Thursday, May 18, 2006

முட்டாய் எடுத்துக்கங்க

இண்டர்நெட்டை உபயோகிச்சு, யார் யாரோ என்னென்னமோ பண்ணறாங்க. நம்ம லெவலுக்கு நம்மால என்ன பண்ண முடியும்...வழக்கமா நாம போடற ப்ளடைத் தவிர?... ரொம்ப யோசிச்சதுல முட்டாய் கொடுக்கலாம்னு தோணுச்சு.

எதுக்கா? அதொன்னுமில்லீங்ணா...நம்ம "தம்ஃப்ரீ" (தடிப்பசங்கள்ல சின்னவரு)இப்ப முதுகலை சுளுக்கு டாக்டர் பட்டம் வாங்கறதுக்குத் தகுதியாயிட்டாரு...அதாவது Master of Physiotherapy பாஸ் பண்ணிட்டாரு. நெஜ முட்டாய் குடுக்கற அளவுக்குப் பக்கத்துல இல்லாததுனால இப்போதைக்கு டிஜிட்டல் முட்டாய் எடுத்துக்கங்க.

66 comments:

  1. என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிடு தலை!

    ReplyDelete
  2. தலை நீ இல்லாம ரொம்ப நாளா தடுமாறிப் போய்ட்டோம் தெரியுமா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

    மால்கேட்டுக்கே என்ன மராத்தான் மாதிரி ஓடியே போனியா தலை?

    ReplyDelete
  3. //என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிடு தலை!//

    ரொம்ப நன்றி தளபதியாரே!

    ReplyDelete
  4. //தலை நீ இல்லாம ரொம்ப நாளா தடுமாறிப் போய்ட்டோம் தெரியுமா?//
    நீங்க இல்லாமத் தான்யா நான் ரொம்ப ஆடிப் போயிட்டேன்...உடுக்கை இழந்தவன் கை போல.

    //மால்கேட்டுக்கே என்ன மராத்தான் மாதிரி ஓடியே போனியா தலை?//
    ஆமாய்யா! ஒரு ஆர்மோனியப் பொட்டியையும் கையில குடுத்து ரொம்பவே புழியுறாய்ங்கய்யா. இன்னும் கொஞ்ச நாள் தான். இப்ப சித்தூர்கட் வந்து சித்த நாள் தான் ஆகுதுன்றதால ஓபி அடிச்சிக்கினுருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல ஆர்மோனியப் பெட்டியை வச்சு பாடவச்சிருவாய்ங்கிய.

    ReplyDelete
  5. தலை,

    என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிடு

    ReplyDelete
  6. சின்னவருக்கு நம்ம வாழ்த்த சொல்லிடுங்க! கைபுள்ளயை காணும்ன உடனே ஆளாலுக்கு என்னனமோ நடத்துறாங்க. வந்து கவணிங்க தல!

    ReplyDelete
  7. //தலை,

    என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிடு//

    வாங்க பேராசிரியரே!
    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  8. //சின்னவருக்கு நம்ம வாழ்த்த சொல்லிடுங்க!//
    வாங்க சிங்கு! கண்டிப்பா சொல்லிடறேன்.

    //கைபுள்ளயை காணும்ன உடனே ஆளாலுக்கு என்னனமோ நடத்துறாங்க. வந்து கவணிங்க தல!//
    யாரு...யாரு! எல்லாம் பயந்தாங்கொள்ளி பயலுவ...நம்ம தலையைக் கண்டதும் பம்மிட்டானுவ. நாம இருக்கும் போது உசுருக்கு உத்திரவாதம் இல்லைன்னு தெரிஞ்சதுனால பயப்படுறானுங்க போல.

    ReplyDelete
  9. ரொம்ப தான் குசும்பு உமக்கு. இப்படி தான் மொழி பெயர்ப்பதா?
    சுளுக்கு எடுக்குறது மட்டும் அவங்க வேலை இல்ல. சுளுக்கு எடுப்பது அவர்க்கள் வேலையில் ஒன்னு.
    உம்மை சுளுக்கு எடுக்கனும் முதல
    நம்ம வாழ்த்துக்களை சொல்லிறங்க அப்பு!

