"ஏன்டா கோமுட்டித் தலையா கால நொண்டறே?"
"வயித்தை வலிக்குதுண்ணே"
"வயித்து வலிக்கு ஏன் கால் நொண்டறே?"
"எதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்கண்ணே"
"வயித்து வலிக்கு மருந்தா? ...ரெண்டு இட்லி கெட்டிச் சட்னி வச்சி சாப்பிடு... வலி நின்னு போயிடும்"
"வெளயாடாதீங்கண்ணே"
"ஒன் கிட்ட என்னடா வெளயாட்டு வேண்டி கெடக்குது?"
"நான் என்ன டாக்டர்.ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ்னு போர்டாடா மாட்டி வச்சிருக்கேன்?"
"சைக்கிள் கடையில வந்து வயித்து வலிக்கு மருந்து கேக்கிறியே? மண்டையில எதாச்சும் இருக்கா?"
"...."
"போங்கடா...அடுத்த ஜென்மத்துலயாச்சும் மனுஷனாப் பொறங்கடா"
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
"ஏண்டா எப்பவும் எருமை சாணியை மூஞ்சுல அப்புன மாதிரியே திரியறே?"
"வாழ்க்கையிலே நிம்மதியே இல்லண்ணே"
"ஹாஹாஹா...ஒனக்கும் வாழ்க்கையில நிம்மதியில்லையா?"
"அப்படி நடுத்தண்ணியில போய் நில்லு...நிம்மதியான எடத்துக்குப் போய் சேந்திரலாம்"
"சந்தோஷம் வர்றதுக்கு வழி எதாவது இருந்தா சொல்லுங்கண்ணே?"
"ஆங்...அப்படி வா? இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது"
"ஒக்காருடா"
"அட சீ...நல்லா ஒக்காருடா"
"அடேய்! எனக்கு சந்தோஷம் வரனும்னா என்ன பண்ணுவேன் தெரியுமா?"
"உம்"
"நேரா கடைக்குப் போவேன்..."
"அங்.."
"காலே கால் கிலோ அல்வா வாங்குவேன்..."
"அங்..."
"ரெண்டு மொழம் மல்லிகைப்பூ வாங்குவேன்.."
"அங்..."
"அத எடுத்துக்கிட்டு நேரா வீட்டுக்குப் போயி... எம் பொண்டாட்டி கிட்ட குடுப்பேன்"
"அங்..."
"அவ என்ன வேலை செஞ்சிட்டிருக்காளோ அத அப்படியே போட்டுட்டு என் கூட ஆத்தங்கரைக்கு வந்துருவா"
"அங்..அங்.."
"அப்புறம் அவ மடியில நான் படுக்க... என் மடியில அவ படுக்கன்னு... இப்படியே பொழுது போற வரைக்கும் ஒரே கிளுகிளுப்பா இருக்கும்"
"கி...கி....கி...கி..."
"வேணா நீயும் செஞ்சு பாரு"
"ஆன்...செஞ்சிர்றேன்"
"டேய்! அந்த பக்கம் போனா சந்தோஷம் வராது... சாவு தான் வரும்...இப்பிடி போடா"
"கேப்பியா...கேப்பியா..."
"கேப்பியா..கேப்பியா...?"
"அடியேய் ஏண்டி இந்த கறுப்பனைப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"
"இவனோட சவகாசம் வச்சதுக்கு ஒங்களைத் தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோனும்"
"அடே...நான் இவனோட சவகாசம் வச்சேனா? அப்படின்னு இந்த நாய் சொல்லுச்சா?"
"எந்திரிடா மேலே...ஏண்டா கோமுட்டித் தலையா என்னடா நடந்துச்சு?"
"அண்ணே! உங்க சம்சாரம் உங்களவுக்கு இல்ல"
"ஆமா! அவ ஒயரம் கொஞ்சம் கம்மி இப்ப அதுக்கு என்ன?"
"நீங்க எவ்வளவு நல்லவரு?"
".....மேலே"
"நீங்க என்ன சொன்னீங்க... உங்க சம்சாரத்துக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் குடுத்தா ஆத்தங்கரைக்கு வருவாங்கன்னு சொன்னீங்க"
"ஹ்ம்!!!!"
