Thursday, July 27, 2006

கிறுக்கு புடிச்சுடுச்சு...

என்ன கிறுக்குன்னு ஒரு எட்டு வந்து பாத்தீங்கனாலே புரிஞ்சிடும்...


1. வந்ட்டாருடா வெண்ரு வெட்டுக்கிளி கண்ணால அவுட் ஆஃப் ஃபோகஸ் படம் புடிக்க...


2. சில்ஹுவெட் படம் ஜஸ்ட் மிஸ் மாமே


3. ஹி...ஹி...வெள்ளை கலர் செம்பா :)



4. பயலுங்களோட ஒரு "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"


5. நேட் ஜியோ பாக்குறியா அவுட் ஆப் ஃபோகஸ்ல?


6. கலர்ஃபுல்லா சிரிச்சா கொறஞ்சா போய்டுவே?


7. ஏபிசிடி உங்கொப்பன் தாடி


8. சீபியா டோனில் ஒரு மெகா சைஸ் சட்டி


9. மேகம் கொட்டட்டும்...


10. மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி


11. ஹ்ம்ம்...இப்பிடி கேப்மாரித்தனம் செஞ்சாத் தான் பளாக் எல்லாம் படிக்க முடியுது :(

படத்தை எல்லாம் பாத்துட்டு உங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவையும் சொல்லுங்க சாமிகளா...

54 comments:

  1. தல ஒன்னோட தெறம தெரியாம போட்டோ ஷாப் பத்தி சொல்லிபுட்டேன் மன்னிச்சுகோ...

    ஆமா நாதான் வர்றேன்னு சொன்னனே அதுக்குள்ளா ஏன் டிக்குளர் செஞ்சே ??

    ReplyDelete
  2. என்ன மிஸ்சாயிட்டு .....

    நீ அம்பு உட்டததான் பாத்தோமே கடைசியா கரடி வந்ததையும் அது.............

    ReplyDelete
  3. அது கொடக்கட்டும் தல...
    இத பாருங்க...
    http://balabharathi.blogspot.com/2006/07/blog-post_27.html

    ReplyDelete
  4. அவுட் ஆப் போக்கஸ், சரியா போக்கஸ் பண்ணிருக்கியே தல:-)

    அது சரி தலைப்புக்கு ஏத்தாப்போல தான் அந்த தொட தட்டி படம்....

    A வையே கானும் அப்புறம் எப்படி ABCD.... BCD னு தான இருந்திருக்கனும்.

    நல்ல படங்கள்.

    ReplyDelete
  5. //தல ஒன்னோட தெறம தெரியாம போட்டோ ஷாப் பத்தி சொல்லிபுட்டேன் மன்னிச்சுகோ...//

    சே! சே! எதுக்குப்பா மன்னிப்பெல்லாம்...ஒரு ஃப்ளூக்ல எதோ படம் ஒரு மாதிரியா வந்துடுச்சுன்னா அதுக்கு இப்பிடியா ஃபீல் பண்ணறது?
    :)

    //ஆமா நாதான் வர்றேன்னு சொன்னனே அதுக்குள்ளா ஏன் டிக்குளர் செஞ்சே ?? //
    இல்ல மின்னலு...படத்தை எடுத்து வச்சிக்கிட்டு ப்ளாக்ல போடு போடுன்னு கை நமநமன்னுச்சு...அதான் போட்டுட்டேன்.

    ReplyDelete
  6. //நீ அம்பு உட்டததான் பாத்தோமே கடைசியா கரடி வந்ததையும் அது............. //

    ஐயயோ! ஒன்னும் புரியலியே...இதெல்லாம் எந்த படத்துல வருது? நான் தமிழ் படம் பாத்து ரொம்ப நாளாவுதுப்பா...கொஞ்சம் வெவரமாச் சொல்லு.

