Monday, February 11, 2008

அண்ணன் நல்லவரு...வல்லவரு

கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு நாள் காலையும் பள்ளிக்கூடம் கிளம்பறதுக்கு முன்னாடி 'கவுண்டமணி காமெடி' எனும் ஒலிப்பேழையைக் கேட்காமல் தொடங்கியதே இல்லை. கவுண்டமணியும் செந்திலும் தங்கள் புகழின் உச்சியில் இருந்த போது வெளிவந்த படங்களான உதயகீதம், வைதேகி காத்திருந்தாள், உன்னை நான் சந்தித்தேன், மலையூர் மம்பட்டியான் இப்படியாகப் பல படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளின் ஒலிவடிவம் தான் கவுண்டமணி காமெடி.

அதுல வர்ற ஒரு நகைச்சுவை காட்சி - வைதேகி காத்திருந்தாள் படத்தில் இருந்து.

"வீலா இது வில்லு மாதிரி இருக்கு"

"டேய்! கோமுட்டித் தலையா...என்னோட அறிவுக்கு நான் அமெரிக்காவுல இருக்க வேண்டியவண்டா...எதோ என் கஷ்ட காலம் இப்படி பழனியப்பன் சைக்கிள் வீலுக்குப் பெண்டு எடுத்துட்டிருக்கேன்"

"இதையெல்லாம் நீ போய் சொல்லோணும்டா...அழகுராஜ் அண்ணன் ஒரு நல்லவரு...அவர் ஒரு வல்லவரு...பெண்டு நிமித்திறதுல...இப்படியெல்லாம் போய் சொல்லோணும்டா"

"ஆம்பளைங்க கிட்ட சொல்லோணும்னு முக்கியம் இல்லை...குறிப்பா நம்மூரு பொம்பளைங்க கிட்ட போய் சொல்லோனும்"

"இந்த ஊருல உன்னை எவனும் கிட்ட சேக்க மாட்டான்...ஏன்னா கிட்ட வந்தா நீ கடிச்சி வச்சிடுவே. இருந்தாலும் உன்னை ஏன் நான் வச்சிருக்கேன்...இதை எல்லாம் போய் சொல்லுவேனு தான்"

பிப்ரவரி 11 முதல் 17 வரை தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக இருக்க தமிழ்மண நிர்வாகியிடமிருந்து மின்னஞ்சல் வந்ததும், வரிக்கு வரி மனப்பாடமான இந்த காமெடி தான் என் நினைவுக்கு வந்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா அளவுக்குத் திறமை எல்லாம் எனக்கு இருக்கா இல்லையான்னு தெரியாது. ஆனா அண்ணன் நல்லவரு...வல்லவருன்னு போய் சொல்றதுக்குக் கோமுட்டித் தலையன் யாரும் இல்லாத பட்சத்துல நம்மளைப் பத்தி நாமளே பெருமையா நல்லவரு வல்லவருன்னு எழுதிக்கிறதை ஒரு வாரத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டற வாய்ப்பா இந்த நட்சத்திர பதிவர்ங்கிற வாய்ப்பைப் பார்க்குறேன். இதை எனக்கு அளித்தத் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாடா...தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படியோ முட்டி மோதி ஒரு தொடர்பை ஏற்படுத்தி விட்டாச்சு. ஒவ்வொரு முறையும் இதுக்குத் தான் அதிகமா மண்டை காயுது :)

"தமிழ் பதிவாம்...தமிழ் டைப்பிங்காம்...எல்லாம் வெட்டி வேலை...அதை செய்யற நேரத்துல வேற வேலை இருந்தாப் போய் பாக்கலாம்" அப்படின்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட சாட்ல பேசுன அன்னிக்கு சாயங்காலமே என் தமிழ் வலைப்பூவை ஆரம்பிச்சேன். பார்வர்டட் மெசேஜ்களையெல்லாம் காப்பியடிச்சி ஒட்டிக்கிட்டிருந்த என் ஆங்கில வலைப்பூ கமெண்ட் இல்லாமல் ஈயோட்டற கடுப்புல அப்படிச் சொன்னேன். ஆனா என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.

