும் சம்பந்தம் இல்லீங்க.

நீங்க கேட்டதுக்கு அப்புறம் யோசிச்சு பாத்தேன்...அப்போ என்னோட முதல் பதிவுல கைப்புள்ளங்கிற பேர் காரணத்தைப் பத்தி நான் எழுதியிருக்குறது ஞாபகம் வந்துச்சு. உங்க கேள்வியை சாக்கா வச்சு ஒரு சுய தம்பட்டம்:)

http://kaipullai.blogspot.com/2005/12/vandhuttanyavandhuttanya.html

அதுல எழுதியிருக்குறது என்னன்னா :

"About my choice for the blog title...'Kaipullai' from the Tamil Movie 'Winner' is a character, which I enjoyed a great deal, next only after the cartoon characters Tom and Jerry. I believe there is a little bit of Kaipullai in many of us, who loves to show off and who doesn't mind getting beaten up black and blue for his mistakes. Expect my idiosyncrasies to show up on this blog."

Amar said...

//நீங்க என்னைய அண்ணேங்கிறதா?//

இருக்கிற வலைபதிவர்களிலேயே நான் தான் சிறியவன், (வருத்தபடாத) வாலிபன் என்று வேறு எப்படி தான் நான் assert செய்துகொள்வதாம்?

கைப்புள்ள said...

//இருக்கிற வலைபதிவர்களிலேயே நான் தான் சிறியவன், (வருத்தபடாத) வாலிபன் என்று வேறு எப்படி தான் நான் assert செய்துகொள்வதாம்? //

வாங்க சமுத்ரா,
மிலிட்டரியைப் பத்தி நல்ல விஷயங்கள், பலருக்குத் தெரியாத பல விஷயமெல்லாம் எழுதறீங்களா? அதனால நீங்க "வருத்தப்படும் வாலிபர்" ஏஜ் க்ரூப்ல இருப்பீங்கன்னு நெனச்சிட்டேன்...நேத்து தான் உங்க ப்ரொஃபைல் விவரங்களைப் பாத்து தெரிஞ்சிக்கிட்டேன்.

ஒத்துக்கறேன்...நான் ஒத்துக்கறேன் சமுத்ரா உண்மையிலேயே ஒரு "வருத்தப்படாத வாலிபர்"னு நான் ஒத்துக்கறேன்.
:)

Anonymous said...

ஆமா கைப்பு இந்த வயத்தெரிச்சல் நானும் பட்டிருக்கேன். ஹூம் சப்பாத்தி சப்பாத்தி தான் , இட்லி இட்லி தான்

கைப்புள்ள said...

//ஆமா கைப்பு இந்த வயத்தெரிச்சல் நானும் பட்டிருக்கேன். ஹூம் சப்பாத்தி சப்பாத்தி தான் , இட்லி இட்லி தான்//

வாங்க டுபுக்கு சார்,
ஹி...ஹி...என்னத்த சொல்றது? இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் சப்பாத்தி முன்னால தான் நிக்குது.
:)

இலவசக்கொத்தனார் said...

அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணுமப்பா. ஊருலேயும் பேருலேயும் என்ன இருக்கு? ;)

Syam said...

என்ன பன்றது அடுத்த ஜென்மத்துலயாவது வட இந்தியாவுல என்ன பொறக்க வைடா ஆண்டவா...

ஐயோ ஐயோ அங்க அத்தனயும் பிகர் ஆச்சே அத்தனயும் பிகர் ஆச்சே..எனக்கில்ல எனக்கில்ல னு புலம்ப வேண்டியது தான் :-)

Harish said...

ada makka...inda forward naan padichirukaenae :-)

கைப்புள்ள said...

கால்கரி சிவா said

சப்பாத்தியும் இல்லை இட்லியும் இல்லை

என் நண்பர் ஒருவர் தயிர்சாதம் மாவடு கேஸ் அவர் தேத்தாத பிகர்களா. அலஹாபாதிலிருந்து அமெரிக்காவரை வெளாடிருக்கார். போன டிசம்பரில் சென்னையில் பார்த்தபோது ஒரு சின்ன பெண்ணுடன் பாரில் பார்த்தேன்.