    ReplyDelete
  7. //அது கொடக்கட்டும் தல...
    இத பாருங்க...
    http://balabharathi.blogspot.com/2006/07/blog-post_27.html//

    அண்ணாச்சி!
    பாத்துட்டேங்க! முயற்சி பண்ணறேன். நீங்க திரும்ப வந்ததும் பாக்க இளமையா ஸ்மார்ட்டா இருக்கீங்க...என்ன ரகசியம்?
    :)

    ReplyDelete
  8. என்ன தல,, ஆள் ஆளுக்கு படம் போட ஆரம்பிச்சீட்டீங்க.. எங்க அம்மணி வாய தொரந்தவே ஓவர் படம் தான்.. அங்க பொன்ஸ் அக்கா படம் படம் மா போட்டு இருக்காங்க.. நீங்க இங்க.. என்ன ஏதாவது படம் சீசனா தமிழ்மனத்துல..?!!

    ReplyDelete
  9. //அவுட் ஆப் போக்கஸ், சரியா போக்கஸ் பண்ணிருக்கியே தல:-)//
    ஐயயோ! அப்போ அது அவுட் ஆப் போக்கஸ் இல்லியா? நான் அவுட் ஆப் போக்கஸ்னு இல்ல நெனச்சிட்டு இருந்தேன். :(

    //அது சரி தலைப்புக்கு ஏத்தாப்போல தான் அந்த தொட தட்டி படம்....

    A வையே கானும் அப்புறம் எப்படி ABCD.... BCD னு தான இருந்திருக்கனும்.//
    நல்லதா நீங்க ஒன்னு சொல்லுங்களேன்.
    :)

    //நல்ல படங்கள்//
    டாங்க்ஸ்

    ReplyDelete
  10. //என்ன தல,, ஆள் ஆளுக்கு படம் போட ஆரம்பிச்சீட்டீங்க.. எங்க அம்மணி வாய தொரந்தவே ஓவர் படம் தான்.. அங்க பொன்ஸ் அக்கா படம் படம் மா போட்டு இருக்காங்க.. நீங்க இங்க.. என்ன ஏதாவது படம் சீசனா தமிழ்மனத்துல..?!!//

    மத்தவங்களைப் பத்தி தெரியலைமா! கையில பொட்டி இருக்கு ஆபிஸ் விட்டு வந்தா வேற வேலை பொழப்பு இல்ல...அதான் இப்பிடி கண்ணுல மாட்டுற புல், பூண்டு, பூச்சி எல்லாத்துக்கும் ஷேவிங் பண்ணி வுட்டுக்குட்டு இருக்கேன்.
    :)

    ReplyDelete
  11. //புல், பூண்டு, பூச்சி எல்லாத்துக்கும் ஷேவிங் பண்ணி வுட்டுக்குட்டு இருக்கேன்.//
    தல நீ சாப்ட்வேர்ல்ல ஓர்க் பண்ணுறேன்னு சங்கத்துல்ல நாங்க டீசண்டா சொல்லி வைச்சா நீ இப்படி பப்ளிக்ல்ல ஓப்பனா உண்மையைச் சொன்னா என்ன அர்த்தம்??:(

    ReplyDelete
  12. //தல நீ சாப்ட்வேர்ல்ல ஓர்க் பண்ணுறேன்னு சங்கத்துல்ல நாங்க டீசண்டா சொல்லி வைச்சா நீ இப்படி பப்ளிக்ல்ல ஓப்பனா உண்மையைச் சொன்னா என்ன அர்த்தம்??:( //

    நீ சொல்றது மெயினு...நாஞ் சொல்றது சைடு...

    புரியுதா?

    ReplyDelete
  13. கிறுக்கு முத்திடுச்சுடோ....
    என்னப்பா எல்லாம் படம் காட்டுறீங்க. அப்ப நானும் ....

    ReplyDelete
  14. //நீ சொல்றது மெயினு...நாஞ் சொல்றது சைடு...//
    உனக்கு இந்த மெயினு, சைடு எல்லாம் புதுசா என்ன... அத விடு

    புல் காட்டுன ஒ.கே. பூச்சிய காட்டுன ஒ.கே. இந்த பூண்ட இன்னும் காட்டவே இல்லயே அதையும் காட்டு.

