அன்புடையார்க்கும்
அஃதிலார்க்கும்
வேற்றுமை
அறியா மூடன்
Monday, March 20, 2006
Sunday, March 19, 2006
கைப்புள்ள வீட்டில் வீரபாகு
வாங்க வாங்க...நம்ம ஒடன்பிறப்பு தம்பி வீரபாகு வந்திருக்காருங்க. நம்மளை மாதிரியே அவரும் அடி ஒதக்கு அஞ்சாதவராச்சே! கதை கேக்க வந்த ஒரு பாப்பா கிட்ட தன்னோட
வீர தீர பிரதாபங்களையெல்லாம் எடுத்துச் சொல்லறாரு...நீங்களும் கேக்கிறீங்களா?
"இந்த வீங்கு வீங்கியிருக்கே? எத்தனை பேர் அடிச்சாங்க?"
"மொதல்ல ஒரு மூணு நாலு பேரு தான்மா அடிச்சாங்க...அடிச்சிட்டிருக்கும் போது ஒருத்தன்
இன்னொருத்தனுக்கு போன் பண்ணி ப்ரீயா இருந்தா வாடா மச்சான் ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்..."
"ம்ம்ம்..."
"அவன் சொன்னான் நான் பிஸியா இருக்கேண்டா...வேணாம் இங்கே அனுப்பிச்சி வுடு நான் பாத்துக்கறேன்னான்...."
"இவனுக முடிச்சதும் ஒரு மீன்பாடி வண்டில போட்டு அங்க அனுப்பிச்சி வச்சானுங்க"
"ம்ம்ம்"
"அங்க ஒரு ஏழு பேரும்மா அவனுகளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சானுங்க"
"ஆ..."
"அடிச்சிட்டு ஒரு ஆட்டோல ஏத்தி விட்டானுங்க..."
"உம்ம்"
"சரி நம்ம வீட்டுக்குத் தான் அனுப்புறானுங்கனு நம்பி ஏறி உக்காந்தேன்..."
இதுக்கு மேல தம்பி வீரபாகு தன் சொந்த குரல்ல கீழே சொல்றாரு...மேற்கொண்டு கதையை நீங்களே கேட்டுக்கங்க

Saturday, March 18, 2006
3டி திருவிழா - 8
சிங்க இளைஞனே! திருப்பு முகம்... திற விழி!
அலுவலகத்திலும் வீணர்கள் கட்டதுரைகளோடும், பார்த்திபர்களோடும் போராட வேண்டிய கட்டாயம் தற்சமயம் இருப்பதால், அடியேன் ஓரிரு நாட்களாய் சங்கத்து கடமைகளினின்று ஐ ஆம் தி எஸ்கேப் ஆகியிருக்கிறேன்.
என்னுடைய இவ்வமைதி தனை, எங்கள் சங்கத்தின் பலவீனமாகக் கருதும் இணைய உலகின் வெட்டி வெங்காயங்கள் பார்த்திபன்,கட்டதுரை போன்றோரின் கொட்டத்தை எங்கள் கழகக் கண்மணிகளாம் 'உடல் மண்ணுக்கு உதை தலக்கு' என்று போராடும் மூத்த தொண்டன் தேவ், கூடல் நகர குலவிளக்கு பேராசிரியர் ஐயா கார்த்திக் ஜெயந்த் அவர்கள், கோவை பிரதர் என்று எல்லோராலும் பாசத்தோடு அழைக்கப்படும் ஸ்டூடண்ட் நம்பர் 1 சிபி, கருதறுப்பதில் வித்தகர் களைபுடுங்குவதில் நிபுணர் டிராட்டர் ஓட்டுவதில் டாக்டர் பட்டம் பெற்ற இளா ஆகியவர்கள் அடக்குவார்கள் என்றும் தலயின் கௌரவத்தைக் காக்க பருவ நெஞ்சை முன்னிறுத்திப் பகைவர்களுடன் பொருதி பார்க்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் இவ்வமயத்தில் அத்தருக்கர்களுக்குத் தொடை தட்டி தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இவ்வாய்ப்பினைப் பயன் படுத்தி "டாய் கட்டதுரை, டாய் எடுவட்ட பயலே பார்த்திபா!" என்றும் ஒரு சவுண்டினை வுட்டுக் கொள்கிறேன்.
கடைசியாக, உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, கைப்புள்ளயின் வாழ்க்கையில், வரலாற்றில் இதுவரை காணாத ஒரு மேட்டர்ஸ் ஆப் இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று சரியாக யூகிப்பவர்களுக்கு எங்கள் சங்கத்தின் ஆஸ்தான பரிசான பச்சை கலர் சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும், ரெண்டு ஐடெக்ஸ் மை பென்சிலும் சங்கத்து கருவூலத்தில் இருந்து வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்தமைகிறேன்.

Sunday, March 12, 2006
தடிப்பசங்க #3
காட்சி 3 : மார்க் வாங்கலியோ மார்க்கு?
ஸ்கூல்ல எட்டாப்பு வரைக்கும் படிக்கறது இருக்குதே, அது காலேஜ் படிக்கறத விட கஷ்டமான ஜமாஜாரம். பாடத்த எல்லாம் அம்மா கிட்ட ஒப்பிச்சு ஒப்பிச்சு ஓகே வாங்கி எக்ஸாம் எழுதி முடிக்கறதுக்குள்ள...ங்கப்பா சாமியோவ். சரி இதோட முடிஞ்சுதா, மார்க் வந்ததும் மேக்ஸ், சயின்ஸ், இங்கிலீசு, தமிழுன்னு ஒவ்வொரு பேப்பருக்கும் ஒவ்வொரு கதை ரெடியா வச்சிருக்கனும். நம்ம வீட்டு பக்கத்துல 90-100னு மார்க் வாங்குற எமகாதகன் எவனாச்சும் இருந்தான்னு வைங்க நம்ம கதை இன்னும் கந்தல். இந்த பதிவு அந்த மாதிரி உலகத்து கஷ்டங்களை எல்லாம் எதிர்கொண்டு ஸ்கூல் எனும் சக்ரவியூகத்தை ஆயகலைகள் அறுபத்திநாலையும் உபயோகிச்சு மீண்டவங்களுக்கு சமர்ப்பணம்.
"வந்துட்டீங்களா? சரி சரி! யூனிஃபார்மை கழட்டி வச்சுட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க" இது யாரோட டயலாகா இருக்கும்னு கேக்கவே வேணாம். உலகத்து அம்மாக்கள் எல்லாம் இந்த டயலாக் பிறவியிலேயே தெரிஞ்சிட்டு வந்திருப்பாங்க.
"ஏன்மா! உங்களுக்கு அழகா கைட்டுன்னு சொல்ல வராதா? அது என்ன கழட்டு?" - நக்கல்@இளவல்.காம்
"இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இதே பேச்சும் செயலும் படிக்கிறதுலயும் காட்டு. ஹாஃப் இயர்லி எக்சாம் மார்க் எல்லாம் குடுத்தாங்களா?"
"வந்ததும் வராததுமா மார்க் மார்க்னு கேளுங்க? சாப்பிட எதாச்சும் குடுத்தீங்களா?" கரெக்டா தாய்க்குலத்தோட வீக்பாயிண்டை தாக்குறாரு தம்பி.
