ஆனந்த விகடனில் 3D படங்களை நம்மில் பலரும் பார்த்து ரசிச்சிருப்போம். எனக்கு தெரிந்து அந்த படங்கள் விகடனில் 10 ஆண்டுகளுக்கு முன்னரும் வந்தன அதன் பிறகு சமீபத்தில் 2005ஆம் ஆண்டும் வந்தன. சமீபத்தில் வந்த படங்கள் சிகப்பு-பச்சை நிற சிறப்பு கண்ணாடி கொண்டு பார்க்கும் வகையது. ஆனால் முன்னர் வந்த படங்கள் கண்ணாடி இன்றி பார்க்கும் வகையது. 3டி திருவிழாவில் இங்கு நீங்கள் கண்ணாடி இல்லாமல் பார்க்கக் கூடிய படங்களைக் கண்டு ரசிக்கலாம். ஆனந்த விகடனில் இப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இதை எப்படி பார்க்க வேண்டும் என தெரிந்திருக்கும்.
உங்களுக்கு பார்க்க தெரியாதா? கவலை இல்லை. கீழே கொடுத்திருக்கிற டிப்சை கடைபிடிச்சீங்கனா சுலபமா பார்க்கலாம்.
1. படத்துல எதாச்சும் ஒரு புள்ளியை தேர்ந்தெடுத்து நல்லா கூர்ந்து பார்த்துட்டே இருங்க.
2. அந்த புள்ளியையே தொடர்ந்து கவனிச்சு பார்க்கணும். கொஞ்ச நேரம் பார்த்துட்டு ஒன்னும் தெரியலனு விட்டுடக் கூடாது.
3. பார்த்துட்டே இருந்தீங்கனா ஒரு மாதிரி கலங்கலா படம் மாறறது போல தெரியும். கலங்கலா தெரியுதுனு விட்டுடாதீங்க. இப்ப தான் நீங்க அந்த புள்ளியை இன்னும் கவனமா பார்க்கணும்.
4. திடீர்னு நீங்க பார்த்துட்டு இருக்கிற படம் மேலெழற மாதிரி இருக்கும். அப்பவும் முன்ன கவனமா பார்த்துட்டு இருந்த மாதிரியே பாருங்க.
5. 3டி பார்வை கிடைச்சிருக்குமே? பார்த்து ரசிங்க. வாழ்த்துகள்.
ஆனந்த விகடன்ல பார்க்கும் போது புத்தகத்தை மேலும் கீழும் அசைச்சு நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி பார்த்திருப்போம். ஆனா இங்கே படம் தெரியற கணினி திரை அசையாது என்பதால் நம்ம தலையைத் தான் ஆட்டி அசைச்சு பார்க்க வேண்டியிருக்கும். ஆனாலும் படத்தைப் பார்த்ததும் அதே ஆனந்த விகடன் மகிழ்ச்சி கிடைக்கும்.
3டி படம்னு இதை நாம சொன்னாலும் கண்ணாடி இல்லாம பார்க்கக் கூடிய இந்த படங்களை உலகம் முழுவதும் ஸ்டீரியோகிராம்னு(Stereogram) சொல்றாங்க. இதுல இரண்டு வகை. முறையற்ற புள்ளிகளை அடிப்படையாக் கொண்டு உருவான ஸ்டீரியோகிராம்களை Single Image Random Dot Stereograms (SIRDS)னு சொல்றாங்க. ஒரு படத்தை அல்லது பொருளையோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை ஓவர்லே(Overlay...மன்னிக்கவும் தமிழில் என்னங்க?) உருவாகும் படங்களை Single Image Stereograms (SIS)னு சொல்றாங்க. கீழே இரண்டி ஸ்டீரியோகிராம் கொடுத்து இருக்கேன்.
முதல் படம் SIS வகையைச் சேர்ந்தது. இதுல கண்டுபிடிச்சு பார்க்க ஒன்னுமில்லை. பார்க்கறதும் ரொம்ப சுலபம். 3டி பார்வை கிடைச்சதும் படத்தோட பிரம்மாண்டத்தை ரசிங்க.
இந்த படம் SIRDS வகையைச் சேர்ந்தது. நல்லா கவனிச்சு பார்த்தா தான் 3டி உருவமும் அதுல மறைஞ்சிருக்கற உருவமும் என்னன்னு தெரியும்.
