Wednesday, August 02, 2006

ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)

பாஸ்டன் பாலாவும், நம்ம வெங்கட்ரமணியும் கண்ணைக் காட்டி புதிர் எல்லாம் போட்டாங்க...அதப் பாத்து நமக்கும் ஒரு ஆசை. யாரையாச்சும் கேள்வி கேக்கனுமின்னு. ஆசை யாரை விட்டுச்சு சொல்லுங்க? சரி! இங்கே ஒரு 20 கேள்வி கேட்டிருக்கேன். இங்கண இருக்குற மண்டைங்க எல்லாம் அத நிமிசத்துல ஊதித் தள்ளிடுவாங்கன்னு தெரியும். அதுனால எல்லோரும் பங்கு பெறனும் என்ற நல்ல எண்ணத்தில்(குறிப்பா இந்திய குடிமகன்கள்) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணிட்டு விடைகளை வெளியிடலாம்னு ஒரு எண்ணம்.

சரி இப்ப கேள்விகள்.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?

2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)


4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த பிரபலத்தின் மீது நடைபெற்ற கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது?

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?

112 comments:

  1. இருபது கேள்விக்கும் ஒரே பதில்தான் தெரியாது. :)))))

    இப்படியும் சொல்லலாம்

    இன்னும் யோசிக்க வேண்டியிருக்கு !!

    ReplyDelete
  2. இப்போதைக்கு தெரிஞ்ச பதில்
    1. இரண்டாம் உலகப் போர் அணுகுண்டு
    10 .பிரேவரி மோட்டார் வெகிக்கிள்
    12. அவ்வையார். கே.பி.சுந்தராம்பாள்
    13. அமெரிக்க அதிபர் மேல் நடந்த கொலைமுயற்சி - ஜாக்கலாக நடித்தவர் புரூஸ் வில்லிஸ்

    மிச்சத்த தெரிஞ்சதும் சொல்றன் வர்ட்டா?

    ReplyDelete
  3. 1) Mother Teresa
    5) Albert Einstien
    6) Sepukku
    9) Churchil

    ReplyDelete
  4. கைப்பு.. நல்லாத்தான இருந்தீரு.. ரொம்ப முத்திடுச்சா?

    ReplyDelete
  5. 10) Bayerische Motoren Werke AG
    19) Charles de Gaulle

    ReplyDelete
  6. 15) Gen. H. Norman Schwarzkopf

    17) ithu naanga software concern's thungurathukkaaka ERpaduththinathunnu ninaichchikkiddu irukkEn.

    12) M.S.

    ReplyDelete
  7. 1. தெரசா
    2 டிப்பிஸ் - அமெரிக்கன் டென்ட்
    3.ஜெ.ராபர்ட் ஒபென்கெய்மர்
    4.செப்புகு - மரியாதைக்குறிய மரணம்
    5.விசென்ட் சர்ச்சில்
    6.ஒட்டகம்

    ReplyDelete
  8. 1.Mother Teresa.
    5.Kenneth Tompkins Bainbridge
    9.Winston Churchil
    10.BMW-Bayerische Motoren Werke (Bavarian motor works), a German manufacturer

    ReplyDelete
  9. இந்த பதில்கள் சத்தியமாக காமெடிக்காக மட்டுமே!

    1.உலகிலேயே வித்தியாசமான பெயர் கொண்ட பெண்மணி!

    2. பீத்தோவான் (இது சீரியஸான பதில்)

    3. போபால் விஷவாயுக் கசிவு(இதுவும் சீரியஸ் பதில்)

    4. Red Intents (இது காமெடி)

    8. கால்வனோ மீட்டர்.(இது காமெடி)

    ReplyDelete
  10. //3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)//
    வியட்நாம் போர் - புகைப்படம் எடுத்தவர் : ஜான் கெர்ரி

    ReplyDelete
  11. 16 க்கு டச்சுகாரர்கள்

    ReplyDelete
  12. ஆட்டம் ஸ்டார்ட்டுங்க. பின்னூட்டம் வர்ற வேகத்தைப் பாத்து ஆடிப் போயிட்டேன். இப்பிடி ப்ளாக்ல க்விஸ் எல்லாம் வச்சா பெண்டு கழண்டுடும்னு புரிஞ்சிடுச்சு.