    ReplyDelete
  10. "தம்ஃப்ரீ"க்கு வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை சார்பில் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  11. //இப்படி தான் மொழி பெயர்ப்பதா?
    சுளுக்கு எடுக்குறது மட்டும் அவங்க வேலை இல்ல. சுளுக்கு எடுப்பது அவர்க்கள் வேலையில் ஒன்னு.
    உம்மை சுளுக்கு எடுக்கனும் முதல
    நம்ம வாழ்த்துக்களை சொல்லிறங்க அப்பு!//

    ஹி...ஹி...உண்மை தானுங்க. அவனை வெறுப்பேத்த காலேஜ் சேந்த புதுசுல ஜெண்டில்மேன் படத்துல மனோரமா சொல்ற மாதிரி "வாடி என் சுளுக்கு டாக்டர்"னு சொல்றது வழக்கம். இப்ப அவன் பக்கத்துல இருந்தா கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி எனக்கு சுளுக்கு எடுக்கப்படற அபாயம் உண்டு :)

    வாழ்த்துகளுக்கு நன்றி சிவா சார்.

    ReplyDelete
  12. //"தம்ஃப்ரீ"க்கு வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை சார்பில் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா. //

    வாங்க ராஜா,
    நீங்க இதுக்கு முன்னாடி என் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்துக்கு பதிலளிக்க முடியலை. மன்னிக்கனும். அதையெல்லாம் மனசுல வச்சுக்காம வந்து வாழ்த்தியிருக்கீங்க. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  13. இளைய "தல" க்கு வாழ்த்த சொல்லிடுங்க "தல".

    பாத்து "தல" எப்படி "சுளுக்க" எடுக்கனம்னு எதிர் கட்சி ஆளுங்களுக்கு சொல்லி குடுத்துட போறாரு.

    ReplyDelete
  14. வாங்க தலை நீங்க இல்லாம கட்சியை நடத்த ரொம்ப தடுமாறிட்டோம். தேவால அடி தாங்க முடியலை. தம்பிக்கு வாழ்த்து சொல்லிடுங்க. தம்பி physiotheraphy எல்லாம் படிச்சி இருக்காரு இதுக்கு மேல எவ்வளவு அடி வாங்கினாலும் அவர் சரி செய்து விடுவாரு கவலைப்படாதிங்க.

    ReplyDelete
  15. நல்லாச் சுளுக்கெடுங்கோ!
    வாழ்த்துக்கள்!
    யோகன்
    பாரிஸ்

    ReplyDelete
  16. வாங்க ராஜா,
    நீங்க இதுக்கு முன்னாடி என் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்துக்கு பதிலளிக்க முடியலை. மன்னிக்கனும். அதையெல்லாம் மனசுல வச்சுக்காம வந்து வாழ்த்தியிருக்கீங்க. ரொம்ப நன்றி.

    அட விடு தல!!இதுக்குப்போய்
    ஃபீலீங்ஸ் ஆவுற?.நம்ம சங்கத்து கொள்கையே எதுக்குமே வருத்தப்பட கூடாதுங்கிறதுதான்னு தம்பி பாண்டி தெளிவா சொல்லிருக்கார்ல்ல!!!!!!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.
    (வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் கொள்கையை குன்றிலிட்ட விளக்கு தம்பி ஜொள்ளுப் பாண்டி வாழ்க!!!!.)

    ReplyDelete
  17. அந்த படத்துல அவங்க எப்பங்க இந்த டயாலக் சொன்னாங்க. அந்த படத்துல அவங்களுக்கு டயலாக் ரொம்ப கம்மி. எதாச்சும் கதை விட கூடாது. தட்டி கேட்க ஆளு இல்லாம வாய்க்கு வந்த எல்லாம் சொல்லுறதா. நாங்க வந்துடோம்ல, இனிமே பார்த்து, இல்லாட்டி ரத்த களறி ஆகிபுடம் சொல்லிட்டேன். அப்புறம் என் மேல் வருத்தபடக்கூடாது.