சாப்பிட்டு முடிச்சதும், எங்கேயிருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்னு தெரிஞ்ச அம்மா "டேய்! மோகன்ராஜ்! பேப்பர் குடுத்தாங்களா?". மோகன்ராஜ் யாருன்னா கேக்குறீங்க? நான் தாங்க. பின்ன எங்கம்மா என்னை கைப்புள்ளன்னா கூப்டுவாங்க?
"குடுத்தாங்க"
"எத்தனை பேப்பர்"
"மூணு"
"என்னன்னா?"
"தமிழ்,சோஷியல்,மேக்ஸ்-2"
"ஒன்னு ஒன்னா கேட்டாத் தான் சொல்லுவியா? என்ன மார்க்?"
"தமிழ்ல 87"
"யாரு ஃபர்ஸ்ட் மார்க்?"
"நான் தான்" - அதனால தானே அத முதல்ல சொல்றது
"சோஷியல்ல?"
"81"
"அதுல யாரு ஃபர்ஸ்ட் மார்க்?" - நானும் ஒரு சோதனையா பாத்துட்டேன். நாம 99ஏ வாங்குனாக் கூட யாரு ஃபர்ஸ்ட் மார்க்குங்கற கேள்வி, கண்டிப்பா ஒரு அம்மாவோட குவெஸ்டின் பாங்க்ல இல்லாம இருக்காது.
"ரவின்னு ஒரு பையன்"
"அவன் எவ்வளோ?"
"85"
"ரவியால 85 எடுக்க முடியுது. உன்னால முடியலியா?" - இதுக்கே இப்படின்னா அவன் எடுத்த உண்மையான மார்க்கான 92ஐ சொன்னா என்னாவும்?
"கணக்குல எவ்வளவு"
"கொஞ்சம் கம்மியாயிடுச்சு"
"எவ்ளோ?"
"67" தலையை தொங்கப்போட்டுக்கிட்டு ஒரு ஐயோ பாவம் முகத்தோட.
"ஏன் 67? எல்லா சம்மும் தெரியும் தெரியும்னு சொன்னியே?"
"இல்லம்மா! ஜியாமெட்ரில ரெண்டு டயாக்ராம் போட்டுட்டேன். ஆனா அதுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் எழுதுறதுக்குள்ள டைம் ஆயிடுச்சு...மிஸ் பேப்பரைப் புடுங்கிட்டாங்க"
"எக்ஸாம்ல ஒக்காந்து பராக்கு பாத்துட்டு இருந்தியா? சரி! ரெண்டு டயாக்ராம் தானே. அதுக்கா இவ்ளோ மார்க் கொறஞ்சுது?"
"அல்ஜிப்ரால சில ஸில்லி மிஸ்டேக்ஸ்...பாதி மார்க் கூட குடுக்காம எல்லா மார்க்கையும் கட் பண்ணிட்டாங்க...மிஸ் கூட சொன்னாங்க நீ நல்லா படிக்கிற பையன்...உன்னோட சில்லி மிஸ்டேக்னால தான் ஒனக்கு மார்க் போயிருக்குன்னு" - 98 வாங்குன ரவியைப் பாத்து 100மார்க் ஏன் எடுக்க முடியலேன்னு மிஸ் சொன்ன காரணத்தை, நமக்கு சொன்னதா சொல்லி ஒரு சால்ஜாப்பு...நல்லா படிக்கிற பையன்னு நமக்கு நாமே சர்டிபிகேட்.
"சரி! பக்கத்து வீட்டு ஷண்முகவடிவேல் எத்தனை மார்க் ஒவ்வொன்னுலயும்?"
"எல்லாம் என் ரேஞ்சு தான்" - கடன்காரன் "மூக்கன்" எல்லாத்துலயும் 90,95னு இல்ல எடுத்து வச்சிருக்கான். ரவிக்கு போட்டியே அவன் தானே? ஆனாலும் நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற பாவத்துக்கு அவனை கொஞ்சம் மக்காக்குறது தப்பில்லை.
"உன் ரேஞ்சுன்னா?"
"தமிழ்ல அவன் கம்மி, மேக்ஸ்லயும் சோஷிய்ல்லயும் 2-3 மார்க் அவன் அதிகம்". எங்க வீட்டுல கேட்டா இன்ன் இன்ன சப்ஜெக்ட்ல இன்ன இன்ன மார்க்னு சொல்லுடான்னு அவனுக்கு முன்னாடியே கரெக்டா சொல்லிக் குடுத்திருக்கற தைரியத்துல அளந்து விட்டாச்சு அம்மா கிட்ட. ஆனா என்னிக்காச்சும் மறந்துட்டு அஞ்சாறு மார்க் அந்த நாய் அதிகமா சொல்லிடுச்சுன்னா நம்ம பாடு வீட்டுல திண்டாட்டம் தான். ஆனா சொல்ல மாட்டான்...ஸ்ட்ராங் முட்டாய், தேன் முட்டாய்க்கே அவன் அவன் கணக்கு பாக்கும் போது ஒரு முழு சம்சா(அதாங்க சமோசா) எந்த இளிச்சவாயன் வாங்கிக் குடுப்பான்.
இப்பிடி 90உம்-95உமா வாங்குற கடன்காரன் எக்ஸாம் டைம்ல கரெக்டா வந்து நம்ம கிட்ட சந்தேகம் கேப்பான். அவனோட ஃபர்ஸ்ட் ரிவிஷன், செகண்ட் ரிவிஷன் ஓடிட்டிருக்கும் போது தான் நாம முத முறையா புஸ்தகத்தையே தெறந்துருப்போம். இந்த லட்சணத்துல நம்ம கிட்ட டவுட் க்ளியர் பண்ண வந்துருவான். நான் பண்ண ஒரே புண்ணியம் அவங்கம்மாவும், எங்கம்மாவும் நெருங்கிய தோழிகளா இல்லாதது. ஹை,ஹலோ லெவல்ல தான் இருந்துச்சு அவங்க நட்பு. அதனால நான் தப்பிச்சேன். இல்லன்னா "மூக்கன்"சண்முகவடிவேலை செட்டப் பண்ற டெக்னிக்கும் நமக்கு வேலை செய்யாது. நல்ல காலம் அவுங்க நட்பைக் கெடுக்க நம்பியார் வேலை பண்ணற தேவை நமக்கு ஏற்படலை.
"இதெல்லாம் ஒன்னும் சரியாப் படலை. உங்க டாடி வருவாங்க பேசி கையெழுத்து வாங்கிட்டு போங்க"
"நீ என்னடா? ஒனக்கு எத்தனை பேப்பர் குடுத்தாங்க" - இது மூணாப்பு படிக்கும் இளையவர் கிட்ட.
"ரெண்டு தான்"
"என்னென்ன எவ்ளோ மார்க்"
"மேக்ஸூம்,ஈ.வி.எஸ்ஸும்"
"மார்க்கு கேட்டா தான் சொல்லுவியா?"
"மேக்ஸுல 50"
"ஈ.வி.எஸ்ஸுல 49"
"மார்க் 50க்கா நூறுக்கா?"
