Wednesday, August 02, 2006

தொப்பி தந்திரம்

"போனா போவுதுன்னு ஒரு மரியாதைக்கு எதோ நல்லாருக்குன்னு சொன்னா ஒரே படமாவாப் போட்டு ரவுசு பண்ணறேன்னு கேட்டு நீங்கல்லாம் என்னைய நாலு சாத்து சாத்துன்னா தான் நான் அடங்குவேன் போலிருக்கு. சாத்துறதுக்கு முன்னாடி கீழே இருக்குற படத்தை எல்லாம் பாத்துடுங்க. இல்லன்னா எடுத்ததெல்லாம் வீணாப் போயிடும்..."

1. ஞாயித்துக் கெழமை சாங்காலம் அப்பிடியே காலாற ரோட்டோரமா நடந்து வந்தேனா...பாத்தா கரெண்டு கம்பியில ஒரு காக்காவோ, குருவியோ...இல்ல எதோ ஒரு பறக்கற அனிமல்ஸ் ஒக்காந்துருக்கு. உடுவமா...லபக்குன்னு புடி ஒரு படம்


2. பறவை தான்னு மக்கள்ஸை நம்ப வைக்க ஒரு க்ளோசப் ஷாட்டு...


3. போன பதிவுல சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...


4. சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மாலையில்...


5. என் இனிய தமிழ் மக்களே...பூக்கள் விரியும் ஓசையையும், வண்டுகள் தேன் அருந்துவதையும் அந்த பூக்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன் அப்பிடின்னு பாரதிராஜா நாடோடித் தென்றல் படம் துவக்கத்துல சொல்லுவாருல்ல? அதே மாதிரி பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை பூக்களுக்கே தெரியாமல் ஒரு படம் எடுக்கனும்னு பாக்குறேன்...வண்டையும் காணலை...தேனியையும் காணலை. அட அத வுடுங்கப்பா அட்லீஸ்ட் ஒரு ஹம்மிங் பர்டாவது வந்துருக்கலாமில்ல. அதுவும் வரலை. நம்ம ஹேப்பி ஹவர்ஸூ...நமக்கு பூவாண்ட கெடச்சது ஒரு கட்டெறும்பு தான். கட்டெறும்போ, கழுதையோ அப்படியே அதையும் ஒரு கோழி அமுக்கு. சூப்பரா இருக்கில்ல? தேங்க்யூ...தேங்க்யூ.


6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...


7. காடு மேடெல்லாம் திரிஞ்சு படம் புடிக்கற வேலை வெக்காம அழகா கட்டை செவுத்து மேல வந்து ஒக்காந்துச்சு ஒரு ஓணான். தோள்பட்டையில ஆர்மோனியம், கையில மொபைல் இதெல்லாம் வச்சிக்கிட்டே புடிச்ச படம் இது.


8. கீழே இருக்குற படத்தைப் பத்தி கண்டிப்பா சொல்லியே தீரனும். நம்ம இளைய தளபதி விஜய் அவரே பாடுற பாட்டுங்க வரும் போது 'இப்பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்'னு திரையில போட்டு பாத்துருப்பீங்க, அது மாதிரி இந்தப் படத்தைப் பத்தி சொல்லனும்னா 'இப்படத்தைக் கெடுத்தவர் உங்கள் வேளாண் தமிழர் விவசாயி இளா'ன்னு கண்டிப்பாச் சொல்லியே தீரணும். சீதேவியை மூதேவி ஆக்குன பெருமை அவரையே சேரும். அது என்ன சீதேவி, மூதேவிங்கிறீங்களா? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. கேக்கறீங்களா?


ஒரு ஊர்ல ஒரு வெவசாயி இருந்தாராம். நம்ம வேளாண் தமிழரை மாதிரி இல்ல...இவரு ரொம்ப நல்லவரு. சிறந்த இறையாளர். ஒரு முறை என்னாவுதாம்... திடீர்னு அவரு முன்னாடி மகாலட்சுமியும்(சீதேவியும்) அவங்களோட மூத்த சகோதரியான பெரியம்மை(மூதேவியும்) வந்து நிக்கிறாங்களாம். ரெண்டு பேரும் "எங்க ரெண்டு பேத்துல யாரு ரொம்ப அழகுன்னு சொன்னாத் தான் ஆச்சுன்னு" நம்ம 'நல்ல வெவசாயி' இருக்காரில்ல அவரை அழகிப் போட்டி ஜட்ஜ் ஆக்கிட்டாங்களாம். "ஐயயோ என்னடா இது வம்பாப் போச்சு...சீதேவி அழகுன்னு சொன்னா மூதேவி கோச்சிக்கிட்டு நம்ம வீட்டுல வந்து ஒக்காந்துக்குவா...மூதேவி அழகுன்னு சொன்னா சீதேவி கோச்சிக்கிட்டு போயிடுவா...அப்புறம் நாம வெளங்குனா மாதிரி தான்"னு நெனச்சிக்கிட்டாராம். எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சுப் பாத்துட்டு "யம்மா சீதேவி! முன்னழகுல நீ ரொம்ப அழகு, பின்னழகுல உங்கக்கா ரொம்ப டாப்புன்னு சொல்லி சமாளிச்சாராம்". அதாவது சீதேவி வீட்டுக்குள்ள வரும் போதும் மூதேவி வீட்டை விட்டு போகும் போதும் அழகுன்னு ஒரு politically correct answerஐச் சொல்லி எஸ்கேப் ஆனாராம்.