நான் முதன் முதலில் பார்த்தது கவிஞர் நிலவு நண்பன் அவர்களுடைய வலைப்பூ...அதுக்கப்புறம் அங்கே பின்னூட்டம்(ஆரம்பிச்ச புதுசுல பின்னூட்டம்னா கமெண்ட்னு எனக்கு புரியலை) போட்டிருந்த ஜி.ராகவனோட வலைப்பூவைப் பார்த்தேன் "ஃப்ளைட்டில் வந்த பூர்ணிமா"??(னு நெனக்கிறேன்) அப்படின்னு ஒரு கதை எழுதிருந்தாரு...அங்கே இலவசக்கொத்தனார்ங்கிற பேரைப் பாத்தேன்...வித்தியாசமா இருக்கே...அப்படின்னு அங்கே போனா டுபுக்கு இண்டீப்ளாக்கர்ஸ் அவார்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கு வோட்டு போட்டா சோப்பு டப்பா ஸ்பூன் எல்லாம் கொடுக்கறதா விளம்பரம் பண்ணிருந்தாரு. இப்படியே நாளாக நாளாகத் தமிழ்ல எழுதறதுக்கும் குறிப்பா படிக்கிறதுக்கும் அடிமை ஆகிட்டேன். நாளடைவில் நண்பர்கள் வட்டம் அதிகம் ஆச்சு...காதலுக்கு மரியாதை படத்துல வர்ற "ஹே பேபி பேபி" பாட்டு பாத்திருக்கீங்களா? அதுல சார்லி, தாமு, விஜய் எல்லாம் கைகுடுத்து நண்பர்கள் ஆகற ஒரு காட்சி இருக்கும்...அதுல குறிப்பா சார்லியோட முகபாவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...அது மாதிரி பதிவுகள்ல கைகுலுக்கி(கமெண்ட் போட்டு) பல நண்பர்கள் அறிமுகம் ஆனாங்க. நான் எழுத வந்த ஆரம்ப காலத்தில் எனக்கு பெருமளவு ஊக்கம் கொடுத்தது தேவ், இளா, நம்ம தங்கத்தலைவி கீதா மேடம், இன்னொரு கீதா மேடம், தளபதியார் சிபி, இலவசக்கொத்தனார், எஸ்கே(இப்போ விஎஸ்கே), சிவஞானம்ஜி ஐயா, நிலவுநண்பன், இயக்குனர் இமயம் ஜி.ரா, பாலராஜன் கீதா சார் இவங்கல்லாம். அதோட கமெண்டு மட்டுமில்லாம கூடுதல் தகவல்களைச் சேர்த்து பதிவுக்கு வளம் சேர்த்த பல பதிவர்களும் இருக்குறாங்க. மிகத்திறம்பட நற்றமிழில் எழுதும் பல பதிவர்கள் இருக்கும் இத்தளத்தில் எனக்கும் இந்தளவு ஆதரவு கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவைப் போட்டுட்டு அதுக்கு கமெண்ட் வராதான்னு F5 அழுத்தி அழுத்தி பாக்கறது...நாம அடுத்தவங்கப் பதிவுல போட்ட கமெண்டுக்குப் பதிலு வந்துருக்கான்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை எட்டிப் பார்த்துட்டே இருக்கறதுன்னு இல்லாத வேலை எல்லாம் பண்ணிருக்கேன். அப்போதெல்லாம் இந்தூரில் நானே தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். பதிவெழுதும் ஆர்வத்தில் சமைக்க மறந்து இரவு 11.30 மணிக்கு ஃப்ரூட்டி குடித்து தூங்கிய அனுபவமும் உண்டு. முதன் முதலில் 'நியூ படத்தில் பிடித்தது' என்ற என் பதிவு கில்லி பரிந்துரையிலும், தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளிலும் இடம்பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சி அளப்பிடற்கரியது. ஒரு பதிவுக்கு 4-5 கமெண்டு வந்துச்சுன்னா அன்னிக்கு சாப்பிட்ட சாப்பாட்டோட கூடுதலா இன்னொரு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி ஒரு நிறைவு வரும் :) அதுக்கப்புறம் 20-30ன்னு வந்துட்டிருந்த கமெண்டு இந்தப் பதிவுல:) முதன் முறையா 100ஐத் தாண்டுச்சு. நாம எழுதறதுக்குப் பின்னூட்டம் மூலமா கெடைக்கற ஃபீட்பேக் தரும் மகிழ்ச்சியும் போதையும் இருக்கே...அதை அனுபவிச்சாத் தான் புரியும். நகைச்சுவையா எழுதறேன்னு பல பேரும் சொல்லிருக்காங்க...மத்த விஷயங்களை விட என்னை முன்னிலை படுத்தி காமெடி பண்ணிக்கிறது எனக்கு சுலபமா வருதுன்னு நினைக்கிறேன். ஆனா நிஜ வாழ்க்கையில் நான் பயங்கர கடியன். எல்லா விஷயமும் பர்ஃபெக்டா ப்ளான் பண்ணி நடக்கனும்னு எதிர்பார்ப்பேன். பயங்கரமா அலைபாயற மனசு எனக்கு...ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துல மனசு அலைபாயும். ஒரு சாம்பிள் கேக்கறீங்களா? கேட்டுட்டு அடிக்க வரப்படாது இப்பவே சொல்லிட்டேன். என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டுல மஞ்சள் நிற சுடிதார் போட்டுக்கிட்டு ஷாலினி ஓடற மாதிரி ஒரு காட்சி வரும், அதைப் பாத்துட்டு இருக்கும் போது ஃப்ரேம்ல டாப் ரைட் கார்னர்ல தெரியற மஞ்சள் நிற பூவோட தாவரவியல் பேரு(Botanical name) "சீஸால்பினியா பல்செரிமா"(Caesalpinia pulcherrima) தானேன்னு திடீர்னு சந்தேகம் வந்துரும். அப்படியே +2ல படிச்ச ஃபைலம், ஜீனஸ் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்...அதுக்கப்புறம் காதலுக்கு மரியாதை செஞ்ச மாதிரி தான்:)

