Saturday, July 22, 2006

செம்பருத்தி விநாயகர்

புதுசா வாங்கின டிஜிட்டல் கேமராவுக்குப் பளாக்ல செம்பருத்தி விநாயகரோட பிள்ளையார் சுழி போடறேன். இங்கே க்ளையண்ட் ஆபீசுல வச்சிருக்கிற விநாயகர் சிலைக்கு தினமும் ஒரு பூ அலங்காரம் நடக்கும். இன்னிக்கு செம்பருத்தி பூவுக்கு சான்ஸ்.

டிஜிட்டல் கேமரா வாங்க ஆலோசனைகளை வழங்கிய நாகை சிவா, பேராசிரியர் கார்த்திக், ஜனா, ஐயப்பன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் வாங்குன கேமரா Canon Ixus750. இது வரைக்கும் எடுத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.


கெஸ்ட அவுஸ் வெளியில தன்னுடைய வேலையைப் பாத்துட்டு இருக்குற குருவி. (சிட்டுக் குருவி இல்லப்பா!). இதோட பேரு என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.


மரத்து மேல அனகோண்டா. ஆனா எங்களை எல்லாம் ஒன்னும் செய்யாதில்ல...ஹ...ஹ...ஹஹ்ஹ


ஒரு மழை நாள் இரவில் சுவற்றில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் அட்டை. ஈரத்தின் மீது ஊர்ந்து செல்வதினால் அது வாலுக்குப் பின்னாடி பாருங்க ஈரமும் ஊறு(ர்)கிறது.

இந்த படங்களை பதிவிறக்கம் செஞ்சு Photo Editor இல்ல வேற எதாச்சும் image editing softwareஇல் ஜூம் செஞ்சு பாத்தீங்கன்னா இன்னும் பெருசாத் தெளிவாத் தெரியும்.
மேலே இருக்குற குருவியை மட்டும் ஜூம் செஞ்சு கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன் பாருங்க.

கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன்னு எழுதிட்டு படத்தை ஏத்த முயற்சி பண்ணறேன்...ஏறவே மாட்டேங்குது. இந்த மாதிரி கப்பித் தனமா எதாச்சும் பண்ணிட்டு அசடு வழியறதுக்காகவே வெள்ளைக்காரன் சூப்பரா ஒரு வார்த்தை கண்டுபுடிச்சி வச்சிருக்குறான்...Oops!!!


ஊப்ஸுக்குக் காரணமா இருந்த அந்த குருவி படம் தான் மேலே நீங்க பாக்குறது. இதோட பேரு என்னன்னு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.

நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
யாராச்சும் விஷயம் தெரிஞ்சவங்க உதவி செஞ்சா நல்லாருக்கும்.

92 comments:

  1. படங்கள் எல்லாம் சூப்பருங்க, Mr. கைப்.

    இப்பவே அலம்பல் தாங்க முடியல, கேமரா வேற வாங்கியாச்சா சொல்லவே வேணாம்.

    \\ஈரத்தின் மீது ஊர்ந்து செல்வதினால் அது வாலுக்குப் பின்னாடி பாருங்க ஈரமும் ஊறு(ர்)கிறது\\. கேமரா வாங்கினா கவிஜ வேற ஆரம்பிச்சுருச்சு போல இருக்கே. கொத்ஸ், குடுத்த ட்யூஷந்தான் காரணமா?

    ReplyDelete
  2. டிஜிட்டல் காமிரா வாங்கிட்டீங்க!
    ட்ரீட் எப்பங்க?

    அதே மாதிரி ஸ்டைலா போஸ் குடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்து போடுங்க!

    ReplyDelete
  3. //படங்கள் எல்லாம் சூப்பருங்க, Mr. கைப்.//
    டாங்ஸ் உழவரே.

    //இப்பவே அலம்பல் தாங்க முடியல, கேமரா வேற வாங்கியாச்சா சொல்லவே வேணாம்.//

    சாமி! இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராப் படலை. நானே ஆளு அட்ரெஸ் இல்லாம இருந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் வரேன்...சங்கத்து ஆளா இருந்துக்குன்னு இப்படி பழி போடறீங்களே?
    :)

    //கேமரா வாங்கினா கவிஜ வேற ஆரம்பிச்சுருச்சு போல இருக்கே. கொத்ஸ், குடுத்த ட்யூஷந்தான் காரணமா?//
    எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்.

    ReplyDelete
  4. //டிஜிட்டல் காமிரா வாங்கிட்டீங்க!
    ட்ரீட் எப்பங்க?//
    குடுத்துருவோம்.

    //அதே மாதிரி ஸ்டைலா போஸ் குடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்து போடுங்க! //
    சங்கத்து சிங்கங்களோட சித்தூர்கட்ல ஒரு குரூப் போட்டோ எடுத்து போட்டுருவோமா?
    :)

    ReplyDelete
  5. ஆஹா..

    டிஜிட்டல் ஒளிப்பதிவிலதான் எவ்வளவு சுகம்.

    எடுத்தோமோ, கனிணிக்கு மாத்துனோமான்னு..

    இனிமே எல்லா பதிவிலுமே புகைப்படம் இருக்குமே..

    ஜமாய்ங்க!

    ReplyDelete
  6. கைப்ஸ்,

    இதெல்லாஞ் சரி...

    முன்னாடி இருக்கற ஆளு தெளிவாகவும் பின்னாடி இருக்கறவுக மங்கலாவும் இருக்கற உம்ம டெக்னாலஜிய யூஸ் பண்ணி ஒரு போட்டா போடுமையா...

    ReplyDelete
  7. கைப்பு!

    எல்லா படமும் சூப்பரு.

