'தலை'எழுத்து, 'தலை'புராணம், 'தலை' சொல்லும் கதை இப்படியாக பல பேர்களை யோசிச்சி கடைசியா 'தலை'நகரம்னு பேர் வச்சாச்சு. நிற்க. இது வைகைப்புயல் வடிவேலுவைப் பத்தின பதிவோ காதல் மன்னன் அஜித் குமாரைப் பத்தினப் பதிவோ கெடையாது. சின்ன வயசுல ஆரம்பிச்ச ஒரு பழக்கம்...அதை பத்தின பதிவு தான் இது. பொழுதுபோக்குன்னு சொல்றதை விட பழக்கம்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும். சரி பில்டப்பு போதும்...அதாவதுங்க சின்ன வயசுல ஆரம்பிச்சி இடையில ஒரு பத்து வருஷம் விட்டுப் போய் இப்ப மறுபடியும் புது உத்வேகத்தோட ஆரம்பிச்சிருக்கற தபால் தலை சேகரிப்பு(Philately) பத்தி எழுதலாம்னு ஒரே
ஆர்வங்கா உந்தி. அதி கோசம் ஈ ரோஜு கடுமையான ஓய்வுலேருந்து எழுந்து வந்திருக்கேன். தபால் தலைகளைப் பத்தியும் தபால் தலை சேகரிப்பு கலையில் நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம் இருக்கு. இதை எழுதுவதன் மூலமாக நானும் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம்னு நெனைக்கிறேன்.
சரி...முதல்ல உலகின் முதல் தபால் தலை பத்தி பார்ப்போம். இதோட பேரு பென்னி ப்ளாக்(Penny Black). வெளியிட்ட நாடு யுனைட்டெட் கிங்டம்(U.K.- தமிழ்ல என்னங்க?). தபால்களைப் பல இடங்களுக்கும் அனுப்பும் போது அஞ்சல் அலுவலகங்களில் பணம் செலுத்தி அனுப்பும் முறையை மாற்றுவதற்காக, அந்நாட்டின் அஞ்சல் முறை சீர்திருத்தங்களின்(U.K.Postal reforms) ஒரு பகுதியாக சர்.ரோலண்ட் ஹில்(Sir.Rowland Hill) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தபால் தலை(Postage stamp). உலகின் முதல் தபால் தலையான பென்னி ப்ளாக் விக்டோரியான மகாராணியின் படத்தைத் தாங்கி மே 1, 1840 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தபால் தலை சேகரிப்பாளர்களால்(Philatelists) மிகவும் போற்றப்படும் இத்தபால் தலையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி. ஆனால் பயன்படுத்தப் படாத(unused அல்லது mint) பென்னி ப்ளாக்கின் தற்போதைய மதிப்பு 3000-4000 பவுண்டுகள் ஆகும்.
பென்னி ப்ளாக்கின் முழு வரலாறையும் படிக்க இங்கு சுட்டுங்கள்.
கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட தபால் தலைகளின் மீது குத்தப்படும் அஞ்சல் முத்திரைகள் சரிவர தெரிவதில்லை என்ற குறையைப் போக்க பென்னி ப்ளாக்கிற்குப் பிறகு 1841 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை தான் கீழே உள்ள பென்னி ரெட்(Penny Red). பென்னி ப்ளாக்கைப் போல அல்லாமல் ஒரு தாளில் உள்ள தபால் தலைகளுக்கிடையே துளைகள்(perforations) உடன் வெளிவந்தது பென்னி ரெட்டின் சிறப்பு.
சரி, ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-Royal Mail) 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீழே உள்ள தபால் தலையில் உள்ள இந்த பிரபலம் யார்? இவர் உலகப் புகழ் பெற்றவர். சொல்லுங்க பாப்போம்.
வரும் நாட்களில் தபால் தலை சேகரிப்பில் பயன்படுத்தப் பெறும் கலைச்சொற்கள்(Philatelic Terms), என்னிடம் உள்ள தபால் தலைகளிலிருந்து அவை சொல்லும் கதைகள் முதலானவற்றை எழுத எண்ணியுள்ளேன். நம்ம பதிவர்கள்ல தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ளவங்கன்னு பாத்தா இராமச்சந்திரன் உஷா மேடம் இருக்காங்கனு நினைக்கிறேன்(அப்படி அவங்க சொன்னதா எங்கேயோ படிச்ச ஞாபகம்). வேற யாருக்காச்சும் இதுல ஆர்வம் இருந்தாலும் சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கலாம்னு ஒரு ஆசை தான். சீக்கிரம் சந்திப்போம்னு சொல்லி கடுமையான ஓய்வெடுக்கச் செல்லுவது உங்கள் உங்கள் உங்கள் டேஷ் டேஷ் டேஷ் :)
U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின் பெயர் இருக்காதாம். ஏனெனில் அந்த நாடுதான் முதன் முதலில் தபால் தலை வெளியிட்டதாம்.
