தலைவி "திருவள்ளுவி:)"யைப் போல ரெண்டு வரியில சொன்னாலும், அவங்க சொன்ன கருத்து ரொம்ப ஆழமானது. அது என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. "நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:). யோசிச்சிப் பாத்தா வேலண்டைன்ஸ் டேன்னா என்னங்க? ஆர்ச்சீஸ்ல ஒரு கார்டையும், ஒரு சேப்பு கலர் ரோஜாப்பூவையும், ஒரு சாக்லேட் டப்பாவையும் வாங்கி நமக்கு விருப்பமானவங்க கிட்ட "ஐ லவ் யூ" சொல்லிக் கொடுக்கறதுக்கும் ஃபிகர்களைக் கவர் பண்ணறதுக்கும் உண்டான ஒரு நாளா? மணமாகதவங்கன்னா "நம் இருவருக்கும் இடையே தோன்றியிருக்கும் இவ்வன்பு இன்று போல என்றும் நிலைத்திருக்கும்"னும் மணமானவங்கன்னா "நம் இருவருக்கும் இடையே இருக்கும் இந்த அன்பு நாம் வாழும் காலம் வரை மாறாதிருக்கும்"னும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதி மொழி தர்ற ஒரு நாளா இருக்கணுமில்லையா? இதை தவிர காதலர் தினத்தன்று செய்யற மத்ததெல்லாம் தவறில்லை என்றாலும் மேலோட்டமானது என்பதும் என் தாழ்மையான எண்ணம்.
2006ஆம் ஆண்டு இறுதியில் அகமதாபாளையம் போன போது ஒரு ஜோடியைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா நேத்து எங்க தலைவி என்னை ஆழமா ஃபீல் பண்ண வச்சதுல அவங்களைப் பத்திய நினைவு மறுபடியும் துளிர்த்திடுச்சு. அவங்களைப் பத்தி இந்த ஊருக்கே தெரியும்...ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். இருந்தாலும் அவர் அவங்களுக்கு வருடாவருடம் ரோஜாப்பூ கொடுத்தாரா அவங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமான்னெல்லாம் தெரியாது. அதப் பத்தித் தெரிஞ்சிக்க நான் முயற்சிக்கவும் இல்லை. ஆனா என்ன தெரியும்னா கணவன், மனைவியா வாழ்ந்த அந்த இருவரின் அன்புக்கு அடிப்படையா இருந்தது...ஒருத்தர் கருத்துக்கு இன்னொருவர் அளிக்கும் மதிப்பு, கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருத்தர் தனித்துவத்தில் இன்னொருவர் தலையிடாத மாண்பு. இருப்பினும் தேவை ஏற்படும் போது தன்னுடைய மறுபாதிக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் இழக்கத் தயாராயிருக்கும் பக்குவம் இதெல்லாம் தான். அவங்க Mrs.& Mr.Gandhi...
2006-2007இல் அகமதாபாத்தில் இருந்த போது சபர்மதி ஆஷ்ரமத்திற்கு இருமுறை சென்றிருக்கிறேன். அங்கு காந்தி அருங்காட்சியகத்தில் கண்டவற்றை எல்லாம் புகைப்படமாகச் சுட்டுத் தள்ளினேன். அவற்றில் இருந்து இந்நாளுக்கும் இப்பதிவிற்கும் பொருத்தமானது என நான் எண்ணும் சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன்.
சபர்மதி ஆஷ்ரமத்தில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் வாழ்ந்த வீடான "ஹ்ருதய் குஞ்ச்"இன் முகப்பில் உள்ள அறிவிப்பு பலகை.
அளவில் பெரிதான படங்களை ப்ளாக்கர் நேற்று முழுவதும், இன்றும் ஏற்க மறுத்ததால், சிறிய படங்களாக ஏற்றி ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை அப்படியே இங்கு தட்டச்சுகின்றேன். பாருங்க, படிங்க ஆனா கண்டிப்பா ஆராய்ஞ்சிப் பாருங்க :)
அங்கே படிச்சதிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இது. கஸ்தூர்பாவிடமிருந்து காந்தி கற்றது என்ன என்று விளக்கும் படம்.
Was Kasturba even Gandhiji's teacher?
"It was from my wife that I learned the lesson of ahimsa...I had always tried to make her bend to my wishes. On the one hand she would firmly refuse to do so and, on the other, patiently bear with all the hardships that I would inflict her on in my obstinacy. It was her peaceful opposition that opened my eyes. I felt ashamed of myself and was rid of the foolish notion that it is my birthright to rule over her"
காந்தியடிகள் தன் மனைவியின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டாரா?
