Friday, February 15, 2008

தடிப்பசங்க #8

காட்சி 8 : பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?

நமக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கங்கிறதை விட நாம எத்தனை பேருக்கு பாய் ஃப்ரெண்டா இருக்கோம்ங்கிறது தான் முக்கியம். பில்லா மொழியில் சொல்லனும்னா சரித்திரத்தின் பக்கங்களை மெல்லமா புரட்டிப் பாத்தா அது நமக்கு கத்துக் கொடுக்கறது ஒன்னே ஒன்னு தான் - நாம ஊருக்குள்ள பெரிய மனுஷனா நடமாடனும்னா எத்தனை பொண்ணுங்களுக்கு வேணாலும் பாய் ஃப்ரெண்டா இருக்கலாம். நல்லாருக்காங்க? மண்டபத்துல யாருகிட்டயும் எழுதி வாங்காம நானே சுயமா சிந்திச்சு எழுதுனது. நிற்க - இது ஒரு டோட்டல் டேமேஜ் பதிவு...சே...சே...அண்ணன் நல்லவரு வல்லவருன்னு இண்ட்ரோ எல்லாம் கொடுத்துட்டு என்னை நானே டேமேஜ் பண்ணிக்குவேனா? தடிப்பசங்களில் இளையவரு நம்ம இளவல் யார் யாருக்கெல்லாம் பாய் ஃப்ரெண்டாப் பணியாற்றியிருக்காருன்னு மனம் தெறந்து சொல்லப் போறேன் - அண்ணன் கல்யாணம் ஆனவன்ங்கிறதுனாலே அடிக்க மாட்டாருங்கிற நம்பிக்கையில்:) மறுபடியும் நிற்க - நீ யாருக்கும் பாய் ஃப்ரெண்டா இருந்ததில்லையான்னா கேக்கறீங்க? தடிப்பசங்க #3 இல் இளையவரு எங்கம்மா கிட்ட சொன்ன அதே பதிலை நானும் சொல்லிக்கிறேன் - "நான் பொண்ணுங்க கிட்டல்லாம் பேச மாட்டேன் :)))))".

சரி...நீங்க ஒரு அரை டவுசர் போட்ட பாயா(boy) இருக்கீங்க. அக்கா, ஆண்ட்டி, ஆயா, க்ளாஸ் டீச்சர் இப்படின்னு யாரு கிட்டயும் பாகுபாடு காட்டாம கலகலப்பா துறுதுறுன்னு பேசறீங்க. என்னாகும்னு நெனக்கிறீங்க? உங்களை விட பெரிய ஏஜ் க்ரூப்புல இருக்கற கேர்ள்ஸ்:) பாயான உங்களைத் தங்களோட ஃபிரெண்டா ஏத்துக்குவாங்க. அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை எடுத்துச் சொல்ற விதம் கேர்ளுக்குக் கேர்ள் மாறுபடும். ஆனா ஒன்னுங்க...அடக்கமான பையன் அமைதியான பையன்னு மட்டும் ஸ்கூல்ல வீட்டுல சுத்துவட்டாரத்துல பேர் எடுத்திட்டீங்கன்னு வையுங்க...நான் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் அனுபவிக்க முடியாது...அதை எல்லாம் அனுபவிச்சங்கச் சொல்றதைக் கேட்டு நான் எழுதறேன் பாருங்க...அந்த மாதிரி படர்க்கையில் எழுத தான் முடியும். டிரேடிஷனலா பாத்தீங்கன்னா கூட கேர்ள்ஸ்க்கு துடுக்காப் பேசற கார்த்திக் மாதிரியான கேரக்டர்(மௌன ராகம் "மிஸ்டர் சந்திரமௌலி") தான் புடிக்கும், மழையில நனைஞ்சி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும், பேக்கு மாதிரி உக்காந்து பொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்ற அப்பாவி "மோகன்" கேரக்டர்ல அவ்வளவா விருப்பம் இருக்காது...என்ன நான் சொல்றது சரி தானே? :)))