    //முன்னாடி இருக்கற ஆளு தெளிவாகவும் பின்னாடி இருக்கறவுக மங்கலாவும் இருக்கற உம்ம டெக்னாலஜிய யூஸ் பண்ணி ஒரு போட்டா போடுமையா... //

    சுருக்கமா "அவுட் ஒப் போகஸ்" படம்னு தெளிவா சொல்லுங்க இளவஞ்சி:-)

    ReplyDelete
  8. கைப்பு,
    படம்மெல்லாம் அட்டகாசமாக இருக்கு...
    சிட்டுக்குருவி சிவாவை பழிவாங்க நீங்கள் ஒரு படம் போட்டுவிட்டீர்கள் என நினக்கிறேன் :)))

    ReplyDelete
  9. //டிஜிட்டல் ஒளிப்பதிவிலதான் எவ்வளவு சுகம்.

    எடுத்தோமோ, கனிணிக்கு மாத்துனோமான்னு..//

    ஆமாங்க. பிலிம் கேமராவுக்கும் டிஜிட்டலுக்கும் இந்த விசயத்துல நெறைய வித்தியாசம். படம் எடுத்ததும் அதப் பாத்துட்டு வேண்டாம்னா அழிச்சிரலாம். படத்தைப் பிரிண்ட் போட்டு ஸ்கேன் பண்ணற தொல்லையுமில்ல.

    //இனிமே எல்லா பதிவிலுமே புகைப்படம் இருக்குமே..//
    ஹி...ஹி...டிஜிட்டல் கேமரா வாங்குனதே அதுக்கு தானே?
    :)

    ReplyDelete
  10. //முன்னாடி இருக்கற ஆளு தெளிவாகவும் பின்னாடி இருக்கறவுக மங்கலாவும் இருக்கற உம்ம டெக்னாலஜிய யூஸ் பண்ணி ஒரு போட்டா போடுமையா... //
    அதெல்லாம் எங்க தல வழக்கம் போல முன்னாடி இருக்கிற ஆளு மங்கலாவும் பின்னாடி இருக்கிற ஆள் தெளிவாவும் இருக்கிற மாதிரி அடுத்த வாரம் படம் போடுவாரு பாருங்க. சரிங்களா கைப்புள்ள?

    ReplyDelete
  11. //முன்னாடி இருக்கற ஆளு தெளிவாகவும் பின்னாடி இருக்கறவுக மங்கலாவும் இருக்கற உம்ம டெக்னாலஜிய யூஸ் பண்ணி ஒரு போட்டா போடுமையா...//

    வாங்க வாத்தியாரே!
    இந்த மாதிரி படம் எடுக்க கொஞ்சம் கிட்னி வேணும்னு கேள்வி பட்டுருக்கேன். முயற்சி பண்ணி முடிஞ்சா சீக்கிரமே போட்டுடறேன்.

    ReplyDelete
  12. //கைப்பு!

    எல்லா படமும் சூப்பரு//
    எடுத்த பொழுதின் பெரிதுவக்கும் தன் போட்டோவை சூப்பரு எனக் கேட்ட ஃபோட்டாகாரர்.
    :)

    //சுருக்கமா "அவுட் ஒப் போகஸ்" படம்னு தெளிவா சொல்லுங்க இளவஞ்சி:-)//
    அதே அதே...கொஞ்சம் கிட்னியைத் தீட்டிட்டு இருக்குறேன். பாப்போம்.

    ReplyDelete
  13. //கைப்பு,
    படம்மெல்லாம் அட்டகாசமாக இருக்கு...//
    வாங்க கண்ணன்! ரொம்ப நன்றிங்க.

    //சிட்டுக்குருவி சிவாவை பழிவாங்க நீங்கள் ஒரு படம் போட்டுவிட்டீர்கள் என நினக்கிறேன் :))) //
    ஹி...ஹி...நோ கமெண்ட்ஸ்
    :))

    ReplyDelete
  14. //அதெல்லாம் எங்க தல வழக்கம் போல முன்னாடி இருக்கிற ஆளு மங்கலாவும் பின்னாடி இருக்கிற ஆள் தெளிவாவும் இருக்கிற மாதிரி அடுத்த வாரம் படம் போடுவாரு பாருங்க. சரிங்களா கைப்புள்ள?//

    ஹையோ...ஹையோ! எள்ளுன்னா எண்ணையா நிக்குறாங்களே நம்ம சங்கத்து செல்லங்க எல்லாம்?

    இம்புட்டுத் தெளிவாப் பேசறீங்களே வெவசாயி? உமக்கு நெட்டி முறிச்சு சுத்திப் போடணும் போல இருக்கு.
    :)

    ReplyDelete
  15. //எடுத்த பொழுதின் பெரிதுவக்கும் தன் போட்டோவை சூப்பரு எனக் கேட்ட ஃபோட்டாகாரர்.//

    கவிஜ எழுத பழகிகொண்ட எங்க உலக மகா உதார் கைப்பு இனிமே வெண்பொங்கல் சே வெண்பா பாடுவாரு என தெரிவித்து கொள்(ல்)கிறோம்

    ReplyDelete
  16. ////எடுத்த பொழுதின் பெரிதுவக்கும் தன் போட்டோவை சூப்பரு எனக் கேட்ட ஃபோட்டாகாரர்.//

    கவிஜ எழுத பழகிகொண்ட எங்க உலக மகா உதார் கைப்பு இனிமே வெண்பொங்கல் சே வெண்பா பாடுவாரு என தெரிவித்து கொள்(ல்)கிறோம்//

    அதென்ன நீங்க சொல்றது...மேலே நாங்க கஷ்டப்பட்டு எழுதியிருக்குறதே ஒரு குறள் வெண்பா தாண்ணே! இது கூடத் தெரியாம...போங்கண்ணே!

    ReplyDelete
  17. நன்மனம், இளா,

    ஆறு பதிவுல கைப்ஸ் வாங்க ஆசைப்பட்ட காமெரா..