Did Gandhiji ever accept Kasturba's individuality?
"We have quarelled many times but always the result has been good. With her wonderful capacity to suffer, Ba would always win any quarrel between us...What I like best in Ba is her bravery and courage. She has been angry, envious or bitter but looking back on all the years since my return from South Africa, I find that only her bravery has endured".
கணவன் மனைவியைப் பற்றியும், மனைவி கணவனைப் பற்றியும் சொன்னது.
என்னோடு இரண்டறக் கலந்தவள்...
"Ba was very stubborn. Even if I pressurised her she would do what she thought was best. Because of this there would be bitterness between us now and then. But as my public life became brighter...she entered my work with greater maturity. As time passed, it was as if there was no difference between me and my work, and Ba began becoming one with it."
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது...
"No one has a husband like mine. He is worshipped all over the world for his truth...He has never found fault with me without cause. If I did not have foresight and was short-sighted about things he would rebuke me. That happens all over the World."
தேசத்தின் விடுதலை என்னும் கணவனின் முனைப்புக்குத் தோள் கொடுத்த தோழியாக...
Did Kasturba prepare women for Satyagraha?
"Our men are fighting the government for the sake of truth. We must encourage them in this fight. We must bear bravely, whatever harassment the government may subject us to...The boycott of alcohol and foreign clothes is a task women have to do. Men are not blessed with the kind of common sense we have, for we understand the language of sorrow better than men"
கணவனுக்கும் மனைவிக்குமிடையே உண்டான அன்பினையும் ஒருவருக்காக இன்னொருவர் தாங்கள் மிகவும் நேசித்ததை விட்டுக் கொடுப்பதையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு ஆங்கிலக் கதை - "The Gifts of Magi". ஓ ஹென்றி எனும் புகழ்பெற்ற அமெரிக்கக் கதாசிரியர் எழுதியது. Magi - மஜாய் என்பவர்கள், குழந்தை ஏசுவைக் காண வெகு தொலைவிலிருந்து மிகவும் விலைமதிப்புள்ள பரிசுகளைக் கொண்டு வந்த மன்னர்கள். ஆனால் அவர்களுக்கிருந்த அன்பின் மிகுதியில் தாங்கள் கொண்டு வந்த பரிசுகள், அப்போது பிறந்த பிஞ்சு குழந்தைக்குப் பயன்படுமா என சிந்திக்கத் தவறியவர்கள். அது போல கணவன் மேல் தனக்கு இருக்கும் அன்பின் மிகுதியால் கணவனின் கைக்கடிகாரத்திற்கு ப்ளாட்டினம் செயின் வாங்க தான் மிகவும் நேசித்தத் தன் நீண்ட கூந்தலை வெட்டி விற்று விடுகிறாள் டெல்லா என்னும் அம்மனைவி. அதே போல மனைவி நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விலைஉயர்ந்த சீப்புகளை வாங்க தன் கைக்கடிகாரத்தை விற்று விடுகிறான் ஜிம் எனும் அக்கணவன். அவர்கள் இருவருக்குமிடைய இருக்கும் அவ்வன்பை மிக எதார்த்தமாக அழகாகச் சொல்லியிருப்பார். அக்கதையிலிருந்து ஒரு சிறிய பகுதி கீழே.
"You needn't look for it," said Della. "It's sold, I tell you--sold and gone, too. It's Christmas Eve, boy. Be good to me, for it went for you. Maybe the hairs of my head were numbered," she went on with a sudden serious sweetness, "but nobody could ever count my love for you. Shall I put the chops on, Jim?"
Out of his trance Jim seemed quickly to wake. He enfolded his Della. For ten seconds let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction. Eight dollars a week or a million a year--what is the difference? A mathematician or a wit would give you the wrong answer. The magi brought valuable gifts, but that was not among them. I his dark assertion will be illuminated later on.
Jim drew a package from his overcoat pocket and threw it upon the table.
"Don't make any mistake, Dell," he said, "about me. I don't think there's anything in the way of a haircut or a shave or a shampoo that could make me like my girl any less. But if you'll unwrap that package you may see why you had me going a while at first."
White fingers and nimble tore at the string and paper. And then an ecstatic scream of joy; and then, alas! a quick feminine change to hysterical tears and wails, necessitating the immediate employment of all the comforting powers of the lord of the flat.
