Saturday, March 18, 2006

3டி திருவிழா - 8

வடக்குப்பட்டி ராமசாமிக்கு வேண்டப்பட்டவருங்கோ!

மேல உள்ள குறிப்பு பத்தலைன்னா இதப் பாருங்க

"அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்"

18 comments:

  1. இவ்வளவு சத்தமாவா சொல்றது...........காலைல அதோட முகத்துல முழிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன். ஒரு 3-டி படம் கிடைச்சிருக்கே!

    ReplyDelete
  2. உங்க 3D திருவிழா 8,7,6...பார்த்திட்டு வந்தேன். எதுவுமே தெரியலை. அப்புறம் 3D திருவிழா 1-ல தந்த விளக்கத்தைப் படிச்சதும் எல்லாமே ரொம்ப தெளிவா தெரியுது. நன்றி. இதில ஒரு விலங்கு வாலைத் தூக்கின்னு நிக்குது.

    ReplyDelete
  3. //அதோட முகத்துல முழிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன். //

    ஆஹா...அப்ப இன்னிக்கு உங்களுக்கு வரவோ வரவு தான்...கெடக்கிறதுல ஆளுக்குப் பாதி சரியா?
    :)-

    ReplyDelete
  4. //அப்புறம் 3D திருவிழா 1-ல தந்த விளக்கத்தைப் படிச்சதும் எல்லாமே ரொம்ப தெளிவா தெரியுது. நன்றி. இதில ஒரு விலங்கு வாலைத் தூக்கின்னு நிக்குது.//

    வாங்க அனானிமஸ்! சரியா தான் சொல்றீங்க. க்ளூவைப் பாத்தீங்கன்னா என்ன விலங்குன்னு சுலபமாத் தெரிஞ்சிடும்.

    ReplyDelete
  5. ஒரு வயல் அதுல ஒரு நரி பக்கத்துல ஒரு மனிதன் மாதிரி இருக்கு.. கையில ஏர்கலப்பையோட

    ReplyDelete
  6. நரி தெரிலீங்க... ஏதாவது 3D கண்ணாடி போட்டுட்டு பாக்கணுமா??

    ReplyDelete
  7. //ஒரு வயல் அதுல ஒரு நரி பக்கத்துல ஒரு மனிதன் மாதிரி இருக்கு.. கையில ஏர்கலப்பையோட//

    நீங்கல்லாம் முதல் முயற்சியிலேயே பாத்து சொல்றவங்க. நரிங்கறது சரி தான். ஆனா ஏர்கலப்பையெல்லாம் எனக்கு தெரியலை...நரி பக்கத்துல எதோ ஒன்னு இருக்கு...என்னனு இன்னும் தெளிவாகலை.

    ReplyDelete
  8. //நரி தெரிலீங்க... ஏதாவது 3D கண்ணாடி போட்டுட்டு பாக்கணுமா??//

    வாங்க poons,
    இது ஆனந்த விகடன்ல சமீபத்துல வந்த கண்ணாடி போட்டு பாக்குற மாதிரியான 3டி கிடையாது.

    இதப் பாக்குறது எப்படின்னு தெரிஞ்சிக்க 3டி திருவிழா-1 ஐப் பாருங்க. பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  9. என்ன படிச்சு என்ன பண்ண.. இந்தப் படமெல்லம் உத்துப் பாக்கறதுக்கு எனக்கு பொறுமையில்லிங்கோ.. ஆ.வி.ல கண்ணாடி மாட்டி பார்த்தே ஒண்ணும் தெரிலேன்னு சொன்னவங்க நாங்க.. ஏதோ அது நரின்னு இத்தன பேர் சொல்றாங்களே, அதுவே நான் பார்த்ததா நினைச்சிகறேன்.. :(

    ReplyDelete
  10. //ஆ.வி.ல கண்ணாடி மாட்டி பார்த்தே ஒண்ணும் தெரிலேன்னு சொன்னவங்க நாங்க.. ஏதோ அது நரின்னு இத்தன பேர் சொல்றாங்களே, அதுவே நான் பார்த்ததா நினைச்சிகறேன்.. :( //

    வாங்க பொன்ஸ்!
    இப்படியெல்லாம் சொன்னா விட்டுருவமா என்ன? இன்னும் ஒரு சின்ன முயற்சி பண்ணுங்க. இந்த 3டி பதிவுல(3டி திருவிழா-8), 3டி படத்துக்கு மேலே ரெண்டு புள்ளியிருக்குறது தெரியுதுங்களா? இப்ப நீங்க கொஞ்சம் கண்ணைச் சுருக்கி இல்ல உங்களுக்கு எப்படி வசதியோ (ஒன்னரை கண்ணு வச்சோ) ரெண்டு புள்ளியையும் ஒன்னு மேல ஒன்னு வர மாதிரி பார்க்க முயற்சி பண்ணுங்க. அப்படி ரெண்டு புள்ளி ஒன்னா உங்களுக்குத் தெரிஞ்சதுனா 3டியும் உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். முயற்சி திருவினையாக்கும். எனக்காக இன்னுமொரு முயற்சி...ப்ளீஸ்!