"அதே மாதிரி வாங்கிக் குடுத்தா வர மாட்டேங்கறாங்க"
"ஹ்ம்!!!!"
"இதுக்கு நீங்களே ஒரு பைசல் பண்ணுங்க...எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்"
"டேய் சைக்கிள எடுறா"
"அண்ணே! இவுங்க வரலை?"
"என்ன மாட்டி வுடவா பாக்கறே?"
".........."
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
"தண்ணீர் வருவதென்ன...சரம் சரமாய் பாய்வதென்ன?"
"சரம் சரமா பாயுதா?"
"பொம்பளைங்க குளிக்கிறாங்கல்லோ...இந்த பக்கம் நீ வரலாமா?"
"யாரு இந்த சொரூபராணிங்க...இவளுங்கல்லாம் பொம்பளைங்க இவளுங்க குளிக்கிறத பாக்க நாங்க சைக்கிளை எடுத்து அமுத்திட்டு வரோமாக்கும்"
"எங்கே நீ இந்த பக்கம் வந்ததுக்கு ஒரு காரணம் சொல்லு பாப்போம்"
"ஏன் எங்களால காரணம் சொல்ல முடியாதாக்கும்? ஆத்துல தண்ணி நெறைய வரதா சொன்னாங்க...அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்"
"......."
"ஏன் மாரக்கா...இந்த தண்ணி ஏன் இம்புட்டு ருசியா இருக்குன்னு தெரியுமா?"
"இது எங்க ஊரு ஆனைப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"
"ஊஹும்...இன்னிக்குக் காரணம் சொல்லறேன் தெரிஞ்சிக்க...இது என்ற ஊரு மாரப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"
"ஆமாண்டி... நீங்க பொறந்தது ஒரு ஊரு அதுக்கு ஒரு பேரு அது மேலே வருதாம் இந்த ஆறு...அதனால இந்த தண்ணி ருசியா இருக்குதாம்"
"அடியே...நீ சொல்றதெல்லாம் காரணம் கெடயாது...இந்த தண்ணி இம்புட்டு ருசியா இருக்கறதுக்குக் காரணம் என்னன்னு தெரியுமா?"
"அந்தா பாரு... அஞ்சு ஆர்ஸ்பவர் மோட்டரு தொறந்து வுட்ட மாதிரி சல்லுன்னு வுடறானுங்க"
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அதொன்னுமில்லீங்க...கொஞ்சம் பொடலங்கா பொறியலு...மூணு ரொட்டி...உளுத்தம்பருப்புல செஞ்ச தாலு, கொஞ்சம் நெல்லு சோறு...இது எல்லாத்தியும் போட்டு தின்னுட்டு...நம்மாளுங்க வெஸ்ட் இண்டீஸோட நாப்பத்தி ரெண்டாவது ஓவருலயும் தடவு தடவுன்னு தடவறதை கொஞ்ச நேரம் பாத்துட்டு... சித்த தூரம் தனியா நடக்கையிலே நம்ம செரிபெல்லத்துல நிழல் படமா ஓடுன வாழ்வியல் கோட்பாடுகள்(என்னன்னு யாருக்குத் தெரியும்) தான் மேலே.