    ReplyDelete
  15. //கிறுக்கு முத்திடுச்சுடோ....
    என்னப்பா எல்லாம் படம் காட்டுறீங்க. அப்ப நானும் ....//

    ரெடி ஸ்டார்ட்! நீ வேற நம்ம வாத்தியாரா போயிட்டே...
    :)

    ReplyDelete
  16. //புல் காட்டுன ஒ.கே. பூச்சிய காட்டுன ஒ.கே. இந்த பூண்ட இன்னும் காட்டவே இல்லயே அதையும் காட்டு//

    இஞ்சியோட சேர்த்து அரைச்சிட்டு இருக்காங்க...கூடிய சீக்கிரம் அதையும் காட்டுறேன்

    ReplyDelete
  17. மெயின் ரோடும், பைபாசும் நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்கே தலை!

    ReplyDelete
  18. //
    ஐயயோ! ஒன்னும் புரியலியே...இதெல்லாம் எந்த படத்துல வருது? நான் தமிழ் படம் பாத்து ரொம்ப நாளாவுதுப்பா...கொஞ்சம் வெவரமாச் சொல்லு.
    //

    என்னத்த சொல்ல நீ நடிச்ச படந்தான் 23 ம் புலிகேசி ........

    ReplyDelete
  19. கலக்கலா இருக்கு தல..உனக்கு அம்பு எடுத்து கரடிய வேட்டயாட மட்டும் தான் தெரியும்னு நினைச்சுட்டு இருந்தேன்...கேமரா எடுத்து போட்டோ எல்லாம் பிடிக்கற.... :-)

    ReplyDelete
  20. //
    ஐயயோ! ஒன்னும் புரியலியே...இதெல்லாம் எந்த படத்துல வருது? நான் தமிழ் படம் பாத்து ரொம்ப நாளாவுதுப்பா...கொஞ்சம் வெவரமாச் சொல்லு.
    //

    தல இங்க போயி பாரு புரியும்.

    http://www.grouper.com/video/MediaDetails.aspx?id=1458582&ml=fx%3d&

    (யாருக்கு) தேவையெனில் மெயில் அனுப்பவும்.

    mobile formet 2.37 mb (3gpp)

    windows media player 15.3 mb (wmv)

    ReplyDelete
  21. ////புல் காட்டுன ஒ.கே. பூச்சிய காட்டுன ஒ.கே. இந்த பூண்ட இன்னும் காட்டவே இல்லயே அதையும் காட்டு//

    இஞ்சியோட சேர்த்து அரைச்சிட்டு இருக்காங்க...கூடிய சீக்கிரம் அதையும் காட்டுறேன்//

    நாகை சிவா இப்படி மடக்கிட்டாரேன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன் கைப்ஸ்.. இது சூப்பர்!!! :)

    அப்படியே பச்சை மிளகாயையும் சேர்த்து வச்சி அரைச்சி சூடானுக்குப் பார்சல் பண்ணிடுங்க ;)

    ReplyDelete
  22. வெட்டுக்கிளி- ஹி ஹி உனக்கெல்லாம் ஒரு பொட்டி(வெட்டுகிளி சொன்னது)

    சில்ஹூவெட்- தலை இல்லாத படம் குப்பையிலே

    செம்பா- படம் நல்லாதான் இருக்கு, அப்புறமா அந்த பூவ பறிச்சு ரிஷப்-1
    கிட்டே தந்தத சொல்லவே இல்லியே.


    அவுட் ஆப் ஃபோகஸ்ல?- மகா என்ன வாத்தி சொன்னதுக்கு வெள்ளோட்டமா?

    ஏ பி சி டி -> சி, டி இருக்கு. ஏ & பி காணோமே.

    மீதியெல்லாம் கவிதைக்கு எழுத கொத்தனாருக்கு எடுத்த கிட்ட டியூசனோட வீட்டுப் பாடம்

    ராசா பதிவ படிக்க இப்படி ஒரு கேப்மாரித்தனமா? சங்கத்து அடுத்த மாச அட்லாஸ் வாலிபர்யா அவரு.

    ReplyDelete
  23. //
    அம்பு எடுத்து கரடிய வேட்டயாட மட்டும் தான் தெரியும்னு நினைச்சுட்டு இருந்தேன்...
    //

    ஷாம் தலயோட வீரத்த பாத்திங்கள்ள கரடியோட ஒத்தைக்கு ஒத்தையா நிக்க யாருக்கு தெறம இருக்கு இங்க ??