இளையவர் இருக்காரே அவரோட குழந்தைப் பருவம் முழுவதும், எங்க வீட்டு ஓனர் ஆண்ட்டி அவங்களோட மூனு பொண்ணுங்க கிட்டத் தான் கழிஞ்சது. மூணு நாலு வயசு வரைக்கும் அவரு எங்க வீட்டுல இருந்ததை விட அக்காங்க வீட்டுல இருந்தது தான் அதிகம். தலைவர் காலையிலே குளிச்சி முடிச்சி சாப்பிட்டதும் வந்து அவங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. அதுக்கப்புறம் நடுவுல லஞ்ச் பிரேக்குக்கு ஒரு தடவை கீழே எறங்கி வருவார். கொஞ்ச நேரம் தூக்கத்துக்கு அப்புறம் மறுபடியும் ஈவினிங் செஷன் அக்காங்க வீட்டுல. நடுவுல பிஸ்கட், நொறுக்குத் தீனி இதெல்லாம் கூட அவங்களே பாத்து குடுத்துடுவாங்க. கொஞ்சம் பெரியவர் ஆகி கால் முளைக்கத் தொடங்கினதும், "அம்மா! நான் அக்கா வீட்டுக்குப் போறேன்"னு தானாவே மாடிப்படி ஏறி மேலே போயிடுவாரு. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து பெரிதான நம்ம கதையின் ஹீரோ பள்ளிக்கூடம் போற நாளும் வந்துச்சு.

தினம் தினம் பள்ளிக்கூடம் போகறதுக்கு அழுது அடம்பிடிச்சி அடிவாங்கிட்டுப் போன அவங்க அண்ணன் மாதிரி இல்லாம சமத்தா நல்லப் புள்ளையா சந்தோஷமாப் போயிட்டு வருவாரு இளைய தடிப்பையர். ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சு கொஞ்ச நெனைவு தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம், வீட்டுக்கு வந்து தினமும் ஒரு கதை சொல்லுவாரு. ஆரம்பத்துல கூடப் படிக்கிற பசங்களைப் பத்தி மட்டும் இருக்கும் அவருடைய கதைகள்...அவங்க விட்ட பீலாக்கள், அதுக்குப் பதிலாக இவர் விட்ட எதிர் பீலாக்கள் இப்படின்னு. நாள் ஆக நாள் ஆக இவருடைய கதைகளில் பசங்க வர்றது குறைஞ்சு மிஸ்ஸுங்க வர்றது அதிகம் ஆகிடுச்சு. அப்பத் தான் தெரிஞ்சிச்சி...பாயான தலைவர் பாடம் சொல்லிக் குடுக்கற மிஸ்ஸுங்களுக்கு "ஃபிரெண்ட்" ஆன சமாச்சாரம். இந்த சமயத்துல ஒன்னு நான் சொல்லியே ஆகனும்ங்க...இந்த "அக்கறைக்கு இக்கறை பச்சை"ங்கிற பழமொழி உலகத்துல இருக்கற பெரும்பாலான அம்மாக்களுக்கு மிகச் சரியாப் பொருந்தும்ங்க. உதாரணத்துக்கு எங்க அம்மாவையே எடுத்துக்கங்களேன்...கண்ணுக்கு நெறைவா அழகா எருமை கன்னுக்குட்டி போல ரெண்டு தடிப்பசங்க இருந்தாலும் வீட்டுல ஒரு "பொம்பளப்புள்ள" இல்லியேன்னு ரொம்ப ஏக்கப்படுவாங்க. நாங்க செய்யறது, சொல்லறது எல்லாத்துக்கும் பொண்ணுங்களோட ஒரு கம்பேரிசன் வேற. ஆனா இதுவே பொண்ணுங்க மட்டும் இருக்கற வீட்டுல, அம்மாங்க "சே! ஒரு பையன் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்"னு ஏங்குவாங்க.

இப்படித் தான் பாருங்க...இளவல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு இங்கிலீஷ் பாடம் எடுத்த ஒரு மிஸ் அவருகிட்ட "எனக்கு பசங்கன்னா ரொம்ப இஷ்டம்டா...ஆனா எங்க வீட்டுல ரெண்டும் பொண்ணுங்க"ன்னு சொல்லுவாங்களாம்.

