Monday, May 15, 2006

தடிப்பசங்க #4

காட்சி # 4 : கலர் கலராம் காரணமாம்
"Diamonds are a girl’s best friend"னு எங்க நடு அத்தை பாடுன பாட்டு ஒன்னு "Gentlemen prefer blondes" அப்படிங்கற படத்துல இருக்குது. சரி...கேர்ள்ஸ்க்கு டயமண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்... ஒத்துக்கறோம். மேரீட் லேடீஸுக்கு?? என்னை கேட்டீங்கனா "Her grown up sons (or daughters) are a married woman's best friend(or worst enemy for that matter)" அப்படின்னு சொல்லுவேன். இருந்தாப்புல இருந்து இப்ப எதுக்கு பீட்டருன்னு தானே கேக்கறீங்க? என்னங்க பண்ணுறது...என்ன தான் உங்களுக்கெல்லாருக்கும் புரியறதுக்காக, நான் டேமில்ல ரைட் பண்ணாலும், எங்க நைனா டங்கை என்னால மறக்க முடியுமா? அதுக்குத் தான் அப்பப்ப, இப்பிடி பீட்டர் தெளிச்சு கோலம் போடறது. என்னது?... 'அடி செருப்பால'யா?....நோ...நோ...மீ பாவம்யா.

சரி! பெஸ்ட் ஃப்ரெண்ட் காட்சியெல்லாம் இப்ப எடுத்து வுட்டா நெஞ்சை நக்கீஸ் மேட்டர் ஆகிப் போவும்ங்கிறதுனால இப்போதைக்கு ஒரு வர்ஸ்ட் எனிமி காட்சி.

"டேய்! முரளி...இதை கொஞ்சம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா...சீக்கிரம்"

"த..து..என்னது இது?" சாட்சாத் பூர்ணம் விசுவநாதனே தான் (!)

"புடவை"

"அது தெரியுது...என்ன புடவை?"

"பட்டு புடவை"

"வெளையாடாதீங்கம்மா...என்ன கலர்?"

"மாம்பழக் கலர்...டபுள் கலர் புடவை. காலையில ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னு நேத்தே தான் சொன்னேனே?"

"இந்த புடவையை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க கூட வராதீங்க. இத கட்டிக்கிட்டு நீங்க எங்க கூட வந்தா எங்களுக்கு ஒரே அவமானமா இருக்கும். "

"ஏன் இந்த புடவைக்கு என்னா?. "

"இந்த புடவை ஒரே பளபளனு இருக்கு. இதை கட்டுனீங்கனா அலங்கார பூஷணியா ஒரே பகட்டா இருக்கும். பாரு இந்தம்மா எப்பிடி பந்தாவா புடவை கட்டிக்கிட்டு போறாங்கன்னு எல்லாரும் பேசுவாங்க"

"எது இது அலங்கார பூஷணியா? இந்தப் புடவையில ஜரிகை கூட முந்தியில மட்டும் தான் இருக்கு. ஊர் உலகத்துல போய் பாருங்க. அவங்கவங்க எப்படி உடம்பு முழுசும் ஜரிகையோட புடவை கட்டுறாங்கன்னு...கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற என்ன கட்டுவாங்க? உனக்கு அவமானமா இருந்தா நீ என் கூட வராதே"

"நாளைக்குக் கல்யாணத்துக்குப் போவணும்னு தெரியுமில்ல. கடைசி நேரம் வரைக்கும் புடவையை அயர்ன் பண்ணாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? " - தம்பியோட வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல? "சனி,ஞாயிறு ரெண்டு நாளா லீவுல தானே இருந்தீங்க. திங்கக் கிழமை காலையிலே ஸ்கூலுக்குக் கிளம்பும் போது தான் சட்டை அயர்ன் பண்ணல, பேண்ட் அயர்ன் பண்ணலைன்னு ஞாபகம் வருமா? சாகப் போற நேரத்துல தான் சங்கரா சங்கராம்பீங்களா"னு அம்மா எடுத்து விடற நீளமான டயலாக்கோட உல்டா தான் மேலே பார்த்தது. An eye for an eye, a tooth for a tooth. பீட்டர் இல்லாம பரயணுமெங்கில் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்.

"அடிக்கிற வெயில்ல எதுக்குப் பட்டு புடவை?" - இது 'நானே தான்' தம்பிக்கு ஆதரவாக.

"என்னடா நீயும் அவன் கூட சேந்துக்கிட்டு... கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற எத கட்டுறது?"