    ReplyDelete
  11. எனக்கு கீதா சொல்ற மாதிரி ஒரு மனிதன் கலப்பை மாதிரி ஒரு கட்டையை தூக்கிகிட்டு நிக்குறது தெரியுது.

    ReplyDelete
  12. //எனக்கு கீதா சொல்ற மாதிரி ஒரு மனிதன் கலப்பை மாதிரி ஒரு கட்டையை தூக்கிகிட்டு நிக்குறது தெரியுது.//

    வாங்க சிவா!
    உங்களுக்கும் தெரிஞ்சிட்டானா? ஆபிஸ்ல 3டி படத்தை முறைச்சு முறைச்சு பாக்க முடியாது. அதனால நான் வெளியே போய் தான் பாக்கணும். கொஞ்சம் டைட்டா இருக்குறதுனால இன்னும் பாக்க முடியலை. கூடிய சீக்கிரமே பாத்துடறேன்.

    ReplyDelete
  13. நல்லா தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, எங்க ஆபீஸ்ல இப்போ என்னை ஏதோ லூஸ் மாதிரி தான் பாக்கறாங்க (முன்னமே அப்படித்தான்னாலும், மத்தவங்களுக்குத் தெரியாதில்ல...).

    எப்படிப் பார்த்தாலும் நரி தெரியலை. அந்த புள்ளியும் ஒண்ணுமேல ஒண்ணா தெரியலை...சனி ஞாயிறு வெளில போய் பொறுமையா முயற்சி பண்ணிட்டு சொல்றேன்.

    ReplyDelete
  14. //சனி ஞாயிறு வெளில போய் பொறுமையா முயற்சி பண்ணிட்டு சொல்றேன்.//

    முயற்சி பண்ணிக்கிட்டேயிருங்க. 3டி படம் தெரிஞ்சதும் you will feel the effort was worth it(ஒன்னும் இல்லீங்க...லைட்டா பீட்டர் உட்டேன். நீங்க ஒன்னும் கண்டுக்காதீங்க)
    :)-

    ReplyDelete
  15. கைப்புள்ள,

    கொஞ்சம் அலுவலகப் பணி அதிகமானதால இப்பத்தான் பாக்க முடிஞ்சது.

    புள்ளி வச்சீட்டீங்களா.. கோலம் போட்டுட வேண்டியதுதான்.

    ReplyDelete
  16. கைப்புள்ள,

    இன்னைக்கி எங்க மானேஜர் அம்மா (அமெரிக்கன்) ஒரு 3D காலெண்டர் வச்சிருந்ததைப் பார்த்தேன். அதைப் பத்திக் கேட்டப்ப எப்படி பாக்கணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. ரெண்டு மூணு படம் நல்லாத் தெரிஞ்சது. அவங்க சொன்ன மாதிரியே இங்க வந்து பாக்கலாம்னு உங்க திருவிழா பதிவுகள்ல 8வது தொடங்கி பின்னால போறேன். எத்தனை தெரியுதுன்னு பாக்கலாம்.

    இதுல நரி சரியாத் தெரியலை. ஒரு (2?) மிருகம் நிக்கிறது தெரியுது.

    ReplyDelete
  17. //இன்னைக்கி எங்க மானேஜர் அம்மா (அமெரிக்கன்) ஒரு 3D காலெண்டர் வச்சிருந்ததைப் பார்த்தேன். அதைப் பத்திக் கேட்டப்ப எப்படி பாக்கணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. ரெண்டு மூணு படம் நல்லாத் தெரிஞ்சது.//

    ஏங்க...ஒரு வெள்ளைக்கார அமெரிக்கன் அம்மா சொன்னா தான் உங்களுக்கு 3டி படம் தெரியுதா? ஒரு கறுப்பு இந்தியப் பையன் எத்தனை தரம் கரடியா கத்துனான்? உம்ம்...உள்ளூர் சரக்குக்கு எப்பவுமே மதிப்பு இல்ல! எப்படியோ 3டி படம் பாத்தீங்களே...அதுவே சந்தோசம் தான்.
    :)
    (கோவிச்சுக்க கீச்சுக்கப் போறீங்க...எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வைக்கிறேன்)

    ReplyDelete
  18. //புள்ளி வச்சீட்டீங்களா.. கோலம் போட்டுட வேண்டியதுதான்.//

    வாங்க கோபி,
    புள்ளி வக்காமலேயே கலக்குற ஆளு நீங்க. எதோ இந்த படம் புள்ளி வச்சே கெடச்சது நம்ம அதிர்ஸ்டம்.

    ReplyDelete