என் தம்பி படிச்ச அதே ஸ்கூல்ல தான் நானும் படிச்சேன். அந்த மிஸ் எனக்கும் பாடம் எடுத்திருக்காங்க. ஆனா என்கிட்ட எல்லாம் அந்த மாதிரி எப்பவும் பேசுனதில்லையேன்னு சில சமயம் தோணும்.
ஆனாலும் "கார்த்திக் வேற - மோகன் வேற"ங்கிற புரிதல் வந்து என்னை சமாதானப் படுத்திடும். திடீர்னு ஒரு நாள் மிஸ் இவரைப் பாத்து "நான் குண்டாயிருக்கேனாடா? என் பொண்ணுங்க எல்லாம் என்னை குண்டு குண்டுன்னு சொல்றாங்க"ன்னு சொன்னதா வந்து வீட்டுலச் சொல்லுவாரு, திடீர்னு ஒரு நாள் மிஸ் எனக்கு சாக்லேட் குடுத்தாங்கன்னு சாக்லேட் எடுத்துட்டு வருவாரு. இவரும் பொறந்த நாளுக்கு ஸ்கூலுக்குப் போகும் போது பாடம் எடுக்கற எல்லா மிஸ்ஸுகளுக்கு மட்டும் ஃபைவ் ஸ்டாரோ டெய்ரி மில்கோ வாங்கிட்டுப் போய்க் குடுப்பாரு. சில சமயம் எனக்கு தோணியிருக்கு...ஒரு வேளை ஸ்கூல் பசங்க கிட்ட கதை விட்ட மாதிரி வீட்டுல வந்து மிஸ் சொன்னாங்கன்னு கதை விடறாரோன்னு. இந்தப் பதிவைப் படிக்கிற ஸ்கூல் டீச்சரா இருந்த/இருக்கிறவங்களே? இப்ப நான் உங்களை கேக்கறேன்...இப்படியெல்லாம் நெஜமாவே நடக்குமா? இல்லை தலைவர் சொன்னதெல்லாம் பீலாவா?

எல்லாப் பசங்க கிட்டயும் அன்பா இருக்கற டீச்சருங்க மட்டும் தான் பாயான உங்களை ஃபிரெண்ட் ஆக்கிக்குவாங்கன்னு இல்லை. லக் இருந்தா முழு ஸ்கூலுக்குமே டெரரா இருக்கற மிஸ்ஸுக்குக் கூட நீங்க ஃபிரெண்டா இருக்கலாம். இப்படித் தான் எங்க ஸ்கூல்ல "ஃபிலோ மிஸ்"னு ஒரு டீச்சர் இருந்தாங்க. ஸ்கூல்ல எல்லாப் பசங்களுக்கும் அவங்களைப் பாத்தா அப்படி ஒரு பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஹோம் வர்க் செய்யலைனாக்கா, களாஸ்ல பேசுனாக்கா அடி பிச்சி எடுத்துருவாங்க. குண்டா இருப்பாங்க, கிட்டத்தட்ட ஐம்பது வயசிருக்கும், கையில் எப்பவும் ஒரு ஸ்கேல் வச்சிருப்பாங்க...அவங்க நமக்கு க்ளாஸுக்கு டீச்சரா வரலைன்னா சந்தோஷம்ங்கிற நெலமையில பசங்க அவங்களைப் பாத்து பயப்படுவாங்க. அப்படிப்பட்ட அந்த மிஸ் இளவலுக்கு நாலாப்புல க்ளாஸ் டீச்சரா வந்தாங்க. என்ன மாயமோ தெரியலை...மந்திரமோ தெரியலை...இவரு அவங்களுக்கும் ஃப்ரெண்டு ஆயிட்டாரு. ஃபிலோ மிஸ்னு மட்டும் அவங்கப் பேரைத் தெரிஞ்ச எங்களுக்கு அவங்களோட ஃபுல் நேம் "ஃபிலோமினா ரோட்ரிக்ஸ் மச்சாடோ" அப்படின்னு மேய்டன் நேம், சர்நேம், ஃபேமிலி நேம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துச் சொன்னாரு இளவல். அதோட அவங்க ஊரு கோவாவைப் பத்தியும் அவங்க பசங்களைப் பத்தியும் எல்லாம் கூட இவரு கிட்டச் சொல்லுவாங்களாம். எனக்கு நம்பறதுக்குக் கஷ்டமாவும், ஆச்சரியமாவும் இருக்கும்.

