சார்லி சாப்ளின் - ஆமாங்க. போன பதிவுல கேட்டிருந்த ராயல் மெயிலினால் 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலையில் இருந்த பிரபலம் சார்லி சாப்ளினே தாங்க. சரியாகக் கண்டுபிடிச்சு சொன்ன தம்பி ராயல் ராம்சாமிக்கு ஒரு ராயல் 'ஓ' போடுங்கங்கோ. பதினைஞ்சு வருஷத்துக்கும் மேலா அந்த தபால் தலை என்கிட்ட இருந்தாலும், அதுல இருக்கறது யாருன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலை. சமீபத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட ஸ்டாம்ப் ஆல்பத்தை எடுத்துப் பாக்கும் போது அதுல இருக்கறது 'வின்ஸ்டன் சர்ச்சில்' மாதிரி இருந்துச்சு. ஆனா அந்த ஸ்டாம்ப்லேயே கையெழுத்து ஒன்னு இருக்கு...அதை உத்துப் பாக்கும் போது சார்லி சாப்ளின்னு எழுதியிருக்கற மாதிரி இருந்துச்சு. சரி யாரா இருக்கும்னு நெட்ல தேடும் போது தான் தெரிஞ்சது அது சாட்சாத் சார்லி சாப்ளினே தான்.
ஒட்டிப் போன முகம், குட்டி மீசை, டெர்பி தொப்பி இப்படின்னு பாத்து பழக்கப்பட்ட சார்லி சாப்ளினை இப்படி கொஞ்சம் பூசனாப்பல பாத்ததுல பயங்கர ஆச்சரியம். ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மளோட முதல் ரியாக்ஷன் என்னன்னா"மனுஷன் செமத்தியா தண்ணி அடிப்பான் போலிருக்கு"ங்கறது தான் :). இவரைப் பத்தி விகிபீடியால படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டது இவரோட முழு பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர்(Charles Spencer Chaplin Jr.). அடுத்ததா வந்தது இன்னொரு சந்தேகம். உலகப் புகழ் பெற்ற இவர் ஜுனியர்னா சீனியர் யாருன்னு தான்? சீனியரும் ஜூனியர் மாதிரியே புகழ் பெற்றவரா அப்படிங்கறது அடுத்த கேள்வி? தேடிட்டிருக்கேன். தெரிஞ்சா சொல்றேன். உங்களுக்குத் தெரிஞ்சாலும் சொல்லுங்க. விகிபீடியால கண்ணுல பட்ட இன்னொரு விஷயம் இவரோட 'லிஸ்ட் ஆஃப் பொண்டாட்டிஸ்". இந்த மனுசன் வாங்குன அவார்டு லிஸ்டு மாதிரியே இந்த லிஸ்டும் ரொம்ப பெருசா இருக்கு. படிச்சிட்டு வாயை மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம். தலைவர் டுபுக்கு மாதிரி தங்கமணி வாயைக் கெளறி எதாச்சும் ப்ளாக்ல எழுதனும்னு அந்த பாழாப் போன நேரத்துல மண்டைக்குள்ள மணியடிச்சுது. விதி வலியதாச்சே? எங்க வூட்டு அம்மா கிட்ட "ஒன்னே ஒன்னை வச்சிக்கிட்டே அவனவன் திண்டாடறான், இந்தாளு எப்படி தான் சமாளிச்சானோ'ன்னு வாயை விட்டேன். ப்ளாக் எழுதறதுக்காக விழுப்புண் பெற்றவன் என்ற பெயரும் பெற்றேன் :(
சரி அதை விடுங்க. மறுபடியும் விஷயத்துக்கு வருவோம். பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் காரணத்தைப் பொறுத்து தபால் தலைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அன்றாடப் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் தபால் தலைகளை Definitive Stamps என்று சொல்கிறார்கள். உதாரணத்துக்கு கீழே உள்ள 25 பைசா டிராக்டர் ஸ்டாம்பைப் பாருங்களேன். ரொம்பவும் பழக்கப்பட்டதா இருக்கில்ல? அதே மாதிரி தான் இந்த 5 ரூபா ரப்பர் மர ஸ்டாம்பும். இவை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அன்றாடப் பயன்பாட்டிற்காக பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படுபவை.
