Wednesday, March 08, 2006

சொல்றோம்ல : பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி - இந்த பேரைக் கேட்டதும் என்ன ஞாபகத்துக்கு வருது? வானம் பொழியுது லே! பூமி வெளயுது லே!ன்னு வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனும், அவருடைய தம்பி ஊமைத்துரையும் தானே! அவங்க ஆண்ட மண் இந்த பாஞ்சாலங்குறிச்சி. அவ்ங்க வீரத்தைப் பத்தி நம்ம எல்லாரும் புத்தகத்துல படிச்சும் சினிமால பாத்தும் இருக்கறதால இந்த ஊர் பேரைக் கேள்வி பட்டாலே, அவங்க ரெண்டு பேரும் ஞாபகத்துக்கு வராங்க. ஆனா மண்ணுக்குன்னு ஒரு மகிமை இருக்கறதா சொல்ல கேள்வி பட்டிருப்போம். அப்படி இயற்கையாவே ஒரு மகிமை கொண்ட ஒரு மண்ணு பாஞ்சாலங்குறிச்சி மண்ணு. அதுக்கு பின்னாடி ஒரு குட்டிக் கதை இருக்கு. அதப் பத்தி தான் இந்த பதிவு.

வீரபாண்டிய கட்டபொம்மனோட பூர்வீகம்னு பாத்தீங்கன்னா, ஆந்திரம். ஆமாங்க உண்மை தானுங்க. கட்டபொம்மனோட மூதாதையர்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டுல ஆந்திரத்துல இருந்து பஞ்சம் பொழக்க வந்த 'ஆதி ஆந்திரர்' என்ற வகுப்பைச் சேந்தவங்க. எப்பவுமே கம்பளம் போத்தி இருந்ததால அவங்களுக்குக் 'கம்பளத்தார்' என்கிற பேரும் இருந்தது. ஜக்கம்மா அவங்களோட குலதெய்வத்தின் பேர்.(வீரபாண்டிய கட்டபொம்மன் படத்து ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா பாட்டு நியாபகத்துக்கு வருதா?) கட்டபொம்மனின் மூதாதையர் பாண்டிய மன்னர்களின் அரசவையில் வேலை செஞ்சதாவும், கட்டபொம்மன் என்ற பேரே இதை தான் குறிக்குதுன்னும் படிச்சிருக்கேன். 'பொம்மு' என்பது பாண்டிய மன்னர்களுக்கு வழங்கப்பட்ட பேராம். 'கெட்டி' என்பதுக்கு தெலுங்கில் 'விசுவாசமான' என்று பொருளாம். பாண்டிய மன்னர்களுக்கு விசுவாசமா இருந்ததுனால 'கெட்டி பொம்மு' என்று அழைக்கப்பட்ட இவங்க நாளடைவில கட்டபொம்மன்னு என்று அழைக்கப்படலானாங்க.

பாஞ்சாலங்குறிச்சி என்கிற ஊருக்கு எப்படி இந்த பேரு வந்ததுன்னு ஒரு கதை இருக்கு. ஒரு நாள் கட்டபொம்மனோட மூதாதையரான ஆதிகட்டபொம்மன் காட்டுல வேட்டையாட போனாராம். அவரோட வேட்டை நாய் ஒரு காட்டுமுயலைத் துரத்த ஆரம்பிச்சுச்சாம். நாயைத் தொடர்ந்து இவரு பின்னாடியே குதிரையில வர்றாராம். வேகமா ஓடற முயலைத் துரத்திக்கிட்டு நாயும் பின்னாடியே ஓடுது. ஒரு இடம் வந்ததும் முயல் அப்படியே நின்னுடுச்சாம். அதுக்கப்புறம் முயல் நாய் வர்ற திசையிலே திரும்பி நாயைத் துரத்த ஆரம்பிச்சுடுச்சாம். இதைப் பத்த ஆதிகட்டபொம்மன் அப்படியே அசந்து போயிட்டாராம். ஒரு முயல் நாயைத் துரத்தற அளவுக்கு இந்த மண்ணுக்குன்னு ஒரு வீரம் இருக்குன்னு ஒணந்து அந்த இடத்துலேயே தன்னோட அரசை அமைக்க தீர்மானிச்சாராம். அத்தோட தன்னோட பாட்டனாரின் பேரான 'பாஞ்சாலன்' என்பதைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சின்னு பேரும் வச்சிட்டாராம்.

