Thursday, March 09, 2006

புச்சு கண்ணா புச்சு

புது சரக்குங்க...இப்ப தான் புதுசா வந்துச்சு...வேறென்ன? SMS தான்! சரி வேற பதிவர்களோட பதிவுல போடலாம்னு நல்லெண்ணத்துல தான் இருந்தேன்...ஆனா இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு ஆதரவு தர்ற பதிவுகள்லாம் தூங்கிக்கினு இருந்ததுனால கைப்புள்ளயே சிங்கிள் டீயை பீங்கான் கப்புல ஊத்தி உங்களுக்குப் பாசத்தோட குடுக்காரு!

அப்பா: டேய்! என்னடா இது கணக்கு பரிச்சையில முட்டை வாங்கிட்டு வந்திருக்கே? ஒனக்கு படிக்கிறதா உத்தேசம் இல்லியா?

பையன் : அது முட்டை இல்லீங்கப்பா. நான் படிக்கிறதப் பாத்துட்டு எங்க மிஸ் 'ஓ' போட்டிருக்காங்க.

40 comments:

  1. கைப்புள்ள, சின்னப்புள்ளத்தனமா இருக்கு! .... ஆனா நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. //கைப்புள்ள, சின்னப்புள்ளத்தனமா இருக்கு! .... ஆனா நல்லா இருக்கு...//

    வாங்க அனானிமஸ்!
    ஹி...ஹி...கைப்புள்ள சின்னப்புள்ள தானுங்களே?

    ReplyDelete
  3. //'ஓ'//

    வாங்க கீதா மேடம்
    :)-

    ReplyDelete
  4. மொத்த பதிவே நாலுவரி, இதுக்கு ஆறு பின்னூட்டமாய்யா? நடத்து. நடத்து.

    ReplyDelete
  5. //மொத்த பதிவே நாலுவரி, இதுக்கு ஆறு பின்னூட்டமாய்யா? நடத்து. நடத்து.//

    ஹி...ஹி...இதெல்லாம் கண்டுக்கப்படாது!
    :)-

    ReplyDelete
  6. கைப்பு,

    பிட் அடிச்சே காலத்தை ஓட்டப்படாது...

    அப்பப்ப சொந்தமா எழுதணுமப்பு :-)))

    ReplyDelete
  7. //கைப்பு,

    பிட் அடிச்சே காலத்தை ஓட்டப்படாது...

    அப்பப்ப சொந்தமா எழுதணுமப்பு :-))) //

    அப்படியே ஆகட்டும் மிஸ்! நீங்க நல்ல மார்க் போடுறீங்கன்னா இனிமே அப்படியும் பண்ணறேன்
    :)-

    ReplyDelete
  8. //அப்படியே ஆகட்டும் மிஸ்! //

    அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா... எம்புட்டுத் தாக்குனாலும் தாங்கிக்கிறியே சாமி :-))

    ReplyDelete
  9. //adaangappaaa.. //

    வாங்க அசோக்!
    நம்ம வூட்ட கொஞ்சம் சுத்தி பாருங்க!

    ReplyDelete
  10. //அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா... எம்புட்டுத் தாக்குனாலும் தாங்கிக்கிறியே சாமி :-))//

    அது தானுங்களே நம்ம core competence???

    ReplyDelete
  11. மேட்டர் பழசுனாலும், உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்காகவும், அதற்கு உங்களின் பதிவுகளுக்காகவும் உங்களுக்கு 'ஓ'

    ReplyDelete
  12. //மேட்டர் பழசுனாலும், உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்காகவும், அதற்கு உங்களின் பதிவுகளுக்காகவும் உங்களுக்கு 'ஓ'//

    ஹையா! இந்த வாரத்து ஸ்டாரு! அதுவும் நம்ம குப்பத்துல! ரொம்ப சந்தோசமுங்க...இவ்வளவு டைட்டான நட்சத்திர வார வேலைக்கு மத்தியிலும் நம்ம உளறல்களை படிச்சு பாராட்டுனதுக்கு.

    ReplyDelete
  13. கைப்புள்ள. ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்லவன்ப்பா நீ!!!!!

    ReplyDelete
  14. //கைப்புள்ள. ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்லவன்ப்பா நீ!!!!!//

    எல்லாரும் இதையே சொல்லி சொல்லி...கண்ணுல தண்ணி தளும்போ தளும்புன்னு தளும்புதுங்க!

    ReplyDelete
  15. எல்லாம் சொல்லி முடிக்கட்டும், லாஸ்ட்டா வரேன். செல்லம், அப்ப வைக்கறண்டி ஆப்பு. :)

    ReplyDelete
  16. அங்கிள்! அது ஓ இல்லை! எங்க நிலா மிஸ் கைப்புக்குன்னு ஸ்பெஷலா போட்ட முட்டைதான். அதுக்கு கம்மியா மார்க் போட முடியாதாமே!

