இந்த இங்கிலீஷ் பாட்டு இருக்கு இல்லீங்க இங்கிலீஷ் பாட்டு...அதை எல்லாம் கேக்க ஆரம்பிச்சது நான் எட்டாவது படிக்கும் போது தூர்தர்ஷன் செகண்ட் சேனல்ல வந்த "Michael Jackson is the King of Pop"ங்கிற நிகழ்ச்சியைப் பாத்துட்டு தான். ஜாக்சன் துரை என்ன பாடுறாருன்னு ஒன்னும் புரியலைன்னாலும் சும்மா அந்த பீட்டைக் கேட்டு கையைக் காலை அசைச்சிட்டு கெடப்போம். உதாரணத்துக்கு "Black or White"ங்கிற பாட்டுல "Black or White"னு அவரு சத்தமா கத்துறதை தவிர வேற எதுவும் பெருசா புரிஞ்சதில்லை. இப்ப கூட பெருசா எதுவும் முன்னேத்தமில்ல. இருந்தாலும் டெல்லியில என் கூட வேலை செஞ்ச பசங்க புண்ணியத்துல, மைக்கேல் ஜாக்சனை மீறி வேற பல ஆர்ட்டிஸ்டுங்க (அப்படித் தான் சொல்லனுமாம்)பாட்டையும் கேக்கறதுண்டு. அப்படி எனக்கு புடிச்ச பாட்டுகள்ல ஒரு பாட்டு
'4 Non Blondes'ங்கிற குரூப்போட 'What's goin on'ங்கிற பாட்டு. அந்த பாட்டுல மெல்லிய கிடார் இசையும் வித்தியாசமா இருக்குற "Hi-pitch" பெண் குரலும் ரொம்ப புடிக்கும்.
இந்த பாட்டைக் கேக்கும் போதெல்லாம்
ஊப்பி கோல்டுபெர்க்(Whoopi Goldberg) மாதிரி இருக்குற ஒரு 40-45 வயசுள்ள யாரோ ஒரு 'கருத்தம்மா' பாடுன பாட்டுன்னு தான் நெனச்சிக்குவேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இணையத்துல தேடும் போது தான் இந்த பாட்டு வரிகளும் இதப் பாடுனவங்க லிண்டா பெர்ரிங்கிற(Linda Perry) வெள்ளைக்கார அக்கான்னு தெரிஞ்சது. இந்த பாட்டை இதுக்கு முன்னாடி பல முறை கேட்டுருந்தாலும், சத்தியமா சொல்றேன் ஒரு தடவை கூட என்ன பாடுறாங்கன்னு புரிஞ்சதில்லை(அமெரிக்கால வேலை செய்யறவங்க, படிக்கிறவங்க எல்லாம் எப்படித் தான் இதெல்லாம் சமாளிக்கிறீங்களோ?). கொடுமை என்னன்னா பாட்டு வரிகளை பதிவிறக்கம் செஞ்சும் கூட, நமக்கு என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியலை. அதனால அதை அப்படியே விட்டுட முடியுமா என்ன? கீழே இங்கிலீஷ் பாட்டு வரிகளைப் பாருங்க. என்ன நெனச்சிப் பாடிருப்பாங்கன்னு நானே தமிழ்ல பாட்டு வரிகளை மொழி "பேத்துட்டேன்".
பாடல் : What's Up?
ஆல்பம் : 4 Non Blondes(1992)
பாடியவர் : லிண்டா பெர்ரி (Linda Perry)
கைபுள்ளெ,
ReplyDeleteலிண்டா அக்காவை வுடுங்க.
ஒரு சியாமள மங்கனுக்கு இப்ப
வேற வேலை ஒண்ணும் இல்லையோன்னு இருக்குப்பா.
அதே ஒரு ஃபீலிங்க்ஸ்ஸா போச்சுப்பா:-))))
//லிண்டா அக்காவை வுடுங்க.
ReplyDeleteஒரு சியாமள மங்கனுக்கு இப்ப
வேற வேலை ஒண்ணும் இல்லையோன்னு இருக்குப்பா.
