கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கனவு...கொஞ்ச நாள் என்ன கொஞ்ச நாள்? முந்தா நேத்து... சனிக்கிழமை தான். கடந்த இரண்டாண்டு காலமா தூக்கத்துல கனவு எதுவும் வந்ததா ஞாபகம் இல்லை. ஆனா இதே போலொரு சம்பவம் நமக்கு ஏற்கனவே நடந்திருக்கே...எதிர்ல இருக்குறவரு கேட்ட கேள்விக்கு இதே மாதிரியான பதிலை நாம ஏற்கனவே எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன ஞாபகம் இருக்குதே என்று சொல்லக் கூடிய மாதிரியான "தே ஜா வூ"(De ja vu feeling ) பலமுறை வந்திருக்கு. நம்மள்ல பல பேருக்கும் இந்த தே ஜா வூ வந்திருக்கும். ஆனா நம்ம கனவு கொஞ்சம் வித்தியாசமானது. என்னாங்குறீங்களா?
நான் வீட்டுல உக்காந்திருக்கேன். திடீர்னு வீட்டுக்குள்ள ஒரு குரங்கு புகுந்துடுது. மேலேயும் கீழேயும் தாவிக் குதிச்சு ரொம்ப அட்டகாசம் பண்ணுது. வீட்டுலே வேற யாரும் இருக்குற மாதிரி தெரியலை. குரங்கை நான் தான் தனியா சமாளிக்கணும் போல இருக்கு. அப்ப கையில கிடைச்ச ஒரு துடைப்பத்தை எடுத்துக் காட்டி சூ...சூ...போ...போன்னு அதை விரட்டறேன். அதுவும் நான் என்ன பண்ணறேனோ அதே மாதிரி பண்ணுது. அது கையில மாட்டுன ஒரு பொருளைக் காட்டி என்னை அது விரட்டுது. நம்ம மேலே, அந்தப் பொருளை எடுத்து வீசிடுச்சுன்னா என்ன பண்ணறதுன்னு நெனச்சு கையில இருக்குற துடைப்பத்தைக் கீழே போட்டுட்டு சின்னப் பசங்க சொல்ற மாதிரி தலையைச் சாய்ச்சு "சீ...போ"னு சொல்றேன். அதுவும் என்னை மாதிரியே தலையைச் சாய்ச்சு சீ...போன்னு சொல்ல முயற்சி பண்ணுது. ஆனா பாவம் அந்த குரங்குக்கு தமிழ் தெரியாது போலிருக்கு... அதனால தலையை மட்டும் அதே ஸ்டைல்ல சாய்ச்சுக்குது. அப்புறம் குரங்கு ஓட அது பின்னாடி நான் ஓட இப்படின்னு கொஞ்ச நேரம் வீட்டுல ஒரே களேபரமா இருக்கு. எப்படியோ கஷ்டப்பட்டு அதுக்கு வாசக் கதவு வழியைக் காட்டிட்டு சோபாவுல வந்து உக்காருறேன். ஆனா பாருங்க அவசரத்துல கதவைச் சாத்த மறந்துட்டேன். திரும்பவும் குரங்கு உள்ள வருது. அதோட கால்ல எதோ கட்டியிருக்கு. சந்திரமுகி ஜோதிகா கணக்கா அது காலை ஆட்டிக் காட்டனதை யோசிச்சா, அது கால்ல சலங்கை தான் கட்டியிருக்கணும். கொஞ்ச நேரம் பழிச்சுக் காட்டிட்டு குரங்கு வாசக் கதவு வழியா ஓடிப் போயிடுது.
இப்ப நான் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திட்டு வந்து உக்காருறேன். அப்பாடான்னு உக்காருறதுக்குள்ள எங்கிருதோ ஒரு வெண்டிலேட்டர் வழியா இப்ப ஒரு குட்டிக் குரங்கு உள்ள வந்துடுது. முன்ன வந்த சந்திரமுகி குரங்கை விட இது ரொம்ப விஷமம் பண்ணுது. திடீர்னு பாத்தா என் தலைமுடியைப் பிடிச்சு இழுக்குது. தலைமுடியை விடுன்னு கத்தலாம்னு நெனக்கிறதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடுது. அட சே! என்ன ஒரு விசித்திரமான கனவு. அதுவும் மால்கேட்டை விட்டுப் போகப் போகும் கடைசி நாளில். யாருக்காச்சும் அந்த "ஜோதிகா"வைப் பத்திச் சொல்லணும்னு தோணுனதுனால அதிகாலையில அம்மா வீட்டுக்குப்(ஏன் இந்த வார்த்தையைப் பொண்ணுங்க மட்டும் தான் சொல்லணுமா...நாங்களும் சொல்லுவோம்) போன் பண்ணறேன். அவங்க அவசரமா அப்ப கோயிலுக்குக் கிளம்பிட்டிருக்குறதுனால அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.