    ReplyDelete
  18. வருங்காலத்துல அண்ணன் எப்படியும் சுளுக்கோட வருவாருன்னு, நாம தான் அதை எடுத்து விடனும்னு தம்பிக்கு முன்னமே தெரிஞ்சுருக்கு போல.. குறிப்போட படிச்சிருக்காரு..

    ம்ம்.. கைபுள்ள.. இனி என்ன கவலை.. தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. கலக்குங்க.. :)

    அப்படயே நம்ம வாழ்த்தையும் சொல்லிடுங்க..

    ReplyDelete
  19. Raasaa maadhiri edho news solreengalonnu nenechen, unga thambikku vaazhthukkal. Master of Physiotherapykku thamizh aakam sooper :)

    ReplyDelete
  20. //பாத்து "தல" எப்படி "சுளுக்க" எடுக்கனம்னு எதிர் கட்சி ஆளுங்களுக்கு சொல்லி குடுத்துட போறாரு.//

    நீங்களே சொல்லி குடுத்துடுவீங்க போலிருக்கே? என்னமோ நமக்கு சுளுக்கு எடுக்கறதுன்னா ஒவ்வொருத்தருக்கும் அம்புட்டு சந்தோசம்?

    ReplyDelete
  21. //தம்பி physiotheraphy எல்லாம் படிச்சி இருக்காரு இதுக்கு மேல எவ்வளவு அடி வாங்கினாலும் அவர் சரி செய்து விடுவாரு கவலைப்படாதிங்க.//

    யப்பா...physiotherapy பாஸ் பண்ணதுக்கு முட்டாய் குடுத்தா...மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போட்டு நான் சொல்லாததையெல்லாம் பயங்கரமா யோசிக்கிறீங்களேப்பா...ஒங்கள மாதிரி சங்கத்துத் தங்கங்கள் இருக்குற வரைக்கும் எத்தனை சுளுக்கு டாக்டர் இருந்தாலும் நம்ம ஒடம்பு நிரந்தர ரணகளம் தான்.

    ReplyDelete
  22. //நல்லாச் சுளுக்கெடுங்கோ!
    வாழ்த்துக்கள்!
    யோகன்
    பாரிஸ்//

    மிக்க நன்றி யோகன்.

    ReplyDelete
  23. //அட விடு தல!!இதுக்குப்போய்
    ஃபீலீங்ஸ் ஆவுற?.நம்ம சங்கத்து கொள்கையே எதுக்குமே வருத்தப்பட கூடாதுங்கிறதுதான்னு தம்பி பாண்டி தெளிவா சொல்லிருக்கார்ல்ல!!!!!!!//

    நம்ம காலத்துக்கு அப்புறமும் சங்கம் கண்டிப்பா வெளங்கீரும்...சந்தேகமே இல்லை. நம்ம சங்கத்து ஆளுங்க எல்லாம் ரொம்ப வெவரமா இருக்காங்களேய்யா...அவ்வ்...அவ்வ்வ்

    ReplyDelete
  24. //இளைய "தல" க்கு வாழ்த்த சொல்லிடுங்க "தல".//

    :)))))

    ReplyDelete
  25. //அந்த படத்துல அவங்க எப்பங்க இந்த டயாலக் சொன்னாங்க. அந்த படத்துல அவங்களுக்கு டயலாக் ரொம்ப கம்மி. எதாச்சும் கதை விட கூடாது.//