அதே ஒரு ஃபீலிங்க்ஸ்ஸா போச்சுப்பா:-))))//
வாங்க துளசியக்கா,
நீங்க சொல்றது புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...சியாமள மங்கன்னு நீங்க சொல்றது யாரை? என்னய்யா?
என்னை தான்னா அதுல ஃபீலிங்ஸ் ஆகறதுக்கு ஒன்னுமில்ல...அது ஹி...ஹி...கிட்டத் தட்ட உண்மை தான்.
:))
கைப்புள்ளெ,
ReplyDeleteநீங்க தமிழ்ல எல்லாம் விளக்கம் கொடுத்தும் எனக்கு ஒன்னுமே வெளங்கல..
நீங்களே தமிழ்லயும் பாடி இங்க போட்டுடுங்களேன்..
பாட்டுக்கு நடுவுல அவ்வ்வ்..ன்னே கூவிடலாம்..
கைப்பு...புரியுதப்பா புரியுது..உமக்கு 25 வயசு ஆச்சு..அடுக்கடி படுக்கைய நனைக்கிறீங்க...அழுதுதான். ஆண்டவா ஆண்டவான்னு கதறிக் கதறிக் கும்புடுறீங்க...என்ன செய்ய....காலம் இப்பிடியே போய்க்கிட்டேயிருக்கே...புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சிரும். வருத்தப்படாதீங்க.
ReplyDelete//நீங்க தமிழ்ல எல்லாம் விளக்கம் கொடுத்தும் எனக்கு ஒன்னுமே வெளங்கல..
ReplyDeleteநீங்களே தமிழ்லயும் பாடி இங்க போட்டுடுங்களேன்..
பாட்டுக்கு நடுவுல அவ்வ்வ்..ன்னே கூவிடலாம்.. //
வாங்க முரட்டுக்காளை,
கொம்பு சீவி முறுக்கோட இருப்பீங்கன்னு பாத்தா, கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு ஷோக்காத் தான் இருக்கீங்க. வெளங்கலியா...என்னங்க பண்ணறது நம்ம தமிழ் புலமை அம்புட்டுத் தான். நான் பாடுனா யாரு கேக்கறது? வேணா உங்களுக்காக ஒரு தரம் சத்தமா கூவிக் காட்டறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//கைப்பு...புரியுதப்பா புரியுது..உமக்கு 25 வயசு ஆச்சு..//
ReplyDeleteவாங்க ஜிரா,
யாருங்க சொன்னது...நீங்க குடுத்தது கலத் ஜவாப்ங்கிறேன். அது மூணு வருசத்துக்கு முந்தி...
//அடுக்கடி படுக்கைய நனைக்கிறீங்க...அழுதுதான்//
நல்ல காலம் சாமி! வெளக்குனீங்க. தப்பிச்சேன். அதுக்கே உங்களுக்கு நன்றி சொல்லனும் :)
//ஆண்டவா ஆண்டவான்னு கதறிக் கதறிக் கும்புடுறீங்க...என்ன செய்ய....காலம் இப்பிடியே போய்க்கிட்டேயிருக்கே...புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சிரும். வருத்தப்படாதீங்க//
சுதந்திரமா ஒரு பாட்டைக் கூட ரசிக்க முடியலைப்பா சாமி! ஏனுங்க பேச்சிலரா இருக்குறது அம்புட்டு பெரிய குத்தமா? ஒரு பாட்டைக் கேட்டாக் கூட, அதுல நம்ம கதையையும் நம்ம சொன்னதையும் சொல்லாததையும் சொருகி மக்கள் திரைக்கதை எழுதி ரசிக்கிறாங்க. ஏங்க அப்படி? தெரிஞ்சா சொல்லுங்களேன்.
:)
//(அமெரிக்கால வேலை செய்யறவங்க, படிக்கிறவங்க எல்லாம் எப்படித் தான் இதெல்லாம் சமாளிக்கிறீங்களோ?)//
ReplyDeleteஅதான் நம்மூரு பாட்டுத்தேன் கேட்கணுமுன்னு ஒரு பாலிஸி வெச்சிருக்கோமில்ல. மத்தபடி இந்த டாபிக்கில் சொல்ல ஒண்ணுமில்ல.
