Thursday, January 24, 2008

ஒரு அல்வா தேசத்து அந்நியனும் ஒரு ஞானக்குழந்தையும்

தமிழ் வலைப்பதிவுலகுல மொத்த பதிவுகளின் எண்ணிக்கை இருபத்தியோரு லட்சத்து ஐந்நூத்தி அறுபத்தியேழு. அதை எழுதுன மொத்த பதிவர்களின் எண்ணிக்கை எழுநூத்தி இருபத்தியஞ்சரை. இதுல ஆன்மீகப் பதிவர்கள் தொன்னூத்தி ரெண்டு பேர். அறிவியல் பதிவர்கள் நூத்தி நாப்பத்தியாறு பேர். நகைச்சுவை பதிவர்கள் முன்னூத்தி முப்பத்தி மூனரை பேர். சீறியஸ் பதிவர்கள் இருநூத்தி இருபத்தி ரெண்டு பேர் சீறாத பதிவர்கள் எண்பத்தி எட்டு பேர். அது போக 2007ல தமிழ் திரையுலகில்...சே...வலைப்பூவுலகில் வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை ஆறே முக்கால் லட்சத்து தொள்ளாயிரத்தி பதினாறு. அதுல நகைச்சுவை என்கிற வகையில் வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து முன்னூத்தி ஐம்பத்தி ஒன்னு...மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தோட பொது விஷயங்களையும் சமூக அக்கறையையும் தாங்கி வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தி எண்ணூத்தி இருபத்தி ரெண்டு. இது போக ஆன்மீகம் இருபத்திரெண்டாயிரத்தி அறுநூத்தி எண்பத்தி எட்டு, விளையாட்டு பதினேழு ஆயிரத்தி நானூத்தி நாப்பத்து நாலு, புகைப்படம் ஏழாயிரத்தி எழுநூத்தி ஏழு, மொக்கை நாலு லட்சத்து நூத்தி பதினொன்னு. ஒரு பதிவர் சராசரியா ஒரு வருஷத்துல சராசரியா எழுதற பதிவுகளின் எண்ணிக்கை எழுபத்தி ரெண்டு.

இப்படியெல்லாம் இருக்க போன வருஷத்து ஆவரேஜைக் கூட எட்டாத கூட்டல் கழித்தல் கணக்கு வழக்கு தெரியாம ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போடற என்னை போய் 2007ல எழுதுனதுல பிடிச்ச பதிவுகளைப் பத்தி ஒரு பதிவு எழுதச் சொல்லி ரெண்டு பேரு கொக்கி போட்டுருக்காங்க. எழுதுன பதினெட்டு பதிவுகள்ல முக்காவாசி படம் புடிச்சிப் போட்டு ஒப்பேத்துன பதிவு, மத்ததெல்லாம் என்னன்னு எனக்கே தெரியாது. இந்த அழகுல இது தான் எனக்கு புடிச்சதுன்னு நான் பதிவு போடறதும், அதைப் படிச்சிட்டு 'தூ'ன்னு டீசண்டா நீங்க துப்பிட்டுப் போறதும் வேணுமான்னு யோசிச்சேன். அதுனால என்னை எழுதுனதுல பிடிச்சதை எழுதச் சொன்ன அந்த ரெண்டு பேரைப் பத்தி எனக்கு தெரிஞ்சதை எல்லாம் எழுதி அவங்க புகழைப் பதினெட்டுப் பட்டியிலயும் பரப்பலாம்னு முடிவு ஜெஞ்ஜிட்டேன்.

