Monday, March 29, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு...

"பிரசவம்ங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மறு ஜென்மம் மாதிரி" அப்படிங்கற உண்மை தமிழ்ப் படங்களைப் பார்க்கும் எந்தவொரு சராசரி ரசிகனுக்கும் தெரியும். ஒரு ஆணுக்குப் பிரசவம் குறித்த மெய்யும் பொய்யுமான பல விஷயங்களைப் போதிப்பது திரைப்படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் பிரசவம் குறித்த காட்சிகள் பல விஷயங்களுக்காகப் பல விதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் தங்கையின் வளைகாப்பில் அண்ணன் பாட்டு பாடுவதற்காகவும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவது போலவும், ஒரு காட்சியில் "மூன்று மாதம் முழுகாமல்" இருக்கும் கதாநாயகி அல்லது ஹீரோவுக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண்மணி அதற்கடுத்த காட்சியிலேயே "நிறைமாத கர்ப்பிணியாக மாறி" பிரசவ வேதனையில் துடிக்கும் போது, வில்லன்களின் தாக்குதலைத் துவம்சம் செய்து க்ளைமாக்ஸ் காட்சியில் அழகான குழந்தை பிறந்து "சுபம்" போடவும் உதவும். இவ்வளவு ஏன்...ஏதாவது ஒரு நடிகை கால்ஷீட் ப்ராப்ளம் செய்கிறார் என்றார் அவருடைய கதாபாத்திரத்தின் கதையை முடித்துக் கொள்ளவும் இந்த "பிரசவ மேட்டர்" உதவும். பிரசவம் குறித்த சில கலைச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் சினிமா மிகவும் உதவுகிறது. உதாரணமாக மசக்கை, பச்சை உடம்புகாரி, வாயும் வயிறுமா இருக்கா, முழுகாம இருக்கா, மாசமா இருக்கா, இரட்டை நாடி, வவுத்து புள்ளைக்காரி போன்ற technical termsஐ எல்லாம் கற்றுக் கொள்ள சினிமாவை விட்டால் வேறு வழி ஏது? :)

சினிமா பிரசவங்கள் நகைப்புக்குரியதாய்த் தோன்றினாலும், நம் சொந்த வாழ்க்கையில் நமக்கு தெரிந்த/அல்லது வேண்டப்பட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது எனத் தெரியும் போது அவளுக்கு நல்ல படியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு நம்மை அறியாமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்ற நிலை வந்தாலும் கூட நமது சொந்தங்கள் அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களுடைய குழந்தை பிறப்பு எனும் போது ஒரு விதப் பதற்றம் நம் மனதில் குடி கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இதுவே பிரசவம் தன்னுடைய மனைவிக்கு எனும் போதும் பிறக்கப் போவது தன்னுடைய வாரிசு எனும் போதும் ஒருவனுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம் என்றே எண்ணுகிறேன். மகிழ்ச்சி, அச்சம், எதிர்பார்ப்பு, கவலை போன்ற பலவித உணர்வுகளும் சேர்ந்த ஒரு வித விசித்திர கலவை அந்த உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கே அது எவ்வாறு இருக்கும் எனத் தெரியும். பிரசவத்தின் போது வலியும் வேதனையும் ஒரு பெண்ணுக்குத் தான் என்பதும் அவள் மனதாலும், உடலாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய கணம் அதிகம் என்பதை பலவிடங்களில் படித்துத் தெரிந்து கொண்டாலும் பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் அதை எந்நாளும் உணரும் சக்தியற்றவன் ஆண் என்னும் நினைக்கும் போது ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி மறைகிறது. பாலைவன ரோஜாக்கள் படத்தின் பாடல் வரிகளான "காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை" என்னும் வரிகள் நான் என் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த காலங்களில் பல முறை என் நினைவுக்கு வந்து சென்றதுண்டு.

பொதுவாகவே நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் மீது அவளை சுற்றியிருப்பவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து கவனிப்பதுண்டு. பேறு காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என்பது பற்றிய பலவிதமான அறிவுரைகள் பலரிடமிருந்தும் கிடைக்கும். அவ்வறிவுரைகளை அப்பெண் செயல்படுத்துகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொள்ளக் கூடிய கடமை அவளுடய கணவனுடையதானது. அவள் அதை செயல்படுத்த வில்லை என அறிவுரை சொன்னவருக்குத் தெரிய வரும் போது "மாசமாருக்கற பொண்ணுப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கக் கூடாதா? நீ தான் இதெல்லாம் பாத்து செய்யனும்" என்ற அறிவுரை அவளுடைய கணவனுக்குக் கிடைக்கும். பேருந்துகளிலோ பொது இடங்களிலோ கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல நின்று கொண்டிருந்தால் எழுந்து இடம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மூலமாக சிறுவர்களாக இருக்கும் போதே அறிவுறுத்தப் படுகிறது நம் சமூகத்தில். டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பன் பின்னாளில் பெங்களூரில் பணிபுரிந்தான். அவனுடைய மனைவி கருவுற்றிருந்த போது அவன் குடியிருந்த வீட்டு ஓனரே வளைகாப்பு விழா நடத்தினாராம். கன்னடப் பெண்மணியான அவர் வட இந்தியாவைச் சேர்ந்த நண்பனின் மனைவிக்கு தென்னிந்திய முறைப்படி நடத்திய வளைகாப்பு விழாவின் படங்களை நண்பன் எனக்கு அனுப்பி வைத்தான். மற்ற நேரங்களில் எப்படியோ, பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பெண் இன்னொரு உயிரைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்குண்டான மரியாதையும், அவள் மீது மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையும் அதிகரிக்கத் தான் செய்கிறது.

"Exceptions are always a rule" என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஒரு விஷயம் இவ்வாறு இருக்கும் அல்லது இவ்வாறு நடக்கும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன் அவ்வாறு இல்லாது போதலுக்கான சாத்தியக்கூறுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். துரதிருஷ்ட வசமாக நான் அவ்வாறான 'exception' ஒன்றைத் தான் முதலில் தெரிந்து கொண்டேன். முன்ஷி பிரேம்சந்த் என்பவர் இந்தி மொழி இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஒரு பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேளைகளில் இந்தி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இந்தி வகுப்புகளில் பிரவேஷிகாவோ(Praveshika) விஷாரத்தோ (Visharadh Poorvardh) படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தாளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு. அதில் பிரேம்சந்த் அவர்கள் எழுதிய 'மதுவா'(Madhua) என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்...சரியாக நினைவில்லை. வட இந்திய கிராமம் ஒன்றில் இரவு வேளையில் நடக்கும் நிகழ்வு ஒன்றினை கதைகளமாக ஆக்கியிருப்பார் ஆசிரியர். ஒரு குடிகார கணவன், அவனுக்கு ஒரு குடிகார தகப்பன். மனைவி கருவுற்றிருப்பாள். நிறைமாத கர்ப்பிணி. ஆள் அரவமற்ற ஒரு அத்துவான சூழ்நிலையில் அவர்கள் குடிசை அமைந்திருக்கும். தந்தையும், மகனும் குடிசையின் வெளியில் ஒரு லேண்டர்ன் விளக்கின் ஒளியில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பார்கள். குடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன் மனைவியை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக உருளைக் கிழங்குகளை அவித்துத் தரச் சொல்வான். அவளால் இயலாத நிலைமையிலும் அவள் உருளைக்கிழங்குகளை வேக வைத்து தருவாள். சூடான உருளைக்கிழங்கின் தோலினை உரித்து வாயில் போட்டு இருவரும் தின்பார்கள். வாய் சுடுவதையும் பொருட்படுத்தாது மது அருந்துவதுமாகவும் கிழங்கு தின்பதுமாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாது அவள் கதறுவாள். அதை பொருட்படுத்தாது அப்பனும் மகனும் குடித்துக் கொண்டிருப்பார்கள். பிரசவத்தின் போது கூட இருந்து உதவுவதற்கு யாருமில்லாது அப்பெண் இறந்து போவாள். கதையில் குழந்தை பிறந்து அத்தாய் இறப்பாளா, அல்லது சிசுவோடு சேர்ந்து அவள் மரித்தாளா என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால் நான் மேலே சொன்னவற்றை 'graphic detail'இல் எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை என்னை ஆழமாகப் பாதித்தது மட்டும் உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் அப்போது என் மனதில் எழுந்தது. இவ்வளவு வருடமாகியும் இக்கதை நினைவில் இருப்பதற்கு அது ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம். காலம் செல்ல செல்ல கதையில் சொல்லப் பட்டது போன்றதும் இதை விட அவலமானதுமான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும் போது இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பது உறுதியானது. "பூந்தோட்டக் காவல்காரன்" என்றொரு படம். விஜயகாந்த், ராதிகா நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் வில்லன்களுடன் விஜயகாந்துக்கு மோதல் ஏற்படும். சண்டையின் போது விஜயகாந்தை அடியாள் ஒருவன் பலமான உருட்டுக் கட்டை கொண்டு ஓங்கி அடிப்பான். அதை தடுக்க வரும் ராதிகாவின் வயிற்றில் உருட்டுக் கட்டையின் அடி விழும். இக்காட்சியை சிறு வயதில் சில முறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அப்படத்தின் பாடல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. மேலே சொன்ன அக்காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால் இம்முறை ஏனோ அக்காட்சியை நினைத்த மாத்திரத்தில் உடம்பு நடுங்கியது, ஒரு வித வேதனை மனதில் உருவானது, . அக்காட்சியை நினைக்காமல் மறக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அச்சமயம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருந்ததால் அத்தகைய ஒரு காட்சியை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்ததோ என்னவோ?

பொதுவாகவே ஒரு ஆணின் மனதில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அவள் ஒரு vulnerable நிலையில் இருக்கிறாள் என்ற ஒரு 'ஐயோ பாவம்' உணர்வு தான் மேலிடும். சமூகத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'டிரெய்னிங்' அத்தகையது. ஆறாவது மாதம் வரை நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், ஏரோபிக்ஸ் செய்யலாம், கார் ஓட்டலாம் என்றெல்லாம் 'What to expect when you are expecting' புத்தகத்தில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த போது ஆச்சரியமே மேலிட்டது. பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போது "இது 'false pain' தான் சிறிது நேரம் கழித்து வாருங்கள்" என்று சொல்லித் திருப்பி அனுப்பப் பட்டதையும், "வலி அதிகமாக இருக்கிறது ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்" என்று கதறும் பெண்ணிடம் "அதெல்லாம் முடியாது பிரசவ அறை வரை நடந்தே தான் வர வேண்டும்" என்று கூறியதையும் எனக்குத் தெரிந்த சில பெண்களின் மூலமாகக் கேள்வி பட்ட போது ஆச்சரியமாக இருந்த போதிலும் அத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிற்க. இந்த பதிவின் தலைப்பில் நான் எழுத நினைத்தது ஒரு வரி கூட இன்னும் எழுதவில்லை. அப்பதிவிற்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பதிவின் அளவிற்கு நீண்டு விட்டதால், சொல்ல வந்த மேட்டர் வேறொரு பதிவில்...