இங்கிலாந்து(அல்லது யூ.கே) நாட்டின் ராணி தலை ஸ்டாம்புகளும் Definitive வகையைச் சேர்ந்தது தான். அப்புறம் பாலராஜன்கீதா சார் சொன்னது மாதிரி, முதன் முதலில் தபால் தலைகளை வெளியிட்ட நாடு என்பதனால் ஐக்கிய ராசாங்கத்தின்(நன்றி : சூடான் புலி) தபால் தலைகளில் நாட்டின் பெயர் இருக்காது. விக்டோரியா மகாராணியின் தலையின் சிறிய Motif மட்டுமே இருக்கும்.
மக்களின் பொது பயன்பாட்டிற்காகத் தான் என்ற போதிலும் ஒரு நிகழ்ச்சியையோ, ஒரு பிரபலம்/தலைவரையோ சிறப்பிக்க வெளியிடப்படும் தபால் தலைகளை Commemorative Stamps என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு சமீபத்தில் ஐதராபாத்தில் உலக ராணுவ விளையாட்டுகள்(World Military Games) நடந்ததில்லையா? அந்நிகழ்ச்சியினைப் பற்றி வெளி உலகுக்கு அறிவிக்க இந்திய தபால் துறையினரால் சில தபால் தலைகள் வெளியிடப்பட்டன். Definitive தபால் தலைகள் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு குறுகிய காலத்துக்குள் மட்டும் புழக்கத்தில் இருப்பவை Commemorative வகை தபால் தலைகள்.
கீழே இருப்பவை Commemorative வகை தபால் தலைகள் சில.
1985 ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாட்டின் போது பூட்டான் நாட்டினால் வெளியிடப்பட்ட தபால் தலை.
அதே நிகழ்ச்சியைக் குறிப்பதற்காக இந்தியாவால் வெளியிடப்பட்ட தபால் தலை.
முதல் தபால் தலை வெளியிடப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இலங்கையினால் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை. இலங்கையின்(அந்நாள் சிலோன்) முதல் தபால் தலையையும் இதில் காணலாம். இவ்வகை தபால் தலையினை "Stamp on Stamp" என்று சேகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். இவ்வகை தபால் தலைகளைத் தேடித் தேடிச் சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
நான் வந்துட்டேன் அங்கிள்...
ReplyDeleteஅடடே நான் தான் பர்ஸ்ட்...
ReplyDeleteபல புதிய தகவல்கள் நன்றி அண்ணாத்த...
ReplyDeleteநம்ம பெயர சொன்னதுக்கும் சேர்த்து தான் :)
அடுத்த போஸ்ட்க்கு காத்திருக்கிறோம்!!
ReplyDelete//நான் வந்துட்டேன் அங்கிள்...//
ReplyDeleteவந்துட்டே சரி...அதென்ன அங்கிள்?? அங்கிள்னு அவசியம் சொல்லனுமா? அண்ணான்னு சொன்னா ஆகாதா?
:))
//அடடே நான் தான் பர்ஸ்ட்...//
ReplyDeleteஆமா...ஆமா...ஆமா
:)
//பல புதிய தகவல்கள் நன்றி அண்ணாத்த...
ReplyDeleteநம்ம பெயர சொன்னதுக்கும் சேர்த்து தான் :)///
டேங்கீஸ் பா...நானும் உன்னோட வருகைக்கு நன்னி சொல்லிக்கிறேன்.
:)
வாங்க குட்டிபிசாசு,
ReplyDeleteவருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.
:)
அருமையான பதிவு, நல்லா இருக்கு, அப்புறமா வந்து மெதுவாப் படிச்சுக்கறேன். நீங்க என்ன பின்னூட்டத்துக்குப் பதிலா சொல்லப் போறீங்க? அதனாலே இது போதும்!! :P :P
ReplyDelete//அருமையான பதிவு, நல்லா இருக்கு, அப்புறமா வந்து மெதுவாப் படிச்சுக்கறேன்//
ReplyDeleteபடிச்சுப் பாக்காமலேயே அருமையான பதிவா?? இதெல்லாம் ரொம்ப நக்கலு.
//நீங்க என்ன பின்னூட்டத்துக்குப் பதிலா சொல்லப் போறீங்க? அதனாலே இது போதும்!! :P :P//
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இந்த அதியமான்.