சரி! இந்த படத்தைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு: "ஒத்தை ரூபா தந்தா ஒரு ரவுண்ட் தான். ரெண்டு பத்து ரூபா தந்தா உன் இஷ்டம் போல தான்". இப்ப இன்னும் ஈஸியா கண்டுபிடிச்சிருப்பீங்களே. பார்த்தவங்க அது என்னன்னு சொல்லணும்.
3டி திருவிழா கைப்புள்ள Callingஇல் தொடரும். வர்ற நாட்களில் இன்னும் சில தகவல் சொல்றேன் ஸ்டீரியோகிராம் பத்தி.
ரெண்டாவதுல இருக்கறது குதிரையோ.. இல்ல க்ரேட் டேன் மாதிரி பெரிய சைஸ் நாயோ..
ReplyDeleteரொம்ப உத்துப் பாத்தா தலசுத்துது கைப்புள்ள!
தப்பா சொல்லிட்டிங்க.. 3டி பார்வையில்லை 1 1/2 பார்வை (ஒன்றைகண்ணுல) பார்த்தாத்தான் தெரியும்.:)
ReplyDeleteமுதல் படம் அட்டகாசமா இருக்கு. அதும் அந்த வானம் ரொம்ப உசரத்துல தெரியுது..
இரண்டாவதுதான் கொஞ்சம் கஷ்தப்படுத்துச்சி.. ஆனாலும் பார்த்துட்டேன்ல..
ஆனா அது மானா/குதிரையான்னு சந்தேகம் இருந்தது.. முகம் கொஞ்சம் நீட்டமா இருக்கு அதனால குதிரையோன்னு நினைச்சேன்.. பார்த்தா வாலைக் காணோம்.. சரி மானாத்தான் இருக்கும் போல
சரியா
கைப்புள்ள முந்தி விகடன்ல வந்தப்ப அந்தப் படங்களையெல்லாம் எடுத்து வெச்சிருந்தேன் அது எப்படியோ காணாமப் போயிருச்சு.
ReplyDeleteவிகடன்ல வந்தப்ப இதே மாதிரி பாக்குறதுக்கு முறைகள் இருந்துச்சு...அது ஒன்னும் பிடிபடலை. நானே இப்பிடி அப்படி பாத்தேன். படக்குன்னு தெரிஞ்சிருச்சு. எனக்குத் இந்தப் படங்களப் பாக்குறது ரொம்பவே லேசு.
யய்யா இது மாதிரி இன்னும் நெறையக் கொடுங்கய்யா!
ரெண்டாவது படம்... வாலில்லாத குருத!!
ReplyDelete//ரெண்டாவதுல இருக்கறது குதிரையோ.. இல்ல க்ரேட் டேன் மாதிரி பெரிய சைஸ் நாயோ..
ReplyDeleteவாங்க இராமநாதன்! அது கிரேட் டேன் இல்ல குதிரை தான்.
//ரொம்ப உத்துப் பாத்தா தலசுத்துது கைப்புள்ள! //
பழகிடுச்சுனா சரியா போயிடும்னு நினைக்கிறேன்.
//தப்பா சொல்லிட்டிங்க.. 3டி பார்வையில்லை 1 1/2 பார்வை (ஒன்றைகண்ணுல) பார்த்தாத்தான் தெரியும்.:) //
ReplyDeleteவாங்க கீதா மேடம்! இந்த படங்கள் எப்படி தெரியுது? இதுக்கு பின்னாடி என்ன அறிவியல் இருக்குனு வர்ற பதிவுகள்ல சொல்றேன்.
ஆமா! நீ அப்படி தான் சொன்னே? விமானப்படை பதிவை இன்னும் முடிக்கலியேனு கேக்கறீங்களா? சில புகைப்படங்களுக்காக வெயிட்டிங். அது வந்ததும் கண்டிப்பா போடறேன்.
//ஆனா அது மானா/குதிரையான்னு சந்தேகம் இருந்தது.. //
க்ளூவைப் பார்த்த பின்னும் இந்த சந்தேகம் வரலாமா? அது குதிரை தான். வாலை அந்த பக்கம் சுருட்டிட்டு இருக்குனு வச்சுக்கங்களேன்.
// நானே இப்பிடி அப்படி பாத்தேன். படக்குன்னு தெரிஞ்சிருச்சு. எனக்குத் இந்தப் படங்களப் பாக்குறது ரொம்பவே லேசு.//
ReplyDeleteவாங்க ராகவன்! அப்போ நீங்க சுலபமா பார்த்திருப்பீங்க!