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  17. இதே மாதிரி எத்தனை ஸப்ஜக்ட்லே இப்படி ஓ வாங்கியிருக்கீங்க?

    ReplyDelete
  18. நல்லா இருக்கு............! நானும் இந்த பதிவுக்கு ஒரு 'ஓ' (இது நல்ல(!?) 'ஓ' ங்க)

    அது சரி ,
    ////நான் படிக்கிறதப் பாத்துட்டு எங்க மிஸ் 'ஓ' போட்டிருக்காங்க.///////
    பரிட்சையில 'படிக்கறத பாக்கறாங்களா' Mr.Handson
    சொல்லவேயில்ல!

    இது நிஜமாவே ' புதுசு கண்ணா புதுசு '

    நடத்துங்க... நடத்துங்க....

    :-))))))))
    THYAG

    ReplyDelete
  19. தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தியாக்!

    //பரிட்சையில 'படிக்கறத பாக்கறாங்களா' Mr.Handson
    சொல்லவேயில்ல!//
    எங்கே போனாலும் பார்த்திபனுங்க நம்மளை உடறதில்லைப்பா...நம்மளை வம்புக்கு இழுக்கறதே தொழிலா வச்சிருப்பாங்க போலிருக்கு.

    //Mr.Handson//
    ஐ...சூப்பருங்க! சிங் இன் தி ரெயின் ஐ ஆம் ஸ்வேயிங் இன் தி ரெயின் பாட்டு பாட இந்த பேர் உபயோகமா இருக்கும். நம்மளை வெள்ளக்காரனாக்காம உட மாட்டீங்க போலிருக்கு?
    :)-

    ReplyDelete
  20. //அங்கிள்! அது ஓ இல்லை! எங்க நிலா மிஸ் கைப்புக்குன்னு ஸ்பெஷலா போட்ட முட்டைதான். அதுக்கு கம்மியா மார்க் போட முடியாதாமே!//

    யோவ் சிபி! நீ அடங்க மாட்டே போலிருக்கே?

    ReplyDelete
  21. //இதே மாதிரி எத்தனை ஸப்ஜக்ட்லே இப்படி ஓ வாங்கியிருக்கீங்க?//

    நான் ஸ்கூல்ல படிக்கும் போது இந்த 'ஓ' கான்செப்ட் எல்லாம் இல்லியா? அதனால 'ஓ' வாங்கற பாக்கியம் எல்லாம் நமக்கு கெடக்கலை
    :)-

    ReplyDelete
  22. SMS நிறைய வரும் போகும், காப்பி அடிப்போம், டீ அடிப்போம் தண்ணி அடிப்போம், அட சே அதெல்லாம் கேக்க படாது, அப்புறம் தலைக்கு கோவம் வந்துரும். தேர்தல் நேரத்துல பார்த்துங்கப்பா, இல்லைன்னா .......

    ReplyDelete
  23. ///சிங் இன் தி ரெயின் ஐ ஆம் ஸ்வேயிங் இன் தி ரெயின்///
    கைபுள்ள கேரக்டராவே மாறிருவாருன்னு சும்மாவா சொல்லறாங்க.
    பெயரப்பாத்த உடனே அதுக்கு தகுந்த பாட்ட போடறீங்களே......... அது!

    தியாக்

    ReplyDelete
  24. //அட சே அதெல்லாம் கேக்க படாது, அப்புறம் தலைக்கு கோவம் வந்துரும். தேர்தல் நேரத்துல பார்த்துங்கப்பா, இல்லைன்னா .......//

    இல்லைன்னா சங்கத்து ஆதரவு யாருக்கும் இல்லைன்னு திருத்தமாச் சொல்லுங்க விவசாயி
    :)

    ReplyDelete
  25. //சும்மாவா சொல்லறாங்க.
    பெயரப்பாத்த உடனே அதுக்கு தகுந்த பாட்ட போடறீங்களே......... அது!//

    ஐயா! பிரசாந்த் நைனா 'தியாக் ராசா'!
    நல்லாருய்யா...சொந்த ப்ளாக் இல்லாமலேயே இப்பிடி உசுப்பி விடறீரே...இதுவே ப்ளாக் இருந்துச்சுன்னா...இந்த வேலையை இன்னும் நல்லா செய்யலாமில்ல??

    கொத்தனார் சொன்ன மாதிரி நீங்க ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு பட்டைய கெளப்பக் கூடாது?

    ReplyDelete
  26. //இப்பிடி உசுப்பி விடறீரே...//
    கைபுள்ளய உசுப்பேத்தறது எதுக்குன்னு உமக்கே சொல்லணுமா?