ஒரு முறை கிறிஸ்துமஸ் சமயத்துல மிஸ்ஸுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பனும்னு அம்மா கிட்ட வாங்கிட்டு வரச் சொன்னாரு. அவங்களும் போனாப் போகுதுன்னு ஒரு க்ரீட்டிங் கார்ட் வாங்கிட்டு வந்து குடுத்தாங்க. அந்த கார்டுல ரெண்டு பஞ்ச வர்ணக்கிளிகள் மரத்து மேலே உக்காந்திருக்குற மாதிரி இருக்கும். அதுக்குக் கீழே இளம் மஞ்சள் நிறத்துல "ஐ லவ் யூ"ன்னு எழுதிருந்துச்சு. அம்மா இதை பாக்காம வாங்கிட்டு வந்துட்டாங்க. கார்டு வாங்கிட்டு வந்து குடுக்கும் போதே ஆனா நான் பாத்துட்டேன். இருந்தாலும் என்ன தான் ஆகுதுன்னு பாப்போமேன்னு நான் ஃப்ரீயா விட்டுட்டேன் :). ஒரு நாள் கோவமா ஸ்கூல்லேருந்து வந்தாரு - "அம்மா! ஒரு நல்ல கடையில கார்டு வாங்காம, ரோட்டோரக் கடையில வாங்கி, உங்களால எனக்கு ஒரே வெக்கமாப் போச்சு"ன்னு வந்து ஆவேசமாக் கத்துனாரு. "என்னடா ஆச்சுன்னு" ரொம்பக் கரிசனமா உள்ளுக்குள்ளே சந்தோஷமா கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு "அந்த கார்டுல கிளிகளுக்குக் கீழே ஐ லவ் யூன்னு எழுதிருக்கும் போல, நான் பாட்டுக்கு அதைப் பாக்காம அனுப்பிட்டேன்". "அப்புறம் என்னாச்சி"ன்னு நானும் எங்கம்மாவும் ஆர்வமா கேட்டோம். "Mom! Who is the young chap who is loving you?"ன்னு அவங்க பெரிய பையன் கேட்டதாச் சொல்லி மிஸ் பெருசாச் சிரிச்சாங்கன்னு சொன்னதைக் கேட்டதும் என்னால நம்பவே முடியலை.

இது வரைக்கும் கேர்ள்ஸ் எப்படி இளவல் கிட்ட அன்பாப் பேசினாங்கன்னு பாத்தோம். ஆனா சில கேர்ஸ் "பாய் ஃபிரெண்டு"ன்னு கூட பாக்காம ஃபிசிக்கல் ஆயிடுவாங்க...அப்படியொரு அனுபவமும் தலைவருக்கு நடந்துருக்கு:). திருவல்லிக்கேணியில நாங்கத் தங்கியிருந்த வீட்டுல தண்ணி அடிக்கிறதுக்கு ரெண்டு வீட்டுக்குச் சேத்துப் பொதுவா ஒரு அடி பம்ப் இருக்கும். எப்பவாச்சும் ஒரு சின்ன வாளியில தண்ணி அடிச்சிட்டு வான்னு அம்மா சொல்லி அனுப்புவாங்க. இளவலும் போனாப் போவுதுன்னு ஒரு பக்கெட்டோ, ரெண்டு பக்கெட்டோ தண்ணி அடிச்சிக் கொடுப்பாரு. ஆனா கொஞ்ச நாளாத் தண்ணி நான் அடிச்சித் தர மாட்டேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. அம்மாவும் என்ன என்னன்னு கேட்டுப் பாத்தாங்க...சொல்லவே இல்லை. ஒரு நாள் வீட்டுல முறைவாசல் பண்ணற ஒரு ஆயா வந்தாங்க, எங்கம்மா கிட்ட "என்னம்மா சின்னப்புள்ளயை கொஞ்ச நாளாப் பாக்கவே முடியலை...உடம்பு நல்லாருக்கா"ன்னு கேட்டாங்க. அம்மாவும் "டேய்! இங்கே வா...உன்னை பாக்கத் தான் ஆயா வந்திருக்காங்க. முன்னெல்லாம் கரெக்டா அவங்கப் பெருக்க வர்ற நேரத்துல நீ தண்ணியடிச்சிட்டிருப்பே...அவங்களும் உன்னை பாத்துட்டுப் போவாங்க. இப்பத் தான் நீ தண்ணி அடிக்கவே போறதில்லையே...வா வந்து அவங்க கிட்டப் பேசு"ன்னு சொன்னாங்க. அதை கேட்டுட்டு இளவல் அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. "என்னடா...உன்கிட்ட பேசத் தானே வந்திருக்காங்க? வந்து அவங்க கிட்டப் பேசாம போய் என்னமோ ஒளிஞ்சிக்கிறியே"ன்னாங்க. அதுக்கு அவரு "போங்கம்மா...நான் போக மாட்டேன் அந்த ஆயா என் 'ஜில்'லைத் தொட்டு முத்தம் குடுக்கறாங்க" அப்படின்னாரு. அதை கேட்டுட்டு எங்கம்மா "சீ! உள்ள போடா"ன்னு சிரிச்சிக்கிட்டேச் சொல்லவும் "சின்னப் புள்ளையா இருக்குதாம்மா...பாக்குறதுக்கு ரொம்ப ஆசையா கொஞ்சனும்னு இருக்கு"ன்னு முறைவாசல் பண்ணற ஆயா சொன்னதைக் கேட்டு பயங்கரச் சிரிப்பு. ஆனாலும் கிராமமானாலும் நகரமானாலும் வயசானக் கிழவிகளுக்கு ஒரு பிடித்தமான பொழுதுபோக்கான இது, ஒவ்வொரு சின்னப்பையனுக்கும் ஒரு 'nightmare'னு ஏன் தெரிஞ்சிக்க மறுக்கறாங்க? :)))