இதெல்லாம் இப்ப எதுக்கு? இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நாம சொல்ல விரும்பும் கருத்து ஒன்னு இருக்கே? அதாவதுங்க...பொடலங்காயில எம்புட்டு ஃபவரு இருந்தா... தின்ன பத்து நிமிசத்துல, இம்புட்டும் எனக்கு சீன் சீனா நெனப்பு வந்திருக்கும்? அட பொடலங்காயை வுடுங்கைய்யா...இந்த உளுத்தம்பருப்பு குடுத்த ஊட்டச் சத்துல பாருங்க...கிறிஸ் கெய்ல் இர்பான் படானைப் பொளந்து கட்டறதைக் கடுப்போட பாத்துக்கிட்டே, கடமையே கண்ணா ராவோட ராவா என்னையும் அறியாம இதையெல்லாம் தட்டச்சி முடிச்சியிருக்கேன். ஆகவே மக்களே...என்னைய மாதிரியே நீங்களும் Be Vegetarian...Eat Healthy...Think Healthy...னு மிகத் தாழ்மையுடன் உங்களை மன்றாடி கேட்டுக்கறேன். சைவ உணவு சாப்பிட்டீங்கனா ஒடம்பும், மூளையும் சுறுசுறுப்பா இருக்கும். முப்பால் புலவர் ஐயன் வள்ளுவனும் இதுனால தானே புலால் மறுத்தல்னு தனியா ஒரு அதிகாரமே எழுதியிருக்காரு? சரி! அப்போ இதையெல்லாம் படிச்சிட்டு என்னை மாதிரியே நீங்களும் சாப்பாட்டு விஷயத்துல நீங்களும் 100% ப்யூர் வெஜிட்டேரியனா மாறிடுவீங்க தானே...
...சிக்கனும், மட்டனும், மீனும், முட்டையும் கண்ணுல அம்புடற வரைக்கும் :)
(கண்ணா! ராஜா! உளுத்தம்பருப்பை சோத்துல போட்டு பெசஞ்சுத் திங்கும் போதே ஒனக்கு இவ்ளோ கொயிப்பு...சாம்பார்,ரசம்,கூட்டு,பொறியல்னு வக்கணையா தின்னின்னா எவ்ளோ இருக்கும்னு... யார்மா அங்கேருந்து சவுண்டு?)
thala... nesamaalumE vege aaytteengannu paasakkara payalaa thirumba katchikku vanthaa.. kanla padara varaikkumnu solli kavuththitteengalE thala....
ReplyDeleteavvv avvvvv....
( vivek style la padikkanum )
ungalukku onnu theriyuma thala.. chinna vayasula aaththaa sOru oottumpOthu
" kai veesamma kai veesunnu " ethukku theriyuma sonnaanga thala..
kaila ethaachchum maamsa unavu kedachchaa thoookki pOttu kaiveesummaa nnu sollaththaan thala.. appadiyE non-veg saapda solli thanthaangannaa avangalukku kannaththula onnu kudukka solliththaana thalai kai veesa sonnaanggaa... ingga ennadaannaa ippadi solleettingalE thala...
unggala maathiri thaan thala namma aalunggalum thappa purinjuttu kaiveesittaanga.. pantha paaththu mattaiya veesunggadaannaa... school pasanga maathi kai veesittu vanthuttaangalE thala..
evano moonu kuchchiya naduvaala nattu vachchirukkaan, pathinoru pEru sEnthukkunu antha kuchchiya odaikkarathukkaagavE oru panthu vachchu ninnuttu irukkaan.. nammaalungalla oruththanaavathu antha pantha odappaanungannu paththa vittuttaangalE thala.. athaan thala.. antha pantha odaikka nammaalunga west indies karanunga kitta kuduthtuh odaikka sollittaanungga.. eppadi adi adinnu adichchaalum antha panthu thirumbi thirumbi vanthappa chris gayle sonnatha nenachchu paarunga thala
" evvalavu adichchaalum thaanguthE .. ithu romba nalla panthudaa" appadinnu solli solli adichchaanE thala.. solli solli adichchaane...
sari thalai itththanaiyum sonnathukkappuramum neenga non-veg than sapduvEnna.. naaan onnumE pannamudiyaathu thala, onnumE panna mudiyaathu
unggal "adi" mattath thondan
jeevaa
//"நீங்க எவ்வளவு நல்லவரு?"
ReplyDelete".....மேலே"//
//"அண்ணே! இவுங்க வரலை?"//
இந்த இரண்டு வசனமும் எவ்வளவு தடவ பாத்தாலும் எனக்கு சிரிப்ப கொண்டு வரும்.
:-))))))))))
என்ன கருத்து தல... இம்புட்டு நீயா யோசிச்சி எழுதுனியா?
ReplyDeleteநான் மிகவும் ரசித்த நகைச்சுவைக் காட்சிகளில் இது டாப் டென்னில் கட்டாயம் உண்டு.