For there lay The Combs--the set of combs, side and back, that Della had worshipped for long in a Broadway window. Beautiful combs, pure tortoise-shell, with jewelled rims--just the shade to wear in the beautiful vanished hair. They were expensive combs, she knew, and her heart had simply craved and yearned over them without the least hope of possession. And now, they were hers, but the tresses that should have adorned the coveted adornments were gone.
But she hugged them to her bosom, and at length she was able to look up with dim eyes and a smile and say: "My hair grows so fast, Jim!"
And then Della leaped up like a little singed cat and cried, "Oh, oh!"
Jim had not yet seen his beautiful present. She held it out to him eagerly upon her open palm. The dull precious metal seemed to flash with a reflection of her bright and ardent spirit.
"Isn't it a dandy, Jim? I hunted all over town to find it. You'll have to look at the time a hundred times a day now. Give me your watch. I want to see how it looks on it."
Instead of obeying, Jim tumbled down on the couch and put his hands under the back of his head and smiled.
"Dell," said he, "let's put our Christmas presents away and keep 'em a while. They're too nice to use just at present. I sold the watch to get the money to buy Your combs. And now suppose you put the chops on."
The magi, as you know, were wise men--wonderfully wise men-who brought gifts to the Babe in the manger. They invented the art of giving Christmas presents. Being wise, their gifts were no doubt wise ones, possibly bearing the privilege of exchange in case of duplication. And here I have lamely related to you the uneventful chronicle of two foolish children in a flat who most unwisely sacrificed for each other the greatest treasures of their house. But in a last word to the wise of these days let it be said that of all who give gifts these two were the wisest. Of all who give and receive gifts, such as they are wisest. Everywhere they are wisest. They are the magi."
கதையை முடித்திருக்கும் விதம் வெகு அருமையாக இருக்கும். முழு கதையையும் படிக்க இங்கு சுட்டுங்கள்.
பி.கு 1: என் வாழ்நாளில் பல வேலண்டைன் தினங்கள் என்னை கடந்துச் சென்றிருக்கின்றன. ஆனால் இது தான் என்னுடைய முதல் வேலண்டைன் தினம் :)
பி.கு 2 : இப்பதிவில் ஐந்து வேலண்டைன் ஜோடிகள் இருக்கின்றார்கள். ஜோடி நம்பர் ஒன்னு தங்கத் தலைவியும் - அங்கிளும், ஜோடி நம்பர் ரெண்டு கஸ்தூர்பாவும் - மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும், ஜோடி நம்பர் மூனு மஜாய் கதையில் வரும் ஜிம்மும்-டெல்லாவும். ஜோடி நம்பர் நாலு - இந்தப் பதிவைப் படிச்சிட்டு, பாதிக்கு மேல ஆங்கிலத்தில் இருந்தாலும் நெஞ்சை நக்கிட்டாண்டா கைப்புன்னு நெனக்கிற நீங்களும் உங்களுடைய மறுபாதி(யும்)/(யா) வரப் போகிறவங்களும்:). ஜோடி நம்பர் அஞ்சு - பி.கு 1ஐ ஏன் தான் தேடறீங்களோ தெரியலை :).
...ஆதலினால் காதல் செய்வீர்:)))
//ஆதலினால் காதல் செய்வீர்:))) //
ReplyDeleteஇதுக்கு ஏதும் ஏஜ் லிமிட் உண்டா தள, ஓட்டு போட, டிரைவிங் லைசன்ஸ் வாங்க எல்லாம் ஏஜ் லிமிட் இருக்கே அதுக்கே இன்னும் நான் இரண்டு வருடம் கழிச்சுதான் எலிஜிபிலாம்(இப்ப என் வயசு என்னா கண்டுபிடிச்சா கம்மர்கட் பரிசு:)), சரி சும்மாதானே இருக்கோம் என்றும் நீங்க சொன்ன பிறகு செய்யாமல் இருந்தால் தவறு என்பதாலும் காதல் செய்யலாம் என்று முடிவு செஞ்சுட்டேன் அதான் டவுட் கேட்கிறேன்!!!
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு நடுவில் ஆங்கிலம் வந்து சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது!!!