"சிம்பிளா க்ரிஸ்பா ஒரு காட்டன் சாரி" - தி ஹிண்டு சண்டே மேகசின்ல யாரோ ஒரு சமூக சேவகியை விவரிக்கும் போது வந்த "க்ரிஸ்ப் காட்டன் சாரி" என்ற பதத்தைச் சரியான எடத்துல சரியான நேரத்துல சரியாகப் பிரயோகித்துத் தங்கள் பாராட்டுகளுக்குப் பாத்திரம் ஆகுபவர் உங்கள் கைப்புள்ள.

" 'மறுபடியும்' படம் பாத்தீங்கல்ல?"

"நான் பாக்கலை"

"நேத்து கூட ஒலியும் ஒளியும்ல அந்த படத்து பாட்டு போட்டானே. அதுல ரேவதி கட்டிக்கிட்டு வர மாதிரி சிம்பிளா லைட் கலர்ல் அழகா ஒரு காட்டன் சாரி கட்டிக்கிட்டு வாங்க"

"அது சரி! அதுக்கெல்லாம் உங்க ரெண்டு பேரோட பொண்டாட்டிங்க வருவாளுங்க. கல்யாணத்துக்கு காட்டன் புடவை கட்டி கூட்டிக்கிட்டு போய் அழகு பாருங்க. எங்க வீட்டுக்காரரு எனக்கு வாங்கிக் குடுத்துருக்காரு...நான் இதை தான் கட்டிக்கிட்டு வருவேன்" ஷேவ் பண்ணிக் கொண்டு இருக்கும் அப்ஸின் ஆதரவுக்காக அவரை நோக்கி ஒரு ஏக்கப் பார்வை.

"நீயாச்சு...உன் மவனுங்களாச்சு. நம்மளை வுட்டுராயா. உங்க பேச்சுக்கே நான் வரலை" இத இத இத தானே நாங்க எதிர்பார்த்தோம்.

"உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க..."அப்ஸ் எதையும் கண்டுக்காத மாதிரி நைஸா எல்லாத்தையும் ரசிச்சிக்கிட்டுத் தான் இருக்காரு. ரெண்டு எருமைங்களுக்கு நடுவுலே தனியா கிளேடியேட்டரா அம்மா எவ்வளவு தான் சமாளிப்பாங்க?

"எங்க பொண்டாட்டிங்க வந்தாங்கன்னா இந்த மாதிரி பந்தாவெல்லாம் கூடாது, சிம்பிளா இருக்கணும்னு முன்னாடியே கண்டிஷனா சொல்லிடுவோம்...என்னடா?"

"ஆமாம்" - தம்பியின் ஏகோபித்த ஆதரவும் நமக்கிருக்கு.

"இந்த மாதிரி லூசுத் தனமானக் கண்டிஷன் எல்லாம் போட்டா நாளைக்கு வர்றவ கொமட்டுலயே குத்துவா"

"கொமட்டுல குத்துற ராட்சசிங்க தான் பொண்டாட்டியா கெடப்பாங்கனா நாங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டோம். சிம்பிளா டிரெஸ் பண்ணறது என்ன தப்பா?"

"சரியான ஜோக்கு. ஆமாண்டா...எல்லாரும் இப்ப இப்பிடி தான் சொல்லுவீங்க. நாளைக்குப் பொண்டாட்டிங்க வந்ததும் அவளுங்களுக்கு அவனவனும் கூஜா தூக்குவீங்க. அப்ப அலங்கார பூஷணியா அவளுங்க வெளியில கெளம்பும் போது என்ன பண்றீங்கன்னு நானும் பாக்கத் தானே போறேன். சிம்பிளா டிரெஸ் பண்ணறது தப்பில்லை...ஆனா அது அதுக்குன்னு ஒரு நேரங்காலம் இருக்கு. கறிகாய் வாங்கப் போகும் போது பட்டுப் புடவை கட்டுனா நீ சொல்லுறது சரி. கல்யாணத்துல கூட காட்டன் சாரியைக் கட்ட சொன்னா பிற்காலத்துல பஹுத் முஷ்கில் ஹை பேட்டா"

"டேய் லேட்டாவுது...சீக்கிரம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா?"

"நான் குளிக்கப் போறேன்...எனக்கும் லேட்டாவுது" - இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தறதுக்காகத் தம்பி பாத்ரூமுக்குள்ள நுழையற மாதிரி ஒரு ஆக்டிங் குடுக்கறாரு.