    இப்போதைக்கு ஆட்டத்துல இருக்கிறவங்க மகேந்திரன், மோகன் தாஸ், தேவ், இளா, வியாபாரி & சிபி.

    கொஞ்சம் டைம் குடுங்க. இந்தா வந்துட்டேன்.

    ReplyDelete
  13. 3. வியட்நாம் போர்

    ReplyDelete
  14. மகேந்திரன் சார்,
    நீங்கள் சரியான பதில்கள் வழங்கிய கேள்வி எண்கள்.
    1
    4
    10
    12 partly

    நீங்க அனுப்புன இன்னும் சில பதில்கள் சரியானதா இருந்தாலும் அவை கேள்வி எண்களோட ஒத்துப் போகலை. கேள்வி எண்ணை வச்சி பதில் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.

    ReplyDelete
  15. என்னா நான் சொன்ன பதிலெல்லாம் சரியா இல்லையா சரியில்லன்னா சொல்லுங்க கூகிளாண்டவரான்ட கேட்டு சொல்றேன்

    ReplyDelete
  16. 1. அன்னை தெரேசா
    2.
    3. வியட்னாம் போர். ஓடி வரும் சிறுமி கிம் புக்(Kim Phuc). புகைப்படம் எடுத்தவர் நிக் உட், அசோசியேட்டட் பிரஸ் (Associated Press photographer Nick Út).
    4. டிப்பி (Tipi)
    5. ராபர்ட் ஓபன்ஹைமர் (Robert Oppenheimer - Director of the Manhattan Project). ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு
    6. செப்புக்கு (Seppuku)
    7. லார்ட் ஜியார்ஜ் கர்சன். (Lord George Curzon)
    8. Brannock Device.
    9. வின்ஸ்டன் சர்ச்சில்.
    10. Bayerische Motoren Werke
    11.
    12. கே.பி.சுந்தராம்பாள். ஒளவையார்.
    13. ஸ்கிராபிள்.
    14.
    15. Norman Schwarzkopf
    16. Danish East India Company
    17. ஒட்டகம்.
    18. திலிப் குமார்.
    19. Plot to kill Charles de Gaulle, the President of France.
    20.

    நன்றி : wikipedia and google.

    ReplyDelete
  17. மோகன் தாஸ்,
    சரியான பதில்கள்
    1
    5
    6
    9
    10
    15
    19

    ReplyDelete
  18. 1. அன்னை தெரெசா (Agnes Gonxhe Bojaxhiu)
    7. கர்சன் பிரபு (பெங்கால் பிரிவினை)
    9. வின்ஸ்டன் சர்ச்சில் ('I have nothing to offer but blood, toil, tears and sweat)
    13. ஸ்கிராபிள் (board game)
    15. நார்மன் ஸ்வார்ட்ஸ்கோஃப் (ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்)
    16. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி (தரங்கம்பாடி)
    19. அமெரிக்க அதிபர் கென்னடி (?) (The Day of the Jackal)

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  19. ஆன்ஸர் பேப்பர் அவுட்டாக வாய்ப்பு உண்டா தல?

    ReplyDelete
  20. மோகன் தாஸ்,
    சாரிங்க! உங்களோட 5ஆவது விடை தவறுங்க. மன்னிக்கனும்.

    ReplyDelete
  21. 3. வியட்நாம் போரில் நாபாம் என்ற குண்டின் தாக்கத்தை வெளிப்படுத்திய படம். மேலதிக விபரங்களுக்கு கூகிளாண்டவரை அணுகவும்.

    ReplyDelete
  22. 1. Mother Terasa?சரியா தெரியல
    2. Bethovan or Mozart?ரெண்டு பேர்தான் தெரியும்
    12. savithiri இது கண்டிப்பாத் தெரியும்
    13. scrabble?இதுவும் அது போல ஒரு விளையாட்டு கண்டிப்பா தெரியல
    17. camel?ஒரு வகை ஒட்டகமா?
    19. John F. Kennedy?படம் பார்த்திருக்கேன் ஆனா சரியா தெரியல

    எப்படி இம்புட்டு அறிவாளியா இருக்கீக?