ஆல் இன் ஆல் அழ்கு ராஜான்னு ஒரு பதிவாளர் பிறக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்:)
//"நல்ல கருத்துள்ள பதிவு" // தலைப்பை இப்படி வெச்சுட்டு வேற எழுதினா என்னா அர்த்தம்.
ReplyDelete//பொடலங்கா பொறியலு...மூணு ரொட்டி...உளுத்தம்பருப்புல செஞ்ச தாலு, கொஞ்சம் நெல்லு சோறு//
இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சக்கரையாம். சந்தைக்கு போகுற வழியப்பாருங்க சாமி.
தல!
ReplyDeleteஅந்த படத்தில் இன்னும் சில கருத்து உள்ள காமெடி உள்ளது(:-)). அதையும் போட்டு கலக்கு தல.
அப்புறம், ஞான பழத்துக்கு கொட்டை இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு விடை கொடுக்க முயற்சி பண்ணு தல.
ஆங் நானும் கூட இப்ப 100% வெஜ். அடுத்த நான்-வெஜ். கிடைக்கும் வரை. கடைசியா 2 வாரத்துக்கு முன்பு ஒரு பூடான் நாட்டவரின் வீட்டில் வெட்டியது............. மறுபடியும் எப்ப கிடைக்க போதோ?
ஒரிஜினல் வெண்பா வாத்தியாரு வந்துட்டாரு டோய். எங்கே ராஜா இம்புட்டு நாளா ஆளே காணோம்?
ReplyDelete//sari thalai itththanaiyum sonnathukkappuramum neenga non-veg than sapduvEnna.. naaan onnumE pannamudiyaathu thala, onnumE panna mudiyaathu//
நெனச்சாலும் சாப்புட முடியாது வாத்தியாரே...இப்ப நான் ஃபோர்ஸ்டு வெஜிடேரியன்.
:)-
கைப்ஸ் அண்ணாச்சி,
ReplyDeleteபுடலங்காயின் மகிமை பத்தி இப்போவாவது தெரிஞ்சிதே.. ஆனாலும் ஒரு கத்திரிக்காயோ, வெள்ளரிக்காயோ சாப்பிட்டிருந்தா கைப்புள்ள, அல்கேட்ஸ் இவங்க காமெடி நினைவு வந்திருக்கும்.. இப்படி ஆல் இன் ஆல் அழகுராசாவைப் போய் நினைச்சிகிட்டியே!!! ஆமாம் யாரு சமையல்??
//ஞான பழத்துக்கு கொட்டை இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு விடை கொடுக்க முயற்சி பண்ணு தல.
//
வந்துட்டான்யா வந்துட்டான்யா... தலயை மறுக்கா கேள்வி கேக்க ஒருத்தன் வந்துட்டான்யா!!!
இது உண்மையான நாகை சிவா தானா இல்லை அவரது போலியா என்று புலிக் குட்டி (அட அவரு தான் புலி படமே போட்ருக்காரே!!!) சோதனை செய்ய வேண்டுகிறேன்!!! :)))
//" evvalavu adichchaalum thaanguthE .. ithu romba nalla panthudaa" appadinnu solli solli adichchaanE thala.. solli solli adichchaane...//
ReplyDeleteஒத்தக் கையாலே ரெண்டு சிக்ஸ் அடிச்சானேய்யா...ரத்தக் கண்ணீர் வந்துருச்சு அத பாத்ததும்... நம்மாளுகளும் கிரி படத்தைப் பாத்துட்டாங்களோ?
//இந்த இரண்டு வசனமும் எவ்வளவு தடவ பாத்தாலும் எனக்கு சிரிப்ப கொண்டு வரும்.
ReplyDelete:-))))))))))//
வாங்க நன்மனம்! எழுதும் போதே எனக்கும் ஒரே சிரிப்பு தான். இது எல்லாத்துலயும் எனக்கு ரொம்ப புடிச்சது "போங்கடா...அடுத்த ஜன்மத்துலயாச்சும் மனுஷனா பொறங்கடா" தான். நயினா இப்படி தான் தடிப்பசங்க ரெண்டு பேரையும் திட்டுவாரு...