    //கொத்தனார் சொன்ன மாதிரி நீங்க ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு பட்டைய கெளப்பக் கூடாது////
    கொத்தனாரு உமக்கு வந்து ஆப்பு வைக்கறேன்னுட்டு போயிருக்கறாரு.... அதுக்குள்ள நீரு எமக்கு வைக்க பாக்கறீரே!
    நான் ஆரம்பிச்சா நீங்க ரெண்டு பேரும் (என்) பட்டைய கெளப்பறதுக்கு செய்யற ஐடியா..... ம்ம்ம்.... என்னா வில்லத்தனம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

    தியாக்

    ReplyDelete
  27. //கொத்தனாரு உமக்கு வந்து ஆப்பு வைக்கறேன்னுட்டு போயிருக்கறாரு....//

    வரட்டும்...இதுக்கு எல்லாம் அசருர ஆளுங்க நாங்க இல்ல கண்ணு

    ReplyDelete
  28. கைப்புள்ள,
    எஸ்.எம்.எஸ் ஜோக் சூப்பர்.ஆனா, அந்த பையன் நீங்கதானே.

    ReplyDelete
  29. //ஆனா, அந்த பையன் நீங்கதானே.//

    அவ்ளோ தில்லும் presence of mindஉம் நமக்கேதுமா? இருந்திருந்தா ஒத வாங்குற ஆளா ஏன் இருக்கப் போறேன்?

    ReplyDelete
  30. தலை கைப்பு! போலிகளின் வேலை தொடங்கியாச்சு! காலையில் இருந்து எனக்கும் இதே பின்னூட்டம் (yourங்கற பேர்ல)வந்துகிட்டிருக்கு. உஷாரா மட்டுறுத்தவும்.



    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  31. ஆபாச விளம்பரத்தைச் சுட்டிக்காட்டி தலயின் புகழுக்கு ஏற்படவிருந்த களங்கத்தைத் துடைத்த நேற்று மணவிழா கண்ட எங்கள் சிபி சக்ரவர்த்தியாருக்கு நன்றிகள் பல.

    அந்த ரெண்டு கமெண்டையும் நான் ரிஜிட் பண்ணதா தான் ஞாபகம்...எப்படி இங்க வந்துச்சுன்னு தெரியலேபா...ஆனா இப்ப delete forever பண்ணி தூக்கியாச்சு.

    ReplyDelete
  32. கைப்பு!
    //தலயின் புகழுக்கு ஏற்படவிருந்த களங்கத்தைத் துடைத்த//

    அது என் கடமை! உங்களுக்கு (வேற) யாரவது ஆப்பு வெக்க விட்டுடுவமா என்ன?

    //நேற்று மணவிழா கண்ட எங்கள் சிபி//
    தவறு கைப்பு, நாளைதான் அதாவது மார்ச் 11.


    //நன்றிகள் பல//
    நமக்குள்ள நன்றியெல்லாம் எதுக்கு?


    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  33. ////நேற்று மணவிழா கண்ட எங்கள் சிபி//
    தவறு கைப்பு, நாளைதான் அதாவது மார்ச் 11.//

    சரி. திருத்திக்கிறேன். நாளை 5 வது மணவிழா காணும் சிபி அவர்களை மனமாற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  34. Thala,

    oru uthavi thevai.. seivingala...

    THYAG

    ReplyDelete
  35. எப்படி கைப்பு இது மேட்டரே இல்லாம இத்தன பின்னூட்டம் வாங்கறீங்க. பேசாம நீங்க வலைப்பதிவு போடரது எப்படினு வகுப்பு எடுக்க ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  36. //oru uthavi thevai.. seivingala...

    THYAG//

    தியாக்...சொல்லுங்க...மத்தது ரெண்டும் இன்னும் நம்ம கையில தான் இருக்கு...ஒங்க மயில் ஐடியும் குடுங்க

    ReplyDelete
  37. //எப்படி கைப்பு இது மேட்டரே இல்லாம இத்தன பின்னூட்டம் வாங்கறீங்க.//
    இதெல்லாம் அன்புக்காகச் சேர்ந்த கூட்டம்

    //பேசாம நீங்க வலைப்பதிவு போடரது எப்படினு வகுப்பு எடுக்க ஆரம்பிக்கலாம்//
    அவ்ளோ எஜீகேசன் நமக்கு இல்லியேம்மா

    ReplyDelete
  38. //இதெல்லாம் அன்புக்காகச் சேர்ந்த கூட்டம்//

    idhu anbukkaaga serntha koottama illai adikkarathukkaga serntha koottamannu yaarukku therium.

    ReplyDelete