ReplyDelete//U.K. நாடு வெளியிடும் தபால் தலைகளின் அந்தநாட்டின் பெயர் இருக்காதாம். ஏனெனில் அந்த நாடுதான் முதன் முதலில் தபால் தலை வெளியிட்டதாம்//
ReplyDeleteகரெக்டுன்னேன். நானே சொல்லனும்னு நெனச்சி சொல்லாம மறந்துட்டேன்...அண்ணாச்சி சரியா பாயிண்டைப் புடிச்சிட்டீங்கல்ல? சூப்பருன்னேன்.
:)
//ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-Royal Mail) 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீழே உள்ள தபால் தலையில் உள்ள இந்த பிரபலம் யார்? இவர் உலகப் புகழ் பெற்றவர். சொல்லுங்க//
ReplyDeleteதல,
அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)
//தல,
ReplyDeleteஅது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)//
ராயல்! நான் கூட மொதல்ல அதான் நெனைச்சேன். ஆனா இது அவரில்லை.
:)
கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க...
ReplyDelete/கைப்புள்ள said...
ReplyDelete//தல,
அது வின்ஸ்டன் சர்ச்சில் தானே?? :)//
ராயல்! நான் கூட மொதல்ல அதான் நெனைச்சேன். ஆனா இது அவரில்லை./
சே... ரெண்டு-மூணு வாரத்துக்கு முன்னாடி ஆனந்த விகடனிலே கூட இந்த போட்டோ பார்த்தேன்... :(
அது சார்லின் சாப்ளின்.. சரியா தல? :)
ராயல்! உன் பதில் சரி தான். கொஞ்ச நேரம் கழிச்சு உன் கமெண்டை பப்ளிஷ் பண்ணறேன். ஓகேவா?
ReplyDelete//கைப்பு அங்குள்...சூப்பரு...கன்டினியு பண்ணுங்க...//
ReplyDeleteரொம்ப டேங்கீஸ் பவன்! கீப் தெம் கமிங்.
:)
ஐக்கிய ராஜாங்கம்..
ReplyDeleteதப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம் :)
அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!
ReplyDeleteநமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட தபால் தலைகல் இருக்கு. ஆல்பம் போட்டு வெக்காம ஒரு கவர்ல வெச்சு இருக்கேன். (புதரகத்துல) போன வாரம் தபால் அலுவலகம் போன போது ஒரு வெளம்ப்ர தட்டி பார்த்தேன். அதாவது நம்ம போட்டோ குடுத்தா அவுங்களே பிரிண்ட் போட்டு குடுப்பாங்களாம். சரின்னு ஜூனியர் படம் குடுத்தேன். அவ்ளோதான். சிம்பிலா போயிருச்சு மேட்டரு.
ReplyDeleteஇந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் தபால்தலை வெளியிடாததைக் கண்டித்து என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்!
ReplyDeleteஇவண்
கப்பி
தல கைப்புள்ள தொண்டர் படை,
டீ குடிக்கும் பிரிவு,
டெக்ஸாஸ் வட்டம்
(புதரக கைப்பு நற்பணி மன்றத்துடன் இணைந்தது)
தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்து
ReplyDeleteதல - எங்கே போனாலும் கும்மாங்குத்து
தபால் தலை - எச்சில் தடவி ஒட்டலாம்
தல - எப்ப வேணும்னாலும் ஓட்டலாம்
தபால் தலை - பெரிய ஆளுங்க படம் இருக்கும்
தல - உடம்புல பெரிய ஆளுங்க அடிச்ச தடம் இருக்கும்
தபால் தலை - அரசாங்கம் வெளியிடும்
தல - அதே அரசாங்கம் புடிச்சு உள்ள போடும்
நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன். இங்கே ஒரு தலை க்ளப் இருக்கு. போஸ்ட்டல் பிரிவு நடத்துது. அதுலே மெம்பர். புது தலை அஃபீசியலா வெளிவருமுன்னே
ReplyDeleteநமக்கு அனுப்பிருவாங்க.