Monday, March 15, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1-ன் தொடர்ச்சி

தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம்.

பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம்.

கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான்.

இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை.

வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன்.

ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது.

கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.

இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன்.

இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்?

கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம்.

பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)

Sunday, March 14, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1

ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார்.

பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம்.

அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார்.

முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது.

மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது.

அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர்.

கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம்.

சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது.

வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.

(தொடரும்...)
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.

Wednesday, January 27, 2010

This Day That Age

"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விக்கிபீடியாவிலும் காணலாம்.

டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.

Monday, December 21, 2009

படு ரொமாண்டிக்கான பாடல் ஒன்னு...

பழைய பாடல்கள் அப்பப்போ கேக்கறதுண்டுன்னாலும், ஒரு சில பாடல்களைக் கேக்கும் போது "பலமுறை இந்த பாட்டைக் கேட்டுருக்கோம், ஆனா இந்த பாட்டோட அழகை இது நாள் வரைக்கும் கவனிக்காம இருந்துட்டோமே" அப்படின்னு தோனும். அப்படி பட்ட பாடல் ஒன்னைப் பத்தி இன்னிக்குச் சொல்றேன். படு ரொமாண்டிக்கான அழகான காதல் ரசம் ததும்பும் பாடல்...வேற யாரு எழுதிருக்க முடியும். கவியரசர் கண்ணதாசன் தான். கர்ணா படத்துல வர்ற "மலரே மௌனமா?" பாடல் அமைஞ்ச தர்பாரி கானடா ராகத்துல அமைஞ்ச இன்னொரு சூப்பர் பாடல் இது. எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த சில பஞ்ச் வரிகளை சிவப்புல குறிச்சிருக்கேன்.

படம் : போலீஸ்காரன் மகள்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ் & S.ஜானகி

PBS:
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்
Both:
ஆஹாஹா ... ஓஹோஹோ ...

PBS:
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

SJ:
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

PBS:
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

SJ:
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்


PBS (Background humming by SJ):
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

PBS:
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

SJ:
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

PBS:
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

SJ (Background humming by PBS):
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music


'வர்ல்ட் மூவிஸ்' சேனல்ல எப்பவோ அரைகுறையா பாத்துட்டு நிறுத்திய இரானிய திரைப்படம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. இரானிய படங்கள் பாத்தா தான் உலகத் திரைப்படங்கள் பாத்ததா ஒத்துக்குவாங்கன்னு தமிழ் வலையுலகில் இயங்கி வர்ற இந்த மூனு வருஷ காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். இரானிய திரைப்படம் பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சுன்னு சொன்னேன் இல்லியா? சென்னை திரும்பறதுக்காகப் பாரிஸ்லேருந்து துபாய் வந்துட்டுருந்த போது எமிரேட்ஸ் விமானத்துல இருந்த தொலைக்காட்சி திரையில 'Arabic Movies' அப்படீங்கற லிஸ்டைப் பார்த்துட்டு வந்தது. ஆனா இரானிய படங்கள் வேறு அரேபிய திரைப்படங்கள் வேறுன்னு அஞ்சு நிமிஷம் பாத்ததுமே புரிஞ்சுடுச்சு. அரேபிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கறது ஏன்னும் புரிஞ்சது.

ஏன்னா நான் பார்த்த படம் அப்படி. படத்தோட பேரு Omar w.Salma. இதே படத்தோட இரண்டாவது பகுதியும் வந்துட்டதா கேள்வி பட்டேன். பாலிவுட் மசாலா திரைப்படங்களே தோத்துப் போற அளவுக்கு பயங்கர மசாலா கதை. "கோகுலத்தின் சீதை" மாதிரி ப்ளேபாய்களான அப்பா-மகன் இருவர். அப்படி பட்ட ப்ளேபாயான ஓமரை எப்படி சல்மாவின் காதல் திருத்துகிறது என்பதே கதை.



படத்தை பயங்கர கில்மாவா எடுத்துருக்காங்க. சல்மாவா நடிச்சிருக்கற அம்மணி மாய் அஸ் எல்தீன்(Mai Ezz El Din) செம க்யூட்டுங்க. சிரிச்சா ரொம்பா அழகா இருக்காங்க. திருத்தம்...சிரிச்சாலும் ரொம்ப அழகா இருக்காங்க. இரானிய படங்கள் மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்த நான் பார்த்த அந்த அரேபிய படம் எனக்கு பல ஆச்சரியங்களைத் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உடைகள். துள்ளலான இசை. இன்னும் பல பல :)






இந்த மாதிரி படங்கள் எல்லாம் எந்த அரேபிய நாட்டுல எடுக்கறாங்க சாமி? துபாய் மக்கள்ஸ் யாராச்சும் இந்த மொழி படங்களைப் பாத்துருக்கீங்களா? உங்களுக்கு தெரிஞ்ச விபரங்களைச் சொல்லிட்டு போங்கங்கோ!

பி.கு: நான் ஓமர் சல்மா படத்தை sub-title இல்லாம தான் பார்த்தேன் :)

Tuesday, December 08, 2009

பாரிமுனையில் கைப்புள்ள

"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"

"பஸ்லியா? டிரெயின்லயா?"

ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -




மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.



ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.

"நாய் சேகராகிய நான்
11.11.2003

கிம்ச்சீ நினைவுகள்


நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா
ராயலைக் கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.

அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி "
"ஹியர் டு கோ"ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?




கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..."



இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது.

இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.



அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.

Wednesday, September 30, 2009

விஜய் டிவியும் அனிமல் ப்ளானெட்டும்

ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன், ஞாயித்துக் கிழமை சாயந்திரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது. அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் அப்படின்னுட்டு. மனதை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து விடுவார்களாம். நல்லது செய்ய போய் ஏமாந்து போன அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் எதையும் தீர்க்கமாக ஆய்ந்து முடிவெடுப்பார்களாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். ஒரு விஷயத்தில் இருக்கிற லாஜிக்கைத் தவறாமல் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பார்களாம். இரு தரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெற்று சூடு பற்றிக் கொண்டிருந்தது. மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தலைப்பே தவறு என்று என் தந்தையார் கூறினார். அதை பற்றிய விவாதம் இப்போது நமக்கு வேண்டாம்.

மனதை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினர் மூளையை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினரைப் பார்த்து "நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் பாதையின் குறுக்கே ஒரு மாடோ அல்லது ஒரு நாயோ குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். வண்டியை அபாயமில்லாமல் நிறுத்துமளவுக்கு உங்களிடம் நேரமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள்.

அப்போது மூளை அணியினைச் சேர்ந்த ஒரு பெண்மணி "நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னால் வண்டியை நிறுத்த முடியாத போது அந்த நாயின் மீது ஏற்றி விட்டுச் சென்று விடுவேன். அந்நேரத்தில் என்னுயிரையும் எந்நலனைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்" என்றார். உடனே மனது அணியில் இருந்தவர்கள் நாங்களாக இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நாயைக் காப்பாற்றவே கடைசி வரை முயல்வோம் என்றனர்.

அதன் பின்னர் மனது அணியில் இருந்தவர்கள் "நாயோ மாடோ சாலையைக் கடப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் பெற்ற உங்களுடைய குழந்தை நெடுஞ்சாலையில் அவசரமாகக் குறுக்கே வந்து விடுகிறது, நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள், இப்போது என்ன செய்வீர்கள்" என்று கேட்டனர். அதற்கு மூளை அணியில் முன்னர் பதில் சொன்ன அதே பெண் சொன்னார் "நாயாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், நான் பெற்ற என் குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஆபத்து ஏற்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்படும் போது நான் நிற்காமல், குறுக்கே வருபவர்கள் மீது ஏற்றிக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன்" என்றார்.

அது வரை அவர் பேசியது ஒரு மாற்று கருத்து என்ற அளவில் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படியானது என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பின் அவர் சொல்லியது தான் என்னை மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் கொள்ளச் செய்தது "குழந்தை வேண்டுமானால் இன்னொன்று பெற்றுக் கொள்ளலாம். நம்முயிருக்கே ஆபத்து எனும் போது இவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை" என்றார். இதை கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. அவர் கடைசியில் சொல்லிய கருத்து மிகவும் ஆபாசமானது என்பது என் எண்ணம். ஆணும் பெண்ணும் இணைந்து துய்க்கும் இன்பத்தின் உபரி (by-product) தான் குழந்தை என்ற ஒரு எண்ணம் கொண்டவரால் மட்டும் தான் இவ்வாறு பேச முடியும் என்பது என் கருத்து.

ஒரு வேளை உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் அப்பெண் அவ்வாறு செய்யக் கூடியவராக இல்லாமலும் இருக்கலாம். நாம் சொல்லிய கருத்தில் இருந்து எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலும் அவ்வாறு பேசி இருக்கலாம். அப்பெண்ணே தான் பேசியதைப் பின்னாளில் பார்த்தால் கண்டிப்பாக வருந்தலாம். கேவலம் ஒரு விவாதத்தில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வாறு பேசி ஜெயித்து யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறோம் என ஒரு கணம் மனதை உபயோகித்து வேண்டாம், மூளையை உபயோகித்தாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் இல்லையா?

இதே போல் தான் நீயா நானா நிகழ்ச்சியில் நான் பார்த்த வேறு சில பாகங்களில் பங்கு பெற்ற கணவன்-மனைவியர் சிலர் பேசிய பேச்சுக்களும். எதிர் அணியில் இருந்த கணவனைப் பற்றி "என் கணவர் இந்த மாதிரி" என்று கணவரின் சில குறைகளைப் பற்றி மனைவியும், "என் மனைவி இந்த மாதிரி" என்று மனைவியின் சில குறைகளைப் பற்றி கணவரும் கூறுவதைப் பார்த்திருக்கிறேன். ரெண்டு பேர் தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு அரங்கத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறுவதை என்னால் ஏனோ sportiveஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தன்னுடைய வாழ்க்கைத்துணை தன்னுடைய குறைகளைப் பற்றி ஒரு பொதுவிடத்தில் வேற்று மனிதர்களிடம் கூறுவதைப் பார்த்து "நீ என்னிடம் இதை முன்பே சொல்லியிருக்கலாமே" என்ற பார்வை பார்த்த ஒரு சிலரையும் அந்நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கைத் துணையின் குறைகளைப் பற்றி வேற்று மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டு நாளை தன் கணவரையோ மனைவியையோ எவ்வாறு கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராகப் பார்த்து பேசுவார்கள் என்பதும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. விஜய் டிவிக்கு அது வியாபாரம், சம்பந்தப் பட்டவர்களுக்கு அது வாழ்க்கையில்லையா? ஏன் அதை உணர மறுக்கிறார்கள்?