"நூறுக்கு தான்"
"இது தான் நீ படிக்கிற லட்சணமா? மூணாவதுலேயே இப்படின்னா பின்னாடி பெரிய கிளாஸ் போக போக பாடம் கூடுமா குறையுமா?"
"........."
அம்மாவுக்குக் கோவம் வருது. நாக்கைத் துருத்திட்டு ஸ்கேல் எடுத்து ரெண்டு வைக்கிறாங்க ரெண்டு பேருக்கும். லைட்டா வலிக்குது தான்.
"இந்த லட்சணத்துல் உங்களுக்குக் கேக்கறதெல்லாம் வேணும். விதவிதமா டிரெஸ், சாப்பாடுன்னு. அது வேணாம் இது வேணாம்னு ரெண்டு நாய்க்கும் பந்தா வேற. படிக்கிறத தவிர உங்களுக்கு அப்படி என்னடா வேலை?"
"சரி! யாரு ஃபர்ஸ்ட் மார்க்"
"தெரியாது"
"தெரியாதா? நீ கேக்கலையா?"
"யாரோ ஒரு பொண்ணு"
"யாரோ ஒரு பொண்ணா? அவ எத்தனை மார்க்னு நீ கேக்கலையா?"
"நான் பொண்ணுங்க கிட்டெல்லாம் பேச மாட்டேன்"
அடப்பாவி!போட்டானே ஒரு போடு...மத்த சமயத்துலெல்லாம் கிளாஸ்ல இருக்கற கவிதாவிலேயே ஒரு நாலு ரகம் சொல்லுவான் - ஈ.கவிதா, பி.கவிதா,எஸ்.கவிதான்னு,எல்.கவிதான்னு. மார்க்ன்னதும் அந்தர் பல்டிடா சாமியோவ்! எது எப்படியோ! பையன் நல்லா சமாளிச்சுட்டான்...நமக்கு தான் இந்த காரணத்தை எல்லாம் சொல்ற குடுப்பினை இல்லை. ஏன்னா பாய்ஸ் ஸ்கூல்ங்கிறதால அஞ்சாவதோட பொண்ணுங்களுக்கு டாட்டா.
"ஆமா! நீ எப்படி பேசுவே பொண்ணுங்க கிட்ட? உன் மார்க் என்னன்னு அவ கேட்டா நான் முட்டை வாங்கியிருக்கேன்னு இல்ல நீ அவ கிட்ட சொல்லனும்?"
"முட்டை எங்கே வாங்கியிருக்கோம்?" - அம்பது வாங்கிட்டே இந்த அலம்பல். ராசா... 90 எல்லாம் வாங்குனா?
"தோ! உங்க டாடி வந்துட்டாங்க சொல்லுங்க உங்க யோக்கியதையை..."
அப்ஸூ இஸ் தி கம்.
சிரிச்சுட்டே தான் கேக்கறாரு "மார்க் எதாச்சும் குடுத்தாங்களா? உங்கம்மா இப்படி கத்துறா?"
அந்த சிரிப்பு ஒன்னு போதாதா சின்னவருக்கு. அவரே சுறுசுறுப்பா ஆரம்பிக்குறாரு"மேக்ஸூம் ஈ.வி.எஸ்ஸும் குடுத்தாங்க டாடி"
"அது மேக்ஸ் இல்ல மேத்ஸ்"
"எனக்கு மேக்ஸ் தான் சொல்ல ஈஸியா இருக்கு" இளங்கன்று பயம் அறியாதுங்களே!
"சரி! எத்தனை மார்க்?" அப்ஸின் குரல் கொஞ்சம் மாறுது... சிரிப்பும் போயே போச்.அம்ஸூ அர்ச்சனையிலேயே பயலுவ கதையப் புரிஞ்சிக்கிட்டாரு
".........."
"எவ்ளோ?" ஒரு அதட்டல்.
"மேக்ஸுல 50, ஈ.வி.எஸ்ஸுல 49"
"இந்த மார்க் போதுமா?"
"........."
"எதனால கம்மியாச்சு?"
"மிஸ் போர்ஷன்ல இல்லாததெல்லாம் கேட்டுட்டாங்க"
"அதெப்படி கேப்பாங்க? நீ படிக்கல்லன்னா கூட பரவால்லை. இந்த பொய் சொல்ற வேலை எல்லாம் இங்கே வேணாம்" காது திருகப்படுகிறது. கண்ணீரும் வருகிறது.
"காலேஜ் வாத்தியாரா இருக்குறவன் கிட்டவே வந்து நீ இந்த கதை சொன்னீன்னா, படிக்காத அப்பா அம்மாவா இருந்தா என்ன பண்ணுவே?"
"நீ படி, படிக்காத போ! ஆனா ஒழுக்கமா இரு. படிச்சின்னா நீ நல்லாயிருக்கப் போற...இல்லன்னா ரோட்ல எங்கியாச்சும் சுத்திட்டு இருப்பே குப்பை வாரிக்கிட்டு"திட்டு-கம்-அட்வைஸ் அர்ச்சனை மழை பொழியுது.ரெண்டு பேரும் அதுல நனையுறோம். மழை கொஞ்சம் கம்மியாச்சுன்னா ஸுப்பர் ஸப்பா அம்மா...அந்த பொறுப்பை எடுத்து திறம்பட செய்வாங்க.
"நீ ஒன்னும் படிக்கிற மாதிரி தெரியல்ல...உங்க ஆயா கிட்ட சொல்லி ஊருல ரெண்டு மாடு வாங்கித் தர சொல்றேன்...அத மேய்ச்சுக்கிட்டு அங்கேயே சாணி வாரிக்கிட்டு கெட...அப்ப படிக்கெல்லாம் வேணாம்...எனக்கும் செலவு மிச்சம்"
"என்ன படிக்கிறியா...இல்லை மாடு மேய்க்கிறியா?"
தம்பி அழுதுக்கிட்டே"எனக்கு படிக்கறது கஷ்டமா இருக்குங்க டாடி...நான் மாடே மேய்க்கிறேன்"னு அடிக்கிறாரு ஒரு சிக்ஸர். ஷோயப் அக்தர் பாலை வெங்கடேஷ் பிரசாத் சிக்ஸ் அடிச்சா எப்டியிருக்கும் அப்டி ஒரு போடு.
அதைக் கேட்டு அதட்டிருந்த அப்ஸும் சிரிக்க ஆரம்பிக்கிறாரு. நமக்கு தான் என்ன நடக்குதுனு புரிய லேட் ஆகுது. இந்த ஒரு சைக்கிள் கேப் போதாதா ஆட்டோ ஓட்ட நம்ம ஆளுக்கு? கண்ணை தொடச்சிட்டு "இந்த பேப்பர்ல பேரண்ட்ஸ் சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க மிஸ்" - கடமை தானே முக்கியம் ஒரு ஸ்டூடண்டுக்கு.
"காலேஜ் வாத்தியார் புள்ள 49உம் 50உம் எடுக்குது. இத விட ஒரு அவமானம் வேணுமாடா எனக்கு. சரிங்க டாடி! அடுத்த தடவை படிச்சு நல்ல மார்க் எடுக்கறேன்னு வருதா...மாடு மேக்க போவுது பாரு புத்தி?" அடிக்கிறதுக்கு கையை நோங்குற மாதிரி நோங்க அதுக்கு பயப்படறாப்ல ஒரு ஆக்டு குடுக்கறாரு பிரதர்.