தமிழில் பெரிதாக வாசிப்பனுபவம் எதுவும் இல்லாத எனக்கு தமிழ் வலைப்பூக்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். வலைப்பூக்களுக்கே உரிய தனித்தமிழ் சொற்களாகட்டும்(பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது...), கதை/கவிதை/புகைப்படம் எனப் பல துறைகளிலும் மிளிரும் விற்பன்னர்களின் திறமையைக் கண்டு அவர்களைப் போலவே நாமும் பலவற்றையும் செய்ய வேண்டும் எனும் ஊக்கம் ஆகட்டும்..நான் கற்றதும் பெற்றதும் பல என்பதில் ஐயம் ஏதும் எனக்கில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிய முக்கியமான ஒரு புரிதல் எனக்கு வாய்த்திருக்கிறது. அது வலைப்பூ என்பது என் கருத்துகளை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம். எனக்கு பிடித்தமான கருத்துகளை எவ்வாறு அடுத்தவர்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறேனோ...அதே போல அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்க நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது. அதே போல உன் கருத்து முட்டாள்தனமானது என்று அடுத்தவரை பார்த்து இடித்துரைப்பதை விடுத்து சொல்ல வேண்டிய விதத்தில் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளும் திறமை அனைவரிடமும் இருக்கவே செய்கிறது என முதலில் நாம் நம்ப வேண்டும் என்ற ஒரு பக்குவம். ஜொள்ளுப்பாண்டி என்ற பெயரை வைத்துக் கொண்டு எழுதும் நம்ம பாண்டியின் பதிவுகளைப் பெண் பதிவர்களும் படித்து கமெண்ட் போடுகிறார்கள் என்பதிலேயே அதற்கு ஆதாரம் இருக்குதில்லையா? சுருக்கமாச் சொல்லனும்னா மொக்கை பதிவாகட்டும், இலக்கியமாகட்டும், நமக்கு ஆணித்தரமான நம்பிக்கை உள்ள ஒரு கருத்தாகட்டும், நம்முடைய கருத்தை ஒருத்தர் ஏத்துக்கறதாகட்டும், நாம சொல்ல வர்றதை சரியா புரிஞ்சிக்கறதாகட்டும் - எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)

109 comments:

  1. // ஒரு பதிவுக்கு 4-5 கமெண்டு வந்துச்சுன்னா அன்னிக்கு சாப்பிட்ட சாப்பாட்டோட கூடுதலா இன்னொரு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி ஒரு நிறைவு வரும் :) //

    இந்தப் பதிவுக்கும் நூற்றுக்கு மேல் கமெண்ட் கொடுத்துத் தொண்டர் படை கலக்குவாங்க என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

    நட்சத்திர வார வாழ்த்துகள். பலநாட்களாய்ப் போகாமல் இருந்த் தமிழ் மணத்துக்கு இன்னும் ஒரு வாரம் போயிக்கிறேன்.

    ReplyDelete
  2. முதல் வாழ்த்து என்னுடையதா இருக்கணும் சொல்லிட்டேன்!

    மீ த ஃபர்ஸ்ட்டேய்!

    வாழ்த்துக்கள் தலை!

    ReplyDelete
  3. கைப்புள்ள.....அவ்வ்வ்வ்வ்வ்வ்... வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. //ஃப்ரேம்ல டாப் ரைட் கார்னர்ல தெரியற மஞ்சள் நிற பூவோட தாவரவியல் பேரு(Botanical name) "சீஸால்பினியா பல்செரிமா"(Caesalpinia pulcherrima) தானேன்னு திடீர்னு சந்தேகம் வந்துரும். அப்படியே +2ல படிச்ச ஃபைலம், ஜீனஸ் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்...///

    முதலில் வாழ்த்துக்கள் தள!!!

    அப்புறம் எனக்கும் இதுபோல பல டவுட்டு வரும் ஹீரோயின் ஆடும் பொழுது அந்த வலது மூளையில் ஆடும் பிகரு ஹீரோயினைவிட அழகா இருக்கே அது ஏன் ஹீரோயின் ஆகல நாம அதை வைத்து படம் எடுக்கலாமா? கைப்புள்ளைக்கு ஜோடியாக்கலாமா என்று எல்லாம் தோனும் :)))

    ஆனால் நீங்க படிப்பு சம்மந்தமாக உங்களுக்கு தோன்றும் என்பதை சத்தியமாக எந்த டவுட்டும் இல்லாமல் நம்பிட்டேன்:))))

    ReplyDelete
  5. //இந்தப் பதிவுக்கும் நூற்றுக்கு மேல் கமெண்ட் கொடுத்துத் தொண்டர் படை கலக்குவாங்க என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

    நட்சத்திர வார வாழ்த்துகள். பலநாட்களாய்ப் போகாமல் இருந்த் தமிழ் மணத்துக்கு இன்னும் ஒரு வாரம் போயிக்கிறேன்.//

    மிக்க நன்றி மேடம். என்று தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. //தல வாழ்த்துக்கள்//

    நன்றி பாலாஜி

    ReplyDelete
  7. //முதல் வாழ்த்து என்னுடையதா இருக்கணும் சொல்லிட்டேன்!

    மீ த ஃபர்ஸ்ட்டேய்!

    வாழ்த்துக்கள் தலை!//

    மூனாவதா போயிடுச்சே? பரவால்லியா தள? வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  8. //கைப்புள்ள.....அவ்வ்வ்வ்வ்வ்வ்... வாழ்த்துக்கள் !//

    கோவி கண்ணன் சார்...பதில் அவ்வ்வ்வ்வ்...மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நட்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  10. ////ஃப்ரேம்ல டாப் ரைட் கார்னர்ல தெரியற மஞ்சள் நிற பூவோட தாவரவியல் பேரு(Botanical name) "சீஸால்பினியா பல்செரிமா"(Caesalpinia pulcherrima) தானேன்னு திடீர்னு சந்தேகம் வந்துரும். அப்படியே +2ல படிச்ச ஃபைலம், ஜீனஸ் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்...///

    முதலில் வாழ்த்துக்கள் தள!!!