    ஏனுங்க சிவா! நெறைய டூப்பு அடிப்போமின்னாலும், ஜெண்டில்மேன், மனோரமா அப்படின்னு இவ்வளவு குறிப்பா உதாரணம் குடுத்துட்டா டூப்பு அடிப்போம். சரி! அப்படியே அந்த படத்துல அந்த வசனம் இல்லன்னாலும், நான் சொந்தமா எழுதியிருப்பேன்னு நம்பறீங்க?பாலக்குமாரனோ, சுஜாதாவோ யாரோ எழுதுனதை சுட்டது தான். 'தல' மனசுலயும் மண்டையிலயும் ஒன்னுமில்லன்னு ஒங்களுக்குத் தெரிய தேவையில்லை? மாயவரத்துலேருந்து வேளாங்கண்ணி வரைக்கும் இருக்குற நம்ம ஆட்சியை, நாகப்பட்டிணத்தைத் தலைநகரா வச்சு ஒங்க பாதுகாப்புல் விடலாம்னு பாத்தா இப்படி கேட்டுப் புட்டீங்களே?

    ReplyDelete
  26. //ம்ம்.. கைபுள்ள.. இனி என்ன கவலை.. தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. கலக்குங்க.. :)

    அப்படயே நம்ம வாழ்த்தையும் சொல்லிடுங்க..//

    தம்பியுடையான் அடி உதைக்கு அஞ்சான்னு இருந்தா சரியா இருக்கும். சின்ன வயசுல தம்பி கிட்ட வாங்குன அடியால தான் இம்மாம் வயசுலயும் உரம் பாஞ்சு ஒடம்பு கும்முன்னு இருக்குப் பாருங்க.

    வாழ்த்துகளுக்கு நன்றி ராசா

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. //Raasaa maadhiri edho news solreengalonnu nenechen, unga thambikku vaazhthukkal. Master of Physiotherapykku thamizh aakam sooper :)//

    ராசா வயசுக்கு அவரு கண்ணாலம் பண்ணலாம்...பால் மணம் மாறாத நம்ம வயசுக்கு அந்த பேச்சை எல்லாம் எடுத்தா பால்ய விவாக தடை சட்டத்துல போலீசு உள்ளே வச்சிருவாங்க.

    ReplyDelete
  29. //இளைய "தல" க்கு வாழ்த்த சொல்லிடுங்க "தல".//

    :)))))
    //

    என்ன ச்சிரிப்பு...இல்ல என்ன ச்சிரிப்பு வேண்டிக் கெடக்கு ராஸ்கல்? கை, தளபதி, வெவசாயி, பாண்டி, பேராசிரியர், பொன்ஸ்னு நீங்கல்லாம் இருக்கும் போது எப்படிய்யா அவன் சின்ன தல ஆவான்? நம்ம சங்கத்துல நோ குடும்ப அரசியல்...இன்னொரு தரம் இப்படி பேச்சு அடிபட்டுச்சு...பிச்சிப் புடுவேன் பிச்சு.

    ReplyDelete
  30. //வாழ்த்துக்கள்//

    இந்த பக்கம் நானு...அந்த பக்கம் யாருன்னு? கேட்ட அதே ஞானப் பிழம்பு "நானே" தானுங்க நீங்க? க.பி.கவிலிருந்தும் வாழ்த்து வந்துருச்சு டோய்.

    ReplyDelete
  31. தலை...

    இப்பல்லாம் நீ தும்மனாலே கை கால் அமுக்கரதுக்கு எம்பிளாயி ரெடியா இருக்குதுங்கோ...

    ReplyDelete
  32. //மாயவரத்துலேருந்து வேளாங்கண்ணி வரைக்கும் இருக்குற நம்ம ஆட்சியை, நாகப்பட்டிணத்தைத் தலைநகரா வச்சு ஒங்க பாதுகாப்புல் விடலாம்னு பாத்தா இப்படி கேட்டுப் புட்டீங்களே?//
    ஆகா! தல சொல்லிட்டிங்கள, இனி கவலையே படாதீங்கா. உங்க பெயர நாகை மாவட்டத்துல நிலை நிறுத்த வேண்டியது இனி நம்ம வேலை. நாகை மக்களே, நம்ம மாவட்டத்துல இருந்து யாருச்சும் தலய பத்தி தப்பா பேசுனா, நம்ம கிட்ட சொல்லுங்க. கல்ல கட்டி கடல் இறக்கிடலாம்.........
    தல, ஏதா இருந்தாலும் சொல்லுங்க, செஞ்சிப்புடலாம். அப்படியே நாகை மாவட்ட பதவியை பத்தி கொஞ்சம் நினைப்பு வச்சுங்க...........