இளவலின் வாழ்க்கையில் நடந்த இந்த மேற்கூறிய சம்பவங்களை எல்லாம் வச்சிப் பாக்கும் போது "பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?"ன்னு சொல்றது சரி தானுங்களே?

43 comments:

  1. /"நான் பொண்ணுங்க கிட்டல்லாம் பேச மாட்டேன் :)))))". //

    அப்போ நீங்கதான் ஐடியல் பாய் பிரண்ட். இப்பவும் அதே பழக்கம்தானே? அப்போ நீங்க நார்மல் ஹஸ்பண்ட்தான்!!

    ReplyDelete
  2. //ொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்ற அப்பாவி "மோகன்" கேரக்டர்ல அவ்வளவா விருப்பம் இருக்காது..//

    யப்பா ராசா!! என்னா உள்குத்து என்னா உள்குத்து!! தாங்கல ராசா!!

    ReplyDelete
  3. //.இப்படியெல்லாம் நெஜமாவே நடக்குமா? இல்லை தலைவர் சொன்னதெல்லாம் பீலாவா? //

    அதே பள்ளியூடத்தில்தானே படிச்ச, இதெல்லாம் கூட கவனிச்சு வெச்சுக்காம நீயெல்லாம் ஒரு அண்ணன்.....

    ReplyDelete
  4. /நான் ஃப்ரீயா விட்டுட்டேன் :). //

    ஹலோ இந்த ஃப்ரீயா விடறதுக்கு எல்லாம் கோப்பிரைற் நம்ம கிட்ட இருக்கு தெரியுமில்ல....

    ReplyDelete
  5. //இளவலின் வாழ்க்கையில் நடந்த இந்த மேற்கூறிய சம்பவங்களை எல்லாம் வச்சிப் பாக்கும் போது "பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?"ன்னு சொல்றது சரி தானுங்களே?//

    அவங்க பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி அப்படின்னு சொன்னா பரவாயில்லை. ஆனா நீங்க போயி அப்போ அவர் எனர்ஜி அப்படின்னு சவுண்டு விட்டா செருப்பு பிஞ்சுரும். சாக்கிரதை. அம்புட்டுதான் சொல்லுவேன்.

    ReplyDelete
  6. //ஆனாலும் கிராமமானாலும் நகரமானாலும் வயசானக் கிழவிகளுக்கு ஒரு பிடித்தமான பொழுதுபோக்கான இது, ஒவ்வொரு சின்னப்பையனுக்கும் ஒரு 'nightmare'னு ஏன் தெரிஞ்சிக்க மறுக்கறாங்க?//

    இந்த ஊரா இருந்தா கேஸ் போட்டு பணம் பண்ணிடுவாங்க. என்னவோ போங்க...

    ReplyDelete
  7. அப்புறம் இந்த மாதிரி எழுதலாமுல்ல. அதை விட்டுட்டு என்ன ஒரேடியா நெஞ்சை நக்குற பதிவா போட்டுக்கிட்டு இருந்தீங்க.

    நேயர் விருப்பத்தை மனதிற் கொண்டு நெஞ்சை நக்கும் பதிவுகளுக்கு டாட்டா காண்பித்து தனது வாழ்க்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தொடங்கிய தல கைப்புள்ள வாழ்க!!