முதல்ல, என்னை இந்த டேக்ல மாட்டிவிட்ட அல்வா தேசத்து அந்நியனைப் பத்திச் சொல்றேன். கிட்டத்தட்ட நான் தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச சமயத்துல தான் இவரும் எழுத ஆரம்பிச்சாரு. இவரைப் பத்திச் சுருக்கமாச் சொல்லனும்னா ஒரு multi-faceted பதிவர். திடீர்னு அம்பியா தங்கமணி ரங்கமணி கதை எல்லாம் எழுதிட்டு இருப்பாரு, திடீர்னு பாத்தா ராம்ப்வாக் ரெமோவா ஆகி அசிம் ப்ரேம்ஜி வீட்டு விருந்தாளியா இருக்கறப்போ பஞ்சாப் கோதுமைகளோடு அடிச்ச லூட்டிகளைப் பத்திச் சொல்லுவாரு, திடீர்னு பாத்தா அப்படியே அந்நியனா சேஞ்ச் ஆகி கும்பிபாதம்...சே...சே...எங்கள் தானைத் தலைவியோட 'வம்பிபாதம்' செஞ்சிட்டு இருப்பாரு. குடும்பஸ்தனா ஆனதுக்கப்புறமும், தங்கமணியும் ஒரு ப்ளாக்கரா இருக்கறதுக்கப்புறமும் "எல்லா கண்களும் எந்தன் மேலே" ஸ்ரேயாவைப் பாத்து பரவசமடைஞ்சதைப் பத்தி தைரியமா பதிவிடற ஒரு மாவீரரு. வெறும் கில்பான்சியாத் தான் எழுதுவாருன்னு எதிர்பாத்தா யூ ஆர் ராங்...சுந்தரகாண்டத்தைப் பத்தியும் அவருக்கு ரொம்பப் பிடிச்ச அனுமானைப் பத்தியும் கூட அக்மார்க் ஆன்மீகமாவும் எழுதுவாரு. போன வருஷத்துல இவர் எழுதுன "2007 ப்ளாக்கர் அவார்டுகள்", "ஓம் ஷாந்தி ஓம் விமர்சனம்", "விளம்பரங்கள்", "பெண் பார்க்கும் படலம்" எல்லாமே பட்டையைக் கெளப்பும்.

என்னைப் பத்தி "கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம்"ன்னு சொன்னதுனால இவரு ரொம்ப நல்லவரு. "இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)"ன்னு நான் மாவாட்ட கஷ்டப் படறதைப் பாத்து கருணை காட்டாம நக்கல் பண்ணதுனால கொஞ்சம் கொடியவர் :)

அடுத்ததா நம்மளை இந்த டேக்ல கொக்கி போட்டவரு ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவன். இவரைப் பத்தி என்னான்னு சொல்றது. இந்த சின்ன வயசிலேயே இம்புட்டு ஞானமான்னு டக்கு டக்குன்னு மலைக்க வைக்கும் ஒரு "ஞானக்குழந்தை". 2006 ஆம் வருஷம் செப்டம்பர் மாசத்தில் ஒரு நாள். கப்பி உருகுவே ஜனாதிபதியாவும் நான் சித்தூர்கட்ல சித்தாளாவும் வேலை பாத்துட்டு இருந்த சமயம். சூடான் புலியின் அறிமுகத்தால ரெண்டு பேரும் ஜிடாக்ல பேசிக்க ஆரம்பிச்சோம். அப்போ தான் கப்பியின் ஞானத்தின் பரிச்சயம் எனக்கு கிடைச்சது. இந்த ஜிடாக் உரையாடலைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன். நான் சொல்றது உங்களுக்கே புரியும்.

நான் : நேத்து எதோ நாத்திகம் அது இதுன்னு சொன்னியே...என்னப்பா மேட்டரு?

கப்பி : ஹி ஹி...அன்பே சிவம் :)

நான் : யாருமே நாத்திகன் கிடையாது. அதை தெரிஞ்சிக்கோ...கடவுள் இல்லைன்னு சொல்லலாம். ஆனா நம்பிக்கை இல்லைன்னு உன்னால சொல்ல முடியுமா?

கப்பி : நான் atheistனு சொல்றது விட agnosticனு சொல்லலாம். தமிழ்ல அதுக்கும் நாத்திகம் தானே?

நான் : Agnosticனா என்ன?

கப்பி : agnostic-னா கடவுள் இருப்பை அறியாமல் இருக்கிறேன்..அதனால் கடவுள் என்ற ஒன்னு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது.

நான் : மனுஷனை மீறுன பவர் ஒன்னு இருக்குன்னு நம்பறியா?

கப்பி : இருக்கலாம்..எனக்கு தெரியாது...ஆனா மனுசனுக்குள்ள இருக்க கடவுளைப் பாக்கனும்

நான் : இதெல்லாம் யார் கிட்ட கத்துக்கிட்டது?