    "அப்படீங்கறே? செஞ்சிடறேன். ஆனா எனக்கு இந்த முன்னாடி நிக்குற ஆளு செமத் தெளிவாவும் ஒரு பத்து அடி பின்னால நிக்கிற ஆளு கலங்கலா out of focusல படம் எடுக்கக் கூடிய கேமரா வாங்கனும்னு ஆசை. "

    அதான் இப்ப வாங்கிட்டாரேன்னு அந்த டெக்குனாலஜிய தலைக்கு ஞாபகப்படுத்தினா, நீங்க தலையே out of focus னு உள்குத்து வைக்கறீங்களே!நியாயமா? :)))

    ReplyDelete
  18. கைப்பு,

    கேமரா வாங்கிடீங்க சரி, அதுக்காக இப்படி ஒரு அலப்பறை தேவைதானா?
    சங்கம் வெறிச்சோடி கிடக்கு...போங்கப்பு, போயி சங்கத்து வேளைகள கவனிங்க!!!
    அதை விட்டுட்டு போடுராய்ங்க போட்டோ!!

    ReplyDelete
  19. கைப்பு,

    கேமரா வாங்கிட்டீங்க சரி, அதுக்காக இப்படி ஒரு அலப்பறை தேவைதானா?
    சங்கம் வெறிச்சோடி கிடக்கு...போங்கப்பு, போயி சங்கத்து வேளைகள கவனிங்க!!!

    அதை விட்டுட்டு போடுராய்ங்க போட்டோ!! :)

    ReplyDelete
  20. செம்பருத்தி ரோஜா இல்லையா கைப்பேட்டா?

    ReplyDelete
  21. //சரி சரி! பிட்கேய்ர்ன் தீவுக்குப் போற பஸ்ஸுல எனக்கும் ஒரு துண்டு போட்டு வை. இந்தா டீ சாப்ப்ட்டுட்டு வந்துடறேன்//

    வாத்தியாரே! நீங்களுமா? உள்குத்து இல்லன்னாலும் உள்குத்துன்னு சொல்லி என் வாயைக் கெளறி ஒதை வாங்க வைக்கிறது தானே உங்க பிளான்னு?
    :(((

    ReplyDelete
  22. //கேமரா வாங்கிட்டீங்க சரி, அதுக்காக இப்படி ஒரு அலப்பறை தேவைதானா?
    சங்கம் வெறிச்சோடி கிடக்கு...போங்கப்பு, போயி சங்கத்து வேளைகள கவனிங்க!!!

    அதை விட்டுட்டு போடுராய்ங்க போட்டோ!! :)//

    ஆஹா...கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கைய்யா!

    ReplyDelete
  23. //செம்பருத்தி ரோஜா இல்லையா கைப்பேட்டா?//

    ஆமாய்யா ஆமாம்! இப்படியே போனா மிஸஸ் செல்வமணின்னு கூட சொல்லுவீங்க போலிருக்கே? பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போட்டுட்டு பயபக்தியா போங்கைய்யா! அதவுட்டுப் போட்டு செம்பருத்தி ரோஜான்னுக்கிட்டு.
    :)

    ReplyDelete
  24. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,...

    அமர்க்களம்!

    :))

    ReplyDelete
  25. இதெல்லாம் எந்தூரு? இந்தூரா? படமெல்லாம் நல்லா வந்துருக்கையா...

    ReplyDelete
  26. புள்ளையார் படத்தைப் போட்டே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பமா...?

    நல்லா இருக்கு.

    வாழ்த்து(க்)கள் ( கேமெராவுக்கு)

    ReplyDelete
  27. //ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,...

    அமர்க்களம்!

    :))//

    வாங்க எஸ்கே சார்!
    ரொம்ப நன்றிங்க. சந்தோஷமாயிருக்கு.
    :)

    ReplyDelete
  28. //இதெல்லாம் எந்தூரு? இந்தூரா?//

    வாங்க ராகவன்,
    இந்தூர்ல முன்ன இருந்தேன். இப்ப இருக்குறது ராஜஸ்தான் - மத்தியப்பிரதேச பார்டர்ல. அதாவது சில நாள் ராஜஸ்தான்ல சித்தூர்கட்ங்கிற எடத்துல(Chittorgarh), சில நாள் மத்தியப்பிரதேசத்துல.

    இந்த போட்டோ எல்லாம் எடுத்தது மத்தியப்பிரதேசத்துல நான் இப்ப இருக்குற கோர்(Khor) என்கிற எடத்துல.

    //படமெல்லாம் நல்லா வந்துருக்கையா...//
    நன்றிங்க. இந்த வார்த்தைக்கப்புறம் இனிமே படமா போட்டுத் தள்ளிட மாட்டோம்?
    :)

    ReplyDelete
  29. போடுங்க. போடுங்க. படமாப் போட்டுத் தள்ளுங்க. நல்லா இருக்கு படங்க.

    ReplyDelete
  30. //புள்ளையார் படத்தைப் போட்டே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பமா...?//

    வாங்கக்கா,
    எல்லாம் ஒரு செண்டிமெண்டு தான். அதோட அம்மா ஒரு புள்ளையார் பக்தை. வீட்டுல ஒரு சின்ன புள்ளையார் கண்காட்சியே வச்சிருக்காங்க. இன்னிக்கு அதே புள்ளையார் சிலைக்கு ரோஜாப்பூ அலங்காரம்...ஸோ இன்னிக்கு அவரு ரோஜாப்பூ விநாயகர்.


    //நல்லா இருக்கு.

    வாழ்த்து(க்)கள் ( கேமெராவுக்கு) //

    நன்றி! நன்றி!!

    ReplyDelete
  31. சரிப்பா, நாம சொன்ன மாதிரியே CANON கேமராவே வாங்கிட்ட சந்தோஷம். படமும் நல்லா தான் எடுத்து இருக்க. அதிலும் அந்த குருவி படம் நல்லாவே இருக்கு. உனக்கும் எனக்கும் சிலர் இந்த குருவியை சிண்டு முடிய பாக்குறாங்க. அத எல்லாம் கண்டுக்காத. பழுத்த பழம் மேல் தான் எப்பவுமே கல்லடிப் படும்.

    அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு. சங்கத்துல தான் நீ தல. இந்த போட்டோ புடிக்கற மேட்டருல நான் தல, நீ என் சிஷ்ய புள்ள. நீ எதாவது தப்பு பண்ணினா கொஞ்சம் கோபத்தில் ஒருமையில் திட்டினாலும் திட்டுவேன், அப்ப அப்ப அடிக்கவும் செய்வேன். அது எல்லாம் உன் நல்லதுக்கும் உன் வளமான எதிர்காலத்துக்கும் என்று நினைத்து பொருத்துக்கனும். இதுக்காக சங்கத்தில் பழி வாங்கும் நடவடிக்கையில் எல்லாம் இறங்க கூடாது. என்ன புரியுதா?

    ReplyDelete
  32. //இந்த போட்டோ புடிக்கற மேட்டருல நான் தல, நீ என் சிஷ்ய புள்ள. நீ எதாவது தப்பு பண்ணினா கொஞ்சம் கோபத்தில் ஒருமையில் திட்டினாலும் திட்டுவேன், அப்ப அப்ப அடிக்கவும் செய்வேன். அது எல்லாம் உன் நல்லதுக்கும் உன் வளமான எதிர்காலத்துக்கும் என்று நினைத்து பொருத்துக்கனும்//

    சரி தான் போட்டோக்கார 'தல'. தப்பு நடந்துக்காம பாத்துக்குறேங்க. என்னைய அடிக்க ஒங்களுக்கு இல்லாத உரிமைங்களா? அப்புறங்க இந்த தலையில ணங்னு கொட்டுறது, காதைப் புடிச்சு திருவுறது, நறுக்குன்னு கிள்ளுறது இதெல்லாத்தையும் சொல்லாம விட்டுட்டீங்களே? மறந்துட்டீங்களா?
    :)))

    ReplyDelete
  33. //பழுத்த பழம் மேல் தான் எப்பவுமே கல்லடிப் படும்//

    அப்படியே இது எந்தப் பழம்னு சொன்னீங்கன்னா நல்லாருக்குங்கைய்யா. தோராயமா இலந்தம்பழம்னு வெச்சுக்களாங்களா?

    ReplyDelete
  34. //அப்படியே இது எந்தப் பழம்னு சொன்னீங்கன்னா நல்லாருக்குங்கைய்யா. தோராயமா இலந்தம்பழம்னு வெச்சுக்களாங்களா?//
    ஞானப்பழம் ! சிவா ஒரு ஞானப்பழம்
    சிந்தனைத் துளிகள் என்று ஒரு பதிவை போட்டு உங்கள் நெற்றியை திருநீரால் நிரப்பியும், தம்பி சிவாவை ஒரு சின்ன எலந்த பழமாக சித்தரித்ததற்கு கடும் கண்டனம் :))

    ReplyDelete
  35. என்ன கைப்பு, உங்களுக்கு போட்டியா இளவஞ்சியும் படம் போட ஆரம்பிச்சுட்டாரே, என்ன விஷயம்?

    ReplyDelete
  36. //சரி சரி! பிட்கேய்ர்ன் தீவுக்குப் போற பஸ்ஸுல எனக்கும் ஒரு துண்டு போட்டு வை. இந்தா டீ சாப்ப்ட்டுட்டு வந்துடறேன்//

    வாத்தியாரே! நீங்களுமா? உள்குத்து இல்லன்னாலும் உள்குத்துன்னு சொல்லி என் வாயைக் கெளறி ஒதை வாங்க வைக்கிறது தானே உங்க பிளான்னு?
    //

    தல நீங்க ரெடியா ?

    சிவா, நானு, நீங்க மூனு பேரு போறதா பிளான். வாத்தியாரும் கூட வர்ரதா இருந்தா எடம் போட்டுடுலாம்..

    http://anony-anony.blogspot.com/2006/07/blog-post.html#comments

    ReplyDelete
  37. //ஞானப்பழம் ! சிவா ஒரு ஞானப்பழம்
    சிந்தனைத் துளிகள் என்று ஒரு பதிவை போட்டு உங்கள் நெற்றியை திருநீரால் நிரப்பியும், தம்பி சிவாவை ஒரு சின்ன எலந்த பழமாக சித்தரித்ததற்கு கடும் கண்டனம் :))//

    என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டீங்க? எலந்தம்பழம் மட்டும் என்ன சும்மாவா? அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்தப் பழமுங்க அது. அப்புறம் கண்ணதாசனும் அருமையா அந்த பழத்தைப் பத்தி பாட்டெல்லாம் எழுதி வச்சிருக்காரு.
    :)

    ReplyDelete
  38. ////சரி சரி! பிட்கேய்ர்ன் தீவுக்குப் போற பஸ்ஸுல எனக்கும் ஒரு துண்டு போட்டு வை. இந்தா டீ சாப்ப்ட்டுட்டு வந்துடறேன்//

    ஏன்யா இந்த கமெண்டை உன் பதிவுல மூணு வாட்டி போட்டேன்...ஒவ்வொரு தரமும் எர்ரர் மெசேஜ் தான் வந்துச்சு.

    //தல நீங்க ரெடியா ?

    சிவா, நானு, நீங்க மூனு பேரு போறதா பிளான். வாத்தியாரும் கூட வர்ரதா இருந்தா எடம் போட்டுடுலாம்..//
    நான் ரெடி...அங்கே பசங்க எப்படின்னு தெரியாது. எதுக்கும் நம்ம 'பொருள்' எல்லாம் ரெடியா எடுத்து வச்சுக்க. பேசி ஒன்னும் ஆகலைன்னா வீச வேணும் இல்ல?
    வாத்தியாரை நாம கூப்பிட்டாலும் அவரு ஸ்டூடண்ட்ஸ் வுட மாட்டாங்கப்பா.

