Friday, June 02, 2006

ஹே! காயத்ரி...

வா.மணிகண்டன் தன்னோட பேசலாம்ல நேத்து ஒரு சோக்கு சொல்லியிருந்தாரு. அதப் படிச்சி சிரிச்சிட்டு கீழே பாத்தா நம்ம தளபதி போதும் போதும்ங்கிற அளவுக்குக் கொம்பை நட்டு சங்கத்து கொடியை ஏத்திட்டிருக்காரு...ஒரே நேரத்துல ரெண்டு வருத்தப்படாத வாலிபர்களை(!) சமாளிக்கிறது அவருக்குக் கஷ்டம்னு நெனச்சி அந்நேரத்துக்கு ஜூட்டு வுட்டுக்கிட்டேன் :)- இன்னிக்கு காலையில என்னோட செல்போன்ல இருந்த பழைய எஸ்.எம்.எஸ்சை எல்லாம் அழிக்கும் போது, மணிகண்டனோட பதிவுல படிச்சது போலவே ஒரு எஸ்.எம்.எஸ் சிக்குச்சு. அது என்னாங்குறீங்களா?

நாலு கோவமான எறும்புங்க(Angry young ants) ஒரு காட்டுப் பாதையில போயிட்டிருக்காம். அதுங்க கண்ணுல ஒரு யானை மாட்டுதாம்.

முதல் எறும்பு கேக்குதாம்"டேய்! நான் அவன் காலை ஒடச்சிடவா?"

ரெண்டாவது எறும்பு சொல்லுதாம்"இல்ல மச்சான்! அவன் தும்பிக்கையைப் புடுங்கிடலாம்"

இதை கேட்டுட்டு மூணாவது எறும்பு சொல்லுதாம்"வேணாண்டா மாப்ளே! அவன் வயித்துல குத்தலாம்டா"

நாலாவது எறும்பு என்ன சொல்லியிருக்கும்னு நெனக்கிறீங்க?

என்னது தெரியலியா...அட உண்மையிலேயே தெரியலீங்களா?

நாலாவது எறும்பு சொல்லுச்சாம்"விடுங்கடா! நாம நாலு பேரு...அவன் ஒருத்தன்...பொழச்சுப் போட்டும்".

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கேக்கிறீங்களா? இந்த மாதிரி விசயத்துல எல்லாம் படு ஸார்ப்பா இருப்பீங்களே? ஒங்களை ஏமாத்த முடியுமா...

"ஹே! காயத்ரி! என்னயா...காலேஜ் விட்டதும் தனியாப் பேசணும்னு சொன்னியே? என்ன விஷயம்?"

"ஆமாம்யா..."

"ஹ்ம்ம்...என்னடா சொல்லு...உன் முகமெல்லாம் வாடியிருக்கு...எனிதிங் ராங்?"

"எப்படி சொல்றதுன்னு தெரியல்ல யா"

"என்ன காயூ...சொல்லு...எதாச்சும் லவ்...பாய்ஃபிரெண்ட்... அப்படின்னு..."

"சே...சே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை யா..."

"அப்புறம் என்னடா?"

"ஃபாத்திமா! ஒனக்குத் தெரியாதது இல்ல...என்னோட கனவு லட்சியம் எல்லாம் காயத்ரி ஐ.ஏ.எஸ்னு என் பேருக்குப் பின்னாடி வரப் போற அந்த மூணு எழுத்து தான்...அதுக்காக நான் படற கஷ்டமெல்லாமும் ஒனக்குத் தெரியும்"

"சரி...அதுக்கு என்ன இப்போ?"

"அந்த கனவு பொய்யாயிடுமோன்னு எனக்கு கவலையாயிருக்குது யா...என்ன ஒருத்தன் ஒரு வாரமா ஃபாலோ பண்ணி தெனமும் தொல்லை குடுத்துட்டே இருக்கான்"

"சே! இவ்வளவு தானா? நீ அவனை இக்னோர் பண்ணிட்டு ஒன் பாட்டுக்கு ஒன் வேலையைப் பாத்துட்டே இரு"

"இல்லை ஃபாத்ஸ்...அவன் நான் போற எடமெல்லாம் என் பின்னாடியே வரான்...மோசமா கமெண்ட்ஸ் வேற பாஸ் பண்ணறான்பா"

"ஸ்கவுண்டிரல்ஸ்! நீ என் கூட வா... நான் வந்து அவனை நாலு கேள்வி கேக்கறேன்."