ஐயாம் தி கிரேட் எஸ்கேப்.
//அதான் நம்மூரு பாட்டுத்தேன் கேட்கணுமுன்னு ஒரு பாலிஸி வெச்சிருக்கோமில்ல//
ReplyDeleteவாங்க கொத்ஸ்,
அட நான் அத சொல்லலீங்க. ஒரு நாலு நிமிஷப் பாட்டுலேயே என்ன சொல்றாங்கன்னு நம்மால புரிஞ்சுக்க முடியலை. தினம் தினம் வெள்ளைக்காரன் கிட்ட மாரடிச்சு அவங்க பேசறதைப் புரிஞ்சுக்கிட்டு எப்படி தான் ரிப்ளை பண்ணறீங்களோ? அத சொல்ல வந்தேன்.
//மத்தபடி இந்த டாபிக்கில் சொல்ல ஒண்ணுமில்ல.
ஐயாம் தி கிரேட் எஸ்கேப்//
கொத்ஸ், நீங்க எஸ்கேப் ஆவறதைப் பாத்தா இந்தப் பதிவுல எதோ வில்லங்கமா இருக்கும் போல இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லிட்டுப் போங்கய்யா. மொத்து வாங்காம தப்பிச்சுக்கிறேன்.
கைப்புள்ளை,
ReplyDeleteநீங்க வேண்டும் என்றே பொருளை திரித்து எழுதினீங்களா என்று தெரியவில்லை. சில வரிகளின் பொருள் வேறு மாதிரி என்று பட்டது.
25 years and my life is still
I'm trying to get up that
great big hill of hope
For a destination
25 வருஷமா வாழ்க்கை அப்படியேதான் இருக்கு,
நம்பிக்கை குன்றில் ஏறி புதிய இலக்கை அடைய முயற்சிக்கிறேன்
the world was made up of
this brotherhood of man for whatever that means
ஆனா, இந்த உலகமே ஏற்கனவே சிலபேர் கூடி விதிச்ச சட்டத்தில்தான் நடக்குதாம்,
(அதனால என்ன முட்டி மோதினாலும், என்னால நினைச்ச இடத்துக்குப் போக முடியல)
I try all the time in this institution
And I pray, oh my God do I pray
I pray every single day for a revolution
எவனோ கட்டி வச்ச இந்தச் சிறைகளைத் தகர்க்க ஒரு புரட்சி வெடிக்கணும்
என்று தினசரி பிரார்த்திக்கிறேன்.
====
மொத்தத்தில் இன்றைய விதிகளைத் தகர்த்து புதியதோர் உலகம் வேண்டும் என்று ஒரு தவிப்பு.
அன்புடன்,
மா சிவகுமார்
//நீங்க வேண்டும் என்றே பொருளை திரித்து எழுதினீங்களா என்று தெரியவில்லை. சில வரிகளின் பொருள் வேறு மாதிரி என்று பட்டது//
ReplyDeleteவாங்க சிவகுமார்,
கண்டிப்பாக நான் எழுதிய பொருளில் லிண்டா பெர்ரி பாடியிருக்க மாட்டார். என்ன பொருள்ல எழுதியிருப்பாருன்னு யூகிச்சிட்டு இருக்கும் போது
//the world was made up of
this brotherhood of man for whatever that means//
இந்த வரிகளில் ஒரு தடங்கல். உண்மையாகவே என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
சரி இனிமேல் கஷ்டப்பட வேணாம்னு ஜாலியா நானே கற்பனை பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டேன். யாரையும் புண்படுத்தும் விதத்தில் அதில் எதுவும் இல்லையென்றே நம்புகிறேன்.
உண்மையிலேயே யாராவது பதிவைப் படித்து விட்டு பொருள் கூற மாட்டார்களா என்றே எதிர்பார்த்தேன்.