"டேய்! அம்மா கேக்குறாங்கல்ல. அயர்ன் பண்ணி வாங்கிக் குடுத்துட்டு குளிக்கப் போயேன்" முதன்முறையா அம்ஸுக்கு சப்போர்ட்டாகத் தோப்பனார்.

"சரி குடுங்க" இளவல் இறங்கி வருகிறார்.

"ஒன்னும் வேணாம். ஏற்கனவே அயர்ன் பண்ணியிருக்குற வேற புடவையையே கட்டிக்கிட்டு வர்றேன். மவனே! இந்தம்மா கிட்ட கல்யாணத்துல கட்டிக்க ஒரு நல்ல பட்டுப் புடவை கூட இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நீங்களும் உங்க டாடியும் அதை கேட்டு அவமானப் படணும்" இப்ப முருங்கை மரம் ஏறுறதுக்கு அம்மாவோட சான்ஸ்.

"என்னை உங்க சண்டையில இழுக்காதே" - அப்புச்சி ஐ ஆம் தி எஸ்கேப்

"இதுக்குத் தான் வீட்டுல ஒரு பொம்பளைப் புள்ள வேணுங்கிறது. பொம்பளைப் புள்ள இருந்துச்சுன்னா அம்மாவுக்குக் கொஞ்சமாச்சும் ஆதரவாப் பேசும்" அப்பப்போ தடிப்பசங்க ரெண்டு பேரையும் வெறுப்பேத்த அம்மா உபயோகிக்கும் சுலபமான ஆனா பலன் தருகிற ஒரு டெக்னிக் இது.

"ஆ...ஊன்னா பொம்பளைப் புள்ள பொம்பளைப் புள்ளம்பீங்களே? எவ்வளவு செஞ்சாலும் உங்களுக்கு நன்றியே இருக்காதும்மா. பொம்பளைப் புள்ள இருந்தா மட்டும் என்ன பண்ணுமாம்?" இது நாங்க ரெண்டு பேரும் கோரஸ்.

"ஆமாம் இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்களாம். காலங்காத்தால உயிரை எடுக்குறீங்களே? எனக்கு மாமியாரே வேணாண்டா நீங்க ரெண்டு பேருமே போதும். எங்க மாமியார் கூட இப்படியெல்லாம் என்னை கேள்வி கேட்டது கிடையாது"

"சினிமால காட்டுற மாதிரி உங்க மாமியார் உங்களைக் கொடுமை படுத்தி இருந்தாங்கன்னா இப்ப இந்த மாதிரியெல்லாம் அட்டகாசம் பண்ணுவீங்களா?"

"உங்களால ஒரு பைசா பிரயோஜனம் இல்லன்னாலும் வெட்டிப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை"

இதுக்கு மேலே வெறுப்பேத்துனா அப்ஸ் கிட்ட நல்லா பாட்டு விழும்னு தெரிஞ்சிக்கிட்டு தம்முடு விறுவிறுன்னு புடவையை எடுத்துக்கிட்டு லாண்டிரிக்கு ஓடறாரு. புடவை அயர்ன் பண்ணி வந்தாலும் அம்மா பிடிவாதமா பளபளப்பு குறைச்சலான வேறொரு பச்சை கலர் பட்டுப் புடவையைத் கட்டிக்கிட்டுத் தான் கல்யாணத்துக்கு வர்றாங்க.

தி.நகர்ல இருக்குற கல்யாண மண்டபத்துக்கு திருவல்லிக்கேணி ஆராதனா ஓட்டல் கிட்டருந்து 13 இல்ல 13பி பஸ்ஸைப் பிடிச்சா அழகா அரை மணி நேரத்துல போயிடலாம். இப்படி இருக்கையிலே இருபத்தி அஞ்சு ரூபா(அப்பல்லாம் அவ்வளவு தான்) குடுத்து அப்ஸை ஆட்டோ பிடிக்க வைக்க கொஞ்சம் மெனக்கெடனும். அப்ஸ் ஆட்டோல போக ஒத்துக்கிட்டாலும் அம்மாவை ஒத்துக்க வைக்க பகீரத பிரயத்தனம் பண்ணனும். ஆனா ஆட்டோல நாலு பேரையும் ஏத்தறதுல இளவல் ஏழு எட்டு வயசுலேயே போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோ பட்டம் வாங்கனவரு. அத்தோட தி.நகர்லேருந்து திரும்பி வரும் போது சரவண பவன்ல சாப்பாட்டுக்கும் சில பல டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்து விடுவார். கல்யாணத்துல புவ்வா உண்டு என்பதால் சரவண பவன் மட்டும் கட்.