"வேணாம்யா! அவன் கிட்ட போக வேணாம்...அவனும் அவன் லேங்குவேஜும்...பாத்தா பெரிய ரவுடி மாதிரி வேற இருக்கான்"

"சே! உன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிங்க இருக்குறதுனால தான், செய்யறதை எல்லாத்தையும் செஞ்சிட்டு... தீஸ் ரோக்ஸ் ஆர் ரோமிங் ஸ்காட் ஃப்ரீ"

"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு யா...அவன் எவ்வளோ மோசமானவன்னு ஒனக்குத் தெரியாது...நேத்து செமிகண்டக்டர் கிளாஸ் முடிய லேட் ஆயிடுச்சு...ஈவினிங் சிக்ஸ் பி.எம், நான் பஸ் ஸ்டாப்ல பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது...அவன் என் பக்கத்துல வந்து நின்னுட்டு...ஏதேதோ பேச ஆரம்பிச்சிட்டான்...இதப் பாருங்க இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்...ஆனாலும் அவன் கேக்கலை...விசில்...சினிமா பாட்டு...கமெண்ட்ஸ் அப்படின்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். அப்புறம் பஸ் வந்ததும் என் பின்னாடியே அவனும் ஏறுனான்...அப்புறம்...அப்புறம்... வந்து... வந்து... புஹூ...ஹூ"

"அழாதேடா காயூ...என்ன நடந்துதுன்னு சொல்லு"

"...புஹூ...ஹூ...ஐ லவ் யூ டா செல்லம்னு சொன்னான் யா...இன் ஃப்ரண்ட் ஆஃப் ஸோ மெனி பீப்பிள்"

"நீ அந்த ரேஸ்கலைச் சும்மாவா விட்ட? அங்கேயே செருப்பைக் களட்டி அவனை அடிச்சிருக்க வேணாம்? சே...இவனுங்கல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்க மாட்டானுங்க?"

"இல்ல ஃபாத்ஸ்..."

"என்ன இல்ல ஃபாத்ஸ்?"

"..ஹூ..ஹூ...அவன் சொல்ற படியெல்லாம் கேக்கலைன்னா என் தங்கச்சி மாலதியையும் இதே மாதிரி ஃபாலோ பண்ணுவேன்னு மெரட்டனான்யா. அவச் சின்னப் பொண்ணு...இதெல்லாம் தாங்க மாட்டா...எங்க வீட்டுல ஜெண்ட்ஸ் யாரும் இல்லன்னு தெரிஞ்சிட்டு வீட்டு வரைக்கும் வேற வரான்...அதான் இது என்னோடேயே போகட்டும்னு..."

"திஸ் இஸ் இட்! திஸ் இஸ் தி லிமிட்!! ஸச் கேரக்டர்ஸ் டிஸர்வ் டு பீ பீட்டன் டு டெத்!!! நீ ஒன்னும் கவலை படாதே காயூடா...நாளைக்கு நான் எங்க பெரிய அண்ணன் தாஹிர் கிட்டச் சொல்லி, உன்னை ஃபாலோ பண்ணறவனை நல்லா கவனிக்கச் சொல்றேன்"

"எனக்கு ரொம்ப பயமாயிருக்கு யா"

"ஒனக்கு என்ன பயம்டா?...நான் இருக்கேன்...அவன் எப்படி இருப்பான் எங்கே இருப்பான்னு மட்டும் சொல்லு"

"அதோ பாரு...அங்கே விசில் அடிச்சிட்டு வேகமாப் போயிட்டிருக்கானே... அவனே தான்"

"ஹே! காயூ....வா...வா...நாம இப்போதைக்கு இங்கேருந்து போயிரலாம்...நீ சொல்லும் போது கூட நான் நம்பலை...பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான்"


58 comments:

  1. கைப்பு் நீங்க கொடுத்த லிங்ல ஒரு எழுத்து தப்பு...சரி பார்க்கவும்..

    ReplyDelete
  2. எஸ்.எம்.எஸ் மேட்டரை யானைமாதிரி ஊதி பெரிசாக்கிட்டியே கைப்பு...இப்படியே எத்தனை நாள்தான் ஊருக்குள்ள திரிஞ்சிக்கிட்டு இருப்ப...

    ReplyDelete
  3. //கைப்பு் நீங்க கொடுத்த லிங்ல ஒரு எழுத்து தப்பு...சரி பார்க்கவும்.. //
    சரி செஞ்சிட்டேன் யாழிசைச்செல்வன்...சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //எஸ்.எம்.எஸ் மேட்டரை யானைமாதிரி ஊதி பெரிசாக்கிட்டியே கைப்பு...இப்படியே எத்தனை நாள்தான் ஊருக்குள்ள திரிஞ்சிக்கிட்டு இருப்ப... //

    எதோ என்னால முடிஞ்சதுங்க...நமக்கு இந்தளவுக்குத் தான் ஞானம் என்ன பண்ணறது?
    :)-

    ReplyDelete
  5. என்ன தல இப்போ எல்லாம் ஒரே விலங்குமயமாத் திரியர... ம்ம் நல்லா இரு தல...