    ReplyDelete
  8. //அப்போ நீங்கதான் ஐடியல் பாய் பிரண்ட். இப்பவும் அதே பழக்கம்தானே? அப்போ நீங்க நார்மல் ஹஸ்பண்ட்தான்!!//

    வாங்க கொத்ஸ்,
    ஆமாமா...பேசா மடந்தன் நான் :)

    ReplyDelete
  9. //யப்பா ராசா!! என்னா உள்குத்து என்னா உள்குத்து!! தாங்கல ராசா!!//

    அப்பா நல்ல காலம்...நுண்ணரசியல் நுண்ணறிவியல்னு எதையும் சொல்லலை...
    :)

    ReplyDelete
  10. //அதே பள்ளியூடத்தில்தானே படிச்ச, இதெல்லாம் கூட கவனிச்சு வெச்சுக்காம நீயெல்லாம் ஒரு அண்ணன்.....//

    அதான் நான் பதிவுலேயே சொல்லிருக்கேனே...அதே ரீச்சர் என்னை எல்லாம் கண்டுக்கிட்டதில்லைன்னு

    ReplyDelete
  11. //ஹலோ இந்த ஃப்ரீயா விடறதுக்கு எல்லாம் கோப்பிரைற் நம்ம கிட்ட இருக்கு தெரியுமில்ல....//

    பண்ண பாவத்துக்குப் பரிகாரமா "ஃப்ரீயா விடும் மாமே கொத்ஸ் வாழ்க"னு கோஷம் வேணா போடட்டுமா?
    :)

    ReplyDelete
  12. //அவங்க பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி அப்படின்னு சொன்னா பரவாயில்லை. ஆனா நீங்க போயி அப்போ அவர் எனர்ஜி அப்படின்னு சவுண்டு விட்டா செருப்பு பிஞ்சுரும். சாக்கிரதை. அம்புட்டுதான் சொல்லுவேன்//

    சாக்கிரதைன்னு சொல்லிட்டீங்களே...ரெட் அலர்ட்ல தான் இருக்கேன். தப்பு எதுவும் நடக்காது.
    :)

    ReplyDelete
  13. //இந்த ஊரா இருந்தா கேஸ் போட்டு பணம் பண்ணிடுவாங்க. என்னவோ போங்க...//

    இதுக்குக் கூடவா?
    :)

    ReplyDelete
  14. //நேயர் விருப்பத்தை மனதிற் கொண்டு நெஞ்சை நக்கும் பதிவுகளுக்கு டாட்டா காண்பித்து தனது வாழ்க்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தொடங்கிய தல கைப்புள்ள வாழ்க!!//

    காலையிலேயே அமோக ஆதரவு கொடுத்து கணக்கைத் திறந்து வைத்த பின்னூட்ட நாயகன் புரோட்டா வேந்தன் பீர் மிளகாய் பிதாமகன் கொத்ஸ் வாழ்க வாழ்க்!!!

    ReplyDelete
  15. இந்த மோஹன் கார்த்திக் கம்பேரிசன் சூப்பர் போங்க....ஆனா அதுவென்னவோ கர்ரெக்ட்தான்....."we were crazy abt karthic'..ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்...:):)

    ReplyDelete
  16. யப்பா இதென்ன கொத்ஸ் உங்க பதிவ இப்படி அணு அணுவா ரசிக்கரார்??

    ReplyDelete
  17. சூப்பர். ஒன்னோட தம்பி நல்ல ஒரு ஸ்டோரி டெல்லர் போல இருக்கே. நீ சொன்ன மாதிரி நெறயா பேசணும், சிரிக்க சிரிக்க பேசணும், அப்ப அப்ப கொஞ்சம் அவங்கள புகழனும். அவ்ளோதான். மத்த எந்த குறை, நிறை இருந்தாலும் பொண்ணுங்க சகிச்சுப்பாங்கா.

    அதே மாதிரி பொண்ணுங்களுக்கு தண்டமா ஊர் சுத்திகிட்டு இருக்கவங்க, அவங்களோட சொல் பேச்சு கேக்காதவங்க இவங்களையும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும். இது நான் கண்டது.

    ReplyDelete
  18. "அக்கறைக்கு இக்கறை பச்சை"ங்கிற

    ஒரே "கறை" தமிழிலே, "அக்கரைக்கு இக்கரை" இது தான் சரி,

    இப்போ யார் பீலா விடறாங்கனு சந்தேகமா இருக்கு! :P

    ReplyDelete
  19. //ொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்ற அப்பாவி "மோகன்" கேரக்டர்ல அவ்வளவா விருப்பம் இருக்காது..//

    யப்பா ராசா!! என்னா உள்குத்து என்னா உள்குத்து!! தாங்கல ராசா!!//


    ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  20. யப்பா இதென்ன கொத்ஸ் உங்க பதிவ இப்படி அணு அணுவா ரசிக்கரார்??.//
    அதானே:)