    ReplyDelete
  24. //மெயின் ரோடும், பைபாசும் நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்கே தலை!//

    இதுல எதுவும் உள்குத்து கிள்குத்து இல்லியே?
    :)

    ReplyDelete
  25. //என்னத்த சொல்ல நீ நடிச்ச படந்தான் 23 ம் புலிகேசி ........//

    என்னத்த சொல்ல...வெக்க கேடு தான்
    :(

    ReplyDelete
  26. //கலக்கலா இருக்கு தல//
    12பி...நன்றிப்பா

    //..உனக்கு அம்பு எடுத்து கரடிய வேட்டயாட மட்டும் தான் தெரியும்னு நினைச்சுட்டு இருந்தேன்...கேமரா எடுத்து போட்டோ எல்லாம் பிடிக்கற.... :-) //
    ஐயகோ! நான் ஒரு இந்திய நாட்டுப் பிரஜை...எனக்குத் தெரியாத்து அமெரிக்கன்ஸுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கே?
    :(

    ReplyDelete
  27. //தல இங்க போயி பாரு புரியும். //

    லிங்குக்கு தேங்ஸ்பா மின்னலு

    ReplyDelete
  28. //அப்படியே பச்சை மிளகாயையும் சேர்த்து வச்சி அரைச்சி சூடானுக்குப் பார்சல் பண்ணிடுங்க ;)//

    அப்படியே பண்ணிடுவோம்! சிவா இந்தப் பக்கத்து மொளகா வச்சி அரைச்சா காரத்தைத் தணிக்க ரெண்டு ஃபயர் எஞ்சின் வேணும். எம்புட்டு மொளகா போடலாம்னு நீயே சொல்லு.
    :)

    ReplyDelete
  29. //வெட்டுக்கிளி- ஹி ஹி உனக்கெல்லாம் ஒரு பொட்டி(வெட்டுகிளி சொன்னது)//
    வெட்டுக்கிளி பாஷையும் புரியுமா ஒங்களுக்கு?

    //சில்ஹூவெட்- தலை இல்லாத படம் குப்பையிலே//
    இதெல்லாம் கொஞ்சம் ஓவரு

    //செம்பா- படம் நல்லாதான் இருக்கு, அப்புறமா அந்த பூவ பறிச்சு ரிஷப்-1
    கிட்டே தந்தத சொல்லவே இல்லியே//
    ஹையோ! ஹையோ! ஒரே காமெடி போங்க. இங்க ரிஷப் எல்லாம் ஆம்பளைங்க தான். நான் செம்பாவை அவங்க கிட்ட குடுத்தா காதுல தான் சொருவிக்கனும். செம்பருத்தி காதுல சொருவுனா எப்படி இருக்கும்னு யோசிச்சி பாத்தேன்...சிப்பு சிப்பா வருது


    //அவுட் ஆப் ஃபோகஸ்ல?- மகா என்ன வாத்தி சொன்னதுக்கு வெள்ளோட்டமா?//
    வழக்கம் போல என்னா சொல்றீங்கன்னு புரியலை.

    //ஏ பி சி டி -> சி, டி இருக்கு. ஏ & பி காணோமே//
    இது சித்தூர்கட் ஏபிசிடி...அப்பிடி தான் இருக்கும்.

    //மீதியெல்லாம் கவிதைக்கு எழுத கொத்தனாருக்கு எடுத்த கிட்ட டியூசனோட வீட்டுப் பாடம்//
    ரைட்டு

    //ராசா பதிவ படிக்க இப்படி ஒரு கேப்மாரித்தனமா? சங்கத்து அடுத்த மாச அட்லாஸ் வாலிபர்யா அவரு//
    அப்படியா? அடுத்த மாச அட்லாஸ் வாலிபரு புது மாப்பிள ராசாவுக்கு ஒரு 'ஓ' போடுங்கப்பா!