"கொண்டா பேப்பரை" - கையெழுத்து போடப் படுகிறது.
"டாடி எனக்கும் சைன் போடுங்க" - இது நான்.
"எல்லாம் என் தலையெழுத்து. இந்தா" தம்பியின் கடின உழைப்பினால் நமக்கும் கையெழுத்து கெடக்குது.
"அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்" ஒரு தம்பி செண்டிமெண்ட் பாட்டு நினைவுக்கு வருது.
இன்னும் ப்ராக்ரஸ் ரிபோர்ட்னு ஒரு பெரிய கண்டம் இருக்குதே. நமக்கு என்ன கவலை? தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்னு யாரோ சொல்லியிருக்காங்களே?

Saturday, March 11, 2006
வச்சான்யா ஆப்பு
ஆப்பு வாங்கறது என்ன ஒனக்கு புச்சான்னு அங்கிருந்து யாருபா நாலு பேரு சவுண்ட் உடறது? புச்சில்லை தான்...ஆனாலும் எல்லாம் ஆப்பு, சித்தாப்பு இஷ்டைல்ல ஒரு பில்டாப்பு தான்...
ஐஐடி டெல்லியில படிக்க சொள்ள ரெண்டாயிரத்துலபா, ஒரு தபா நானும் நம்ம தோஸ்து ஒருத்தனும் ஹரித்வார்,ரிஷிகேசி போய்க்கினோம்பா. ஹரித்வார்ல கங்கையில குளிச்சுட்டு, மலை மேல மான்சா தேவின்னு ஒரு சாமி பாத்துட்டு திரும்ப டெல்லி வர்ற சொள்ள, முசஃபர் நகர்ங்கிற எடத்துல பஸ்ஸை நிறுத்துக்கினான்பா டீ நாஸ்தா பண்ணிக்கன்னு. நமுக்கு தான் இந்த எயற்கை,ஜீன்ரி,சில்ஹூவெட் இதுன்னா ரெம்ப புடிக்குமே...பாத்தா பக்கத்தாப்ல கங்கா கெனால்னு காவா ஓடுதுபா நம்ம கூவம் கணக்கா. ஆனா நாத்தம் கண்டி இல்லை...சரி பரவால்லை அட்ஜிஸ் பண்ணிக்கலாம்னு நம்ம தோஸ்தை கூப்ட்டு "மாமாவை சோக்கா ஒரு சில்ஹூவெட் படம் எடுபா"னு சொல்லிக்கினேன். அவன் இன்னா சொன்னான் "எங்க தலிவரு மாதிரி படையப்பா ஸ்டைல்ல நில்லு" அப்டின்னுக்குனான். "இப்டியே எடுக்கறுதுனா எடு...நமுக்கு இந்த ஸ்டைல் கியில் இதெல்லாம் புடிக்காது"ன்னு கண்டிசனா சொல்லிக்கினேன்.
ஆனா நமக்கு தான் சாஃப்ட் ஆட்டீனாச்சே? நம்மாளு (கூட வந்த தோஸ்த்), ஐஐடியில்லியே டிசைன் படிக்கிறவன். அவுங்களுக்கு ஃபர்ஷ்ட் இயரே நிகான் எப்.எம்-10ன்னு SLR கேமரால்லாம் வாங்க சொல்லி போட்டா படமெல்லாம் புடிக்கசொல்லுவாங்க...அவ்னே படையப்பா மாதிரி நிக்க சொல்றானே...நின்னு தான் பாப்பமேனு நென்ச்சுக்குனேன்பா...சரி கோல்ட் கலரு படத்துல மாமா சூப்பரா ஒரு ஹீரோ கணக்கா வருவார்னு ஒரு நல்ல திங்கிங்ல போசு குட்துக்கனேன்பா. ஆனா கடசியா பாருபா...நம்ம கதையை கீய...அவுங்க தலிவரப் பத்தி பேசிக்கினேன்னு நம்மள ராங்கான ஆங்கிள்ல நிக்க வச்சு மேலேருந்து வர வோணுங்கிற சன்லைட்டை கீயருந்து வர வைச்சு...வச்சான்யா ஒரு பெரிய ஆப்பு...
பாக்குற பேமாணியெல்லாம் நம்ம இந்த சில்ஹுவெட் படத்தைப் பாத்து பாத்து சிரிக்குதுபா...நீ யாரும் பாத்து ஸ்மைல் கண்டி உட்டேனு தெரிஞ்சிது....அப்புறம் இருக்குதுபா ஒனக்கு. இந்த போட்டாவை பாத்து தான்பா நென்ச்சிக்கினேன் இந்த சாஃப்ட் ஆட்டீன் தான் நம்ம வீரம், வீக்னெஸ் எல்லாம் அப்ப்டின்னு...
இருந்தாலும் எதுக்கு இங்கே காட்டிக்கினேங்கிறியா...சுட்ட பழமும், திருடியும், எஸெமெஸ்ஸும் போட்டே காலத்தை ஓட்டிக்கிறானு பேட் ந்நேம் வரக்கூடாதுன்னு தாம்பா...நம்ம எஸ்பீரியன்ச ஒரு....இன்னாதது...ஆங்...ஒரு ஒளி ஓவியமா ஆரமிச்சுக்கலாம்னு தோண்ச்சுபா...இப்பவாச்சும் நம்ம குட் க்வால்டீஸை தெரிஞ்சுக்கபா...வர்ட்டா?

Thursday, March 09, 2006
புச்சு கண்ணா புச்சு
புது சரக்குங்க...இப்ப தான் புதுசா வந்துச்சு...வேறென்ன? SMS தான்! சரி வேற பதிவர்களோட பதிவுல போடலாம்னு நல்லெண்ணத்துல தான் இருந்தேன்...ஆனா இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு ஆதரவு தர்ற பதிவுகள்லாம் தூங்கிக்கினு இருந்ததுனால கைப்புள்ளயே சிங்கிள் டீயை பீங்கான் கப்புல ஊத்தி உங்களுக்குப் பாசத்தோட குடுக்காரு!
அப்பா: டேய்! என்னடா இது கணக்கு பரிச்சையில முட்டை வாங்கிட்டு வந்திருக்கே? ஒனக்கு படிக்கிறதா உத்தேசம் இல்லியா?
பையன் : அது முட்டை இல்லீங்கப்பா. நான் படிக்கிறதப் பாத்துட்டு எங்க மிஸ் 'ஓ' போட்டிருக்காங்க.