    காயத்த்ரி எறும்பு பேரு.. அதை நாங்க நமபணும்.. நம்பிட்டோம்ய்யா நம்பிட்டோம்....:-)

    ReplyDelete
  6. துளசியக்கா இங்கே இரண்டு யானைப் படமிருக்கு எங்கேப் போயிட்டீங்க?;-)

    ReplyDelete
  7. அங்க வந்துதான் அடிப்பீங்கன்னா....இங்கே இருந்துமா? கஷ்டம்தான். :)...அந்த மனுஷன் சிபி வந்தா இங்கேயே புடிச்சு வெச்சுக்குங்க...அந்த பக்கம் எல்லாம் விடாதீங்க அப்பு....

    ReplyDelete
  8. கைப்பு, இந்த படத்த போடறதுக்கு சங்கத்துல பெர்மிசன் வாங்கலயே... சரி... சரி.... சங்கத்துக்கு அபராதம் கட்டிடுங்க...:0))

    ReplyDelete
  9. //காயத்த்ரி எறும்பு பேரு.. அதை நாங்க நமபணும்.. நம்பிட்டோம்ய்யா நம்பிட்டோம்....:-)//

    யோவ்...நல்லா பாருய்யா...இம்சை குடுக்கிறியே?

    ReplyDelete
  10. //அந்த மனுஷன் சிபி வந்தா இங்கேயே புடிச்சு வெச்சுக்குங்க...அந்த பக்கம் எல்லாம் விடாதீங்க அப்பு....//

    சிபி ரொம்ப நல்ல டைப்பாச்சுங்களே...தப்பா எதுவும் செய்யமாட்டாரு...அப்பப்ப லேசா கடிப்பாரு...அது அவ்வளவா வலிக்காதே? :)- அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.

    ReplyDelete
  11. கைப்பு.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அந்த காயத்ரி மேட்டர் தான்.. சரி விடுங்க.. நமக்கெதுக்கு வம்பு.. :)

    ReplyDelete
  12. //இந்த படத்த போடறதுக்கு சங்கத்துல பெர்மிசன் வாங்கலயே... சரி... சரி.... சங்கத்துக்கு அபராதம் கட்டிடுங்க...:0))//

    குதிரைக்குத் தான் ஆப்புன்னா யானைக்குமா? எதுக்கு யா பெர்மிசனு?
    :(-

    ReplyDelete
  13. //ஆனா அந்த காயத்ரி மேட்டர் தான்.. சரி விடுங்க.. நமக்கெதுக்கு வம்பு.. :) //

    வேணாம் ராசா...வேணாம்...உங்க பதிவுங்க புரிஞ்சுதுன்னு இனிமேட்டு பொய் சொல்ல மாட்டேன்...என் பதிவுல நானே ஆப்பு வாங்கிக்கிறது அவ்வளவு நல்லாருக்காது...இப்பிடி பட்டாசு கொளுத்திப் போட்டு போவாதிங்க...நம்மளை யாரும் இன்னும் லாவண்யா ஐஸ் கூட கேக்கலை.

    ReplyDelete
  14. //யோவ்...நல்லா பாருய்யா...இம்சை குடுக்கிறியே? //


    சாரி தல எக்ஸ்க்யூஸ் மீ.. பெரிய எறும்பு பார்த்து கொஞசம் குழம்பிட்டேன்.

    ReplyDelete
  15. ராசா உங்களுக்கும் அதே டவுட்டா???

    சரி விடுங்க தலக்கு ''வாலிப வயசு'' இல்ல

    ReplyDelete
  16. கைப்பொண்ணுப் பதிவுக்கோ அது சம்பந்தப் பட்ட பதிவுகளுக்கோ கமெண்ட் போடாம கை கழுவும் போதே லைட்டா டவுட் ஆனேன்.. ம்ம்ம் விஷ்யம் இப்படிப் போகுதோ:-)

    தல அகெய்ன் நோ சில்லி பீலீங்க்ஸ் ஆமா சொல்லிட்டேன்.

    தல அகெய்ன் நோ சில்லி பீலீங்க்ஸ் ஆமா சொல்லிட்டேன்.:-)

    ReplyDelete
  17. //சாரி தல எக்ஸ்க்யூஸ் மீ.. பெரிய எறும்பு பார்த்து கொஞசம் குழம்பிட்டேன்.//

    படுவா ராஸ்கோல்...என்ன பேச்சிது...இல்ல என்ன பேச்சிதுங்கறேன்...சின்னப்பில்லயாட்டம்?

    ReplyDelete
  18. //நம்மளை யாரும் இன்னும் லாவண்யா ஐஸ் கூட கேக்கலை.// கைப்பு வெளிய சிரிச்சுகினு இருந்தாலும் உன்ற மனசுகுள்ளார இவ்ளோ ஃபீலிங் இருக்குதுன்னு நினைக்கும் போது.. அப்படியே முட்டிகிட்டு வருத்துப்பா, கண்னுல தண்ணி..