    ReplyDelete
  39. //என்ன கைப்பு, உங்களுக்கு போட்டியா இளவஞ்சியும் படம் போட ஆரம்பிச்சுட்டாரே, என்ன விஷயம்? //

    போட்டியெல்லாம் இல்லீங்க உழவரே! நானும் அவர் படங்களைப் பாத்தேன். ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு. சும்மாவா அவரை வாத்தியாருன்னு சொல்றாங்க. நானும் போயி அவரு கிட்ட சிஷ்யப்புள்ளயா சேந்துக்கலாம்னு பாக்குறேன்.

    நாகை சிவாவும் நம்ம வாத்தியாரு தான்(யப்பா! உன் பேரையும் சொல்லிட்டேன். அவசரப்பட்டு ஒருமையில பன்மையில எல்லாம் வஞ்சிடாதே!)

    ReplyDelete
  40. //
    எதுக்கும் நம்ம 'பொருள்' எல்லாம் ரெடியா எடுத்து வச்சுக்க.

    //

    முதலுதவி பெட்டிய தானே சொல்லுறீங்க தல ??

    எடுத்து வைச்சிடுவோம் மறக்க கூடிய பொருளா அது :::))))??

    ReplyDelete
  41. //
    ஒவ்வொரு தரமும் எர்ரர் மெசேஜ் தான் வந்துச்சு.//

    சரி பண்னிட்டேன்ப்பு

    ReplyDelete
  42. //முதலுதவி பெட்டிய தானே சொல்லுறீங்க தல ??

    எடுத்து வைச்சிடுவோம் மறக்க கூடிய பொருளா அது :::))))??//

    துரோகி! போகும் போதே புத்தூர் கட்டு கட்டறதுக்கு ஏற்பாடு பண்ணற உன்னை மாதிரி தொண்டனுங்க கூட இருந்தா எல்லா தலயும் வெளங்குனாப்புல தான்.

    வா தல அடி பொளந்துட்டு வருவோம்னு சொல்றத வுட்டுப்புட்டு ஆஸ்பத்திரிக்கா கூப்புடறே படுவா?

    ReplyDelete
  43. குருவி அன்கோண்டா எதோட காலுக்கு கீழயும் லைட்டே வரலையே.... என்னா படம் எடுக்கறீங்க.

    ReplyDelete
  44. //wait i will come back//

    ரைட்டு! அம்பதுக்கு வழி பண்ணறே...சரிதாம்பா.

    ReplyDelete
  45. //குருவி அன்கோண்டா எதோட காலுக்கு கீழயும் லைட்டே வரலையே.... என்னா படம் எடுக்கறீங்க//

    :))))))

    கொத்தனாரே! பதில் எதுவும் சொல்ல முடியலிங்க...ஒங்களுக்கு ரொம்பத் தான் குறும்பு போங்க. (கவனிக்க 'குறும்பு')
    :))))

    ReplyDelete
  46. //தலையில ணங்னு கொட்டுறது, காதைப் புடிச்சு திருவுறது, நறுக்குன்னு கிள்ளுறது இதெல்லாத்தையும் சொல்லாம விட்டுட்டீங்களே? மறந்துட்டீங்களா?//
    அது எப்படி மறப்போம், சபையில சொல்ல வேணாம் பாத்தேன்.

    ReplyDelete
  47. //எலந்தம்பழம் மட்டும் என்ன சும்மாவா? அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்தப் பழமுங்க அது. அப்புறம் கண்ணதாசனும் அருமையா அந்த பழத்தைப் பத்தி பாட்டெல்லாம் எழுதி வச்சிருக்காரு.//
    அது மட்டுமா அ... எலந்த பழம் எலந்த பழம் செக்க சிவந்த பழம், தேனாக இனிக்கும் பழம்னு நம்ம எல்.ஆர். ஈஸ்வரி குரலை தான் மறக்க முடியுமா....

    இருந்தாலும் அண்ணன், நம்மள ஞான பழம் ரேஞ்சுக்கு பேசினது கொஞ்சம் அதிகம் தான்.

    ReplyDelete
  48. //குருவி அன்கோண்டா எதோட காலுக்கு கீழயும் லைட்டே வரலையே.... என்னா படம் எடுக்கறீங்க. //
    குருவி கால் ஒ,கே. அனகோண்டா காலே படத்தில் தெரியவில்லையே. யோவ் தல எங்கேய்யா கால், கொத்துஸ் கேட்டுறார்ல, சொல்லு,

    ReplyDelete
  49. கைப்பு..போட்டோ டாப்பு...

    இந்த சின்ன வயசுல இவ்ளோ திறமையா...அடடடடா...

    உங்க கனவையும் பாத்துட்டு தான் வரேன்...ஹும்...நம்ம ரெண்டு பேரு கஷ்டத்தையும் யாரு புரிஞ்சுக்கறாங்க..

    ReplyDelete
  50. //
    ரைட்டு! அம்பதுக்கு வழி பண்ணறே...சரிதாம்பா.
    //

    தல 50 கரெட்டா போட்டேனா !!!!!!

    என்னது இல்லையா சரி அப்ப நூறு நான் போடுரேன் ஓகே

    ReplyDelete
  51. படம் பாரு படம் பாரு... நம்ம கைப்புள்ள காலிங் படமெல்லாம் பாரு...நல்லாத் தாம்ய்யா படம் காட்டுற... ம் நடாத்து வோய்

    வேற அழகானப் படமெல்லாம் எதுவும் எடுக்கலீயா? பாண்டி சார்பாத் தான் கேட்கிறேன் ஆமா..

