வாங்க வாங்க...நம்ம ஒடன்பிறப்பு தம்பி வீரபாகு வந்திருக்காருங்க. நம்மளை மாதிரியே அவரும் அடி ஒதக்கு அஞ்சாதவராச்சே! கதை கேக்க வந்த ஒரு பாப்பா கிட்ட தன்னோட
வீர தீர பிரதாபங்களையெல்லாம் எடுத்துச் சொல்லறாரு...நீங்களும் கேக்கிறீங்களா?
"இந்த வீங்கு வீங்கியிருக்கே? எத்தனை பேர் அடிச்சாங்க?"
"மொதல்ல ஒரு மூணு நாலு பேரு தான்மா அடிச்சாங்க...அடிச்சிட்டிருக்கும் போது ஒருத்தன்
இன்னொருத்தனுக்கு போன் பண்ணி ப்ரீயா இருந்தா வாடா மச்சான் ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்..."
"ம்ம்ம்..."
"அவன் சொன்னான் நான் பிஸியா இருக்கேண்டா...வேணாம் இங்கே அனுப்பிச்சி வுடு நான் பாத்துக்கறேன்னான்...."
"இவனுக முடிச்சதும் ஒரு மீன்பாடி வண்டில போட்டு அங்க அனுப்பிச்சி வச்சானுங்க"
"ம்ம்ம்"
"அங்க ஒரு ஏழு பேரும்மா அவனுகளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சானுங்க"
"ஆ..."
"அடிச்சிட்டு ஒரு ஆட்டோல ஏத்தி விட்டானுங்க..."
"உம்ம்"
"சரி நம்ம வீட்டுக்குத் தான் அனுப்புறானுங்கனு நம்பி ஏறி உக்காந்தேன்..."
இதுக்கு மேல தம்பி வீரபாகு தன் சொந்த குரல்ல கீழே சொல்றாரு...மேற்கொண்டு கதையை நீங்களே கேட்டுக்கங்க
இதுதான் நமக்கு நாமே திட்டம். இந்த வேலைய பார்த்தியண்ணன் செய்ய வேண்டியது.
ReplyDelete//இதுதான் நமக்கு நாமே திட்டம். இந்த வேலைய பார்த்தியண்ணன் செய்ய வேண்டியது.//
ReplyDeleteஇன்னா கண்ணு சொல்ல வரே?
Netru rathiri 8 maniyilirunthu ungal blog thirakkave mudiyavillai. Ithuthana karanamEn azhntha anuthapangal.
ReplyDeletemarupadiyum ungal pathivu tamil manaththil irunthu thirakka mudiyavillai.Ungalukku?intha oru pathivu than thirakka mudikirathu.matravai sidele irukkum mungal listil irunthu kooda thirakka mudiyavillai. pathi than varukirathu.
ReplyDeleteஎன்ன கைப்புள்ள..லொள்ளு அதிகமாகிடடே போகுது.. சரியில்லை சொல்லிட்டேன்..
ReplyDeleteஎன்ன..? எங்க அண்ணன் கட்டத்துரையை கூப்பிடவா..
enna velaile romba busy pola irukku? pinnoottam onru kooda varaavillai. ungal blog tamil manathilirunthu thiranthal unicodele than varukirathu. chila samayam varave illai. evening 7 manikku mele than intha problem.enna seivathu?
ReplyDeleteஎன்னாப்பா கைப்புள்ளெ,
ReplyDeleteஇதுவும் 'சூப்பரா' இருக்கேப்பா:-)
நான் ரசித்தேன்.... :-)) நன்றாக இருக்கிறது.
ReplyDelete//marupadiyum ungal pathivu tamil manaththil irunthu thirakka mudiyavillai.Ungalukku?intha oru pathivu than thirakka mudikirathu.matravai sidele irukkum mungal listil irunthu kooda thirakka mudiyavillai. pathi than varukirathu.//
ReplyDeleteஇரண்டு மூன்று நாட்களாக இந்தப் பிரச்சனை இருந்தது. என்னாலும் என் பதிவைத் திறக்க முடியவில்லை. இப்போது திறக்கிறதா என்று பார்த்து சொல்லுங்க மேடம்.
//என்ன..? எங்க அண்ணன் கட்டத்துரையை கூப்பிடவா...//
ReplyDeleteவாங்க ஞானியாரே!
கட்டதுரை உங்களுக்கும் அண்ணனா? ஆனா அவனுக்கெல்லாம் பயந்தா நம்ம பொழப்பு எப்படி ஓடும்?
//என்னாப்பா கைப்புள்ளெ,
ReplyDeleteஇதுவும் 'சூப்பரா' இருக்கேப்பா:-) //
வாங்கக்கா! நல்லாருக்கா? எனக்கும் ரொம்ப புடிச்ச சீன் இது.