வீட்டுலேருந்து நடந்து அக்பர் சாகிப் தெரு முனை வந்ததும் "டாடி! கல்யாணத்துக்கு நேரமாகலை? ஏற்கனவே நாம ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன். ஒன்பது மணி பஸ்ஸும் போயிருக்கும்" பல்லவன் பஸ்ஸுல பார்ட்-டைம் வேலை பாக்குற மாதிரி ஒரு பீலா.

"அதெல்லாம் ஒண்ணும் நேரமாகலை. பஸ்ஸூலேயே போகலாம். ஆட்டோவுக்கு வேற இருபது ரூபா குடுக்கணும்" அம்மா இப்பவும் 1970களின் விலைவாசியிலேயே இருக்காங்களே.

"சரி! அங்கே நிக்குதே ஆட்டோ...அவரைப் போய் தி.நகர் பனகல் பார்க் வருவாரான்னு கேளு" - இது அப்ஸ்.

எள்ளுன்னா எண்ணெய்யா நிக்கிற பழக்கம் தானே பிரதர்ஸ் ரெண்டு பேருக்கும் (நமக்கு ஆதாயமான விஷயத்துல மட்டும்). அப்ஸ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள இளவல் ஆட்டோ டிரைவரோட பேச்சு குடுத்துட்டு இருக்காரு. பேசி முடிச்சிட்டு, நின்னுக்கிட்டிருக்குற எங்களை நோக்கி வர்றாரு. பின்னாடியே ஆட்டோவும் வருது.

"டாடி! அவரு முப்பத்தைஞ்சு ரூபா கேட்டாரு. நான் முப்பது ரூபாய்க்குப் பேசி முடிச்சிட்டேன்" ஆஹா இதுவல்லவோ பேச்சுத் திறமை.

"முப்பது ரூபாயா? இருபது ரூபாயே அதிகம்னு சொல்றேன். முப்பது ரூபாய்க்குப் பேசிட்டு வந்துருக்கே?" அம்மா முகத்துல கடுகு வெடிக்குது.

"இருபது ரூபாய்க்கு ராயப்பேட்டைக்குத் தான் போக முடியும்" தன்னுடைய பேரத்தின் மீது தம்பிக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை.

"முப்பது ரூபான்னா வேண்டாம்னு சொல்லிடுங்க" இது யாருன்னு அநாவசியமா கேக்கப் பிடாது.

"முப்பது ரூபா அதிகம்டா" - அப்ஸ்

அப்ஸ் ஆட்டோ டிரைவர் கிட்ட "தி.நகர் தானே? இருபது ரூபா தான் ஆவும். பரவால்ல இருபத்தியஞ்சு ரூபா வாங்கிக்குங்க"

சென்னை ஆட்டோ டிரைவர்களின் அக்மார்க் பதில் ஆன"இருபத்தியஞ்சு ரூபா கட்டாது சார். சர்ச் பார்க் ஸ்கூல் வரைக்குமே இருபது ரூபா மீட்டர் போட்டாலே வந்துடும். அப்புறம் அங்கிருந்து பனகல் பார்க் எவ்வளவு தூரம்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க" வைக் கொடுக்கிறார் ஆட்டோ டிரைவர்.

ஆட்டோவைப் பேசிக் கூப்பிட்டு விட்டதால் "சரி ஏறுங்க"ஒன்று வருகிறது.

ஜன்னலோர சீட்டைத் தம்பி உஷாராக முதலிலேயே பிடித்துக் கொள்கிறார். நாலு பேர் ஆட்டோவில் உக்காருவது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. இருபத்து மூன்று அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அடங்கிய காம்ப்ளானைக் காலையும் மாலையும் இரண்டு "வளரும் பையன் இவன்"களும் குடிச்சா ஆட்டோவுல எங்க எடம் இருக்கும்?.

"அழகா பஸ்ஸுலே நாலு பேரும் உக்காந்துட்டு போயிருக்கலாம். ஒன்னே கால் ரூபா தான் டிக்கெட். முப்பது ரூபா குடுத்து இறுக்கத்துல போக வேண்டியதாயிருக்கு" முப்பது ரூபா அநாவசிய செலவு என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

"இந்த நேரத்துல உங்களுக்கு பதிமூணாம் நம்பர் பஸ்ஸுலே உக்காந்துட்டு போக எடம் கெடைக்குதா? நீங்க கட்டிக்கிட்டு வந்துருக்குற பட்டுப் புடவையால தான் இறுக்கமே" - இது எப்படி இருக்கு?