    ReplyDelete
  33. // என்ன ச்சிரிப்பு...இல்ல என்ன ச்சிரிப்பு வேண்டிக் கெடக்கு ராஸ்கல்? கை, தளபதி, வெவசாயி, பாண்டி, பேராசிரியர், பொன்ஸ்னு நீங்கல்லாம் இருக்கும் போது எப்படிய்யா அவன் சின்ன தல ஆவான்? நம்ம சங்கத்துல நோ குடும்ப அரசியல்...இன்னொரு தரம் இப்படி பேச்சு அடிபட்டுச்சு...பிச்சிப் புடுவேன் பிச்சு. //

    ஆமாம் முதல்ல இப்படித்தான் சொல்வீங்க. ஆனா அப்றம் கட்சித் தொண்டர்கள் எல்லோரும் விருப்பப்பட்டாங்க, செயற்குழு முடிவிற்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவீங்க

    ச்ச்ச்சும்ம்ம்மாஆஆஆ டமாசுக்கு
    :-)))

    ReplyDelete
  34. //ஆமாம் முதல்ல இப்படித்தான் சொல்வீங்க. ஆனா அப்றம் கட்சித் தொண்டர்கள் எல்லோரும் விருப்பப்பட்டாங்க, செயற்குழு முடிவிற்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவீங்க//

    :- )))))))))))))))))))))))))))))
    )))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  35. //இப்பல்லாம் நீ தும்மனாலே கை கால் அமுக்கரதுக்கு எம்பிளாயி ரெடியா இருக்குதுங்கோ... //

    "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு"

    எல்லாம் அன்பு தானுங்க :)-

    ReplyDelete
  36. //:- )))))))))))))))))))))))))))))
    )))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    எலே பார்த்திபா! ஒனக்கு ச்சிரிப்பு வந்துச்சுன்னா ஒரு முட்டுச் சந்துல ஓரமா நின்னுச் சிரிச்சுக்க...வியாவாரம் நடக்குற எடத்துல புள்ளங்களுக்கு இந்த சிரிப்பு காட்டுற வேலையெல்லாம் வேணாம்...அப்புறம் நல்லாருக்காது.

    ReplyDelete
  37. //தல, ஏதா இருந்தாலும் சொல்லுங்க, செஞ்சிப்புடலாம். அப்படியே நாகை மாவட்ட பதவியை பத்தி கொஞ்சம் நினைப்பு வச்சுங்க...........//

    ரொம்ப ஆஸ் பட்டு கேட்டுட்டே...நாகப்பட்டிணம் இனி ஒனக்குத் தான். வேற ஏதாவது ஜில்லா வேணுமின்னாலும் கூச்சப்படாம கேட்டு வாங்கிக்கப்பா.

    ReplyDelete
  38. //ஆமாம் முதல்ல இப்படித்தான் சொல்வீங்க. ஆனா அப்றம் கட்சித் தொண்டர்கள் எல்லோரும் விருப்பப்பட்டாங்க, செயற்குழு முடிவிற்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவீங்க//

    சே! இப்படி ஒரு அவச்சொல்லா? இதை போக்க டீ குளிக்கவும் நான் தயார்.

    ReplyDelete
  39. //இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!//

    இனிமே ஓசியா உடம்ப ரிப்பேர் பன்னிக்கலாம்.

    நீங்க நல்லவரு..அதனால தான் இப்படியெல்லாம் நடக்குது! பாருங்க எத்தன அடி வாங்குனாலும் இனி பிரச்சனை இல்லை.

    ReplyDelete
  40. கைப்புள்ள,

    எல்லாம் வெவரமாத்தான்யா இருக்கீங்க...

