Tuesday, July 04, 2006

'வருத்தப்படாத' அப்பாவிற்கு...

இவ்வளவு நாள் வெறும் வருத்தப்படாத வாலிபராய் இருந்து நேற்றிரவு ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆனதன் மூலம் 'வருத்தப்படாத அப்பா'வாகப் பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் கை தேவிற்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்டி பாப்பாவிற்கும் அங்கிளுடைய வாழ்த்துகள்.

50 comments:

  1. என் சார்பிலும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

    ReplyDelete
  3. கைப்புள்ள ஒரு ஆறு மாதமா பல்லு விளக்கவில்லை என்று அறிகிறேன்...

    அதனால் குழந்தை கிட்ட நெருங்கி மூஞ்சிய காட்டி பயமுறுத்துவது, பல்லு விளக்காத வாயால முத்தம் கொடுப்பது போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தேவ் அவர்களே...

    ReplyDelete
  5. என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.




    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  6. இந்த அங்கிளும் தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றான்.

    ReplyDelete
  7. தல நீங்க எப்ப அப்பா ஆக போகின்றீர்கள்?

    ReplyDelete
  8. ////அதனால் குழந்தை கிட்ட நெருங்கி மூஞ்சிய காட்டி பயமுறுத்துவது, பல்லு விளக்காத வாயால முத்தம் கொடுப்பது போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
    //

    :))

    ReplyDelete
  9. சீக்கரமே தங்கிச்சிப் பாப்பாவுக்கு விளையாட ஒரு தம்பி பாப்பாவும் கிடைக்கனும்னு வாழ்த்துகிறேன். தேவ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அங்கிள்ஸா வாழ்த்து சொல்லிருக்காங்க

    முதல் முதலா நிலா அக்காவோட (சரி... சரி... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா...) வாழ்த்துக்கள் செல்லக் குட்டிப்பாப்பாவுக்கு

    தேவ், வாழ்த்துக்கள்...

    கைப்ஸ்,

    படம் ரொம்ப அழகு (கைக்குழந்தையா இருந்தப்பா நான் இப்படித்தான் இருந்தேன்னு எங்கம்மா சொல்றாங்க ... ஹி... ஹி....)

    பொருத்தமா சுடறதுக்கும் ஒரு தெறமை வேணுமில்லை :-)

    ReplyDelete
  11. வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேவு வந்ததும் ஒரு பெரிய ட்ரீட் வாங்கிடுவோம்!

    ReplyDelete
  12. //அதனால் குழந்தை கிட்ட நெருங்கி மூஞ்சிய காட்டி பயமுறுத்துவது...//

    வந்தமா புள்ளையை பாத்தமா, வாழ்த்துனமா, போனமான்னு இல்லாம எதுக்குய்யா நம்ம அருமை பெருமை எல்லாம் இந்நேரத்துல?

    ReplyDelete
  13. //போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
    //

    :))
    //

    இதுல ஒருத்தருக்குச் ச்சிரிப்பு வேற? சின்னப்பில்லத் தனமால்ல இருக்கு?

    ReplyDelete
  14. நானும் சொல்லுவேன்.. வாழ்த்துக்கள்

    தேவ் இன்னும் நெறைய்ய்ய்ய்ய்ய்யா வாழ்த்து சொல்ல வைக்கோனும் ஆமா !!!!!! ::)))




    ( ராசா உனக்கும் இதே மாதிரி வாழ்த்து சொல்ல வை ராசா வை !!!!!!! ::))) )

    ReplyDelete
  15. //முதல் முதலா நிலா அக்காவோட (சரி... சரி... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா...) வாழ்த்துக்கள் செல்லக் குட்டிப்பாப்பாவுக்கு
    //
    அக்கா சரி...யாருக்குன்னு கொஞ்சம் தெளிவுபடுத்துங்க.
    :)

    //கைப்ஸ்,

    படம் ரொம்ப அழகு (கைக்குழந்தையா இருந்தப்பா நான் இப்படித்தான் இருந்தேன்னு எங்கம்மா சொல்றாங்க ... ஹி... ஹி....)
    //
    மிஸ்! கேப்ல கடா வெட்டிட்டீங்களே?
    :)

    ReplyDelete
  16. //தல நீங்க எப்ப அப்பா ஆக போகின்றீர்கள்?//

    என்ன பேச்சு இது ராஸ்கல்? அதிகப் பிரசங்கித் தனமா?