    ReplyDelete
  23. வியாபாரி கலக்கறீங்கோ,
    சரியான பதில்கள்.
    1
    3
    6
    7
    9
    10
    11
    12 மகேந்திரன் சாரை மாதிரி ஒரு பகுதி மட்டும்.
    15
    16
    17
    18

    5ஆவது தப்புங்க... பல பேரும் இதே பேரைத் தான் சொல்லிருக்காங்க. இப்போதைக்கு நீங்க தான் லீடிங்.

    ReplyDelete
  24. 1945, முதல் முறையாக அணுகுண்டு வெடிக்கப்பட்ட பொழுது டாக்டர். கென்னத் பெயின்பிரிஜ் கூறியது.

    ReplyDelete
  25. தேவ் 13, 18 சரி...16 தப்பு.

    ReplyDelete
  26. விவசாயி,
    உங்க நாலுமே சரி...
    1,5,9,10

    5 கஷ்டமானதுன்னு நெனச்சேன் 8 மாதிரியே. 5க்கு சரியான பதில் சொல்லிட்டாருப்பா.

    மத்ததையும் முயற்சி பண்ணுங்களேன்.

    ReplyDelete
  27. 1. Mother Terasa
    5. Robert Oppenheimer
    9. Winston Churchill
    10. Bayerische Motoren Werke AG,
    11. Avvayar movie Actress forgot her name
    14. Jason James Richter
    17. Camel
    19. France President Gen.Charles De Gaulle

    ReplyDelete
  28. 6. செப்புக்கு, ஹராகிரி என இரு வார்த்தைகள் இதனைக் குறிக்க உண்டு.

    ReplyDelete
  29. கோவி கண்ணன்,
    உங்களுடைய 3க்கான பதில் சரி.

    மின்னலு,
    உன்னோட 3உம் சரி தான்.

    ReplyDelete
  30. வாங்க மா.சிவகுமார்,
    1
    7
    9
    13
    15
    19

    இதெல்லாம் சரி.

    16 தப்புங்க.

    ReplyDelete
  31. 7. கர்ஸன் துரை என்ற ஞாபகம். சரியா?

    ReplyDelete
  32. என் முயற்சி:
    1) அன்னை தெரசா
    3) வியட்நாம் போரில், ஒரு வியட்நாமிய கிராமத்தின் மீது Napalm என்னும் குண்டு போடப் பட்டதை பதிவு செய்த புகைப்படம்.
    6) ஹரா கிரி (hara kiri)
    7) மவுன்ட் பேட்டன்
    10) Bavarian Motor Works
    12) படம்: ஒவ்வையார்
    நடிகை: ராஜகுமாரி ??
    13) ஸ்கிராபில் (Scrabble)

    ReplyDelete
  33. யாருங்க அது அனானிமஸ்!
    நன்றி கூகிள்னு போட்ட்ருக்கவரு...கையைக் குடுங்க 8க்கு பதில் வராதுன்னு நெனச்சேன் பின்னிட்டீங்க....

    உங்களோட மத்த சரியான விடைகள்:
    1
    3(முழு விவரங்களும் சரி...சூப்பர்)
    4
    6
    7
    9
    10
    12 படம் பேரு தப்பு...பலரைப் போலவே.
    15
    16
    17
    18
    19

    ReplyDelete
  34. 9. சர். வின்ஸ்டன் சர்ச்சில்

    ReplyDelete
  35. கொத்தனார்,
    கயமைத்தனம் ஸ்டார்ட்டட்? உங்களை நம்பித் தானே போட்டியெல்லாம் வெக்கிறோம் நடத்துங்க.

    சரியானவை.
    1
    3
    4
    6
    7

    இன்னொன்னுக்கு நம்பர் இல்லியே. நம்பர் சொல்லுங்க.
    :)

    ReplyDelete
  36. 10. BMW -
    செருமென் மொழியில் Bayerische Motoren Werke AG ஆங்கிலத்தில் Bavarian Motor Works.