    ReplyDelete
  52. //உங்க கனவையும் பாத்துட்டு தான் வரேன்...ஹும்...நம்ம ரெண்டு பேரு கஷ்டத்தையும் யாரு புரிஞ்சுக்கறாங்க//
    புரிஞ்சக்க தான் இங்கன நான் ஒருத்தன் இருக்கேனல, அப்பறம் எதுக்கு இந்த சோக கீதம்

    ReplyDelete
  53. //வேற அழகானப் படமெல்லாம் எதுவும் எடுக்கலீயா? பாண்டி சார்பாத் தான் கேட்கிறேன் ஆமா.. //
    இருக்கே இருக்கே. ஆனா இது எல்லாம் க.பி. க்கு தான். நீங்க எல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள். அதனால உங்களுக்கு காட்ட மாட்டோமே!

    ReplyDelete
  54. தேவ் - அழகான படம்'ன்னா நீங்க நினைக்கிற மாதிரி சொப்பண சுந்தரி படமா?
    SK- //அமர்க்களம்!//
    மண்டூகம் என்ற முறையில் இதை திறனாய்வு செய்ததில்:
    ஆமர் களம்.
    படம் எடுக்க வந்து தல களத்துல குதிச்சுட்டா, எதிராளிங்க எல்லாம் அமரர் ஆகிருவாங்க.

    ReplyDelete
  55. தல கைப்ஸ்,
    ஒரே ஒரு நாள் சங்கத்துப் பக்கம் வராம இருந்தா, அதுக்குள்ள 50 அடிச்சாச்சா?!! கலக்கல்..

    நானும் இந்த வாரம் தான் கேமிரா வாங்கினேன். (தேவ் அண்ணாச்சி, நல்லா கேட்டுக்குங்க.. வாங்கிட்டேன் ;). அல்ரெடி இங்ஙன புயல் வரப் போவுதுன்னு பேசிக்கிறாய்ங்க.. நான் வாங்கினதுக்கப்புறம் தான்ன்னு நினைக்காதீங்க ;) ). படமெல்லாம் போடலாம்னு இருந்தேன்.. இப்படி தல, வாத்தியார் ரெண்டு பேரும் இருக்கும் போது அடக்கி வாசிச்சிக்கிறேன்..

    இந்தக் குருவி, காக்காய் எல்லாம் விட்டுட்டு, இந்த மாதிரி கலை நயத்தோட படம் எடுத்துப் போடு தல.. :)

    ReplyDelete
  56. பொன்ஸ், கலைநயம்'னு கைப்புக்கிட்ட சொல்லனுமா என்ன? அவரு எடுக்கிற எல்லா படமுமே "கலை நயம்" மிக்கதாதான் இருக்கும். கைப்பு அன்னிக்கு கைபோன்ல சொன்ன 'ரிஷப்' படம் எப்போ போடுவீங்க?

    ReplyDelete
  57. சனிக்கிழமை நடந்த 'குடி'விருந்து படம் எங்கே?

    ReplyDelete
  58. நீங்க ஒட்டகம்.......... படம் எங்கே?

    ReplyDelete
  59. பொன்ஸும் பொட்டி வாங்கியாச்சா. இனிமே சங்கத்துல படம் போட்டு கதை சொல்ற பதிவுதான். பின்னூட்டம் போடுறவங்களுக்குதான் தட்டி தட்டி விரல் நோவு எடுக்கும்?

    ReplyDelete
  60. ஒளி ஓவியர் கைப்பு !
    இனிமே சில் அவுட் படமா போட்டுத்தாங்குவீங்களா ?

    ReplyDelete
  61. //புரிஞ்சக்க தான் இங்கன நான் ஒருத்தன் இருக்கேனல, அப்பறம் எதுக்கு இந்த சோக கீதம்//

    புலி,
    அது கைப்புக்கு போட்ட பிட்டு..நீ கண்டுக்காத...


    தல கைப்பு, இந்த பதிலை நீ படிச்சிடாத..

    ReplyDelete
  62. சும்மாவே அலப்பர தாங்க முடியாது இதுல டிஜிடல் கேமரா வேர வாங்கிட்டயா தல..படமெல்லாம் சூப்பரா இருக்கு...

    எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எங்க ஊர்ல அந்த குருவிய ஆள்காட்டி குருவினு சொல்வாங்க...முயல் வேட்டைக்கு போகும் போது இது கத்தி எல்லா முயலயும் துரத்தி விடும்...

    ReplyDelete
  63. //அது எப்படி மறப்போம், சபையில சொல்ல வேணாம் பாத்தேன்//

    புலி! ஆனாலும் ஒனக்கு ரொம்பத் தான் அவை அடக்கம்யா...அப்படியே மெயிண்டேன் பண்ணிக்க.

    ReplyDelete
  64. //அது மட்டுமா அ... எலந்த பழம் எலந்த பழம் செக்க சிவந்த பழம், தேனாக இனிக்கும் பழம்னு நம்ம எல்.ஆர். ஈஸ்வரி குரலை தான் மறக்க முடியுமா....//

    அஆம்பா

    ReplyDelete
  65. //அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்தப் பழமுங்க அது// அதியமான் கொடுத்தது நெல்லிக்கனி இல்லயா?

    Krish

    ReplyDelete
  66. மோகனா,
    படம் எல்லாம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  67. //இனிமே சில் அவுட் படமா போட்டுத்தாங்குவீங்களா ?//
    இல்லீங்க! இப்ப கொஞ்ச நாளா அவுட் ஆப் போகஸ் படம் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதாவது கிட்ட இருக்குற
    பொருள் பளிச்சுன்னும் தூரத்துல இருக்குற பொருள் கொஞ்சம் மங்கலாத் தெரியற மாதிரி. போட்டோகிராபி பத்துன
    வெப்சைட்கள்ல குடுத்து இருக்குற தகவல் படி சப்ஜெக்டை(எந்த பொருள் மங்கலா வரனுமோ) கொஞ்சம் தள்ளி வச்சிட்டு
    வேற எதனா ஒரு விஷயத்தை போகஸ் பண்ணி எடுக்கச் சொல்லி போட்டிருக்கான். ஆனா அப்படி பண்ணா வர மாட்டேங்குது.
    முழு படமுமே தெளிவா வருது. மேனுவல் மோட்ல மூனு போகஸிங் மோட் இருக்கு...evaluative, weighted average அப்புறம்
    centre spotனு. எதுல எடுத்தாலும் பின்னாடி இருக்குற பொருளும் தெளிவா வருது. இந்த மாதிரி படம் எல்லாம் point and focus
    கேமரால வராதா? உங்க கிட்ட இருக்குற மாதிரி குழல் திருப்பக் கூடிய ஜூம் கேமரால தான் வருமா? என் கிட்ட இருக்குறது
    3x டிஜிட்டல் ஜூம் கொண்ட ஒரு குட்டியூண்டு கேனான் கேமரா.

    நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
    Philly
    Bokeh
    பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.

    ReplyDelete
  68. //யோவ் தல எங்கேய்யா கால், கொத்துஸ் கேட்டுறார்ல, சொல்லு//

    பாம்பின் கால் பாம்பறியும். யாமறியோம் பராபரமே!
    :)

    ReplyDelete
  69. //இந்த சின்ன வயசுல//

    தேரே மூ மே கீ ஷக்கர்...அதாவது இந்தியில உன் வாயிலே நெய்யும் சர்க்கரையும் விழட்டும்னு அர்த்தம். எதுக்குனா கேக்குறீங்க கப்பி? நமக்கு சின்ன வயசுன்னு புரிஞ்சிக்கிட்டு சபையிலே சொன்னீங்களே...அதுக்கு தான்!

    ReplyDelete
  70. //தல 50 கரெட்டா போட்டேனா !!!!!! //
    நீ தான் 50னு நெனக்கிறேன்.

    //என்னது இல்லையா சரி அப்ப நூறு நான் போடுரேன் ஓகே//
    டபுள் ஓகே.
    :)

    ReplyDelete
  71. //படம் பாரு படம் பாரு... நம்ம கைப்புள்ள காலிங் படமெல்லாம் பாரு...நல்லாத் தாம்ய்யா படம் காட்டுற... ம் நடாத்து வோய்//
    டாங்கூ டாங்கூ
    :)

    //வேற அழகானப் படமெல்லாம் எதுவும் எடுக்கலீயா? பாண்டி சார்பாத் தான் கேட்கிறேன் ஆமா..//
    பாண்டி கேக்குற மாதிரியான படம்லாம் இங்கே காட்டுல எங்கே கெடக்கும்...பாம்பு பல்லின்னு வேணும்னா சொல்லு. படம் காட்டிடலாம்.

    ReplyDelete
  72. //இருக்கே இருக்கே. ஆனா இது எல்லாம் க.பி. க்கு தான். நீங்க எல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள். அதனால உங்களுக்கு காட்ட மாட்டோமே!//

    செல்லம்! எப்படிமா இப்படியெல்லாம்? லாஜிக்கா போட்டுத் தாக்குறியே?
    :)

    ReplyDelete
  73. //ஒரே ஒரு நாள் சங்கத்துப் பக்கம் வராம இருந்தா, அதுக்குள்ள 50 அடிச்சாச்சா?!! கலக்கல்..//
    நன்றி பொன்ஸ்.

    //நானும் இந்த வாரம் தான் கேமிரா வாங்கினேன்.//
    என்ன கேமரா? என்ன படம் எல்லாம் எடுத்தீங்க?

    // (தேவ் அண்ணாச்சி, நல்லா கேட்டுக்குங்க.. வாங்கிட்டேன் ;//
    தங்காச்சி சொல்லுது இல்ல நல்லா கேட்டுக்கய்யா அண்ணாச்சி
    :)

    //அல்ரெடி இங்ஙன புயல் வரப் போவுதுன்னு பேசிக்கிறாய்ங்க.. //
    ரீட்டா, கட்ரீனா, வில்மா...இதுக்கெல்லாம் அப்புறம்...இப்ப என்னா?

    //நான் வாங்கினதுக்கப்புறம் தான்ன்னு நினைக்காதீங்க ;) //
    சே! சே! நாங்க அப்படியெல்லாம் நெனப்பமா?

    //படமெல்லாம் போடலாம்னு இருந்தேன்.. இப்படி தல, வாத்தியார் ரெண்டு பேரும் இருக்கும் போது அடக்கி வாசிச்சிக்கிறேன்..//
    God! God! Grass is the itching
    :)

    ReplyDelete
  74. //பொன்ஸ், கலைநயம்'னு கைப்புக்கிட்ட சொல்லனுமா என்ன? அவரு எடுக்கிற எல்லா படமுமே "கலை நயம்" மிக்கதாதான் இருக்கும்//
    நண்பரே! தங்கள் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
    :)

    //கைப்பு அன்னிக்கு கைபோன்ல சொன்ன 'ரிஷப்' படம் எப்போ போடுவீங்க?//
    இது யாருப்பா ரிஷப்? எதோ ஸ்வாபிமான் இந்தி சீரியல் பேராட்டம் இருக்கு? நான் எப்போ சொன்னேன்?

    //சனிக்கிழமை நடந்த 'குடி'விருந்து படம் எங்கே?//
    //நீங்க ஒட்டகம்.......... படம் எங்கே?//
    அதெல்லாம் சிஎன்என்ல போடுவாங்க பாத்துக்கிடுங்க.

    ReplyDelete
  75. /புலி,
    அது கைப்புக்கு போட்ட பிட்டு..நீ கண்டுக்காத...
    தல கைப்பு, இந்த பதிலை நீ படிச்சிடாத..//
    சே! சே! அடுத்தவங்க லெட்டர் எல்லாம் படிக்கிற பழக்கம் எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கெடயாது.

