Sunday, April 13, 2008

நானும் எனது தனிமையும்

தமிழில் புகைப்படக்கலை ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பைக் கேள்வி பட்டதும் தலைப்புக்கு ஏத்த படம் எடுக்கனும்னே தோணலை. தலைப்பைக் கேட்டதும் இரெண்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. தலைப்புக்கு கீழே இருக்கிற படங்கள் பொருந்துதோ இல்லையோ பாட்டுங்க 'சிக்'னு பொருந்தும்னு நெனக்கிறேன்.

முதல் பாட்டு ஒரு இந்திப் பாட்டு. அமிதாப் பச்சனின் கணீர் குரலில் வரும் ஒரு பாட்டு. வசனம்னு கூட சொல்லலாம். அமிதாப் உணர்ச்சி பூர்வமாப் பேசற வசனத்துக்கு நடுவுல லதா பாடுவாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அமிதாப் பகுதியை மொழிப்பெயர்த்து போட்டுருக்கேன். ஓகேவா இருக்கா?

படம் : சில்சிலா(1981)
பாடல் : ஜாவேத் அக்தர்
இசை : ஷிவ்ஹரி
பாடியது : அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர்

Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு
Tum hoti to kaisa hota, tum yeh kehti, tum voh kehti
நீ இருந்தால் இப்படி நடக்கும், நீ இதை சொல்வாய் நீ அதை சொல்வாய்
Tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hansti
நீ இச்செயலால் கோபப்படுவாய், நீ அச்செயலால் எப்படி சிரிப்பாய்
Tum hoti to aisa hota, tum hoti to vaisa hota
நீ இருந்தால் அப்படி நடக்கும் நீ இருந்தால் இப்படி நடக்கும் இப்படியெல்லாம்
Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு

Yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai
இது இரவா அல்லது பரந்து விரிந்த உனது கூந்தலா?
Hai chaandni ya tumhaari nazrein se meri raatein dhuli hui hai
இது நிலவெளியா அல்லது உன் விழிகளால் வெள்ளையடிக்கப்பட்ட இரவா?
Yeh chaand hai ya tumhaara kangan
இது வெண்ணிலவா அல்லது உன் கைகளால் அலங்கரிக்கப்பட்ட வளையலா?
Sitaarein hai ya tumhaara aanchal
இவை நட்சத்திரங்களா அல்லது உனது புடவை தலைப்பா?
Hawa ka jhonka hai ya tumhaare badan ki khushboo
எனை மோதுவது காற்றின் அலையா அல்லது உன் தேகத்தின் வாசமா?
Yeh pattiyon ki hai sarsaraahat ke tumne chupke se kuch kaha hai
இவை இலைகளின் சலசலப்பா அல்லது உனது உதடுகளின் முணுமுணுப்பா?
Yeh sochta hoon main kab se gumsum
எப்போதிலிருந்து நான் வார்த்தைகளற்று போனேன் என்று நினைத்து பார்க்கும்
Ke jab ki mujhko bhi yeh khabar hai
வேளையில் எனக்கும் இது தெரிந்து தான் இருக்கின்றது
Ke tum nahin ho, kahin nahin ho
நீ இங்கு இல்லை, இல்லவே இல்லையென
Magar yeh dil hai ke keh raha hai
ஆனல் இந்த பாழும் இதயம் சொல்கின்றது
Ke tum yahin ho, yahin kahin ho
நீ இங்கு தான் இருக்கிறாய் இங்கு தான் எங்கோ இருக்கின்றாய் என்று





Get this widget


அடுத்த பாட்டும் இசையைக் குறைச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெல்லிசை மன்னர் போட்டுருக்கற ஒரு பாட்டு. எஸ்.பி.பி அப்படியே தன் குரலால் இப்பாட்டுக்கு உயிர் கொடுத்துருப்பார் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் இதுவும் ஒன்று.

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடல் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2)

(தீர்த்தக்)





போட்டிக்குக் கொக்கு(முதல்) படத்தைக் கொடுக்கலாம்னு இருக்கேன். சரிங்களா?

39 comments:

  1. கைப்புள்ளையா கொக்கா?
    goodluck

    ReplyDelete
  2. கொக்கு படம் டாப்பு!! கடைசி படமும் நல்லாருக்கு..அதையும் ஆட்டைக்கு அனுப்புங்க தல!!

    போட்டியில் கெலிக்க வாழ்த்துக்கள்!!

    அருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. கொக்கு படம் சூப்பர் - கண்டிப்பா நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பிடித்த பாடல்(கள்). அருமையான படம்

    ReplyDelete
  5. உங்க படங்களின் தரம் ஒவ்வொரு போட்டியிலும் கூடிகிட்டே வருது! முதல் படம் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. HI MR.KAIPULLAI,
    YOUR PHOTOS ARE SUPER.I EVEN WATCHED YOUR GALLERIES IN PREVIOUS POSTS. THEY SHOWED UR EXCELLENCE INPHOTOGRAPHY.