    :)

    ReplyDelete
  17. தல..கவிதாக்கு என் அருமை பெருமையெல்லாம் எடுத்து சொல்லியிருக்கீங்க போல இருக்கு.. ரெம்ப டான்க்ஸ்..! அப்புறம் நீங்க என் fan ஆனது எனக்கு ரெம்ப சந்தோஷம், கவிதா பதிவுகள் ரெம்ப புழுக்கமா இருக்கறதால நீங்க அடிக்கடி வந்து நல்லா எனக்கு மட்டும் விசிறிட்டு போன நல்லா இருக்கும்..

    அப்புறம் நம்ம தேவ் அண்ணாச்சி குட்டி பாப்பா'வுக்கு என்னோட , போன போகுதுன்னு கவிதாவோட வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லிடுங்க.. என்னவோ தல நம்மள அடிக்கடி இப்படி கவிதாகிட்ட வந்து புகழ்ந்தீங்கன்னா.. நல்லா இருக்கும்..

    ReplyDelete
  18. //தல நீங்க எப்ப அப்பா ஆக போகின்றீர்கள்?//

    என்ன பேச்சு இது ராஸ்கல்? அதிகப் பிரசங்கித் தனமா?//

    ஆமா..இப்ப அவரு என்ன கேட்டுட்டாருன்னு.. சவுண்டு விடறீங்க நீங்க..?!!

    ReplyDelete
  19. குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  20. //தேவ் இன்னும் நெறைய்ய்ய்ய்ய்ய்யா வாழ்த்து சொல்ல வைக்கோனும் ஆமா !!!!!! ::)))
    //

    :)))

    நானும் நானும்.. வாழ்த்து சொல்லிக்கிறேன்..

    நிலாவே பாப்பாவுக்கு அக்கான்னா, நான் தங்கச்சி தான் இல்லையா தல? :)

    ReplyDelete
  21. அட, தேவிற்குக் குழந்தை பிறந்து இருக்கிறதா? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வருத்தப்படாத அப்பாவிற்கும் அம்மாவிற்கும் குட்டிப்பெண்ணின் வருத்தப்படாத மாமாவின் வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  23. வளமோடு வாழ வாழ்த்துகள்!!

    ReplyDelete
  24. வளமோடு வாழ வாழ்த்துகள்!!

    ReplyDelete
  25. //தேவ் இன்னும் நெறைய்ய்ய்ய்ய்ய்யா வாழ்த்து சொல்ல வைக்கோனும் ஆமா !!!!!! ::))) //
    கண்ணுங்களா! இந்த மேட்டருக்கு இது மாதிரி இன்னும் ஒரு தடவை சொன்ன போதும். நெறையா எல்லாம் கேட்காதீங்க. இந்திய மக்கள் தொகையும் ஏற்கனவே எகிறிகிட்டு இருக்குது.

    ////தல நீங்க எப்ப அப்பா ஆக போகின்றீர்கள்?//

    என்ன பேச்சு இது ராஸ்கல்? அதிகப் பிரசங்கித் தனமா?//

    ஆமா..இப்ப அவரு என்ன கேட்டுட்டாருன்னு.. சவுண்டு விடறீங்க நீங்க..?!! //

    ஆஹா, என் தங்கமே அணிலு, என் சப்போட்டுக்கு நீ இருக்கியே அது போதும்......
    ஒய்! தல... என்னா, என்னா இப்பனு கேட்டேன். ஒவரா சவுண்டு உடுற. நான் இப்ப தனி ஆள் இல்ல, தெரியுமுல....... கேள்வி கேட்டா ஆமாம், இல்லனு பதில் சொல்லு. என்னமோ மிரட்டற...