அதுக்கப்புறம் மால்கேட்டை (Malkhed) விட்டுக் கிளம்பி வந்துட்டேன். நம்ம க்ளையண்ட் மால்கேட் மாதிரி சித்தூர்கட்(Chittorgarh) என்ற இன்னுமொரு குளிர் பிரதேசத்திலும்(!) சிமெண்ட் ப்ளாண்ட்டைக் கட்டி வைத்திருப்பதால், தம்பி உன் சேவை அங்கே ஆகஸ்ட் வரை தேவை அப்படின்னு எங்க ப்ராஜெக்ட் மானேஜர் என்னை அங்கே அனுப்பி வச்சிட்டாரு. சித்தூர்கட்னா சென்னையிலிருந்து பாரதிவேலு பஸ் சர்வீஸ்னு ஒரு பஸ் போகுதே அந்த ஊரான்னு கேக்கப் பிடாது. அது சித்தூர்...இது சித்தூர்கட். அது ஆந்திரா...இது ராஜஸ்தான். மால்கேட்டிலிருந்து சித்தூர்கட் போகும் வழியில் மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு லேப்டாப்பில் ப்ளேடு போட்டுக் கொண்டிருக்கிறேன். இண்டர்நெட் கிடைச்சதும் நம்ம பிளேடு உங்களுக்காக ப்ளாக்கரில் அரங்கேறும்.
சரி! யாராச்சும் சிக்மண்ட் ஃப்ராய்டின் இண்டர்பிரெடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்(Interpretation of Dreams) படிச்சிருக்கீங்களா? படிச்சிருந்தீங்கனா என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீத்து வையுங்கண்ணே! இது தான் சாக்குன்னு போடா கோமுட்டித் தலையானு திட்டப் படாது. ஏன்னா இந்த குரங்கு மேட்டர்ல எனக்கு எதோ ஒரு விட்டக்குறை தொட்டக்குறை இருக்கறதா ஒரு நம்பிக்கை. உடனே என்னை வேட்டைய மகாராஜாவாக்கி ஒரு கதை எழுதிடாதீங்கப்பா(யப்பா பார்த்தீ...கட்டதுரை உங்களுக்குத் தான் இது). ஏன்னா ப்ளாக்கரே வாழ்க்கை என்று இந்தூரில் உக்காந்திருந்த அடியேன், இப்போ ஒரு பின்னூட்டம் போடுவதற்குக் கூட கஷ்டப் பட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். செங்கல் வச்சு வீடு கட்ட வேண்டிய கொத்ஸு புரோட்டா மாஸ்டர் ஆனதையும், தமக்கையாருக்காகத் தன் ஜொள்ளு விரதத்தைத் துறந்த ஜொள்ளுப் பாண்டியின் தியாக உள்ளத்தையும், புது வெண்பா வாத்தியாரம்மாவான தங்கச்சி பொன்ஸ் 100 அடிச்சதையும், நமக்கு சோறு போடும் பர்சேஸ் ஆர்டரையும், குட்ஸ் ரெசிப்டையும் ஓரங்கட்டிவிட்டு மாட்யூல் லீடருக்கும் கல்தா கொடுத்துவிட்டு திருட்டுத் தனமா நுனிப்புல் மேஞ்சாலும் பின்னூட்டம் போடுவது என்பது இருக்குற டென்சனுக்கு இடையே புது வேலைக்கே உலை வைக்கும் விசயமாகி விடக் கூடும் என்பதால் கையைக் கஷ்டப் பட்டு கட்டி வைத்துக் கொண்டு உக்காந்திருக்கிறேன். ஏன்னா பின்னூட்டம் போடுவது நமக்கு மிகவும் பிடித்தமான விசயம்...உயிரைக் குடுத்து ஒருத்தர் எழுதியிருக்குற எடத்துல எதாச்சும் ஒளறி வச்சிட்டு ஓடியாந்துடலாம். அதுக்கு அவரும் நம்மளை மதிச்சு எதாச்சும் பதில் குடுத்தாருன்னா மறுபடியும் ஒரு ஒளறல்...இதை இப்படியே i=1 to infinityன்னு லூப்ல போட்டு ஓட விட்டோம்னா பொழுது போற வரைக்கும் ஆபீஸ்ல ஒரே கிளு கிளுப்பா இருக்கும்(வேணா நீங்களும் செஞ்சு பாருங்க). ஆனா பதிவு எழுதுறது அப்படியில்லை...கொஞ்சூண்டு இருக்குற மூளையையும் கசக்கிப் பிழிஞ்சாத் தான் நம்ம தகுதிக்கு நாலு வரியாச்சும் தேத்த முடியும். ராத்திரி ஒரு மணிக்கு ஆபிசுலேருந்துத் திரும்ப வந்து எதாச்சும் இளையராஜா பாட்டு வரும்னு சன் டிவியை வச்சா அந்த நேரத்துலேயும் மூக்களகியும் ஆனந்தமும் வந்து இம்சை குடுக்கறாங்க. அந்த ஆனந்தத்துலேயே ஆபிசுலேருந்து வீட்டுக்குத் திரும்பனதும் பதிவெழுதறது எல்லாத்தையும் மறந்துட்டுத் தூங்கிடுவேன்.