    அப்புறம் எனக்கும் இதுபோல பல டவுட்டு வரும் ஹீரோயின் ஆடும் பொழுது அந்த வலது மூளையில் ஆடும் பிகரு ஹீரோயினைவிட அழகா இருக்கே அது ஏன் ஹீரோயின் ஆகல நாம அதை வைத்து படம் எடுக்கலாமா? கைப்புள்ளைக்கு ஜோடியாக்கலாமா என்று எல்லாம் தோனும் :)))//

    நான் அந்த தகுதியை எழந்துட்டேன் ராசா...ஐ ஆம் மேரீட்..இதெல்லாம் கேள்வி பட்டா பொண்டாட்டி சுளுக்கெடுத்துடுவாங்க :(

    //ஆனால் நீங்க படிப்பு சம்மந்தமாக உங்களுக்கு தோன்றும் என்பதை சத்தியமாக எந்த டவுட்டும் இல்லாமல் நம்பிட்டேன்:))))//

    நம்பற மாதிரி இல்ல சொல்லிருக்கேன். நானும் பின்னாடி ஆடற துணை நடிகை எல்லாம் நோட் பண்ணிருக்கேன்...ஆனா அண்ணன் நல்லவர் வல்லவர்ங்கிற தலைப்புக்கு தாவரவியல் பேரு பூ பேருன்னு பில்டப்பு கொடுத்தாத் தான் பொருத்தமா இருக்கும்.
    :)

    ReplyDelete
  11. வாருமைய்யா கைப்புள்ளெ. கலக்குங்க.

    நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  12. //நட்சத்திர வாழ்த்துகள்//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாசமலர்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் கைப்புள்ள!
    ஜமாயுங்கள்!

    ReplyDelete
  14. கைப்புள்ள,
    வாழ்த்துக்கள்.

    //பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது//

    இதெல்லாம் என்னங்க? நான் இப்பதான் ப்ளாக்கிங் ஆரம்பிச்சிருக்கேன்.

    ReplyDelete
  15. //மூனாவதா போயிடுச்சே? பரவால்லியா தள? //

    உமக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் தல!

    மூணாவதா வந்தா என்ன? முதல்ல வந்தது வேற யாரு?

    நம்ம நிரந்ததரத் தலைவலியும், காஞ்சித் தலைவன் கப்பியும்தான!

    அவங்க நம்ம கூட தாயா புள்ளையாப் பழகறவங்கதான! சோ நோ பிராப்ளம் தல!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் கைப்புள்ள.. கலக்குங்க..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் கைப்புள்ளை!

    ReplyDelete
  18. கும்மி அடிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொல்கிறேன்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் கைப்ஸ் அங்கிள்!

    ReplyDelete
  20. வாங்க வாங்க வந்து அசத்துங்க

    ReplyDelete
  21. வாத்துக்கள் தல!:-))

    ReplyDelete
  22. வாத்துக்கள் தல!:-))

    ReplyDelete
  23. "ழ்" வுட்டு போச்சுப்பா!

    ReplyDelete
  24. நான் ஒரு 4 கும்மு கும்மிக்கவா?

    ReplyDelete
  25. நட்சத்திர வாழ்த்துக்கள்....

    கைப்புள்ளை @ அழகப்பன்.....

    ReplyDelete
  26. இந்த வாரம் நான் இனி பதிவு போட மாட்டேன், யாவாரம் ஆகாதுல்ல அதனால:-))

    ReplyDelete
  27. ஆரம்பமே அமர்க்களம்.

    எடுத்தோமா, கவுத்தோமான்னு (கவனமா படி, 'கவுந்தோமா' -ன்னு எழுதல), சில விஷயங்கள ஆரம்பிச்சுடனும். முடியுமா, முடியாதா ன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தா அப்படியே இருக்க வேண்டியதுதான்.

    அடிச்சு தூள் கிளப்பு ..

    ReplyDelete
  28. வாழ்த்துகளுக்கு நன்றி துளசி அக்கா, சுப்பையா சார்.

    ReplyDelete
  29. //
    //பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது//

    இதெல்லாம் என்னங்க? நான் இப்பதான் ப்ளாக்கிங் ஆரம்பிச்சிருக்கேன்//

    உங்களை ஒரு வலைப்பதிவர் அப்படின்னு அடுத்தவங்க ஒத்துக்க உதவும் சொற்கள். அர்த்தம் எல்லாம் ஆராயாம அங்கங்க உங்க பதிவுகள்ல அள்ளித் தெளிங்க...எங்களுக்கு மட்டும் அர்த்தம் தெரியுமா என்ன?
    :)

    ReplyDelete
  30. வாழ்த்துகளுக்கு நன்றி உண்மைத் தமிழன் சார்.

    ReplyDelete
  31. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பேரரசன், திருமுருகன்.
    :)

    ReplyDelete
  32. அபி அப்பா,
    ழ் விட்டதுக்கே ரெண்டு கும்மு கும்மிட்டீங்க...அப்புறம் என்ன கேள்வி?

    யாருக்கு உங்களுக்கு யாவாரம் ஆவாதா? இதெல்லாம் ரொம்ப ஓவரு
    ஆமா
    :)

    ReplyDelete
  33. //உமக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் தல!

    மூணாவதா வந்தா என்ன? முதல்ல வந்தது வேற யாரு?

    நம்ம நிரந்ததரத் தலைவலியும், காஞ்சித் தலைவன் கப்பியும்தான!

    அவங்க நம்ம கூட தாயா புள்ளையாப் பழகறவங்கதான! சோ நோ பிராப்ளம் தல//

    தளயோட பெரிய மனசு ஆருக்கு வரும்? நன்னிங்கங்கோ. அது கப்பி இல்லை வெட்டி.
    :)

    ReplyDelete
  34. நயந்தாரா பிரேம்ஜி அனானி நண்பர்கள் எல்லாருக்கும் வந்தனம்
    :)

    ReplyDelete
  35. வாழ்த்துகள் கைப்ஸ்..