இந்த கதைக்கும் நம்ம 'ஒரு மார்க்கமான வெவசாயிக்கும்' என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்களா? மேல இருக்கிற மொத ஓணான் படம் புடிக்கும் போது தான் இளா என்னோட மொபைலுக்கு ஃபோன் பண்ணாரு. "ஓணானைப் படம் புடிச்சிட்டு இருக்கேன் சாமி"ன்னு சொன்னாலும் வுட மாட்டேங்கிறாரு. அவரு டப்பாஸ் வெடிச்சி முட்டாய் குடுத்த ஒரு விடயத்தைச் சொல்லியே தீருவேன்னு பச்சப்புள்ளயாட்டம் அடம் புடிக்கிறாரு. "சரி ஃபோன் பண்ணிட்டீங்க...சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு கழுத்தைச் சாய்ச்சு பொபைல்ல அவரு பேசறதைக் கேட்டுக்கிடே மொதப் படத்தை எப்படியோ புடிச்சிட்டேன். ஆனா இது போதாது, அடுத்ததா க்ளோசப்ல ஓணானோட முட்டை கண்ணு மட்டும் தெரியற மாதிரி ஒரு சரித்திரப் புகழ் பெற்ற படம் புடிக்கணும்னு ஒணானுக்கு ரொம்ப கிட்ட போயிட்டேன். ஓணானும் ஆடாம அசையாம ஒக்காந்து இருந்துச்சு. வெவசாயி பேசறதை மெய்நிகரா கேட்டுக்கிட்டே நான் ஓணான் கிட்ட போய் கேமராவை ஃபோகஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரியா அந்த நேரம்னு பாத்து 'என்னய்யா சவுண்டே காணும்' னு நம்மாளு கொரலு வுட்டாரு பாருங்க...நானும் என் மெய்நிகர் நிலையிலேருந்து மெய்நிலைக்கு வந்து "இருக்கேஞ் சாமி"ன்னு கொரல் குடுத்தேன் பாருங்க...அந்த சத்தத்துல ஓணான் பயந்து போய் ஒரு 180 டிகிரி டர்ன் அடிச்சுடுச்சு. அதுனால ஓணானின் முன்னழகைப் பாத்து படம் எடுக்க இருந்த இருந்த நானு அதோட பின்னழகைப் படம் புடிக்கிற அவல நிலைக்கு ஆளாயிட்டேன். இப்ப சொல்லுங்க மகாஜனங்களே...சீதேவி மாதிரி இருந்த என்னோட ஓணானை மூதேவி ஆக்குனதுக்கு யாருங்க காரணம்? இவரை என்ன பண்ணா தகும்? ஆனாலும் அவருக்கு ரொம்பத் தான் ஓளவியமுங்க. நான் படம் எடுத்து பெரிய ஆள் ஆயிடக் கூடாதுன்னு அவரு பண்ண சூழ்ச்சியினால தான் இப்பிடி ஆகிப் போச்சு. "ஏற்கனவே நான் காதல் கவிதை எழுத டிரெயினிங் குடுங்க சாமி"ன்னு கேட்ட போதும் எதேதோ சொல்லி என்னை ஏமாத்திட்டாரு...இப்ப நானே என்னோட முயற்சியில பெரியாளு ஆக ட்ரை பண்ணறதுலயும் மண்ணள்ளிப் போடறாரு. ஒரு கலைஞனைத் தன்னோட கலை தாகதத்தைத் தணிச்சிக்க விடாம முட்டுக்கட்டை போடறாரு. நீங்களே என்னான்னு கேளுங்க. இதுக்கு எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்.