//யய்யா இது மாதிரி இன்னும் நெறையக் கொடுங்கய்யா!//
கண்டிப்பா! உங்க ஆதரவோட 3டி திருவிழா தொடரும்
//ரெண்டாவது படம்... வாலில்லாத குருத!!//
ReplyDeleteவாங்க அனானிமஸ்! தங்கள் வருகைக்கு நன்றி. குருத என்பது சரியான பதில். வாலில்லாததா? என்பது எனக்கும் சந்தேகம் தான்.
I too saw the pic:)
ReplyDeleteவாங்க தேவ்!
ReplyDeleteஉங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்பறேன்.
//கைப்புள்ள முந்தி விகடன்ல வந்தப்ப அந்தப் படங்களையெல்லாம் எடுத்து வெச்சிருந்தேன் அது எப்படியோ காணாமப் போயிருச்சு.//
ReplyDeleteராகவன், அதுல சிலவற்றை இங்கே பார்க்கலாம்
கோபி...வாங்க...வாங்க! முதல் முறையா வர்றீங்க! உங்களுடைய சுட்டிக்கு நன்றி. ஆனந்த விகடன்ல வந்தது இன்னும் கொஞ்சம் படம் என்கிட்ட இருக்குனு நினைக்கிறேன். அது கிடைச்சுதுனா ஸ்கேன் பண்ணி போடறேன். நேத்து தான் உங்க தகடூர் சாப்ட்வேரை பார்த்தேன். உபயோகிச்சு பார்த்துட்டு சொல்றேன். அடிக்கடி வாங்க.
ReplyDelete// ராகவன், அதுல சிலவற்றை இங்கே பார்க்கலாம் //
ReplyDeleteஆகா கோபி. கிளப்பீட்டீங்க....இனிமே ஆபீசுல இதுகள பாக்குறதேதான் வேலை. வாழ்க கோபி.
கைப்புள்ள,
ReplyDeleteநன்றி. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.. இதுல இப்ப 3D Movies எல்லாம் வருது.
இந்த 3 Movies ஐப் பாருங்க.
கோபி, நீங்க அந்த 3டி படங்கள யாஹூல அப்லோடு பண்ணாதீங்க. ரெசொல்யூஷன் போகுது. imagestation மாதிரி எடங்கள்ள அப்லோட் பண்ணுங்க.
ReplyDeleteகைப்புள்ள...இந்த மாதிரி நீங்களும் நெறைய கொடுங்க.
இல்லீங்க கோபி! 3-D மூவீஸ் SIS தொழில்நுட்பத்துல வர்றது பத்தி கேள்விபட்டதில்லை. இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். தகவலுக்கு நன்றி.
ReplyDelete//கைப்புள்ள...இந்த மாதிரி நீங்களும் நெறைய கொடுங்க. //
ReplyDeleteகண்டிப்பா ராகவன். நீங்க சீக்கிரமே எதிர்பார்க்கலாம்.
இன்னைக்கு தான் உங்க 3டி ஐந்து பதிவையும் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு..தொடருங்கள்
ReplyDelete//ரொம்ப நல்லா இருக்கு..தொடருங்கள் //
ReplyDeleteஅப்ப்டீங்கறீங்க?...தொடர்ந்துடுவோம்!
3D text SIRDS stereogram maker on http://www.signgenerator.org/stereogram/
ReplyDeletesathiyama....onnumey theriyalingov!!! (kannu thaan vaLikkuthu)
ReplyDeleteஇவ்ளோ எல்லாம் கஷ்டப்படவேண்டாம் கைப்ஸ்.. ஒன்றரைக் கண் மாதிரி கண்ணை வச்சிக்கிட்டு பார்த்தாலே தெரிஞ்சிடும் :-D
ReplyDeleteமுதல் படம் நல்லா இருக்கு. இரண்டாவது குதிரை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகிறிஸ்ற்மஸ் வாழ்த்துக்கள்
ReplyDelete//இவ்ளோ எல்லாம் கஷ்டப்படவேண்டாம் கைப்ஸ்.. ஒன்றரைக் கண் மாதிரி கண்ணை வச்சிக்கிட்டு பார்த்தாலே தெரிஞ்சிடும் :-D //
ReplyDeleteஇப்பெல்லாம் எனக்கு என்ன பண்ணாலும் தெரிய மாட்டேங்குது :(
//முதல் படம் நல்லா இருக்கு. இரண்டாவது குதிரை என்று நினைக்கிறேன். //
ReplyDeleteகுதிரையே தான். :D
//கிறிஸ்ற்மஸ் வாழ்த்துக்கள்//
நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.