//the world was made up of
this brotherhood of man for whatever that means
ஆனா, இந்த உலகமே ஏற்கனவே சிலபேர் கூடி விதிச்ச சட்டத்தில்தான் நடக்குதாம்,
(அதனால என்ன முட்டி மோதினாலும், என்னால நினைச்ச இடத்துக்குப் போக முடியல)
I try all the time in this institution
And I pray, oh my God do I pray
I pray every single day for a revolution
எவனோ கட்டி வச்ச இந்தச் சிறைகளைத் தகர்க்க ஒரு புரட்சி வெடிக்கணும்
என்று தினசரி பிரார்த்திக்கிறேன்.
====
மொத்தத்தில் இன்றைய விதிகளைத் தகர்த்து புதியதோர் உலகம் வேண்டும் என்று ஒரு தவிப்பு//
தாங்கள் பாடல் வரிகளின் பொருள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது.
கிண்டல் செய்யவே பொருளை மாற்றி எழுதினீங்க என்று நினைத்தேன். நானும் ஊகத்தில் எழுதியதுதான் :-)
ReplyDeleteஇந்தச் சுட்டியைப் பாருங்கள் http://www.ephesians5-11.org/fogbom.htm.
Free Mason என்ற குழுவினர் Fatherhood of God, Brotherhood of Man என்ற முழக்கத்தின் கீழ் உலகை ஒரு வழியாக்க நினைத்தார்கள். Brotherhood of Man என்பது இறுக்கமாக சட்ட திட்டம் போட்டு மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயலும் குழுக்களைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.
இதையும் பாருங்கள். http://www.historymatters.gmu.edu/d/5023/
உங்கள் பதிவைப் படித்த பிறகே இதை எல்லாம் தேடிப் படித்தேன், நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
நாப்பிளக்கப் பொய் பேசி
ReplyDeleteநவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத
நாரியரைக்கூடி
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர்
கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட
குரங்கு நிலை போல
அகப்பட்டீர், கிடந்துழல
அகப்பட்டீர் நீரே!
அந்த காலத்திலயே எவ்வளவு அழகா ஆப்புகள பத்தி பாடல் எழுதி இருக்காங்க பாத்தீங்களா. உங்கள பத்தி அப்பவே தெரிஞ்சி வச்சிருக்காங்கல்ல?
நிச்சயமா நீங்க ஒரு வரலாற்று நாயகன் தான்.
தல இந்த மாதிரி தமிழ் பா(ஆ)ப்பு பாடல்கள் இருக்கும்போது எங்கனகுள்ளயோ இருக்குற இங்கீலீசு கருத்தம்மா பாட்டையெல்லாம் கேக்கறீங்களே இது நியாயமா?
மேற்சொன்ன பாடலில் எந்த உள்குத்தும் இல்லையென்பதை தாழ்மையுடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்படியே அந்த பாடலை யார் எழுதினாங்கன்னு கண்டுபிடிங்க பாப்போம்! :))
//Free Mason என்ற குழுவினர் Fatherhood of God, Brotherhood of Man என்ற முழக்கத்தின் கீழ் உலகை ஒரு வழியாக்க நினைத்தார்கள். Brotherhood of Man என்பது இறுக்கமாக சட்ட திட்டம் போட்டு மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயலும் குழுக்களைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்//
ReplyDeleteFree masonryஐ பற்றி இலவசக்கொத்தனார் தமிழில் பதிவிட்டிருக்கிறார். இதையும் பாருங்கள்.
http://elavasam.blogspot.com/2006/01/1.html
http://elavasam.blogspot.com/2006/01/2.html
//அந்த காலத்திலயே எவ்வளவு அழகா ஆப்புகள பத்தி பாடல் எழுதி இருக்காங்க பாத்தீங்களா. உங்கள பத்தி அப்பவே தெரிஞ்சி வச்சிருக்காங்கல்ல?
ReplyDeleteநிச்சயமா நீங்க ஒரு வரலாற்று நாயகன் தான்//
அட ஆமா இல்ல...வரலாற்று நாயகன் ரேஞ்சுக்கு உயர்த்தனதுக்கு ரொம்ப நன்றி தம்பி.