விட்டக்குறை தொட்டக்குறை என்னன்னு கூர்ந்து கவனித்து கேட்க நினைக்கும் ஷார்ப்பான பார்ட்டிங்களுக்காக - இந்தூரில் நான் என் முந்தைய கம்பெனியில் இருந்த கடைசி சில நாட்களில் ஒரு நாள், ஒரு குரங்கு ஆபிசுக்குள்ள புகுந்துடுச்சு. குரங்கா...அதுவும் ஆபிசுக்குள்ளேயா? இது கதையல்ல...கனவுமல்ல...நிஜம். உற்பத்தி நடக்கும் தொழிற்சாலைகள் யாவும் குரங்குகளும், பாம்புகளும் கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் ஏனைய பிற உயிரினங்களும் புழங்கும் இடங்கள் என அறிவாய் டைடல் பார்க்கிலும், நாவலூரிலும், சோழிங்கநல்லூரிலும் ஜாவா கோட் எழுதும் மானிடனே! மனுசனே ஸ்வைப் கார்ட் இல்லாம உள்ளே நுழைய கூடிய இடங்களில் குரங்குக்கு என்ன தடை? அதான் அது கிட்ட ஸ்வைப் கார்ட் இல்லாம போனாலும் சுலபமா உள்ளே நுழைஞ்சிடுச்சு, குரங்குன்னா இராம.நாராயணன் படத்துல வர்ற சிகப்பு முகம் கொண்ட "ஆடு ராமா ஆடு " குரங்கு கிடையாது. கிண்டி சிறுவர் பூங்காவில் சிங்கவால் குரங்குன்னு ஒரு குரங்கோட படம் இருக்கு(போய் பாருங்க)...அந்த மாதிரியான கிட்டத்தட்ட நான்கடி உயரம் கொண்ட கொஞ்சம் கூட பஞ்சத்தில அடிபடாத திடகாத்திரமான கறுப்பான முகம் கொண்ட ஒரு குரங்கு தான் உள்ளே புகுந்துச்சு. உள்ளே வந்த குரங்கு எனக்கு நேர் எதிரில் இருக்குற ஃபைல் அடுக்கி வைக்கிற ஒரு கேபினெட்டின் மேலே ஏறி உக்காந்துக்கிச்சு.