Wednesday, March 08, 2006
சொல்றோம்ல : பாஞ்சாலங்குறிச்சி
பாஞ்சாலங்குறிச்சி - இந்த பேரைக் கேட்டதும் என்ன ஞாபகத்துக்கு வருது? வானம் பொழியுது லே! பூமி வெளயுது லே!ன்னு வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனும், அவருடைய தம்பி ஊமைத்துரையும் தானே! அவங்க ஆண்ட மண் இந்த பாஞ்சாலங்குறிச்சி. அவ்ங்க வீரத்தைப் பத்தி நம்ம எல்லாரும் புத்தகத்துல படிச்சும் சினிமால பாத்தும் இருக்கறதால இந்த ஊர் பேரைக் கேள்வி பட்டாலே, அவங்க ரெண்டு பேரும் ஞாபகத்துக்கு வராங்க. ஆனா மண்ணுக்குன்னு ஒரு மகிமை இருக்கறதா சொல்ல கேள்வி பட்டிருப்போம். அப்படி இயற்கையாவே ஒரு மகிமை கொண்ட ஒரு மண்ணு பாஞ்சாலங்குறிச்சி மண்ணு. அதுக்கு பின்னாடி ஒரு குட்டிக் கதை இருக்கு. அதப் பத்தி தான் இந்த பதிவு.
வீரபாண்டிய கட்டபொம்மனோட பூர்வீகம்னு பாத்தீங்கன்னா, ஆந்திரம். ஆமாங்க உண்மை தானுங்க. கட்டபொம்மனோட மூதாதையர்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டுல ஆந்திரத்துல இருந்து பஞ்சம் பொழக்க வந்த 'ஆதி ஆந்திரர்' என்ற வகுப்பைச் சேந்தவங்க. எப்பவுமே கம்பளம் போத்தி இருந்ததால அவங்களுக்குக் 'கம்பளத்தார்' என்கிற பேரும் இருந்தது. ஜக்கம்மா அவங்களோட குலதெய்வத்தின் பேர்.(வீரபாண்டிய கட்டபொம்மன் படத்து ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா பாட்டு நியாபகத்துக்கு வருதா?) கட்டபொம்மனின் மூதாதையர் பாண்டிய மன்னர்களின் அரசவையில் வேலை செஞ்சதாவும், கட்டபொம்மன் என்ற பேரே இதை தான் குறிக்குதுன்னும் படிச்சிருக்கேன். 'பொம்மு' என்பது பாண்டிய மன்னர்களுக்கு வழங்கப்பட்ட பேராம். 'கெட்டி' என்பதுக்கு தெலுங்கில் 'விசுவாசமான' என்று பொருளாம். பாண்டிய மன்னர்களுக்கு விசுவாசமா இருந்ததுனால 'கெட்டி பொம்மு' என்று அழைக்கப்பட்ட இவங்க நாளடைவில கட்டபொம்மன்னு என்று அழைக்கப்படலானாங்க.
பாஞ்சாலங்குறிச்சி என்கிற ஊருக்கு எப்படி இந்த பேரு வந்ததுன்னு ஒரு கதை இருக்கு. ஒரு நாள் கட்டபொம்மனோட மூதாதையரான ஆதிகட்டபொம்மன் காட்டுல வேட்டையாட போனாராம். அவரோட வேட்டை நாய் ஒரு காட்டுமுயலைத் துரத்த ஆரம்பிச்சுச்சாம். நாயைத் தொடர்ந்து இவரு பின்னாடியே குதிரையில வர்றாராம். வேகமா ஓடற முயலைத் துரத்திக்கிட்டு நாயும் பின்னாடியே ஓடுது. ஒரு இடம் வந்ததும் முயல் அப்படியே நின்னுடுச்சாம். அதுக்கப்புறம் முயல் நாய் வர்ற திசையிலே திரும்பி நாயைத் துரத்த ஆரம்பிச்சுடுச்சாம். இதைப் பத்த ஆதிகட்டபொம்மன் அப்படியே அசந்து போயிட்டாராம். ஒரு முயல் நாயைத் துரத்தற அளவுக்கு இந்த மண்ணுக்குன்னு ஒரு வீரம் இருக்குன்னு ஒணந்து அந்த இடத்துலேயே தன்னோட அரசை அமைக்க தீர்மானிச்சாராம். அத்தோட தன்னோட பாட்டனாரின் பேரான 'பாஞ்சாலன்' என்பதைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சின்னு பேரும் வச்சிட்டாராம்.
இதுக்கு மேற்கோள் எல்லாம் என்னை கேக்காதீங்க. இதை படிக்கும் போது நான் அறியா புள்ள, ப்ளாக்கெல்லாம் எழுதுவோம்னு அப்ப எனக்குத் தெரியாது. அதனால வெளயாட்டுத் தனமாப் படிச்சதோட சரி. இதப் பத்தி மேற்கொண்டு யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கறேன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக...
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக...சார்பாக...என்னான்னு கேக்கறீங்களா? எல்லாத்தையும் தமிழ்மண முகப்புலேயே படிக்கணும்னு நெனச்சா எப்படி? கொஞ்சம் நம்ம பக்கமும் வாங்க...
வருத்தப்படாத வாலிப சங்கத்தின் சார்பாக அனைத்து பதிவர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.
தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய் எங்கள் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருப்பவர்களை வணங்குகிறோம்.

Sunday, March 05, 2006
நானும் ஒரு அன்பே சிவம் பதிவிடுகிறேன்.
கடந்த இரு வாரங்களில் பலரும் 'அன்பே சிவம்' பற்றி எழுதித் தள்ளிவிட்டார்கள். காலந்தாழ்த்தி நானும் அன்பே சிவம் பற்றி எழுத இன்று எத்தனித்துள்ளேன். பெரியவங்க எல்லாம் எழுதாததை நான் என்ன எழுதிடப் போறேன்? ஆனாலும் ஒரு எட்டு வந்து படிச்சு பாருங்க. ஏன்னா இந்த பதிவு 'அன்பே சிவம்' படத்தைப் பற்றியல்ல.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பர் திருமுருகன், தன் ஆங்கில வலைப் பதிவில், ரசிகர்களுக்கு கைப்பட கடிதம் எழுதுவதாக அறிவித்திருந்தார். எனக்கும் ஒரு கடிதம் எழுதுடா என்று கேட்டுக் கொண்டேன். ரொம்ப நாளாய் அதை பற்றி பேச்சுமூச்சு இல்லாத காரணத்தால் சரி அவ்ளோ தான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் பெங்களூர் சென்றுவிட்டு இந்தூர் திரும்பியதும், பக்கத்து வீட்டு ஆண்ட்டி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு கடிதத்தை எனக்கு கொடுத்தார். ஆஹா! கைப்பட எழுதப்பட்ட கடிதங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்? சரி, சும்மா ஹை, ஹலோ என்று நாலு வரி எழுதி அனுப்புவார் என்று எண்ணியிருந்த எனக்கு ஒரே ஆச்சரியம். கையினால் செய்யப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையும், தமிழ் புத்தாண்டு வாழ்த்தும், ஏழு பக்கங்களைக் கொண்ட கடிதமும் என்னை திக்குமுக்காடச் செய்தது.
ஸ்கேன் செய்த வாழ்த்து அட்டையில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரியாததனால் கீழே தந்திருக்கிறேன்.
Dear Mohanraj,
I believe within each of us is the capacity to express love, show compassion, share a magic moment and make a difference.
Share love. Share magic.