//தல இந்த மாதிரி தமிழ் பா(ஆ)ப்பு பாடல்கள் இருக்கும்போது எங்கனகுள்ளயோ இருக்குற இங்கீலீசு கருத்தம்மா பாட்டையெல்லாம் கேக்கறீங்களே இது நியாயமா?//
அப்படி இல்ல தம்பி...தமிழ் பாட்டையும் கேப்போம், மத்த மொழி பாட்டையும் கேப்போம். அவங்களும் எதாச்சும் நல்லது சொல்லிருதாங்கன்னா அதையும் தெரிஞ்சுக்கலாமில்ல...அதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் இதான் நம்ம கொளுகை.
தம்பி! இந்த பாட்டு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல் தமிழ் புத்தகத்துல வந்ததுன்னு நெனக்கிறேன். யாரு எழுதுனாங்கன்னு சட்டுன்னு நெனவுக்கு வரலை. ஒரு வேளை ஒளவையாரா? தப்பா இருந்துச்சுன்னா திட்டிடாதீங்க.
//தம்பி! இந்த பாட்டு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல் தமிழ் புத்தகத்துல வந்ததுன்னு நெனக்கிறேன். யாரு எழுதுனாங்கன்னு சட்டுன்னு நெனவுக்கு வரலை. ஒரு வேளை ஒளவையாரா? தப்பா இருந்துச்சுன்னா திட்டிடாதீங்க.//
ReplyDeleteதப்புதான், ஆனா திட்டமாட்டேன், ஒருவேள திட்டிபுட்டா சங்கத்து ஆளுங்கள அனுப்பி என்னய கைமா பண்ணிட மாட்டிங்க!! எதுக்கு வம்பு!
நமக்கு எப்பவாச்சும் ஒருமுறைதான் இந்த மாதிரி கேள்வி கேக்க தோணும்.
வேற யாருனா சொல்றாங்களா பாப்போம்!
//தப்புதான், ஆனா திட்டமாட்டேன், ஒருவேள திட்டிபுட்டா சங்கத்து ஆளுங்கள அனுப்பி என்னய கைமா பண்ணிட மாட்டிங்க!! எதுக்கு வம்பு!//
ReplyDeleteஅட சே! இதுக்குப் போயா ஒரு துபாய் வீரன் பயப்படுவான்? சங்கத்து ஆளுங்களுக்கும் என்னைய மாதிரி ஒத வாங்க மட்டும் தான் வரும்னு இந்நேரம்
தெரிஞ்சு வச்சிருக்கத் தேவையில்ல?
:)
//நமக்கு எப்பவாச்சும் ஒருமுறைதான் இந்த மாதிரி கேள்வி கேக்க தோணும்.
வேற யாருனா சொல்றாங்களா பாப்போம்! //
குவிஸ் புரோகிராமா? நடத்துங்க நடத்துங்க
:)
யாரும் கடைசிவரைக்கும் சரியான பதில் சொல்லலைன்னா வந்து நீங்க கடைசியாச் சொல்லிட்டு போங்க. சரியா?
//யாரும் கடைசிவரைக்கும் சரியான பதில் சொல்லலைன்னா வந்து நீங்க கடைசியாச் சொல்லிட்டு போங்க. சரியா?//
ReplyDeleteசரிங்க கைப்ஸ்!
அதுக்குள்ள வேற யாராவது சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன்.
ஆமா,
யாரு அந்த நாலு சியாமள மங்கைகள்?
//ஆமா,
ReplyDeleteயாரு அந்த நாலு சியாமள மங்கைகள்?//
ஹி..ஹி...இங்கே போட்டுருக்கேன்ல இங்கிலீசு பாட்டு...அந்த பாட்டு இருக்குற ஆல்பம் பேரு "4 Non Blondes". அதோட தமிழாக்கம் தான் "நான்கு சியாமள மங்கைகள்"
:)
Ga-ga-ga poooo!
ReplyDeleteNalla translate panninga. Aana ippollam english songs-la lyrics romba mosamaa pogudu. Rasikka mudiyama pogudhu!
//Ga-ga-ga poooo!