:))-
//என்ன கருத்து தல... இம்புட்டு நீயா யோசிச்சி எழுதுனியா?//
ReplyDeleteஆமா...ஆமா...பின்ன மண்டபத்துல எவனோ எழுதி குடுத்ததை கொண்டாந்தா இங்கே போட்டிருக்கேன்...
பொடலங்காய் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி.
ஐ ஆம் எ உளுத்தம்பருப்பு பாய்.
:))-
////"நல்ல கருத்துள்ள பதிவு" // தலைப்பை இப்படி வெச்சுட்டு வேற எழுதினா என்னா அர்த்தம்.//
ReplyDeleteபதிவுக்கு இந்த பேரை வைன்னு நான் துன்ன பொடலங்கா சொல்லுச்சிப்பா...என் மேலே மிஷ்டேக் இல்ல.
//சந்தைக்கு போகுற வழியப்பாருங்க சாமி//
எனக்கே சட்டுன்னு புரியலீங்க...அடிக்கிற வெயில்ல எங்கங்க சந்தைக்கெல்லாம் போறது?
:))-
//தல!
ReplyDeleteஅந்த படத்தில் இன்னும் சில கருத்து உள்ள காமெடி உள்ளது(:-)). அதையும் போட்டு கலக்கு தல.//
போட்டுருவோம். என்ன புலி வந்து ஒக்காந்துருக்கு ப்ரொஃபைல்ல?
//மறுபடியும் எப்ப கிடைக்க போதோ?//
இங்கேயும் அதே கேஸு தான்.
//இப்படி ஆல் இன் ஆல் அழகுராசாவைப் போய் நினைச்சிகிட்டியே!!!//
ReplyDeleteபொன்ஸ்! ஆல் இன் ஆல் அழகுராஜா என்னோட பேவரிட்கள்ல ஒருத்தர். தப்பா பேசுனா எனக்கு அளுவாச்சி வந்துரும்.
//ஆமாம் யாரு சமையல்??//
நான் தான் க.பி.யாச்சே? கைப்பொண்ணையும் நாடு கடத்திட்டீங்க :((- எல்லாம் தெய்வம் தந்த வீடு கெஸ்ட் அவுஸ்ல தான். ராஜஸ்தான்ல ரெண்டு காதுலயும் தோடு போட்ட மவராசனுங்க நெறைய பேரு இருப்பாங்க. அவங்கள்ல யாரோ ஒருத்தரு தான்.
//இது உண்மையான நாகை சிவா தானா இல்லை அவரது போலியா என்று புலிக் குட்டி (அட அவரு தான் புலி படமே போட்ருக்காரே!!!) சோதனை செய்ய வேண்டுகிறேன்!!! :)))//
நோ கமெண்ட்ஸ் :)-
//பொன்ஸ்! ஆல் இன் ஆல் அழகுராஜா என்னோட பேவரிட்கள்ல ஒருத்தர். தப்பா பேசுனா எனக்கு அளுவாச்சி வந்துரும்.//
ReplyDeleteஓகே தல.. நீ சொன்னா சரிதான் :)
ஆல் இன் ஆல் அழகு ராஜா வாழ்கன்னு சொல்லணுமா?!!
சங்கத்து சிங்களே!
ReplyDeleteஎன்னடா திடீர் என்று புலி வந்து வர்க்காந்து இருக்குனு சந்தேகப்படாதீர்க்கள், பயப்படாதீங்க. அது நானே தான். நம்ம முகரகட்டைய பாத்து பாத்து நமக்கே போரிங்க இருந்தனால, சிம்பாலிகா புலி படத்த போட்டு இருக்கேன். நம்ம இருக்குறது அது ஒன்னு தான். அத தான் , வேற ஏதும் இல்லை.
என்ன பொன்ஸ், தல விளக்கம் போதுமா?
குழம்பு வெய்க்க நேரம் ஆகும்னா பச்ச மீன அப்பிடியே சாப்பிடுர ஆளு இப்போ இலை தழைய சாப்பிட சொல்றியே என்னன்னே எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீகளே...
ReplyDelete//நம்ம இருக்குறது அது ஒன்னு தான். அத தான் , வேற ஏதும் இல்லை.