கப்பி : எனக்கு கமல் சொல்லி குடுத்தது

நான் : அதே கமலுக்கு இளையராஜா சொன்னது தான் "நாத்திகர்னு யாருமே கிடையாது"ன்னு :)

கப்பி : கமலை சும்மா இழுத்துவிட்டேன்...எங்க பெரியப்பா பார்த்து கொஞ்சம் கத்துகிட்டது...
பத்தாங் க்ளாஸ் வரைக்கும் அம்மா கையை புடிச்சுகிட்டு தினம் கோயிலுக்கு போன பையன் தானே :))

நான் : மனுஷனுக்கு உதவனும்னு நினைக்கிற உன் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனா மனுஷனை மீறுன சக்தி ஒன்னு இருக்குப்பா. சாமியைக் கும்பிட்டுக்கிட்டும் மனுஷனுக்கு உதவலாம்ப்பா.

கப்பி : இயற்கை..இருக்கு...சூரியன்ல ஆரம்பிச்சு இயற்கை கடவுள்களா கும்பிட ஆரம்பிச்சது தான் இப்படி வந்து இருக்குன்னு என் சின்ன அபிப்ராயம்.

கப்பி : சாமியை கும்பிட்டு மனுசனுக்கு உதவலாம்தான்...சாமியைக் கும்பிடாமலும் பண்ணலாம்ல :)

"வேதம் புதிது படத்துல வர்ற சின்னப்பையன் சத்யராஜைப் பாத்து "நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறலையா"ன்னு கேக்கற மாதிரியே இருந்துச்சு :)"

நான் : உன் கருத்துக்கு நான் மதிப்பு குடுக்கறேன்.

கப்பி : நானும் சாமி கும்பிடறவங்களை தப்பா சொல்ல மாட்டேன்

நான் : சாமி கும்பிடறதும் கும்பிடாததும் உன்னோட தனிப்பட்ட விருப்பம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

கப்பி : எல்லாருக்கும் அவங்க நம்பிக்கை இருக்கு...சொல்லபோனா எங்கம்மா என்னை பைக்ல கோயிலுக்கு கூட்டிட்டு போன்னு சொன்னா நான் கூப்பிட்டு போகனும். அங்க போய் சாமி கும்பிடாம வெளிய நிக்கறது என் விருப்பம்..அதுக்காக அவங்களை கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்ல கூடாதுல்ல

நான் : சூப்பர்

நமக்கு பிடிப்புள்ள ஒரு விஷயத்தை மத்தவங்களும் ஏத்துக்கனும்னு நெனச்சி நாம சொல்லும் போது அதை சொல்றதுக்குன்னு ஒரு முறை இருக்குன்னு எனக்கு உணர்த்துனவரு. அதோட எழுத்தில் ஒரு பக்குவம், நிதானம் ஒரு ஒரு முதிர்ச்சி இதெல்லாம் இவரோட ஹால்மார்க். இவரோட கொசுவத்தி சுத்தல் பதிவுகள்ல அந்த ஞானம் மில்லிகிராம் அளவுகளில் அப்பப்போ வெளியே வந்தாலும், இவர் ஒரு ஞானப்பிழம்பு...ஞான ஊற்று...ஒரு ஞான நிறைக்குடம்...ஒரு...ஒரு...ஞானக் குழந்தைங்கிறதுல இருவேறு கருத்துகள் இருக்கவே முடியாது. நான் சொல்றதை அப்படியே ஒத்துக்கறவங்க எல்லாம் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கப்பா...சாரி ரெண்டு கையையும் தூக்குங்கப்பா.

கப்பிநிலவன் மட்டுமில்ல நாங்களும் ஞானக்குழந்தைகள் தான்னு சித்தெறும்பின் படைப்பின் ரகசியத்தைக் கண்டறிய முற்பட்ட தம்பியும், 'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்"னு மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவும் வேற வந்து சேந்துக்கிட்டாங்க.

பன்னிக்குட்டி ராமசாமி பாஷையில சொல்லனும்னா "வர வர இந்த ஞானக்குழந்தைகள் தொல்லை தாங்கலைடா" :))

34 comments:

  1. //பன்னிக்குட்டி ராமசாமி பாஷையில சொல்லனும்னா "வர வர இந்த ஞானக்குழந்தைகள் தொல்லை தாங்கலைடா" :))//

    இந்த ஞானக் குழந்தைகள் இடாப்பில் உம்ம பெயரையும் சேர்ப்பதில் பெருமையடைகிறேன்.

