Thursday, May 25, 2006

மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

ஆராய்ச்சின்னு சொன்னதும் ஒரு கொஸ்டியனேரை(Questionnaire) எங்கிருந்தோ சுட்டு, ஆபீசு பக்கத்துல இருக்கற டீக்கடையில நண்பர்(நண்பி)ஒருத்தரின் உதவியோட நீலம், கறுப்பு, செவப்பு, பச்சைன்னு கலர் கலரா பேனா வச்சிக்கிட்டு வலது கையாலயும், எடது கையாலயும்(கையெழுத்தை வித விதமா காட்ட தான்) ஒரு எடத்துல் 1ன்னும்,ஒரு எடத்துல 2ன்னும் இல்ல ரேண்டமா ஒரு டிக்குன்னும் எல்லா கேள்விக்கும் "Strongly agree"னு பதில் குடுத்தும்(ஓபன் எண்டட் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டும்) கப்பு கப்புன்னு தீஸீசை முடிக்கிறத விட்டுட்டு நேர்மையா ஒரு ஆராய்ச்சி (அதுவும் வலைப்பூக்களைப் பத்தி) பண்ணனும்னு நெனக்கிற மதுமிதா மேடம் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி என்னுடைய முடிந்த வரை(!) நேர்மையானதொரு பதிலை அளிக்கிறேன்)

வலைப்பதிவர் பெயர்: சி. மோகன் ராசு(S.மோகன் ராஜ்) அட - உண்மையான பேரு இது தாங்க

வலைப்பூ பெயர் : Kaipullai Calling

சுட்டி(url) : http://kaipullai.blogspot.com
http://smohanraj.blogspot.com(ஆங்கில கைப்புள்ள - தூங்கிக்கிட்டிருக்காரு)

ஊர்: தற்போதைக்கு சித்தூர்கட், ராஜஸ்தான். (நிரந்தரமாக : சென்னை)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திருமுருகன்(http://thirumurugan.blogspot.com)
தமிழில் முதலில் காணக் கிடைத்தது நிலவு நண்பனுடைய பதிவு(http://nilavunanban.blogspot.com)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 29.12.2005

இது எத்தனையாவது பதிவு: 87 (மூன்று மாதமாக ப்ளாக்கரில் கிடக்கும் 4 டிராஃப்ட்கள் இல்லாமல்)

இப்பதிவின் சுட்டி(url): http://kaipullai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வட இந்தியாவில் நான் 7 ஆண்டு காலமாக வசித்து வருவதால், தமிழில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது.தமிழில் சிந்தித்து இந்தியில் மொழிபெயர்த்து பேசுவது குறைந்து, இந்தி மொழியிலேயே சுலபமாகச் சிந்தித்து பேசவும் தொடங்கி விட்டேன்.
அவ்வப்போது தமிழில் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால், தமிழில் சிந்திப்பது குறைந்துவிடாது என்ற நம்பிக்கையிலும், தனிமையைப் போக்கும் ஒரு கருவியாகவும் இருக்கும் என்ற எண்ணத்திலும், என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில
விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன்.

சந்தித்த அனுபவங்கள்: பலவிதம். இது-இது என்று இத்தருணத்தில் கூறுவது கடினம். நம்மைப் போலவே(!) சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என எண்ணுகையில் மகிழ்ச்சி.

பெற்ற நண்பர்கள்: "Brand Kaipullai"யை நான் எவ்விதமான முயற்சியும் செய்யாமல் பட்டி தொட்டி எங்கும் தெரியச் செய்த அனைவரும், குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களும்.