    ReplyDelete
  7. HI,
    IAM ASHOK.YOUR PHOTOS ARE SUPER.I EVEN WATCHED UR PHOTOS IN PREVIOUS GALLERIES.THEY SHOWED UR EXCELLENCE IN PHOTOGRAPHY.

    ReplyDelete
  8. Like the composition in Crane Pic... Nice One... All the Best !!!

    ReplyDelete
  9. Like the composition in Crane Pic... Nice One... All the Best !!!

    ReplyDelete
  10. //கைப்புள்ளையா கொக்கா?
    goodluck//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்

    ReplyDelete
  11. //கொக்கு படம் டாப்பு!! கடைசி படமும் நல்லாருக்கு..அதையும் ஆட்டைக்கு அனுப்புங்க தல!!//

    ரெண்டு அனுப்புனாலே நம்ம படம் ஒன்னு கூட தேறாது...இந்த வாட்டி ஒன்னு தான் அனுப்பனும்னு சொல்லிட்டாங்களேப்பூ :(

    //போட்டியில் கெலிக்க வாழ்த்துக்கள்!!

    அருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி!!//

    நன்றிப்பா ஞானக்கோந்தே!
    :)

    ReplyDelete
  12. //கொக்கு படம் சூப்பர் - கண்டிப்பா நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்//

    நன்றிப்பா திரு. எல்லாம் உன் தயவு தான்.
    :)

    ReplyDelete
  13. //பிடித்த பாடல்(கள்). அருமையான படம்//

    மிக்க நன்றி பாபாஜி.
    :)

    ReplyDelete
  14. //உங்க படங்களின் தரம் ஒவ்வொரு போட்டியிலும் கூடிகிட்டே வருது! முதல் படம் அருமை. வாழ்த்துக்கள்!//

    அட்றா சக்கை...அட்றா சக்கை...அட்றா சக்கை!!!!

    டேங்க்ஸூங்கங்கோ.
    :)

    ReplyDelete
  15. //HI MR.KAIPULLAI,
    YOUR PHOTOS ARE SUPER.I EVEN WATCHED YOUR GALLERIES IN PREVIOUS POSTS. THEY SHOWED UR EXCELLENCE INPHOTOGRAPHY//

    வாங்க அஷோக்,
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  16. //Like the composition in Crane Pic... Nice One... All the Best !!!//

    மிக்க நன்றி நாதஸ்.
    :)

    ReplyDelete
  17. தல,

    கொக்கு படம் நல்லாயிருக்கு... :)

    ReplyDelete
  18. //தல,

    கொக்கு படம் நல்லாயிருக்கு... :)//

    ரொம்ப நன்றிப்பா ராயல்.
    :)

    ReplyDelete
  19. "thum is bath pee hairan hothi" hairan= perplexed இதான் சரியா வரும்னு தோணுது! அப்போ குழப்பம்னு இல்லை வரணும் அங்கே? அர்த்தம் கொஞ்சமே கொஞ்சம் மாறுதோ? அல்லது பதற்றம்னும் சொல்லலாமோ?

    அது சரி, ஊருக்கு அனுப்பிச்சுட்டீங்களா என்ன? அதுக்குள்ளே தனிமை பற்றிப் பாடல் வந்திருக்கு! :))))))

    ஆனால் அருமையான பாடல் தான், படம் முடிவில் சொதப்பினாலும்!

    ReplyDelete
  20. //"thum is bath pee hairan hothi" hairan= perplexed இதான் சரியா வரும்னு தோணுது! அப்போ குழப்பம்னு இல்லை வரணும் அங்கே? அர்த்தம் கொஞ்சமே கொஞ்சம் மாறுதோ? அல்லது பதற்றம்னும் சொல்லலாமோ?//

    யாராச்சும் கண்டுபிடிச்சி மாட்டிப்போம்னு எழுதும் போதே நெனச்சேன். கரெக்டா இந்தி பண்டிட்டான நீங்க வந்து கிடுக்கிப் பிடி போட்டுட்டீங்க. சரி தான் hairanக்கு perplexedதான் சரியா வரும். ஆனா Perplexedஐ எப்படி தமிழ்ல சொல்றதுன்னு தெரியாம தான் கொஞ்சம் உரிமை எடுத்து வார்த்தை மாத்தி போட்டுட்டேன். மாஃப் கீஜியே :)

    //அது சரி, ஊருக்கு அனுப்பிச்சுட்டீங்களா என்ன? அதுக்குள்ளே தனிமை பற்றிப் பாடல் வந்திருக்கு! :))))))
    //

    ஹி...ஹி....சும்மா சிச்சுவேசன் சாங். இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை.