முப்பது ரூபாயும் ஒன்னே கால் ரூபாயும் அமீர் மகால் வரும் வரை அம்மாவின் உதட்டை விட்டுப் பிரிய மறுக்கிறது.

"அதான் ஆட்டோவுல ஏறியாச்சுல்ல. அப்புறம் என்ன சும்மா அதேயே பிடிச்சுக்கிட்டு" ஆட்டோ பயணத்தின் ஆனந்தத்திற்கு பங்கம் ஏற்படாத படி தம்பி பார்த்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் அமைதிக்குப் பிறகு "டேய் மோகன்ராஜ்! சூப்பர் ஹிட் முகாப்லாவுல ஞாயித்துக் கிழமை ஏதோ பரிசு போட்டின்னு சொன்னானே? உனக்குக் கூட அதுக்குப் பதில் தெரிஞ்சிருந்துதே? ஒரு நாலணா காம்பெடிஷன் போஸ்ட் கார்ட் வாங்கி எழுதி போடலாமில்ல?"

"எனக்கு அதுலெல்லாம் இண்டரெஸ்ட் இல்லை"

"உனக்கு எதுல தான் இண்டரெஸ்ட்?"

"ஏன்மா எப்பவும் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறீங்க?"

"சீ! கழுதை...ஒரு கார்ட் எழுதி போட சொன்னா அது அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறதா?"

"அவன் கொடுக்குற பரிசுப் பொருள் டிவி, பிரிஜ் இதெல்லாம் உங்க வீட்டுல இல்ல? உங்க வீட்டுக்காரர் உங்களுக்கு அதெல்லாம் கஷ்டப் பட்டு வாங்கித் தரலை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. எதுவா இருந்தாலும் நாமளே உழைச்சு சம்பாதிக்கணும். வீணா ஓசியிலே கெடக்கறதுக்கு ஆசை படக் கூடாது"

"சோம்பேறி நாய்ங்களா! சும்மா எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி உக்காந்து இருந்தாலும் இருப்பீங்க...ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டீங்க. டிவி, பிரிஜ் எல்லாம் இருக்கு தான்... ஆனா பம்பர் பரிசா மாருதி கார் குடுக்கறானாமே. அது உங்க கிட்ட இருக்கா? அது இருந்தா இப்பிடி ஆட்டோவுல நெருக்கிக்கிட்டு உக்கார வேணாமில்ல?" மடக்கிட்டதா ஒரு அநாவசியமானத் தப்புக்கணக்கு.

"மாருதி கார் நெஜமாலேயே குடுக்கறான்னு உங்களுக்குத் தெரியுமா? அவன் கம்பெனியிலேயே வேலை செய்யிற ஆளு எவனையாச்சும் செட்டப் பண்ணி சும்மா குடுக்கற மாதிரி குடுத்து ஊரை ஏமாத்தறானுங்க. எல்லாம் கேமரா ட்ரிக்" இந்தளவு யோசிச்சு கதை சொல்லுவோமே ஒழிய, ஒரு நாளும் ஒரு கார்டு எழுதி போட மாட்டோமே!

"முயற்சியே பண்ணாத சோம்பேறி பயலுங்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?" - பனகல் பார்க் தரிசனம் தந்து சூப்பர் ஹிட் முகாப்லாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கல்யாணத்துக்குப் போனா "அலங்கார பூஷணி" என்ற சொல்லுக்கு (அது முதன்முறையா எப்படி எங்க அகராதில வந்ததுன்னு சரியா ஞாபகமில்ல) உண்மையான அர்த்தம் தெரிகிறது. பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும் கதையாக வடித்த புடவைகளையும் காதுலயும் கழுத்துலயும் இடுப்புலயும்(!) "வளர்ப்பு மகன்" திருமணத்துக்கு வந்தவர்கள் தோற்கிற அளவுக்கு அணிந்திருக்கிற ஆண்டீஸ்களை எல்லாம் பார்க்கும் போது அம்மா மாம்பழக் கலர் புடவையையே கட்டி வந்திருந்தால் கூட ஒன்னும் பெருசாக வித்தியாசம் தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது. அந்த மாம்பழக் கலர் புடவையை முதன்முதலில் அம்மா கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆண்ட்டி கையில் இருந்து பிடுங்காத குறை தான். இந்த விஷயத்தில் அப்பாவிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்காது அம்மாவுக்கு. "லேடீஸ் புடவை எடுக்கிற எடத்துல நாம நின்னுக்கிட்டு என்ன பண்றது"ன்னு புடவை கடையில் நடுவில் போட்டிருக்கும் ஸ்டூலே கதின்னு அப்பாவும் அப்பாவுக்குத் துணையாக நாங்களும் உக்காந்துக்குவோம்.