அந்த கம்பெனியில் என்னோட கடைசி சில நாட்கள் என்பதால் நண்பர்களோடு புகைப்படம் எடுப்பதற்காக எடுத்து வந்திருந்த என் கேமரா என் பையிலேயே இருந்தது. அந்த நேரத்திலும் "கேபினெட் மேல் குரங்கு" என்ற தலைப்பில் ஒரு போட்டோ பதிவு போடலாம் என்ற ஒரு பிரகாசமான ஐடியாவை நம்ம மூளை நமக்குக் கொடுத்தது. எனக்கு முன்னாடி இருந்த க்யூபிக்கிள் காலியாக இருந்துச்சு...பாஸ்ஸுங்க தான் எப்பவும் மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவாங்களே. இந்த விஷயத்திலும் அது உண்மையாயிடுச்சு. நம்மளை மாதிரி இன்னும் ரெண்டு பேரு நம்ம பின்னாடி க்யூபிக்கிள்ல உக்காந்து இருக்கானுங்க. சரின்னு கேமராவை எடுக்க பையைக் கூட தொறந்திட்டேன். திடீர்னு குரங்கு நற நறன்னு பல்லைக் கடிக்குது. அது பல்லைக் கடிக்கிற சத்தம் நல்லாத் தெளிவாக் கேக்குது. அப்பத் தான் குரங்கை யாரும் ரொம்ப நாளா நகம் வெட்டச் சொல்லிக் கட்டாயப் படுத்தலைங்கறதையும் கவனிச்சேன். குரங்கைப் படம் எடுக்கப் போய் புது கம்பெனியில் சேர்றதுக்கு முன்னாடி நம்ம படத்துக்கு மாலை போடற மாதிரி ஆகிடக் கூடாது என்பதற்காக குரங்கைக் கண்டும் காணாமல், அப்போது என் கம்ப்யூட்டரில் திறந்திருந்த தமிழ்மணத்தையும், யாஹூ மெசஞ்சரையும் மாற்றி மாற்றி க்ளிக்கி கொண்டு உக்காந்திருக்கிறேன். வேலை செய்பவர்களைக் குரங்கு தொந்தரவு செய்யாது என்ற ஒரு எண்ணத்தில். அப்போது என்னை கவனிச்ச, (குரங்கிலிருந்து பாதுகாப்பான தொலைவில்) இருந்த ரெண்டு மூனு பேரு நான் குரங்கைக் கவனிக்கலைன்னு நினைச்சு அங்கே பாரு குரங்கு குரங்குன்னு என்ன பார்த்து கையை காட்டுறானுங்க. அடப் பாவிங்களா! நீங்க கையைக் காட்டுறதைப் பாத்து குரங்கு இறுக்கி அணைச்சு உம்மா கிம்மா கொடுத்துடுச்சுன்னா என்ன பண்றதுன்னு நெனச்சதும் குருதிப்புனல் படத்துல ஆதி "பயம்னா வீரம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு" சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்படியே கொஞ்சம் நேரம் வீரம் இல்லாத மாதிரி நடிச்சிக்கிட்டும் கிளிக்கிக் கொண்டும் உக்காந்திருக்கோம் நாங்க மூணு பேரும்.
"கைப்புள்ள ஒன்னோட கண்ணுல பயம் தெரியுது. அதை நான் பார்த்துட்டேன்"னு சொல்லற மாதிரி இன்னும் கொஞ்சூண்டு குலை நடுங்க வைக்க குரங்கு கேபினெட் மேலிருந்து நல்ல காலமாக No- man's landஇல் குதிக்குது. இப்ப குரங்குக்கு மிக நெருக்கத்தில் இருந்த டார்கெட் நான் தான். அந்த ஒரு நொடி அட்ரினலின், பெனாஃப்தலீன், அனாசின், க்ரோசின், மெடாசின் எல்லாம் நம்ம உடம்புல லிட்டர் கணக்குல சுரந்துச்சுப் பாருங்க. அதை வார்த்தையா எழுத முடியாது. ஆனா பாஸ்ஸோட க்யூபிக்கிள் பக்கத்துல இருக்குற கதவை தெறந்துட்டு குரங்கு நாங்க உக்காந்திருந்த முதல் மாடியிலிருந்து கீழே குதிச்சு ஓடிப் போயிடுச்சு. அது குதிக்கும் போது உண்டான சத்தத்தில் குரங்குடைய வெயிட் தெரிய வந்தது. கண்டிப்பா மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிடற பார்ட்டியாத் தான் இருக்கும் போலிருக்கு. அப்பாடா...