அன்னிக்கு ஒரு நாள் ஞாயித்துக் கெழமை. வீட்டுலேருந்து தெருவுல இறங்கி நடந்து எங்கேயோ போய்க்கிட்டிருந்தேன். தெருவுல பத்து வயசு பையன் ஒருத்தன் சத்தமா பாட்டு பாடிக்கிட்டு போய்க்கிட்டுருந்தான். "ச்சூ...ச்சூ...மாரி... ச்சூ...ச்சூ...மாரி..." அப்படிங்கிற பூ படத்து பாட்டை. பாட்டோட இந்த முதல் வரியைப் பாடுன அந்த பையன் பாட்டுக்கு நடுவுல இருக்குற வரிகளைப் பாடலை. அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை. ஆனா பாட்டோட கடைசி வரியை மட்டும் அழுத்தம் திருத்தமா பாடுனான். "கொல்லை பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி" அப்படின்னு. அந்த கடைசி வரியைப் பாடுனப்போ அந்த பையன் ரொம்ப எஞ்சாய் பண்ணி பாடுன மாதிரி இருந்துச்சு. முகமெல்லாம் ஒரே சிரிப்பு. பாட்டோட மத்த வரிகளை எல்லாம் விட்டுட்டு அந்த பையன் இந்த கடைசி வரியை மட்டும் பாடுனதை பாத்த எனக்கும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்லனும்னா அந்த பாட்டை டிவில முதல் முறை கேட்டப்பவே அந்த கடைசி வரி மட்டும் தான் என் மனசுல நின்னுச்சு. "அடுத்தவன் கிட்ட இருக்கற நல்லதை எல்லாம் விட்டுடுங்க வேண்டாததை எல்லாம் கத்துக்கிட்டு வந்துருங்க" அப்படின்னு சின்ன வயசுல அம்மா அடிக்கடி திட்டுனதும் ஞாபகம் வந்துச்சு. பள்ளிக்கூட நண்பன் மன்னாரு(பட்டப்பெயர் தான்) கூட, நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி வீணா போற சம்பவம் எதாச்சும் நடந்துச்சுன்னா - உதாரணத்துக்கு ரெண்டு பேரும் பரிட்சையில ஒரே மாதிரி கம்மி மார்க் வாங்குனாலோ, க்ளாஸ்ல பேசி ஒன்னா வெளியே நின்னாலோ ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்லுவான் "டேய் வுடுடா! நாம ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க. இதை எல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு"ன்னு. இது காலப்போக்குல "ஒரே குட்டை...ஒரே மட்டை..வுடுடா"ன்னு சுருக்கமா சொன்னாலும் புரிஞ்சுக்கற மாதிரி ஆகிப் போச்சு. வலையுலகத்துலேயும் நான் ஊறுன அதே குட்டையில் ஊறிய சில "எஞ்சோட்டு ஃப்ரெண்டுங்க" இருப்பாங்கங்கிற நம்பிக்கையில ஒரு முழுக்க முழுக்க வேண்டாத சமாச்சாரங்களை உள்ளடக்குன பதிவு. இப்பதிவு ஒரு சாராருக்கு ஒவ்வாமையைத் தரலாம். அப்படி தர்ற பட்சத்தில் இந்தப் பதிவைச் சாய்ஸ்ல விட்டுடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அப்போ ஆறாவது படிச்சிட்டுருந்தேன்னு நெனைக்கிறேன். வருஷம் அனேகமா 1989ஆ தான் இருக்கனும். அப்போ இந்தியாவின் பிரதம மந்திரியா இருந்த ராஜீவ் காந்தி அப்போதைய சோவியத் யூனியன்ல சுற்றுப்பயணம் மேற்கொள்ளறாரு. அரசு முறை பயணத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பினார்கள். எனக்கு 'live'ஆகப் பார்த்த ஞாபகம் தான். மாஸ்கோவில் அவருக்கு ரஷிய நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்படுகிறது. எப்படி? ரஷிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒரு இளம்பெண் ஒரு தட்டில் பெரிய கேக் ஒன்றை ஏந்தி ராஜீவை வரவேற்க வருகிறார். பெரிய கேக்கின் நடுவில் ஒரு சிறிய கின்னத்தில் உப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பாரம்பரிய வரவேற்பு முறையின் படி, வரவேற்கப்பட்டவர் கேக்கின் ஒரு சிறு துண்டை எடுத்து கின்னத்தில் உள்ள உப்பில் தோய்த்து சாப்பிட வேண்டும். ராஜீவும் அவ்வண்ணமே செய்கிறார். ஆனால் அதற்கு முன்னர் அவர் செய்தது தான் என் கவனத்தைக் கவர்ந்தது - அவர் செய்தது அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது. மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜீவ் ரஷிய பெண்ணை முத்தமிடும் படம் முதல் பக்கத்தில் வெளியானது. அன்று ஸ்கூலுக்குச் சென்றதும் எஞ்சோட்டு பையன் ஒருத்தன் என்னை பார்த்து கேட்டது "டேய்! நேத்து ராஜீவ் காந்தி எப்படி கிஸ் அடிச்சான் பாத்தியா?" :) இது நாள் வரையிலும் ராஜீவும் மிக்கைல் கோர்பசேவும் அப்பயணத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும், அப்பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. அதெல்லாம் யாருக்கு வேணும்ங்கறீங்களா? அதுவும் சரி தான். நிற்க. பிரபலமாக இருக்கும் நடிகர்கள், அரசியல்வாதிகள் இவர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஏக வசனத்தில் குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)
நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது. கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1995ஆம் ஆண்டில் வெளிவந்த எத்தனை தமிழ் படங்களைத் தியேட்டரில் பார்த்திருப்பேன் என நினைவிலில்லை. ஆனால் 'U' சான்றிதழ் அல்லாத அவ்வாண்டில் வெளிவந்த சில 'பெயர் பெற்ற' படங்களை நானும் எஞ்சோட்டுப் பையன்களும் தியேட்டரில் தவறாது பார்த்துவிடுவோம். அது போல தான் ஒரு பிரபல ஆங்கில 'expletive' ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் ஆடுகளத்தை நினைவுபடுத்தும் சென்னை ஆனந்த் தியட்டேரில் அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்க நானும் எனது கூட்டாளிகள் இருவரும் புதன் கிழமை மதிய க்ளாஸ்களை பங்க் அடித்து விட்டு மதியான சாப்பாட்டை ஏசிடெக் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். பெசண்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை செல்லும் 23C வழித்தடப் பேருந்தில் காந்தி மண்டபம் நிறுத்தத்தில் மூவரும் ஏறினோம். ஷோ ஆரம்பிக்க கொஞ்ச நேரமே இருந்த காரணத்தினால் பேருந்து ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிரில் மெதுவாக செல்லும் போதே இறங்கி விட வேண்டும் என்று மூவரும் முடிவு செய்தோம். அப்படி இறங்காவிட்டால் பஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் நிற்கும். நீண்ட தூரம் பின்புறம் நடந்து வர வேண்டும். அந்த ப்ளான் பிரகாரம் நான் முதலில் பஸ்சின் கடைசி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னாடி என் கூட்டாளிஸ் ரெண்டு பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி பஸ் ஆயிரம் விளக்கு எதிரில் ஸ்லோவாகவில்லை. என் பின்னாடி நின்று கொண்டிருந்த ரெண்டு பேரில் ஒருவன் எதிர்பாராத விதமாக என்னை பஸ்சிலிருந்து தள்ளி விட்டு விட்டான். எப்படியோ சேதாரம் இல்லாமல் சிங்கிள் பீஸாகக் கீழே இறங்கிவிட்டேன். என்னுடன் வந்த ரெண்டு பேரும் டிவிஎஸ் வரை பஸ்சிலேயே சென்று விட்டனர்.
இந்த இடத்தில் கதையின் ஹீரோ...அட நான் தானுங்கோ...சராசரி தமிழ் பட ஹீரோ மாதிரி செயல்படாமல் ஒரு ஹாலிவுட் ஹீரோ மாதிரி வித்தியாசமாக செயல்பட்டேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன பண்ணேன்? பஸ்சுலேருந்து நாம தள்ளி விட்டவன் செத்தானா பொழச்சானான்னு ரெண்டு பேரும் பயந்துக்கிட்டே டிவிஎஸ் பஸ் ஸ்டாப்லேருந்து பின்னோக்கி ஆனந்த் தியேட்டர் வரை வேக வேகமாக நடந்து வந்தார்கள். அப்படி ஓட்டமும் நடையுமாக வந்தவர்களை வரவேற்ற கதையின் ஹீரோ சொன்னது "டேய்! 20 ரூ டிக்கெட் தாண்டா கெடைச்சது. படம் போடப் போறான் சீக்கிரமா வாங்கடா". படத்தின் முதல் பாதியை என்னோடு அமைதியாகப் பார்த்த இருவரும் இடைவேளையின் போது விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். "டேய் மாமா! பஸ்சுலேருந்து தள்ளி விட்டுட்டோம்னு நீ எங்க சட்டையைப் புடிப்பேன்னு பயந்துக்கிட்டே வந்தோம். நீ என்னடான்ன டைம் வேஸ்ட் பண்ணாம டிக்கெட் வாங்கி வச்சிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கே...அதுவும் பால்கனி டிக்கெட்" என்றார்கள். அப்போ தான் நானும் தெரிஞ்சிக்கிட்டேன் இந்த மாதிரி ஓடற பஸ்சுலேருந்து யாராச்சும் தள்ளி விட்டாங்கன்னா அவங்க சட்டையைப் புடிக்கனும்னுட்டு. ஓடற பஸ்சுலேருந்து ரிஸ்க் எடுத்து பாக்கற அளவுக்குப் படத்துல "ஒன்னும்" இல்லை. ஒரு வேளை பஸ்சுலேருந்து விழுந்து எதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா மறுநாள் தினத்தந்தில ஹெட்லைன்ஸ் எப்படி வரும்னு யோசிச்சுப் பார்த்தேன் - "கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். வர்க் ஷாப் காக்கி சீருடை அணிந்திருந்தார்". கேக்கவே கொஞ்சம் கேவலமா தான் இருக்கில்ல? ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன்.