    //ஆனால் அருமையான பாடல் தான், படம் முடிவில் சொதப்பினாலும்!
    //
    நல்ல வேளை நான் இன்னும் பாக்கலை.
    :)

    ReplyDelete
  21. ஃபஸ்ட்டு நல்லாருக்கு. ஆனா, too much cropping?

    ReplyDelete
  22. //கைப்புள்ளையா கொக்கா?//

    ரிப்பீட்டேய்......:-)))))

    நல்லா இருக்கு.

    ReplyDelete
  23. Woww....முதல் படம் அருமை

    ReplyDelete
  24. //ஃபஸ்ட்டு நல்லாருக்கு. ஆனா, too much cropping?//

    வாங்க சர்வேசன்,
    க்ராப்பிங் பண்ணேன். டூ மச்னா சொல்றீங்க? ஹ்ம்ம்ம்
    :((

    ReplyDelete
  25. ////கைப்புள்ளையா கொக்கா?//

    ரிப்பீட்டேய்......:-)))))

    நல்லா இருக்கு//

    ரொம்ப நன்றிம்மா.
    :)

    ReplyDelete
  26. //Woww....முதல் படம் அருமை//

    நன்றி மங்கை மேடம்.

    ReplyDelete
  27. ஓடு மீன் ஓட விட்டிருக்கும் கொக்கா இது கைப்புள்ள:)
    நான் வேற ஏதோ விஷயம்னு நினைச்சேன்.
    தங்கமணி பொறந்த வீடு போயிருக்காங்க. அதான் தனிமைனு பாட்டுப் போடறார்னு:)

    ReplyDelete
  28. perplexed= confused= குழப்பத்துடன்

    ReplyDelete
  29. கொக்கு படம் பிரமாதம் தல.....


    ஆபீஸ்ல எல்லோரும் போன அப்புறமும் வேலை செய்யர மாதிரியே நடிச்சிட்டு உக்காந்துருக்குதே அந்த புள்ள யாரு... :-)

    ReplyDelete
  30. //ஓடு மீன் ஓட விட்டிருக்கும் கொக்கா இது கைப்புள்ள:)
    நான் வேற ஏதோ விஷயம்னு நினைச்சேன்.
    தங்கமணி பொறந்த வீடு போயிருக்காங்க. அதான் தனிமைனு பாட்டுப் போடறார்னு:)//

    வாங்க வல்லி மேடம்,
    அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. எங்க தலைவி கிளப்பி விட்ட புரளி அது. உங்க வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. //perplexed= confused= குழப்பத்துடன்//

    கரெக்ட் தான். ஆனா அந்த இடத்துல குழப்பத்துடன் னு போட்டா தளை தலையில தட்டும் பாருங்க :)

    யப்ப்பா என்னென்னல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டீயிருக்கு?

    ReplyDelete
  32. //கொக்கு படம் பிரமாதம் தல.....//

    ஆஹா...12பி...எம்புட்டு நாளாச்சுய்யா உன்னைய பாத்து...உன் பதிவுகளை எல்லாம் படிச்சி ஃபேன்ஸ் ஆகி ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திட்டு போயிட்டாங்களா? எங்க ராசா போயிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ?


    //ஆபீஸ்ல எல்லோரும் போன அப்புறமும் வேலை செய்யர மாதிரியே நடிச்சிட்டு உக்காந்துருக்குதே அந்த புள்ள யாரு... :-)//

    ஹி...ஹி... அது நான் இல்ல. என்ன மாதிரி இன்னொரு நல்ல புள்ள
    :)

    ReplyDelete
  33. கொக்கு படம் பிரமாதம்

    ANBUDAN
    KRP
    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete
  34. http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_26.html

    ReplyDelete
  35. //கொக்கு படம் பிரமாதம்//

    மிக்க நன்றி கேஆர்பி சார்.

    //ANBUDAN
    KRP
    http://visitmiletus.blogspot.com/

    மிலெட்டஸ்(Miletus)னு ஒரு ஊர் துருக்கியில இருக்கறதா விக்கிபீடியால போட்டிருக்கு. நீங்க அங்கேயா இருக்கீங்க?
    :)

    ReplyDelete
  36. //http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_26.html//

    தலைவிஜி...என்னத்த சொல்ல? மிக்க நன்றி.

    ReplyDelete
  37. மிலெட்டஸ்(Miletus)னு ஒரு ஊர் துருக்கியில இருக்கறதா விக்கிபீடியால போட்டிருக்கு. நீங்க அங்கேயா இருக்கீங்க?
    :)

    ILLAINGO

    ANBUDAN
    KRP
    VISITMILETUS.BLOGSPOT

    ReplyDelete
  38. nijamave nalla varigal nalla mozhi peyarthuirukeenga..... andha paatum nalla irukum adayum mozhi peyarthu irukalame

    ReplyDelete