With love,
Thirumurugan
இதைப் படித்ததும் சத்தியமாக அன்பே சிவம் படமும், ராஜேஷ் கண்ணா நடித்த பாவர்ச்சி(Bawarchi) என்ற இந்தி படமும் தான் நினைவுக்கு வந்தது. படத்தின் கதாநாயகர்களான கமல்ஹாசனும், இராஜேஷ் கண்ணாவும் இப்படங்களின் வாயிலாக மேற்கண்ட கருத்தையே வலியுறுத்தியொறுப்பார்கள். திருமுருகனின் பதிவான Keep Walkingஇல் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் அன்பு மற்றும் inspiration ஆகியவற்றை உள்ளடக்கியதேயாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சக மனிதர்களிடத்தில் அன்பு காட்டுவது என்று தீர்மானித்து விட்டால் உலகம் எவ்வளவு அழகானதாகி விடும்?நண்பனின் உயர்ந்த எண்ணத்தை ஊக்குவிக்கவும் அதில் பங்குபெறவும் என்னால் ஆன ஒரு சிறிய முயற்சியே இந்த பதிவு.
அவர் எனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே கீழே வழங்கியுள்ளேன். சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் யாவும் உயரியனவாகவும் சமூக நோக்குடனும் அமைந்துள்ள காரணத்தினால் வலை உலகில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது.
அன்பு நண்பா,
அடடா, தமிழில் எழுதி எத்தனை நாளாயிற்று? எப்படியிருக்கிறாய்? எங்கேயிருந்து ஆரம்பிக்க? எங்கே முடிப்பது?
ஏழு வருடங்கள் தான் ஆகிறது நாம் கல்லூரி விட்டு வந்து. ஏனோ எழுபது வருடங்கள் போல் அசதி - நினைத்து மீண்டால். நிறையவே மாறியிருக்கிறேன். குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் சுற்றி அலைந்த வருடங்கள், அந்த நான்கு வருடங்கள். கல்லூரியில் 'அடுத்து என்ன' என்று கேட்டால், சிரித்து நழுவி விடுவேன். ஆனால், மனதுக்குள் எதிர்காலம் பற்றிய பயத்தையும் மீறி, ஒரு பெரிய ஆசை. ஏதாவது செய்ய வேண்டும். மற்றவர்களைப் போலல்லாமல். ஒரு குறுகிய வாழ்க்கைக்குள் சிக்காமல், எல்லோருக்கும் உதவும்படி, எளிய மக்களுக்காக ஒரு மாற்றம் ஏற்படுத்தினால் - அது என் வெற்றி எனக் குறித்துக் கொண்டேன். என்ன செய்யலாம்? சரி, படிப்போம். இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதலாம் என்று முடிவெடுத்தேன். மிகவும் மறக்கமுடியாத ஒரு வருடம் அது. எனக்காக பொருள், ஊக்கம் கொடுத்து உதவியவர்களை மறக்கமுடியாது. நிறைய படித்தேன், நிறைய பேருடன் பழகினேன். நிறைய கவனித்தேன். உலகம் தெரியாமல் வெளிவந்த எனக்கு அந்த ஒரு வருடம் நிறையவே கற்றுக்கொடுத்தது. கடுமையாகப் படித்தேன். எல்லோரும் சொன்னார்கள், 'கண்டிப்பாக நீ வெற்றி பெற வேண்டும் என்று. 'தோல்வி. பெரிதாக வருத்தம் இல்லை.
யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வகையில் இதுவும் நல்லதே. என்னை எந்த ஒரு நிலைக்கும் தயார்படுத்திக் கொள்ள வந்த ஒரு வாய்ப்பு எனத் தேற்றிக் கொண்டேன். என்ன செய்வது அடுத்து? நிறைய படித்து என்ன பயன்? என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இத்தனை வருடம் என் கல்விக்காக செலவு செய்த அப்பாவுக்கும் என்னால் முடிந்தளவுக்கு செய்ய வேண்டும். வேலையில் சேரலாம் என முடிவெடுத்தேன். கிடைத்த இரண்டு வாய்ப்புகளில், அரசு வேலையைத் தேர்ந்தெடுத்து பெங்களூர்(ரு) வந்தேன். ஒரு முடிவையெடுக்கும் போது அது எவ்வள்வு நல்ல முடிவு என்று தெரிவதில்லை. காலம் கடந்தபின் அதை நினைத்து மகிழ்ந்துள்ளேன்.(நிறைய முறை).
இதுவும் அப்படியே. சிறிய அரசு நிறுவனம் என்பதால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. நான்கு வருடங்களில் 'அ' முதல் 'ஃ' வரை தெரிந்தது. நிறைய உயர் அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு(Meetings), செல்ல நேர்ந்த போது ஒன்று புரிந்தது. எப்படி அவர்களை திருப்திபடுத்துவது, எப்படி கேள்விகளை எதிர்கொள்வது முதலியன. அந்த புரிந்த ஒன்று - என்ன தான் தலைமைச் செயலக அதிகாரிகளாயினும்(IAS), உண்மையான அதிகாரம் இருப்பது, முடிவுகள் எடுப்பது அரசியல்வாதிகள் தான். அடுத்து மந்திரிகளையும்(முதல் மந்திரி கிருஷ்ணா உட்பட), MLAக்களையும் புரிய வேண்டியிருந்தது. புரிந்துகொண்டோம். நான்கு வருடங்களில் என் கண் முன்னே ஒரு பெரிய நிறுவனமாய் வளர்ந்து நின்றது. ISROவும் கவனிக்க ஆரம்பித்தது எங்களை. இதற்கெல்லாம் காரணம் எங்கள் மேலாளரின்(Director) கடுமையான உழைப்பும், திறமையான ஆளுமையும் தான்.
என்ன தான் நிறைய நலத் திட்டப் பணிகள், மென்பொருள்கள் தயார் செய்தாலும், ஒரு குறை. நாங்கள் செய்யும் பணி அடிமட்ட விவசாயிகளை, குடிமக்களைத் தொடுவதில்லை. அதற்கென்று சில செயல்பாட்டு நிறுவனங்கள்(Implementation Agencies), எங்களால் செயல்படுத்த முடிந்தாலும் 'அது தவறு' என்று குறை கூறின. யாருக்கும் அடிமட்டத்தில் இருப்பவர்களை பற்றிக் கவலையில்லை. அவரவர்க்கு அவரது பணியைக் காத்துக் கொள்வது வேலையாகிவிட்டது.
எப்போதோ படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ராஜா வித்தை காட்டி பணம் சம்பாதிக்க யானை வாங்கினாராம். அதற்கு இரண்டு பாகன்கள். பயிற்றுவிக்க ஒரு கலைஞன். வைத்தியம் பார்க்க இரண்டு வைத்தியர்கள். காவல் காக்க நான்கு பேர். அந்த யானை வித்தையும் காட்டவில்லை. காசு கொடுத்துப் பார்க்கவும் யாரும் வரவில்லை. அரசாங்கமும் நாம் காசு கொடுத்து வாங்கிய யானையோ என்று தோன்றுகிறது. தோன்றியது.
மற்ற நாடுகள் எப்படி? அப்படி என்ன தான் குறை? அதையும் பார்த்து விடலாம் என்று தான் அடுத்த யோசனை. எப்படி போகலாம். அமெரிக்காவை முதலில் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டேன். ஏனோ பிடிக்கவில்லை. சுலபமாக, படிப்பதற்கு மட்டுமே விசா கிடைக்கும் எனத் தெரிந்து, அதற்கே விண்ணப்பித்தேன். பணத்தேவைக்கு உதவித்தொகை. அடடா, சில வருடங்களுக்கு முன் B.E.(Geo-Informatics) என்று நல்ல முடிவாய் ஏன் எடுத்தேன். இப்போது சுலபமாக உதவித்தொகை கிடைத்த போது இனித்தது.