    ReplyDelete
  2. //இந்த ஞானக் குழந்தைகள் இடாப்பில் உம்ம பெயரையும் சேர்ப்பதில் பெருமையடைகிறேன்//

    ஏங்க?...ஏன்...ஏனிந்த கொலைவெறித் தாக்குதல்? ஏன்?

    ReplyDelete
  3. என்ன தல? நீங்க இதுவரைக்கும் எழுதினதுல உங்களுக்கு பிடிச்சது எது?னு தானே கேட்டேன். 2007ல எழுதினதையா(எங்க எழுத, மாவாட்டவே நேரம் சரியா இருக்கு, இல்லையா?) கேட்டேன். :p

    உங்க விளம்பரத்தை பாத்து எனக்கே கண்ணை கட்டுது!

    உங்க அன்புக்கு நான் அடிமை! என நான் இந்த தருணத்தில் பணிவோடு சொல்லிக்கறேன். :))

    ReplyDelete
  4. கைப்புள்ளெ,

    ஞானம் யார்யாருக்கு, எப்பப்ப எப்படிக் கிடைக்கணுமுன்னு இருக்கோ அவுங்கவுங்களுக்கு அப்பப்ப அப்படியப்படி கிடைக்கும்.

    உங்களுக்கு கப்பி மூலம் கிடைச்சது.

    அப்ப எங்களுக்கு?

    எல்லாம் உங்க இந்தப்பதிவின் மூலம்தான்:-))))

    ReplyDelete
  5. //இதுல ஆன்மீகப் பதிவர்கள் தொன்னூத்தி ரெண்டு பேர்//

    தல
    கணக்குல ஒன்னே ஒன்னு இடிக்குதே!
    தொன்னூத்தி மூனு ஆச்சே!
    உங்கள சேத்துக்க மறந்திட்டீயளோ? :-)

    ஞானக்குழந்தை கப்பி கிட்ட இம்புட்டு வாதாடி இருக்குங்க! நீங்க லிஸ்ட்டுல இல்லாமலா? சேச்சே! :-)

    ReplyDelete
  6. //என்ன தல? நீங்க இதுவரைக்கும் எழுதினதுல உங்களுக்கு பிடிச்சது எது?னு தானே கேட்டேன். 2007ல எழுதினதையா(எங்க எழுத, மாவாட்டவே நேரம் சரியா இருக்கு, இல்லையா?) கேட்டேன். :p///

    ஹி...ஹி...யார் எழுதுனதுங்கிறதுல ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு.

    //உங்க விளம்பரத்தை பாத்து எனக்கே கண்ணை கட்டுது!

    உங்க அன்புக்கு நான் அடிமை! என நான் இந்த தருணத்தில் பணிவோடு சொல்லிக்கறேன். :))//

    அடியேன் பாக்கியம்.
    :)

    ReplyDelete
  7. //ஞானம் யார்யாருக்கு, எப்பப்ப எப்படிக் கிடைக்கணுமுன்னு இருக்கோ அவுங்கவுங்களுக்கு அப்பப்ப அப்படியப்படி கிடைக்கும்//

    ஆஹா...ஞான அக்காவின் ஞான வாக்கு
    :)

    //உங்களுக்கு கப்பி மூலம் கிடைச்சது.

    அப்ப எங்களுக்கு?

    எல்லாம் உங்க இந்தப்பதிவின் மூலம்தான்:-))))//

    உங்க உள்ளக்கிடக்கை எனக்கு புரியாமலில்லை. இதுக்கெல்லாம் காரணமாயிருந்த அந்த ஞானக்குழந்தை ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவருக்குப் "பதிவுலகத் திருஞானசம்பந்தர்"னு அடைமொழி கொடுத்து கௌரவிக்கனும்னு ஆசைப்படறீங்க. அதானே? நீங்க ஆசைப்பட்டு கேக்கும் போது நாங்கல்லாம் வேணாம்னா சொல்லப் போறோம்?
    :)

    ReplyDelete
  8. //தல
    கணக்குல ஒன்னே ஒன்னு இடிக்குதே!
    தொன்னூத்தி மூனு ஆச்சே!
    உங்கள சேத்துக்க மறந்திட்டீயளோ? :-)

    ஞானக்குழந்தை கப்பி கிட்ட இம்புட்டு வாதாடி இருக்குங்க! நீங்க லிஸ்ட்டுல இல்லாமலா? சேச்சே! :-)//

    ஐயயோ! வேணாம் பாஸ். என்னை அந்த லிஸ்டுல சேக்காதீங்க. ஆன்மீகப் பதிவர்களைத் தான் நரகத்துல எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுப்பீங்க. அது வேற ரொம்ப எரியும். நரகத்துல பர்னால் வேற கெடைக்குமோ என்னவோ?