கற்றவை:
//என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ள கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன். //
Kaipullai Calling என்று பெயர் வைத்து விட்டாலும்...நக்கல், நையாண்டி பதிவுகள் மட்டும் அல்லாமல் சற்று சீரியசான(பாருங்க... இதுக்கு கூட தமிழ்ல என்னன்னு சட்டுன்னு நெனப்பு வரலை) விஷயங்களையும் நற்றமிழில் எழுத வேண்டும் என்பதே முதல் எண்ணம். "நற்றமிழில்" என்பது எண்ணத்தில் மட்டுமே உள்ளது...அதை செயலில் கொண்டு வரும் அளவுக்கு நம் தமிழ் அறிவு இல்லை...அது வெகுவாக மழுங்கி விட்டது என்ற ஞானோதயம். அவ்வப்போது பெருமுயற்சி செய்து பயனுள்ள பதிவுகளைக்(!) கொண்டு வந்து விடலாம் என்ற புரிதலும்(இதுவும் தமிழ் வலைப்பூக்களில் கற்றுக் கொண்டது தான் :)- ).

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கைப்புள்ள என்கிற பெயர் இருப்பதால் ஆங்கில கலப்பையும், தமிழ் கொலையையும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் மன்னிக்கிறார்கள் என்பதே பெரிய சுதந்திரம் தான்.

இனி செய்ய நினைப்பவை: வலைப்பதிவுலகில் நகைச்சுவைக்குக் குறைவே இல்லை. மொழியே இல்லாமல் படங்களின் மூலம் சொல்லும் நகைச்சுவை ஆகட்டும், இலைமறை காய் மறைவான மெலிதான நகைச்சுவை ஆகட்டும்(subtle humour), வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும் சினிமா
தொடர்புடைய காமெடி ஆகட்டும் - வலைப்பதிவாளர்களின் ஆற்றல் அளப்பற்கரியது. என்னால் எழுதவே முடியாவிட்டாலும், என் கற்பனைக்கு(டூப்படிப்பதற்கு என்று படிக்கவும்) வறட்சி ஏற்பட்டாலும், வலைப்பூக்களில் நகைச்சுவையான விஷயங்களையும், அவ்வப்போது
பொருள் பொதிந்த பதிவுகளையும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். செய்ய நினைப்பவை என்று எதுவும் இல்லை...கைப்புள்ள(அட ஒரிஜினலுங்க!) சினிமால செய்யறதை எழுத்துல காப்பி அடிச்சிட்டே இருப்போம்ல?

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். நான் பிறந்ததின் பயனைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அதற்கு விடை கிடைத்த பாடில்லை. வேறொன்றும் பெரிதாகச் சொல்லிக் கொள்வதற்கில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: சொன்னா திட்டப் படாது. இப்பல்லாம் கிறுக்குத் தனமாத் தான் இந்த மூளை யோசிக்குது. இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நினைத்ததும் முதன்முதலில் எனக்குத் தோன்றிய தலைப்பு : ஹாய் ரே ஹாய் ரே ஹாய் ரப்பா (மதுமிதா மேடம் அவங்களோட வலைப்பூவுல எப்பவாச்சும் ரெண்டு தரம் எட்டிப் பாத்துருப்போம் அதுவும் பின்னூட்டம் எதுவும் போடாமல்...மத்தபடி நாம யாருன்னு அவங்களுக்குத் தெரியாது, அவங்களைப் பத்தி நமக்கும் அவ்வளவாத் தெரியாது...இப்படி இருக்க திடீர்னு இந்த மாதிரி ஒரு தலைப்பு வச்சா தப்பா எடுத்துக்குவாங்கன்னு ரொம்பவே யோசிச்சு தலைப்பை மாத்திட்டேன்)

இப்பதிவின் முன்னுரைக்கும் எனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என்று காட் ப்ராமிஸ்(!) செஞ்சு இத்தோட உத்தரவு வாங்கிக்கிறேன் :))-

22 comments:

  1. வ.வா.ச அங்கத்தினர்கள் மட்டும் தான் நண்பர்கள்னா, அப்போ ப.ம.க., க.பி.க, மத்த கட்சி அங்கத்தினர்கள் எல்லாம் உங்க நிரந்தர எதிரி தானே?!?!