நான்கு நாட்களுக்கு முன் அனிமல் ப்ளானெட் (Animal Planet) அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். 'Heart of a Lioness' என்பது அந்நிகழ்ச்சியின் தலைப்பு. சபா டக்ளஸ் ஹாமில்டன்(Saba Douglas Hamilton) என்பவர் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்பவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். கிழக்காப்பிரிக்க நாட்டான கீனியாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் இங்கிலாந்தை மூலமாகக் கொண்டவர். சம்புரு வனவிலங்கு சரணாலயத்தில் (Samburu Wildlife Reserve) தாங்கள் கண்ட ஒரு விநோதமான காட்சியைப் பற்றி சபாவிற்குத் தெரியப் படுத்துகின்றனர் வனவிலங்கு பாதுகாவலர்கள்.

ஒரிக்ஸ் (Oryx) எனும் வகை மானின் குட்டி ஒன்றை ஒரு பெண் சிங்கம் வளர்ப்பதைப் பற்றிய செய்தி தான் அது. அதை நம்ப முடியாமல் தானே கண்டறிவதற்காக சபா காட்டுக்குள் பயணித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார். அப்படம் தான் "Heart of a Lioness". முதன் முதலில் மான் குட்டியின் பின்னே அப்பெண் சிங்கம் மெல்ல நடந்து செல்வதைப் பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் மிகுந்த அனுபவம் கொண்ட சபாவும் தான் இது போல ஒரு நிகழ்வை அது வரை கண்டதே இல்லை என்கிறார்.


அச்சிங்கத்திற்கு அங்கிருந்த மக்கள் 'Kamunyak' என்று பெயர் சூட்டியிருந்தனர். அப்பெயருக்கு அவர்களுடைய மொழியில் 'ஆசிர்வதிக்கப்பட்டவள் - Blessed One' என்று பொருளாம். தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு பிராணியைக் கமுன்யாக், பேணி வளர்ப்பதற்கான காரணத்தை அறிய முற்படுகிறார் சபா. சிங்கங்களைப் பற்றிய ஆய்வாளர் ஒருவரின் மூலம் கமுன்யாக்கின் இவ்விசித்திர குணத்திற்கான காரணம் ஒரளவுக்குத் தெரிய வருகிறது. அது சிங்கங்கள் எப்போதும் ஒரு சமூகமாக(Pride) வாழ்வன. மற்ற கொடிய விலங்குகளைப் போல் அல்லாமல் சிங்கங்கள் ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், அதன் குட்டிகள் என்று எப்போதும் ஒரு கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை.

காடுகளில் மனிதர்களின் குறுக்கீட்டால், காடுகள் சுருங்கி அதன் காரணமாக சிங்கங்களின் வாழும் முறைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மசாய் இன மக்கள் சிங்கங்களைத் தங்களுடைய மிகப்பெரும் எதிரிகளாகக் கருதுகின்றனர். அத்தோடு சிங்கங்களை வேட்டையாடுதல் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால், தன்னுடைய இயல்பான குடும்ப நிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தங்களை எல்லாம் இழந்து ஒரு சிங்கம் அனாதையாவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவாம். அவ்வாறு கமுன்யாக் எனும் அச்சிங்கம் தனிமை படுத்தப் பட்டிருக்கலாம். அதனுடைய குட்டிகளை அது பறிகொடுத்திருக்கலாம்.


அதன் காரணமாக, தன் குட்டியை ஒத்த மான் குட்டியைத் தன்னுடைய குட்டியாகப் பாவித்து அன்பாய் நடத்துகிறது. மான் குட்டி சிங்கத்திடம் வந்து சேர்ந்த நாளிலிருந்து இமை பொழுதும் அக்குட்டியை விட்டுப் பிரியாமல் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டதாம் கமுன்யாக். கிட்டத்தட்ட 15 நாட்கள் இரவும் பகலும் சிங்கத்தையும், மான் குட்டியையும் பின் தொடர்கிறார் சபா. அக்காலக் கட்டத்தில் கமுன்யாக் வேட்டையாடச் செல்லவில்லையாம். ஒன்றும் சாப்பிடவும் இல்லையாம். மான் குட்டியைக் கொன்று தின்று வரும் மற்ற விலங்குகளையும் கமுன்யாக் விரட்டி விடுமாம். தன் குட்டியைத் தன்னொடு கொண்டு செல்ல வந்த தாய் மானையும் கமுன்யாக் விரட்டி விட்டதாம்.

பதினைந்து நாட்கள் கண்ணும் கருத்துமாக மான் குட்டியைத் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டது அச்சிங்கம். மான்குட்டியும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்ற போதிலும், அவ்வப்போது புல் மேயும். சிங்கங்களை எதிரிகளாகக் கருதும் மசாய் இன மக்களாலேயே, இச்சிங்கம் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்ற ரீதியில் போற்றப் பெற்றது. சிங்கம் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் வாடுவதைக் கண்ட வனவிலங்கு சரணாலயத்தின் வார்டனும் சிங்கத்துக்கு மாமிசம் தரச் செய்கிறார். கமுன்யாக் அதையும் சாப்பிட மறுக்கிறது.


பதினாறாம் நாள், கமுன்யாக்கும் அம்மான் குட்டியும் ஒரு குட்டையில் சிறிது நீரருந்துகின்றன. அதன் பின்னர் சிங்கம் அயர்ந்து கொஞ்சம் இளைப்பாறுகிறது. மான் குட்டி சிங்கத்தின் பார்வையிலிருந்து சற்றே விலகிச் செல்லுகிறது. கமுன்யாக்கும் அதை பின் தொடராமல் அமர்ந்திருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய ஆண் சிங்கம் மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது. இதை நேரடியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த சபா நாதழுதழுக்கப் பேசியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் நடந்தது எந்தக் கல்லையும் கரையச் செய்வது.

தான் பெற்ற தன் குட்டியைப் பறிகொடுத்தது போல கமுன்யாக் செய்வதறியாது திகைக்கிறது. ஆண் சிங்கம் மான் குட்டியைத் தூக்கிச் சென்ற இடத்திற்கு கமுன்யாக் பின் தொடர்ந்து செல்கிறது. ஆனால் வலிமை பொருந்திய பெரிய சிங்கத்தை எதிர்த்து போராடும் சக்தியில்லாமல் தான் பதினைந்து நாட்களாகப் பார்த்து பார்த்து வளர்த்த மான்குட்டி கொல்லப்படுவதை பார்க்கிறது. கமுன்யாக் என்ற அந்த சிங்கம் அந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இது எல்லாம் நடந்தது 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில். அதன் பின்னர் கமுன்யாக் மேலும் 5 மான் குட்டிகளை வளர்த்ததாம். ஆனால் முதல் மான்குட்டியைப் போல மற்ற குட்டிகளால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் கமுன்யாக்கை யாரும் பார்க்கவில்லையாம். ஆனால் அச்சிங்கத்திற்கு ஒரு தேவதைக்குரிய மதிப்பினையும் மரியாதையையும் தந்திருக்கின்றனர் அங்குள்ள மக்கள்.

இந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய சுட்டிகள் சில:

அனிமல் ப்ளானெட் காணொளிகள்

http://www.lewa.org/oryx-lioness.php

http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html


மான்குட்டியை வளர்க்கும் சிங்கத்தினைப் பற்றிய நிகழ்ச்சியினை அனிமல் ப்ளானெட்டில் கண்டதும் எனக்கு விஜய் டிவியில் நான் இரு மாதங்களுக்கு முன்னர் கண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சியில் அப்பெண் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு உயிரிடம் அன்பு செலுத்தும் ஒரு கொடிய விலங்கையும், வறட்டு வாதத்துக்காகத் தான் பெற்ற பிள்ளையானாலும் பலி கொடுப்பதைப் பற்றி சிறிதும் கூச்சமின்றி பேசும் பெண்ணையும் பார்த்தது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை தான். அனிமல் ப்ளானெட்டில் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது, அந்நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் சிலர், விவிலியத்தில்(Bible) இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டியிருந்தனர். அது -

"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down with the young goat,
The calf and the young lion and the fatling together; And a little child shall lead them."
Isaiah 11:6

ஓநாயோடு செம்மறி ஆட்டுக்குட்டியும், சிறுத்தையோடு ஆடும், சிங்கத்தோடு கன்றுக்குட்டியும் அன்போடு தன் இயல்பை மாற்றிக் கொண்டு உறவாடும் காலத்தில், இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.