    ReplyDelete
  76. //சும்மாவே அலப்பர தாங்க முடியாது இதுல டிஜிடல் கேமரா வேர வாங்கிட்டயா தல..படமெல்லாம் சூப்பரா இருக்கு...//
    வாய்யா 12பி! நீயும் கொங்குநாட்டுத் தங்கமா? நம்ம வெவசாயி மாதிரியே திங்க் பண்ணியிருக்கியே...அதான் கேட்டேன்.
    :)

    //எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எங்க ஊர்ல அந்த குருவிய ஆள்காட்டி குருவினு சொல்வாங்க...முயல் வேட்டைக்கு போகும் போது இது கத்தி எல்லா முயலயும் துரத்தி விடும்...//
    ஆள்காட்டி குருவியை இந்த உலகுக்கு அடையாளம் காட்டிய அமெரிக்க குருவி 12பி ஸ்யாம் வாள்க! வாள்க!

    ReplyDelete
  77. //தேவ் - அழகான படம்'ன்னா நீங்க நினைக்கிற மாதிரி சொப்பண சுந்தரி படமா?
    SK- //அமர்க்களம்!//
    மண்டூகம் என்ற முறையில் இதை திறனாய்வு செய்ததில்:
    ஆமர் களம்.
    படம் எடுக்க வந்து தல களத்துல குதிச்சுட்டா, எதிராளிங்க எல்லாம் அமரர் ஆகிருவாங்க//

    கொஞ்சம் இருங்க! கொத்ஸ் வந்து உங்களுக்கு மார்க் போடுவாரு.

    ReplyDelete
  78. ////அதியமான் ஒளவையாருக்கு அன்பின் மிகுதியால குடுத்தப் பழமுங்க அது// அதியமான் கொடுத்தது நெல்லிக்கனி இல்லயா?

    Krish//

    வாங்க கிருஷ்,
    இருந்துட்டுப் போவுது. அதப் பத்தி நமக்கு என்ன கவலை? நெல்லிக்கனியோ, இலந்தம்பழமோ இல்ல கொடுக்காப்புளியோ...அந்த மார்க்கமான பழத்தைக் கொடுத்தது அதியமான். அதை சாப்புட்டது ஒளவையார். நம்ம நாகைசிவாவும் அதே மாதிரியான சர்வ வல்லமை படைத்த ஒரு மார்க்கமான பழம் போன்றவர் என்பது புலவர் சொல்ல விழையும் உட்கருத்து.

    ReplyDelete
  79. ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா சொல்லக்க்கூடாது.. அடி பின்னுரீங்க

    Krish

    ReplyDelete
  80. Here comes 81!
    உனக்கு தான் எட்டு ஆவதுல

    ReplyDelete
  81. //
    நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
    Philly
    Bokeh
    பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.
    //

    தல எதுக்கு இப்படி கவலை படனும் போட்டோ எடுத்த பிறகு ADOBE PHOTOSHOP போயி தேவை படுவதை மங்கலாக மாத்திட வேண்டியதுதானே :::))))

    ((சிரிப்பான் போட்டுருக்கேன்))

    ReplyDelete
  82. //சே! சே! அடுத்தவங்க லெட்டர் எல்லாம் படிக்கிற பழக்கம் எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கெடயாது//

    தல...

    உனக்கு இன்னும் சின்ன வயசு தான்னு சொல்லிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா 'சின்ன வயசுலேர்ந்து'ன்னு இழுக்கற..இப்போவும் சின்ன வயசு தான்...புரியுதா...

    ReplyDelete
  83. //
    பெரியவங்க உதவி செஞ்சீங்கனா நல்லாருக்கும்.
    //

    நான் பெரியவனா ஆன உடன் கன்டிப்பா சொல்லுறேன் :)

    ReplyDelete
  84. //
    முழு படமுமே தெளிவா வருது.
    //

    கேமரா புதுசு தானே அப்படி தான் இருக்கும். போக போக மங்கலா தெரியுமோ என்னவோ ???

    ReplyDelete
  85. //ஆகா ஆகா என்னா விளக்கம் என்னா விளக்கம் .. சும்மா சொல்லக்க்கூடாது.. அடி பின்னுரீங்க//

    டாங்ஸுங்ணா
    :)

    ReplyDelete
  86. //மோகனா,
    படம் எல்லாம் நல்லா இருக்கு//

    நன்றி சரிகா அவர்களே!
    :)

    ReplyDelete
  87. //Here comes 81!
    உனக்கு தான் எட்டு ஆவதுல//

    நீயு சோசியத்துலயும் புலியா?

    ReplyDelete
  88. //தல எதுக்கு இப்படி கவலை படனும் போட்டோ எடுத்த பிறகு ADOBE PHOTOSHOP போயி தேவை படுவதை மங்கலாக மாத்திட வேண்டியதுதானே :::)))) //
    பண்ணலாம் தான்...கொஞ்சம் முயற்சி பண்ணுவோம். ஒன்னியும் வர்க் அவுட் ஆவலைன்னு வை சீ சீ இந்த பழம் புளிக்கும்னு நீ சொல்ற வேலையில எறங்கிடுவோம்ல
    :)

    ReplyDelete
  89. //உனக்கு இன்னும் சின்ன வயசு தான்னு சொல்லிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா 'சின்ன வயசுலேர்ந்து'ன்னு இழுக்கற..இப்போவும் சின்ன வயசு தான்...புரியுதா...//

    சாரிமா! 'சின்ன குழந்தைலேர்ந்து'ன்னு சொல்ல வந்து ஜஸ்ட்ல ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு...நீ சொல்றது நல்லாத் தெளிவா புரியுது.
    :)

    ReplyDelete
  90. //நான் பெரியவனா ஆன உடன் கன்டிப்பா சொல்லுறேன் :)
    //

    சரி நான் வெயிட் பண்ணறேன்.
    :)

    ReplyDelete
  91. //
    சரி நான் வெயிட் பண்ணறேன்.
    :)
    //

    கவலையே படாதிங்க 100 க்கும் வருவேன்.........

    ReplyDelete