//நான் ரசித்தேன்.... :-)) நன்றாக இருக்கிறது.//
ReplyDeleteவாங்க தர்ஸன்,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. தங்களுக்கு இது பிடித்திருந்ததை அறிந்து மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள்.
//வாங்க ஞானியாரே!
ReplyDeleteகட்டதுரை உங்களுக்கும் அண்ணனா? ஆனா அவனுக்கெல்லாம் பயந்தா நம்ம பொழப்பு எப்படி ஓடும்? //
இன்னாபா! யாரோ வாங்க அண்ணாத்தேன்னு கூப்பிட்ட சத்தம் கேட்டுதே! ஓ நம்ம தம்பி ஞானியா?
சொகமா இருக்கியா கண்ணு?
அட கைப்பு இங்கதான் இருக்காறா! நான் தேடிகிட்டு இருக்கேன்.
//இன்னாபா! யாரோ வாங்க அண்ணாத்தேன்னு கூப்பிட்ட சத்தம் கேட்டுதே! ஓ நம்ம தம்பி ஞானியா?
ReplyDeleteசொகமா இருக்கியா கண்ணு?
அட கைப்பு இங்கதான் இருக்காறா! நான் தேடிகிட்டு இருக்கேன். //
வாங்க கட்டத்துரை அண்ணா..
போய் குண்டக்க மண்டக்க பார்த்திபனை அழைச்சிட்டு வாங்க..
//வாங்க கட்டத்துரை அண்ணா..
ReplyDeleteபோய் குண்டக்க மண்டக்க பார்த்திபனை அழைச்சிட்டு வாங்க..//
ஞானியாரே!
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்லை...ஆமா! நீங்க விருந்து வக்கிறதுன்னா உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் நீங்க சமைச்ச மட்டன் குருமாவை வச்சி விருந்து வைங்க...அது என்ன கைப்புள்ளயை கட்டதுரைக்கும் பார்த்திபனுக்கும் பங்கு போட்டு தலைவாழை இலை போட்டு விருந்து வைக்கிறீங்க? இப்பல்லாம் ஒருத்தரையும் நம்பப் பிடாதப்பா...ஆப்பு வக்கிறதே தொழிலாத் தான் அலையிறாங்க
அடிச்ச அடி கைப்புள்ளைக்கு தான் தெரியும், அதான் ஆஸ்பத்ரிக்கு போயி உடல ரிப்பேர் பண்ணிட்டு வந்திருக்கார். அதான் கொஞ்சம் நாள் மிஸ்ஸிங், அப்படியா கைப்பு
ReplyDelete//அடிச்ச அடி கைப்புள்ளைக்கு தான் தெரியும், அதான் ஆஸ்பத்ரிக்கு போயி உடல ரிப்பேர் பண்ணிட்டு வந்திருக்கார்.//
ReplyDeleteநஹி! கலத் ஜவாப். எதிரிகளைப் பந்தாடிட்டு ரெஸ்டு எடுத்துக்கிட்டு இருக்கறவரு நம்ம தம்பி வீரபாகு. நல்லா கேட்டுப் பாருங்க வெவசாயி...
உளவு துறையின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கத் தலைவர் கைப்புள்ள மீது அதிருப்தி அடைந்துள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ReplyDeleteகைப்புள்ளயின் குடும்ப அரசியல் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் போல் உள்ளது.
ஏற்கனவே கைப்பொண்ணு தல கைப்புவின் வாழ்க்கையில் நுழைந்ததற்கு சங்கத்தின் முக்கிய மீசைக்கார புள்ளி எந்த வித வாழ்த்தும் தெரிவிக்காமல் ஒதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலயின் ஹாங்காங் விசிட் பற்றி வீடு கட்டும் சங்கத்து மற்றொரு முக்கிய புள்ளி கடும் கடுப்பில் இருப்பதாய் பேச்சு. தலயின் ஹாங்காங் லூட்டிகள் பற்றியும் சங்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குடும்ப அரசியலின் அடுத்த கட்டமாய் தன்னுடைய தூரத்து தம்பி வீரபாகுவைச் சங்கத்தில் இணைத்தது பெரும் கலவரத்தைக் கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது...
தல... இருக்கீயா... இப்படி உன்னப் பத்தி தப்பு தப்பாப் பத்திரிக்கையிலே எழுதி இருக்காங்க தல...
நீ எதாவது பேசு தல.... நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)
//தல... இருக்கீயா... இப்படி உன்னப் பத்தி தப்பு தப்பாப் பத்திரிக்கையிலே எழுதி இருக்காங்க தல...//
ReplyDeleteஎங்கேருந்துய்யா ஒன் கண்ணுல மட்டும் இந்த பத்திரிகை எல்லாம் படுது?