    ReplyDelete
  37. 12,K.P.சுந்தரம்பாள்,படம்-ஒளவையார்

    மற்ற அனைத்திற்க்கும் ஒரே பதில் தெரியாது,


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  38. //16. Dutch//

    தேவ், மின்னல்
    இது தப்பு கண்ணுகளா

    ReplyDelete
  39. யோவ். எந்த பதிலில் நம்பர் போடலை? ஒரு க்ளூ குடுங்க. சரியான பதிலா இருந்தா நீங்களே நம்பர் போட்டுக்குங்க.

    ReplyDelete
  40. வாங்க labdab,
    உங்களுடைய சரியான பதில்கள்
    1
    3
    6
    10
    13
    மத்ததையும் முயற்சி செய்யுங்க.

    ReplyDelete
  41. குமரன் எண்ணம்,
    சரியானவை
    1
    13
    17

    12 இல்லீங்க
    2 எதுன்னு சொல்லுங்க

    ReplyDelete
  42. 14. //ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) //

    இப்படி ஒரு படம் வந்ததா தெரியலையேப்பா - Free Willy தெரியும். கேள்வி சரிதானா?

    ReplyDelete
  43. //கைப்பு.. நல்லாத்தான இருந்தீரு.. ரொம்ப முத்திடுச்சா? //

    அப்பிடித் தானுங்க நெனக்கிறேன்.
    :)

    ReplyDelete
  44. 15. General H. Norman Schwarzkopf, Jr. தமிழில் எல்லாம் இந்த பேரை எழுதத் தெரியாதப்பா.

    ReplyDelete
  45. கைப்புள்ளைய கண்டிக்க ஆளே இல்லையா...?

    சங்க நிர்வாகிகளே...
    உடனே பொதுக் குழுவைக் கூட்டுங்கள்...(யாருங்க அது எந்த சீமாரை வச்சி கூட்டுரதுனு கலாய்க்கிறது)

    அனைவரையும் சிரிக்க வைப்பது மட்டும் சங்கத்தின் கோட்பாடு,
    அதை காற்றில் பறக்க விட்டு விட்டு இப்படி எல்லோரையும் கஸ்டப்படுத்தி(??) யோசிக்க வைக்கின்றார்,
    ஒழுங்கு கமிட்டி இவர்மீது நடவடிக்கை எடுக்கும் படி "புதிய உறுப்பினர்" என்ற முறையில் கேட்டுக் கொள்கின்றேன்.


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  46. 1)Agnes Gonxhe Bojaxhiu - Mother Teresa..

    2)....

    3)இந்த புகைப்படத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது- மனதை உருக்கும் இந்த படம்-வியட்நாம் போர் நடந்த போது கிம் பூக் என்னும் 9 வயது சிறுமி மிரண்டு ஒடும் காட்சி.

    4)tent ன் பெயர் டிபி? (tipi?).. (சரியா)

    5) கென்னத் ..... அப்புறம் மறந்துருச்சு

    6) செப்புக்கு(seppuku) - எதிரியிடம் சிக்கி தோழ்வியை எதிர்கொள்வதைவிட "இந்த மரியாதைக்குரிய" மரணத்தை தேர்ந்தெடுத்தார்கள்..

    7)என்ன வேனா கேளுங்க ஆனா இந்த history மட்டும் கேக்காதீங்க.

    8)..........

    9) இதுவும் ரொம்ப famous quote by Sir Winston Churchil.

    10) German car ..அது மட்டும் தான் தெரியும்

    ReplyDelete
  47. 16. ஆங். இது தெரியும். டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி.

    ReplyDelete
  48. 17. ஒட்டகம்.

    (அதாவது ஒட்டகத்தின் ஒரு வகையா அல்லது ஒட்டகங்கள் மற்றும் அதை போன்ற மிருகங்களை வகைப்படுத்தும் பெயரா என குழப்பம். அதான் இப்படி மொத்தமா. ஹிஹி)

    ReplyDelete
  49. மக்களே மன்னிக்கனும்,
    14 ஆம் கேள்வியில Free Boat Willyனு இருக்குறதை Steam Boat Willieனு படிங்க.