    ReplyDelete
  30. //ஷாம் தலயோட வீரத்த பாத்திங்கள்ள கரடியோட ஒத்தைக்கு ஒத்தையா நிக்க யாருக்கு தெறம இருக்கு இங்க ??//

    மின்னலு சொம்மா சொல்லக் கூடாதுய்யா...பில்டாப்பெல்லாம் தூக்கலாத் தான் குடுக்கறே. அத அப்பிடியே தூக்கி புடி(keep it upனு சொன்னேன்)
    :)

    ReplyDelete
  31. கிறுக்கு ரொம்பத் தான் முத்தி போய் கிடக்கு...என்னத்த சொல்ல...

    ReplyDelete
  32. //கிறுக்கு ரொம்பத் தான் முத்தி போய் கிடக்கு...என்னத்த சொல்ல...//

    இத இத... இத தான் நான் எதிர்பாத்தேன்.
    :)

    ReplyDelete
  33. //கிறுக்கு ரொம்பத் தான் முத்தி போய் கிடக்கு...என்னத்த சொல்ல...//

    சுவாமி பித்தானந்தா அழைக்கிறார். தாங்கள் தயாரா?

    ReplyDelete
  34. தலைப்பு அருமை!

    அதன் பின்னர்தான் படங்களே புரிந்தது! ?????

    :))))))

    ReplyDelete
  35. இதல்லாம் பார்த்திட்டு இங்கிலிசுகாரங்கே அவனோட பாஸைல very very good'ன்னு சொல்லுவாய்ங்கே......

    ReplyDelete
  36. //சுவாமி பித்தானந்தா அழைக்கிறார். தாங்கள் தயாரா?//

    ஹ்ம்ம்...நானும் தாயார் தான்...சாரி தயார் தான். சரி! இது எந்த படத்துல வர்ற டயலாக்?

    ReplyDelete
  37. //தலைப்பு அருமை!

    அதன் பின்னர்தான் படங்களே புரிந்தது! ?????

    :)))))) //

    வாங்க எஸ்கே சார்!
    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. //இதல்லாம் பார்த்திட்டு இங்கிலிசுகாரங்கே அவனோட பாஸைல very very good'ன்னு சொல்லுவாய்ங்கே......//

    வாங்க ராம்,
    இதப் பாத்துட்டு எனக்கும் அவங்க பாஸைல Thanks a lot னு சொல்லனும் போல இருக்கு.
    :)

    ReplyDelete
  39. நல்லா படம் காட்றீங்க கைபுள்ள. :) இத தான் சோக்கா சொன்னான்யா இங்லீஸ்ல வாவ்!னு... :D
    கேச் மை பாயிண்டு?

    ReplyDelete
  40. //நல்லா படம் காட்றீங்க கைபுள்ள. :) இத தான் சோக்கா சொன்னான்யா இங்லீஸ்ல வாவ்!னு... :D
    கேச் மை பாயிண்டு?//

    வாங்க அம்பி,
    அல்வா நகரத்தில் அண்ணனை வரவேற்க ஏற்பாடு எல்லாம் எப்படி நடக்குது. கேச் யுவர் பாயிண்டுயா...
    :))

    ReplyDelete
  41. கைப்பு இந்தாய்யா கமெண்டு ...

    படம் 2
    அதே 3 விதிதான். வானம் 2/3 பகுதியும், மற்றவை ( மரம், கட்டிடம் ) மீதி 1/3 பகுதியும் இருக்க வேண்டும்.

    படம்3
    வெள்ளை கலர் எடுப்பது மிகக் கடினம். நல்லா இருக்கு

    5:
    டிவி சாயிஞ்சு போச்சே?


    7:
    நல்லா இருக்கு

    படம் 8:
    பின்னால் இருக்கும் வேலி சட்டியை பார்க்க விடாம பண்ணுது.

    எல்லாப் படமும் கொஞ்சம் இருட்டா இருக்கு.
    நல்ல பகல் வெளிசத்தில் எடுக்கிறீர்களா?

    காலை/மாலை வேளையில் எடுத்துப் பாருங்கள். சூரிய ஒளி நிறைய இருந்தால் படங்கள் Under expose ஆகி விடும்.

