Monday, March 20, 2006

காலன்

அன்புடையார்க்கும்
அஃதிலார்க்கும்
வேற்றுமை
அறியா மூடன்

25 comments:

  1. தலையில அடிக்காதீங்க, தலையில அடிக்காதீங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேனே. கேட்டீங்களா?

    பாவம், புள்ள பேசறத பாருங்க. கலங்கிப் போயிருச்சே. நான் என்னத்த பண்ணுவேன்.

    ReplyDelete
  2. காலன்


    உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி
    வித்தியாசம் தெரியாதவன்
    ஏழையென்றும் எளியனென்றும்
    இரக்கம் காட்ட மறுப்பவன்
    பணம் நிறைந்த வீட்டினிலும்
    பாசக்கயிறு வீசுபவன்
    உலகிலுள்ள உயிருக்கெல்லாம்
    ஒரே நீதி வழங்குபவன்
    தருமம் காப்பவன் மூடனல்ல
    எம தரும ராஜன்

    கைப்புள்ள இது உங்க கவிதைக்கான பதில்.. மற்றபடி.. ஏன் இப்படி ஒரு கவிதை காலனை எதிர்த்து.. நிகழ்வின் தாக்கமா??

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  3. //??????//
    //தலையில அடிக்காதீங்க, தலையில அடிக்காதீங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேனே. கேட்டீங்களா? //

    அடுத்த மாதம் புது வேலை கிடைத்து சென்னைக்குப் போகும் மகிழ்ச்சியையும் மீறி துக்கத்தில் ஆழ்த்தும் செய்தியாக நேற்றிரவு வந்தது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் மறைவு.

    ReplyDelete
  4. /இவ்விடம் சினிமா,கவிதை,காமெடி, இளையராஜா,பொது அறிவு,அறிவியல் இப்படி எதைப் பற்றி வேண்டுமானாலும் உளறப்படும்.//

    இதோட சம்பந்தப்படுத்தி காமெண்ட் போட்டுட்டேன். சாரி.

    ReplyDelete
  5. //இதோட சம்பந்தப்படுத்தி காமெண்ட் போட்டுட்டேன். சாரி. //

    பரவால்லீங்க கொத்ஸ்.

    ReplyDelete
  6. //பணம் நிறைந்த வீட்டினிலும்
    பாசக்கயிறு வீசுபவன்
    உலகிலுள்ள உயிருக்கெல்லாம்
    ஒரே நீதி வழங்குபவன்
    தருமம் காப்பவன் மூடனல்ல
    எம தரும ராஜன்//

    உண்மை தான். ஆனால் அது நமக்கு என்று வரும் போது அவ்வுண்மையை ஒத்துக் கொள்ள முடிவதில்லையே!

    ReplyDelete
  7. muzhu mudhal samadharmavadhi kalan allava?
    pavam avan senja thappu kaipste mattikkondadhudhan

    ReplyDelete
  8. //muzhu mudhal samadharmavadhi kalan allava?//

    நீங்கள் சொல்வது சரி தான்...இருப்பினும் நாமறிந்த நல்லவர் ஒருவரை நாளை காண முடியாது என்ற உண்மை தெரிய வரும் போது, காலன் கொடியனாகவே தோன்றுகிறான்.

    ReplyDelete
  9. ஆழ்ந்த அனுதாபங்கள், கைப்புள்ளெ

    ReplyDelete
  10. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  11. sorry for the loss கைப்புள்ளே...

    ஆனா, நீங்களும் சங்கத்துக்கு தகுதியானவர்னு நிரூபிச்சுட்டீங்க...

    ReplyDelete
  12. கைப்பு சில நேரங்களில் வார்த்தைகளுக்கு இல்லாத சக்தி மௌனத்துக்கு உண்டு....எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல்ல..... சில நிமிட மௌனங்களை தமிழில் பொதிந்து உனக்கு ஆறுதலாய் அனுப்பி வக்கிறேன்... உன் மனசுக்கு அது அமைதியைத் தரட்டும்.

    ReplyDelete
  13. உன் வருத்ததில் நானும் பங்கு கொள்லிறேன் கைப்புள்ளை..

    :(


    பாசம் உள்ளவன்
    பாசம் இல்லாதவன்
    என்ற பாகுபாடுபாடின்றி
    பாசக் கயிறை வீசுபவந்தான்
    அந்த கொடிய காலன்.