    கொத்ஸ்,
    டேங்ஸுங்கோ.

    ReplyDelete
  50. 18. திலீப்குமார், இது எனக்குத் தெரியும். ஆனா நம்ம மருதநாயகத்துக்கு (அட பிளாக்கரை சொல்லலைங்க) இதே பேர் உண்டு தெரியுமோ?

    ReplyDelete
  51. //யோவ். எந்த பதிலில் நம்பர் போடலை? ஒரு க்ளூ குடுங்க. சரியான பதிலா இருந்தா நீங்களே நம்பர் போட்டுக்குங்க//

    ஐ...ஐ...அஸ்கு புஸ்கு. கயமைத் தனத்துலயும் ஒரு நேர்மை வேணுங்க. மேலே மகேந்திரனுக்குச் சொன்னது தான் ஒங்களுக்கும்.
    :)

    ReplyDelete
  52. உங்கள் நண்பன் சரவணன்,
    12க்கு பாதி பதில் சரி. படம் பேரு தப்பு. எல்லாரும் இதையே சொல்லிருக்காங்க.

    ReplyDelete
  53. 19. சார்ல்ஸ் டி கால் - ப்ரெஞ்சு அதிபர்

    ReplyDelete
  54. 20. ஒரு வைல்ட் கெஸ் - ராஜாஜி?

    ReplyDelete
  55. இதுவரை சரியான பதில் வராத கேள்விகள்.
    2, 14, 20

    ReplyDelete
  56. கொத்ஸ்,
    9
    10
    11
    12
    13
    15
    16
    17
    18

    12ல படம் பேரு தப்பு. இது அந்த படம் இல்லீங்கோ.

    ReplyDelete
  57. 14. அதானே பார்த்தேன். அது மிக்கி மவுஸ்.

    ReplyDelete
  58. நம்ம பக்கத்திலிருந்து என்ன எல்லாம் பெண்டிங்? கொஞ்சம் சொல்லுப்பா.

    ReplyDelete
  59. 14 - Mickey Mouse

    ReplyDelete
  60. வாங்க மங்கை,
    உங்களுடைய சரியான பதில்கள்
    1
    3
    4
    6
    9

    5ஐ பாதிலியே விட்டுடீங்களே?

    ReplyDelete
  61. கொத்ஸ், 18க்கு நீங்க குடுத்த உபரித் தகவலுக்கும் நன்றி. அதுவும் சரியானதே.
    :)

    ReplyDelete
  62. கொத்ஸ்
    14, 19 சரி
    20 தவறு. Wild தான்.
    :)

    ReplyDelete
  63. Anonymous

    14 கரீட்டுங்கோ.

    ReplyDelete
  64. கொத்ஸ்!
    2, 12(ஒரு பகுதி), 20 இதை தவிர எல்லாத்துக்கும் எல்லார் கிட்டேருந்தும் பதில் வந்துடுச்சு. உங்க கிட்டேருந்தும் தான். என்ன புரிஞ்சுதா?

    இப்போதைக்கு நீங்க தான் லீடிங்!

    ReplyDelete
  65. யோவ் கைப்பு,

    ஒரு 30 பின்னூட்டம் மேனேஜ் பண்ணத் தெரியலை. நான் எங்கய்யா 12க்கு பதில் சொன்னேன்.

    இதுல எனக்கு 600 வருதுன்னு வயத்தெரிச்சல் வேற..

    ReplyDelete
  66. 1. mother therasa
    2.beethovan
    3.vietnam war
    6.harakiri
    7.lord curzon
    9.winston churchill
    10.bawaria motor works
    11.nusliwadia's bombay dying
    12.k.b.sundarambal

    ReplyDelete
  67. 2. Bethovan 4th symphonya?
    12. K.B Sundaraambal avvaiyara illa nandanar ennamo padama?

    ReplyDelete
  68. 12.k.p.சுந்தரம்பாள்,
    படம்- நந்தனார் சரிதம்(நன்றி கூகுள் தோடல்)


    பதில் கயமைத்தனதிற்க்கு மன்னிக்கவும்,

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  69. கைப்பு, டார்கெட் என்ன?