    ஏய்யா.. எத்தனை பேரு இருக்கரீங்க, வ.வா.ச'ங்கத்துல.. தலைவரோட மன வருத்தத்தை புரிஞ்சு நிறைவேத்துங்கப்பா.. மகளிர்'விங் வேற இதுல.. ம்க்கும். முதல்ல தலைவரை கவனிங்க.. அப்புறம் சங்கத்தை கவனிக்கலாம்..

    //இப்பிடி பட்டாசு கொளுத்திப் போட்டு போவாதிங்க.// நான் அப்படியெல்லாம் எதும் செய்ய மாட்டேனே.. மீ ஆல்வேஸ் குட்பாய்.. :)

    ReplyDelete
  19. //ம்ம்ம் விஷ்யம் இப்படிப் போகுதோ:-)//

    எப்படி போகுதாம்?

    ReplyDelete
  20. //ஏய்யா.. எத்தனை பேரு இருக்கரீங்க, வ.வா.ச'ங்கத்துல.. //

    தலைமை நிலையத்திற்கு இன்னும் உறுப்பினர் எண்ணிக்கை வந்து சேரல்ல ராசா.. சேந்ததும் தகவல் சொல்லுறேன்.

    //தலைவரோட மன வருத்தத்தை புரிஞ்சு நிறைவேத்துங்கப்பா.. //

    ராசா வரு.வா.சவினரின் கண்ணைத் தொறந்த சாமி ராசா நீ... ய்ப்பா பாண்டி ஒன்..டூ..தீரி... அது யார்ன்னு உன் டேட்டா பேஸ் பாத்துக் கண்டுபிடிச்சுச் சொல்லுப்பா.. தல பர்ஸ்ட் சங்கம் எல்லாம் நெக்ஸ்ட் ஓ.கேவா

    //மகளிர்'விங் வேற இதுல.. ம்க்கும்.//

    அக்கா ஆற்றலரசி... நிரந்தர தலைவலி கீதாக்கா.. அவமானம்.. சீக்கிரம் வந்து ஒரு பதிலை அள்ளி விட்டு மகளிரணி மானத்தைக் கப்பல்ல இருந்து இறக்கி கரையேத்துங்க...

    //முதல்ல தலைவரை கவனிங்க.. அப்புறம் சங்கத்தை கவனிக்கலாம்..//

    இதோ சங்கப் படை மொத்தத்துக்கும் செய்திகள் அனுப்பப் பட்டு விட்டன. யாரங்கே துபாய் அரண்மனையை அலங்கரியுங்கள்.. அந்தப் புரங்களை ஒட்டடை அடித்து ரெடி செய்யுங்கள்..

    யப்பா துபாய் ராஜா கேக்குதா...

    ReplyDelete
  21. தாங்கள..........
    கிளம்பிட்டான்யா...... கிளம்பிட்டான்..............

    ReplyDelete
  22. //ஏய்யா.. எத்தனை பேரு இருக்கரீங்க, வ.வா.ச'ங்கத்துல.. தலைவரோட மன வருத்தத்தை புரிஞ்சு நிறைவேத்துங்கப்பா.. மகளிர்'விங் வேற இதுல.. ம்க்கும். முதல்ல தலைவரை கவனிங்க.. அப்புறம் சங்கத்தை கவனிக்கலாம்..//

    ராசா...காயத்ரிங்குற அபலையோட கதையை எவ்வளவு உருக்கமா எழுதிருக்கேன்...அதப் படிச்சிட்டு கண்ணீர் வடிக்கறதை விட்டுட்டு...இப்படி கதை எழுதுனவனைப் பத்தி ஒரு கதை எழுதி தனி டிராக் ஓட்டறீங்களே...இது நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  23. //தாங்கள..........
    கிளம்பிட்டான்யா...... கிளம்பிட்டான்.............. //

    கிளம்பிட்டான்யா...சரி...புரியுது...அது என்ன தாங்கள? சூடான் மொழியில திட்டறியாய்யா?

    ReplyDelete
  24. இதோ வந்து விட்டேன், சங்கத்தின் மானத்தைக் காக்க நிரந்தரத் தலைவலி யான நான் இருக்கச் சங்க மானம் ஏரோப்ளேன் ஏஏறி ஜெர்மன், புதரகம் என்று போய்க் கொண்டிருக்கிறதே,

    கைப்புள்ள, படம் போட்டதுக்குப் பணத்தை ஒழுங்காக் கட்டிட்டீங்களா? எனக்கு மிட்டாய் கொடுக்காமல் நீங்களே சாப்பிட்ட மாதிரி ஆயிடப் போகுது. தலைவா, இரண்டு பேருக்கும் வருமானத்தில் பங்கு உண்டு.(உதையில் உங்களுக்கு மட்டும்)

    ReplyDelete
  25. எழுக வீர வருத்தப் படாத வாலிபர்களே...
    சங்கத்தின் தலயாம், மூளையாம், இதயமாம் சிரிப்பு எம்.ஜி.ஆர் நமது தானைத் தலைவன் கைப்புள்ளயின் உள்ளத் துயர் துடைக்க உடனே புறப்படு...