Monday, September 07, 2009

வேண்டாதவைகள்

அன்னிக்கு ஒரு நாள் ஞாயித்துக் கெழமை. வீட்டுலேருந்து தெருவுல இறங்கி நடந்து எங்கேயோ போய்க்கிட்டிருந்தேன். தெருவுல பத்து வயசு பையன் ஒருத்தன் சத்தமா பாட்டு பாடிக்கிட்டு போய்க்கிட்டுருந்தான். "ச்சூ...ச்சூ...மாரி... ச்சூ...ச்சூ...மாரி..." அப்படிங்கிற பூ படத்து பாட்டை. பாட்டோட இந்த முதல் வரியைப் பாடுன அந்த பையன் பாட்டுக்கு நடுவுல இருக்குற வரிகளைப் பாடலை. அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை. ஆனா பாட்டோட கடைசி வரியை மட்டும் அழுத்தம் திருத்தமா பாடுனான். "கொல்லை பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி" அப்படின்னு. அந்த கடைசி வரியைப் பாடுனப்போ அந்த பையன் ரொம்ப எஞ்சாய் பண்ணி பாடுன மாதிரி இருந்துச்சு. முகமெல்லாம் ஒரே சிரிப்பு. பாட்டோட மத்த வரிகளை எல்லாம் விட்டுட்டு அந்த பையன் இந்த கடைசி வரியை மட்டும் பாடுனதை பாத்த எனக்கும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்லனும்னா அந்த பாட்டை டிவில முதல் முறை கேட்டப்பவே அந்த கடைசி வரி மட்டும் தான் என் மனசுல நின்னுச்சு. "அடுத்தவன் கிட்ட இருக்கற நல்லதை எல்லாம் விட்டுடுங்க வேண்டாததை எல்லாம் கத்துக்கிட்டு வந்துருங்க" அப்படின்னு சின்ன வயசுல அம்மா அடிக்கடி திட்டுனதும் ஞாபகம் வந்துச்சு. பள்ளிக்கூட நண்பன் மன்னாரு(பட்டப்பெயர் தான்) கூட, நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி வீணா போற சம்பவம் எதாச்சும் நடந்துச்சுன்னா - உதாரணத்துக்கு ரெண்டு பேரும் பரிட்சையில ஒரே மாதிரி கம்மி மார்க் வாங்குனாலோ, க்ளாஸ்ல பேசி ஒன்னா வெளியே நின்னாலோ ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்லுவான் "டேய் வுடுடா! நாம ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க. இதை எல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு"ன்னு. இது காலப்போக்குல "ஒரே குட்டை...ஒரே மட்டை..வுடுடா"ன்னு சுருக்கமா சொன்னாலும் புரிஞ்சுக்கற மாதிரி ஆகிப் போச்சு. வலையுலகத்துலேயும் நான் ஊறுன அதே குட்டையில் ஊறிய சில "எஞ்சோட்டு ஃப்ரெண்டுங்க" இருப்பாங்கங்கிற நம்பிக்கையில ஒரு முழுக்க முழுக்க வேண்டாத சமாச்சாரங்களை உள்ளடக்குன பதிவு. இப்பதிவு ஒரு சாராருக்கு ஒவ்வாமையைத் தரலாம். அப்படி தர்ற பட்சத்தில் இந்தப் பதிவைச் சாய்ஸ்ல விட்டுடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்போ ஆறாவது படிச்சிட்டுருந்தேன்னு நெனைக்கிறேன். வருஷம் அனேகமா 1989ஆ தான் இருக்கனும். அப்போ இந்தியாவின் பிரதம மந்திரியா இருந்த ராஜீவ் காந்தி அப்போதைய சோவியத் யூனியன்ல சுற்றுப்பயணம் மேற்கொள்ளறாரு. அரசு முறை பயணத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பினார்கள். எனக்கு 'live'ஆகப் பார்த்த ஞாபகம் தான். மாஸ்கோவில் அவருக்கு ரஷிய நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்படுகிறது. எப்படி? ரஷிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒரு இளம்பெண் ஒரு தட்டில் பெரிய கேக் ஒன்றை ஏந்தி ராஜீவை வரவேற்க வருகிறார். பெரிய கேக்கின் நடுவில் ஒரு சிறிய கின்னத்தில் உப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பாரம்பரிய வரவேற்பு முறையின் படி, வரவேற்கப்பட்டவர் கேக்கின் ஒரு சிறு துண்டை எடுத்து கின்னத்தில் உள்ள உப்பில் தோய்த்து சாப்பிட வேண்டும். ராஜீவும் அவ்வண்ணமே செய்கிறார். ஆனால் அதற்கு முன்னர் அவர் செய்தது தான் என் கவனத்தைக் கவர்ந்தது - அவர் செய்தது அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது. மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜீவ் ரஷிய பெண்ணை முத்தமிடும் படம் முதல் பக்கத்தில் வெளியானது. அன்று ஸ்கூலுக்குச் சென்றதும் எஞ்சோட்டு பையன் ஒருத்தன் என்னை பார்த்து கேட்டது "டேய்! நேத்து ராஜீவ் காந்தி எப்படி கிஸ் அடிச்சான் பாத்தியா?" :) இது நாள் வரையிலும் ராஜீவும் மிக்கைல் கோர்பசேவும் அப்பயணத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும், அப்பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. அதெல்லாம் யாருக்கு வேணும்ங்கறீங்களா? அதுவும் சரி தான். நிற்க. பிரபலமாக இருக்கும் நடிகர்கள், அரசியல்வாதிகள் இவர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஏக வசனத்தில் குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)

நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது. கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1995ஆம் ஆண்டில் வெளிவந்த எத்தனை தமிழ் படங்களைத் தியேட்டரில் பார்த்திருப்பேன் என நினைவிலில்லை. ஆனால் 'U' சான்றிதழ் அல்லாத அவ்வாண்டில் வெளிவந்த சில 'பெயர் பெற்ற' படங்களை நானும் எஞ்சோட்டுப் பையன்களும் தியேட்டரில் தவறாது பார்த்துவிடுவோம். அது போல தான் ஒரு பிரபல ஆங்கில 'expletive' ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் ஆடுகளத்தை நினைவுபடுத்தும் சென்னை ஆனந்த் தியட்டேரில் அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்க நானும் எனது கூட்டாளிகள் இருவரும் புதன் கிழமை மதிய க்ளாஸ்களை பங்க் அடித்து விட்டு மதியான சாப்பாட்டை ஏசிடெக் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். பெசண்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை செல்லும் 23C வழித்தடப் பேருந்தில் காந்தி மண்டபம் நிறுத்தத்தில் மூவரும் ஏறினோம். ஷோ ஆரம்பிக்க கொஞ்ச நேரமே இருந்த காரணத்தினால் பேருந்து ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிரில் மெதுவாக செல்லும் போதே இறங்கி விட வேண்டும் என்று மூவரும் முடிவு செய்தோம். அப்படி இறங்காவிட்டால் பஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் நிற்கும். நீண்ட தூரம் பின்புறம் நடந்து வர வேண்டும். அந்த ப்ளான் பிரகாரம் நான் முதலில் பஸ்சின் கடைசி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னாடி என் கூட்டாளிஸ் ரெண்டு பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி பஸ் ஆயிரம் விளக்கு எதிரில் ஸ்லோவாகவில்லை. என் பின்னாடி நின்று கொண்டிருந்த ரெண்டு பேரில் ஒருவன் எதிர்பாராத விதமாக என்னை பஸ்சிலிருந்து தள்ளி விட்டு விட்டான். எப்படியோ சேதாரம் இல்லாமல் சிங்கிள் பீஸாகக் கீழே இறங்கிவிட்டேன். என்னுடன் வந்த ரெண்டு பேரும் டிவிஎஸ் வரை பஸ்சிலேயே சென்று விட்டனர்.

இந்த இடத்தில் கதையின் ஹீரோ...அட நான் தானுங்கோ...சராசரி தமிழ் பட ஹீரோ மாதிரி செயல்படாமல் ஒரு ஹாலிவுட் ஹீரோ மாதிரி வித்தியாசமாக செயல்பட்டேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன பண்ணேன்? பஸ்சுலேருந்து நாம தள்ளி விட்டவன் செத்தானா பொழச்சானான்னு ரெண்டு பேரும் பயந்துக்கிட்டே டிவிஎஸ் பஸ் ஸ்டாப்லேருந்து பின்னோக்கி ஆனந்த் தியேட்டர் வரை வேக வேகமாக நடந்து வந்தார்கள். அப்படி ஓட்டமும் நடையுமாக வந்தவர்களை வரவேற்ற கதையின் ஹீரோ சொன்னது "டேய்! 20 ரூ டிக்கெட் தாண்டா கெடைச்சது. படம் போடப் போறான் சீக்கிரமா வாங்கடா". படத்தின் முதல் பாதியை என்னோடு அமைதியாகப் பார்த்த இருவரும் இடைவேளையின் போது விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். "டேய் மாமா! பஸ்சுலேருந்து தள்ளி விட்டுட்டோம்னு நீ எங்க சட்டையைப் புடிப்பேன்னு பயந்துக்கிட்டே வந்தோம். நீ என்னடான்ன டைம் வேஸ்ட் பண்ணாம டிக்கெட் வாங்கி வச்சிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கே...அதுவும் பால்கனி டிக்கெட்" என்றார்கள். அப்போ தான் நானும் தெரிஞ்சிக்கிட்டேன் இந்த மாதிரி ஓடற பஸ்சுலேருந்து யாராச்சும் தள்ளி விட்டாங்கன்னா அவங்க சட்டையைப் புடிக்கனும்னுட்டு. ஓடற பஸ்சுலேருந்து ரிஸ்க் எடுத்து பாக்கற அளவுக்குப் படத்துல "ஒன்னும்" இல்லை. ஒரு வேளை பஸ்சுலேருந்து விழுந்து எதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா மறுநாள் தினத்தந்தில ஹெட்லைன்ஸ் எப்படி வரும்னு யோசிச்சுப் பார்த்தேன் - "கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். வர்க் ஷாப் காக்கி சீருடை அணிந்திருந்தார்". கேக்கவே கொஞ்சம் கேவலமா தான் இருக்கில்ல? ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன்.

அன்னிக்கு என்கூட பஸ்சுல வந்த ரெண்டு பேருல ஒருத்தன்(அதாவது என்னை புடிச்சித் தள்ளாதவன்) ஒருத்தன் என்ன ஒருத்தன் - அவன் பேரு தியானேசுவரன் - ஷேன் வார்னையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு பதிவெழுதினானே அவனே தான் - கில்பான்சி படத்திலும் ஒரு நேர்மையையும் ethicsஐயும் எதிர்பார்க்கும் அவனை மாதிரி ஆன ஆளை இது வரைக்கும் நான் பாத்ததேயில்லைங்கங்கோ. நான் சொல்லும் காலகட்டத்தில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பழம்பெரும் "விஞ்ஞான் நூலின்" பெயரைக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான மலையாள தேசத்தோடு தொடர்புடைய அந்த இயக்குனரின் படம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. "ஒளிவிளக்கான" இயக்குனரால எடுக்கப்பட்ட "பஞ்சபூதங்களில்" ஒன்றின் பெயரைக் கொண்ட அந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினான். "மச்சி! ஏண்டா உனக்கு அந்த படம் பிடிக்கலை, இந்த படம் பிடிச்சிருக்குன்னு கேட்டேன்". அதுக்கு அவன் சொன்ன பதில் "என்னடா படம் அது? கேவலமா இருந்துச்சு. அந்த படத்தைப் பார்த்தா எதோ வாழறதே கில்மாவுக்காகத் தாங்கிற மாதிரி இருக்கு. ஆனா இந்த படம் ஃபீலிங்சுக்கு முக்கியத்துவம் குடுக்குது மச்சி. நம்மளை நம்பி வந்தவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கலைன்னா என்னாகும்னு நல்லா சொல்லிருக்காங்க. நல்ல படம் அது" அப்படின்னான். பட்...அந்த சின்ன வயசுலேயே அவ்வளவு நீதியோடயும் நியாயத்தோடயும் நேர்மையோடயும் சிந்திச்ச அவனோட அந்த அப்ரோச் எனக்கும் பிடிச்சிருந்தது :)

Wednesday, August 12, 2009

ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது?

டிவியில எதோ ஒரு நிகழ்ச்சிக்கு இடையில விளம்பரம் ஒன்னு வந்தது. ஹேப்பிடெண்ட் Happydent சூயிங் கம்முக்கான விளம்பரம் அது. ஹேப்பிடெண்ட் சூயிங் கம் மென்னுட்டு யானையோட தந்தமெல்லாம் பளிச்சுன்னு வெளிச்சம் அடிக்கிற மாதிரி வரும்.

"அம்மா! பேசாம நம்மளும் இந்த மாதிரி ஒரு யானை வளர்க்கலாமா?"

"ஏன்?" - இது மை த மம்மி.

"நம்ம வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் இருட்டா இருக்குல்ல? இந்த மாதிரி யானை இருந்துச்சுன்னா வழியெல்லாம் தந்தத்தால வெளிச்சம் கொடுத்துக்கிட்டே வருமில்ல கார் ஹெட்லைட் மாதிரி?"