    இருந்தாலும் ஒரு போட்டோ பதிவு போட்டிரே.. சூரிய அஸ்தமனம்னு நினைக்கிறேன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத பதிவுய்யா... :)))))))))))))))

    //நூற்றுக்கு மேல் கமெண்ட் கொடுத்துத் தொண்டர் படை கலக்குவாங்க//

    அகில பிரபஞ்ச கட்சியான பமகவின் உதவி, கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு தேவைப்பட்டால் தெரிவிக்கவும். :)

    ReplyDelete
  36. நட்சத்திர வார வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் தல..

    எவ்வளவு அடிச்சாலும் நாங்க வலிக்காத மாஅதிரியே படிப்போம்ல. :-)

    ReplyDelete
  38. தல

    வாழ்த்துக்கள்....கலக்குங்க ;))

    ReplyDelete
  39. தல நட்சத்திர வாழ்த்துக்கள்....... எல்லாருக்கும் பண்ணமாதிரி சங்கத்திலே பெசலா எதாவது பண்ணலாமா??? ;)

    ReplyDelete
  40. நட்சத்திர வாழ்த்துக்கள்.. நல்ல தலைப்பு நல்ல அறிமுகம்..:))

    ReplyDelete
  41. வாழ்த்துகள் கைபுள்ள ! கலக்குங்க !

    ReplyDelete
  42. இந்த வாரம் மட்டும் என்ன?
    எந்த வாரமும் நட்சத்திரம்
    கைப்புள்ளதான்யா....
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. தல
    நட்சத்திர வாழ்த்துக்கள்!
    இனி நீங்க வெறும் தல இல்ல!
    நட்சத்திர தல!

    சங்கத்துல தல ஸ்பெசல் சீக்கிரம் போடங்கப்பு!

    //பதிவெழுதும் ஆர்வத்தில் சமைக்க மறந்து இரவு 11.30 மணிக்கு ஃப்ரூட்டி குடித்து தூங்கிய அனுபவமும் உண்டு//

    நல்லாத் தெரியுமா? அது ஃப்ரூட்டி தானா? :-))))
    நட்சத்திர வாரத்தில் உண்மையே பேசணும்ங்கிறது தமிழ்மண விதியாம்! மீறினா தமிழ்மணப் "பட்டை" அதைக் கரீட்டாக் கண்டு புடிச்சிருமாம்!
    தெரியும்-ல? :-)))

    ReplyDelete
  45. //ஆம்பளைங்க கிட்ட சொல்லோணும்னு முக்கியம் இல்லை...குறிப்பா நம்மூரு பொம்பளைங்க கிட்ட போய் சொல்லோனும்//

    நீ கவலைப்படாத தல! அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்! :-)

    ReplyDelete
  46. //மொக்கை பதிவாகட்டும், இலக்கியமாகட்டும், நமக்கு ஆணித்தரமான நம்பிக்கை உள்ள ஒரு கருத்தாகட்டும், நம்முடைய கருத்தை ஒருத்தர் ஏத்துக்கறதாகட்டும், நாம சொல்ல வர்றதை சரியா புரிஞ்சிக்கறதாகட்டும் -எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)//

    ஓம் ஷாந்தி ஓம்! :-)))))

    ReplyDelete
  47. வாழ்த்துகள் கைப்ஸ்.
    எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் கிடைக்கணும்.:))

    ReplyDelete
  48. ஏம்பா கைப்புள்ள, ஸ்பாட் லைட்டுக்கு கீழ வந்துட்ட போல...!! நல்லாயிருப்பா...

    பி.கு: இந்த வாரமாவது உடம்ப நல்லபடியா பாத்துக்க.

    ReplyDelete
  49. //இந்தப் பதிவுக்கும் நூற்றுக்கு மேல் கமெண்ட் கொடுத்துத் தொண்டர் படை கலக்குவாங்க என்று உத்தரவாதம் அளிக்கிறேன் //

    இது 50-வது கமெண்ட்.

    நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  50. ஆரம்பமே அமர்க்களம்.

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  51. ஆரம்பமே அமர்க்களம்.

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  52. வாய்யா வா,, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள் தல :)

    ReplyDelete
  54. நாந்தான் 50ஆவது பின்னூட்டமா? கரெக்ட்டா வந்துட்டோமில்ல.

    லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும். இன்னும் இந்த பதிவு, இதுக்கு அடுத்த பதிவு எல்லாம் படிக்கலை. படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  55. நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. //தல நட்சத்திர வாழ்த்துக்கள்....... எல்லாருக்கும் பண்ணமாதிரி சங்கத்திலே பெசலா எதாவது பண்ணலாமா??? ;)//

    இங்க என்ன பெர்மிசன் கேட்டுக்கிட்டு..சட்டுபுட்டுன்னு வேலைய ஆரம்பிங்க அண்ணாத்த :))

    ReplyDelete
  57. தல நீங்க நட்சத்திரமா...?? ஆஹா இந்தாங்க பிடிங்க என்னோட வாழ்த்தை... !!

    தல எல்லா பதிவுமே 12 கெஜம் புடவை சைஸ்ல ச்சும்மா கும்முன்னு இருக்கு... ஒரு short chudi சைஸ்ல 'சிக்' க்கு ஒன்னும் கொடுங்கப்பூ... ( பதிவு தான் தல..)