குரங்கு போயிடுச்சின்னு நெனச்சி பின்னாடி க்யூபிக்கிளுக்குப் போய் அங்கிருந்த கமாண்டோக்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரங்கு திரும்ப வந்துடுச்சுன்னு கீழேருந்து ரெண்டு பேர் ஓடியாறானுங்க. ஒருத்தனைப் பாத்ததும் குரங்குக்கு மடிப்பு அம்சா ஞாபகம் வந்துடுச்சு போலிருக்கு ...அவனுக்கு இடுப்புல ஒரு பொறாண்டு. இன்னொருத்தனுக்குத் தலையைப் படிய சீவாம ஆபீசுக்கு வருவியானு பொறுப்பா வகிடு எடுக்க ஒரு முயற்சி பண்ணுச்சாம் அந்த தாயுள்ளம் கொண்ட குரங்கு. அப்ப தான் குரங்கு வியாபார நிமித்தமாத் தான் வந்துருக்குன்னு புரிஞ்சிச்சு.(அதாவது "the monkey means business"). திரும்பவும் குரங்கு மேலே ஏறி வந்து அதே கேபினெட் மேலே உக்காந்து சுத்துமுத்தும் பாக்குது...இப்ப வேலை செய்யிற மாதிரி நடிக்க நம்ம கிட்ட தமிழ்மணமும் இல்லை யாஹூ மெசஞ்சரும் இல்ல. நானும் கமாண்டோ தனுஷும் நின்னுக்கிட்டு இருக்கறோம். கதவைத் தெறந்து ஓடிடலாம்னு நெனச்சு கதவு பக்கம் போன அதே நேரத்துல குரங்கு திரும்பவும் ஒரு ஜம்ப். இப்ப சிங்க வால் பத்ரிக்கு எதிரில் ஆதி, தனுஷ் ரெண்டு பேரும் ஒரு மூலையில் மாட்டிக்கிட்டோம். அந்த நேரம் தோன்றிய இன்னுமொரு யோசனை கதவைத் திறந்து ஓடுவதுக்குப் பதிலா க்யூபிக்கிள் தடுப்பை எகிறிக் குதிச்சு ஓடிடலாம்னு. ஆனா பாருங்க..."ரகசியமானது காதலு"ங்கிற பாட்டுல வர்ற புள்ளையோட கன்னத்துல விழற குழியை "சோ க்யூட் நோ"னு சன் டிவியிலப் பாத்து கொஞ்ச நேரம் ரசிச்சதுக்கு அப்புறம், உதயா டிவி, ஜெமினி டிவி, ஈநாடு மராட்டி, ஆல்ஃபா டிவி குஜராத்தி சேனல்களை எல்லாம் பாத்ததுக்கப்புறமும் போர் அடிச்சதனால கலைச் சேவை செய்யலாம்னு நெனைச்சு நான் கிறுக்குனதை இவ்வளவு நேரம் படிக்கணும்னு உங்க தலையில எழுதியிருக்குப் போலிருக்கு. அதனால கதவைத் தெறக்கற உரிமை எனக்கு மட்டுமே இருக்குன்னு குரங்கு திரும்பவும் கதவைத் திறந்து ஓடிப்போச்சு.
ஆகையால் மகாஜனங்களே! இப்ப சொல்லுங்க விட்டக்குறை தொட்டக்குறை இருக்கா இல்லியான்னு? அந்த சந்திரமுகி ஜோதிகாவுக்கும், குருதிப்புனல் பத்ரிக்கும் நமக்கும் என்ன தொடர்புன்னு? Interpretation of dreams படிக்கல்லன்னாலும் பரவாயில்ல...உங்களுக்குத் தோணுனதைச் சொல்லுங்க. பின்னூட்டத்துக்குப் பதிலும், மத்தவங்க பதிவுக்குப் பின்னூட்டமும் போடாத நீயெல்லாம் எந்த தைரியத்துலடா பின்னூட்டத்தை எதிர்பாக்குறேன்னு உங்களில் சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான்னு எழுத மிக வீரமா ஆரம்பிச்சிட்டாலும் "நீங்க சொல்றது எல்லாம் சரி தானுங்க. அதை மனப்பூர்வமா ஒத்துக்கறேன்"னு கால்ல விழுந்துக்கறேன். ஹூம்...இப்படியே போனா ஒரு நாள், ஸ்டார் ஆகற கனவை மறந்துடனும் போலிருக்கே? மவனே! ஒனக்கு இப்படியெல்லாம் வேற ஆசையா? ஆமா...ஆகஸ்ட் மாசம் சித்தூர்கட்லேருந்து ரிலீஸ் ஆனதுக்கப்புறம் பதிவு எழுதுறதுக்கும் படிக்கிறதுக்கும் துட்டுக் குடுக்கற மாதிரி ஒரு ப்ராஜெக்ட் கெடைக்காமலா போயிடும். அது வரைக்கும்...ஒரு நாள் ஒரு கனவு தான்.

யோவ்,
ReplyDeleteஆபிஸில எப்பவும்போல தூங்க ஆரம்பிச்சிருக்க. அதுக்கு முன்னாடி இன்றே கடைசி போர்ட் எல்லாம் மாட்டி விட்டதுனால தூக்கத்தில மனசு கொசுவத்தி சுத்திக் காமிச்சிருச்சு. அதுக்காக இம்மாம் பெரிய பதிவு. ஃப்ராயிட் ரேஞ்சுல பீட்டர், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?