ReplyDelete//இதுக்கு ஏதும் ஏஜ் லிமிட் உண்டா தள, ஓட்டு போட, டிரைவிங் லைசன்ஸ் வாங்க எல்லாம் ஏஜ் லிமிட் இருக்கே அதுக்கே இன்னும் நான் இரண்டு வருடம் கழிச்சுதான் எலிஜிபிலாம்(இப்ப என் வயசு என்னா கண்டுபிடிச்சா கம்மர்கட் பரிசு:)), சரி சும்மாதானே இருக்கோம் என்றும் நீங்க சொன்ன பிறகு செய்யாமல் இருந்தால் தவறு என்பதாலும் காதல் செய்யலாம் என்று முடிவு செஞ்சுட்டேன் அதான் டவுட் கேட்கிறேன்!!!//
ReplyDeleteஆங்...இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா வேணுங்கிறது. நேத்து ராத்திரி 10.30மணிக்கே கலைஞர் டிவில, கம்மர்கட் பரிசு குடுக்கற குட்டிப் பையன் குசும்பன் வந்து கேள்வி கேப்பான்னு தீர்க்கதரிசனத்தோட இதுக்குப் பதில் சொல்லிட்டுப் போயிட்டார்.
"டேய்! லவ்ஸுக்கு வயசு வித்தியாசமே கெடையாது. எந்த வயசுலேயும் லவ்ஸ் வரலாம்"
"இப்ப ஆலைல ஓடற கரும்புல அடி கரும்பு என்ன நுனி கரும்பு என்ன...ரெண்டுமே வெல்லம் தானேடா கோமுட்டித் தலையா"
:)
//ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு நடுவில் ஆங்கிலம் வந்து சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது!!!//
ReplyDeleteநான் கூட நெனச்சேன்...எல்லாத்தையும் தமிழ் படுத்தனும்னு...ஆனா நேரமில்லாததுனால பண்ண முடியலை...மன்னிச்சிக்கங்க சாமியோவ்
:)
இந்தாங்க உங்களுக்கு இன்னொரு ஜோடி....Robert Barett Browning and Elizabeth Barett Browining.
ReplyDeleteEBB..எழுதிய ஒரு சானெட்டும்.......எனக்கு மிகவும் பிடித்த சானெட்.!!
How Do I Love Thee??
[Sonnet XLIII from Sonnets from the Portuguese (1850)]
How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of everyday's
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints,--I love thee with the breath,
Smiles, tears, of all my life!--and, if God choose,
I shall but love thee better after death.
//.....ஆதலினால் காதல் செய்வீர்:)))//
ReplyDeleteசெய்ய ஆரம்பிச்சு ஜஸ்ட் முப்பத்தி மூணேமுக்கால் வருசம்தான் ஆச்சு.
பதிவு அருமையா இருக்கு.
//இந்தாங்க உங்களுக்கு இன்னொரு ஜோடி....Robert Barett Browning and Elizabeth Barett Browining.
ReplyDeleteEBB..எழுதிய ஒரு சானெட்டும்.......எனக்கு மிகவும் பிடித்த சானெட்.!!//
வாங்க ராதா மேடம்,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நான் இன்னிக்குத் தான் முதல் முறை கேள்வி படறேன்.
//I love thee to the level of everyday's
Most quiet need, by sun and candlelight//
எனக்குண்டான ஒளியின் தேவையின் போன்றது என் காதல்
//I love thee freely, as men strive for Right//
என் உரிமைகளுக்காக பாடுபடுவதை போல, நான் காதலிப்பேன்.
சூப்பரா இருக்கு கவிதை.
மொழிபெயர்ப்பு ஓகேவா? Not verbatim though...
நல்ல பதிவு. நல்ல உதாரணங்கள்.
ReplyDelete//அகமதாபாளையம்// புது ஊர் போலிருக்கே!
:-)
அருமையான, என் பேரைக் காப்பாத்தின பதிவு. நல்லாவே புரிஞ்சுக்கிட்டீங்க, வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், இன்று போல் என்றும் வாழ மனமார்ந்த நல்லாசிகள்,தினமும் உங்கள் ஒவ்வொரு நாளும், நிமிஷமும், காதலர் தினமாகவேச் சிறக்கவும் வாழ்த்துகள்.
ReplyDelete//செய்ய ஆரம்பிச்சு ஜஸ்ட் முப்பத்தி மூணேமுக்கால் வருசம்தான் ஆச்சு//
ReplyDeleteமுப்பத்தி மூணேமுக்கால் வருசம் தானா? எனக்கு அவ்வளவு வயசு கூட ஆகலை. துளசியக்காவை விட துளசியம்மா தான் பொருத்தமா இருக்கும் போல. முப்பத்தி மூணே முக்காலாவது காதலர் தின வாழ்த்துகள்.
//பதிவு அருமையா இருக்கு//
மிக்க நன்றியம்மா.