    கீ போர்ட் தூக்கி எறி... மானிட்டரை மண்ணெண்ய் விட்டு கொளுத்து... மவுஸை மிதி...சிபியுக்கள் சிதறட்டும் அலுவலகங்கள் அல்லோலப்படட்டும்....

    கொங்கு நாட்டு ராசா.. நம் தலைவனைப் பார்த்து நேரடியாக் நீ லூசா என்று கேட்கும் முன் தலைவனுக்கு நாம் பட்ட கடன் தீர கடமையாற்ற அலைக் கட்லேன

    தளபதியார் சிபியின் வழியில்.... புரட்சி பிகுலு பேராற்றலரசியாரின் பாதையில்

    கழக கொ.ப.செ பாண்டியின் துணையோடு.. பேராசிரியர் க.பி.க மூத்தப் பெருந்தகை கார்த்திக் வழிகாட்டுதலோடு...அயல் நாட்டு கண்மணிகள் துபாய் ராஜா, சிவா பேருதவிப் பெற்று....

    ஆன்மீக சூப்பர் ஸ்டார் ஆசிப் பெற்ற புரட்சி தொண்டன் செல்வனின் போர் பலத்தோடு....

    சங்கத்தின் நிரந்தர தலைவலி அவர்களின் பேரதரவோடு, ஒற்றர் புலி நன்மனத்தாரின் பெரும் பங்கோடு

    பின்னூட்ட சூப்பர் ஸ்டார் அறுசுவைத் தமிழன் கொத்ஸ் அவர்களின் ஆதரவோடு

    இன்னும் பெயர் வெளியிட முடியாத எண்ணற்றவர்களின் நல்வாழ்த்துக்களோடு

    தலைவனுக்குப் பணியாற்ற புறப்படு

    ReplyDelete
  26. //இதோ சங்கப் படை மொத்தத்துக்கும் செய்திகள் அனுப்பப் பட்டு விட்டன. யாரங்கே துபாய் அரண்மனையை அலங்கரியுங்கள்.. அந்தப் புரங்களை ஒட்டடை அடித்து ரெடி செய்யுங்கள்..//

    யப்பா...கண்ணகியைப் பத்தி பதிவெல்லாம் போட்டுட்டு...கைப்புள்ளயோட பேருக்குக் களங்கம் கற்பிக்கிறியேப்பா...சரி கைப்பு கெடக்கான்...அந்த பேதை காயத்ரியின் நிலமையைக் கண்ட பின்னும் உனக்கு நகைப்பாக உள்ளதா...வேண்டாம் தேவ்...வேண்டாம்...பெண் பாவம் பொல்லாதது...கைப்பு பாவம் அதைவிட பொல்லாதது.

    ReplyDelete
  27. தல தல உங்களுக்கு இப்படி ஒரு மனக்குறையா ?? ஐயகோ 'லவண்யா' ஐஸ் கூட யாரும் கேட்கவில்லை என்ற சொல் கேட்கும் போது ஐயகோ என் உள்ளம் பததைக்குதே !!!

    குச்சி ஐஸ் பல இருக்க கப் ஐஸ் தான் வேண்டுமென்று கேட்கிறாயே தல!?

    கோன் ஐஸ் வேணுமின்னா
    கோயம்புத்தூர்ல இருந்தாச்சும்
    கொண்டு வரலாம் ஆனா
    லாவண்யா ஐஸ்ஸை எங்கே தேடிப்பிடிப்பேன்??

    பரவாயில்லை இதோ 27 L ஏறிவிட்டேன். அப்படியே எத்திராஜ், wcc, ஸ்டெல்லா மேரிஸ் , வள்ளியம்மை என என் தலைவனை ஏங்க வைத்த வள்ளியை காலேஜ் காலேஜாக வலை வீசியேனும் பிடிப்பேன்!

    ReplyDelete
  28. தங்கத்தை போயி எவனாச்சும் திட்டுவானா............
    தப்பா எடுத்துகாத தல.
    தாங்க முடியலை என்பது தான் அப்படி வந்து விட்டது.

    ReplyDelete
  29. //இது நல்லாவா இருக்கு?//

    நல்லாத்தான் இருக்கும் போலத்தான் இருக்கு, உங்க சங்கத்துகாரங்க போற வேகத்தை பார்த்தா ;)

    //கொங்கு நாட்டு ராசா.. நம் தலைவனைப் பார்த்து நேரடியாக் நீ லூசா என்று கேட்கும் முன்// இதைவிடவா நான் கேட்டது நல்லா இல்லாம போச்சு,,

    சிங்கம் மாதிரி இருந்தியளே கைப்பு.. இப்படி கெவுரவும் கெவுரவும்னு இப்படி உங்கள பந்தாடுறாங்களே.. எனக்கே பாவமாத்தான் இருக்கு,.. :)

    ReplyDelete
  30. :-)

    சிரிப்பு வரலை. இருந்தாலும் போட்தது நீர். அதனால ஒரு சிரிப்பான்.