அண்ணே, எனோ இதைப் படிக்கும் போது,
ReplyDelete"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்" பாட்டு தான் நியாபகம் வருது.. இந்தப் பாட்டுக்கும் இந்தக் குரங்குகளுக்கும் என்ன சம்பந்தம்னு சிக்மென்ட் ப்ராடு சே ப்ராய்டு மாதிரி யாராவது புத்தகம் எழுதி இருக்காங்களா?
ஆமாம், ராஜஸ்தானிலும் குரங்குகள் இருக்காமே!!!
SUPER COMEDY KAIPPU..
ReplyDeleteஅட ஒன்னுமில்லே பயப்படாதே!
ReplyDeleteகொஞச நாளைக்கு முன்னே க்ப்ஸ் மனைவி னு ஒரு படம் போட்டாங்களே அதை நினைச்சுட்டே
தூங்கினியா?
(refer; drud d jelibod's "ALL ABOUT DREAMS"; otbona pub.inc)
கைப்பு எனக்கு சின்ன வயசிலே இருந்து ஒரு ஆசை ! ஒரு குரங்கு குட்டி வளர்க்கனும்னு ! இன்னிய வரைக்கும் அது நிராசையா இருக்கு !!:) இதப்படிச்சதும் அதான் தல ஞாபகம் வந்துருச்சு !!
ReplyDelete//குருதிப்புனல் படத்துல ஆதி "பயம்னா வீரம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு" //
ReplyDeleteவீரம்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது என்று இருக்க வேண்டும்.
சொந்தங்கள் தங்களை தேடி வருவதை என் செய்தாலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆனாலும் அருணாச்சலம் effect கொடுத்துடிங்க.
தலை வந்துட்டியா!
ReplyDeleteஇந்த குண்டக்க மண்டக்க பார்ட்டி நம்மள பாட படுத்திகிட்டு இருக்காம்யா!
எனக்கென்னமோ போனஜென்ம பந்தமோன்னு தோணுது. ம்ம்ம். கொடுத்துவச்சவரப்பா. படிச்சிட்டிருக்கறப்போ நம்ம ஜொள்ளு பிகினியிலெ ஒரு சூப்பர் பிகர் கொஞ்ச நாளுக்கு முன்னாலெ போட்டிருந்தார் அது ஏனோ ஞாபகம் வந்தது.....
ReplyDelete//ஃப்ராயிட் ரேஞ்சுல பீட்டர், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?//
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சகஜமய்யா...நீரு பண்ணாததையா நாங்க பண்ணிட்டோம்.
//"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்" //
ReplyDeleteகுரங்கு கையில் மாலைங்கிற மும்பை எக்ஸ்பிரஸ் பாட்டு ஞாபகம் வந்தா சரி. உங்களுக்கு ஏன் சம்பந்தமே இல்லாம ஒரு சோகப்பாட்டு ஞாபகம் வருது? எனிதிங் ராங்?
//SUPER COMEDY KAIPPU..//
ReplyDeleteதொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி ரவி.
//கொஞச நாளைக்கு முன்னே க்ப்ஸ் மனைவி னு ஒரு படம் போட்டாங்களே அதை நினைச்சுட்டே
ReplyDeleteதூங்கினியா?//
இருக்கலாம். அதுக்குக் கூட இங்கே சிமெண்ட் கம்பெனியில வழி இல்லையேனு ஏக்கம் தானோ என்னவோ?
:))-
//ஒரு குரங்கு குட்டி வளர்க்கனும்னு ! இன்னிய வரைக்கும் அது நிராசையா இருக்கு !!:) இதப்படிச்சதும் அதான் தல ஞாபகம் வந்துருச்சு !!//
ReplyDeleteஒன் பொறந்த நாள் என்னிக்குன்னு சொல்லு பாண்டி. அப்படியே எந்த ஸ்பீசீஸ் வேணுமின்னும் சொல்லிடு.
//வீரம்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது என்று இருக்க வேண்டும்.//
ReplyDeleteஇது தெரிந்தே செய்த உல்டா தானுங்க.
:)-
//சொந்தங்கள் தங்களை தேடி வருவதை என் செய்தாலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது.//
எனுமோ பெரியவங்க சொல்றீங்க. கேட்டுக்கறேன்.
