Thursday, February 02, 2006

யோசிப்பவரைப் போலவே...

யோசிப்பவரோட பதிவுகள்ல வர்ற மாதிரி நிறைய எஸ் எம் எஸ் கடிகள் எனக்கும் சமீபகாலமா வருது. நிறைய பேர் படிக்கிறாங்கனு நினைக்கிறேன். ஒரே டார்ச்சர் போங்க. அதை நான் மட்டும் அனுபவிச்சா நல்லாருக்குமா? யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

"நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சாம்பாருக்கு கடையிலே தான் பருப்பு வாங்கணும்"

"என்ன தான் நாய் நன்றியுள்ள பிராணின்னாலும் அதனால தாங்க்யு சொல்ல முடியுமா?"

"என்ன தான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டு தான் சாப்பிடணும்"

மேலே உள்ளது எல்லாம் தத்துவம்னா, கீழே உள்ளது ஒரு சூப்பர் வேண்டுதல்.

"சாமி! எனக்கு மெசேஜ் அனுப்பாதவங்க செல் எல்லாம் காணாமப் போயிடணும் சாமி"

16 comments:

  1. பின்னறீங்க ஐயா! மனசு லேசாக அப்பப்போ இப்படியே கடிங்க

    ReplyDelete
  2. பின்னறீங்க ஐயா! மனசு லேசாக அப்பப்போ இப்படியே கடிங்க

    ReplyDelete
  3. ஏன்? ஏன்? ஏய்யா! எதுக்க்க்க்க்க்க்க்க்க்கு? வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....விட்டுருங்க...

    ReplyDelete
  4. வாங்க இளா,
    உங்க கருத்துக்கு நன்றி. இரண்டு தடவை பின்னூட்டம் போட்டிருக்கீங்க! அதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி.

    ReplyDelete
  5. கைப்புள்ள, உங்களுக்கும் வந்து ஒரு உள்ளேன் அய்யா போட்டாச்சி. இனிமேலாவது அழாம இருங்க. ஓக்கேவா.

    வேணும்னா இதை ரெண்டு வாட்டி பப்லிஷ் பண்ணிட்டு எனக்கும் ஒரு ஸ்பெசல் நன்றிய போடுங்க.

    ReplyDelete
  6. //வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....விட்டுருங்க... //

    ஐ...ஐ...அஸ்கு புஸ்கு...பாவம் பார்த்தா எங்க பொழப்பு எப்பிடி நடக்குறதாம்?

    ReplyDelete
  7. வாங்க கொத்தனாரே!
    உங்களுக்கும் ஒரு ஸ்பெசல் நன்றி. ஆனா இளா நிஜமாலே இரண்டு வாட்டி பின்னூட்டம் போட்டிருந்தாரு. கமர்கட்டு கொடுத்து ஏமாத்தற வேலையெல்லாம் நடக்காது கொத்தனாரே!
    இந்த பிரச்சனையை ஐ.நா.சபை வரை கொண்டு போவதாக உத்தேசம் :)-. ஆமா உங்களுக்கு இன்னிக்கு தூக்கம் வரலியா? இவ்ளோ நேரம் முழிச்சிட்டு இருக்கீங்க?

    ReplyDelete
  8. கைப்புள்ளே,

    69-க்கு அப்படி சத்தம் போட்டீங்களே. இப்போ பாத்தீங்களா. நமக்கு கட்சி பக்கபலம் இருக்குதுல்லா. என்னவே சொல்லுதீரு.

    ReplyDelete
  9. //69-க்கு அப்படி சத்தம் போட்டீங்களே. இப்போ பாத்தீங்களா//

    சத்தம் எல்லாம் போடலீங்கண்ணா!
    உங்க பலத்தையும் தெரிஞ்சுக்கிட்டோமுங்கண்ணா! புடிங்க "இணைய உலகின் கட்டைதுரை"ங்கிற பட்டத்தை.

    ReplyDelete
  10. //என்னாப்பா கைப்புள்ள என் மொபைல் கானாமப் போயித்போது அத மட்டும் கடவுள்கிட்ட வாபஸ் வாங்கிக்கோயா.... //

    கண்டிப்பா! கைப்புள்ள கிட்ட சொல்லிட்டீங்க இல்ல! கவலையை விடுங்க!

    ReplyDelete
  11. இட்லி பொடிய வச்சி இட்லி திங்கலாம் ஆனா மூக்கு பொடிய வச்சி மூக்க திங்கமுடியாது..

    ReplyDelete
  12. கார்த்திக்!
    நடத்துங்க...

    ReplyDelete
  13. கைப்புள்ளளளள!(எக்கோவோடு படிக்கவும்), நமக்கே போட்டியா வந்தா எப்டி?

    ReplyDelete
  14. //நமக்கே போட்டியா வந்தா எப்டி?//

    இல்லைலலலலலலலலலலலலலலல!(அதே எகோ!). நேத்து யாரையாச்சும் கடிக்கணும் போல இருந்துச்சு அதான். மத்தபடி உங்க ரேஞ்சுக்கு என்னால வர முடியுமா? உங்க பேரைப் போட்டதுனால தான் இத்தனை பேர் வந்திருக்காங்க.

    ReplyDelete
  15. சின்ன புள்ளத்தனமா இருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  16. //சின்ன புள்ளத்தனமா இருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!//

    கைப்புள்ளையே ஒரு விளையாட்ட்டு பையன் தானே!

    ReplyDelete