"யானைக்கு சாப்பாடு?"

"அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியானம் மம்மம் ஊட்டறீங்கல்ல? அதை தான் அவ முழுசா சாப்பிடாம மிச்சம் வெச்சிடறால்ல? அதை தெனமும் ஒரு வேளை அந்த யானைக்குப் போட்டா அதை சாப்பிட்டுக்கிட்டு தானா ஒரு ஓரமா நம்ம வீட்டுல வளர்ந்துக்கிட்டு போவுது"

அந்த நேரம் பாத்து சீன்ல எண்ட்ரி ஆன எங்கப்பா சொன்னது "நாங்க உன்னை அடிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா இந்த மாதிரி ஐடியா கொடுக்கிறதுக்காக யானை வந்து உன்னை பொடறியிலேயே அடிக்கும்"

ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time'ஓ? யாருமே நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே?

****************************************************

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸோட மைசூர்பா எல்லாரும் வாங்கி சாப்பிடுங்க. உடம்புக்கு நல்லதோ இல்லையோ...மூளைக்கு ரொம்ப நல்லது. சமீபத்துல எங்க ஆஃபிசு நண்பர் ஒருவர் தன் சொந்த ஊரான கோவைக்குப் போயிட்டு வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லேருந்து மைசூர்பா வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் தந்தாரு.

நான் அதை அதிகமா கூட சாப்பிடலைங்க. கொஞ்சமா கிள்ளி தான் வாயில போட்டேன். திடீர்னு எனக்கு ஒன்னு தோனுச்சு. பஞ்சதந்திரம் படத்துல நாயர் கேரக்டர்ல வர்ற ஜெயராம் சொல்லுவார்ல - "என் பையனுக்கு ஹார்ட்ல தொளா" அப்படின்னு. அந்த மாதிரி ஹார்ட்ல துளை இருக்கறவங்க, தினமும் நெய், வெண்ணை மற்றும் இதர கொழுப்பு சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளையோ இல்ல இனிப்புகளையோ சாப்பிட்டா என்னன்னு?

ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டா இதயத்துல அடைப்பு ஏற்படும்ல? ஏற்கனவே இதயத்துல ஓட்டை இருந்துச்சுன்னா இது மாதிரி சாப்பிடறதுனால அது அந்த ஓட்டையைப் போய் அடைச்சிடும்ல?

ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி இதெல்லாம் பண்ணறதுக்குப் பதிலா மைசூர்பா தெரபி பண்ணலாம் தானே? இந்த கண்டுபிடிப்புக்கு காசு பணம் எல்லாம் வேணாம்ங்க. ஏதோ ஒரு நோபல் பரிசோ, ஒரு பாரத் ரத்னாவோ இல்லை ஒரு ஆஸ்கர் அவார்டோ பாத்து போட்டு குடுத்தா நல்லாருக்கும்.

****************************************************

நேத்து காலையில ஆஃபிசு போறதுக்கு பஸ்சுக்காகத் திருவான்மியூர் டெர்மினஸ் கிட்ட நின்னுக்கிட்டிருந்தேன். ஃபுல் ஷர்ட், ஃபுல் பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்கிட்டு, கால்ல பாலிஷ் செஞ்ச ஷூ போட்டுக்கிட்டு காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு மொபைல் ஃபோன்ல பாட்டு கேட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். போதாக்குறைக்கு முதுகுல லேப்டாப் பேக் வேற மாட்டிருந்தேன். வெள்ளை வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு ஒரு பச்சை கலர் துண்டைக் கழுத்துல போட்டுக்கிட்டு, அவ்வை ஷண்முகி படத்துல ஷண்முகி மாமி சொல்ற மாதிரி காதெல்லாம் குசுகுசுன்னு வெள்ளை முடியோட ஒரு பெரியவர் என்கிட்ட வந்தாரு.

பஸ் டெர்மினஸ் பக்கம் கையைக் காட்டி "உள்ள பஸ் இருக்குங்களா தம்பி"னு கேட்டார்.

பஸ் டெர்மினஸுக்குள்ள பஸ் இல்லாம எப்படி இருக்கும். இவரு எந்த நம்பர் பஸ்ஸைப் பத்தி கேட்கறாருன்னு நெனச்சிக்கிட்டே என் காதுல மாட்டிருந்த இயர் ஃபோனைக் கழட்டிட்டு கொஞ்சம் குனிஞ்சு கேட்டப்போ தான் அவர் கேட்டது தெளிவா காதுல விழுந்தது "உள்ளுக்குள்ள கக்கூஸ் இருக்குங்களா தம்பி"

"உள்ளே போய் கேட்டு பாருங்க" அப்படின்னேன். அதுக்கப்புறம் பஸ் வந்தது, நான் அதுல ஏறி ஆஃபிசு போயிட்டேன்.

ஆஃபிஸ் முடிஞ்சு நண்பர் ஒருத்தர் தன்னோட கார்ல அடையாறுல டிராப் பண்ணார். கார்ல CDல எதோ பாட்டு ஓடிட்டிருந்தது. அது புடிக்காம எஃப் எம் ரேடியோ வச்சாரு. சூரியன் எஃப் எம்ல புதுசா சினிமா நகைச்சுவை காட்சிகளின் ஒலி வடிவத்தை ஒலிபரப்பறாங்க போல. சொன்னா நம்ப மாட்டீங்க. அவரு ரேடியோ வச்ச நேரம் "என்ன பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே? இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கேட்டிருக்கலாம்ல? அது ஏண்டா என்னை பாத்து கேட்டே? ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது"ன்னு செந்திலைக் கவுண்டர் திட்டிக்கிட்டிருந்தாரு. அதை கேட்டுட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சு போச்சு.

****************************************************

தேசதுரோக கேசுங்கிற சந்தேகத்துல தில்லி போலீஸ் என்னை விசாரிச்சு இன்னையோட சரியா எட்டு வருஷம் முடியுதுங்க. "தேச துரோக கேஸ் அளவுக்கெல்லாம் நான் வர்த் இல்லைய்யா"ன்னு எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுத்துட்டாங்க. இப்போ பாருங்க அதை பத்தியெல்லாம் பதிவெழுதி பெருமை பட்டுக்க வேண்டியிருக்கு?

****************************************************

என் தம்பி(எங்க சித்தி பையன்) அவனுக்கும் எனக்கும் 18 வய்சு வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். அவன் ஆரம்பத்துலேருந்து வட இந்தியாவுலேயே செண்ட்ரல் ஸ்கூல்ல படிச்சதுனால அவனுக்குத் தமிழ் அதிகமா தெரியாது. வீட்டுல நல்லா தமிழ் பேசுவான்னாலும் சில செந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா அவனுக்குப் புரியாது. சில வருஷங்கள் முன்னாடி வரைக்கும் அவனை வலுக்கட்டாயமா உக்கார வச்சி - "டேய்! இப்ப நீயே இருக்குறே...நாளைக்கே நீ படிச்சி வளர்ந்து பெரியவனாகி நம்ம நாட்டோட பிரதம மந்திரியாவோ, முதல் குடிமகனாவோ ஆயிட்டேன்னு வை, அப்போ நம்மளோட சமூகத்துல மலிந்து கிடக்கிற கொடுமைகளையும் மூட பழக்க வழக்கங்களையும் போக்குறதுக்காகவும், மத நல்லிணக்கம் ஏற்படறதுக்காகவும் நீ என்ன பண்ண போறே"ன்னு கேப்பேன். அவனும் "மத நல்லிணக்கம்னா என்னண்ணா?" அப்படின்னுவான். நானும் எதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு லைட்டா விளக்கம் கொடுப்பேன். அவனும் யோசிச்சு பாத்துட்டு "தெரியலியேண்ணா" அப்படின்னுவான். "ஒரு இந்திய நாட்டு பிரஜையா இருந்துக்கிட்டு உன்னை வளர்த்து ஆளாக்குன சமுதாயத்துக்காக ஒன்னும் செய்யாம தெரியலியேன்னு பதில் சொல்றியே. தெரியலியேங்கிறதெல்லாம் ஒரு பதிலாடா"ன்னுவேன்.

நான் இந்த மாதிரி அவனை பாக்கறப்பெல்லாம் கேக்க ஆரம்பிச்சதை பாத்து கொஞ்ச நாள்ல அவனும் உஷாராயிட்டான். நான் "இப்ப நீயே இருக்கறே" அப்படின்னு ஆரம்பிச்சாலே "அண்ணா அம்மா கூப்பிடறாங்க, தண்ணி தாகம் எடுக்குது" அப்படின்னுட்டு ஓடிடுவான். ஓட முடியாத படி இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்டான்னா "ஏழைகளுக்கு உதவி செய்வேன்" அப்படின்னுவான். "என்ன உதவிடா"ன்னு நானும் குடைஞ்சா "வயசான பாட்டிகளுக்கெல்லாம் இலவசமா கண்ணாடி வாங்கி தருவேன், ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கெல்லாம் இலவசமா புக்ஸ் வாங்கி தருவேன்" அப்படின்னு எதாச்சும் சொல்லிட்டு ஓடிடுவான்.

சமீபத்துல ஒரு நாள் பஸ்சுல ஜன்னலோர சீட்டுல அவன் உக்காந்துருந்தான், அவன் பக்கத்துல நான். தப்பிச்சு ஓட முடியாத படி என் கஸ்டடிக்குள்ள இருந்தான். மேலே கேட்ட மாதிரியே ஒரு கேள்வி கேட்டேன். "அண்ணா! ஏற்கனவே மெட்ராஸ்ல வெயில் ரொம்ப அதிகமா இருக்குது. நீங்க வேற வறுத்தெடுக்காதீங்க" அப்படின்னான்.

இந்த காலத்து பசங்க எவ்வளவு சீக்கிரம் பெரியவங்களாயிடுறாங்க? இல்லீங்களா? :)

****************************************************

ஆறு வருஷ கொடுமைக்கு கடைசியா ஒரு நல்ல விடிவுகாலம் கெடைக்கப் போவுதுன்னு நெனக்கிறேன். கன்னியாஸ்திரி வேடத்துல இருக்கற அபி ஆதியைப் பாத்து "டேய்! இது வரைக்கும் நான் உன் கிட்ட சண்டை கூட போட்டதில்லைடா. நான் செஞ்சதெல்லாம் தற்காப்பு தான். இனி நடக்கப் போறது தான் போர்" அப்படீங்கறாங்க. உடனே ஆதியும் "இறுதிக்கட்ட போரா"ன்னு கேக்கறாரு. அபியும் "ஆமாம்டா இறுதிக் கட்ட போர்"னு கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க. ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடியே கோலங்கள் இயக்குனர் திருச்செல்வத்துக்கு சினிமா இயக்கற வாய்ப்பு கெடைக்கிருக்குன்னு குங்குமம் பத்திரிகைல போட்டுருந்துச்சு. அதனால சீக்கிரமே கோலங்கள் சீரியலை முடிக்கப் போறதாவும் சொல்லிருந்தாங்க. இதை உண்மைன்னு நம்பி கோலங்களால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற இன்னொரு அலுவலக நண்பர் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் சந்தோஷமா இந்த விஷயத்தைப் போய் வீட்டுல சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாராம். இப்போ அபியும் ஆதியுமே கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க...இறுதிக் கட்ட போர்னு. எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல இறுதிக் கட்ட போர் முடிஞ்சிடாதுங்க?