//போய் குண்டக்க மண்டக்க பார்த்திபனை அழைச்சிட்டு வாங்க.. //
ReplyDeleteவந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.....
அழைத்தது யாரோ? (கட்டதுரை) நீர்தானோ? கைப்புவும் இங்க இருக்காரோ?
ஓ சங்கத்துல சலசலப்பா!
ReplyDeleteசந்தோஷம் பொங்குதே மனசுக்குள்ள!
இனி நம்ம சோலி சுளுவா முடிஞ்கிரும்ல!
கைப்புள்ள நான் ஒரு கேள்வி கேட்டு எத்தனை நாள் ஆச்சு?
ReplyDelete'ஆப்பு' வை அளக்கப் பயன்படும் அலகு என்ன?
அடடே வாங்க பார்த்திபன்!
ReplyDeleteஉங்களுக்காகத்தான் எல்லாரும் வெயிட்டிங்! ஞானியார் விருந்து கொடுக்காறாம். கைப்புள்ளதான் கலை நிகழ்ச்சியாம். நீங்க இல்லாம களை கட்டாதே!
//'ஆப்பு' வை அளக்கப் பயன்படும் அலகு என்ன?//
ReplyDeleteஆ...ன்...இன்ச்சி...ஒனக்கு புரியற மாதிரிச் சொல்லணும்னா அங்குலம்
ம். இது ஸ்பிரிட்டு! இப்போ அடுத்த கேள்விய பார்க்கலாமா?
ReplyDeleteமூணு வடையை அண்ணன் தம்பி ரெண்டு பேக்கு எப்படி பிரிச்சு கொடுப்பே?
அது சரி,
ReplyDeleteஎன்கிட்ட இருந்து வாங்கிட்டு போன சட்டை எங்கே?
(வின்னர்)
50 ரூபா கொடுத்து தங்கப்ப தக்கம் படம் பார்க்கச் சொன்னனே பார்த்தியா?
ReplyDelete(சரத்)
கைப்புள்ள!
ReplyDeleteமுதல்ல உன் சட்டை பாக்கெட்ல இருந்து நான் போட்ட வாழைப்பழத் தோலிய எடுத்து வெளிய போடு!
தவசி.
இது வில்லங்கமான கேள்வியா இருக்கே?
ReplyDelete//மூணு வடையை அண்ணன் தம்பி ரெண்டு பேக்கு எப்படி பிரிச்சு கொடுப்பே?//
இதுல அண்ணன் பேக்கா? தம்பி பேக்கா? மொதல்ல அத சொல்லு?
//என்கிட்ட இருந்து வாங்கிட்டு போன சட்டை எங்கே?//
ReplyDeleteஅத...கட்டதுரை கிழிச்சிட்டான்யா
//50 ரூபா கொடுத்து தங்கப்ப தக்கம் படம் பார்க்கச் சொன்னனே பார்த்தியா?//
ReplyDeleteபாத்துட்டேன்
//முதல்ல உன் சட்டை பாக்கெட்ல இருந்து நான் போட்ட வாழைப்பழத் தோலிய எடுத்து வெளிய போடு!//
ReplyDeleteஹஹே...என்னய என்ன கேனனு நெனச்சியா...என் சட்டையில தான் பாக்கெட்டே கெடயாதே?
கைப்புள்ள! mp3 எங்க இருக்குது?? தடிப்பசங்க - 3 பதிவும் நல்லா இருந்தது !! முதல் 2 பாகமும் link work-ஆக மாட்டேங்குது !!
ReplyDeleteநானும் ஏ.சி.டெக் (95-99) தான்!!..
//கைப்புள்ள! mp3 எங்க இருக்குது?? //
ReplyDelete***இதுக்கு மேல தம்பி வீரபாகு தன் சொந்த குரல்ல கீழே சொல்றாரு...மேற்கொண்டு கதையை நீங்களே கேட்டுக்கங்க***
இப்படி எழுதியிருக்கே அதுக்கு கீழே ஒரு டப்பா மாதிரி எதாச்சும் தெரியுதுங்களா? நீங்க ரியல் ப்ளேயரோ இல்ல விண்டோஸ் மீடியா ப்ளேயரோ உங்க சிஸ்டத்துல இன்ஸ்டால் பண்ணியிருந்தா அந்த எம்பி3யைக் கேட்கலாம்.
//முதல் 2 பாகமும் link work-ஆக மாட்டேங்குது !! //
ஆமாங்க! கொஞ்ச நாளைக்கு முந்தி வந்த ப்ளாக்கர் பிரச்னைக்கு அப்புறம் வேலை செய்ய மாட்டேங்குது. ப்ளாக்கருக்கு எழுதிப் போடணும்.