சரி...இவரு தான் இப்படின்னா...என் கூட இருக்குறவனுங்க அதுக்கு மேல "விவசாயி டு தி பவர் சிக்ஸ்". இவ்ளோ கஷ்டப் பட்டு ஓணான் படத்தை எடுக்க முயற்சி பண்ண எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஓணான் கடிக்குமா? ஓணான் கடிக்கு வெஷம் இருக்குமான்னு? அங்க பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட கலீக்(இந்தி பையன்) ஒருத்தன் கிட்ட கேட்டேன். "ஆமாங்க இதுக்குப் பேரு 'கிட்கிட்'(இந்தியில) இதோட கடிக்கு வெஷம் இருக்கு"ன்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டான். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தியில 'கிட்கிட்'னா பச்சோந்தின்னு அர்த்தம். "இல்லீங்க நீங்க படம்புடிச்ச அனிமல்ஸ் பேரு தான் கிட்கிட்"ங்கிறான். அதோட சிவாஜி இந்த 'கிட்கிட்'டை வச்சுத் தான் எதோ ஒரு கோட்டையைப் பிடிச்சாருன்னு சொன்னான். சிவாஜின்னா நடிகர் திலகம் சிவாஜி இல்ல...சத்ரபதி சிவாஜி. சத்ரபதின்னா சரத்குமாரான்னு யார்னா கேட்டீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். அதாவது சிவாஜியின் வீரர்கள் 'கிட்கிட்' வாலுல கயித்தைக் கட்டி கீழே நின்னுக்கிட்டு தாங்க புடிக்க நினைக்கிற கோட்டை மதில் சுவரை நோக்கி வீசுவாங்களாம். நம்ம 'கிட்கிட்'டும் கோட்டை மதில் சுவத்தைக் கெட்டியமாப் பிடிச்சுக்குமாம்...அதுக்கப்புறம் வீரர்கள் கிடுகிடுன்னு(கிட்கிட்னு இல்ல)கயித்தைப் புடிச்சு மேலே ஏறி டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம் போட்டு கோட்டையை மீட்டுடுவாங்களாம்.

"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு எனக்கு ஒரே கொழப்பம். "ஆர் யூ ஷ்யூர்"னு கேட்டேன். அவனும் நம்மளை மாதிரியே நேட்ஜியோ பாக்குற பார்ட்டியா...அத வச்சி அடுத்ததா அடிச்சி விட்டான் ஒரு மெகா பீலா "ஐ ஆம் வெரி ஷ்யூர்...இந்தோனேசியாவுல இந்த சின்ன கிட்கிட் மாதிரியே பெரிய சைஸ்ல கிட்கிட் ஒன்னு இருக்கு...அதுக்கு கோமோடோ டிராகன்னு பேரு...அது ஆளையே அடிச்சித் தின்னுடும். பயங்கர வெஷம்" அப்படின்னான். "டேய் எனக்குத் தெரிஞ்சு ஓணானுக்கு இங்கிலீசுல Garden Lizardனு பேரு...நீ சொல்ற 'கிட்கிட்'ங்கிறது கலர் மாறுற பச்சோந்தி(Chameleon). சிவாஜி கோட்டையைப் புடிக்க உபயோகிச்சது உடும்பு(Iguana). அந்த உடும்போட தோலை வச்சித் தான் கஞ்சீராங்கிற இசை வாத்தியம் செய்யிறாங்க" அப்படின்னேன். இம்புட்டு நேரம் பக்கத்துல நின்னு கதை கேட்டுட்டு இருந்த என்னோட டீம் லீடு(தமிழ் காரர்) "இந்த டும்டும்டும்டும்னு கோயில்ல வேப்பிலை அடிக்கும் போது அடிப்பாங்களே அதுவா அப்படின்னு வெறுப்பேத்துனாரு". "ஐயோ அது உடுக்கைங்க...நான் சொல்றது கஞ்சீரா...இது கர்நாடக இசை வாத்தியம்" அப்படின்னேன். "என்னவோ போங்க Garden Lizard, Chameleon, Iguana, Comodo Dragonனு என்னென்னமோ சொல்றீங்க...ஒன்னும் புரியலை. இப்ப உடுக்கைக்கும் கஞ்சீராவுக்கும் நடுவுல வேற ஒரே கொழப்பம். நீங்க வேலை செய்யிற SAPல ஒன்னும் கொழப்பம் இல்லியே"அப்படின்னு சந்துல சிந்து பாடிட்டாரு.

"ஆஹா இன்னிக்கு நமக்கு நாளு சூப்பராத் தாண்டா விடிஞ்சிருக்கு"ன்னு நெனச்சிக்கிட்டேன். மொதல்ல முன்னழகைப் படம் புடிக்கப் போனவனைப் பின்னழகு படம் புடிக்க வச்சாரு வெவசாயிங்கிற எனிமி. அப்புறம் '16வயதினிலே' படத்துல கிராமத்துப் பசங்க அடிச்சி கொல்ற ஒரு சின்ன ஓணானை கோமோடோ டிராகன் லெவலுக்குக் கொண்டு போய் நம்மளை பேக்கு ஆக்குறான் இன்னொருத்தன். இந்த கொழப்பம் தீருறதுக்குள்ள ஓணான் தோலுல...சே உடும்பு தோலுல செய்யிறது உடுக்கையா கஞ்சீராவான்னு வேற ஒரே கன்ஃபியூசன். இந்த கொழப்பத்துக்கு எல்லாம் நடுவுல ஓணானின் விஷக்கடியையும் பொருட்படுத்தாமல் உசுரைப் பணயம் வச்சித் தான் படம் எல்லாம் எடுத்து போடறோம்...அதுனால லேசா நெனச்சிடாதீங்க. சரியா?