இதுக்கு மேற்கோள் எல்லாம் என்னை கேக்காதீங்க. இதை படிக்கும் போது நான் அறியா புள்ள, ப்ளாக்கெல்லாம் எழுதுவோம்னு அப்ப எனக்குத் தெரியாது. அதனால வெளயாட்டுத் தனமாப் படிச்சதோட சரி. இதப் பத்தி மேற்கொண்டு யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கறேன்.

31 comments:

  1. கேக்க ஆளில்லைன்னு ஒரு ரீலா இல்லே நிஜந்தானா? என்ன இருந்தாலும் சுவாரசியமாத்தான் இருக்கு...

    ReplyDelete
  2. யோவ்!கட்டபொம்மன் -னா எங்க நடிகர் திலகம் ஞாபகம் வரலியாக்கும்! நீர் சொல்லுற முயல் கதையெல்லாம் வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்துல ஒரு பாட்டுலே வந்திருச்சு ஓய்!

    ReplyDelete
  3. அண்ணே...என்னா அண்ணே படிச்சது அம்புட்டும் மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்க.......

    இம்பூட்டு அறிவு இருந்தும் சரளாக்கட்ட அடிவாங்குற மாதிரில்ல ஆய்ப்போச்சு பொயப்பு.

    ReplyDelete
  4. கைப்புள்ள,
    நானும் இந்த கதைய ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். உண்மையோ, பொய்யோ கேட்க சுவாரசியமா இருக்கு. அது போதும்.

    ReplyDelete
  5. இந்தக் கதைய நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா எவ்வளவு உண்மையானதுன்னு தெரியலை. ஆனா கட்டபொம்மன் உண்மை. ஊமைத்துரை உண்மை. இன்னைக்கும் கட்டபொம்மன் வெச்சிக் கும்பிட்ட முருகன் சிலைகளத் திருச்செந்தூர் கோயில்ல வெச்சிருக்காங்க.

    கட்டபொம்மன் கோட்டைய இடிச்சதக் கேள்விப் பட்டிருப்பீங்க. அதுக்கப்புறம் அதே போல ஊமைத்துரையும் கட்டினாராம். திரும்பவும் வெள்ளக்காரன் வந்துட்டான். ஆனா இந்த வாட்டி இவங்க கோட்டைய விட்டு வெளிய வரல. கோட்டையும் அவ்வளவு லேசுல ஒடையலையாம். அதுனால கோட்டையச் சுத்தி மெளகா வத்த மூட்டைகளப் போட்டுக் கொளுத்தினாங்களாம் வெள்ளக்காரங்க...நெடிதாங்காம ஓடி வந்த ஆம்பளைக பொம்பளைக பிள்ளைகள எல்லாம் சுட்டுத் தள்ளீட்டாங்களாம். (இதப் பத்தி மலேசியா ஜே.பியோட அகத்தியர் குழுவுல படிச்சிருக்கேன்.)

    ReplyDelete
  6. I too have heard this story and it runs parallel to that story about 'karikaalan' who made 'uRaiyuur' as his capital when his elephant was chased by a cock at a certain point.

    'maNNukkum viiram uNdu' enbadhaiyE indhak kadhaikaL solluginRana.

    ReplyDelete
  7. கைப்பு,
    ஒரு சந்தேகம். இந்த கட்டபொம்மனுக்கும் கட்டதுரைக்கும் என்ன சம்பந்தம்? அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  8. என்ன கைப்புள்ள? திடீர்ன்னு கட்டபொம்மன் கதையெல்லாம் சொல்லத் தொடங்கிட்டீங்க? நானும் நீங்க சொன்னதை எல்லாம் படிச்சிருக்கேன். அதனால நீங்க சொல்றது ரீல் இல்லைன்னு தெரியும். ஆனா கெட்டிபொம்முவும் ஊமைத்தொரையும் நம்ம சினிமாவுல வந்த மாதிரி ஆங்கிலேயர்களை எதிர்த்தது விடுதலை வேட்கையில் இல்லைன்னும், அவங்க பக்கத்துப் பாளையத்துக்கெல்லாம் போய் கொள்ளையடிச்சாங்கன்னும் படிச்சிருக்கேன். நீங்க படிச்சிருக்கீங்களா? நம்ம மீசைத் தாத்தா ம.பொ.சி. தான் கெட்டிபொம்முவை கட்டபொம்மனாக்கி ஹீரோவாக்குனார்ன்னும் படிச்சிருக்கேன்.