    ReplyDelete
  26. ***********************************
    ATTENTION PLEASE ATTENTION PLEASE
    **********************************
    நான்கு நாள் முயற்சியில்"எருமைக்
    கன்னுக்குட்டி" யைப் பிடித்து என்
    sivagnanamji.blogspot.com ல்
    அடைத்துள்ளேன். தமிழ்மணத்தில் எனக்கு 2 வது பதிவு.முறையாகச்செய்துள்ளேனா என்பதே தெரியவில்லை...தேடிப்
    பார்த்துக்கொள்ளா(ல்ல)வும்
    ***********************************
    ATTENTION PLEASE....ATTENTIN PLEASE
    ***********************************

    ReplyDelete
  27. //ATTENTION PLEASE....ATTENTIN PLEASE
    //

    கிருப்பையான் தியான் தீஜியே!
    சென்னை சென்ட்ரல் சே நயா தில்லி ஜானே வாலி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்....தோ மினிட்ஸ் மே..நிகலி ஹோ ரஹி ஹை.

    ReplyDelete
  28. ////தல நீங்க எப்ப அப்பா ஆக போகின்றீர்கள்?//


    கைப்புள்ள ஃபேக்ஸில் அனுப்பிய பதில்.

    "என்னோட அப்பா அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டாங்க. நாந்தான் இப்போ என்ன அவசரம், எல்லாம் அடுத்த வாரம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்"

    ReplyDelete
  29. //தல..கவிதாக்கு என் அருமை பெருமையெல்லாம் எடுத்து சொல்லியிருக்கீங்க போல இருக்கு.. ரெம்ப டான்க்ஸ்..! அப்புறம் நீங்க என் fan ஆனது எனக்கு ரெம்ப சந்தோஷம், கவிதா பதிவுகள் ரெம்ப புழுக்கமா இருக்கறதால நீங்க அடிக்கடி வந்து நல்லா எனக்கு மட்டும் விசிறிட்டு போன நல்லா இருக்கும்..//

    குட்மார்னிங் அனிதா! மொத வாட்டி நம்ம வூட்டாண்ட வந்திருக்கே? காபி, டீ, முந்திரி பருப்பு இப்படி எதாச்சும் சாப்பிடறியா? நான் என்னிக்கும் உன்னோட ஃபேன் தான். உன்னோட sense of humour டாப் டக்கருங்கிறேன். உங்க அம்மணி திடீர்னு எமென்சிங்குறாங்க, திடீர்னு பீப்பாங்குறாங்க...அங்கன போயி நான் வாயைத் தொறந்து வைக்க யாராச்சும் எனக்கு ஆப்பு வச்சிருவாங்களோன்னு ஒரே பீதியா இருக்கு. நீ ஏன் உனக்குன்னு என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் வந்து ரவுசு வுட தனியா ஒரு காமெடி ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது?

    வ.வா.சவுக்கும் அப்பப்ப வந்து ஜோதியில கலந்துக்க அனிதா. அணில்குட்டியைப் பிடிச்சவங்க அங்கேயும் நெறைய பேரு இருக்காங்க.
    :)

    ReplyDelete
  30. //குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துகள்//

    //அட, தேவிற்குக் குழந்தை பிறந்து இருக்கிறதா? வாழ்த்துக்கள்//

    //வருத்தப்படாத அப்பாவிற்கும் அம்மாவிற்கும் குட்டிப்பெண்ணின் வருத்தப்படாத மாமாவின் வாழ்த்துகள். :-)//