ReplyDeleteஎன்ன பொன்ஸ், தல விளக்கம் போதுமா?//
உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாயிட்டுது.
:)-
சுடான் புலி சிவா! அந்த படத்துல வந்த இன்னொரு காமெடி பத்தி நம்ம கொங்கு ராசா ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்காரு காரமடை ரங்கநாதனை இங்கே பார்க்கவும்.
//நம்ம_______ இருக்குறது அது ஒன்னு தான். அத தான்//
ReplyDeleteResemblance - வார்த்தை விட்டு போச்சு, இருந்தாலும் உனக்கு தான் கற்பூர புத்தி ஆயிற்றே! டக்குனு புரிஞ்சிகிட்ட. இதை எதுக்கு இங்க சொல்லுரேனா, நம்ம மகளிரணி தலைவி ஒன்னும் புரியமா திரு திரு முழிக்க கூடாது பாருங்க அதுக்கு தான்.
// காரமடை ரங்கநாதனை //அந்த பதிவை பார்த்தேன், சிரித்து மகிழ்ந்தேன். கவுண்டர் நையாண்டிய தனி தான்.
//நம்ம மகளிரணி தலைவி ஒன்னும் புரியமா திரு திரு முழிக்க கூடாது பாருங்க அதுக்கு தான்.
ReplyDelete//
சூடான், இதே மாதிரி அங்கங்க வந்து ராங்கு காட்டிகிட்டு இருந்தீங்கன்னா தல கிட்ட சொல்லி பூட்டான்னு அனுப்பி வச்சிடுவேன், ஆமாம் தெரிஞ்சிக்கிங்க :)
ஆமாம், உங்க ஊர்ல புலி யெல்லாம் இருக்கா? வெறும் ஒட்டகம் தான் உண்டுன்னு நினைச்சேன்...
resemblance-க்காக நீங்க புலி போட்டா, நான் என்னத்த போடுறது?!! ம்ம்.. நல்லதா ஒரு டினோசர் படம் இருக்கான்னு தேடணும் :)))
:)))
ReplyDelete//குழம்பு வெய்க்க நேரம் ஆகும்னா பச்ச மீன அப்பிடியே சாப்பிடுர ஆளு இப்போ இலை தழைய சாப்பிட சொல்றியே என்னன்னே எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீகளே...//
ReplyDeleteகண்ணா! 12பி நாயகா!
பின்னறியேய்யா...எப்படியா இப்பிடியெல்லாம்...சரி இந்த உண்மையெல்லாம் ஒனக்கு யாரு சொன்னா?
//"வயித்து வலிக்கு மருந்தா? ...ரெண்டு இட்லி கெட்டிச் சட்னி வச்சி சாப்பிடு... வலி நின்னு போயிடும்"
ReplyDelete//
//"அண்ணே! உங்க சம்சாரம் உங்களவுக்கு இல்ல"//
கருத்தாழம் மிக்க பதிவு!
:-)
எங்க வெ.வா.வைக் கண்டுபிடித்துக் கொடுத்த கைப்பு வாழ்க.
ReplyDelete/இந்த உண்மையெல்லாம் ஒனக்கு யாரு சொன்னா?/
ReplyDeleteஎன்னன்னே இப்பிடி கேட்டுப்புட்ட, சின்ன வயசுல ஒரு நாள் உனக்கு கோவம் வந்து வீதில வந்த யானைய வால புடிச்சு தலைக்கு மேல சுத்தி வீசுனயே அப்போ புடிச்சு உன் கூட தான இருக்கேன்
//கருத்தாழம் மிக்க பதிவு!
ReplyDelete:-)//
வாருங்கள் தளபதியாரே!
உங்க ஒருத்தருக்காச்சும் புரிஞ்சுச்சே...அது வரைக்கும் சந்தோஷம் தான்.
:)
//எங்க வெ.வா.வைக் கண்டுபிடித்துக் கொடுத்த கைப்பு வாழ்க.//
ReplyDeleteகொத்ஸ்!