    ReplyDelete
  9. //கேக்க ஆளில்லைன்னு ஒரு ரீலா இல்லே நிஜந்தானா?//

    ஏங்க பெரியவரே...நீங்க வேற? கட்டதுரைகளும்...சாரி கட்டபொம்மன்களும் ஊமைத்துரைகளும் நெறஞ்சிருக்குற தமிழ் வலை உலகில் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுப்பேன்னு நெனக்கிறீங்களா?

    ReplyDelete
  10. //யோவ்!கட்டபொம்மன் -னா எங்க நடிகர் திலகம் ஞாபகம் வரலியாக்கும்!//

    நம்ம நடிகர் திலகம்னு சொல்லுங்க...மன்னிக்கனும் தப்பு நடந்து போச்சு.

    //நீர் சொல்லுற முயல் கதையெல்லாம் வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்துல ஒரு பாட்டுலே வந்திருச்சு ஓய்!//
    எந்த பாட்டுங்ண்ணா?

    ReplyDelete
  11. //இம்பூட்டு அறிவு இருந்தும் சரளாக்கட்ட அடிவாங்குற மாதிரில்ல ஆய்ப்போச்சு பொயப்பு.//

    இப்பல்லாம் பழகிப் போச்சு...அடி வாங்கறதுக்குன்னே அவதாரம் எடுத்தவன்னு நெனச்சு பெருமை பட்டுக்க வேண்டியது தான்.
    :)-

    ReplyDelete
  12. //உண்மையோ, பொய்யோ கேட்க சுவாரசியமா இருக்கு. அது போதும். //
    வாங்க சித்தன்! உங்கள் வருகைக்கும் "தமிழில்" பின்னூட்டத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  13. //கட்டபொம்மன் கோட்டைய இடிச்சதக் கேள்விப் பட்டிருப்பீங்க. அதுக்கப்புறம் அதே போல ஊமைத்துரையும் கட்டினாராம். திரும்பவும் வெள்ளக்காரன் வந்துட்டான். ஆனா இந்த வாட்டி இவங்க கோட்டைய விட்டு வெளிய வரல. கோட்டையும் அவ்வளவு லேசுல ஒடையலையாம். அதுனால கோட்டையச் சுத்தி மெளகா வத்த மூட்டைகளப் போட்டுக் கொளுத்தினாங்களாம் வெள்ளக்காரங்க...நெடிதாங்காம ஓடி வந்த ஆம்பளைக பொம்பளைக பிள்ளைகள எல்லாம் சுட்டுத் தள்ளீட்டாங்களாம். (இதப் பத்தி மலேசியா ஜே.பியோட அகத்தியர் குழுவுல படிச்சிருக்கேன்.)//

    வாங்க ராகவன்,
    உங்க பின்னூட்டத்தைப் பாத்து மட்டற்ற மகிழ்ச்சி. நான் ஆவலா கவனிச்ச ஒரு விஷயத்தை நீங்களும் கவனிச்சிருக்கீங்கன்னு நெனக்கும் போது ரொம்ப சந்தோஷம். இது சம்பந்தமா ஆராய்ச்சி பண்ண நானும் என் நண்பன் பிரான்சிசும் எங்க காலேஜ்ல ஒரு முழு செமஸ்டரே செலவழிச்சிருக்கோம். இந்த கோட்டையை முத முதல்ல பாத்த கர்னல் வெல்சுக்கு இங்கிலாந்துல முட்டைக் கோசுக்களைச் சேமிக்க பயன்படுத்தற கிடங்கு மாதிரி தோணுச்சாம். அது அப்புறம் கும்பினியர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குத் தண்ணி காட்டுனது வேற விசயம். இதப் பத்தி வெல்சு எழுதியிருக்கிற புத்தகம்(1806ஆம் ஆண்டு பிரதி) சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ளது. அதை படிக்கிற பாக்கியம் அப்ப எங்களுக்குக் கெடச்சது. இதப் பத்தியும் ஒரு பதிவா போடலாம்னு தான் நானும் யோசிச்சு வச்சுருந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க.