:)
//நல்ல பதிவு. நல்ல உதாரணங்கள்.
ReplyDelete//அகமதாபாளையம்// புது ஊர் போலிருக்கே!
:-)//
வாங்க திவா,
வருகைக்கு நன்றி. அது அகமதாபாத் தான். நம்ம சங்கத்து சிங்கங்கள் அதை அகமதாபாளையம் ஆக்கிட்டாங்க.
:)
//. நம்ம சங்கத்து சிங்கங்கள் அதை அகமதாபாளையம் ஆக்கிட்டாங்க.//
ReplyDeleteஉம். நிச்சயமா வலைபதிவர் அகராதி வேண்டியதுதான்.
//அருமையான, என் பேரைக் காப்பாத்தின பதிவு.//
ReplyDeleteதலைவி பேர்னா சும்மாவா?
//நல்லாவே புரிஞ்சுக்கிட்டீங்க, வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், இன்று போல் என்றும் வாழ மனமார்ந்த நல்லாசிகள்,தினமும் உங்கள் ஒவ்வொரு நாளும், நிமிஷமும், காதலர் தினமாகவேச் சிறக்கவும் வாழ்த்துகள்//
ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மேடம்.
//உம். நிச்சயமா வலைபதிவர் அகராதி வேண்டியதுதான்//
ReplyDeleteஹ்ம்ம்ம்...நீங்கச் சொல்றது சரி தான்...முயற்சி பண்ணறேன்.
:)
//"நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:).//
ReplyDeleteகவுத்துட்டீங்களே? :P:P
//With my lost saints,--I love thee with the breath,
ReplyDeleteSmiles, tears, of all my life!--and, if God choose,
I shall but love thee better after death.//
அருமையான வரிகள், ராதா ஸ்ரீராம், பகிர்வுக்கு நன்றி.
//With my lost saints,--I love thee with the breath,
ReplyDeleteSmiles, tears, of all my life!--and, if God choose,
I shall but love thee better after death.//
அருமையான வரிகள், நல்ல பகிர்வுக்கு நன்றி ராதா ஸ்ரீராம்.
//"நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:)//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்., கவுத்திட்டீங்களே. :P :P
//"நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:)//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்., கவுத்திட்டீங்களே. :P :P
//"நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:)//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்., கவுத்திட்டீங்களே. :P :P
அது என்னனு தெரியலை, அந்தப் பின்னூட்டம் மட்டும் போகவே இல்லை, ஒருவேளை போயிருந்தா எத்தனை முறை வந்திருக்குமோ தெரியாது, எடுத்திடுங்க! :))))))))))
ReplyDelete//"நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:)//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்., கவுத்திட்டீங்களே. :P :P
//அது என்னனு தெரியலை, அந்தப் பின்னூட்டம் மட்டும் போகவே இல்லை, ஒருவேளை போயிருந்தா எத்தனை முறை வந்திருக்குமோ தெரியாது, எடுத்திடுங்க! :))))))))))//
ReplyDeleteஉஹும்...எடுக்க மாட்டேன். வர்ற கமெண்டை அழிச்சா வியாபாரம் எப்படி நடக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்னு ஒரே மாதிரி எத்தனை வாட்டி கியர் போட்டிருக்கீங்க? ஒரு வாட்டியாச்சும் நறநறநற போடக்கூடாது?
:)
//க்ர்ர்ர்ர்ர்ர்., கவுத்திட்டீங்களே. :P :P//
ReplyDeleteஅப்போ கவுக்கலை. சும்மா ஒரு எஃபெக்டுக்காகத் தான் எழுதினேன். இப்ப நிஜமாலேயே கவுத்துட்டேன்.
:))
நல்லாயிருக்குங்க.....
ReplyDeleteநல்ல பதிவு - அப்படின்னு நான்கூட ஒரு Valentines Day பதிவுக்கு சொல்வேன்னு எதிர்பார்க்கவே இல்லை :) சொல்ல வச்சுட்டீங்க!
ReplyDeleteஜெப்ரியண்ணன் கதை ஒண்ணு "Old Love"ன்னு, அதுகூட இந்த காண்டெக்ஸ்டுக்கு கரெக்டா இருக்கும், நல்ல கதை.
//உஹும்...எடுக்க மாட்டேன். வர்ற கமெண்டை அழிச்சா வியாபாரம் எப்படி நடக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்னு ஒரே மாதிரி எத்தனை வாட்டி கியர் போட்டிருக்கீங்க? ஒரு வாட்டியாச்சும் நறநறநற போடக்கூடாது?