ஆஸ்திரேலியா வந்து இறங்கிய ஆறு மாதம், எல்லா தேசிகளைப் போல மிகச் சுலபமாய் இந்திய நாட்டைப் பொரிந்து தள்ளினேன். இதையே தான் எல்லோரும் பேசித் தீர்ந்து, ஓய்ந்து போகிறார்கள். அமைதியாய் அசை போட ஆரம்பித்தேன், கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தன - ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்.
நம்முடைய ஒவ்வொரு பிரச்சினைகளும்(Caste, Untouchability, Corruption) பல காலமாய் ஊன்றிக் கிடக்கின்றன. இந்த 50 வருடங்களாய் தான் ஒரு தேசமாய் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம். மூவாயிரம் வருடங்கள் வரலாறு நம்முடையது. இங்கு 50 வருடங்கள் முன் தான் அரசாங்கம் தொடங்கியுள்ளனர்(குடியேற்றமும் சில நகரங்களில்)
ஆனால், சமீப பத்தாண்டு காலமாய் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கண்டு எல்லோரும் மிரண்டு போயிருப்பது உண்மை. எந்த நாடும் இந்தியாவை ஒதுக்கிவிட்டு எதிர்காலத் திட்டங்களை சிந்திக்க தயாரில்லை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சில நாடுகள் இந்தியாவுக்காக சில பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டு விட்டன.
எந்த ஒரு Conferenceஇலும் சொல்லப்படும் விஷயங்கள் மேற்சொன்னவை. நான் படித்தவை, கேட்டவை, பார்த்தவை. இன்னும் நாம் அடிமட்டத்தை(Grassroots) தொட்டு விடவில்லை. நகரங்களில் மட்டுமே வண்ணம். நிறைய எண்ணங்கள் மனதில் ஓடுகிறது. இந்தியா வரவேண்டும் - படித்து முடித்த பின் ஏதாவது செய்ய வேண்டும். பயத்தை மீறிய ஒரு ஆசை - இருக்கத்தான் செய்கிறது.
இனிமேல் நாம்தான்.
அன்புடன்
திருமுருகன்
தாமதமாய் கடிதம் எழுதியதற்கு வருந்துகிறேன். மன்னிப்பாயாக.
கடைசியாக "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே, பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!" என வேண்டி நண்பரின் நல்லெண்ணத்தினை நிரைவேற்ற இறைவன் அவருக்கு மன உறுதியும் ஆரோக்கியத்தையும் அளிக்க மனமாற பிரார்த்திக்கிறேன்.

Wednesday, March 01, 2006
நான்மணிக்கடிகை
இன்னிக்கி எப்படியும் சங்கிலி பதிவு போட்டுடணும்னு ஆபிசுல கல்தா குடுத்துட்டு ஓடியாந்துட்டேன். இதுக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாரும் இதுக்கு சூப்பரா நாமகரணம் பண்ணி வக்க, நாம என்ன பண்ணா எடுபடும்னு யோசிச்சதுல தோணுன பேரு தான் இந்த நான்மணிக்கடிகை. இந்த பதிவுக்கு வெறும் தலைப்பா மட்டும் எடுத்துக்குங்க, ஓகேவா?
விவசாயி மற்றும் நாமக்கல் சிபி இருவரின் அன்புக்கும் தலை வணங்கி என்னைப் பத்தியும் நான் ரசிக்கும் சில விசயங்களைப் பத்தியும் ஒரு நாலு சேதி நாலு பேருக்கு நாலு தெசயிலயும் பரப்பி விடலாம்னு ஒரு சின்ன முயற்சி.
நான் இருந்த நாலு எடம்
1. திருவல்லிக்கேணி, சென்னை
2. ஹவுஸ் காஸ், புது தில்லி
3. ஷேக் சராய், புது தில்லி
4. அனூப் நகர், இந்தூர்
விடுமுறைக்குப் போன நாலு ஊர்
1. மைசூர்
2. கூர்க்
3. மசூரி
4. ஆக்ரா
சென்னையில் புடிச்ச நாலு எடம்
1. மெரீனா கடற்கரை(குறிப்பா Twilight பார்த்த அந்த
ஓரிரு தருணங்கள்)
2. அரசினர் தோட்டம்(ராஜாஜி ஹால் இங்கே தான் இருக்கு)
3. திருவான்மியூர் பீச்
4. அண்ணா பல்கலைக்கழக வளாகம்
ரசிச்சு பாக்குற நாலு டிவி நிகழ்ச்சி
1. டிஸ்கவரி விங்ஸ்
2. சன் சப்தஸ்வரங்கள்
3. ஏசியாநெட் சரிகமபதநிஸா
4. டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன்
எப்ப வேணா பாக்க விரும்பும் நாலு படம்
(எல்லாமே காமெடி தான்)
1. அவ்வை சண்முகி
2. அந்தாஸ் அப்னா அப்னா(இந்தி)
3. அரிச்சந்திரா(கார்த்திக் நடிச்சது)
4. வின்னர்(வடிவேலு வராத நேரத்துல வேற வேலை பார்ப்பேன்)
விரும்பி செய்யும் நாலு செயல்கள்
1. பதிவு படிக்கறது/எழுதறது(சமீப காலமாக)
2. கேலிகிராஃபி
3. Copy writing(நிலா வச்சாங்க பாருங்க போட்டி-
ஜூலியனும் சிவாஜியும் அந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம்)
4. சமைக்கறது(நாமளே துன்னறதுக்கில்ல. மத்தவங்களுக்குக் குடுத்து
சந்தோஷப் படறதுக்கு. சாப்பிட்டுட்டு நல்லால்லன்னாலும் நல்லாருக்குன்னு
சொல்லுவாங்க பாருங்க...அத்த கேக்கறதுல இருக்கற போதை ஒரு புல் ஓல்ட்
மாங்க் நீட்டா அடிச்சதுக்கு சமம்)
தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு மண்டைங்க
1. மொட்டை
2. கமல்
3. சேரன்
4. வடிவேலு
சினிமாவுல புடிச்ச நாலு அம்மணிங்க
1. மனோரமா
2. ரேவதி
3. ஸ்மிதா பாட்டீல்
4. மீரா ஜாஸ்மின்(சண்டக்கோழி பாத்துட்டு)
புடிச்ச நாலு சாப்பிடற ஐட்டம்
1. குலாப் ஜாமூன்
2. கோழி குருமா(தேங்கா போட்டு காரம் கம்மியா...