****************************************************

Saturday, July 18, 2009

இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்க

நான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. உனக்கு எந்த போட்டியில ஒரு கோடி ரூபாய் கெடைச்சுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது. அந்த படத்துல கதாநாயகனைக் கேக்கற கேள்விகளுக்கும் அவன் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும். அதனால அக்கேள்விகளுக்கு அவன் சரியான பதில் சொல்வான். ஹாட் சீட்ல உக்கார வைச்சு யாரும் என்னை கேள்வி எல்லாம் கேக்கலைன்னாலும், எனக்கு நியாபகத்துல இருக்கற சில பல பிஸ்கோத்து விஷயங்களுக்கும், நான் என் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ட கேட்ட சில நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அப்படிப்பட்ட பிஸ்கோத்து விஷயங்கள் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கக் காரணமாக இருந்த அந்நிகழ்வுகளை நினைவு கூறும் ஈக்வலி பிஸ்கோத்துத் தனமான பதிவு இது.

1. 2004ஆம் ஆண்டில் ஒரு நாள்னு நினைக்கிறேன். அப்போ நான் டெல்லியில இருந்தேன். ஞாயித்துக்கிழமை காலை டிபன் சாப்பிட்டுட்டு டிவி போட்டா சன் டிவில சப்தஸ்வரங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியில ஒரு பொண்ணு பாடிக்கிட்டு இருந்துச்சு. அதை பாத்ததும் எனக்கு ஆச்சரியம். அந்த பொண்ணோட முகம் ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. சின்ன வயசுல எங்கேயோ பாத்துருக்கோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணோட பேரும் சட்டுன்னு நியாபகம் வந்துடுச்சு. அப்படியே கொசுவத்தியை ஒரு பதினைஞ்சு வருஷம் பின்நோக்கி சுத்துனேன். அப்போ நாங்க சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை வேளைகளில் அக்பர் சாகிப் தெருவில் மசூதிக்கு எதிரில் இருந்த திருவல்லிக்கேணி ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி வகுப்புகளுக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த வகுப்புகள்ல தான் அந்த பொண்ணும் ஹிந்தி படிச்சுது. நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அந்த பொண்ணு அப்போ அஞ்சாவது படிச்சிட்டுருக்கும்னு நெனக்கிறேன். ஆனா அந்த பொண்ணோட பேரும் முகமும் நியாபகம் இருந்ததுக்குக் காரணம் 'ராஷ்ட்ரபாஷா' வகுப்பில் ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம்ங்கிறது இல்லை. அங்கே சுந்தர்ராஜன் சார் சுந்தர்ராஜன் சார்னு ஒரு மாஸ்டர் இருந்தார். அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு மாலை வேளைகளில் ஹிந்தி வகுப்பு எடுக்கிறதுக்காகத் தினமும் கே.கே.நகர்லேருந்து திருவல்லிக்கேணி வருவார். அவரை மாதிரி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்டைப் பாக்க முடியாது. தான் எடுக்கிற வகுப்புகளுக்கான நோட்ஸை ரொம்ப சிரத்தை எடுத்து எழுதி வச்சிருப்பாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்து மாணவர்களுக்கு அந்த நோட்ஸை விநியோகம் பண்ணறதுக்குன்னு ஒரு சிஸ்டம் வச்சிருப்பாரு.

ஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன். ஒரு நாள் நான் மேல சொன்ன அந்த பொண்ணு என்கிட்ட வந்து "போன ரெண்டு வாரமா எனக்கு ஃபீவர். அதனால நான் க்ளாஸுக்கு வரலை. உங்க நோட்ஸை வீட்டுக்குத் தந்தீங்கன்னா எழுதிட்டுத் தரேன்"னு சொல்லி வாங்கிக்கிட்டு போச்சு. நான் எழுதி வச்சிருந்த அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிட்டுப் போன அந்த பொண்ணு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு க்ளாஸுக்கு வரலை. மாஸ்டர் ஒவ்வொரு க்ளாஸ்லயும் கொடுக்கற நோட்ஸை என்னால எழுத முடியலை. சில பாடங்களை நான் வேற நோட்ல எழுதி வைக்க வேண்டியதாப் போச்சு. அதுக்கு மேல நான் கொடுத்த் என் நோட்புக்குக்கு என்னாச்சோங்கிற கவலை வந்துடுச்சு. சரின்னுட்டு மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணோட வீட்டு விலாசத்தை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்கே போய் கேக்கலாம்னு முடிவு பண்ணேன். அவங்க வீடும் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுல தான் இருந்துச்சு. பக்கத்துல தானே இருக்குன்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனேன். மணி ஒரு அஞ்சே முக்கால் இருக்கும். அவங்க வீட்டுல அவங்க அப்பா தான் இருந்தார். நான் அவங்க வீட்டுக்கு வந்த காரணத்தைச் சொன்னேன். "She is sleeping. You please wait. I will call her" அப்படின்னாரு. அப்புறம் "Come on my Child, some one has come to see you" அப்படின்னு தன் மகளைக் கூப்பிட்டாரு.

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை. வீட்டுல கூட இங்கிலீஷ் பேசறவங்க இருக்காங்கன்னு நான் கேள்வி பட்டுருக்கேன். ஆனா அப்போ தான் முதன்முறையா பார்த்தேன். அதோட அப்பல்லாம் மதியானம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது. தூங்கவும் எங்க வீட்டுல விட மாட்டாங்க. "விளக்கு வைக்கிற நேரத்துல கை கால் கழுவிட்டு சாமி கும்பிட்டுட்டு படிக்க ஒக்காந்துடணும்" இது எங்கம்மா தடிப்பசங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்ட ரூல். கிட்டத்தட்ட ஆறு மணி ஆகுது, ஹிந்தி க்ளாசுக்கு வேற நேரம் ஆகுது, தூங்கிட்டுருக்கற பொண்ணை அவங்க அப்பா இப்படி கொஞ்சி கொஞ்சி கூப்பிடறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கூப்பிட்டதும் கண்ணைக் கசக்கிட்டே அந்த பொண்ணு ஷிம்மீஸோட கீழே இறங்கி வந்துச்சு. இங்கே ஒரு கிளை கதை சுத்திக்கறேன். இந்த ஷிம்மீஸ் பத்தியெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பொண்ணுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா எங்கம்மா "போம்மா! போய் கவுன் மாட்டிக்கிட்டு வா. ஷிம்மீஸோடயா வெளியில வர்றது"ன்னு கேப்பாங்க. பனியனோட நாங்க வெளியில போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் திட்டு தான். ஸோ அப்போ தான் தெரியும் வெள்ளை கலர்ல இருக்கற அந்த கவுன் பேரு தான் ஷிம்மீஸ்னு. இங்கே இன்னொரு கிளை கதை சுத்திக்கிறேன். சமீபத்துல ஒரு நாள் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஷிம்மீஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்னன்னு. அது ஆங்கில வார்த்தையா தமிழ் வார்த்தையான்னு ஒரு சந்தேகம். எல்லாம் ஒரு பொது அறிவு சந்தேகம் தான் :)

Shimmy, Shimmies அப்படின்னு போட்டு கூகிள்ல தேடுனா ரிசல்டுகள் வந்தது. அப்போ முதலை படம் போட்ட நான் வச்சிருந்த லெக்காஸ்ட்(Lacoste) டி-ஷர்ட் பத்தியும் நினைவு வந்துச்சு. அந்த சட்டையில 'La Chemise Lacoste' அப்படின்னு எழுதிருக்கும். நான் அதை பல நாள் 'லா கெமிஸ் லெக்காஸ்ட்'னு தான் படிச்சிருக்கேன். ஆனா பிரெஞ்சு மொழியில 'Che' னு ஆரம்பிச்சா அதை 'ஷே'னு படிக்கனும்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் செவாலியே விருது வாங்கனப்போ தெரிஞ்சுக்கிட்டேன். Chemise அப்படிங்கறதை 'ஷெமிஸ்' னு படிக்கலாம்னு தோனுச்சு. ஷெமிஸ்னா என்னான்னு www.dictionary.comல தேடியதும் "A woman's loose fitting shirt like undergarment'னும் பழைய ஃபிரெஞ்சு மொழியில் "Shirt" அப்படின்னும் தெரிஞ்சது. அநேகமா Shimmy, Shimmies சொற்களுக்கு Chemise என்ற ஃபிரெஞ்சு சொல் மூலமா இருந்துருக்கலாம் போலிருக்கு. திரும்பவும் இப்போ மெயின் கதைக்கு வருவோம். அதுக்கப்புறம் என்னோட நோட் புத்தகத்தை வாங்கிக்கிட்டு நான் வந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் IITல படிச்சிட்டு இருந்தப்போ என் பேரைப் போட்டு கூகிள்ல தேடுனா முதல் பத்து பக்கங்கள்ல ஐஐடி வலைதளத்தில் என் பேரு வரும். அதே நெனப்புல...சரி இந்த பொண்ணு சப்தஸ்வரங்கள்ல எல்லாம் பாடிருக்கே ஒரு வேளை பிரபலம் ஆகிடுச்சோன்னு ஒரு நாள் கூகிள்ல தேடுனேன். மறுபடியும் ஒரு பொது அறிவுக்காகத் தான்:) பாத்தா விஜய் ஆண்டனி இசையில் சுக்ரன் படத்தில் அந்த பொண்ணோட அதே பேரு அதே இனிஷியல் உள்ள ஒருத்தங்க "உச்சி முதல் பாதம் வரை" அப்படின்னு ஒரு பாட்டு பாடிருக்காங்க. அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

http://www.thenisai.com/tamil/songs-music/sukran-tamil-songs.htm

2. காதலன் படத்துல 'ஊர்வசி ஊர்வசி' பாட்டுல பிரபு தேவா அண்ணா மேம்பாலத்துல ஒரு பஸ் மேலே ஏறி ஆடிக்கிட்டு வருவாரு பாத்துருக்கீங்களா? சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு? இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.

3. இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும். இது மாதிரி தான் நிஜ வாழ்க்கையில் கிழக்கே போகும் ரயில் ராதிகா, டிங்கிள் சிறுவர் புத்தகத்தில் வரும் சுப்பாண்டி, லிட்டில் மெர்மேய்டு இவங்களை எல்லாம் பாத்துருக்கேன்:) 2000 ஆண்டுல ஒரு நாள், அப்போ நான் சம்மர் ப்ராஜெக்ட் செஞ்சிக்கிட்டு இருந்தேன். தில்லி கரோல் பாக்ல இருக்கற ஒரு அலுவலகத்துக்குத் தான் தினமும் போவேன். அங்கே ஒரு சர்தார்ஜி ஒருத்தர் வந்திருந்தாரு. அவரு நான் அந்த ப்ராஜெக்ட் செய்திட்டு இருந்த அந்த கம்பெனியோட வாடிக்கையாளர். அவரைப் பாத்ததும் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு தோனுச்சு. ரொம்ப யோசிச்சிப் பாத்ததுல எங்களுக்கு "Structural Engineering" வகுப்பு எடுத்த எங்க பேராசிரியர்மாதிரியே இருந்தாரு அந்த கறுப்பு சர்தார்ஜி :) இதே மாதிரி நான் இந்தூர்ல இருக்கும் போது தனசேகர்னு ஒரு பையன் என் கூட ஆஃபிசுக்கு பஸ்ல வருவான். பஸ்ல வரும் போது தான் அவனோட பழக்கம். தமிழ் பையன். ஆனா எங்க கம்பெனிக்கு கன்சல்டண்டா சென்னையிலிருந்து வந்துருந்தாப்பல. 2006 வரைக்கும் டச்ல இருந்தோம். அதுக்கப்புறம் டச் விட்டுப் போச்சு. சமீபத்துல திடீர்னு ஒரு நாள் என் சென்னை நம்பருக்கு ஃபோன் பண்ணான். எனக்கு பயங்கர ஆச்சரியம். ஏன்னா நான் அந்த இடைப்பட்ட காலத்துல சித்தூர்கட், அகமதாபாத், பெங்களூர்னு பல இடங்களில் இருந்தேன். ஆனா அதை எல்லாம் மீறி சரியா என்னை என் சென்னை நம்பர்ல புடிச்சான். 'நான் தனசேகர் பேசறேன்'ன்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை. மேலே முதல் வரியில இருக்கற டெக்னாலஜியை உபயோகிச்சப்புறம் தான் நினைவு வந்தது - அந்த பையன் யாருன்னு. அந்த பையனோட நான் தொடர்பு படுத்தி வச்சிருந்த முகம் பழைய நடிகை சுமித்ராவோடது. அச்சு அசலா சுமித்ராவுக்கு மீசை வச்ச மாதிரியே இருப்பான். சிரிச்சான்னா சுமித்ரா மாதிரியே கன்னத்துல குழி விழும். "ஏய்! சுமித்ரா எப்படிப்பா இருக்கறே"ன்னு நான் கேட்டதும் "அட கடவுளே! இன்னும் நீங்க அந்த பேரை மறக்கலியா"அப்படின்னான். உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா?

4. இது என்னோட இருநூறாவது பதிவு. நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம். இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ?

Thursday, July 09, 2009

Indian Short Stories : The Postmaster

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? நம்ம பக்கத்துல இருக்கற சில விஷயங்களோட அருமை, நாம அதுக்குப் பக்கத்துல இருக்கறப்ப புரியறதில்லை. அந்த விஷயம் நம்மை விட்டு தூரம் போகும் போதோ இல்லை நாம தூரம் போயிடும் போதோ தான் அதோட அருமை புரியுது. இது ஒன்னும் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை, எல்லாருக்கும் தெரிஞ்ச சாதாரணமான மேட்டர் தான். சின்ன வயசுல நூலகத்துலேருந்து எடுத்துட்டு வந்து புத்தகங்கள் படிப்பேன் - பெரும்பாலும் காமிக்ஸ், கதை புத்தகங்கள் தான். அதுவும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதுன ஆங்கில கதைகள் தான். அப்புறமா எப்பவோ எப்படியோ ஆர்.கே.நாராயணன் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் அவர் என்னை வெளிநாட்டு எழுத்தாளர்கள் பக்கம் போக விடலை. கதைகள் படிக்கிறதுலயும் சிறுகதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், தொடர்கதைகள்/நாவல்களில் அவ்வளவா விருப்பம் இருந்ததில்லை. லேண்ட்மார்க், ஒடிசி போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குப் போனோம்னா 'Indian Writing' அப்படின்னே ஒரு தனிப் பகுதி இருக்கும். அப்படியே கதைகள் படிக்கனும்னா 'Indian Writing' பகுதியில் இருக்கும் இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளைத் தான் நான் விரும்பிப் படிக்கிறது. ஏன்னா இந்த கதைகள்ல இருக்கற கதாபாத்திரங்களோடவும், காட்சிகளோடவும் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பாத்துக்க முடியும்.

எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்ல ஒன்னு இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலேயர் ஒருவரால் மொழிபெயர்க்கப் பட்ட "The Postmaster" என்ற கதை. ஆங்கில கதை தான்னாலும் எல்லாரும் ரசிக்கனும்ங்கிறதுக்காக நான் என் தமிழ் வலைப்பூவில் இதை போடறேன். இந்த கதை மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில்(நான் படிச்ச காலத்தில்), எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு பாடமாக இருந்தது. அப்போ அந்த கதை என் மனசைத் தொட்ட மாதிரி எனக்கு தோனலை. ஆனா ஏனோ எனக்கு நினைவில் இருந்து, பல வருடங்கள் கழித்து அந்த கதையின் அருமை புரிந்து, அந்த ஒரு கதைக்காக இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கதைத் தொகுப்பையே வாங்க வைத்தது.
கதை என்னன்னு சுருக்கமாச் சொல்லிடறேன். கல்கத்தாவிலிருந்து உலாப்பூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்துக்கு போஸ்ட் மாஸ்டராக மாற்றம் பெற்று வருகிறார் கதையின் நாயகனான போஸ்ட்மாஸ்டர். சிறிய கிராமம் என்பதால் அங்கே அவருக்கு அவ்வளவா வேலையில்லை, அதோட அவருக்கு அந்த இடம் பிடிக்கவும் இல்லை. அந்த கிராமத்தில் ரத்தன் என்ற பேருடைய ஒரு பதின்மூன்று வயது மதிக்கத் தக்க பெண் இருந்தாள். யாருமில்லா அனாதை பெண் அவள். போஸ்ட்மாஸ்டருக்கு எடுபிடியாக சில வேலைகள் செய்து கொண்டு தபால் அலுவலகம் அருகேயே வசித்து வந்தாள். அது வரை தான் யாரிடமிருந்தும் கண்டிராத அக்கறையை போஸ்ட்மாஸ்டர் தன் மீது செலுத்தக் கண்டு அவர் மீது மிகுந்த மரியாதை கொள்கிறாள். போஸ்ட்மாஸ்டர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார். திடீரென போஸ்ட்மாஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. ஒரு தாயாய், தங்கையாய் கூடவே இருந்து அவரை குணப்படுத்துகிறாள் ரத்தன். உடம்பு சரியானதும் அவ்வூரில் இருந்து மாற்றம் வேண்டி மேலிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் போஸ்ட்மாஸ்டர். அவருடைய விண்ணப்பத்தை மேலிடம் நிராகரித்த காரணத்தினால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்கத்தாவுக்குத் திரும்ப உத்தேசிக்கிறார். அப்போது தன்னையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு அந்த சின்ன பெண் வேண்டுகிறாள். 'அது எப்படி முடியும்' என்று கேட்டுவிட்டு போஸ்ட்மாஸ்டர் சென்று விடுகிறார். கதை சுருக்கத்தை எழுதும் போதே உணர்ச்சிகள் மேலிடுகிறது. அதனால் ஆங்கிலத்தில் கதையைப் படிச்சிப் பாருங்க. எனக்கு தோன்றியதை அங்கங்கே சொல்லுகிறேன்.

For his first job, the postmaster came to the village of Ulapur. It was a very humble village. There was an indigo-factory near by, and the British manager had with much effort established a new post office.

The postmaster was a Calcutta boy - he was a fish out of water in a village like this. His office was in a dark thatched hut; there was a pond next to it, scummed over with weeds, and jungle all around. The indigo agents and employees had hardly- any spare time, and were not suitable company for an educated man. Or rather, his Calcutta background made him a bad mixer - in an unfamiliar place he was either arrogant or ill-at-ease. So there was not much contact between him and the residents in the area.

But he had very little work to. do. Sometimes he tried to write poems. The bliss of spending one's life watching the leaves trembling in the trees or the clouds in the sky - that was what the poems expressed. God knew, however, that if a genie out of an Arab tale had come and cut down all the leafy trees overnight, made a road, and blocked out the sky with rows of tall buildings, this half-dead, well-bred young man would have come alive again.

The postmaster's salary was meagre. He had to cook for himself, and an orphaned village-girl did housework for him in return for a little food. Her name was Ratan, and she was about twelve or thirteen. It seemed unlikely that she would get married. In the evenings, when smoke curled up from the village cowsheds, crickets sounded in the bushes, and a band of intoxicated Baul singers in the next village sang raucously to the clapping of their hands, the postmaster would sit on his dark veranda and let his poetic feelings be stirred by the stirring of the leaves. Then he would go inside, light a dim lamp in a corner of the room and call for Ratan. Ratan would be waiting at the door for this, but she did not come at the first call - she would call back, 'What is it, Dadababu, what do you want?'

'What are you doing?' the postmaster would say.

'I must go and light the stove in the kitchen

'You can do your kitchen work later. Get my hookah ready for me.'

Soon Ratan came in, puffing out her cheeks as she blew on the bowl of the hookah. Taking it from her, the postmaster would say abruptly, 'So, Ratan, what do you remember about your mother?' She would talk for a long time: some things she remembered, others she did not. Her father loved her more -than her mother did, but she did not remember much about him. He used to come home in the evening after working hard all day, and one or two evenings were clearly etched in her memory. As she talked, Ratan edged nearer to the postmaster, and would end up sitting on the ground at his feet. She remembered her little brother: one distant day, during the rainy season, they had stood on the edge of a flooded pit and played at catching fish with sticks broken off trees - this memory was far more vividly fixed in her mind than many more important things. Sometimes these conversations went on late into the night, and the postmaster then felt too sleepy to cook. There would be some vegetable curry left over from midday, and Ratan would quickly light the stove and heat some chapati: they made their supper out of that.

Occasionally, sitting on a low wooden office-stool in a corner of his large hut, the postmaster would speak of his family - his younger brother, mother and elder sister - all those for whom his heart ached, alone and exiled as he was. He told this illiterate young girl things which were often in his mind but which he would never have dreamt of divulging to the indigo employees and it seemed quite natural to do so. Eventually Ratan referred to the postmaster's family - his mother, sister and brother - as if they were old friends. She even formed affectionate imaginary pictures of them in her mind.