    :))))))

    ReplyDelete
  58. நல்லவரு வல்லவரு எல்லாம் சரிதான்... ஆனா என்ன, கல்யாணத்துக்கப்புறம் யாரையும் கண்டுக்கறதேயில்ல... அதான்...

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள்!!!!

    நான் வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களுடைய வ வா ச, அதிலுள்ள மற்றவர்களின் பதிவுகள் இதையெல்லாம் படித்து விட்டு தன்னாலே நிறைய நாட்கள் சிரித்திருக்கிறேன்.

    ReplyDelete
  60. அலோ, நீங்க தான் டாரா? ஐ மீன், ஸ்டாரா? சொல்றதில்ல?? வாழ்த்துக்கள் :-) என் முந்தைய பின்னூட்டத்தை இந்த வாரம் மட்டும் வாபஸ் வாங்கிக்கிறேன், ஏன்னா இந்த வாரம் ஸ்டாரானதுனாலயாவது ஒழுங்கா கண்டுக்குவீங்கல்ல.

    ReplyDelete
  61. வாங்க வாங்க வாங்க... உங்களது இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள். நட்சத்திரமே நட்சத்திரமே வாழ்க வாழ்க!

    ReplyDelete
  62. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஓம் ஷாந்தி ஓம்! :-))))) //

    யார் இந்த ஷாந்தி? கைப்புவின் நட்சத்திரப் பதிவில் இந்தப் பெயரை நீங்கள் சொல்லும் காரணம் என்ன? இடம் சுட்டிப் பொருள் விளக்குக. கோடிட்ட இடத்தை நிரப்புக. பொருத்துக.

    ReplyDelete
  63. வாழ்த்துகள் மோகனா. இரவிசங்கர் ஏன் மோகனா மோகனான்னு இசை இன்பத்துல புலம்புறாருன்னு இப்ப இல்லை புரியுது. :-)

    இடுகையை இனிமே தான் படிக்கணும். நட்சத்திரம்ன்னு படிச்சவுடனே வாழ்த்து சொல்லிட்டு தான் மறு வேலை பாக்கணும்ன்னு பின்னூட்டப் பொட்டிக்கு வந்துட்டேன். :-)

    ReplyDelete
  64. //ஆனா அண்ணன் நல்லவரு...வல்லவருன்னு போய் சொல்றதுக்குக் கோமுட்டித் தலையன் யாரும் இல்லாத பட்சத்துல//

    இப்படி சொல்லீட்டீங்களே அண்ணே !

    நான் சொல்லுறேன்.

    "அண்ணன் நல்லவரு... வல்லவரு. நாலு விஷயம் தெரிஞ்சவரு. இவரு நட்சத்திரம் ஆனதால அந்த தமிழ்மணத்துக்கே பெருமை."

    நட்சத்திர வாரம் களைகட்டட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. // நாம எழுதறதுக்குப் பின்னூட்டம் மூலமா கெடைக்கற ஃபீட்பேக் தரும் மகிழ்ச்சியும் போதையும் இருக்கே...அதை அனுபவிச்சாத் தான் புரியும்.//
    ஆமாமா, இது அடிக்டிவ்!

    //பயங்கரமா அலைபாயற மனசு எனக்கு...ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துல மனசு அலைபாயும். ஒரு சாம்பிள் கேக்கறீங்களா?//

    அப்படி இருக்கறது அனேகமா எல்லாருக்கும்தான் சாமி!

    //எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)//

    கோபி :-)

    ReplyDelete
  66. //பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது//

    இதெல்லாம் என்னங்க? ...//

    உங்களை ஒரு அப்படின்னு அடுத்தவங்க ஒத்துக்க உதவும் சொற்கள். அர்த்தம் எல்லாம் ஆராயாம அங்கங்க உங்க பதிவுகள்ல அள்ளித் தெளிங்க...எங்களுக்கு மட்டும் அர்த்தம் தெரியுமா என்ன?
    :)

    வலைப்பதிவர் அகராதி அப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன். அதுல அவங்கவங்க டிரேட் மார்க் எல்லாம் கூட பதிவு செய்யலாம்.

    ReplyDelete
  67. //இருந்தாலும் ஒரு போட்டோ பதிவு போட்டிரே.. சூரிய அஸ்தமனம்னு நினைக்கிறேன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத பதிவுய்யா... :)))))))))))))))//

    வாங்க மருந்து...மறக்கக் கூடியதா அந்தப் பதிவு? அதுல நீங்கப் போட்ட கமெண்ட் கூட ஞாபகம் இருக்கு :)

    //நூற்றுக்கு மேல் கமெண்ட் கொடுத்துத் தொண்டர் படை கலக்குவாங்க//

    அகில பிரபஞ்ச கட்சியான பமகவின் உதவி, கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு தேவைப்பட்டால் தெரிவிக்கவும். :)//

    இதெல்லாம் கேக்கணுமா? தங்கள் சித்தம் என் பாக்கியம்.

    ReplyDelete
  68. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ்பிரியன், மை ஃபிரெண்டு, கோபிநாத்.

    ReplyDelete
  69. //தல நட்சத்திர வாழ்த்துக்கள்....... எல்லாருக்கும் பண்ணமாதிரி சங்கத்திலே பெசலா எதாவது பண்ணலாமா??? ;)//

    என்னப்பா பண்ணப் போறீங்க? எனக்கு அலகு குத்தி காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்கப் போறீங்களா?

