3. something that occupies space. இது தவிர இன்னும் ஒரு இருபத்தி சொச்சம் அர்த்தங்கள். ஆனால் பசங்களுக்கு மத்தியில் இச்சொல்லுக்கு அர்த்தம் ஒன்று தான். மேட்டர் படம், மேட்டர் புக் என்று இப்பதம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சொற்கள் அனைத்திற்கும் ஒரு கிளுகிளுப்புத் திறன் உண்டு. நில்லுங்க...என்னடா கைப்பு அறிமுகப் பக்கத்துல "என் மனதில் பல ஆயிரம் ஆயிரம் அழுக்குகள் இருந்தாலும் நல்லவற்றை மட்டுமே(அதாவது எல்லாரும் ரசிப்பவற்றை மட்டும்) என் வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற ஒரு கொள்கை வைத்துள்ளேன். அதை காப்பாற்றியும் வருகிறேன் என நம்புகிறேன் :)" இப்படிச் சொல்லிட்டு இப்ப என்னென்னமோ எழுதறானேன்னுட்டு ஓடிப் போயிடாதீங்க. நீங்க முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இருக்காது.
சரி...ஒரு மேட்டர் புக், ஒரு ஹாஸ்டல் ரூம், சில வாலிபப் பசங்க. என்னாகும்னு நினைக்கறீங்க? ஒன்னும் ஆகாது. ஒரு அழகான சிலை உருவாகும். நம்ப முடியலியா? நெறைய கொசுவத்தி சுத்திட்டு கொஞ்சமா பதிவுக்கு சம்பந்தமான மேட்டர் சொல்றேன். 1999 முதல் 2001 வரை ஐஐடியில் நான் தங்கிப் படித்த ஹாஸ்டலின் பெயர் காரகோரம்(Karakoram). ஒவ்வொரு ஹாஸ்டலுக்கும் ஒரு படிக்கும் அறை(Reading Room) இருக்கும். இந்தப் படிக்கும் அறையில் பிரபல நாளிதழ்கள், சஞ்சிகைகள் எனப் பலவும் படிப்பதற்குக் கிடைக்கும். வருடா வருடம் ஹாஸ்டலுக்கு என்று ஐஐடி நிர்வாகத்தினால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இவற்றை வாங்குவார்கள். ரீடிங் ரூமைக் கவனித்துக் கொள்ள மாணவர்கள் தரப்பிலிருந்து ஒரு பையனை செயலாளராகத்(Reading Room Secretary) தேர்வு செய்வார்கள். இந்தப் பசங்களை சுருக்கமாக செகி என்பார்கள். படிக்கும் அறை, மெஸ், விளையாட்டு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செகி இருப்பார்கள். நான் கூட 2000-2001ஆம் ஆண்டு காரா ஃபோரம் செகி(Kara Forum Secy) பொறுப்பு வகித்தேன். ஹாஸ்டல் டேயின் போது நடக்கும் அலங்காரங்கள், போஸ்டர்கள் எழுதுவது, Calligraphy செய்வது இதெல்லாம் என் பொறுப்பில் இருந்தது. பாத்தீங்களா...மெயின் மேட்டரை விட்டுட்டு கிளை கதைக்குப் போயிட்டேன்...
படிக்கும் அறை சொன்னேன் இல்லையா - அதில் பசங்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக டெபொனேர்(Debonair), பேண்டசி(Fantasy) போன்ற ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கும். இது யாருக்கும் தெரியாமல் வாங்கப்படும் புத்தகங்கள் கிடையாது. ஐஐடி நிர்வாகத்தினாலேயே ஹாஸ்டலில் வைக்கலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள். பசங்கள் படிப்போடு சேர்த்து மத்த விஷயங்களையும் தெரிஞ்சிக்கனும்ங்கிற எண்ணத்துல வாங்கி வச்சிருப்பாங்களா என்னன்னு தெரியாது. படிக்கும் அறையில் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களைப் பார்க்க சில சமயம் வருவார்கள் என்பதால், இத்தகைய புத்தகங்களை மட்டும் பொதுவாக படிக்கும் அறையில் வைத்திருக்க மாட்டார்கள். இவை ரீடிங் ரூம் செகியிடம் இருக்கும். வேண்டும் என்றால் கேட்டு வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்டலைப் பொருத்த வரை மாணவர்களை, இளங்கலை மாணவர்கள் (பி.டெக், இண்டக்ரேட்டட் எம்.டெக்) மற்றும் முதுகலை மாணவர்கள் (எம்.டெக், எம்.எஸ், எம்.டெஸ், பி.எச்.டி, எம்.பி.ஏ)என இருகுழுக்களாகப் பிரிக்கலாம். இதில் இளங்கலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பி.டெக் என்றும் முதுகலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பொதுவாக எம்.டெக் என்றும் விளிக்கப்படுவர்.