    //வளமோடு வாழ வாழ்த்துகள்!!//

    தேவ் இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன் குடும்பத்தாரோடு இன்னும் சில நாட்கள் கழித்து விட்டுத் திரும்புவாராகையால், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட சிவஞானம்ஜி, 16 வயசு சின்னப் பொண்ணு கீதா மேடம், 'வருத்தப்படாத மாமா' குமரன் மற்றும் எஸ்கே அவர்களுக்கும் முன்னமே வாழ்த்து தெரிவித்துக் கொண்ட அனைத்து நண்பர்கள் அனைவருக்கும் தேவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  31. //நிலாவே பாப்பாவுக்கு அக்கான்னா//
    புரிஞ்சிடுச்சு ஆத்தா புரிஞ்சுடுச்சு...நிலாவேன்னு ஆரம்பிச்சு நீ வுட்டுருக்கற இந்த ஸ்டேட்மெண்டுக்கு நான் ஏதாவது வாயைக் குடுக்க அதை நீங்க ரெண்டு பேரும் வயசப் பத்தி பேசிட்டான்னு அலசி ஆய்ஞ்சு என்னை நோண்டி நொங்கெடுக்கறது தானே உன் பிளானு. நாங்க முன்ன மாதிரி கெடயாது...இப்பல்லாம் நமக்கு வெவரம் அதிகமாயிடுச்சில்ல? ஐ ஆம் தி எஸ்கேப்.

    //நான் தங்கச்சி தான் இல்லையா தல? :)//
    மகாஜனங்களே! பாத்துக்கங்கையா பாத்துக்கங்க...போன வாரம் வரைக்கும் பாப்பாவோட அப்பாவுக்கு அக்காவா இருந்தவங்க நேத்துலேருந்து பாப்பாவுக்குத் தங்கச்சி ஆயிட்டாங்க. இப்பவே சொல்லிட்டேன் இந்த பழிபாவத்துக்கெல்லாம் நான் ஆளாவ மாட்டேன். ஆமா.
    :)

    ReplyDelete
  32. //ஆமா..இப்ப அவரு என்ன கேட்டுட்டாருன்னு.. சவுண்டு விடறீங்க நீங்க..?!!//

    ஒரு க.பி. கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்டு வேலைப் பாய்ச்சினா கோவப்படாம பின்ன கொஞ்சுவாங்களா?

    ReplyDelete
  33. //( ராசா உனக்கும் இதே மாதிரி வாழ்த்து சொல்ல வை ராசா வை !!!!!!! ::))) )
    //

    மின்னலு!
    நீயும் நாகை சிவாவும் என் கையில சிக்குங்க...அப்புறம் இருக்குது கண்ணுங்களா உங்களுக்கு.

    ReplyDelete
  34. //ஒய்! தல... என்னா, என்னா இப்பனு கேட்டேன். ஒவரா சவுண்டு உடுற. நான் இப்ப தனி ஆள் இல்ல, தெரியுமுல....... கேள்வி கேட்டா ஆமாம், இல்லனு பதில் சொல்லு. என்னமோ மிரட்டற...//

    செல்லம்!
    இருக்குடி ஒனக்கு...என்னிக்காச்சும் ஒரு நாளு...கொஞ்சம் வெயிட்டிக்கோ!

    ReplyDelete
  35. //ஒய்! தல... என்னா, என்னா இப்பனு கேட்டேன். ஒவரா சவுண்டு உடுற. நான் இப்ப தனி ஆள் இல்ல, தெரியுமுல....... கேள்வி கேட்டா ஆமாம், இல்லனு பதில் சொல்லு. என்னமோ மிரட்டற...//

    ஆங்..அது!!

    ReplyDelete
  36. //ஒரு க.பி. கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்டு வேலைப் பாய்ச்சினா கோவப்படாம பின்ன கொஞ்சுவாங்களா? //

    ஓ..அப்படியா சங்கதி.. அப்ப சரியாத்தான் கேட்டு இருக்காரு.. யப்பா சிவா.. 'தல' என்னைய கவனிக்கறதுக்கு முன்னாடி..காப்பாதப்பு..