பல இடங்களிலும் இக்கதையை நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. மேலே உள்ள பத்தியும் அத்தகையது தான். நமக்கு தெரிந்தவர்கள் தம்முடைய உறவினர்களைப் பற்றி நம்மிடம் சொல்லும் போது, அவர்களைப் பற்றிய ஒரு உருவகத்தை மனதில் வைத்துக் கொள்வோம். "எங்க சித்தின்னா எனக்கு உயிர்" என்று நம் நண்பன் நம்மிடம் சொன்னால். ஒரு கனிவான பெண்ணின் முகம் நம் மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது. போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்தைப் பற்றிய உருவகங்களையும் தன் மனதில் உருவாக்கிக் கொள்கிறாள் ரத்தன்.

It was a fine afternoon in the rainy season. The breeze was softly humid; there was a smell of sunshine on wet grass and leaves. Earth's breath - hot with fatigue - seemed to brush against the skin. A persistent bird cried out monotonously somewhere, making repeated and pathetic appeals at Nature's midday durbar. The postmaster had hardly any work: truly the only things to look at were the smooth, shiny, rain-washed leaves quivering, the layers of sun-whitened, broken-up clouds left over from the rain. He watched, and felt how it would be to have a close companion here, a human object for the heart's most intimate affections. Gradually it seemed that the bird was saying precisely this, again and again; that in the afternoon shade and solitude the same meaning was in the rustle of the leaves. Few would believe or imagine that a poorly paid sub-postmaster in a small village could have such feelings in the deep, idle stillness of the afternoon.

இயற்கையை இதை விட அழகாக வர்ணிக்க முடியுமா? மேலே உள்ள பத்தி ஒரு "reader's delight" என்றால் அது மிகையில்லை.

Sighing heavily, the postmaster called for Ratan. Ratan was at that moment stretched out under a guava tree, eating unripe guavas. At the sound of her master's call she got up at once and ran to him.

'Yes, Dadababu, you called?' she said, breathlessly.

'I'm going to teach you to read a little,' said the postmaster. He taught her daily at midday from then on, starting with the vowels but quickly progressing to the consonants and conjuncts.

During the month of Sraban, the rain was continuous. Ditches, pits and channels filled to overflowing with water. The croaking of frogs and the patter of rain went on day and night. It was virtually impossible to get about by road - one had to go to market by boat. One day it rained torrentially from dawn. The postmaster's pupil waited for a long time at the door, but when the usual call failed to come, she quietly entered the room, with her bundle of books. She saw the postmaster lying on his bed: thinking that he was resting, she began to tip-toe out again. Suddenly she heard him call ' her. She turned round and quickly went up to him saying, 'Weren't you asleep, Dadababu?'

'I don't feel well,' said the postmaster painfully. 'Have a look - feel my forehead.'

He felt in need of comfort, ill and miserable as he was, in this isolated place, the rain pouring down. He remembered the touch on his forehead of soft hands, conch-shell bangles. He wished his mother or sister were sitting here next to him, soothing his illness and loneliness with feminine tenderness. And his longings did not stay unfulfilled. The young girl Ratan was not a young girl now. From that moment on she took on the role of a mother, calling the doctor, giving him pills at the right time, staying awake at his bedside all night long, cooking him convalescent meals, and saying a hundred times, 'Are you feeling a bit better, Dadababu?'

கதையிலேயே மிகவும் பிடித்த இடம் எனக்கு மேலே உள்ள பத்தி தான். ஏனென்றால் இதை நானும் உணர்ந்திருக்கிறேன். தில்லியில் நான் மட்டும் தனியாக இருக்கும் போது என்றாவது உடம்பு சரியில்லாமல் போகும் போது அம்மா மென்மையாக நெற்றியைத் தொட்டுப் பார்த்து 'இப்போ ஜூரம் எப்படிப்பா இருக்கு'ன்னு கேட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியதுண்டு. அவ்வேளைகளில் மேலே உள்ள இவ்வரிகளும் நினைவுக்கு வந்து விடும். அச்சமயங்களில் விழியோரங்களில் வடியும் நீர்த் துளிகளை என்ன செய்தாலும் நிறுத்து இயலாது.

Many days later, the postmaster got up from his bed, thin and weak. He had decided that enough was enough: somehow he would have to move from this place. He wrote at once to his head office in Calcutta, applying for a transfer on grounds of ill-health.

Released from nursing the postmaster, Ratan once again took up her normal place outside his door. But his call did not come for her as before. Sometimes she would peep in and see the postmaster sitting distractedly on his stool or lying on his bed. While she sat expecting his summons, he was anxiously awaiting a reply to his application. She sat outside the door going over her old lessons numerous times. She was terrified that if he suddenly summoned her again one day, the conjunct consonants would all be muddled up in her mind. Eventually, after several weeks, his call came again one evening. With eager heart, Ratan rushed into the room. 'Did you call, Dadababu?' she asked.

'I'm leaving tomorrow, Ratan,' said the postmaster.

‘Where are you going, Dadababu?'

'I'm going home.'

'When are you coming back?'

'I shan't come back again.'

Ratan did not question him further. The postmaster himself told her that he had applied for a transfer, but his application had been rejected; so he was resigning from his post and returning home. For several minutes, neither of them spoke. The lamp flickered weakly; through a hole in the crumbling thatched roof, rain-water steadily dripped on to an earthenware dish. Ratan then went slowly out to the kitchen to make some chapati. She made them with none of her usual energy. She kept stopping, turning things over in her mind. When the postmaster had had his meal, she suddenly asked, 'Dadababu, will you take me home with you?'

'How could I do that!' said the postmaster, laughing. He saw no need to explain to the girl why the idea was impossible.

All night long, whether dreaming or awake, Ratan felt the postmaster's laugh ringing in her ears. 'How could I do that!'

When he rose at dawn, the postmaster saw that his bath-water had been put out ready for him (he bathed according to Calcutta habits, in water brought in a bucket). Ratan had not been able to bring herself to ask him what time he would be leaving; she had carried the bath-water up from the river late at night, in case he needed it early in the morning. As soon as he finished his bath, the postmaster called her. She entered the room softly and looked at him without speaking, waiting for her orders. 'Ratan,' he said, 'I'll tell the man who replaces me that he should look after you as I have; you mustn't worry just because I'm going.'

No doubt this remark was inspired by kind and generous feelings, but who can fathom the feelings of a woman? Ratan had meekly suffered many scoldings from her master, but these kindly words were more than she could bear. The passion in her heart exploded, and she cried, 'No, no, you mustn't say anything to anyone - I don't want to stay here.' The postmaster was taken aback: he had never seen Ratan behave like that before.

ஏனோ தெரியவில்லை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் தான் மேலே இருக்கும் வரிகளைப் படித்தால் மனதில் தோன்றுவது.

"காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை"

அண்ணா என்று பொருள்பட 'தாதா' என்று ரத்தன் போஸ்ட்மாஸ்டரை அழைத்தாலும். இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் உறவுக்குப் பெயரில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

A new postmaster came. After explaining the job to him, the resigning postmaster got ready to leave. Before going, he called Ratan and said, 'Ratan, I've never been able to pay you anything. Today before I go I want to give you something, to last you for a few days.' Except for the little that he needed for the journey, he took out all the salary that was in his pocket. But Ratan sank to the ground and clung to his feet, saying, 'I beg you, Dadababu, I beg you - don't give me any money.' Then she fled, running.

The departing postmaster sighed, picked up his carpet-bag, put his umbrella over his shoulder, and, with a coolie carrying his blue-and-white-striped tin trunk on his head, slowly made his way towards the boat.

When he was on the boat and it had set sail, when the swollen flood-waters of the river started to heave like the Earth's brimming tears, the postmaster felt a huge anguish: the image of a simple young village-girl's grief-stricken face seemed to speak a great inarticulate universal sorrow. He felt a sharp desire to go back: should he not fetch that orphaned girl, whom the world had abandoned? But the wind was filling the sails by then, the swollen river was flowing fiercely, the village had been left behind, the riverside burning-ground was in view. Detached by the current of the river and the journey ahead, he reflected philosophically that in life there are many separations, many deaths. What point was there in going, back? Who belonged to whom in this world?

But Ratan had no such philosophy to console her. All she could do was wander near the post office, weeping copiously. Maybe a faint hope lingered in her mind that Dadababu might return; and this was enough to tie her to the spot, prevent her from going far. Oh poor, unthinking human heart! Error will not go away, logic and reason are slow to penetrate. We cling with both arms to false hope, refusing to believe the weightiest proofs against it, embracing it with all our strength. In the end it escapes, ripping our veins and draining our heart's blood; until, regaining consciousness, we rush to fall into snares of delusion all over again.

கதையைப் படித்து முடித்ததும் பல விதமான உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க முடிந்ததில்லை. அனாதையான ஒரு சின்ன பெண் அன்புக்காக ஏங்குகிறாள். நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் அவர் வாழ்வில் தோன்றுகிறார். அவள் எதிர்பார்த்த அன்பு அவளுக்கு சில நாட்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த அன்பும் அக்கறையும் அவளுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என நம்பத் தொடங்குகிறாள் அப்பெண். ஆனால் தன் பயணத்தின் போது சந்திக்கும் ஒரு சகப் பயணியைப் போலவே அப்பெண்ணை நினைக்கிறார் அம்மனிதர். அவ்விடத்தை விட்டுச் செல்லும் வேளையில் அம்மனிதருக்கும் மனம் பாரமாக இருந்த போதிலும் "இதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியே" என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார். ஆனால் கல்வியறிவில்லாத அப்பெண்ணுக்கோ அத்தகைய சித்தாந்தங்கள் எதுவும் தெரியவும் இல்லை, அவளால் அவற்றை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு விதத்தில் நாமும் பல இடங்களிலும் அந்த சின்னப் பெண் ரத்தனைப் போலத் தான் நடந்து கொள்கிறோம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இக்கதையை 1950களில் 'தீன் கன்யா' என்ற பேரில் சத்யஜித் ரே அவர்கள் வங்காள மொழியில் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார். மூன்று வெவ்வேறு கதைகளினைக் கொண்ட அப்படத்தில் தி போஸ்ட்மாஸ்டரும் ஒரு கதை. இந்த கதையை விஷுவலாக எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே அப்படத்தின் டிவிடியைத் தேடி அரும்பாடுபட்டு வாங்கினேன். ஆனால் இக்கதையைப் படிக்கும் போது தோன்றிய உணர்வுகள் திரைப்படமாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

மேலே உள்ள கதை இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட வடிவம் தான்(abridged version). புத்தகத்தில் இருப்பது போலவே இக்கதையைப் படிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சுட்டியில் பதிவர் ஒருவர் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து வலையேற்றியிருக்கிறார் படித்துப் பாருங்கள்.
http://solitary-vine.blogspot.com/2008/08/postmaster-by-rabindranath-tagore.html

இக்கதையை அழகாக ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஒரு பதிவெழுதியிருக்கிறார் சம்யுக்தா என்ற பதிவர். அதையும் படித்துப் பாருங்கள்.
http://beautifulmind-sam.blogspot.com/2008/07/postmaster-by-rabindranath-tagore.html