    ReplyDelete
  70. நன்றி முத்துலட்சுமி, சிவஞானம்ஜி, தருமி சார்.
    :)

    ReplyDelete
  71. //நல்லாத் தெரியுமா? அது ஃப்ரூட்டி தானா? :-))))
    நட்சத்திர வாரத்தில் உண்மையே பேசணும்ங்கிறது தமிழ்மண விதியாம்! மீறினா தமிழ்மணப் "பட்டை" அதைக் கரீட்டாக் கண்டு புடிச்சிருமாம்!
    தெரியும்-ல? :-)))//

    KRS,
    அது ஃப்ரூட்டி தான் சாமி ஃப்ரூட்டி தான்...ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வந்துச்சே "Daba ke piyo"னு வெளம்பரம் கூட பண்ணாங்களே அதே ஃப்ரூட்டி தான். இது நான் குடிச்ச அந்த ஃப்ரூட்டி மேல சத்தியம்
    :)

    ReplyDelete
  72. //நீ கவலைப்படாத தல! அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்! :-)//

    அது ஆல்-இன் - ஆல் அழகுராஜா சொன்னது. நான் சொன்னதில்ல.
    :)

    ReplyDelete
  73. //புரிஞ்சிக்கறதாகட்டும் -எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)//

    ஓம் ஷாந்தி ஓம்! :-)))))//

    இதுல எதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கே? அப்படி ஏதுமில்லையே இதுல???
    :)

    ReplyDelete
  74. //வாழ்த்துகள் கைப்ஸ்.
    எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் கிடைக்கணும்.:))//

    மிக்க நன்றி வல்லியம்மா
    :)

    ReplyDelete
  75. //ஏம்பா கைப்புள்ள, ஸ்பாட் லைட்டுக்கு கீழ வந்துட்ட போல...!! நல்லாயிருப்பா...

    பி.கு: இந்த வாரமாவது உடம்ப நல்லபடியா பாத்துக்க//

    ஹி...ஹி...நன்றி கருப்பன்.
    :)

    ReplyDelete
  76. //இது 50-வது கமெண்ட்.

    நட்சத்திர வாழ்த்து(க்)கள்//

    வாங்க சந்திரசேகர். இப்போ 78 ஓடிக்கிட்டிருக்கு. மிக்க நன்றி.
    :)

    ReplyDelete
  77. வாழ்த்துக்கள் கைபுள்ள....கலக்குங்க!

    ReplyDelete
  78. //ஆரம்பமே அமர்க்களம்.

    வாழ்த்துக்கள்!!!//

    வாழ்த்துகளுக்கு நன்றி சுதர்சன்.
    :)

    ReplyDelete
  79. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளா, கப்பி, கொத்ஸ்.

    ReplyDelete
  80. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சிவா, டாக்டர்.டெல்பின்.
    :)

    ReplyDelete
  81. //இங்க என்ன பெர்மிசன் கேட்டுக்கிட்டு..சட்டுபுட்டுன்னு வேலைய ஆரம்பிங்க அண்ணாத்த :))///

    ஏய் என்னப்பு...என்ன பண்ணப் போறீங்க? எதாருந்தாலும் சொல்லிட்டுச் செய்ங்கப்பூ
    :)

    ReplyDelete
  82. //தல நீங்க நட்சத்திரமா...?? ஆஹா இந்தாங்க பிடிங்க என்னோட வாழ்த்தை... !! //
    பிடிச்சிக்கிட்டேன்.
    :)

    //தல எல்லா பதிவுமே 12 கெஜம் புடவை சைஸ்ல ச்சும்மா கும்முன்னு இருக்கு... ஒரு short chudi சைஸ்ல 'சிக்' க்கு ஒன்னும் கொடுங்கப்பூ... ( பதிவு தான் தல..)

    :))))))//

    ஷார்ட் சுடி :))) எப்படிப்பா இப்படியெல்லாம் முடியுது உன்னால மட்டும்.
    :)

    ReplyDelete
  83. //நல்லவரு வல்லவரு எல்லாம் சரிதான்... ஆனா என்ன, கல்யாணத்துக்கப்புறம் யாரையும் கண்டுக்கறதேயில்ல... அதான்...//

    அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க மேடம்...போன வருஷம் வேலை காரன்சரியா ஒன்னும் எழுதலை...அதான். அதுக்கும் கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ReplyDelete
  84. //வாழ்த்துக்கள்!!!!

    நான் வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களுடைய வ வா ச, அதிலுள்ள மற்றவர்களின் பதிவுகள் இதையெல்லாம் படித்து விட்டு தன்னாலே நிறைய நாட்கள் சிரித்திருக்கிறேன்//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோகிலவாணி மேடம்.

    ReplyDelete
  85. //அலோ, நீங்க தான் டாரா? ஐ மீன், ஸ்டாரா? சொல்றதில்ல?? வாழ்த்துக்கள் :-) //
    அப்படின்னு தான் ஊருக்குள்ள பேசிக்கிறாய்ங்க. நன்றி.