    //(இதப் பத்தி மலேசியா ஜே.பியோட அகத்தியர் குழுவுல படிச்சிருக்கேன்.//
    இதோட சுட்டி கொஞ்சம் தர முடியுமா?

    ReplyDelete
  14. //இந்த கட்டபொம்மனுக்கும் கட்டதுரைக்கும் என்ன சம்பந்தம்?//

    ரெண்டு பேருமே நல்லவங்க. உங்களை மாதிரி கூட இருந்தே போட்டு வாங்குற ஆளு கெடயாது
    :)-

    ReplyDelete
  15. //நல்லாயிருக்கு.. :-) //

    வாங்க கோபி! 3டியோட நிறுத்திக்காம மத்த பதிவுங்களுக்கும் ஆதரவு கொடுக்கறதுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. //திடீர்ன்னு கட்டபொம்மன் கதையெல்லாம் சொல்லத் தொடங்கிட்டீங்க?//

    இன்னிக்கு இது எழுதனும்னு நெனச்சு எதுவும் எழுதறதில்லை. அந்த நேரத்துல எது தோணுதோ அதப் பத்தி எழுதிடறது.

    //ஆனா கெட்டிபொம்முவும் ஊமைத்தொரையும் நம்ம சினிமாவுல வந்த மாதிரி ஆங்கிலேயர்களை எதிர்த்தது விடுதலை வேட்கையில் இல்லைன்னும், அவங்க பக்கத்துப் பாளையத்துக்கெல்லாம் போய் கொள்ளையடிச்சாங்கன்னும் படிச்சிருக்கேன். நீங்க படிச்சிருக்கீங்களா?//

    படிச்சிருக்கேங்க. ஆனா கட்டபொம்மனை விட ஊமைத்துரை மேல வரலாற்று ஆசிரியர்களுக்கு கொஞ்சூண்டு நல்ல அபிப்ராயம் இருக்குன்னு நெனக்கிறேன்.

    ReplyDelete
  17. //ரெண்டு பேருமே நல்லவங்க. உங்களை மாதிரி கூட இருந்தே போட்டு வாங்குற ஆளு கெடயாது//

    சரி. நான் போட்டு வாங்கற ஆளு. பரவாயில்லை. ஆனா போடாமலேயே வாங்கற பார்ட்டிங்கள்ளாம் இருக்காங்களே. அவங்கள என்ன செய்யறது?

    ஆமா நீ பின்னூட்டத்தைப் பத்திதானே சொல்ல வந்தது?

    ReplyDelete
  18. //ஆமா நீ பின்னூட்டத்தைப் பத்திதானே சொல்ல வந்தது?//

    மூளைக்காரரைய்யா நீரு! மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போட்டு எப்படியோ வெளம்பரத்தைத் தேடிக்கிட்டீரு...வாழ்க! வளர்க!
    இதையும் பின்னூட்ட அகராதில சேத்துக்கங்கையா!

    ReplyDelete
  19. Sometime back, Andumani in Dinamalar Pa.Ke.Pa mentioned that he read a book in which Kattabomu gone to meet that Englishman(Jackson?) for 3 months continously with his army and treasure to pay tax("Kappam"). That English man didnt respect Kattabombu and even not offered him seat during 3 hr discussion

    Pls let me know how to download Tamil fonts. Also, let me know the same fonts can be used for all others' BLOGsite - sivaprakasam

    ReplyDelete
  20. வாங்க சிவப்பிரகாசம்,
    இந்த பதிவுல தமிழில் பதியறத பத்தி பொட்டீ கடையும் கோபி மாமாவும் சொல்லீருக்காங்க. படிச்சு பாத்து கலக்க ஆரம்பிங்க.

    ReplyDelete
  21. such contravarsies are common in history.for e.g. shivaji was called the devils son &illegitimate child.indian history is flooded with such biased views...havnt you heared about bjp's attempt to rewrite indian history?