    //பின்னூட்ட சூப்பர் ஸ்டார் அறுசுவைத் தமிழன் கொத்ஸ் அவர்களின் ஆதரவோடு//

    தேவுதம்பி, உங்க சங்க வேலைக்களுக்கும், நம்ம மன்ற வேலைக்கும் கன்பியூஸ் ஆகி, நம்மளை இந்த லிஸ்டில் சேக்காதேப்பூ.

    ReplyDelete
  31. // பரவாயில்லை இதோ 27 L ஏறிவிட்டேன். அப்படியே எத்திராஜ், wcc, ஸ்டெல்லா மேரிஸ் , வள்ளியம்மை என என் தலைவனை ஏங்க வைத்த வள்ளியை காலேஜ் காலேஜாக வலை வீசியேனும் பிடிப்பேன்! //

    பக்கத்து இலைக்குப் பாயாசம் போலத்தானே இது ?
    ;-)))

    ReplyDelete
  32. அட.. காயத்ரி இங்கயா இருக்கு?!! நேத்திக்குத் தானே நியூசிக்கு ப்ளைட் ஏத்தி விட்டேன்!! அதுக்குள்ள சித்தூருக்கு போய்ட்டாளா? ரொம்பத் தான் குறும்பு!!

    ReplyDelete
  33. :-)

    //நாலு கோவமான எறும்புங்க//

    ச்சே! அவசரத்துல ஒரு எழுத்து விட்டுட்டு படிச்சிட்டேன்.

    ஹைய்யோ... ஹைய்யோ...

    ReplyDelete
  34. //தலைவா, இரண்டு பேருக்கும் வருமானத்தில் பங்கு உண்டு.(உதையில் உங்களுக்கு மட்டும்)//

    ஹ்ம்ம்...நம்ம குடுப்பினை அவ்வளவு தான்...பசங்க தான் ஒத வாங்கி வக்கிறதுல குறியாயிருக்காங்கன்னு பாத்தா மகளிர் அணியும் அதே ரேஞ்சு தான்...ஹ்ம்ம்ம்...என்ன மேடம் இது தெரிஞ்ச விசயம் தானே...புதுசா எதாச்சும் சொல்லுங்க.

    ReplyDelete
  35. //இன்னும் பெயர் வெளியிட முடியாத எண்ணற்றவர்களின் நல்வாழ்த்துக்களோடு

    தலைவனுக்குப் பணியாற்ற புறப்படு//

    என்னாத்தப் பண்ணப் போறீங்க? உள்ளூர்ல மொசப் புடிக்க முடியாமத் தான்யா இங்கே ஒட்டகம் மேயற ஊருல வந்து ஒக்காந்திருக்கேன்...போயா...போய் பொழப்பிருந்தா பாரு.

    ReplyDelete
  36. //தங்கத்தை போயி எவனாச்சும் திட்டுவானா............//

    சரியா நம்ம கலருக்கு ஏத்த வர்ணிப்புத் தான்...நல்லாருய்யா
    :)

    ReplyDelete
  37. //பரவாயில்லை இதோ 27 L ஏறிவிட்டேன். அப்படியே எத்திராஜ், wcc, ஸ்டெல்லா மேரிஸ் , வள்ளியம்மை என என் தலைவனை ஏங்க வைத்த வள்ளியை காலேஜ் காலேஜாக வலை வீசியேனும் பிடிப்பேன்! //

    எல்லாம் சரி தான் பாண்டி...நான் சித்தூர்கட்ல இருக்கேங்கிற தைரியத்துல வுட்டுயேயா ஒரு மெகா பீலா...27L ஸ்டெல்லா மேரிஸ் எங்கேயா போவுது...அதே ஏரியாவுலே அதே பீச்சாண்டே... கூவம் அன்னையின் மடியில் தவழ்ந்த அழகு குழந்தைப்பா நானு.

    அடப்பாவிங்களா! படிச்ச ஒருத்தனாச்சும் யானை கதை எப்பிடி இருக்குன்னு சொன்னீங்களா? எனக்கு ஆப்பு வக்கிறதுலேயே இருங்கய்யா.