//நானும் ஏ.சி.டெக் (95-99) தான்!!..//
அப்படீங்களா? ரொம்ப சந்தோஷம். நீங்க எந்த பிரான்ச்? கெமிக்கல்ல சில பேரை எனக்குத் தெரியும். தடிப்பசங்க#3ல வர்ற எங்க ஸ்கூல்மேட் ரவி, அருண் ப்ரூஸ்,ஜே.பி.சீனிவாசன் அப்புறம் இண்ட்ஸ்ட்ரியல் பையோடெக்ல ஒரு ரெண்டு பேரு.
//நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)//
ReplyDeleteநம்புறேன்யா...நம்புறேன்! அதுக்குன்னு எல்லா ப்ளாக்லயும் போய் இதச் சொல்லணுமா? எதாவது அறிக்கை விட்டா 'அவனுங்க' பிச்சி எடுக்குறானுங்க...அறிக்கை விடலன்னா நீ 'பத்திரிகை'நியூஸா கொண்டாரே? என்ன தான் பண்ணுவேன்?
சரி...ஒனக்கு அறிக்கை தானே வேணும்? இந்தா வாங்கிக்க "எங்கள் சங்கத்து சிங்கங்கள் அனைவரும் தலயின் அன்புக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்...இங்கு உள்கட்சி பூசலுக்கு இடமில்லை. தம்பி வீரபாகு சும்மா உலூலூங்காட்டி ரெண்டு நாள் தங்கியிருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போனாரு. அவருக்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது"...போதுமா?
இத கொண்டு போய் எல்லா பத்திரிகைக்கும் குடு...எல்லா ப்ளாக்லயும் எழுது.
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா!
ReplyDeleteபுது மணமகள்தான் வந்த நேரமடா!
கைப்புள்ளக்கேத்த கைப்பொண்ணு வந்தவுடன் கோவையைச் சேர்ந்த மீசக்கார நண்பன் கருத்து(!?) ஏதும் சொல்லாததால் சில (விஷமப்) பத்திரிக்கைகள் தங்களுக்குத் தோன்றியவாறு செய்திகள் வெளியிட்டு உட்கட்சிப் பூசலை உண்டுபண்ண முயற்சி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. எந்த ஒரு பத்திரிக்கையும் இத்தகு தரந்தாழ்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
//எந்த ஒரு பத்திரிக்கையும் இத்தகு தரந்தாழ்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.//
ReplyDeleteஅநியாயத்துக்குப் புல்லரிக்க வச்சுட்டியேயா...என் ராசா...என் தங்கம்...நல்லாருய்யா.
என்னோட சிஸ்டத்துல ரியல் ப்ளேயர் & விண்டோஸ் மீடியா ப்ளேயர் - ரெண்டுமெ இருக்குது. மத்த எல்லா பதிவுகள்-லயும் பாட்டெல்லாம் கேக்க முடியுது. உங்க பதிவு-ல மட்டும் எனக்கு அந்த இமேஜ் ஏன் சரிய தெரிய மாட்டேங்குதுன்னு தெரியலே !!சரி.. அத விடுங்க..
ReplyDeleteநானும் கெமிக்கல் தான். !!
//ரவி, அருண் ப்ரூஸ், ஜே.பி.சீனிவாசன் ..
எல்லாரயும் தெரியும்.... அருண் ப்ரூஸ்-க்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சு!!.. நான் இப்போ டொராண்டோ-ல இருக்கிறதால போக முடியல!!
நீங்க புட்பால் டீம்-ல இருந்தீங்களா ??.
//எல்லாரயும் தெரியும்.... அருண் ப்ரூஸ்-க்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சு!!.. நான் இப்போ டொராண்டோ-ல இருக்கிறதால போக முடியல!!//
ReplyDeleteஅடடே நல்ல சேதி தான் குடுத்திருக்கீங்க. ப்ரூஸை என்னோட கிளாஸ்மேட் மூலமாத் தெரியும். அதோட நானும் NCCயில் இருந்ததால சனிக்கிழமைகள்ல பாத்து பேசறதுண்டு.ஜே.பி.யைத் திருவல்லிக்கேணியில் இருக்கும் போது தெரியும்.
//நீங்க புட்பால் டீம்-ல இருந்தீங்களா ??//
இல்லீங்க.
பார்த்தீபன் :)
ReplyDeleteசிலநூ றடிகொடுக்க கைப்புக்காய் பார்த்திருக்க
பலநூறு டெக்னிக்கா கட்டதுர வச்சிருக்க
தலகிட்ட வேகாது பப்புன்னு சொல்லியிப்போ
எழுதவேணும் ஈற்றடி தா !!
அன்புடன்
ஜீவா