    ReplyDelete
  9. தல!
    கப்பி அளவு ஞானமெல்லாம் எனக்கு கிடையாது தல! பேப்பர்ல எழுதி குடுத்தா கூட என்னால அவுரு மாதிரி பேச முடியாது.

    ReplyDelete
  10. //கப்பி : நான் atheistனு சொல்றது விட agnosticனு சொல்லலாம். தமிழ்ல அதுக்கும் நாத்திகம் தானே?//

    குழந்தாய் கப்பி...
    Theist = ஆத்திகர்
    Athiest = நாத்திகர்
    சர் தான்...ஆனா
    Agnostic = "கைப்பு"கர் என்பதை நீ மறக்கலாமா? :-) அதாச்சும் எது கேட்டாலும் ஆமான்னும் சொல்ல மாட்டாங்க, இல்லைன்னும் சொல்ல மாட்டாங்க!

    சரி சரி...விசயத்துக்கு வருவோம்.
    agnosticக்கு தமிழ்ப் பேரு நாத்திகம் இல்லை! அதுக்கு "உலகாயுதம்"-னு பேரு!

    இருக்குன்னும் சரியாத் தெரியாது, இல்லைன்னும் சரியாத் தெரியாது! அதுனால அதப் பத்தி நாங்க கவலைப் படறதில்லைன்னு சொல்லுறவங்க!

    உலகத்துல 99% எல்லாருமே உலகாயுதர் (agnostic) தான்! எவனுமே பரிபூர்ணமா நம்புறதில்லை! :-) இதுக்கு ஒரு பாட்டு வேற கீதே! ஆங்...

    உளன் எனில் உளன் - அவன் உருவும் இவ் உருவுகள்
    உளன் அலன் எனில் - அவன் அருவும் இவ் உருவுகள்

    உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
    உளன் இரு தகைமையொடும் ஒழிவிலன் பரந்தே!

    இன்னாது...பாட்டுக்கு மீனிங்கா? வர வர நாட்டுல ஞானக் கொழந்தைங்க தொல்ல தாங்க முடியலைடா சாமீ! :-)

    ReplyDelete
  11. //தல!
    கப்பி அளவு ஞானமெல்லாம் எனக்கு கிடையாது தல! பேப்பர்ல எழுதி குடுத்தா கூட என்னால அவுரு மாதிரி பேச முடியாது//

    இந்த மாதிரி அடக்கமா பேசறதும் நீ ஞானக்குழந்தைங்கிறதுக்கு ஒரு சிம்ப்டம் தான். கவலைப்படாதே...உலகம் உன்னையும் ஒரு ஞானக்குழந்தையாகவே வருங்காலத்தில் அறியும்.

    ReplyDelete
  12. //Agnostic = "கைப்பு"கர் என்பதை நீ மறக்கலாமா? :-)//

    அப்பா...நான் agnostic இல்லை...திஸ் கமெண்டு பாஸ்டு டு கப்பின்னு கமெண்ட் போட வந்தா ஏன் தலையை உருட்டிருக்கீயளே? ஏன்? ஏன்? ஏன்?
    :(

    ReplyDelete
  13. //இதுக்கு ஒரு பாட்டு வேற கீதே!//

    அதானே! என்னடா நம்ம KRS அண்ணன் சும்மா இருக்காரேனு பாத்தேன். :p

    இதை பத்தி நம்மாழ்வார், பெரியாழ்வார் எல்லாம் ஏதாவது சொல்லி இருப்பாங்களே? கொஞ்சம் எடுத்து விடுங்க. :))

    கண்டவர் வின்டிலர், வின்டவர் கண்டிலர்!னு சொல்லலாமா?

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கேங்கோ அலைகிறாய் - ஞானதங்கமே!
    (படம் பேர் நினைவில் இல்லை.)