    உங்க பாசத்துக்கு முன்னாடி...அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

    ReplyDelete
  2. //வ.வா.ச அங்கத்தினர்கள் மட்டும் தான் நண்பர்கள்னா, அப்போ ப.ம.க., க.பி.க, மத்த கட்சி அங்கத்தினர்கள் எல்லாம் உங்க நிரந்தர எதிரி தானே?!?! //

    ஒத வாங்கி குடுக்கற விஷயத்துல மகளிர் அணியும் வெவரமாத் தான்யா இருக்காய்ங்க.
    :((

    ReplyDelete
  3. உத வாங்குறது எல்லாம் நமக்கு ஒரு மேட்டரா என்ன? அடி வாங்கி வாங்கி உடம்பு தான் இப்ப இரும்பு ஆயிடுச்சுல அப்புறம் என்னா?
    பதிவு அருமை

    ReplyDelete
  4. பதிவு நல்லா இருக்குது

    ReplyDelete
  5. neenga eppovume eppadiya ..ippadi odai vanga ready'a irupeengala....

    :):)

    ReplyDelete
  6. தல இன்னும் வெயிட்டா எதிர்பார்த்தேன்... ம்ம் உன் லெவலுக்கு கொஞசம் சொதப்பல் தான்.. அவசரப் பதிவா?

    ReplyDelete
  7. கைபுள்ள,
    நல்லா இருக்கு, ராஜஸ்தான் எங்க ஊராச்சே. அங்கே போனது சொல்லவே இல்லையே. என்ன தலைவி பாருங்க நானு. சொல்ல வந்த விஷயமே வேறே. பக்கத்திலே இருக்குற மவுண்ட் அபு, நாத் த்வாரா கிருஷ்ணன் கோயில், ஜயப்பூர், உதயப்பூர், ஜோத்பூர் அப்படியே உங்க சித்தூட்கட் பக்கத்திலே இருக்குற எங்க அருமை நசீராபாத்துக்குப் போய் அங்கே விக்கிற நசீராபாத் ஸ்பெஷல் கச்சோடா (அவ்வளவு பெரிய கச்சோடா கட்டாயம் பார்க்கணுங்க), ஜிலேபி, நம்ம ஊர் உளுந்து ஜாங்கிரி இல்லைங்க, இது மைதாமாவுல செஞ்சது. சாப்பிட்டு விட்டுப் பக்கத்திலே அஜ்மேரில் இருந்து புஷ்கர் போய் அங்கே ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் கிடைக்கும் பாருங்க ஜீராவிலே ஊறப்போட்டு, சாப்பிட்டால் அதுக்கு அடிமை ஆகிடுவீங்க. திரும்பி வரும்போது அஜ்மேர் மதார்கேட்டில் தயிர்வடை மறக்காமல் சாப்பிடுங்க. உங்க ஊரில் இருந்து ரெயில் ஏறினால் நேரே நசீராபாத்தில் இறங்கலாமுங்க. அங்கே மால் ரோட்டில் நம்ம பங்களாவையும் பார்த்துட்டு வாங்க. வரும்போது பிக்கானீர் அப்பளம் (மசாலா), பாந்தனி புடவை(கைப்பொண்ணுக்கு)வாங்கிக்குங்க. கைப் பொண்ணு எனக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்க. கச்சோடா காரம் தலைக்கு ஏறினால் என்னைத் திட்டாதீங்க.

    ReplyDelete
  8. என்னது நாங்க எதிரியா...
    கைப்பு இப்படியா நாம பழகுனோம்...
    வ.வா. சங்கத்துக்கு முன்னாடியே உன்னைய கூட்டு சேர அழைச்ச ஆளுங்கையா நாங்க...
    மனசு வருத்தமா இருக்குப்பூ...
    நல்லா இருங்க...
    அம்புட்டுதேய்ன்..