    ReplyDelete
  38. //நல்லாத்தான் இருக்கும் போலத்தான் இருக்கு, உங்க சங்கத்துகாரங்க போற வேகத்தை பார்த்தா ;)//

    நல்லாத்தானுங்க இருக்கும்...அங்கேருந்து பாக்குற வரைக்கும்...இங்கிட்டு வந்து ஒரு நாள் பாருங்க...இன்னும் நல்லாயிருக்கும்.
    :)

    ReplyDelete
  39. //:-)

    சிரிப்பு வரலை. இருந்தாலும் போட்தது நீர். அதனால ஒரு சிரிப்பான். //

    உண்மையை உள்ளவாறு உரைத்ததற்கும்...உம்ம பாசத்துக்கும் ஒரு 'ஓ' கொத்தனாரே.

    ReplyDelete
  40. //பக்கத்து இலைக்குப் பாயாசம் போலத்தானே இது ?
    ;-)))//

    சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க. ஆனா பய ஒரு பீலாவும் வுட்டிருக்கான்...அதை மிஸ் பண்ணிட்டீங்களே?

    ReplyDelete
  41. அண்னே நீ அடிக்கடி விடுர வாய்ச்சவடால இந்த எறும்புங்க கேட்டு இருக்கும் போல, கைப்புனால முடியும் போது நமக்கு என்னனு முடிவு பன்னியிருக்கும்

    ReplyDelete
  42. கைப்புள்ள,

    //அடப்பாவிங்களா! படிச்ச ஒருத்தனாச்சும் யானை கதை எப்பிடி இருக்குன்னு சொன்னீங்களா? எனக்கு ஆப்பு வக்கிறதுலேயே இருங்கய்யா.//

    எல்லாரும் படிச்சி மெய் மறந்திருப்பாய்ங்க...

    அது சரி கடைசியில என்ன சொல்ல வர்றீங்க காயுவை டீஸ் பண்ணது பாத்ஸ் பிரதரா?

    ReplyDelete
  43. //அதுக்குள்ள சித்தூருக்கு போய்ட்டாளா? ரொம்பத் தான் குறும்பு!!//

    காயத்ரி மாடர்ன் கேர்ள் பொன்ஸ்...அது ஏன் இந்த பட்டிக்காடு சித்தூருக்கெல்லாம் வரப் போகுது? உங்களுக்கு ரொம்பத் தான் குறும்பு.
    :)

    ReplyDelete
  44. //ச்சே! அவசரத்துல ஒரு எழுத்து விட்டுட்டு படிச்சிட்டேன்.

    ஹைய்யோ... ஹைய்யோ... //
    வாங்க கோபி,
    :)))-

    ReplyDelete
  45. //அது சரி கடைசியில என்ன சொல்ல வர்றீங்க காயுவை டீஸ் பண்ணது பாத்ஸ் பிரதரா?//

    கோபி...நெசமாத் தான் கேக்குறீங்களா?
    :(((-

    ReplyDelete
  46. கைப்புள்ள,

    படக்கதையெல்லாம் படிச்சி ரொம்ப நாளாவுதுங்களா... இப்பத்தான் படத்தை பாத்தேன்.

    ஆமா! பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான். என்ன பொறுக்குவான்? ஒரு வேளை சர்க்கரைய பொறுக்குவானோ.

    ReplyDelete
  47. //அண்னே நீ அடிக்கடி விடுர வாய்ச்சவடால இந்த எறும்புங்க கேட்டு இருக்கும் போல, கைப்புனால முடியும் போது நமக்கு என்னனு முடிவு பன்னியிருக்கும்//

    வீரத்தை வாய்ச்சவடால்னு தப்பாப் பேசப்பிடாது என்ன? நம்ம வீரம் எல்லாருக்கும் தெரிஞ்சது...இப்படி பேசி அதை குறைக்கப் பிடாது.

    ReplyDelete
  48. //ஆமா! பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான். என்ன பொறுக்குவான்? ஒரு வேளை சர்க்கரைய பொறுக்குவானோ.//

    அத விட ரொம்ப மோசமானவனுங்க அவன்...பாருங்க காலேஜ் ஸ்டூடண்டை எப்படி மெரட்டியிருக்கான்?
    :)-

    ReplyDelete
  49. கைப்பொண்ணு காணம போனதுல இருந்து தலை ஒரு மார்க்கமாவே திரிஞ்சிகிட்டிருந்தது ஏன்னு இப்பதான் புரியுது?

    பார்த்து தலை! அடி பிச்சிடப் போறாங்க! யானை எறும்பு படம்லாம் நான நம்புறதா இல்லை!

    ReplyDelete
  50. யானை, குதிரை, மாடு, நாய் போயி இப்ப எறும்பு! ....


    தலைய ஆண்டவந்தான் காப்பாத்தணும்.

    ReplyDelete
  51. //வுட்டுயேயா ஒரு மெகா பீலா...27L ஸ்டெல்லா மேரிஸ் எங்கேயா போவுது...அதே ஏரியாவுலே அதே பீச்சாண்டே... கூவம் அன்னையின் மடியில் தவழ்ந்த அழகு குழந்தைப்பா நானு.//

    தல இதுதானே வேண்டாங்கறது ? நானும் அக்பர் தெருவுல புரண்டு பாரதி சாலையில மேஞ்சவந்தான் !