    பள்ளிக்கூடம் என்ன வல்லிக்கேணி தெரு என்ன !!
    சும்மா சொல்லக் கூடாது.. உங்க இளவலுக்குக் கார்த்திகைப் பெண்கள் மைந்தன்னு பேரு வச்சுடலாமா;)

    ReplyDelete
  21. //இந்த மோஹன் கார்த்திக் கம்பேரிசன் சூப்பர் போங்க....ஆனா அதுவென்னவோ கர்ரெக்ட்தான்....."we were crazy abt karthic'..ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்...:):)//

    ஹி...ஹி...கார்த்திக்கோட துறுதுறுப்பு எல்லாருக்கும் பிடிக்கும்னு ஒரு கெஸ். அதுக்கும் மேல இருந்திருக்கு போலிருக்கு...crazyஆ?...ஹ்ம்ம்ம் :)

    ReplyDelete
  22. //யப்பா இதென்ன கொத்ஸ் உங்க பதிவ இப்படி அணு அணுவா ரசிக்கரார்??//

    சில நாளா நெஞ்சை நக்கும் பதிவுகளாப் போட்டதனால கடுப்பாயிட்டார் கொத்ஸ்...அதனால இப்பதிவுக்கான தன்னோட ஆதரவை இப்படி வெளிப்படுத்துறாராம்...ஆமா தானுங்க???
    :)

    ReplyDelete
  23. //சூப்பர். ஒன்னோட தம்பி நல்ல ஒரு ஸ்டோரி டெல்லர் போல இருக்கே. நீ சொன்ன மாதிரி நெறயா பேசணும், சிரிக்க சிரிக்க பேசணும், அப்ப அப்ப கொஞ்சம் அவங்கள புகழனும். அவ்ளோதான். மத்த எந்த குறை, நிறை இருந்தாலும் பொண்ணுங்க சகிச்சுப்பாங்கா. //

    ஹ்ம்ம்ம்....அப்படீங்கறே?
    :))

    //அதே மாதிரி பொண்ணுங்களுக்கு தண்டமா ஊர் சுத்திகிட்டு இருக்கவங்க, அவங்களோட சொல் பேச்சு கேக்காதவங்க இவங்களையும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும். இது நான் கண்டது//

    சீக்கிரம் வாங்க தாய்க்குலமே...இங்கே ஒருத்தன் தனியா மாட்டிருக்கான்...வாங்க...வந்து என்னான்னு கேளுங்க?
    :)

    ReplyDelete
  24. //ஒரே "கறை" தமிழிலே, "அக்கரைக்கு இக்கரை" இது தான் சரி,//
    திருத்திக்கிறேன். நன்றி :)

    //இப்போ யார் பீலா விடறாங்கனு சந்தேகமா இருக்கு!//
    ஏன்? நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாது?

    ReplyDelete
  25. //யப்பா ராசா!! என்னா உள்குத்து என்னா உள்குத்து!! தாங்கல ராசா!!//


    ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ//

    தலைவியாரே...எதுக்குத் தேவையில்லாம இம்புட்டுப் பெரிய ரிப்பீட்டேய்???

    :))

    ReplyDelete
  26. //யப்பா இதென்ன கொத்ஸ் உங்க பதிவ இப்படி அணு அணுவா ரசிக்கரார்??.//
    அதானே:)//

    ஹி...ஹி...எல்லாம் ஒரு பாசம் தான்
    :)

    //பள்ளிக்கூடம் என்ன வல்லிக்கேணி தெரு என்ன !!
    சும்மா சொல்லக் கூடாது.. உங்க இளவலுக்குக் கார்த்திகைப் பெண்கள் மைந்தன்னு பேரு வச்சுடலாமா;)//
    ஏன் மேல உங்களுக்கு என்ன கோபம்? இந்த கமெண்ட் எல்லாம் பாத்தா சும்மா இருக்கற என் தம்பி டின்னு கட்டாம விட மாட்டான் :(

    ReplyDelete
  27. தல..தம்பியோட சித்து விளையாட்டை மட்டும் சொல்லிட்டு பச்சைப்புள்ளயாட்டம் பில்டப் கொடுக்கறீங்களே..இதெல்லாம் நல்லதுக்கில்ல..என்ன இருந்தாலும் பழசையெல்லாம் மறக்கக்கூடாது :)))