மேட்டர் புத்தகங்கள் பி.டெக் மாணவர்கள் இடத்தில் போனால் திரும்ப வராது. செகியைக் கேட்டால் சர்க்குலேஷனில் இருக்கிறது என்று கூறி விடுவான்(அவனும் பெரும்பாலும் பி.டெக் பையனாகத் தான் இருப்பான்). பி.டெக் மாணவர்கள் அவர்களுக்குள்ளாகவே அதை சுழற்சி முறையில் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் எம்.டெக் மாணவராக இருந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் யாராவது ஒரு பி.டெக் மாணவன் உங்களுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். நல்ல நண்பர்களாக இருந்தாலும் "வயசான காலத்துல என்ன செய்யப் போறீங்க? எம்.டெக் முடிக்கிற வழியைப் பாருங்க"ன்னு நக்கல் செய்து விடுவார்கள். இருக்கப் போறது ரெண்டு வருஷம் இதுக்கெல்லாமா சண்டை போடறதுன்னு நெனச்சி நாங்களும் விட்டுடுவோம். ஹாஸ்டலில் வருடாவருடம் ஆய்வு ஒன்று நடக்கும். ஹாஸ்டலினை எவ்வாறு அழகாக வைத்திருக்கிறார்கள், வசதிகள் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து பேராசிரியர் குழு ஒன்று மதிப்பெண் வழங்கும். இதை BHM Inspection(Board for Hostel Management) என்று சொல்லுவார்கள். நமது ஹாஸ்டலுக்கு சிறந்த ஹாஸ்டல் விருது வர வேண்டும் என்று பலவாறாக இதற்காக உழைப்பார்கள். அந்த விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு போட்டி மனப்பான்மை அங்கு நிலவிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஹாக்கி போட்டியில் ஹாக்கி விளையாடத் தெரிந்த பையன்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றால், நன்றாக ஓடக் கூடிய பையனாகப் பார்த்து அவன் கையில் ஹாக்கி ஸ்டிக்கைக் கொடுத்து விடுவார்கள். மைதானத்தில் போய் அவன் அடிபட்டு, உதைபட்டு, ரத்தம் சொட்ட வந்தாலும் வருவானே ஒழிய ஹாக்கி ஆடத் தெரியாது, நான் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டான்.
நான் சேர்ந்த புதிதில் பி.டெக் பையன்களோடு இணைந்து ஹாஸ்டலுக்குச் சில போஸ்டர்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு சில பி.டெக் பையன்களோடு பழக்கம் இருந்தது. ஹாஸ்டலில் எனக்கு நண்பன் என்று பார்த்தால் அங்கே எம்.டெஸ்(Master of Design) படித்துக் கொண்டிருந்த சிவக்குமார் தான். அடிக்கடி அவன் அறையில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம் அல்லது இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை சிவக்குமார் அறையில் உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எங்கள் இருவருக்கும் பழக்கமான ஒரு பி.டெக் பையன் வந்தான். அவன் பெயர் சந்தீப். பார்க்க அச்சு அசலாக மாதவ ராவ் சிந்தியா போலவே இருப்பான். அவனுடைய ஊரும் சிந்தியாவின் ஊரான க்வாலியர் தான். கதவருகில் நின்று கொண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு "யார்! BHM இன்ஸ்பெக்ஷனுக்காக எதாச்சும் செய்யனும். என்ன பண்ணலாம்னு எதாவது ஐடியா குடு"ன்னான். சரி ஏன் கதவு கிட்டே நிக்கிறே...முதல்ல உள்ள வான்னு சொன்னோம். அவன் தயங்கி தயங்கி உள்ள வந்தான், கையை அப்பவும் பின்னால தான் கட்டியிருந்தான். என்னடா கையிலன்னு கேட்டோம். அவன் கையில இருந்தது 'Fantasy'ங்கிற புத்தகம். "டேய்! வேலை வாங்கறதுன்னா மட்டும் வந்து பேசுடா...இதெல்லாம் கொண்டு வந்து காட்டாதே"னு திட்டினோம். அவனும் அசடு வழிஞ்சிக்கிட்டே அந்த புத்தகத்தைக் கொடுத்தான்.