ReplyDeleteNalla translate panninga. Aana ippollam english songs-la lyrics romba mosamaa pogudu. Rasikka mudiyama pogudhu! //
வாங்க கார்த்திக்,
உங்களோட முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. ஹ்ம்ம்ம்...நீங்க சொல்றது உண்மை தான். என்னமோ அவங்களோட ரசனை அப்படியிருக்கு.
கைப்ஸ்,
ReplyDeleteஇன்னும் கண்டுபுடிக்கலயா?
ஒரு க்ளூ தரேன்.
அவர் ஒரு "சிட்டி"சன்
//ஒரு க்ளூ தரேன்.
ReplyDeleteஅவர் ஒரு "சிட்டி"சன் //
தம்பி,
கண்டுபிடிச்சிட்டேன். பட்டிணத்தார் தானே?
கூகிள் உதவியில் பதில் இங்கு கிடைத்தது:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40406241&format=html
//தம்பி,
ReplyDeleteகண்டுபிடிச்சிட்டேன். பட்டிணத்தார் தானே? //
கில்லி, கில்லி மாதிரி கண்டுபுடிச்சிங்க!
பட்டணத்துக்கு வரும் பெரிய "ண" இல்ல. சின்ன "ன"
பட்டினத்தார்.
அப்படிதானே போட்டுருக்காங்க,
ஓ எழுத்துப்பிழையா?
இருக்கட்டும் இருக்கட்டும்...
//பட்டினத்தார்.
ReplyDeleteஅப்படிதானே போட்டுருக்காங்க,
ஓ எழுத்துப்பிழையா?
இருக்கட்டும் இருக்கட்டும்...//
வாங்க தம்பி,
உண்மை தான். பட்டினத்தார்னு தான் போட்டுருக்காங்க. ஆனா பெரிய 'ண' அல்லது மூனு சுழி 'ண'வை டண்ணகர "ண" ன்னு படிச்ச ஞாபகம். டவுக்கு அடுத்து வரும் போது 'ண'வை உபயோகிக்கனும்னு ஒரு ஞாபகம். அதோட வெறுமனே பட்டணம்னு இல்ல பட்டிணம்னு எழுதும் போது பெரிய "ண"வைத் தான் உபயோகிக்கிறாங்க. அந்த எண்ணத்துல பட்டிணத்தார்னு எழுதுனேன். உண்மையிலேயே எது சரியானதுன்னு தெரியலை.
:)
//ஏய் ஏய் ஏய்
ReplyDeleteஎன்னாய்யா நடக்குது இங்கே?
//
இத தான் நாங்களும் கேக்கறோம். அம்மணி என்ன சொல்லுது?னு நிஜமாவே உமக்கு பிரியல? போங்கண்னே! எப்பவும் உமக்கு குசும்பு தான்! :D
அம்ம்ம்ம்ம்ம்மா நல்ல வேளை இத ஆபீசுல படிக்கலடா சாமி செம சிரிப்பு போங்க:))
ReplyDeleteஅம்பிக்கு மட்டும் வழக்கம் போல ஏதோ புரிஞ்சுடுச்சா!
ReplyDeleteதல லிண்டா அக்கா என்ன நினைச்சு பாடுச்சோ ஆனா உன் ஸ்டைல்ல விலக்கம் குடுத்து இருக்கு பாரு அது சூப்பர்....
ReplyDelete//அமெரிக்கால வேலை செய்யறவங்க, படிக்கிறவங்க எல்லாம் எப்படித் தான் இதெல்லாம் சமாளிக்கிறீங்களோ//
எங்களுக்கு தான் சன் டிவி, விஜய் டிவி இருக்கே...இத எல்லாம் கேட்டு அப்புறம் இதுக்கு லிரிக்ஸ் தேடி அதுக்கு அர்த்தம் புரிஞ்சு எதுக்கு தேவையில்லாத வேலை :-)
//இத தான் நாங்களும் கேக்கறோம். அம்மணி என்ன சொல்லுது?னு நிஜமாவே உமக்கு பிரியல? போங்கண்னே! எப்பவும் உமக்கு குசும்பு தான்! :D //
ReplyDeleteஅம்பி! உண்மையிலேயே புரியலீங்க. சொன்னா நம்புங்க சாமி. ஒரு குசும்பும் இல்லீங்கோ.