(பி.கு: தொடர்ச்சியா மூணு படப்பதிவுகள் போட்டதால இது ஒரு ஹாட் ட்ரிக் பதிவு. 'Hat Trick' உடைய தமிழாக்கம் தான் 'தொப்பி தந்திரம்'. 'ஆன்மீகப் பேரொளி சொல் ஒரு சொல்' அண்ணன் குமரன் தான் சொல்லனும் தந்திரத்துக்கு உகந்த தூய தமிழ் சொல் என்னன்னு? அதோட சொல் ஒரு சொல்லுலேருந்து சுட்டப் பழங்கள் இந்தப் பதிவுல எங்கே எங்கே என்ன என்ன இருக்குன்னு சரியா கண்டுபுடிச்சி சொன்னீங்கன்னா, கம்பெனியின் சார்பா சிறப்பு பம்பர் பரிசா ஒரு அழகிய கோமோடோ டிராகனும், தாளம் போட ஒரு கஞ்சீராவும் வழங்கப்படும்)

61 comments:

  1. ஓனார் படம் சூப்பர் ...ஒனாரைப் பார்த்து பலவருசம் ஆகுது :)
    'பானப்பத்திர ஒனான்டி' ஒரு பாட்டு இஅ இபுல் ஒரு கவித இருக்காமே கைப்புள்ளைக்கு தெரியுமா ?
    மன்னா நீ ஒரு மாமா மன்னா ! என்று தொடங்கும் :)) முழு பாட்டும் வேனும் என்றால் விடாது கருப்பு பதிவில் இருக்கு :)

    ReplyDelete
  2. சூப்பர்.. ரொம்ப நாள் கழிச்சி எனக்கு நல்லா சிரிப்பு வந்த ஒரு பதிவு.. சொல் ஒரு சொல்லை முழுக்க முழுக்கப் பயன்படுத்தி இருக்கிறதைப் பார்த்து எனக்குத் தான் ரொம்ப ஔவியமா போய்டிச்சு அண்ணாச்சி..

    ஸ்ரீதேவி மூதேவி ரெண்டும் சூப்பர்..

    இ.ந.வே.உ

    ReplyDelete
  3. ஆஹா.. ரொம்ப்ப்ப்ப்ப பெரிசாக்கீதே...

    ReplyDelete
  4. //அதுனால ஓணானின் முன்னழகைப் பாத்து படம் எடுக்க இருந்த இருந்த நானு அதோட பின்னழகைப் படம் புடிக்கிற அவல நிலைக்கு ஆளாயிட்டேன்//

    கஷ்டம்தான் தல ! :(

    //ஓணான் கடிக்குமா? ஓணான் கடிக்கு வெஷம் இருக்குமான்னு?//

    தல ஓணான் கடுக்கு ஆனா நம்மளை இல்லே அது சாப்பிடப் புடிக்கிர பூச்சியத்தான் :)) ஓணானுக்கு ஏது தல விஷம்? அது பாட்டுக்கு செவனேன்னு சுத்திகிட்டு இருக்கு நம்ம பய புள்ளைகதான் அதையப் புடிச்சு கயித்துலே கட்டி பாடாய்ப்படுத்துவானுங்க :(

    ஒரே சிரிப்புதான் போங்க. கேமாராவு கையுமா கைப்பூன்னு ஒரு தலைப்பப் போட்டுடலாமா?? :))

    ReplyDelete
  5. என்னதான் சொல்லுங்க, அந்தக் 'கட்டெறும்பு'தான் சூப்பர்:-)))

    ReplyDelete
  6. நல்லாவே சிரிக்க வைக்றீங்க;சிந்திக்கவும் வைக்கிறீங்க

    ReplyDelete
  7. கைப்பு...
    பறவை இரண்டுமுறை,
    ஓணான் இரண்டுமுறை,
    இதெல்லாம் ஏதோ
    பின்னூட்ட கயமைதனம் மாதிரி, புகைப்படக் கயமைத்தமா..?
    (போலீஸ்க்கார் கவனிக்க...)



    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  8. படத்தை விட உங்க வர்ணணை சூப்பர்..

    ///
    ரொம்ப நாள் கழிச்சி எனக்கு நல்லா சிரிப்பு வந்த ஒரு பதிவு
    ///

    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  9. உன்னை கூப்பிட்டு பேசுனதுக்கு ஏன்யா மூதேவ், சீதேவிய எல்லாம் இழுக்கிற.

    ReplyDelete
  10. //மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ//
    யார் அந்த தோழி'ன்னு சொல்லிட்டீங்கன்னா மருவதையா இருக்கும், இல்லைன்னா கெட்டு போயிரும் .......

    ReplyDelete
  11. //யார் அந்த தோழி'ன்னு சொல்லிட்டீங்கன்னா மருவதையா இருக்கும்//

    லெச்சுமி...பாக்கியலெச்சுமி.

    ReplyDelete
  12. //ஒரு politically correct answerஐச் சொல்லி எஸ்கேப் ஆனாராம்//
    இப்ப தான்யா என்ன பத்தி சரியா சொல்லி இருக்கே

    ReplyDelete
  13. //இதுக்கு எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்//
    அக்கவுண்ட் நம்பர் தரட்டுமா?