//ஆனாலும் அருணாச்சலம் effect கொடுத்துடிங்க.//
டாங்ஸுங்கோ!
//தலை வந்துட்டியா!
ReplyDeleteஇந்த குண்டக்க மண்டக்க பார்ட்டி நம்மள பாட படுத்திகிட்டு இருக்காம்யா!//
நம்ம பாண்டி கடைசியா போட்ட பதிவைப் பாத்து இந்நேரம் நடுங்கிக்கிட்டிருப்பான் தளபதியாரே!
//எனக்கென்னமோ போனஜென்ம பந்தமோன்னு தோணுது. ம்ம்ம். கொடுத்துவச்சவரப்பா.//
ReplyDeleteமொத முறையா பெரியவங்க வந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க. காதைக் குடுங்க... அந்த ஃபிகர் தான் பாண்டிக்குப் பரிசா போகப் போவுது.
எப்போ வந்தீங்க கைப்புள்ள, உங்க புகழ் கல்கி வரை பரவி இருப்பது பற்றி நான் 14-ம் தேதியே பதிவு போட்டு விட்டேன். இந்த பொன்ஸ் அதுக்கு அப்புறம் எழுதிட்டு என்னமோ தான் தான் முதலில் பார்த்த மாதிரி அது என்ன பீலாவா, பாலாவா அது விடறாங்க. எல்லாம் தலைவர் நீங்க இல்லாத குறை தான். அன்னிக்கே நான் எழுதி விட்டேன் திங்கட்கிழமை உங்களை எப்படியும் வெளியே கொண்டு வருவாங்கனு. அதே மாதிரி வந்துட்டீங்க. தீர்க்க தரிசியான என்னை மாதிரி ஆளுங்க சங்கத்துக்குத் தேவைனு எல்லார்கிட்டயும் சொல்லுங்க.
ReplyDelete//உங்க புகழ் கல்கி வரை பரவி இருப்பது பற்றி நான் 14-ம் தேதியே பதிவு போட்டு விட்டேன். இந்த பொன்ஸ் அதுக்கு அப்புறம் எழுதிட்டு என்னமோ தான் தான் முதலில் பார்த்த மாதிரி அது என்ன பீலாவா, பாலாவா அது விடறாங்க. எல்லாம் தலைவர் நீங்க இல்லாத குறை தான்.//
ReplyDeleteஏதோ சின்னப்பொண்ணு பொன்ஸ், தெரியாம பாலா விட்டுருச்சுன்னு...சே...பீலா விட்டுருச்சுன்னு பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க.
//தீர்க்க தரிசியான என்னை மாதிரி ஆளுங்க சங்கத்துக்குத் தேவைனு எல்லார்கிட்டயும் சொல்லுங்க.//
இதெல்லாம் நான் சொல்லித் தான் தெரியணுமா என்ன...இருந்தாலும் இந்த தருணத்தில ஆமாம் தேவைனு சொல்லிக்கிறேன்.
இணையத்தில் பல வருடங்களுக்கு முன் வலம் வந்த நகைச்சுவை.
ReplyDeleteஒரு மெகா ப்ராஜக்ட்க்கு (சரியாகப் படிங்கப்பபா:-))) டெண்டர் மூலம் நம்ப ஊரிலிருக்கும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் xxx தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்ரிமெண்ட் கையெழுத்திடும்போதுதான் தெரிந்தது. ...... நாட்டில் இருக்கும் எல்லாக் குரங்குகளையும் திரும்ப காட்டுக்குள்ளே அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. சரி சரி we will do any project on earth -ன்னு சொல்லிட்டமே என்ன செய்வது என்று இங்கிருந்து அந்த நாட்டுக்கு ஒரு குழுவை அனுப்பலாம் என்று முடிவாயிற்று. ஆனால் ஒரு தல எதுக்குப்பா ஒரு குழு? அந்த ஊருக்கு ஒரு ரிடர்ன் டிக்கெட் போடுப்பா. நான் மட்டுமே சென்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். (அவருக்கும் நம்ப கைப்புக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை)
அங்கே போனால் விமான நிலையத்துக்குள்ளேயே ஆங்காங்கே குரங்குகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருந்தன. எல்லோரும் கையில் ஒரு கொம்பு வைத்துக்கொண்டிருந்தார்கள். நம்ப தலைக்கும், குரங்குகளை விரட்ட ஒரு கொம்பு கொடுத்தார்களாம். அவர் அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை என்றார். பிறகு குரங்குகளே நீங்கல்லாம் திரும்பி காட்டுக்கே போயிடுங்கன்னு ஒரு சவுண்டு உட்டாராம். ஆனா அந்தக் குரங்குகளோ ஏதோ மேல ஏதோ பேஞ்சது போல வழக்கம்போல ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன.