    ReplyDelete
  42. //அத அப்பிடியே தூக்கி புடி(keep it upனு சொன்னேன்)
    //


    ROTFL.... :-)))))))))

    ReplyDelete
  43. வாங்க ஆனந்த்,
    உங்க கமெண்டுகள் என்னுடைய ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கு...என் படங்களை மேலும் மெருகேற்றி கொள்ள கிடைத்த வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன்.

    //படம் 2
    அதே 3 விதிதான். வானம் 2/3 பகுதியும், மற்றவை ( மரம், கட்டிடம் ) மீதி 1/3 பகுதியும் இருக்க வேண்டும்.//
    மறுபடியும் முயற்சி பண்ணறேன்.

    //படம்3
    வெள்ளை கலர் எடுப்பது மிகக் கடினம். நல்லா இருக்கு//
    எனக்கும் ரொம்ப புடிச்சது. காட்டுன வரைக்கும் எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னது இந்த படத்தை தான்.

    //5:
    டிவி சாயிஞ்சு போச்சே?//
    அட ஆமா இல்ல?
    :)

    //7:
    நல்லா இருக்கு//
    நன்றி. க்ளோசப் ஷாட் முயற்சி பண்ணறதுக்காக எடுத்தது.

    //படம் 8:
    பின்னால் இருக்கும் வேலி சட்டியை பார்க்க விடாம பண்ணுது.//
    இது எனக்கு தோணவே இல்ல. இனிமேல் இதை எல்லாம் கவனிச்சுக்குறேன்.

    //எல்லாப் படமும் கொஞ்சம் இருட்டா இருக்கு.
    நல்ல பகல் வெளிசத்தில் எடுக்கிறீர்களா?//
    ரொம்ப வெளிச்சம்னு சொல்ல முடியாது. இங்கே இருக்குற படங்கள் எல்லாம் மேனுவல் மோட்ல எடுத்தது. அதுல 'exposure settings' மாத்தி மாத்தி முயற்சி பண்ணிட்டிருந்தேன். அதப் பத்தி வெப்ல எதாச்சும் டூடோரியல் இருந்தா சொல்லுங்களேன். படங்கள் எடுக்கும் போது மேகமூட்டமா தான் இருந்தது..அதுக்கப்புறம் மழை பேஞ்சது. மேனுவல் செட்டிங்ஸ் வைத்து படம் எடுத்து பழக்கமில்லை. இன்னும் நெறைய தெரிஞ்சிக்கனும்.

    //காலை/மாலை வேளையில் எடுத்துப் பாருங்கள். சூரிய ஒளி நிறைய இருந்தால் படங்கள் Under expose ஆகி விடும்.//
    சொல்லிட்டீங்கல்ல...இனிமே பொட்டியைத் தூக்கிட்டு காலையும் மாலையும் கெளம்பிட மாட்டோம் கிளி ஜோசியம் கணக்கா?
    :)

    ReplyDelete
  44. //ROTFL.... :-)))))))))//

    ஸ்யாம்,
    உங்க கமெண்டைப் பாத்துட்டு 'வாயெல்லாம் பல்லு'

    ReplyDelete
  45. 'தல ' கலக்கு தல !! சீபியாடோன்ல எல்லாம் உட்டு பூந்து வெளையாடியிருக்கியே தல !!

    எல்லாபடமும் பசுமையாத்தான் இருக்கு.அப்படியே கொஞ்சம் கலர் இருந்திருந்தா கொஞ்சம் தூக்கலா இருந்துருக்கும், ஹூம்.. ;)) அடுத்ததடவை அதையும் கொஞ்சம் கவர் பண்ணுங்க தல :)))

    ReplyDelete
  46. வெட்டுக்கிளி அவுட் ஆப் ஃபோகஸ் சூப்பர்

    ReplyDelete
  47. //வெட்டுக்கிளி அவுட் ஆப் ஃபோகஸ் //

    பிரபு என்னா சொல்ல வரீங்க..வெட்டுக்கிளி அவுட் ஆப் ஃபோகஸ்ல இருக்கா? :-))))

    பரவால்ல விடுங்க தல இப்போதான் பழகிட்டு இருக்காரு அவரு போகஸ் பன்னது அந்த பச்ச டப்பாக்கு அந்த புறம் போன ஒரு முயல் குட்டிய... :-)