    ReplyDelete
  14. //உன்னை கூப்பிட்டு பேசுனதுக்கு ஏன்யா மூதேவ், சீதேவிய எல்லாம் இழுக்கிற//

    பண்ணறதையும் பண்ணிட்டு கேள்வி கேக்குறதை பாரு ஒன்னும் தெரியாத பச்சைப்புள்ளயாட்டம்?

    ReplyDelete
  15. //ஒரு கலைஞனைத் தன்னோட கலை தாகதத்தைத் தணிச்சிக்க விடாம முட்டுக்கட்டை போடறாரு//
    முன்னாடி பின்னாடின்னு சொன்ன கதை நல்லாதான் இருக்கு ஆனா ஓணான பக்கவாட்டுல தான்யா படம் புடிச்சு போட்டு இருக்க

    ReplyDelete
  16. //பச்சோந்தி(Chameleon)//
    ஆஹா I Am The Escape

    ReplyDelete
  17. //காடு மேடெல்லாம் திரிஞ்சு படம் புடிக்கற வேலை வெக்காம அழகா கட்டை செவுத்து மேல வந்து ஒக்காந்துச்சு ஒரு ஓணான். தோள்பட்டையில ஆர்மோனியம், கையில மொபைல் இதெல்லாம் வச்சிக்கிட்டே புடிச்ச படம் இது.
    //

    அரண்மனை ஓணான்!?

    ReplyDelete
  18. //ஓனார் படம் சூப்பர் ...//
    நன்றிங்கோ. உங்களைப் பாத்தா கலையை ரசிக்கத் தெரிஞ்சவராத் தெரியுது.

    //ஒனாரைப் பார்த்து பலவருசம் ஆகுது :)//
    எப்படிங்க போன தடவை பாத்ததுக்கும் இப்ப பாக்குறதுக்கும் நடுவுல ரொம்ப எளைச்சுப் போயிட்டாரா?
    :)

    //'பானப்பத்திர ஒனான்டி' ஒரு பாட்டு இஅ இபுல் ஒரு கவித இருக்காமே கைப்புள்ளைக்கு தெரியுமா ?
    மன்னா நீ ஒரு மாமா மன்னா ! என்று தொடங்கும் :)) முழு பாட்டும் வேனும் என்றால் விடாது கருப்பு பதிவில் இருக்கு :)//
    சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. தகவலுக்கு ரொம்ப நன்றிங்க கண்ணன். போய் தெரிஞ்சிக்கிறேன்.

    ReplyDelete
  19. //சூப்பர்.. ரொம்ப நாள் கழிச்சி எனக்கு நல்லா சிரிப்பு வந்த ஒரு பதிவு.. //
    வாங்க பொன்ஸ்! ரொம்ப சந்தோஷம்.

    //சொல் ஒரு சொல்லை முழுக்க முழுக்கப் பயன்படுத்தி இருக்கிறதைப் பார்த்து எனக்குத் தான் ரொம்ப ஔவியமா போய்டிச்சு அண்ணாச்சி.. //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வியமா? ஒங்களுக்குமா?


    //ஸ்ரீதேவி மூதேவி ரெண்டும் சூப்பர்..//
    மறுக்கா டேங்ஸ்.

    //இ.ந.வே.உ//
    இது இன்னாது? பிரிலியே?

    பொன்ஸ்! சரியான பதிலில் ஒரு பகுதியைச் சொன்னதால கம்பெனியின் தரப்பிலிருந்து ஒங்களுக்கு ஒரு அழகிய கோமோடோ டிராகன் வழங்கப்படுகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கஞ்சீராவும் வேணும்னா இன்னும் கொஞ்சம்
    மெனக்கெடனும்.

    ReplyDelete
  20. //ஆஹா.. ரொம்ப்ப்ப்ப்ப பெரிசாக்கீதே...//

    ஓணான் வாலு தானே? அது பொறந்ததுலேருந்தே அப்படித் தானாம்.
    :)

    ReplyDelete
  21. //கஷ்டம்தான் தல ! :(//
    என் கஷ்டத்தை நீயாச்சும் புரிஞ்சிக்கிட்டியே? அதுவே போதும்

    //தல ஓணான் கடுக்கு ஆனா நம்மளை இல்லே அது சாப்பிடப் புடிக்கிர பூச்சியத்தான் :)) ஓணானுக்கு ஏது தல விஷம்? அது பாட்டுக்கு செவனேன்னு சுத்திகிட்டு இருக்கு நம்ம பய புள்ளைகதான் அதையப் புடிச்சு கயித்துலே கட்டி பாடாய்ப்படுத்துவானுங்க :(//
    ஏய் இல்லப்பா! அந்தப் பையன் வெஷம் இருக்குன்னு சொன்னான்பா. எது எப்படியோ ஓணான் கடிக்கிற வரைக்கும் அது உண்மையா பொய்யான்னு தெரியாது.

    //ஒரே சிரிப்புதான் போங்க. கேமாராவு கையுமா கைப்பூன்னு ஒரு தலைப்பப் போட்டுடலாமா?? :))//
    எங்கே போடப் போறே?