என்னதிது? ஒடம்புக்குச் சொகமில்லியா...இல்ல இங்கே வந்துருக்கறது போலி கொத்ஸா? திடீர்னு வாழ்த்தெல்லாம் பலமாயிருக்கு?
எதாச்சும் உள்குத்ஸ்?
:)
//என்னன்னே இப்பிடி கேட்டுப்புட்ட, சின்ன வயசுல ஒரு நாள் உனக்கு கோவம் வந்து வீதில வந்த யானைய வால புடிச்சு தலைக்கு மேல சுத்தி வீசுனயே அப்போ புடிச்சு உன் கூட தான இருக்கேன்//
ReplyDeleteநல்லாருய்யா...நல்லாரு...நம்ம வீரத்தைப் பாத்து "யானை கொன்றான்"னு பட்டம் கூட குடுத்தாங்களேய்யா அத வுட்டுப் புட்டியே?
(என்னிக்கு ஊரானுங்க ஒதக்க போறாங்களோ இதுக்கெல்லாம் :( )
//என்னன்னே இப்பிடி கேட்டுப்புட்ட, சின்ன வயசுல ஒரு நாள் உனக்கு கோவம் வந்து வீதில வந்த யானைய வால புடிச்சு தலைக்கு மேல சுத்தி வீசுனயே அப்போ புடிச்சு உன் கூட தான இருக்கேன்//
ReplyDeleteஇப்பதான் தலை குதிரையால பிரச்னைல மாட்டியிருக்கார். இப்போ யானௌ வேறயா?
(ஷ்யாம் அவர்கள் சங்கக் கடமையை செவ்வனே ஆற்றுகிறார்)
நீங்களும் நம்மளை மாதிரி ஒரு தமாஷான ஆளுதான் போல கீதே!
ReplyDelete//இப்பதான் தலை குதிரையால பிரச்னைல மாட்டியிருக்கார். இப்போ யானௌ வேறயா?//
ReplyDeleteஅது என்னய்யா குதிரை கதை...சொல்லவே இல்ல?
//நீங்களும் நம்மளை மாதிரி ஒரு தமாஷான ஆளுதான் போல கீதே!//
ReplyDeleteஆமுங்க! நமக்கும் கோயமுத்தூர் பக்கத்தாப்புல இந்த மெட்ராஸ் தானுங்க ஊரு...அந்த எபெக்ட் தான்னு நெனக்கிறேன்
:))-
//அது என்னய்யா குதிரை கதை...சொல்லவே இல்ல?//
ReplyDeleteஆமா எனக்கும் தெரியாது குதிரைய எண்ணன்னே பன்ன?
//(ஷ்யாம் அவர்கள் சங்கக் கடமையை செவ்வனே ஆற்றுகிறார்) //
சிபி,சங்கத்துல உருப்பினரா (நானே சேர்ந்துக்கிட்டேன்) இருந்திட்டு கடமைய செய்யலைனா கட்டதுரைக்கு நக்கலா போய்ரும்
//அது என்னய்யா குதிரை கதை...சொல்லவே இல்ல? //
ReplyDeleteஅட! அதுக்குள்ள மறந்துட்டீங்களா இல்லை தன்னடக்கமா?
23ம் புலிகேசில குதிரைகளை கூட இம்சை பண்ணியிருக்கீங்கன்னு பேச்சு அடிபட்டுது!
ஏ எப்படி வே உம்மால மட்டும் இப்படி நல்ல கருத்துக்கள அள்ளி விட முடியுது? உம்ம நற்பணி இதே மாரி தொடரட்டும் வே....
ReplyDelete////எங்க வெ.வா.வைக் கண்டுபிடித்துக் கொடுத்த கைப்பு வாழ்க.//
ReplyDeleteகொத்ஸ்!
என்னதிது? ஒடம்புக்குச் சொகமில்லியா...இல்ல இங்கே வந்துருக்கறது போலி கொத்ஸா? திடீர்னு வாழ்த்தெல்லாம் பலமாயிருக்கு?
எதாச்சும் உள்குத்ஸ்?
:)
//
அது ஒண்ணுமில்ல தல, மொதப் பின்னூட்டம் போட்டு சைக்கிள் ஓட்டிக்கினுகீறாரே நம்ம ஜீவா, அவரு தான் எங்க வெண்பா வாத்தி..