    ReplyDelete
  9. //உத வாங்குறது எல்லாம் நமக்கு ஒரு மேட்டரா என்ன? அடி வாங்கி வாங்கி உடம்பு தான் இப்ப இரும்பு ஆயிடுச்சுல அப்புறம் என்னா?//

    எப்படிய்யா சங்கத்துல சேந்ததுமே இப்படி பின்னறீங்க?

    //பதிவு அருமை//
    டேங்ஸ்மா!

    ReplyDelete
  10. //பதிவு நல்லா இருக்குது//

    வாழ்த்துகளுக்கு நன்றி பிரபு ராஜா.

    ReplyDelete
  11. //neenga eppovume eppadiya ..ippadi odai vanga ready'a irupeengala....//

    இப்பிடியா பப்ளிக்கா கேக்கறது? ஆமான்னு உண்மையை எப்பிடி சொல்லுறதாம்?

    ReplyDelete
  12. இப்பிடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு உடம்ப ரனகலம் ஆக்கிடாய்ங்களா....பதிவு நல்லாத்தேய்ன் இருக்கு

    ReplyDelete
  13. //தல இன்னும் வெயிட்டா எதிர்பார்த்தேன்... ம்ம் உன் லெவலுக்கு கொஞசம் சொதப்பல் தான்.. அவசரப் பதிவா?//

    சாரிடா "கை" செல்லம்! இனிமே எளக்கிய பதிவுகளும் எலுதறதா முடிவு பண்ணிட்டேண்டா. அதனால நல்ல கருத்துள்ள பதிவுகளும் எல்துவேன்.

    ReplyDelete
  14. //என்னது நாங்க எதிரியா...
    கைப்பு இப்படியா நாம பழகுனோம்...
    வ.வா. சங்கத்துக்கு முன்னாடியே உன்னைய கூட்டு சேர அழைச்ச ஆளுங்கையா நாங்க...
    மனசு வருத்தமா இருக்குப்பூ...
    நல்லா இருங்க...
    அம்புட்டுதேய்ன்.. //


    பாலா! தப்பா எடுத்துக்காதீங்க...நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு உங்களுக்குத் தெரியாததா என்ன? நானும் ஒரு க.பி. தானே?
    :)

    ReplyDelete
  15. //ராஜஸ்தான் எங்க ஊராச்சே//
    நீங்க மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வகையறான்னு நெனச்சிட்டிருந்தேன். திடீர்னு ராஜஸ்தான் ராஜபரம்பரைன்னு சொல்றீங்களே? ஒரு வேளை ராஜஸ்தானோட மாட்டுப்பொண்ணோ? சாரோட பேரைப் பாத்தா அப்பிடி தெரியலியே?
    :)-

    // அங்கே போனது சொல்லவே இல்லையே//
    பாத்தீங்களா? ஒரு நாள் ஒரு கனவு பதிவுல, என்னால குரங்குக்கு எதாச்சும் ஆபத்து வந்துடுமோன்னு உன்னிப்பா கவனிச்சிட்டு, நான் சொன்ன முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிட்டீங்களே? :))-