    பின் விளைவுகள முன்கூட்டியே யோசிச்சி தம்பிய சுளுக்கெடுக்க தயார் பண்ணீட்டீங்க போல...

    என்னோட வாழ்த்துக்களை தடிப்பசங்களில் சின்னவருக்கு சொல்லீடுங்க.

    ReplyDelete
  41. தன்மான சிங்கமே! நாகை மாவட்ட பொருப்பை என்னிடம் கொடுத்தற்கு நன்றி. இட்ட பணியை திறம்பட செய்து, வெற்றிகளை உன் பாதத்தில் சமர்ப்பிப்பேன். அஞ்சா நெஞ்சன் கைப்பு புகழை நாகையில் பரப்புவது தான் முதல் வேலை.

    ReplyDelete
  42. சுளுக்கு டாக்டரு. நல்ல பேருங்க கைப்பு. இது என்னோட பஸ்ட் கமெண்டு, ஆனா முன்னாடியே உங்க காலுக்கு நடுவுல வர்ற வெளிச்சத்தை பார்த்து அசந்திருக்கேன். உங்க ரவுசு தாங்கமுடியலனு எல்லாரும் பேசிக்கிறாங்க.

    ReplyDelete
  43. //நீங்க நல்லவரு..அதனால தான் இப்படியெல்லாம் நடக்குது! பாருங்க எத்தன அடி வாங்குனாலும் இனி பிரச்சனை இல்லை.//

    ...நல்லவரு...அதோட ரொம்ப இளகுன மனசுகாரரு. பாருங்க உங்க பின்னூட்டத்தைப் பாத்து கண் கலங்கி போச்சு...அவ்வ்வ்.

    ReplyDelete
  44. //எல்லாம் வெவரமாத்தான்யா இருக்கீங்க...

    பின் விளைவுகள முன்கூட்டியே யோசிச்சி தம்பிய சுளுக்கெடுக்க தயார் பண்ணீட்டீங்க போல...//

    வாங்க கோபி! உங்க பாராட்டுகள் எல்லாம் நம்மள பெத்தவங்களையே சேரும். ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னுங்கிற மாதிரி தான் இதுவும்...

    ReplyDelete
  45. //அஞ்சா நெஞ்சன் கைப்பு புகழை நாகையில் பரப்புவது தான் முதல் வேலை. //

    ரேய்...ரேய்
    :)

    ReplyDelete
  46. //thambikku vazhthukkal//

    தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாவை.

    ReplyDelete
  47. //சுளுக்கு டாக்டரு. நல்ல பேருங்க கைப்பு. இது என்னோட பஸ்ட் கமெண்டு//
    வாங்க வெங்கட்ரமணி! தங்கள் வருகைக்கும் முதல் கமெண்டுக்கும் மிக்க நன்றி.

    //ஆனா முன்னாடியே உங்க காலுக்கு நடுவுல வர்ற வெளிச்சத்தை பார்த்து அசந்திருக்கேன்//
    அதுக்கு நீங்க படம் எடுத்த அந்த புண்ணியவானைத் தான் பாராட்டணும்.

    //உங்க ரவுசு தாங்கமுடியலனு எல்லாரும் பேசிக்கிறாங்க.//
    இல்லீங் அப்பிடியெல்ம் ஒன்னுமில்லீங்...நா ரொம் அடக்கமான்
    புள்ளைங்...இனிம் இப்ப்ட் நடக்காம் பாத்துக்றேங்.

    ReplyDelete
  48. //அதுக்கு நீங்க படம் எடுத்த அந்த புண்ணியவானைத் தான் பாராட்டணும்.
    //

    :-)))))

    ReplyDelete
  49. ////உங்க ரவுசு தாங்கமுடியலனு எல்லாரும் பேசிக்கிறாங்க.//

    என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க! எங்க தலை வெளியில கிளம்பினா எத்தனை தலை உருளும்ணு தெரியுமா அப்பூ?

    என்ன? சின்னப் பிள்ளைத்தனமா கேட்டுப்புட்டீரு! ராஸ்கல்!