வேற எந்த நாட்டுக்குப்போனாலும் பழைய தலைகள் விற்கும் கடைக்கும்போய் எட்டிப்பார்க்கரது உண்டு.
திநகர் போஸ்ட் ஆஃபீஸைக் கண்டு பிடிக்க முடியலை(-:
//ஐக்கிய ராஜாங்கம்..
ReplyDeleteதப்பு தப்பு... ஐக்கிய ராசாங்கம் :)//
சரி ரைட்டேய் புலி.
:)
//அட தபால் 'தல' தொடரா!! சூப்பர் (தபால்) தல!!//
ReplyDeleteவாங்க கொத்ஸ்! நன்றிங்க.
//நமக்கு அவ்வளவா நாட்டம் இல்லைன்னாலும் 13 நாட்டோட தபால் தலைகல் இருக்கு. ஆல்பம் போட்டு வெக்காம ஒரு கவர்ல வெச்சு இருக்கேன்.//
ReplyDeleteஆல்பத்துல போட்டு வைங்க பாஸ். வருங்கால தலைமுறை(ஷெர்வினுக்கு) பயன்படும்:))
//(புதரகத்துல) போன வாரம் தபால்
அலுவலகம் போன போது ஒரு வெளம்ப்ர தட்டி பார்த்தேன். அதாவது நம்ம போட்டோ குடுத்தா அவுங்களே பிரிண்ட் போட்டு குடுப்பாங்களாம். சரின்னு ஜூனியர் படம் குடுத்தேன். அவ்ளோதான். சிம்பிலா போயிருச்சு மேட்டரு.//
இப்பல்லாம் அதை நெட்லேயே கூட பண்ணலாம்ங்க. வருகைக்கும் கருத்துக்கும் டேங்க்ஸுங்க.
//இந்திய அஞ்சல் துறை இன்னும் தல கைப்புள்ள பெயரில் தபால்தலை வெளியிடாததைக் கண்டித்து என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்!
ReplyDeleteஇவண்
கப்பி
தல கைப்புள்ள தொண்டர் படை,
டீ குடிக்கும் பிரிவு,
டெக்ஸாஸ் வட்டம்
(புதரக கைப்பு நற்பணி மன்றத்துடன் இணைந்தது)//
பின்னூட்டத்தை ரசித்தது
அழகிய தமிழ்மகன் கப்பி அகில இந்திய ரசிகர் மன்றம்,
பெண்களூரு மாவட்டம்,
பெங்குயின் தோட்டம் அருகில்
(உருகுவே கோட்ட நற்பணி மன்றம் ஆதரவு பெற்றது)
//தபால் தலை - கவர்ல ஒட்டிட்டா முத்திரை குத்து
ReplyDeleteதல - எங்கே போனாலும் கும்மாங்குத்து
தபால் தலை - எச்சில் தடவி ஒட்டலாம்
தல - எப்ப வேணும்னாலும் ஓட்டலாம்
தபால் தலை - பெரிய ஆளுங்க படம் இருக்கும்
தல - உடம்புல பெரிய ஆளுங்க அடிச்ச தடம் இருக்கும்
தபால் தலை - அரசாங்கம் வெளியிடும்
தல - அதே அரசாங்கம் புடிச்சு உள்ள போடும்//
அப்படியே திருவிளையாடல்ல ஓளவையார் முருகனைப் பாடற மாதிரியே இருக்கு.
:)
//நானும் தலைகள் சேகரிப்பு வச்சுருக்கேன்.//
ReplyDeleteஅடடா...இன்னுமொரு ஃபிலாடெலிஸ்ட்.
//இங்கே ஒரு தலை க்ளப் இருக்கு. போஸ்ட்டல் பிரிவு நடத்துது. அதுலே மெம்பர். புது தலை அஃபீசியலா வெளிவருமுன்னே
நமக்கு அனுப்பிருவாங்க.//
என்னென்ன ஸ்டாம்ப் வச்சிருக்கீங்க? எந்த தீம்ல கலெக்ட் பண்ணறீங்க? இதெல்லாம் சொல்லுங்களேன்.
//வேற எந்த நாட்டுக்குப்போனாலும் பழைய தலைகள் விற்கும் கடைக்கும்போய் எட்டிப்பார்க்கரது உண்டு//
ஹி...ஹி...அதான் இது பொழுதுபோக்கு இல்ல...பழக்கம்னு சொன்னேனே.
//திநகர் போஸ்ட் ஆஃபீஸைக் கண்டு பிடிக்க முடியலை(-://
வை? இதுக்கு பின்னாடி என்ன கதை?
:)