    ReplyDelete
  28. //"பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?"ன்னு சொல்றது சரி தானுங்களே?//

    வர வர எல்லா பதிவுலயும் ஒரு மெசெஜ் சொல்றதுன்னு முடிவோட இருக்கீங்க போல :)))

    ReplyDelete
  29. //என் தம்பி டின்னு கட்டாம விட மாட்டான் :(
    //

    அவர் ஒருத்தர்தான் பாவம் பார்த்து உட்டுவச்சிருந்தாரு..இப்ப அவர்ட்டயுமா..அவ்வ்வ்வ் :)))

    ReplyDelete
  30. ஏன்..அட ஏன்யா? ஏன் உனக்கு இந்த கொலை வெறி. எதோ நான் எனக்கு தெரிஞ்ச விஷயத்த சொன்னா, இப்படி மாட்டி விடறயே.

    ReplyDelete
  31. @மோகன் தம்பிக்கு,
    அண்ணா உங்களை மெச்சித்தான் எழுதி இருக்காரு.

    அவருக்கும் இப்படி எல்லாம் கோபிகா கூட்டம் இருந்தா இந்தப் பதிவே வந்திருக்குமானு தெரியலை:))))

    ReplyDelete
  32. பதிவு எழுதும் போது காதுல எல்லாம் புகை வந்து இருக்கும் போல இருக்கே..

    ReplyDelete
  33. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க. ஹா ஹா ஹா....முருகா முருகா...

    ReplyDelete
  34. //விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க. //

    அட்லாஸ் சிங்கமே

    தல விழுந்து விழுந்து பஞ்சராகறது உமக்கு சிரிப்பா இருக்கா????

    ReplyDelete
  35. //இதெல்லாம் நல்லதுக்கில்ல..என்ன இருந்தாலும் பழசையெல்லாம் மறக்கக்கூடாது :)))//

    எலேய் பருத்திவீரா,
    நான் உண்மையிலேயே நல்லவன்யா
    :)

    ReplyDelete
  36. //வர வர எல்லா பதிவுலயும் ஒரு மெசெஜ் சொல்றதுன்னு முடிவோட இருக்கீங்க போல :)))//

    ஹி...ஹி...
    :))

    ReplyDelete
  37. //அவர் ஒருத்தர்தான் பாவம் பார்த்து உட்டுவச்சிருந்தாரு..இப்ப அவர்ட்டயுமா..அவ்வ்வ்வ் :)))//

    அவர்ட்டயுமாவா? அவரு தான்பா டின்னு கட்டறதுல ஃபர்ஸ்ட்டூ
    :)

    ReplyDelete
  38. //ஏன்..அட ஏன்யா? ஏன் உனக்கு இந்த கொலை வெறி. எதோ நான் எனக்கு தெரிஞ்ச விஷயத்த சொன்னா, இப்படி மாட்டி விடறயே//

    ஹி...ஹி...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    :)

    ReplyDelete
  39. //மோகன் தம்பிக்கு,
    அண்ணா உங்களை மெச்சித்தான் எழுதி இருக்காரு//


    வாங்கம்மா,
    மோகனோட தம்பி பேரு முரளி

    //அவருக்கும் இப்படி எல்லாம் கோபிகா கூட்டம் இருந்தா இந்தப் பதிவே வந்திருக்குமானு தெரியலை:))))//

    இதுக்கு தங்கமணி டின்னு கட்டுவாங்க.
    பயந்து சாவறதே பொழப்பாப் போச்சு.
    :(

    ReplyDelete
  40. //:)//
    சிரிச்சதுக்கு நன்றிங்க சர்வேசன்.
    :)

    ReplyDelete
  41. //பதிவு எழுதும் போது காதுல எல்லாம் புகை வந்து இருக்கும் போல இருக்கே//

    விவாஜி,
    புகை எல்லாம் ஒன்னுமில்லீங்க. சும்மா இளவல் புகழைப் பரப்பலாமின்னு...
    :)

    ReplyDelete
  42. //விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க. ஹா ஹா ஹா....முருகா முருகா...//

    சிரிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க ஜி.ரா
    :)

    ReplyDelete
  43. //தல விழுந்து விழுந்து பஞ்சராகறது உமக்கு சிரிப்பா இருக்கா????//

    இதெல்லாம் ஓவரு...நான் இந்தப் பதிவுல சம்பந்தப் படவே இல்லை ஆமா சொல்லிட்டேன்.
    :(

    ReplyDelete