இவ்வளவு நாள் தலமறைவா இருந்தாரு.. இப்போ தல சைட்ல வந்து சவுண்டு வுட்டுகினுகீறாருன்னு நான் தான் கொத்ஸுக்கு சொன்னேன்.. அதான்.. வந்து வாய்த்துறாரு.. குத்துமில்ல சொத்துமில்ல!!
//சிபி,சங்கத்துல உருப்பினரா (நானே சேர்ந்துக்கிட்டேன்) இருந்திட்டு கடமைய செய்யலைனா கட்டதுரைக்கு நக்கலா போய்ரும்//
ReplyDeleteநல்லாரு ராசா...ஆப்பு வக்கிற நேரத்துக்கு கரெக்டா ஆஜர் ஆகிடறே...நடத்து
//23ம் புலிகேசில குதிரைகளை கூட இம்சை பண்ணியிருக்கீங்கன்னு பேச்சு அடிபட்டுது!//
ReplyDeleteஒரு வீரன்னா ஒரு குதிரையை இம்சை தான் பண்ணுவான்...அத எல்லாம் பெருசா எடுத்துக்கப்பிடாது.
//இவ்வளவு நாள் தலமறைவா இருந்தாரு.. இப்போ தல சைட்ல வந்து சவுண்டு வுட்டுகினுகீறாருன்னு நான் தான் கொத்ஸுக்கு சொன்னேன்.. அதான்.. வந்து வாய்த்துறாரு.. குத்துமில்ல சொத்துமில்ல!!//
ReplyDeleteஎன் ஐயப்பாட்டைத் தீர்க்க கோனார் நோட்ஸ் போட்ட தமக்கையே...நீ வாழ்க...வாழ்க நின் சோறு வடிக்கும் பணி...சே! நின் வெண்பா வடிக்கும் பணி
கைப்ஸ்
ReplyDeleteஉங்க 'ஆப்பு' படத்துக்கப்புறம் நான் வாய்விட்டுச் சிரிச்சது இந்த பதிவைப் படிச்சுதான்
நம்ம தலைவர் கவுண்டமணியோட காமெடியை வீடியோல பார்த்த திருப்தி வந்துடுச்சி
அப்புறம்... புதுசா யாரும் உங்களை படம் புடிக்கலியா? முடிஞ்சா அதே பழைய ஃபிரண்டை வச்சு அவரு 'ஸ்டைல்'ல இன்னொரு படமெடுத்து ரிலீஸ் பண்ணுங்க
ரசிகக் கண்மணிகள்லாம் ஆவலா காத்திருக்காங்கல்ல:-))))
//கைப்ஸ்
ReplyDeleteஉங்க 'ஆப்பு' படத்துக்கப்புறம் நான் வாய்விட்டுச் சிரிச்சது இந்த பதிவைப் படிச்சுதான்
நம்ம தலைவர் கவுண்டமணியோட காமெடியை வீடியோல பார்த்த திருப்தி வந்துடுச்சி//
வாங்க நிலா மிஸ்!
எப்படியிருக்கீங்க...எங்க ரொம்ப நாளா காணோம். ஒரு காலத்துல இந்த டயலாக் எல்லாம் அத்துப்படியா இருந்துச்சு.
//அப்புறம்... புதுசா யாரும் உங்களை படம் புடிக்கலியா? முடிஞ்சா அதே பழைய ஃபிரண்டை வச்சு அவரு 'ஸ்டைல்'ல இன்னொரு படமெடுத்து ரிலீஸ் பண்ணுங்க//
ஏஜெண்ட் ஞான்ஸ் அதை மறு ஓளிபரப்பு பண்ணியிருக்காரு அவரோட பாவம் செய்தால் காதல் பதிவுல.
//
ரசிகக் கண்மணிகள்லாம் ஆவலா காத்திருக்காங்கல்ல:-))))//
அவுங்களுக்காகத் தான் ஹே! காயத்ரி போட்டிருக்கேன். நீங்களும் பாத்துட்டு எப்படின்னு சொல்லுங்க.
:)-