மவுண்ட் ரோடு யாத்கார் ஓட்டல் ஸ்டைல்)
3. அம்மா வைக்கிற மீன் குழம்பு
4. சப்பாத்தியும் கீரை சாம்பாரும்(எனக்கு எனமோ இந்த
காம்பினேஷன் ரொம்ப புடிக்கும்)
படிச்ச நாலு இடம்
1. சரஸ்வதி பால விஹார், திருவல்லிக்கேணி
2. கில் ஆதர்சு மேனிலைப்பள்ளி, ராயப்பேட்டை
3. பொறியியல் கல்லூரி, கிண்டி
4. இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி
மறக்க முடியாத நாலு நிகழ்வு
1. நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினீயரிங் சீட் எல்லாம் கெடக்காதுன்னு
நயினா பயம் காட்டுன நேரத்துல, தினமலர் பேப்பர்ல டோட்(DOTE)
காலேஜ் தேர்வுப் பட்டியல்ல என் நம்பரைப் பாத்த அந்த நாளு
2. அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல் வருடம் நடந்த பல்சுவை நிகழ்ச்சி
(Variety Entertainment)இல் சிவில் டிபார்ட்மெண்டுக்காக ஒரு குழுவா நாங்கத் தங்க
மெடல் வாங்குன அந்த நாளு. எதோ யுனிவர்சிடி கோல்டு மெடலே வாங்குன ஒரு நெனப்பு.
அந்த போதை மூணாவது செமஸ்டர்ல ஒரு கப் வாங்குற வரை நீடிச்சுது.
3. ஐஐஎம் பெங்களூரிலிருந்து வந்த நேர்காணல் அழைப்பு. அங்கே நமக்கு ரிவெட் அடிக்கப்
பட்டாலும் "எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாரு"ன்னு சொல்லிக் கொள்ளக் கூடிய
ஒரு ஆனந்தம் இன்னும் இருக்கு.
4. ஐஐடியிலும் டிசிஎஸ்(TCS) நமக்கு வேலை தராம கவுத்த பிறகு, இப்ப இருக்குற
கம்பெனியில வேலை ஸ்பாட் ஆஃபராக் கெடச்ச ஒரு சந்தோசம்.
எதிர்பார்க்கும் நாலு நிகழ்வு
1. என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும்.
2. Kaipullai Callingஇல் துளியும் ஆங்கில கலப்பில்லாம தூய தமிழில் ஒரு பயனுள்ள பதிவு
போட வேண்டும் என்பது.
3. விமானத்தில் அம்ஸையும், அப்ஸையும், தம்ஸையும் ஒரு நாள் கூட்டிக் கொண்டு அழகிய ஒரு
இடத்துக்கு விடுமுறையில் செல்ல வேண்டும் என்பது.
4. இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பது.(நேரில் பார்த்தாக்
கூட போதும்)
நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள்(நாலே நாலு அல்ல)
1. நிலவு நண்பன் - முதல் காதல். நான்
முதன் முதலில் படித்த தமிழ் பதிவு ஞானியாருடையது. அற்புதமான கவிஞர். பதிவுகளை
அவர் எழுதும் எதார்த்தமான நடை மிகவும் பிடிக்கும்.
2. சிவா - நம்மளை மாதிரியே ராஜா
ரசிகரு. ராஜாவை அவர் மூலமா இன்னும் தெரிஞ்சுக்கறேன். கலப்படம் இல்லாத அவரது
கிராமத்துக் கதைகள் ஒரு touch apart.
3. தேவ் - மதுரையும் நெல்லையும்
கூட்டணி அமைத்து கோலோச்சும் தமிழ்மணத்தில் தலைநகரின் பெருமையையும் தரணிக்கு
எடுத்துரைக்கும் தொண்டை மண்டல திருமகன். என்ன மாம்ஸூ நான் சொல்றது கரீட்டு
தானே? நல்ல கவிஞர், கலாய்ப்பாளரு.
4. இலவசக் கொத்தனார் - புதிர் மன்னன்,
பின்னூட்ட இளவரசன்(சரி தானே கொளுத்து! இப்படி சொன்னா வைத்தியருக்கு அரசர் பட்டம்
குடுத்து சமாளிச்சுடலாம் இல்ல?)
வருத்தப்படாத வாலிபர் சங்க ஆயுள் சந்தா உறுப்பினர்கள் நாலு பேரு
1. நாமக்கல் சிபி - நம்மளை மாதிரியே
ரொம்ப நல்லவரு தான் இவரும். என்ன ஒன்னு? திடீர்னு கைப்புள்ள செட்டா கட்டதுரை
செட்டான்னு சந்தேகம் வரும்படிக்காக் கேள்வியா கேட்டு மனுசனை உண்டு இல்லன்னு
ஆக்கிப்பிடுவாரு. தல பதில் தெரியாம முழிக்கிறத பாக்குறதுல என்ன தான் சந்தோசமோ?
2. தேவ் - சிபியோட சேந்தா கெட்டுப்
போயிடுவாரு. கவனமாப் பாத்துக்கோணும்.
3. கார்த்திக் ஜெயந்த் - நான் சில சமயம்
சொல்லும் அரத பழசான ஜோக்கைக் கூட கேட்டு "சிப்பு சிச்சி" வைக்கிற நல்லவரு.
4. விவசாயி - ஒலகத்துலேயே டிராக்டர்
வச்சிருக்குற ஒரே வெட்டி ஆபீசருங்க கிளப் நாங்க தான்னு பேரு எடுக்க இவரையும்
சங்கத்துல புடிச்சு போட்டாச்சு.
தொடர் ஆதரவு தரும் நால்வர்(நால்வர் மட்டுமே அல்ல)
1. கீதா மேடம் - என்னுடைய அனைத்து விதமான
பதிவுகளுக்கும் மிகப் பெரிய ஊக்கம் இவங்க.
2. கோபி - 3டி நிபுணர். 3டி பதிவுகளுக்கு
ஊக்கம் இவரு.
3. G.ராகவன் - தமிழ் வலைப்பதிவுகள்ல ஒரு
"multi-faceted" தல.நம்மளையும் கண்டுக்கறாரு.
4. ஜனார்தனன் - எனது கல்லூரி நண்பர். தனது தற்போதைய நண்பர்களுக்கும்
கைப்புள்ளையை அறிமுகப்படுத்தி என்னை ஊக்கப் படுத்துபவர்.
சங்கிலி பதிவைத் தொடர நான் அழைக்கும் நாலு பேரு
1. நிலவு நண்பன்
2. கோபி
3. கார்த்திக் ஜெயந்த்
4. தலைவாசல் மீஜிக் டைரக்டர்
சரி! எல்லாரைப் பத்தியும் எழுதணும்னு ஆசையும் ஆர்வமும் இருக்கு ஆனா அதுக்கு நாலு-நாலுன்னு கண்டிசன் போட்டா ஒன்னும் பண்ண முடியாது. அதனால யாரையாவது மறந்துருந்தேனா மன்னிச்சுக்குங்க. இன்னொரு விசயம்! கைப்புள்ளயோட Personaவோட ஜோக்,சிரிப்பு, 3டி இந்த சமாச்சாரங்களை மட்டுமே இணைச்சு பாக்காதீங்க. என்னிக்காச்சும் ஒரு நாள் இதே பேருல பயனுள்ள விஷயமும் பதிவா வரலாம், அதுக்கும் உங்க ஏகோபித்த ஆதரவை எதிர்பார்த்து என்னுடைய பிளேடை இம்மா நேரம் தாங்கிக் கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு பேண்ட் எய்ட் கொடுத்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். நன்றி! வணக்கம்!!