    சரி 27 L ஸ்டெல்லாமேரிஸ் பக்கம் போகாதுதான். ஆனாலும் உமக்கு அந்தக் குவாலிட்டிய மெயின்டெய்ன் பண்ணலாமேன்னு பார்த்தேன்.

    சரி இது வேலைக்கு ஆவாது.ரொம்ப பேசுனா பேசாம குயின் மேரிஸ்சோ இல்ல செல்லம்மாளோ தான்னு எச்சரிக்கை விடரேன் !! :))

    ReplyDelete
  52. Kaipullai.....romba yannai, kuthirai illam use pannathinga kathila koda ....cinemavula use panna ban pandra mathiri yathavuthu prachaiinianga blue cross sidela irunthu vanthuda poguthu. ithuilama, yannikum erumbukum sandaiy mooti vuduuringaloo ...definitly it should be banned by blue cross...
    .....be cautious....

    Ghilli

    ReplyDelete
  53. //யானை, குதிரை, மாடு, நாய் போயி இப்ப எறும்பு! ....
    தலைய ஆண்டவந்தான் காப்பாத்தணும்.//

    ஆமாம் சிபி! 15 நாளாச்சு மனுசங்க ப்ரோக்ராம் டிவியில பாத்து அப்பப்போ கிரிக்கெட்டைத் தவிர மத்த நேரமெல்லாம் டிஸ்கவரியும், நேட்ஜியோவும் தான். அடுத்ததா பனிக்கரடி, ஒட்டகச்சிவிங்கி, Proboscis monkey இதப் பத்தியெல்லாம் பதிவு வந்தா ஆச்சரியப் படாதீங்க.

    என்னது சன் டிவியா...அதெல்லாம் மூச்

    ReplyDelete
  54. //நம்ம சங்கத்து கொள்கையான சவுண்டு விட்டு ஜகா வாங்குறதை,
    நம்ம தல கைப்பு நாலு எறும்புகள் கதை மூலம் சிம்பிளா சொல்லிட்டார்.//

    தொண்டா...கண்ணு கலங்குது...பின்னறியேயா?

    ReplyDelete
  55. //தல இதுதானே வேண்டாங்கறது ? நானும் அக்பர் தெருவுல புரண்டு பாரதி சாலையில மேஞ்சவந்தான் !//
    ஓஹோ! நீயும் நம்ம பேட்டை பய தானா...ஒரு மெயில் தட்டி வுடுய்யா

    //சரி 27 L ஸ்டெல்லாமேரிஸ் பக்கம் போகாதுதான். ஆனாலும் உமக்கு அந்தக் குவாலிட்டிய மெயின்டெய்ன் பண்ணலாமேன்னு பார்த்தேன்.//
    அது நீ தலைகீழே நின்னாலும் முடியாது. WCCக்கு நேர் எதிர்ல ரெண்டு நாள் நின்னுக்கிட்டு டிராஃபிக் சர்வே பண்ண சொல்ல, ரோட்ல போற வண்டிகளை மட்டுமே எண்ணுன நல்ல புள்ளய்யா நானு...

    //சரி இது வேலைக்கு ஆவாது.ரொம்ப பேசுனா பேசாம குயின் மேரிஸ்சோ இல்ல செல்லம்மாளோ தான்னு எச்சரிக்கை விடரேன் !! :))//
    கேர்ஃபுல்மா...ஆப்பு இருக்குற தெசையை நோக்கி போறே...அமுக்கி வாசி.

    ReplyDelete
  56. //Kaipullai.....romba yannai, kuthirai illam use pannathinga kathila koda ....cinemavula use panna ban pandra mathiri yathavuthu prachaiinianga blue cross sidela irunthu vanthuda poguthu. ithuilama, yannikum erumbukum sandaiy mooti vuduuringaloo ...definitly it should be banned by blue cross...
    .....be cautious....//

    வுட்டா நீங்களே போலீசுல தகவல் குடுத்து கம்பி எண்ண வச்சிருவீங்க போலிருக்கே... நான் விலங்குகளின் நண்பன்...நம்ம சாண்டோ சின்னப்பா தேவர் மாதிரி.
    :)-

    ReplyDelete
  57. சிபி சொல்லுறதைத் தான் நானும் சொல்லுறேன்...

    யானை எறும்பு படம்லாம் நான நம்புறதா இல்லை!

    :-)

    ReplyDelete
  58. போஸ்ட் சுவாரசியம்னா கமெண்ட்ஸ் ரொம்ப சுவாரசியமா இருக்கு! :-)) ஒரு எஸ் எம் எஸையே இவ்வளவு பில்ட் அப் பண்ண முடியுமா?! :-)

    ReplyDelete