புத்தகத்தைப் பிரிச்சி பாத்துட்டிருந்தோம் :). அப்பவும் அவன் BHM இன்ஸ்பெக்ஷன்னு புலம்பிக்கிட்டு இருந்தான். புத்தகத்தைப் பாத்துக்கிட்டு இருந்த சிவக்குமார், அந்தப் புத்தகத்துல இருந்த ஒரு படத்தைப் பாத்து திடீர்னு "ஹாஸ்டலுக்காக ஒரு சிலை செய்யலாமா"னு கேட்டான். அதை கேட்ட எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். சிலை செய்யறதுன்னா பின்ன என்ன சும்மாவா? சிவக்குமார் டிசைனர் அருமையா ஓவியம் வரைவான், நல்ல கலைஞன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா சிலை வடிக்கிற அளவுக்குப் பெரிய ஆளுன்னு தெரியாது. "எனக்கு ஓவியம் வரையறதை விட சிலை வடிக்கிறது தான் ரொம்பப் பிடிக்கும்"னு அவன் சொன்னதை கேட்டு எங்களுக்கெல்லாம் செம உற்சாகம். அதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் கையைக் காலைப் பிடிச்சு சிலை செய்து ஹாஸ்டல் வாசலில் வைக்கிறதுக்கும், அதுக்குண்டான செலவு செய்யறதுக்கும் அனுமதி வாங்கினாங்க. சிலை செஞ்சதைப் பத்தியும் நெறைய சொல்லனும்னு நெனச்சேன்...ஏன்னா அதை நான் கிட்ட இருந்து பாத்தது. ஆனா ஏற்கனவே மைல் நீளம் போனதுனால, ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் வச்சி நண்பன் இந்த சிலையை வடிக்கும் போதெல்லாம் எனக்கு ஆல்-இன் -ஆல் அழகுராஜாவோட ஒரு வசனம் மட்டும் ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் - "டேய் நான் ஒரு சிற்பி மாதிரிடா...எப்படி செதுக்கறேன் பாத்தியா?" ஒரு வாரம் ராப்பகலாக அவனுடைய கடும் உழைப்பில் உருவானாள் கீழே நீங்கள் பார்க்கும் ஷலபாஞ்சிகா.

ஷலபாஞ்சிகா என்றால் Wood Nymph(மரப் பாவை). இது ஃபேண்டஸி சஞ்சிகையில் வெளியாகியிருந்த ஷலபாஞ்சிகா சிலையின் உருவ மாதிரி(replica). இச்சிலையில் அப்பெண் கொண்டிருக்கும் வடிவம்(posture) - த்ரிபங்கா(Tribhanga) என்பது. அதாவது இச்சிலையை மேலிருந்து பார்த்தீர்களானால் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்(எப்படி சொல்வதென்று தெரியவில்லை) - அவை தலை, தோள்கள் மற்றும் இடை. சிலையை நேர் பக்கமாக முன்னாலில் இருந்து பார்த்தீர்கள் ஆனாலும் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம். அவை கழுத்து, மார்பு மற்றும் இடை. ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு Triple Torsion Statue.