    அதுக்கு அப்புறம் வந்து பாக்கறேன், தாங்க முடியல சாமி ஒங்க லொல்லு :-)

    ReplyDelete
  70. 1.அன்னை தெரசா
    2. மொஸார்ட்?
    3.வியட்நாம் போர், புகைப்படம் எடுத்தவர் நிக் ___?
    6.Sephuku?
    7.Lord Curzon
    9.Churchill?
    19.French President..பெயர் நினைவில்லை

    ReplyDelete
  71. 20. ஸ்ரீமான் ஸ்ப்ரமணியபாரதி.

    ReplyDelete
  72. hayya..
    google punniyathula 2 therinjichi

    1. Mother Teresa
    2. The Brannock Device

    ReplyDelete
  73. 12. கெ.பி.சுந்தராம்பாள், நந்தனார்.

    ReplyDelete
  74. //1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?//

    தல,

    படம் பேரு ஓளவையார்... சரியா..?

    ReplyDelete
  75. 2.Mozart

    mothalla pottu anuppuna number thappu
    The Brannock Device - 8aavathu kelvikku

    ReplyDelete
  76. 2. Eddie Harris Jazz musician
    14. Killer whale?
    20. U V Swaminatha Iyer, palm leak manuscript?

    ReplyDelete
  77. 2. Eddie Harris Jazz musician
    14. Killer whale?
    20. U V Swaminatha Iyer, palm leak manuscript?


    Ovvaiyar; KB sundarambal got 1 lakh from SS vasan

    ReplyDelete
  78. 3. Kim Phúc,

    running down a road near Trang Bang after an VNAF napalm attack.
    Tks: Wikipedia

    ReplyDelete
  79. ஹலோ சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். திடீர்னு வேலை வந்துடுச்சு. மன்னிச்சுக்கங்க.
    :)

    ReplyDelete
  80. கொத்ஸ்!
    சரி தான். உங்களோடது ரெண்டு 12உம் 5உம் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  81. கைப்ஸ்,

    நம்மால ஆனது ஏதோ இது தான்

    2. Mozart
    5. Kenneth Bainbridge "Trinity" Test Director (Following the fearsomely successful explosion early in the morning of July 16, 1945)
    6.ஸெப்புக்கு (seppuku)
    7. Lord Curzon in 1905
    8. Brannock Device
    9. வின்ஸ்டன் சர்ச்சில்
    10. Baveria Motor Works (BMW)
    12. கெ.பி.சுந்தராம்பாள்
    13. draught Board (chess & draught)
    15. Gen. H. Norman Schwarzkopf
    16. DAnish(deutch)
    17. Dromedery = ஒட்டகக்குட்டி
    18. dilipkumar
    20. rajaji

    அன்புடன்,

    ஹரிஹரன்
    www.harimakesh.blogspot.com

    ReplyDelete
  82. உங்கள் நண்பன்,
    12க்கு மிக சரியான பதில். படம் பேரும் சரி. கொத்ஸ் உங்க பதிலும் சரி.

    ReplyDelete
  83. ராம்,
    12க்கு படம் பேரு தப்பு.

    ReplyDelete
  84. முத்துகுமரன்,
    20க்கு உங்கள் பதில் சரியானது.

    ReplyDelete
  85. பிரபு ராஜா,
    1,2,8 உங்க எல்லா பதிலும் சரி.

    ReplyDelete
  86. //திடீர்னு வேலை வந்துடுச்சு. //

    கைப்பூ..
    புதிய உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி "பொருப்பில்லாமல்" வேலை பார்க்க போய்ட்டீங்கன்னா எப்படி..?
    வர வர நீங்க பண்ணுரது எதுவும் சரியாப் படல சொல்லிப்புட்டேன் ஆமா...


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  87. அதான் எல்லா பதிலும் வந்தாச்சே. ரிசல்ட போடுங்கப்பூ.

    ReplyDelete
  88. பிரபுராஜா,
    2ஆவது கேள்விக்கு இசைகோர்வையோட பேரையும் சொல்லிட்டீங்கன்னா ஆட்டத்தை முடிச்சிக்கலாம்.