//அம்ம்ம்ம்ம்ம்மா நல்ல வேளை இத ஆபீசுல படிக்கலடா சாமி செம சிரிப்பு போங்க:)) //
ReplyDeleteவாங்க பொற்கொடி! சிரிச்சதுக்கு ரொம்ப டேங்ஸுங்க
Too gud! I really enjoyed this post. purinthalthan padal,kavithai,puthagam,blog elamay alagu. Though music has no languages, epdinga varinga ethum theriyama padarathu..? Good effort on the translation. You've got a great sense of humour!
ReplyDelete-Deeksh
//அம்பிக்கு மட்டும் வழக்கம் போல ஏதோ புரிஞ்சுடுச்சா!//
ReplyDeleteஅதானே! எழுதுனவனுக்கே புரியலை...படிச்சவருக்கு புரிஞ்சிடுச்சுன்னா நம்பற மாதிரியா இருக்கு?
:)
//தல லிண்டா அக்கா என்ன நினைச்சு பாடுச்சோ ஆனா உன் ஸ்டைல்ல விலக்கம் குடுத்து இருக்கு பாரு அது சூப்பர்....//
ReplyDelete12பி! ரொம்ப நன்றிங்ணா
//எங்களுக்கு தான் சன் டிவி, விஜய் டிவி இருக்கே...இத எல்லாம் கேட்டு அப்புறம் இதுக்கு லிரிக்ஸ் தேடி அதுக்கு அர்த்தம் புரிஞ்சு எதுக்கு தேவையில்லாத வேலை :-) //
அட! நான் அதை சொல்லலைப்பா. எப்படி தான் வெள்ளைக்காரன் அந்த accentஓட பேசறதை புரிஞ்சிக்கிட்டு குப்பை கொட்டறீங்களோன்னு சொல்ல வந்தேன்?
//Too gud! I really enjoyed this post. purinthalthan padal,kavithai,puthagam,blog elamay alagu. Though music has no languages, epdinga varinga ethum theriyama padarathu..? //
ReplyDeleteவாங்க தீக்ஷ்,
தங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா மொழி புரியாம ரசிச்ச சில பாட்டுகளும் இருக்கு...அதுலாம் பின்னாடி வருது.
:)
//Good effort on the translation. You've got a great sense of humour!//
அடடா! தரைக்கு ஒரு ரெண்டு அடி இல்ல இல்ல ஆறு அடிக்கு மேலே மெதக்கற மாதிரி இருக்கு. ஒரே ஹேப்பி ஹேப்பியா இருக்கு. டேங்ஸுங்க.
:)
மாப்பூ வெள்ளைக்காரங்க சவகாசம் எல்லாம் நமக்கு ஆவாது ஆமாச் சொல்லிபுட்டேன்.
ReplyDeleteகைப்பூ. உனக்கு ஆப்பு வாங்கறது போக இன்னும் நரைய நேரம் இருக்கு போல.. ட்ரன்ஸ்லெட் பதிவு எல்லாம் வேற போடர.. ம்ம்ம்...
ReplyDeleteஎனிவே.. நல்ல பதிவு..:-)
ஆமா.. கரிக்கட்டான விளக்கத்த வேற ஒருத்தர் கொடுத்து இங்கயும் ஆப்பு வச்சிட்டார் போல...
//சுதந்திரமா ஒரு பாட்டைக் கூட ரசிக்க முடியலைப்பா சாமி! ஏனுங்க பேச்சிலரா இருக்குறது அம்புட்டு பெரிய குத்தமா?//
ReplyDeleteகுத்தம் இல்லப்பா.. அது பெரிய வரம்.. ஆனா, அந்த வரத்த அனுபவிக்கறவங்களுக்கு அதோட அருமை தெரியாது..:-(
// ஒரு பாட்டைக் கேட்டாக் கூட, அதுல நம்ம கதையையும் நம்ம சொன்னதையும் சொல்லாததையும் சொருகி மக்கள் திரைக்கதை எழுதி ரசிக்கிறாங்க. ஏங்க அப்படி? தெரிஞ்சா சொல்லுங்களேன்.//
அது உம்ம ராசிய்யா...