"டேய் லூசு என்னதான் நீ மாடர்ன் ஆனாலும் இப்படி உன் மகளோட பாருக்கு வருவது அவ்வளவு சரியா இல்லை" அவன் காதில் கடித்தேன். அவர் உடனே அந்த பெண்ணை அழைத்து என்னைக் காட்டி "சே ஹலோ டு திஸ் அங்கிள். ஹி ஹிஸ் மை பாஸ்" என்று அவளிடமும் "பாஸ் ஷி இஸ் மை கேர்ள் ஃப்ரண்ட்" என்று என்னிடமும் சொன்னார். அவருக்கு வயது 47 இன்னமும் த.சா மாவடுதான்

அதெல்லாம் சுளி கைப்பு

கைப்புள்ள said...

//அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணுமப்பா.//

ஞானம்னா இந்த பரமசிவன் கிட்ட சண்டை போட்டு விநாயகர் வாங்கி சாப்பிட்டாரே ஒரு பழம்...அதுல இருக்குற மேட்டர் தானே? அந்த பழத்துக்கு எங்கே கொத்ஸ் நான் போறது?

இலவசக்கொத்தனார் said...

//ஞானம்னா இந்த பரமசிவன் கிட்ட சண்டை போட்டு விநாயகர் வாங்கி சாப்பிட்டாரே ஒரு பழம்...அதுல இருக்குற மேட்டர் தானே? அந்த பழத்துக்கு எங்கே கொத்ஸ் நான் போறது? //

அதுக்கெல்லாம் என்னை மாதிரி பழங்களை, ச்சீ, ஆட்களை சுத்தி சுத்தி வரணுமப்பா. வந்தா சில டிப்ஸ் குடுப்போம். அதை வச்சுக்கிட்டுப் பொழைக்கற வழியைப் பாருங்க...

கைப்புள்ள said...

//ஐயோ ஐயோ அங்க அத்தனயும் பிகர் ஆச்சே அத்தனயும் பிகர் ஆச்சே..எனக்கில்ல எனக்கில்ல னு புலம்ப வேண்டியது தான் :-)//

ஏபிசிடி,
இதெல்லாம் ஒனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல. புள்ளக்குட்டி காரரு..ஆடி அடங்குன வயசுல இந்த புலம்பல் எல்லாம் தேவையா? வயசு பசங்க நாங்களே எவ்வளவு அடக்க ஒடுக்கமா ஒக்காந்திருக்கோம். எங்களை பாத்தாச்சும் கொஞ்சம் திருந்துங்கய்யா.

கைப்புள்ள said...

//ada makka...inda forward naan padichirukaenae :-) //

அட! அதாண்ணே இது.

:)

முதல் வருகைக்கு நன்றி ஹரீஷ்.

கைப்புள்ள said...

//ஆட்களை சுத்தி சுத்தி வரணுமப்பா. வந்தா சில டிப்ஸ் குடுப்போம். அதை வச்சுக்கிட்டுப் பொழைக்கற வழியைப் பாருங்க... //

எதோ பெரியவங்க ஆசிர்வாதம் இருந்தா சரி தான். இப்பவே சுத்தி வர ஆரம்பிச்சிடறேன்.
:)

கைப்புள்ள said...

//அவர் உடனே அந்த பெண்ணை அழைத்து என்னைக் காட்டி "சே ஹலோ டு திஸ் அங்கிள். ஹி ஹிஸ் மை பாஸ்" என்று அவளிடமும் "பாஸ் ஷி இஸ் மை கேர்ள் ஃப்ரண்ட்" என்று என்னிடமும் சொன்னார். அவருக்கு வயது 47 இன்னமும் த.சா மாவடுதான்

அதெல்லாம் சுளி கைப்பு //

வாங்க சிவா சார்,
47 வயசா...........ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
ஒரே பெருமூச்சா இருக்கு. ஆனா செம காமெடியா இருந்தது உங்களை அவர் அறிமுகம் பண்ணி வச்ச விதம்.
:)

Appu said...

the conservative upbringing of south indian women is also an reason-அப்படினு ஏன் யாரும் யோசிக்கலை?