    ReplyDelete
  22. //என்னதான் சொல்லுங்க, அந்தக் 'கட்டெறும்பு'தான் சூப்பர்:-)))//

    வாங்கக்கா!
    எனக்குத் தெரியுமே அது தான் எல்லாருக்கும் புடிக்கும்னு. அதான் முன் ஜாக்கிரதையா தேங்க்யூ பதிவிலேயே போட்டுட்டேன்.

    ஒங்களுக்கு இன்னொரு டேங்க்யூ.
    :)

    ReplyDelete
  23. //நல்லாவே சிரிக்க வைக்றீங்க;சிந்திக்கவும் வைக்கிறீங்க//

    வாங்க சார்,
    ரொம்ப சந்தோஷம். ஆனா எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ஜாஸ்தியா...அதான் ஒரு மாதிரியா இருக்குது.

    ReplyDelete
  24. //கைப்பு...
    பறவை இரண்டுமுறை,
    ஓணான் இரண்டுமுறை,
    இதெல்லாம் ஏதோ
    பின்னூட்ட கயமைதனம் மாதிரி, புகைப்படக் கயமைத்தமா..?
    (போலீஸ்க்கார் கவனிக்க...)//

    அட! இந்த ஐடியா கூட நல்லாருக்கே? உன் பேரைச் சொல்லி ஆரம்பிச்சிக்கலாம்னு பாக்கறேன்பா!

    ReplyDelete
  25. //படத்தை விட உங்க வர்ணணை சூப்பர்..//
    :(( அளுவாச்சி அளுவாச்சியா வருது. அப்புறம் நான் ஓன்னு அளுதுருவேன்.

    //ரொம்ப நாள் கழிச்சி எனக்கு நல்லா சிரிப்பு வந்த ஒரு பதிவு
    //
    வழி மொழிகிறேன்//
    கொஞ்சம் அளுகை கொறஞ்சிருக்கு.

    ReplyDelete
  26. //அரண்மனை ஓணான்!?//
    ஐயயோ! படம் எடுக்கும் போது நான் ஓணானோட இனிஷியல், பூர்வீகம் இதெல்லாம் கேக்காம வுட்டுட்டேனே?
    இப்ப என்னங்க 'தள' பண்ணலாம்?
    :)

    ReplyDelete
  27. //இப்ப தான்யா என்ன பத்தி சரியா சொல்லி இருக்கே//

    சாமி! அது அந்த கதையில வர்ற நல்ல வெவசாயியைப் பத்திச் சொன்னது. உங்களுக்கும் அவருக்கும் ரொம்ப தூரமுங்கோ.

    ReplyDelete
  28. //இப்ப என்னங்க 'தள' பண்ணலாம்?
    //

    அட! இது ஒரு பெரிய விஷயமா?

    ஐ.டி கார்டை வாங்கி பாருங்க! அம்புட்டுதேன்!

    ReplyDelete
  29. //அக்கவுண்ட் நம்பர் தரட்டுமா?//

    எப்பத் தான் திருந்தப் போறீங்களோ?

    ReplyDelete
  30. //முன்னாடி பின்னாடின்னு சொன்ன கதை நல்லாதான் இருக்கு ஆனா ஓணான பக்கவாட்டுல தான்யா படம் புடிச்சு போட்டு இருக்க//

    கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால் துப்பறிகிறார்னு படம் எடுக்கலாம். பண்ணற லொள்ளை எல்லாம் பண்ணி படத்தைக் கெடுத்து வுட்டுப் புட்டு எகத்தாளத்தைப் பாரு... நக்கலைப் பாரு...ரவுசைப் பாரு...

    ReplyDelete
  31. //அட! இது ஒரு பெரிய விஷயமா?

    ஐ.டி கார்டை வாங்கி பாருங்க! அம்புட்டுதேன்!//

    இப்ப ரோசனை குடுத்தீங்க பாருங்க...இதுக்குத் தான் ஒங்களை மாதிரி ஒரு தளபதி வேணுங்கிறது. அப்படியே செஞ்சிர்ரேன்.

    ReplyDelete
  32. அந்த கட்டெறும்பு உயிரோட இருப்பது மாதிரி தெரியலயே தல ???

    ReplyDelete
  33. //
    கம்பெனியின் சார்பா சிறப்பு பம்பர் பரிசா ஒரு அழகிய கோமோடோ டிராகனும், தாளம் போட ஒரு கஞ்சீராவும் வழங்கப்படும்
    //

    ஆர்மோனியம் பெட்டியை மட்டும் யாருக்கும் குடுக்காத என்ன??

    ReplyDelete
  34. //அந்த கட்டெறும்பு உயிரோட இருப்பது மாதிரி தெரியலயே தல ???//

    அடப் பாவி! நான் எதோ பூவுக்கு எறும்பு தூவி அஞ்சலி செலுத்துன மாதிரி இல்ல சொல்லுறே?

    ReplyDelete
  35. //அந்த கட்டெறும்பு உயிரோட இருப்பது மாதிரி தெரியலயே தல ???//

    அடப் பாவி! நான் எதோ பூவுக்கு எறும்பு தூவி அஞ்சலி செலுத்தி படம் புடிச்சி போட்ட மாதிரி இல்ல சொல்லுறே?