    ReplyDelete
  14. //ஹி...ஹி...யார் எழுதுனதுங்கிறதுல ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு.
    //

    வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ன சரி தானே? :p

    ReplyDelete
  15. தல

    அந்த ஞானக் குழந்தைகளை அடையாளம் காட்டிய ஞான தலைவருக்கு வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  16. "ஒரு அல்வா தேசத்து அந்நியனா?, அம்பி கேசரி தேசத்து அன்னியன் இல்லையோ?....

    ReplyDelete
  17. தலஆஆஆஆஆஆஆஅ

    நேத்து நீங்க சொன்னப்ப இவ்ளோ டேமேஜ் இருக்கும்னு எதிர்பார்க்கல :))) டேக் எழுத கூப்பிட்டது தப்புதான்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்..மாப்பு கேட்டுகறேன் :))

    நாம எவ்வளவோ கில்பான்ஸ் மேட்டர்லாம் பேசியிருக்கோம்...அதையெல்லாம் சொல்லாம, அண்ணி பதிவு பக்கம் வருவாங்கன்னு, இப்படி கொஞ்சம் சீரியஸ் டாபிக் ஓட்டியிருக்கீங்க :))))

    ஞானக்குழந்தை ஞானக்குழந்தைன்னு ஆப்படிக்கறதுக்கு என்னை கூப்பிட்டு நாலு அடி அடிச்சிருக்கலாம்..ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு ரொம்ம்ம்ப நல்லவரு தல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :D

    ReplyDelete
  18. //இந்த ஞானக் குழந்தைகள் இடாப்பில் உம்ம பெயரையும் சேர்ப்பதில் பெருமையடைகிறேன்.//

    கொத்ஸ்..அந்த இடாப்புல டாப்புல தல பேர் தான் ஏற்கனவே இருக்கு!!

    ReplyDelete
  19. //உங்க விளம்பரத்தை பாத்து எனக்கே கண்ணை கட்டுது! //

    எனக்கு மயக்கமே வருதுபா...ம்ம்ம்ம்முடியல!!!

    ReplyDelete
  20. கேஆரெஸ் தல

    //அதுக்கு "உலகாயுதம்"-னு பேரு! //

    ஓ!! நன்னி!

    ReplyDelete
  21. //சரி சரி...விசயத்துக்கு வருவோம்.
    agnosticக்கு தமிழ்ப் பேரு நாத்திகம் இல்லை! அதுக்கு "உலகாயுதம்"-னு பேரு! //

    ஏப்பு கே.ஆர்.எஸ், அதென்ன உலகாயுதம், வேலாயுதம், அணுஆயுதமுன்னு என்னமோ சொல்லுறீக?...

    உலகாயுதமா?, இல்ல உலகாயதமா?... கொஞ்சம் விளக்கறது?

    ReplyDelete
  22. தல,
    நீங்க சொன்ன மாதிரி கப்பி ஞானக்குழந்தைனு இப்ப ஊருக்கே தெரிஞ்சி போச்சி...

    ReplyDelete
  23. //வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ன சரி தானே? :p//

    என் செல்லம்...ஒரு ரங்கமணியோட மனசு இன்னொரு ரங்கமணிக்குத் தான் புரியும்னு அவ்வையார் தெரியாமலா சொல்லிருக்காங்க?
    :)

    ReplyDelete
  24. //அந்த ஞானக் குழந்தைகளை அடையாளம் காட்டிய ஞான தலைவருக்கு வாழ்த்துக்கள் ;))//

    வாங்க பில்லாவோட பாஸ்,
    என்னங்க நீங்க? ஞானக்குழந்தைகளோட என்னை கம்பேர் பண்ணிட்டீங்க? சாமி குத்தமாயிட போகுது? நான் ஒரு சாதாரணமான மனுஷங்கங்கோ.
    :)

    ReplyDelete
  25. //"ஒரு அல்வா தேசத்து அந்நியனா?, அம்பி கேசரி தேசத்து அன்னியன் இல்லையோ?....//

    அல்வா - பொறந்த வீடு
    கேசரி - புகுந்த வீடு

    இப்ப புரியுதுங்களா?
    :)

    ReplyDelete
  26. //தலஆஆஆஆஆஆஆஅ

    நேத்து நீங்க சொன்னப்ப இவ்ளோ டேமேஜ் இருக்கும்னு எதிர்பார்க்கல :))) டேக் எழுத கூப்பிட்டது தப்புதான்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்..மாப்பு கேட்டுகறேன் :))//

    அது...