    ReplyDelete
  22. கைப்புள்ள,
    இந்த பாட்ட கேளுங்க

    http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/vpk/9.rm

    http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223

    ReplyDelete
  23. //I too have heard this story and it runs parallel to that story about 'karikaalan' who made 'uRaiyuur' as his capital when his elephant was chased by a cock at a certain point.//

    வாங்க எஸ்கே! உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இந்த கரிகாலன் கதை இப்ப தான் முதல் முறையா கேக்கறேன்.

    ReplyDelete
  24. //such contravarsies are common in history.for e.g. shivaji was called the devils son &illegitimate child.indian history is flooded with such biased views...//

    வாங்க சிவஞானம்ஜி!
    இத மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு idiosyncrasy இருக்கு. Infact, i believe its true for all celebrities. தப்பா பேசறதுன்னா எல்லாரைப் பத்தியும் பேசலாம்(அது உண்மையோ பொய்யோ!) உதாரணம்: மகாத்மா காந்தி,திப்பு சுல்தான். ஆனா அவங்க செஞ்ச நல்ல வேலைகளையும் அவங்களோட நல்ல குணங்களையும் எடுத்துக்கிட்டு மத்தத கண்டும் காணாம விட்டாத் தான் அவங்க மேல இருக்குற மரியாதை குறையாம இருக்கும்ன்றது என்னோட கருத்து.

    ReplyDelete
  25. //கைப்புள்ள,
    இந்த பாட்ட கேளுங்க

    http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/vpk/9.rm

    http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223//

    வாங்க ஜோ! தங்கள் மறுவருகைக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றி. சுட்டிகள்ல நான் சொல்லாத பல பயனுள்ள தகவல்கள் இருக்கு. உதாரணமா இந்த முயல், நாய் கதையே வேற மாதிரி சொல்லி இருக்கு. சில வரலாற்றுச் செய்திகளும் இருக்கு. மத்தவங்களும் விருப்பம் இருந்தா அதப் போய் பாருங்க.

    ReplyDelete
  26. பாட்டைக் கேட்டேன். சுட்டியில இருக்கிற வலைப்பக்கத்தை இன்னும் முழுசா படிக்கலை. ஜோ, இப்படி இன்னும் என்ன என்ன கைவசம் வச்சிருக்கீங்க. ஏதாவது விஷயம் வேணும்; இணையத்துல எங்க கிடைக்கும்ன்னு தெரியலைன்னா உங்க கிட்ட கேட்கலாம் போல இருக்கே.

    ReplyDelete
  27. குமரன்,
    பெருசா இல்லின்னாலும்,நீங்க தயங்காம என் கிட்ட கேட்கலாம் .அப்பப்போ குருட்டாம்போக்குல ஏதாவது மாட்டும் .ஹி.ஹி.

    ReplyDelete
  28. //நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு. இப்ப இதுவா முக்கியம்.ஒருபடியா வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க. //

    வாங்க அமல்!
    நம்ம பதிவுகள்லேயே இது தான் கொஞ்சம் உருப்படியானது. இதுக்கே இப்படின்னா? மத்ததையெல்லாம் படிச்சா என்ன சொல்லுவீங்களோ?

    ReplyDelete
  29. Guys,

    Sorry for writing in English. I have read about 'Kattabomman' story. But it was slightly different. His ancestors came from Andhra and they used to be owners of buffaloes. In kattabommu's generation, he worked
    as a very loyal 'Meikaapaalan'(Personal guard) to a small pandiya king who didn't have any child
    to take over. After the king died, 'kattabommu Naicker' took over and became
    'Veera pandiya kattabommu'. They built two forts. There was an underground passage
    between these two forts.'Bommu' and 'Umaidurai' used to loot people's money.
    But historians say, in those days kings used to steal the rich people who didn't pay
    the tax properly. 'Bommu' used to pay tax to English regularly. When there was drought in
    his region, he was not able to pay the tax. That was how he started fighting against
    English. But he was not as good as shown in the movie.

    ReplyDelete
  30. வாங்க காளை(மாடு),
    நல்ல தகவல்களைச் சொல்லியிருக்கீங்க. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    ReplyDelete