அம்மா எடுக்கிற கலர் அவ்வளவாக "அடிக்கிற" கலரா இல்லாவிட்டாலும் அதைப் பத்திக் குத்தம் சொல்லி 'மாமியார்' கொடுமை படுத்துவது தடிப்பசங்க எங்க ரெண்டு பேரோட வழக்கம். நான் புது தில்லியில் இருந்த வரைக்கும், தீபாவளிக்குச் சென்னை வரும் போது புது தில்லி சவுத் எக்ஸ்டென்ஷன் பார்ட் ஒன்னில் இருக்கிற 'நல்லி'யில் புடவை எடுத்து வருவது வழக்கம். பெண்களின் கண்களுக்குக் மட்டுமே தெரியும் ஆஸ்தான கலர்களான ராமர் கலர், கண்ணன் கலர், வாடாமல்லி கலர், கத்திரிப்பூ கலர், அரக்கு கலர், பொடி கலர்(இது வரைக்கும் அது என்ன கலர்ன்னு எவ்வளவு முயற்சி பண்ணியும் கண்டு பிடிக்க முடியலை) ...அப்புறம் இந்த யானை கலர், மயில் கழுத்துக் கலர் இந்த எல்லா கலருக்கும் நம்ம இரண்டு கண்ணும் "வண்ணக் குருடு"(அதாங்க ...Colour Blind). அம்பது ஆயிரம் கலரே இருந்தாக் கூட நாம புடவை எடுக்கிற கலர் எல்லாம், நமக்கு சட்டை எடுக்கிற இங்கிலீஷ் கலரான Cream, Mauve, Lilac, Biege... இப்படித் தான்...சுருக்கமாச் சொன்னா எல்லாம் டல்லான சோப்ளாங்கி கலர். இருந்தாலும் இது வரைக்கும் நம்ம தேர்வு நல்லாயிருக்குன்னு தான் வீட்டுல சான்றிதழ். சென்னை நல்லியில் கிடைக்காத புடவையா? இருந்தாலும் பையன் டெல்லியிலே இருந்து வாங்கிட்டு வரானேன்னு ஒரு பெருமிதம் தான் காரணம்னு நெனக்கிறேன்.

இப்ப இதையெல்லாம் நெனச்சா இந்த கலர் விஷயத்தில் அம்மாவின் சாய்ஸைப் பெருமளவுக்குக் குறைத்ததில் நம்ம பங்கு அளப்பிடற்கரியதுன்னு தோணும். சில சமயம் "தவறிழைத்தான் பாண்டிய மன்னன்"னு கூடத் தோணும். ஆனா தவறிழைத்தால் தானே அவன் பாண்டிய மன்னன்? அப்பத் தானே தவறிழைத்தான் பாண்டிய மன்னன் என்ற டயலாக்குக்கும் மரியாதை, அப்பத் தானே மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு அன்னையர் தினத்தன்னிக்கு லேப்டாப்பில் "தடிப்பசங்க#4"னு கதை எழுத முடியும்?
:)-

30 comments:

  1. ஹலோ! வடிவேலு படம், "கைப்புள்ள" படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  2. hai,
    Thadipasanga #4 nallaa irunthuchu.
    Thadipasanga college life matters ellam potaa innum nallaa irukkum

    ReplyDelete
  3. அடப்பாவி அன்னையர் தினம்ன்னு பில்டப் குடுத்துட்டு எழுதினது என்னவோ சுய புராணம். நல்லா இருமய்யா.

    ஆமா. எங்க அட்ரெஸ் இல்லாம பொயிட்டீரு? அப்பப்போ இந்த மாதிரி வாரும். (சிலேடை!) இல்லைன்னா உம்மை நான் என்னமோ சிறை பிடிச்சு கொண்டு போயிட்ட லெவலில பேசறாங்க.