ReplyDelete:)//
நறநறநறநறநறநறநறநற,
ஆன்லைனிலே இருக்கீங்களா இல்லையா தெரியலை, சுடச் சுடச் செய்தி ஒண்ணு கொடுத்திருக்கேன், என்னோட பதிவிலே, போய்ப் பார்த்துக் கருத்துச் சொல்லுங்க!
காந்தி படத்தில ஒரு காட்சி வரும் - நீ சொல்கிற மாதிரி காந்திக்கும் கஸ்தூரி பாய்க்கும் இருந்த உறவை விளக்குகிற மாதிரி.
ReplyDeleteவீடியோ சுட்டிகள்:
from 08:55
http://www.youtube.com/watch?v=IY1DN_U0DBc
followed by
http://www.youtube.com/watch?v=yGllzwttUPc
காதல் குறையாமல் வாழ என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பான கணவன் மனைவியருக்கும்,
ReplyDeleteஅன்பு வாழும் எல்லா உள்ளங்களுக்கும் வாழ்த்துகள். ஏற்கனவே கேட்ட கதையானாலும்
மீண்டும் உங்கள் பதிவில் படிப்பது நல்ல அனுபவமாக இருந்தது.
காதல் ,அன்பின் வெளிப்பாடுதானே
அதைக் கொண்டாடுவதில் தப்பு ஒன்றும் இல்லை.
உங்களுக்கும் உங்கள் தங்கமணிக்கும் பற்பல காதலர்தினக்களைக் கொண்டாடவும் இன்று போல் எப்பவும் இந்தக் காதல் நீடிக்கவும் வாழ்த்துகள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
ReplyDeleteஓவர் சீரியஸா எழுதறதை நிறுத்திட்டு வழக்கம் போல ஒரு பதிவு போடுங்கண்ணா!!
//நல்லாயிருக்குங்க.....//
ReplyDeleteநன்றி மதுரையம்பதி சார்.
//நல்ல பதிவு - அப்படின்னு நான்கூட ஒரு Valentines Day பதிவுக்கு சொல்வேன்னு எதிர்பார்க்கவே இல்லை :) சொல்ல வச்சுட்டீங்க!//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார். தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
:)
திரு & சந்தியா,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//உங்களுக்கும் உங்கள் தங்கமணிக்கும் பற்பல காதலர்தினக்களைக் கொண்டாடவும் இன்று போல் எப்பவும் இந்தக் காதல் நீடிக்கவும் வாழ்த்துகள்//
ReplyDeleteவாங்க வல்லியம்மா,
தங்கள் வாழ்த்துகளுக்கு எங்கள் இருவரின் சார்பாகவும் மனமுவந்த நன்றி.
:)
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
ReplyDeleteஓவர் சீரியஸா எழுதறதை நிறுத்திட்டு வழக்கம் போல ஒரு பதிவு போடுங்கண்ணா!!//
வாங்க பாஸ்,
அப்படியே செய்யறேன். இந்த ஒரு சிங்கிள் எச்சூஸ் மீ ப்ளீஸ்.
:)
படிக்கிற, பதிகிற எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteThe forgotten woman (untold story of Kastur, wife of Mahatma Gandhi) - by Arun & Sunanda Gandhi இந்த புத்தகம் பற்றி யாராவது பதிந்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. "காதல் என்பது கண்ணில் உள்ளது"!
எனக்குப் பிடித்த EBB இன் கவிதையை இட்டதற்கு ராதாவுக்கு ஸ்பெஷல் நன்றி. ராபர்ட் ப்ரௌனிங், எலிசபெத் பாரெட் ப்ரௌனிங இன் காதல் கதை ஆங்கில இலக்கிய உலகில் பாப்புலர். ராபர்ட் ப்ரௌனிங் பெயர் அது தான் (பாரட் இல்லை).
//வழக்கம் போல ஒரு பதிவு போடுங்கண்ணா!!// வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்!
காதலுக்கு இப்பிடியொரு அழுத்தமான பதிவு. காதல் வாழ்க. காதல் வளர்க. காதலே உலகைக் காக்கும். அன்பே தெய்வம்.
ReplyDeleteஆனாலும் பேரு கைப்புன்னு வெச்சுக்கிட்டு காதலப் பத்திக்கூட இவ்ளோ ஆழமாப் பதிவு போடுறீங்களே....அடா அடா அடா.. ஒங்க அறிவே அறிவு. :)