சிலையைப் பற்றிச் சொல்லி விட்டேன். சிலை வடித்தவனைப் பற்றிச் சொல்கிறேன். பல திறமைகளைக் கொண்ட ஒரு கலைஞன், ரசிகன். எம்.டெஸ் படித்து முடித்துவிட்டு பிரபல நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்துக் கொடுக்கும் இந்தியாவின் திறமையான டிசைனர்களில் ஒருவன். எல்லாவற்றிற்கும் மேலாக இவன் 2006 ஆம் ஆண்டிலேயே உங்களுக்கு எல்லாம் அறிமுகம் ஆனவன் தான். திறமையான கேமரா கவிஞர்களால் கூட எடுக்க முடியாத நீங்கள் அனைவரும் ரசித்த இந்த ஒளி ஓவியத்தை எடுத்த நல்லவன்...வல்லவன்...நாலும் தெரிஞ்சவன்...ஆனாலும் என்னை பொறுத்த வரை ஒரு துரோகி :)
அடடா அடடா, கடேசி பாரா படிச்சுட்டு சிரிச்சிகிட்டே இருக்கேன்பூ. அந்த பதிவு.. ஹ்ம்ம் Golden Days...
ReplyDeleteசிலை சமாசாரத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்ன சொல்லவறீங்கன்னு தெரியறதுக்குள்ளே தூக்கமே வந்துடுச்சு!
ReplyDeleteசிலை கைவண்னம் அருமை. துரோகியா இருந்தாலும் உங்களை பதிவர் உலகத்துல மேலே கொண்டு விட காரணமா இருந்து உங்களுக்கு உதவி செஞ்சாரு. அதுக்குத்தானே இந்த நன்றி அறிதல் பதிவு?
ரீரீட்ஸ்!
கைபுள்ள அந்த பதிவு மாஸ்டெர் பீஸுங்கரத யாரும் மறக்க முடியாது....தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கின பதிவு.....:):)Magnum Opus:) மத்தபடி ஷலபாஞ்சிகா நல்லாவே இருக்கு..
ReplyDelete//அடடா அடடா, கடேசி பாரா படிச்சுட்டு சிரிச்சிகிட்டே இருக்கேன்பூ. அந்த பதிவு.. ஹ்ம்ம் Golden Days...//
ReplyDeleteவாங்க இளா,
தங்கமான நாட்களை நினைவு கூர்ந்ததற்கு ரொம்ப நன்றிங்க
:)
//சிலை சமாசாரத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்ன சொல்லவறீங்கன்னு தெரியறதுக்குள்ளே தூக்கமே வந்துடுச்சு!//
ReplyDeleteஎழுதி முடிச்சிட்டுப் பாத்ததும் சொல்ல வந்த மேட்டரோட பல கிளை கதைகள் சேர்ந்து பதிவு ரெண்டு மைல் நீளத்துக்குப் போயிடுச்சேன்னு நெனச்சு எழுதுனதுல ஒரு 10%ஐ அப்படியே சிதைச்சிட்டேன். இதுக்கே இப்படின்னா முதல்ல எழுதுனதைப் பாத்தா என்ன சொல்லிருப்பீங்களோ? இருந்தாலும் நீங்கச் சொல்றது உண்மை தான். எழுத ஆரம்பிச்சா பல சமயங்களில் அதை நிறுத்த அவதிப் படறதுண்டு. மாத்திக்க முயற்சிக்கிறேன்.
//சிலை கைவண்னம் அருமை. துரோகியா இருந்தாலும் உங்களை பதிவர் உலகத்துல மேலே கொண்டு விட காரணமா இருந்து உங்களுக்கு உதவி செஞ்சாரு. அதுக்குத்தானே இந்த நன்றி அறிதல் பதிவு?//
வரிக்கு வரி ரிப்பீட்டேய். அதோட காலேஜ் கொசுவத்தியையும் சுத்தலாமேன்னு ஒரு சின்ன எண்ணம் தான்.
//கைபுள்ள அந்த பதிவு மாஸ்டெர் பீஸுங்கரத யாரும் மறக்க முடியாது....தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கின பதிவு.....:):)Magnum Opus:) மத்தபடி ஷலபாஞ்சிகா நல்லாவே இருக்கு..//
ReplyDeleteMagnum Opusஆ?...ஹி...ஹி...பாராட்டுகளுக்கு நன்றி மேடம்.