    //என்ன தலைவி பாருங்க நானு. சொல்ல வந்த விஷயமே வேறே. பக்கத்திலே இருக்குற மவுண்ட் அபு, நாத் த்வாரா கிருஷ்ணன் கோயில், ஜயப்பூர், உதயப்பூர், ஜோத்பூர் அப்படியே உங்க சித்தூட்கட் பக்கத்திலே இருக்குற எங்க அருமை நசீராபாத்துக்குப் போய் அங்கே விக்கிற நசீராபாத் ஸ்பெஷல் கச்சோடா (அவ்வளவு பெரிய கச்சோடா கட்டாயம் பார்க்கணுங்க), ஜிலேபி, நம்ம ஊர் உளுந்து ஜாங்கிரி இல்லைங்க, இது மைதாமாவுல செஞ்சது. சாப்பிட்டு விட்டுப் பக்கத்திலே அஜ்மேரில் இருந்து புஷ்கர் போய் அங்கே ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் கிடைக்கும் பாருங்க ஜீராவி ஊறப்போட்டு, சாப்பிட்டால் அதுக்கு அடிமை ஆகிடுவீங்க. திரும்பி வரும்போது அஜ்மேர் மதார்கேட்டில் தயிர்வடை மறக்காமல் சாப்பிடுங்க. உங்க ஊரில் இருந்து ரெயில் ஏறினால் நேரே நசீராபாத்தில் இறங்கலாமுங்க. அங்கே மால் ரோட்டில் நம்ம பங்களாவையும் பார்த்துட்டு வாங்க. வரும்போது பிக்கானீர் அப்பளம் (மசாலா), பாந்தனி புடவை(கைப்பொண்ணுக்கு)வாங்கிக்குங்க. கைப் பொண்ணு எனக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்க. கச்சோடா காரம் தலைக்கு ஏறினால் என்னைத் திட்டாதீங்க.//

    ராஜஸ்தானுக்குப் போவனும்னா இனிமே உங்க கிட்ட வந்தா எல்லா விவரமும் கிடைக்கும் போலிருக்கே? இவ்வளவு எடமும் பாக்க முடியுமாங்கறது சந்தேகம் தான். 15 கி.மீ தூரத்துல இருக்குற சித்தூர்கட் கோட்டையைக் கொஞ்ச நாள்ல பாக்க வாய்ப்பு கெடக்கலாம். வெயில் கொஞ்ச நாளா கொளுத்துது.

    ReplyDelete
  16. //இப்பிடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு உடம்ப ரனகலம் ஆக்கிடாய்ங்களா....பதிவு நல்லாத்தேய்ன் இருக்கு //

    வாங்க ஸ்யாம்!
    உண்மை தாங்க...என்ன பண்றது? தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  17. உங்களைப்போன்றோரின் ஒத்துழைப்பு மேலும் செயல்படும் உத்வேகமும்,பொறுப்பாய் செய்யணுமே எனும் பதைபதைப்பையும் அதிகப்படுத்துதுங்க

    மனமார்ந்த நன்றி மோகன்ராஜ்

    ReplyDelete
  18. //உங்களைப்போன்றோரின் ஒத்துழைப்பு மேலும் செயல்படும் உத்வேகமும்,பொறுப்பாய் செய்யணுமே எனும் பதைபதைப்பையும் அதிகப்படுத்துதுங்க//

    வாங்க மேடம்,
    தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. தங்களுடைய ஆராயச்சி வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. கைப்புள்ளே கலக்கிட்டெ அப்பு. வாழ்த்துக்கள்.

    வவாசங்கத்துக்கும் ஒரு வாழ்த்து (மத்த சங்கங்க எல்லாம் கோவிச்சுக்கப்படாது). உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. //கைப்புள்ளே கலக்கிட்டெ அப்பு. வாழ்த்துக்கள்.

    வவாசங்கத்துக்கும் ஒரு வாழ்த்து (மத்த சங்கங்க எல்லாம் கோவிச்சுக்கப்படாது). உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    வாங்க மஞ்சூர் ராசா!
    உங்க வாழ்த்துகளை எல்லாம் படிக்கும் போது மகிழ்ச்சியாயிருக்குங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  21. //வ.வா.ச அங்கத்தினர்கள் மட்டும் தான் நண்பர்கள்னா, அப்போ ப.ம.க., க.பி.க, மத்த கட்சி அங்கத்தினர்கள் எல்லாம் உங்க நிரந்தர எதிரி தானே?!?!//

    ஆனா இவங்க மட்டும் எங்க பெண்களூர் கொ.ப.செ.யுடம் ரகசிய சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவாங்க.

    வாள்க சனநாயகம்.

    ReplyDelete
  22. hello kaipulla
    epatiya ithu mathiri eluthiriunga
    valga umathu thondu

    ReplyDelete