    :-)

    ReplyDelete
  50. ////அதுக்கு நீங்க படம் எடுத்த அந்த புண்ணியவானைத் தான் பாராட்டணும்.
    //

    :-)))))//

    பாருங்கையா பாருங்க! நம்ம சங்கத்து ஆளுங்களோட குழந்தை மனசை பாருங்க. தல ஆப்பு வாங்குனாலும் சிரிப்பு, இவுங்களே ஆப்பு வச்சாலும் வச்சிட்டு ஒரு சிரிப்பு, கமெண்டுக்கும் சிரிப்பு, கமெண்டோட பதிலுக்கும் சிரிப்பு.

    கண்ணுங்களா ! இப்பிடி தான் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கோணும். அது தலயோட ஆசை. ரைட்டா?

    ReplyDelete
  51. //என்ன? சின்னப் பிள்ளைத்தனமா கேட்டுப்புட்டீரு! ராஸ்கல்!

    :-) //

    தளபதி சிபி! நாம சங்கத்துக்குள்ள எப்பிடி வேணா பேசலாம், அடிச்சிக்கலாம் புடிச்சிக்கலாம், அவனே இவனேன்னு செல்லமா கொஞ்சிக்க்கலாம். அதே மாதிரி நம்ம ஊட்டாண்ட வர்றவங்க கிட்ட பேசுனா கோச்சுக்குவாங்கய்யா...பாத்து மெயிண்டேன் பண்ணிக்க. இப்ப பாரு நீ ராஸ்கல்னு பொதுவா சொன்னதை ரமணி சார் தப்பா புரிஞ்சிக்க சான்சு இருக்குல்ல...அப்பிடியெல்லாம் பேசப்பிடாதய்யா. அப்புறம் நா இல்லாத நேரமா பாத்து ஒங்க் எல்லாத்தியும் புடிச்சு ஓல்சேல்ல ஆப்பு வச்சிருவாங்கிய. அப்ப வலிக்குதுன்னு அழுதீங்கன்னா தலயால ஒன்னியும் பண்ண முடியாது.

    ReplyDelete
  52. நம்ம சிபிக்கு எம்மேல என்ன கோவமோ தெரியுல ;-) ஆனாலும் சிபி சொன்னா நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்ல.

    ReplyDelete
  53. நான் ரவுசுன்னு சொன்னதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தல. நானும் உங்க ரசிகன்தான். கொஞ்சநாள்ல வ.வா சங்கத்துல சேரலாமான்னும் யோசிச்சுக்கிட்டுருக்கேன்!

    ReplyDelete
  54. கைப்பு
    ரொம்பநாளா அப்ஸ்கான்ட் ஆயிட்டியே தலை.வருத்தப்படாத வாலிபர்கள் எல்லாரும் வருத்தப்பட ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா?எப்பருந்து பதிவுக்கு ரெகுலரா வர்ரதா உத்தேசம்?

    ReplyDelete
  55. //நம்ம சிபிக்கு எம்மேல என்ன கோவமோ தெரியுல ;-)//

    இல்லீங்க அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. சாமியைக் கூட "பித்தா பிறைசூடி பெருமானே"னு சொல்லலியா? அது மாதிரி தான் இதுவும். பாசத்தின் மிகுதியில ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா வந்துட்டுது.

    ReplyDelete
  56. //நான் ரவுசுன்னு சொன்னதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தல.//
    தப்பா நீங்க எதுவும் சொல்லலியே?

    //நானும் உங்க ரசிகன்தான்//
    ஆஹா...அடியேன் தன்னியன் ஆனேன்!