:)
நல்லாத்தான் இருக்கு....ஆனா தலைப்பு மட்டும் வேற வச்சிருக்கலாம். ஏன்னா, ஒரு 70% ஹாஸ்டல் வாழ்க்கை பத்தி எழுதி இருக்கே. மெயின் மேட்டர் என்னன்னு எனக்கே குழப்பம் வந்துடுச்சு.
ReplyDelete//நல்லாத்தான் இருக்கு....ஆனா தலைப்பு மட்டும் வேற வச்சிருக்கலாம். ஏன்னா, ஒரு 70% ஹாஸ்டல் வாழ்க்கை பத்தி எழுதி இருக்கே. மெயின் மேட்டர் என்னன்னு எனக்கே குழப்பம் வந்துடுச்சு//
ReplyDeleteஆமாம்ப்பா...சிலை மேட்டரை விவரமா எழுதனும்னு நெனச்சி ஹாஸ்டல் மேட்டர் பெருசாப் போயிடுச்சி...எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போயிடுச்சு. சரி லூஸ்ல விடு...அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் தான்.
:)
ஜினுக்கு ஜிப்பா ஜிக்கா!!
ReplyDeleteஇங்க பாரு ஷலபாஞ்சிகா!!
கைப்பு என்ன கொக்கா!!
பதிவு கீது ஷோக்கா!!
தல...அந்த போட்டோவை எடுக்கும்போதே அவருக்குள்ள ஒரு மகா கலைஞன் ஒளிஞ்சிருக்கனும்னு நெனச்சேன்..இப்ப தெரியுது.. :))
ReplyDelete//மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்//
ReplyDeleteதல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))
//தல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))//
ReplyDeleteஅப்போ கைப்பு ஒரு "கலியுக ஷலபாஞ்சிகன்"னு சொல்ல வர்றே? ரைட்டு...விடு
:)
சிலை எல்லாம் விடுங்க. அப்படிப்பட்ட சரித்திரப் புகழ் பெற்ற படத்தை எடுத்த நண்பருக்கு ஒரு ஓ!! போட்டுக்கறேன்.
ReplyDelete////மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்//
ReplyDeleteதல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))//
ரிப்ப்பீஈஈஈஈஈட்ட்டேஏஏஏஏஏஏஏஏ
ஹிஹிஹி, வெளுத்து வாங்கறாங்க, நம்ம தொண்டருங்க எல்லாம், வாழ்க, வளர்க!
ஹா ஹா ஹா அந்தப் படத்த மறக்க முடியுமா...விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச படமாச்சே....ஹா ஹா ஹா... உண்மையச் சொல்றேன்...அவரு பெரிய அறிவாளிதான். சந்தேகமேயில்லை.
ReplyDeleteஷலபாஞ்சிகா சூப்பர். உள்ளபடிக்கு அதுல நாலு நெளிவுகள் இருக்கு. கழுத்து.. மார்பு...இடுப்பு.... தொடை...சரியாப் பாருங்க :)
உங்க பதிவுகள் காமெடியா இருந்தாலும் அதுல எச்சகச்சமா அறிவுப்பூர்வமா இருக்கேன்னு நெனச்சேன். அதுக்கெல்லாம் ஐஐடிதான் காரணமா!!!!
Interesting! ஆனா wood nymph -க்குத் தமிழ்ல மரப்பொம்மையா? வனதேவதைங்க...அப்புறம் ஷலபாஞ்சிகாங்கற பேரு கஷ்டமா இருக்கு - சபலாஞ்சிகான்னு வச்சுக்கலாமா :-) நல்லவேளை ஐஐடி-க்குள்ள வச்சிங்க. வெளிய வச்சிருந்தா நம்ம ஜனங்க ஏதோ அம்மன்னு நினைச்சு மாலை போட்டு, சூடம் ஏத்தியிருப்பாங்க :-))
ReplyDelete