    //நாம எவ்வளவோ கில்பான்ஸ் மேட்டர்லாம் பேசியிருக்கோம்...அதையெல்லாம் சொல்லாம, அண்ணி பதிவு பக்கம் வருவாங்கன்னு, இப்படி கொஞ்சம் சீரியஸ் டாபிக் ஓட்டியிருக்கீங்க :))))//

    மக்கள் உன்னோட ஞானத்தைத் தெரிஞ்சிக்கனுமில்லியாப்பா? அதுக்குத் தான் இந்த மாதிரி பண்ண வேண்டியதாப் போச்சு.

    //ஞானக்குழந்தை ஞானக்குழந்தைன்னு ஆப்படிக்கறதுக்கு என்னை கூப்பிட்டு நாலு அடி அடிச்சிருக்கலாம்..//

    அப்படிலாம் சொல்லிப்பிடாது...தப்ப்பூ

    //ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு ரொம்ம்ம்ப நல்லவரு தல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :D//

    ஒரு பதில் அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. //உலகாயுதமா?, இல்ல உலகாயதமா?... கொஞ்சம் விளக்கறது?//

    கமான் தல கேஆர்எஸ் :)

    ReplyDelete
  28. //தல,
    நீங்க சொன்ன மாதிரி கப்பி ஞானக்குழந்தைனு இப்ப ஊருக்கே தெரிஞ்சி போச்சி...//

    எல்லாம் 'அவனோட' லீலை...கப்பி ஞானத்தை மக்கள் புரிஞ்சுக்க நான் காரணமான்னு இருந்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு
    :)

    ReplyDelete
  29. //நாம எவ்வளவோ கில்பான்ஸ் மேட்டர்லாம் பேசியிருக்கோம்...அதையெல்லாம் சொல்லாம, அண்ணி பதிவு பக்கம் வருவாங்கன்னு, இப்படி கொஞ்சம் சீரியஸ் டாபிக் ஓட்டியிருக்கீங்க :))))//

    ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  30. என் செல்லம்...ஒரு ரங்கமணியோட மனசு இன்னொரு ரங்கமணிக்குத் தான் புரியும்னு அவ்வையார் தெரியாமலா சொல்லிருக்காங்க?
    :)

    நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்களே? :P

    ReplyDelete
  31. //மொக்கை நாலு லட்சத்து நூத்தி பதினொன்னு//

    கட்சி கொஞ்சம் வீக் பொசிசன்ல தான் இருக்கு போல. எலே மொக்கைசாமிகளா.. வாங்க.. வந்து கட்சிய கொஞ்சம் பலபடுத்துங்க. கைபுள்ளன்னே.. என்னண்ணே இப்படி புள்ளி விவர புலியா ஆய்ட்டிங்க. :)

    அண்ணே.. நம்ம வீட்டு கிரண்டர் சவுக்கியமாண்ணே. :P

    இந்த மாத புகைப் பட போட்டிக்கு உங்களுக்கு புடிச்ச குழிபணியார பாத்திரமும், நான்ஸ்டிக் தவாவும் போட போறிங்களா? :P

    ReplyDelete
  32. //நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்களே? :P//

    எல்லாம் தலைவியோட ஆசிர்வாதம் தான் :)

    ReplyDelete
  33. //கட்சி கொஞ்சம் வீக் பொசிசன்ல தான் இருக்கு போல. எலே மொக்கைசாமிகளா.. வாங்க.. வந்து கட்சிய கொஞ்சம் பலபடுத்துங்க. கைபுள்ளன்னே.. என்னண்ணே இப்படி புள்ளி விவர புலியா ஆய்ட்டிங்க. :)//

    எல்லாம் நம்ம கேப்டன் சொல்லிக்குடுத்தது தான் :)

    //அண்ணே.. நம்ம வீட்டு கிரண்டர் சவுக்கியமாண்ணே. :P//

    நல்ல சவுக்கியம்

    //இந்த மாத புகைப் பட போட்டிக்கு உங்களுக்கு புடிச்ச குழிபணியார பாத்திரமும், நான்ஸ்டிக் தவாவும் போட போறிங்களா? :P//
    உண்மையிலேயே நல்ல ஐடியாவா இருக்கு...என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.
    :)

    ReplyDelete
  34. //உண்மையிலேயே நல்ல ஐடியாவா இருக்கு...என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.
    :)//

    :-))

    ReplyDelete