:(
இலங்கை நாட்டின் எல்லா அஞ்சல்வில்லைகளிலும் தமிழ் எழுத்துகள் இருக்குமா ? இதேபோல வேறு ஏதாவது நாட்டின் அஞ்சல்வில்லைகளில் தமிழ் எழுத்துகள் உள்ளனவா ?
ReplyDelete//அஞ்சல் வில்லைகள்//
ReplyDeleteதபால் தலைக்கு நல்ல தமிழ்ச் சொல்லா இருக்குதே சார்...இனிமே இதை உபயோகிக்கலாம் போலிருக்கு.
//இலங்கை நாட்டின் எல்லா அஞ்சல்வில்லைகளிலும் தமிழ் எழுத்துகள் இருக்குமா ? இதேபோல வேறு ஏதாவது நாட்டின் அஞ்சல்வில்லைகளில் தமிழ் எழுத்துகள் உள்ளனவா ?//
ஆமாங்க சார். இலங்கையின் எல்லா அஞ்சல் வில்லைகளிலும் இலங்கை என்று தமிழில் எழுதியிருக்கும். எனக்கு தெரிஞ்சு வேற எந்த நாடும் தமிழ் எழுத்தில் அஞ்சல் வில்லைகள் வெளியிடுவதில்லை(சிங்கப்பூர் உட்பட)...சிங்கப்பூர் என்று ஏன் குறிப்பாக சொல்கிறேன் என்றால் சிங்கப்பூர் நாட்டு டாலர் நோட்டுகளில் தமிழில் எழுதியிருப்பதை பார்த்த ஞாபகம்.
தபால் தலை சேகரிப்பது என்பது ஒரு இனிய பொழுது போக்கு. அதை ஆராய்ச்சி செய்து அழகாக பதிவு போடுவது பாராட்டத்தக்கது
ReplyDelete//தபால் தலை சேகரிப்பது என்பது ஒரு இனிய பொழுது போக்கு. அதை ஆராய்ச்சி செய்து அழகாக பதிவு போடுவது பாராட்டத்தக்கது//
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி சீனா சார்.
தபால்தலைக்கு வேலையில்லா கால கட்டத்தில் தலையை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.உங்களுக்கு அனைத்து ,வலைப் பதிவாளர்கள் சார்பில்"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ கைபுள்ள"என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
ReplyDelete//தபால்தலைக்கு வேலையில்லா கால கட்டத்தில் தலையை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.உங்களுக்கு அனைத்து ,வலைப் பதிவாளர்கள் சார்பில்"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ கைபுள்ள"என்ற பட்டத்தை வழங்குகிறேன்//
ReplyDeleteவாங்க கோமா,
வருகைக்கும் உங்க அழகான பட்டத்துக்க்கும் மிக்க நன்றிங்க.
:)
ஆஹா....தலைதலையா இருக்கும் இந்தப் பதிவை எப்படி தாண்டிப்போயிட்டேன்னு புரியலை.
ReplyDeleteஎதுக்கும் கீதாவுக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன்.
நானும் ஒரு தலை சேகரிப்பு வச்சுருக்கேன்.
கைப்புள்ளெ,
நம்மூர்(இந்தியா) நோட்டுலேயும் தமிழில் எழுதியிருக்கு:-)))))
//ஆஹா....தலைதலையா இருக்கும் இந்தப் பதிவை எப்படி தாண்டிப்போயிட்டேன்னு புரியலை.
ReplyDeleteஎதுக்கும் கீதாவுக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன்//
வாங்க துளசிம்மா. வருகைக்கு மிக்க நன்றி. நானும் எங்கத் தலைவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
//நானும் ஒரு தலை சேகரிப்பு வச்சுருக்கேன்//
ஹி...ஹி...அப்போ எக்ஸ்சேஞ்சுக்கு வர்றீங்களா?
:)
//கைப்புள்ளெ,
நம்மூர்(இந்தியா) நோட்டுலேயும் தமிழில் எழுதியிருக்கு:-)))))//
நீங்க சொல்றது சரி தான். ஆனா தபால்தலைகளில் தமிழில் அச்சிடுவது இலங்கை மட்டுமே. இல்லையா?
:)