    ReplyDelete
  36. //ஆர்மோனியம் பெட்டியை மட்டும் யாருக்கும் குடுக்காத என்ன??//

    மின்னலு! ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி கடைசில என்னையவே கடிச்சிட்ட பாத்தியா? ஆர்மோனியத்தைக் குடுத்துட்டா என் டப்பா டான்ஸ் ஆடிடும்பா.

    ReplyDelete
  37. //
    நான் எதோ பூவுக்கு எறும்பு தூவி அஞ்சலி செலுத்தி படம் புடிச்சி போட்ட
    //

    தலனா தலதான் செஞ்சத இப்படி தான் ஒத்துக்கனும்..smart boy.



    (ஒரே பின்னுட்டத்தை ரெண்டு வாட்டி சொன்னியா நான் சொன்னதுதான் உண்மையோனு.........)

    ReplyDelete
  38. //
    சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...
    //

    சூப்பராதான் இருக்கு

    உள்ள என்னா இருக்குனு சொன்னா யோசிக்காம வேற வேலையை பார்ப்பேன்.

    ReplyDelete
  39. உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு.

    ReplyDelete
  40. உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு.

    ReplyDelete
  41. :))

    கைப்ஸ்,
    அந்த சட்டிப்பானைய விட மாட்டேங்கிறீங்களே..அதுல என்ன தான் இருக்கு??

    இப்படி கேட்டா பதில் வராது...அந்த சட்டிய டாப் ஆங்கிள்ல இருந்து ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்..செமையா இருக்கும்...

    ReplyDelete
  42. //முன்னாடி பின்னாடின்னு சொன்ன கதை நல்லாதான் இருக்கு ஆனா ஓணான பக்கவாட்டுல தான்யா படம் புடிச்சு போட்டு இருக்க//

    கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால் துப்பறிகிறார்னு படம் எடுக்கலாம்//
    சங்கர்லால் வரை எதுக்குப் போய்கிட்டு.. சாம்பு டீம்ல ஆள் தேடுறாங்களாம்.. ;)

    ReplyDelete
  43. ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட்டோ எடுத்திருக்கீங்க...

    மூதேவில ஆரம்பிச்சு உடுக்கை வரைக்கும் சூப்பர்.... :-)

    ReplyDelete
  44. ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...

    யப்பா இளா அடுத்தமுறை சீதேவிக்கும் மூதேவிக்கும் முதல்ல போனைப் போட்டு மேல நான் சொன்னதைக் கேட்டுபிட்டு அப்புறம் இந்த ஹேண்ட்பாய்க்கு பேசு....

    ReplyDelete
  45. கைப்புள்ள காலிங்.. அது நேற்று..
    கைப்புள்ள கிளிக்கிங் அது இன்று

    மரியாதையா பிளாக் பேரை மாத்து

    ReplyDelete
  46. வேலியிலே போற ஓணானை போட்டோ மட்டும் எடுக்குறதோட நிறுத்திக்கோ ...
    பழமொழி ஆர்வத்துல்ல வேற எதுவும் பண்ணிறாதே... ஆ பத்து ஆயி டும்

    ReplyDelete
  47. அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது செயவது ஏனோ? இது அது கேட்கும் கேள்வி விளங்குதா?

    ReplyDelete
  48. //6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...

    முருகேஷா.... நான் நம்பிட்டேன்.

    ReplyDelete
  49. //தலனா தலதான் செஞ்சத இப்படி தான் ஒத்துக்கனும்..smart boy//
    ஐயோ ஐயோ இப்படி பாராட்டியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு நீ திரிஞ்சின்னா நான் என்ன பண்ண முடியும்? பாராட்டிக்க.

    ReplyDelete
  50. //சூப்பராதான் இருக்கு
    உள்ள என்னா இருக்குனு சொன்னா யோசிக்காம வேற வேலையை பார்ப்பேன்.//

    //கைப்ஸ்,
    அந்த சட்டிப்பானைய விட மாட்டேங்கிறீங்களே..அதுல என்ன தான் இருக்கு??//

    மின்னலு, கப்பி('விநாயகா வேலவா' இந்த டோன்ல படிக்கனும்),
    இப்பிடியெல்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே சட்டிக்குள்ள எட்டிப் பாத்தேன். சொன்னா ஆச்சரியப்படுவீங்க...உள்ள பாக்குறேன் ஒன்னுமில்ல...வெறும் ஒட்டடையைத் தவிர. அது தான் டாப் ஆங்கிள் ஷாட் நான் வைக்காம வுட்டுட்டேன்.

    //இப்படி கேட்டா பதில் வராது...அந்த சட்டிய டாப் ஆங்கிள்ல இருந்து ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்..செமையா இருக்கும்...//
    நோ மை பாய்! இப்பிடியெல்லாம் உசுப்பேத்துனா நான் மனசு மாறி டாப் ஆங்கிள் போட்டோ எடுத்து 'கப்பி கேட்ட சட்டி'ன்னு பதிவு போட்டாலும் போட்டுருவேன்.