    ReplyDelete
  89. மோகன் தாஸ்,
    6 சரி.

    ReplyDelete
  90. 1. Mother Teresa
    2. Eddie Harris Jazz musician
    3. Vietnam war---photo won the Bulitzer award.
    4.
    5. When Hiroshima bomb; Kenneth Bainbridge
    6. seppuku
    7. Curzon
    8….
    9.winston Churchill
    10. Bavarian Motor Works
    11. IIM
    12. Ovvaiyar KB Sundarambal
    13. Scrabble (I am afraid eight words are there…)
    14. Killer whale
    15. Gen Norman Schwarzkopf
    16. Dutch esat India co
    17/ Arabian Camel- 1hump
    18 Dilip Kumar
    19. Gen De Gaule
    20 Rajaji?

    ReplyDelete
  91. //ராம்,
    12க்கு படம் பேரு தப்பு. //


    போச்சா போச்சா.... சரியா இருந்தா பரிசாவது கிடைச்சிருக்கும்.... :-)

    ReplyDelete
  92. பிரபு ராஜா,
    3,4,6 சரி.

    ReplyDelete
  93. 2. இசை கோர்வையோட பேரை யாராச்சும் சொன்னீங்கன்னா நிப்பாட்டிக்கலாம்.

    கயவனா இருக்குறது ரொம்ப கஸ்டமப்பா.
    :)

    ReplyDelete
  94. ஹரிஹரன்,
    13, 20 ஐ தவிர எல்லாம் சரி.

    ReplyDelete
  95. Anonymous,
    2,14,16,20ஐ தவிர எல்லாம் சரி. பேரைச் சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  96. கடைசி வரை முழுவதும் பதிலளிக்கப் படாமல் நின்ற ஒரே கேள்வி. 2ஆம் கேள்வி.

    அதற்கு சரியான பதில்.

    மோசார்ட்(Mozart), இசை கோர்வையின் பெயர் 'தி ரெகொய்ம்'(The Requiem)

    ReplyDelete
  97. மக்கா ப்ளீஸ்!
    இன்னும் ஒரே ஒரு கயமை மட்டும் பண்ணிக்கிறேன்.

    எல்லா கேள்விகளின் பதிலையும் ஒரு சேர நாளை காலை வந்து வெளியிடறேனே...ப்ளீஸ். மன்னிச்சுக்கங்க.

    I hope you enjoyed this presentation as much as I enjoyed presenting this. Bye and Good Night.
    :)

    (பீட்டரைக் கண்டுக்கப் பிடாது)

    ReplyDelete
  98. இரண்டாவதுக்கு விடை சரியாத் தெரியலங்க. ஒரு யூகம்தான் இது.
    அவரு பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்,
    ஆல்பம் பென்சில்வேனியா கெசட்

    ReplyDelete
  99. ஆஹா!

    நமக்கு கூகிள்ல நல்லா தேட வருதுங்கற விஷயமே இப்பதான் தெரியுது.

    Mozart kandupidichathe, wikipediala than.
    antha korvai perum irukku.

    just miss. kelvi sariya paakala.

    anyway.. thanks.

    ReplyDelete
  100. யே ஐய்யா இத்தினி அறிவாளிகளா...நான் இங்க வந்த நேரத்துக்கு எல்லா கேள்விக்கும் பதில் வந்துடுச்சு..எனக்கு எல்லாத்துக்கும் விடை தெரியும்... :-)

    மின்னல் இதுக்கு தான் கடைசில வரனும்...

    ReplyDelete
  101. //
    Bye and Good Night.
    :)
    August 02, 2006 8:26 PM
    //


    தல எட்டரை மணிக்கே குட்நைட்டா???

    தல 100 அடிக்கவே உன்னால தாங்க முடியலயே இ கொ வை கொஞ்சம் நினைச்சுகோ பூஸ்டு குடிச்ச சச்சின் மாதிரி சும்மா பூந்து விளயாடுவ.....

    ReplyDelete
  102. Amiable post and this post helped me alot in my college assignement. Thank you as your information.

    ReplyDelete