நம்ப தல பார்த்தார். இன்னும் சீரியசா ஏய் குரங்குகளே நான் xxx கம்பெனியிலிருந்து வந்திருக்கேன். உங்களை எல்லாம் காட்டிற்கு விரட்டப் போவதுதான் என் வேலை. நான் அடுத்த நடவடிக்கை எடுக்கும் முன் நீங்கல்லாம் காட்டுக்கு ஓடிப் போயிடுங்க என்றார். ஆனா அதுக்கும் குரங்குகள் சிறிதும் அசரவில்லை.
நம்ப தல யோசித்தார். சரி சரி நான் சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க. உங்க தல எங்கே ? அவருடன் நான் பேசவேண்டும் என்றார்.
கொஞ்ச நேரம் கழித்து வந்த அவங்க தல கிட்ட நம்மாளு ஒரே ஒரு ஸ்டேட்மெண்டு தான் உட்டாரு. உடனே அவங்க தல, அவங்க எல்லாரையும் கூப்பிட்டு, வாங்கடா, நாம் எல்லாம் காட்டுக்கே திரும்பி ஓடிப்போய்விடலாம், இனிமே நாம் இங்கே ஆட்டம் போட முடியாது என்று சொல்லிகொண்டே ஓடிவிட்டது. உடனே எல்லாக் குரங்குகளும் மறுபடி காட்டுக்கே ஓடிப் போய்விட்டன.
ஆமா நம்ப தல என்ன சொன்னாருன்னு கேட்கிறீர்களா ?
"நாங்க ...... கம்பெனியின் ஒரு கிளையை இங்கு திறக்கப் போகிறோம். அதில் நீங்கள் எல்லோரும் ..... என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"
:-))))
//"நாங்க ...... கம்பெனியின் ஒரு கிளையை இங்கு திறக்கப் போகிறோம். அதில் நீங்கள் எல்லோரும் ..... என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"//
ReplyDeleteவாங்க லதா மேடம்!
முன்னமேயே இந்த கதைக்கும் வ.வா.ச.வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லன்னு தெள்ளத் தெளிவா நீங்க தெளிவு படுத்திட்டதால ஒங்களோட சேந்து நானும் சிரிச்சுக்கறேன்.
தல!!முதல்ல "கனவுகளும் பலன்களும்" புக்கை எடுத்து குரங்கு கனவில் வந்தா என்னாவும்னு படிச்சுப்
ReplyDeleteபாருங்க!!.எது வந்தாலும் நம்ம தாங்குவோம்னாலும் தயாரா இருக்கது நல்லதுல்ல!!!!!!.
அன்புடன்,
துபாய் ராஜா.
//இதை இப்படியே i=1 to infinityன்னு லூப்ல போட்டு ஓட விட்டோம்னா பொழுது போற வரைக்கும் ஆபீஸ்ல ஒரே கிளு கிளுப்பா இருக்கும்//
ReplyDeleteபாத்து கைப்பு. வலைப்பதிவுலயே ஹேங்க் ஆயிரப்போறீங்க.
//தல!!முதல்ல "கனவுகளும் பலன்களும்" புக்கை எடுத்து குரங்கு கனவில் வந்தா என்னாவும்னு படிச்சுப்
ReplyDeleteபாருங்க!!//
நம்ம ஆளுங்க எல்லாம் பாசக்காரங்களா இருக்காங்களேயா.ரொம்ப நன்றி ராஜா. அந்த புக்கைப் பாக்குறேன். அதுக்கு முன்னாடி சென்னைக்கு வரணுமே...இன்னும் ஒரு 2-3 மாசம் தானே. வந்ததும் பாக்கறேன்.
//பாத்து கைப்பு. வலைப்பதிவுலயே ஹேங்க் ஆயிரப்போறீங்க.//
ReplyDeleteவாங்க வெங்கட்ரமணி! ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஹேங்க் ஆகித் தானே கெடந்தோம். இப்ப தானே கொஞ்ச நாளா நம்ம தொல்லை விட்டுருக்குன்னு மக்கள் நிம்மதியா இருக்காங்க.
:)
Great story
ReplyDeleteGhilli