    ReplyDelete
  51. //உம்ம மெய்நிகர் படங்களை விடுமய்யா. எழுதறீரு பாரும். அத பாத்தாத்தான் ஒரே ஒளவியமா இருக்கு//
    ஓளவியமா? ஒங்களுக்கா? மெய்யாலுமேவா இல்ல மெய்நிகராவா? நீங்க ஒளவியம் படற அளவுக்கு நம்ம கைல விதயமும் கெடயாது அந்த அளவுக்கு நமக்கு அறிவாண்மையும் இல்லீங்ணா.
    :)

    ReplyDelete
  52. //கண்டுபுடிச்சிட்டாருய்யா. ஒங்களை வச்சி சங்கர்லால் துப்பறிகிறார்னு படம் எடுக்கலாம்//
    சங்கர்லால் வரை எதுக்குப் போய்கிட்டு.. சாம்பு டீம்ல ஆள் தேடுறாங்களாம்.. ;)//

    வெவசாயி கேக்குதா? ஆள் எடுக்குறாங்களாம்.
    :)

    ReplyDelete
  53. //ஓரமா போன ஏறும்ப புடிச்சு பூமேல உட்டு சூப்பரா போட்டோ எடுத்திருக்கீங்க...//
    பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்றீங்களே 12பி...எப்ப்பிடி?

    //மூதேவில ஆரம்பிச்சு உடுக்கை வரைக்கும் சூப்பர்.... :-) //
    நன்னிங்கோ.
    :)

    ReplyDelete
  54. //ஹலோ ஹலோ மே ஐ கம் இன்..... எச் யூஸ் மீ...

    யப்பா இளா அடுத்தமுறை சீதேவிக்கும் மூதேவிக்கும் முதல்ல போனைப் போட்டு மேல நான் சொன்னதைக் கேட்டுபிட்டு அப்புறம் இந்த ஹேண்ட்பாய்க்கு பேசு....//

    வாப்பா தேவு,
    நல்லா சொல்லுப்பா...அப்பவாச்சும் வெவசாயி திருந்துறாரான்னு பாப்போம்.

    ReplyDelete
  55. //கைப்புள்ள காலிங்.. அது நேற்று..
    கைப்புள்ள கிளிக்கிங் அது இன்று

    மரியாதையா பிளாக் பேரை மாத்து//

    க்ளிக்கிங்கும் கொஞ்ச நாள் தான்யா 3டி மாதிரி...சீ சீ இந்த பழம் புளிக்கும் கதை இன்னும் வரலை...அது வரைக்கும் அட்ஜிஸ் பண்ணிக்கமா.

    ReplyDelete
  56. //அது அது அது அதைச் செய்யுற நேரம் இதைப் போய் இது செயவது ஏனோ? இது அது கேட்கும் கேள்வி விளங்குதா?//

    எது?
    :)

    ReplyDelete
  57. ////6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...

    முருகேஷா.... நான் நம்பிட்டேன்//

    ஆஹா மாப்பூ....ஆபீஸ்ல ஆயிரம் ஆப்பு வாங்கினாலும் இந்த மாதிரி விஷயத்துல கரெக்டா முருகேஷாவோட வந்துடுறியே? அது எப்பிடி மாப்பு?

    ReplyDelete
  58. //நோ மை பாய்! இப்பிடியெல்லாம் உசுப்பேத்துனா நான் மனசு மாறி டாப் ஆங்கிள் போட்டோ எடுத்து 'கப்பி கேட்ட சட்டி'ன்னு பதிவு போட்டாலும் போட்டுருவேன்.
    //

    தல
    நான் வேணாம்னு சொன்னா உடனே விடவா போற? உனக்கு தான் முத்தி போய்டுச்சே..

    ReplyDelete
  59. Nanba nalla super-aa ezhuthi irukke. Intha blog-iie maintain pannungo.

    Quick Question: How do I write in Tamil in this blog?. Should I install any specific font/application/vera ethavathuu....? Many thanks in advance.

    ReplyDelete
  60. //தல
    நான் வேணாம்னு சொன்னா உடனே விடவா போற? உனக்கு தான் முத்தி போய்டுச்சே..//

    கப்பி!
    சொன்னா சிரிப்பே. நெசமாலுமே இந்த போட்டா வெசயத்துல முத்தி தான் போச்சுன்னு நெனக்கிறேன். ஒன் கமெண்டு வர்றதுக்கு முன்னாடி ஒரு டாப் ஆங்கிள் படம் புடிச்சு போடலாம்னு சட்டியில எட்டித் தான் பாத்தேன். அதுக்குள்ள ஒரு பழைய ஹவாய் செருப்பு, ஒரு பிளாஸ்டிக் பை, ஒரு வாரமா மழை பேஞ்சதுனால தேங்கின தண்ணி, சில துண்டு பீடி இதெல்லாம் தான் இருக்கு. இதை படம் புடிச்சிப் போட்டா நல்லாவா இருக்கும்?

    ReplyDelete
  61. //
    "இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு//

    LOL

    ReplyDelete