    //கொஞ்சநாள்ல வ.வா சங்கத்துல சேரலாமான்னும் யோசிச்சுக்கிட்டுருக்கேன்! //
    வாங்க...வாங்க

    ReplyDelete
  57. //எப்பருந்து பதிவுக்கு ரெகுலரா வர்ரதா உத்தேசம்?//

    வாங்க செல்வன்! அடுத்த தடவை அப்ஸ்காண்ட் ஆகற வரைக்கும் ரெகுலர் தான்
    :)-

    என்னங்க திடீர்னு உங்க ப்ரொஃபைல்ல தொங்கற சிக்கன் படத்துக்குப் பதிலா மேஜர் ஜென்ரல் பாலகிருஷ்ணா படம் போட்டிருக்கு? ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லறீங்களா:)

    அப்புறம் தமிழ்நாடு,ஸ்டூடண்ட்னு போட்டிருக்கு? சும்மா உலூலூங்காட்டிக்கும் தானே?

    ReplyDelete
  58. //இப்ப பாரு நீ ராஸ்கல்னு பொதுவா சொன்னதை ரமணி சார் தப்பா புரிஞ்சிக்க சான்சு இருக்குல்ல...அப்பிடியெல்லாம் பேசப்பிடாதய்யா.//

    //நானும் உங்க ரசிகன்தான். கொஞ்சநாள்ல வ.வா சங்கத்துல சேரலாமான்னும் யோசிச்சுக்கிட்டுருக்கேன்!//

    நம்ம சங்கத்து ஆளுன்னுதான் கொஞ்சம் உரிமையா பேசிப்புட்டேன் தலை!
    :-)

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள் கைப்புள்ள..

    அவருக்கும் என் சார்பா அல்வா கொடுங்க சரியா.. ( நாங்க திருநெல்வேலிகாரவுல அப்படித்தான் கொடுப்போம் )

    ReplyDelete
  60. ஒரு இளைஞன் ஒரு இளைஞி கைய்யால தான் முட்டாய் சாப்பிடனும்...ஏன்னா இது வாலிப வயசு...

    இப்பிடி முட்டாய் துன்ன கட்டாயப்படுத்தற தலை நீ...

    உன் முட்டாய் எனக்கு வேனாம் போ..நான் பேசாம கட்டதுரை கிட்டெ போய் சேந்திடுரேன்...

    ReplyDelete
  61. //உன் முட்டாய் எனக்கு வேனாம் போ..நான் பேசாம கட்டதுரை கிட்டெ போய் சேந்திடுரேன்//

    வாங்க செந்தழல் ரவி! யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்!

    ReplyDelete
  62. //நம்ம சங்கத்து ஆளுன்னுதான் கொஞ்சம் உரிமையா பேசிப்புட்டேன் தலை!
    :-)//

    ஓகே...லூஸ்ல வுடுப்பா!

    ReplyDelete
  63. //அவருக்கும் என் சார்பா அல்வா கொடுங்க சரியா.. ( நாங்க திருநெல்வேலிகாரவுல அப்படித்தான் கொடுப்போம் ) //

    முட்டாய் கொடுத்தா அல்வா கொடுக்கும் பெரிய மனுசன் யாருங்கோ?
    அண்ணாச்சி நெலவு நண்பன் தானுங்கோ?

    வாழ்த்துகளுக்கு நன்றி ஞானியாரே!

    ReplyDelete
  64. //உன் முட்டாய் எனக்கு வேனாம் போ..நான் பேசாம கட்டதுரை கிட்டெ போய் சேந்திடுரேன்...//

    செந்தழலு, ரவின்னு வெளிச்சமா பேரு வச்சிக்கிட்டு இப்பிடி ஒரு இருட்டான முடிவை எடுக்கிறியேயா...தப்பு பண்றே ராசா...தப்பு பண்றே! நீ எளநி கேட்டாலே அவனால வாங்கி குடுக்க முடியாது...இளைஞி கேட்டா? வேணாம்யா இந்த நாதாரி பொழப்பு ஒனக்கு வேணாம்.

    ReplyDelete
  65. //வாங்க செந்தழல் ரவி! யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்! //

    மொதல்ல வெல்கமுக்கு ஸ்பெல்லிங் சொல்லிட்டு எங்காளைக் கூட்டிட்டு போய்யா...வந்துட்டானுங்க வெல்கம்ம? பிச்சிப் புடுவேன் பிச்சி படுவா.

    ReplyDelete