    ReplyDelete
  4. //அம்மா எடுக்கிற கலர் அவ்வளவாக "அடிக்கிற" கலரா இல்லாவிட்டாலும் அதைப் பத்திக் குத்தம் சொல்லி 'மாமியார்' கொடுமை படுத்துவது தடிப்பசங்க எங்க ரெண்டு பேரோட வழக்கம். //
    கைப்பு அண்ணா, உங்களுக்குக் கல்யாணமாகி, உங்க நெசமான கைப்பொண்ணுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கவேண்டும் :).. அப்போ தெரியும் உங்க அம்மா எப்படி ஒரு தியாகச் சின்னமாவும், பொறுமையின் பூஷணமாவும் இருந்திருக்காங்கன்னு :)

    ஆமாம், மால்கேட்ல இருக்கீங்கன்னு நெனச்சிகிட்டு இருக்கோம்.. இப்படி கேட்வே ஆப் இந்தியாவுக்குப் போய்ட்டீங்க?!!! :)

    ReplyDelete
  5. //பெண்களின் கண்களுக்குக் மட்டுமே தெரியும் ஆஸ்தான கலர்களான ராமர் கலர், கண்ணன் கலர், வாடாமல்லி கலர், கத்திரிப்பூ கலர், அரக்கு கலர், பொடி கலர்(இது வரைக்கும் அது என்ன கலர்ன்னு எவ்வளவு முயற்சி பண்ணியும் கண்டு பிடிக்க முடியலை)//

    வாழ்க வளமுடன்....

    வாழ்த்துகள்:-))

    **
    அப்புறம் அன்னையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  6. //..."வளரும் பையன் இவன்"களும் குடிச்சா ஆட்டோவுல எங்க எடம் இருக்கும்?.//

    விவேக்-ஆட்டோ-பசங்க (என்ன படம்யா அது?) இது அப்படியே கண் முன்னாடி வருது:-))

    ஹையோ.... ஹையோ.... எப்படியா இப்படி அருவியா கொட்டுது நகைச்சுவை.

    ReplyDelete
  7. மிக அருமையான நடை
    //எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி உக்காந்து இருந்தாலும் இருப்பீங்க...ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டீங்க.//
    மிக சாதாரணமாக வீட்டில் அம்மா குழந்தைகளுக்கிடையே நடைபெறும் விசயங்களை எளிமையாக, ரசிக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. கைப்புள்ள,

    சூப்பர்

    அன்னையர் தினத்துக்கு அருமையான பரிசு.

    ReplyDelete
  9. மிக அருமை!!

    ஆமா நீங்க சூப்பர் சூப்பர் ஹிட் முகாப்லா காலத்து ஆளா??? :p

    ReplyDelete
  10. kaipulla,onniya vida on thambi bayangarama osuppeththuvar pola..! ammaangarathaala odambu ranagalam aagama irundirukkun-nu nanaikkiren.
    nallaththanya irukku padhivu...siriththen...mazhidthen.. nanrigal pala...

    ReplyDelete
  11. hmm edukkutthan ella veetlayum, pombala pasanga venumgaradhu .. color blindness kodumai ellam varaadhu ..podi colorkku definition therinju irukkum

    ReplyDelete
  12. SUMMA PICHHU UTHARURA KAIPPU

    ReplyDelete
  13. //ஹலோ! வடிவேலு படம், "கைப்புள்ள" படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்.//

    அந்த படம் எவ்வளவு தேடியும் கெடக்கலைங்க...உங்க கிட்ட இருந்தா குடுங்க...ஒடனே போட்டுருவோம்.

    ReplyDelete
  14. //Thadipasanga #4 nallaa irunthuchu.
    Thadipasanga college life matters ellam potaa innum nallaa irukkum //

    வாங்க அனானி,
    அதையும் போடறேன்... நேரம் கெடக்கும் போது.
    :)-

    ReplyDelete
  15. //அன்னையர் தினம்ன்னு பில்டப் குடுத்துட்டு எழுதினது என்னவோ சுய புராணம். நல்லா இருமய்யா. //

    யார் யாரால எது எது முடியுமோ...எது எது தெரியுமோ...அத அத பத்தி தான் எழுதணும். இப்ப நாளைக்கு நானே அமெரிக்க ஃபிஸ்கல் பாலிஸி பத்தி ஒரு பதிவு போட்டா அது ஒமக்கும் புரியாது...எனக்கும் புரியாது.