தல,
ReplyDeleteஉனக்கு ஒன்னு சொல்றேன். நீ இந்த தம்பி பேச்சே கேட்பேன்னு நினைக்கிறேன்......
அய்யோ சொல்லுறதுக்கே எனக்கு ரொம்ப பீலிங்ஸ் ஆப் பெங்களூரு லேண்ட்மார்க்'ஆ இருக்கே.
வேணாம் இந்த கருமம் பிடிச்ச இங்கிலிபிசு... அது ரொம்ப டேஞ்சரு... சொல்லிப்பிட்டேன்.
தல...உனக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிபிசு பாட்டு 'சிங் இன் தி ரெயின்' மட்டும்தான்னு இதுவரைக்கும் நினைச்சுட்டு இருந்தேன்...என்னை மன்னிச்சுடு தல ;)))
ReplyDeleteavanga vazhgai yoda "piravi payan" thedi kittu irukkanga pola
ReplyDelete//மாப்பூ வெள்ளைக்காரங்க சவகாசம் எல்லாம் நமக்கு ஆவாது ஆமாச் சொல்லிபுட்டேன்//
ReplyDelete//வேணாம் இந்த கருமம் பிடிச்ச இங்கிலிபிசு... அது ரொம்ப டேஞ்சரு... சொல்லிப்பிட்டேன்//
//தல...உனக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிபிசு பாட்டு 'சிங் இன் தி ரெயின்' மட்டும்தான்னு இதுவரைக்கும் நினைச்சுட்டு இருந்தேன்...என்னை மன்னிச்சுடு தல ;)))//
உங்களையெல்லாம் நெனச்சா பாவமா இருக்கு. என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே.
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ஊறுகாயா மட்டும் இங்லீசு"
:)
//கைப்பூ. உனக்கு ஆப்பு வாங்கறது போக இன்னும் நரைய நேரம் இருக்கு போல.. ட்ரன்ஸ்லெட் பதிவு எல்லாம் வேற போடர.. ம்ம்ம்...
ReplyDeleteஎனிவே.. நல்ல பதிவு..:-)
ஆமா.. கரிக்கட்டான விளக்கத்த வேற ஒருத்தர் கொடுத்து இங்கயும் ஆப்பு வச்சிட்டார் போல... //
வாங்க மாவீரரே!
நன்றிங்க. ஆப்பெல்லாம் எனுமோ நமக்குப் புதுசுங்கற மாதிரி நீங்க பேசும் போது தான் சிரிப்பு சிரிப்பா வருது.
:)
//குத்தம் இல்லப்பா.. அது பெரிய வரம்.. ஆனா, அந்த வரத்த அனுபவிக்கறவங்களுக்கு அதோட அருமை தெரியாது..:-(//
ReplyDeleteஅப்படீங்கறீங்க?
//அது உம்ம ராசிய்யா...//
வேணாம்...இதெல்லாம் நல்லால்ல ஆமா
//avanga vazhgai yoda "piravi payan" thedi kittu irukkanga pola//
ReplyDeleteவாங்க ஜீனோ,
அப்படித் தான் தோணுது. நன்றி
Kaippulai
ReplyDeleteUngaloda blogada oru theeveeera rasigan nan.Unga pera therinchukka viruppam illai.aenna intha peru than ungalukku poruthama irukku
Anna mail id mattum anuppunga .
ennodathu selvakumar_s@infosy.com.
Vettipayaloda class mate..
konjam parthu thayavu pannunga
Ungaloda entertainmentukku nan
Thalai vanangurenugoo
வாங்க "மாங்கா" செல்வகுமார்,
ReplyDeleteவந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப டேங்ஸுங்க. நீங்களும் சீக்கிரம் ப்ளாக் ஒலகத்துல காலடி எடுத்து வைச்சு பட்டையைக் கெளப்புங்க.
:)