    ReplyDelete
  14. வருந்துகிறேன் கைப்புள்ளை.

    என்னடா ரெண்டு நாளா ஆள் ரொம்ப அமைதியாய்ட்டியேன்னு பார்த்தேன். இதுதானா சங்கதி?

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  15. நண்பரே,
    தங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். நண்பரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete
  16. கைப்புள்ளை...வருந்த வேண்டாம். அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்.

    காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே - திருப்புகழ்

    ReplyDelete
  17. sory kaipuulle
    ungal vedhanai purikinradhu
    enakkum immadhiri soham erpattadhu undu
    sory , i share your feelings

    ReplyDelete
  18. //நமக்கு என்று வரும் போது அவ்வுண்மையை ஒத்துக் கொள்ள முடிவதில்லையே!//
    உண்மைதான் கைப்புள்ள.

    என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  19. மேல் படிப்பிற்காக தில்லி வந்து...அப்படியே அங்கேயே வேலை கிடைத்து தில்லி, இந்தூர் என ஏழு ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன.இதோ இன்னும் சிறிது நாட்களில் சென்னை திரும்புகிறேன் புது வேலை கிடைத்து. ஆயினும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒருவர்(எங்கள் நலம்விரும்பி) நான் இப்போது போகும் போது இருக்கப் போவதில்லை என எண்ணும் போது இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மன வேதனை.

    நெருங்கிய குடும்ப நண்பர்னா யாரு? அப்பாவோட வேலை செஞ்சவரா இருப்பாரு...இல்ல பக்கத்து வீட்டுக் காரரா இருப்பாரு...இல்ல எதோ ஒரு வழியில தெரிஞ்சவரா இருப்பாரு. மாமாவும் அப்படி தான்(நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து அவரை இப்படி தான் கூப்பிடறேன்) ...அப்பாவுக்கு எதோ ஒரு விதத்துல அறிமுகம் ஆனவர்.ஆனா ரத்த சொந்தங்கள் போல அப்படியொரு நெருக்கம் எங்கள் குடும்பத்தோடு. அவரை சோகமா ஒரு நாளும் பார்த்ததில்லை. துறுதுறுன்னு எதாச்சும் செஞ்சுக்கிட்டே இருப்பாரு. பொங்கல், தீபாவளி அப்படின்னா மறக்காம வீட்டுக்கு வந்து வாழ்த்து சொல்லுவாரு(எவ்வளவு வேலை இருந்தாலும்). சின்ன பையனா இருந்ததுலேருந்து அவரை ஒரே மாதிரி தான் பாத்துருக்கேன்...சிரிச்ச முகமா. அடுத்தவங்களுக்கு உதவி செய்யற குணம்னா என்னனு அவரைப் பாத்து கத்துக்கணும். இயல்பாவே எல்லார் கிட்டயும் அன்பா பழகற அவரோட குணமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சில வரிகளில் சொல்ல முடியுமா...பல வருட நினைவுகளை? நேற்றிரவு அவருடைய மறைவுச் செய்தி கேட்டதும் அது உண்மை என்று நம்பவே மிகக் கடினமாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல அது உண்மை என்று உணர முடிகிறது...இதயமும் கனக்கிறது. இந்நேரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு அவருடைய பிரிவினைத் தாங்கும் மனவலிமையை தருமாறு இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    எனக்கு ஆறுதல் தெரிவித்த வலைப்பதிவு அன்பர்களுக்கும் கடமை பட்டுள்ளேன். நன்றி.

    ReplyDelete
  20. Heartiest Condolenses, Kaipullai.Ungalai eppavum jolly aga parthu vittu sogamaga parkka mudiya villai.

    ReplyDelete
  21. hearfelt condolences Kaipullai.
    Sorry to hear the news.

    ReplyDelete
  22. கைபுள்ளை

    ரொம்ப வருத்தமா இருக்குங்க..இந்த வாரம் பிரார்த்தனை கிளப்ல அவர் ஆத்மா சாந்தி அடையவும் அவர் குடும்ப நலனுக்காகவும் பிரார்த்தனை பண்றோம்.அவர் பேரும் ஊரும் தெரிஞ்சா பிரார்த்தனை பண்ண உதவியா இருக்கும்.

    ReplyDelete
  23. hearfelt condolences kaipullai,

    time is a great healer....

    Radha

    ReplyDelete
  24. Hearty condolence. irony is i'm first time here... Hhhhhmmm..

    ReplyDelete