    //என் முந்தைய பின்னூட்டத்தை இந்த வாரம் மட்டும் வாபஸ் வாங்கிக்கிறேன், ஏன்னா இந்த வாரம் ஸ்டாரானதுனாலயாவது ஒழுங்கா கண்டுக்குவீங்கல்ல//

    கண்டிப்பா..அதுல சந்தேகம் வேணாம்.
    :)

    ReplyDelete
  86. //வாங்க வாங்க வாங்க... உங்களது இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள். நட்சத்திரமே நட்சத்திரமே வாழ்க வாழ்க!//

    வாழ்த்துகளுக்கு நன்றி இயக்குநர் இமயமே!
    :)

    ReplyDelete
  87. //ஓம் ஷாந்தி ஓம்! :-))))) //

    யார் இந்த ஷாந்தி? கைப்புவின் நட்சத்திரப் பதிவில் இந்தப் பெயரை நீங்கள் சொல்லும் காரணம் என்ன? இடம் சுட்டிப் பொருள் விளக்குக. கோடிட்ட இடத்தை நிரப்புக. பொருத்துக//

    ஐயயோ! குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடாதீங்க சாமியோவ்..
    :)

    ReplyDelete
  88. //வாழ்த்துகள் மோகனா. இரவிசங்கர் ஏன் மோகனா மோகனான்னு இசை இன்பத்துல புலம்புறாருன்னு இப்ப இல்லை புரியுது. :-) //

    என்ன புரியுது?
    :)

    //இடுகையை இனிமே தான் படிக்கணும். நட்சத்திரம்ன்னு படிச்சவுடனே வாழ்த்து சொல்லிட்டு தான் மறு வேலை பாக்கணும்ன்னு பின்னூட்டப் பொட்டிக்கு வந்துட்டேன். :-)//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆன்மீகச் செம்மலே
    :)

    ReplyDelete
  89. 90 ஆயிடுச்சு. தங்கத் தலைவி கீதா மேடம் சொன்னது உண்மை ஆயிடும் போலிருக்கே.
    :)

    ReplyDelete
  90. //இப்படி சொல்லீட்டீங்களே அண்ணே !

    நான் சொல்லுறேன்.

    "அண்ணன் நல்லவரு... வல்லவரு. நாலு விஷயம் தெரிஞ்சவரு. இவரு நட்சத்திரம் ஆனதால அந்த தமிழ்மணத்துக்கே பெருமை."

    நட்சத்திர வாரம் களைகட்டட்டும்.

    வாழ்த்துக்கள்//

    அப்படியே ஆகட்டும்...மிக்க நன்றி அரை பிளேடு அண்த்தே
    :)

    ReplyDelete
  91. //ஆமாமா, இது அடிக்டிவ்!//
    ஆமாங்க உண்மை தான்
    :)

    //அப்படி இருக்கறது அனேகமா எல்லாருக்கும்தான் சாமி!//
    ஹி...ஹி...நான் கூட நான் தனியா இருக்கறதா நெனச்சி பயந்துட்டேன்...டேங்கீஸ்
    :)

    //எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)//

    கோபி :-)//

    யாருங்க கோபி??? எதுக்கு அவரைக் கூப்பிடறீங்க?

    ReplyDelete
  92. //இதெல்லாம் என்னங்க? ...//

    வலைப்பதிவு கலைச் சொற்கள்னு சொல்லலாம்.
    :)

    //வலைப்பதிவர் அகராதி அப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன். அதுல அவங்கவங்க டிரேட் மார்க் எல்லாம் கூட பதிவு செய்யலாம்.//
    முயற்சி பண்ணறேங்க.
    :)

    ReplyDelete
  93. //வாழ்த்துக்கள் கைபுள்ள....கலக்குங்க!//

    வாங்க ராதா மேடம்,
    மிக்க நன்றி.
    :)

    ReplyDelete
  94. ////எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)//

    கோபி :-)//

    யாருங்க கோபி??? எதுக்கு அவரைக் கூப்பிடறீங்க?//
    ஒன்னுமில்லைங்க. ரிப்பீட்டேய் னு எழுதறத்துக்கு பதிலா..

    ReplyDelete
  95. கைப்பு சீக்கிரம் பப்ளிஷ் பண்ணுங்க

    100

    ReplyDelete
  96. அண்ணன் நல்லவரு...வல்லவரு"
    99 Comments - Show Original Post

    இப்பிடியே எவ்வள்வு நேரம் நிக்குது!

    ReplyDelete
  97. அண்ணன் மங்களூர் சிவா புண்ணியத்துல 100 அடிச்சாச்சுங்கோ. டேங்கீஸ் அண்த்தே.

    தலைவி சொன்னதும் உண்மையாயிடுச்சு.
    :)

    ReplyDelete
  98. //அகில பிரபஞ்ச கட்சியான பமகவின் உதவி, கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு தேவைப்பட்டால் தெரிவிக்கவும். :)//
    எதுக்கு மருத்துவர் கட்சி ஆதரவெல்லாம்? நாங்க தனியே நின்னு ஜெயிப்போமுல்ல! :P

    ReplyDelete
  99. //யாருங்க கோபி??? எதுக்கு அவரைக் கூப்பிடறீங்க?//

    பயங்கரமான ஸ்லிப் ஆஃப் தி ஃபிங்கர் போல :)

    ReplyDelete
  100. //எதுக்கு மருத்துவர் கட்சி ஆதரவெல்லாம்? நாங்க தனியே நின்னு ஜெயிப்போமுல்ல! :P//

    தலைவியாரே! என் சிண்டு முடிஞ்சி விடறீங்க :)

    ReplyDelete
  101. நட்சத்திர வாழ்த்துகள் கைப்புள்ள! கைப்புள்ள இம்சை அரசனாகி, இந்திரலோகம் வரை வளர்ந்தாயிற்று. தாங்களும் அது போல வாழ்வில் பதவி உயர்வுகள் பெற்றிட வாழ்த்துகள் :-)

    ReplyDelete