    ReplyDelete
  37. //நான்கு நாள் முயற்சியில்"எருமைக்
    கன்னுக்குட்டி" யைப் பிடித்து என்
    sivagnanamji.blogspot.com ல்
    அடைத்துள்ளேன். தமிழ்மணத்தில் எனக்கு 2 வது பதிவு.முறையாகச்செய்துள்ளேனா என்பதே தெரியவில்லை...தேடிப்
    பார்த்துக்கொள்ளா(ல்ல)வும்//

    வாங்க சார்!
    உங்க பதிவுக்கு வ.வா.ச லேருந்து லிங்க் கொடுத்தாச்சு. கன்னுக்குட்டியை சங்கத்துப் பக்கம் மேய்ச்சலுக்கு கூட்டியாந்ததுக்கு டேங்ஸுங்கோ.

    ReplyDelete
  38. //குட்மார்னிங் அனிதா! மொத வாட்டி நம்ம வூட்டாண்ட வந்திருக்கே? காபி, டீ, முந்திரி பருப்பு இப்படி எதாச்சும் சாப்பிடறியா? //

    நீங்க ரெம்ப நல்லவங்களா இருக்கீங்க..எனக்கு அழுகை அழுகையா வருது..ஆமா..முந்திரி பருப்பெல்லாம் தரேன்னு சொல்றீங்க..ஆனா அம்மனி அந்த கொய்யா பழத்த விட்ட ஒன்னியுன் கண்ணுல காட்டறது இல்ல..

    //நான் என்னிக்கும் உன்னோட ஃபேன் தான். உன்னோட sense of humour டாப் டக்கருங்கிறேன். உங்க அம்மணி திடீர்னு எமென்சிங்குறாங்க, திடீர்னு பீப்பாங்குறாங்க...அங்கன போயி நான் வாயைத் தொறந்து வைக்க யாராச்சும் எனக்கு ஆப்பு வச்சிருவாங்களோன்னு ஒரே பீதியா இருக்கு. //

    ஆமா..அம்மனி கொஞ்சம் களண்ட கேசு.. ஏதாவடு எக்குதப்பா தான் போஸ்ட் பண்ணுவாங்க.. நீங்க அம்மனிக்கு எல்லாம் பயப்படாதீங்க.. நான் இருக்கேன் இல்ல ..ஆப்பு வைக்கறப்ப எப்படி க்ரெக்டா வலிக்காம வைக்கறதுன்னு அம்மனி எடுத்து சொல்றேன் சரியா...

    //நீ ஏன் உனக்குன்னு என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் வந்து ரவுசு வுட தனியா ஒரு காமெடி ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது? //

    அம்மனிக்கு இப்பவே என் ரசிகர்கள பாத்து பொறாமைல காது வழியா பொக விடறாங்க.. தனியா ஆரம்பிச்சா..அவ்ளோவ்தான்..

    //வ.வா.சவுக்கும் அப்பப்ப வந்து ஜோதியில கலந்துக்க அனிதா. அணில்குட்டியைப் பிடிச்சவங்க அங்கேயும் நெறைய பேரு இருக்காங்க.
    :) //

    வந்துட்டா போது..

    ReplyDelete
  39. //ஆமா..அம்மனி கொஞ்சம் களண்ட கேசு.. ஏதாவடு எக்குதப்பா தான் போஸ்ட் பண்ணுவாங்க.. நீங்க அம்மனிக்கு எல்லாம் பயப்படாதீங்க.. நான் இருக்கேன் இல்ல ..ஆப்பு வைக்கறப்ப எப்படி க்ரெக்டா வலிக்காம வைக்கறதுன்னு அம்மனி எடுத்து சொல்றேன் சரியா...//

    சரி அனிதா,
    மேடம் இன்னிக்கு ரொம்ப ஃபீலிங்ஸா இருக்காங்க போலிருக்கு. அவுங்க சொல்லறது எனக்கு ஒரளவு புரியுதுன்னாலும் என்ன சொல்றதுன்னு உண்மையிலேயே தெரியலை. அதனால நம்ம நக்கலை எல்லாம் அப்புறம் இன்னொரு நாளு வச்சிக்குவோம். சரியா?