    ReplyDelete
  48. //வெட்டுக்கிளி அவுட் ஆப் ஃபோகஸ் சூப்பர்//

    வாங்க பிரபுராஜா,
    பாராட்டுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  49. //எல்லாபடமும் பசுமையாத்தான் இருக்கு.அப்படியே கொஞ்சம் கலர் இருந்திருந்தா கொஞ்சம் தூக்கலா இருந்துருக்கும், ஹூம்.. ;)) அடுத்ததடவை அதையும் கொஞ்சம் கவர் பண்ணுங்க தல :)))//

    வெறுப்பேத்தறியா? நீ கேக்குறதுக்கெல்லாம் மட்டும் இங்கே சான்சே இல்ல. காட்டுக்குள்ள அனிமல்ஸ், பர்ட்ஸ், ரெப்டைல்ஸ் இதெல்லாம் மட்டும் தான் இருக்கு. வேணும்னா சொல்லு பழகுன தோஷத்துக்குப் படம் புடிச்சி போடறேன்.

    ReplyDelete
  50. //பரவால்ல விடுங்க தல இப்போதான் பழகிட்டு இருக்காரு அவரு போகஸ் பன்னது அந்த பச்ச டப்பாக்கு அந்த புறம் போன ஒரு முயல் குட்டிய... :-) //

    12பி,
    எதுனா டிரான்ஸ்மிட்டரு செட் பண்னி வெச்சிருக்கியா நைனா? முயல்னா இந்த மூணு காலுல துள்ளி துள்ளி வெள்ளையா ஓடுமே, காதைப் புடிச்சு கூடத் தூக்குவாங்களே...அதை தான சொல்லறே? ஆமாம்...ஆமாம்...மொசலுக்கு வச்ச டார்கெட் தான் அது.

    "கான முயலெய்த அம்பினில் வெட்டுக்கிளி சிக்கிக்கிச்சு."
    :)

    ReplyDelete
  51. //"கான முயலெய்த அம்பினில் வெட்டுக்கிளி சிக்கிக்கிச்சு."
    :)//

    :)))

    தல,
    எல்லாரும் சொல்றாங்களேன்னு நீ உன் போகஸை விட்ராத..


    வெட்டுக்கிளியை இன்னும் கொஞ்சம் கிட்டத்துல எடு தல.. அதாவது அந்தக் கிளி உன் படப் போட்டியை வெட்டுதா, உன்னையே வெட்டுதான்னு சந்தேகம் வரணும்.. உன் பொட்டி தாண்டி எதுவும் தெரியாம கிளிக்கே ஒரு அவுட் ஆப் போகஸ் எபெடு தெரியணும்.. புரியுதா???

    ReplyDelete
  52. புது காமிராவா!! வாழ்த்துக்கள்!!

    நான் flickrல இந்த பக்கத்தை (http://www.flickr.com/photos/umaipadam/)
    பாத்துட்டு நீங்கனு நினைச்சு... "இந்தூர் கைப்புள்ளயா?""னு ஒரு மெயில் அடிச்சிவிட்டேன்..

    உடனே ஒரு reply வந்தது "Haha! No man thats my bro. :p" அப்படினு..

    உங்க தம்பினே நினைச்சுட்டேன்... அப்புறவு அது வேற யாரோனு தெரிஞ்சது..! சும்மா தமாசுக்கு அப்படி பதில் அனுப்பி இருக்கார்னு..! :D

    சீக்கிரம் உங்க profile படத்துக்கு copyright வாங்குங்க!!

    ReplyDelete
  53. தல படம் போடுர....

    50-பின்னூட்டதிற்க்கு வாழ்த்துக்கள்,

    அன்புடன்...
    சரவணன்,

    ReplyDelete
  54. //கான முயலெய்த அம்பினில் வெட்டுக்கிளி சிக்கிக்கிச்சு."
    :)//

    ஆனாலும் பதிவுல வெட்டுக்கிளிக்கே குறிவெச்ச மாதிரி ஒரு பில்டப் குடுத்து இருக்கீங்க பாரு..அதுனால தான்யா நீ எங்களுக்கு எல்லாம் தல.. :-)

    ReplyDelete