    ReplyDelete
  16. //கைப்பு அண்ணா, உங்களுக்குக் கல்யாணமாகி, உங்க நெசமான கைப்பொண்ணுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கவேண்டும் :).. அப்போ தெரியும் உங்க அம்மா எப்படி ஒரு தியாகச் சின்னமாவும், பொறுமையின் பூஷணமாவும் இருந்திருக்காங்கன்னு :)//

    தங்கச்சி வேணாம்மா! எனக்கு இப்பவே அழுவாச்சி வருது. பாவத்தின் பலனை எப்படியிருந்தாலும் அனுபவிச்சித் தானே ஆகனும்...அனுபவிப்போம்...வேற வழி?

    ReplyDelete
  17. //வாழ்க வளமுடன்....

    வாழ்த்துகள்:-))

    **
    அப்புறம் அன்னையர் தின வாழ்த்துகள்//

    வாங்க முத்துகுமரன்,
    நன்றிகள் பல.

    ReplyDelete
  18. //விவேக்-ஆட்டோ-பசங்க (என்ன படம்யா அது?) இது அப்படியே கண் முன்னாடி வருது:-))//

    டேய் பெரியவனே...டேய் சின்னவனேனு அந்த பசங்களோட அப்பா கூப்பிடுவாரே...அதை தானே சொல்றீங்க. அந்த லெவல் இல்லன்னாலும்...அதுல கொஞ்சம் சின்ன லெவல் நீங்க நெனச்சிக்கலாம்...ஒன்னும் தப்பில்ல.

    ReplyDelete
  19. //மிக சாதாரணமாக வீட்டில் அம்மா குழந்தைகளுக்கிடையே நடைபெறும் விசயங்களை எளிமையாக, ரசிக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். //

    அதே அதே! ரொம்ப நன்றி அனுசுயா மேடம்.

    ReplyDelete
  20. //
    சூப்பர்

    அன்னையர் தினத்துக்கு அருமையான பரிசு. //

    வாங்க கோபி,
    இன்னும் நம்மளை மறக்காம இருக்குறதை நெனச்சா சந்தோஷமாயிருக்கு.நன்றி.

    ReplyDelete
  21. //ஆமா நீங்க சூப்பர் சூப்பர் ஹிட் முகாப்லா காலத்து ஆளா??? :p //

    ஆமாங்க! ஆனா அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன்(கவனிக்க...ஸ்கூல் தான்)

    ReplyDelete
  22. //onniya vida on thambi bayangarama osuppeththuvar pola..! //

    மிகச் சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க. நீங்களும் உங்க வீட்டுல மூத்தவரோ?
    :)

    ReplyDelete
  23. //podi colorkku definition therinju irukkum//

    ஹ்ம்ம்...அது எனுமோ வாஸ்தவம் தான். நீங்களாவது சொல்லுங்க அது என்ன பொடின்னு.

    ReplyDelete
  24. //SUMMA PICHHU UTHARURA KAIPPU //

    வாங்க ரவி! ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  25. Welcome back Buddy...

    Had a Nice reading your post after a long time....:)

    ReplyDelete
  26. //Welcome back Buddy...

    Had a Nice reading your post after a long time....:) //

    வாங்க "கை" ...உடம்பு நல்லாயிருச்சா?

    ReplyDelete
  27. podi color stands for mookupodi color and no other podis - dont make the mistake of thinking it is sambar podi, rasa podi, kapi podi etc.

    ReplyDelete
  28. //podi color stands for mookupodi color and no other podis//

    அட போங்கப்பா! இப்ப நான் மூக்குப் பொடியைத் தேடி எங்கேயிருந்து அலையறது...அதுவும் ராஜஸ்தானிலே. அப்படியே அது இங்க கடைகள்ல கெடச்சாலும் அத என்னன்னு சொல்லி கேக்கறது? பொடி கலர்னா என்னன்னு தெரியாத முட்டாளாவே இருந்துட்டு போறேன்.
    :(-

    ReplyDelete
  29. super thadipasangapaa.... ungalukku ellam kalyaanam aavumilla... appo wife ku enna color vaangareengannu paapom...

    ReplyDelete
  30. //appo wife ku enna color vaangareengannu paapom... //

    வாங்க டே ட்ரீமரு!
    ஏங்க இப்பவே பயங்காட்டுறீங்க? "இடுக்கண் வருங்கால் நகுக" பண்ணிக்குவோம்ங்கிற நம்பிக்கையில தான் இருக்கேன்.

    ReplyDelete