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் தேவ்,

    இனிமையான‌, தூக்கங்களற்ற இரவுக்கு :-)

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் தேவண்ணே.

    உலகத்தின் புது வரவுக்கு நல்வரவு சொல்லிடுங்க.

    அண்ணிக்கு பச்சைஉடம்பு.

    பெருசுங்ககிட்ட சொல்லி நல்ல சாறு காச்சி ஊத்துங்க.

    நம்ம ஊரு டயப்பர்(துணிதான்) மாத்த கத்துகிட்டீங்களா.

    நம்ம ஊரு டயப்பர்லே பிச்சு ஒட்டற வசதி எல்லாம் கிடையாது.
    முடிச்சுதான் போடணும்.

    நல்லா கத்துக்கங்க.

    யாம் பெற்ற இன்பம் வையகமும் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் தேவ்.. சுட்டிப் பெண் கூடிய சீக்கரமே தனிப்பதிவு ஆரம்பிச்சுடுவாள்ன்னு நினைக்கிறேன்... எல்லாம் ஜீன் ஆச்சே.. !

    சிபி,
    //"என்னோட அப்பா அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டாங்க. நாந்தான் இப்போ என்ன அவசரம், எல்லாம் அடுத்த வாரம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்"//

    எப்பிடி இப்பிடியெல்லாம் :)) ..சரி இதுக்கு காபிரைட்டெல்லாம் எதிமில்லையே.. ;)

    சுகா

    ReplyDelete
  43. வாழ்த்திய அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  44. மோகா பங்காளி தேங்க்ஸ்டா:)

    ReplyDelete
  45. அட நம்ம தேவு அப்பாவாயிட்டாரா.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  46. வ.வா சங்கதில் ஊழல்! நஷ்டத்தில் தடுமாறிகிறது சங்கம்!
    கைப்புள்ளயின் காமவெறி.
    புதிய தகவல்கள் இங்கே

    ReplyDelete
  47. என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  48. வருத்தப்படாத வாலிபர் ப்ரமோஷன் ஆயிட்டார் ம்ம் வாழ்த்துக்கள்

    அப்படியே சிங்கம் ஒண்ணு ரெடி பண்ண சொல்லுங்கோ

    அன்புடன்
    தம்பி

    ReplyDelete
  49. ஏய் கண்ணுங்களா, இந்த அல்கேட்ஸ் லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்டா வருவான்..

    தம்பி தேவு,
    இனிமே
    நின்னா உட்கார முடியாது,
    உட்கார்ந்தா நிக்க முடியாது,
    தூக்கம் வந்தா தூங்க முடியாது,
    பசிக்கும் போது சாப்பிட முடியாது..

    எல்லா சமயத்துலயும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குட்டிப்பொண்ணு உன்னை நல்லா படுத்தி எடுக்கணும்னு அந்த ஆண்டவன் சொல்றான்..

    இந்த அல்கேட்ஸ் அதைக் கேட்டு உனக்குத் திருப்பிச் சொல்றான்.. !!!!


    நல்லா பால் பாட்டிலும் கையுமா...
    தூளியும் தாலாட்டுமா..
    பெருசு சொல்ற மாதிரி, டயப்பரும் தேவுமா..
    இன்று போல் என்றும் வாழ்க!!

    Mr, கைப்பு,
    வாரம் பொறந்துடுச்சே.. நீங்க எப்போ? !!

    ReplyDelete
  50. Congrats Boss! Veetula Lakshmi Pirandirukku...vaazhtukkal

    ReplyDelete