அன்னிக்கு என்கூட பஸ்சுல வந்த ரெண்டு பேருல ஒருத்தன்(அதாவது என்னை புடிச்சித் தள்ளாதவன்) ஒருத்தன் என்ன ஒருத்தன் - அவன் பேரு தியானேசுவரன் - ஷேன் வார்னையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு பதிவெழுதினானே அவனே தான் - கில்பான்சி படத்திலும் ஒரு நேர்மையையும் ethicsஐயும் எதிர்பார்க்கும் அவனை மாதிரி ஆன ஆளை இது வரைக்கும் நான் பாத்ததேயில்லைங்கங்கோ. நான் சொல்லும் காலகட்டத்தில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பழம்பெரும் "விஞ்ஞான் நூலின்" பெயரைக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான மலையாள தேசத்தோடு தொடர்புடைய அந்த இயக்குனரின் படம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. "ஒளிவிளக்கான" இயக்குனரால எடுக்கப்பட்ட "பஞ்சபூதங்களில்" ஒன்றின் பெயரைக் கொண்ட அந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினான். "மச்சி! ஏண்டா உனக்கு அந்த படம் பிடிக்கலை, இந்த படம் பிடிச்சிருக்குன்னு கேட்டேன்". அதுக்கு அவன் சொன்ன பதில் "என்னடா படம் அது? கேவலமா இருந்துச்சு. அந்த படத்தைப் பார்த்தா எதோ வாழறதே கில்மாவுக்காகத் தாங்கிற மாதிரி இருக்கு. ஆனா இந்த படம் ஃபீலிங்சுக்கு முக்கியத்துவம் குடுக்குது மச்சி. நம்மளை நம்பி வந்தவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கலைன்னா என்னாகும்னு நல்லா சொல்லிருக்காங்க. நல்ல படம் அது" அப்படின்னான். பட்...அந்த சின்ன வயசுலேயே அவ்வளவு நீதியோடயும் நியாயத்தோடயும் நேர்மையோடயும் சிந்திச்ச அவனோட அந்த அப்ரோச் எனக்கும் பிடிச்சிருந்தது :)
அடுத்தவன் கிட்ட இருக்கற நல்லதை எல்லாம் விட்டுடுங்க வேண்டாததை எல்லாம் கத்துக்கிட்டு வந்துருங்க//
ReplyDeleteதிட்டினதுல 100த்துல 1 வார்த்தை சேம் பீலிங் :))
//அப்போ ஆறாவது படிச்சிட்டுருந்தேன்னு நெனைக்கிறேன். வருஷம் அனேகமா 1989ஆ தான் இருக்கனும்///
ReplyDelete/கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1995ஆம் ஆண்டில் வெளிவந்த எத்தனை தமிழ் படங்களைத் தியேட்டரில் பார்த்திருப்பேன்//
கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு உதைக்குது எதுக்கும் நீங்க ஆறாம் கிளாஸு கொஞ்சம் ரெண்டுவருசம் பின்னாடி தள்ளி உக்காந்து படிங்க :)))))
அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா... :))
ReplyDelete\\கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். \\
ReplyDelete;)))) தல உங்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது தல ;)))
நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)
;)
இப்படிக்கு
தல'கள் ஊறுன அதை குட்டையில் ஊறுன மட்டை ;)
//திட்டினதுல 100த்துல 1 வார்த்தை சேம் பீலிங் :))//
ReplyDeleteவாங்க சின்னபாண்டி,
என்ன பாஸ் ஒரே ஒரு வார்த்தை தான் சேம் ஃபீலிங்கா? அப்போ மிச்ச 99?
:(
//கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு உதைக்குது எதுக்கும் நீங்க ஆறாம் கிளாஸு கொஞ்சம் ரெண்டுவருசம் பின்னாடி தள்ளி உக்காந்து படிங்க :)))))//
ReplyDeleteகுட் கொஸ்டீன். கொஞ்சம் விம் போட்டு வெளக்கறேன்...
1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
1995 மே வரை - பன்னெண்டாப்பு
1993 - பத்தாப்பு
1992 - ஒன்பதாப்பு
1991 - எட்டாப்பு
1990 - ஏழாப்பு
அப்போ 1989 ஆறாப்பு தானுங்களே ஆப்புசாமி சார்? :) ஸ்கூலில் நான் கோட் அடிக்கவில்லை என்பதனையும் தாழ்மையுடன் கனம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் :)
இருந்தாலும் நீங்க சுட்டிக் காட்டுனதுலயும் ஒரு விஷயம் நோட் பண்ணேன். இப்படி இருந்ததை...
//நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிந்த பருவம் அது. //
இப்படி மாத்தீட்டேன்...
நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது.
:)
//அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா... :))//
ReplyDeleteகுட்டையில் ஊறாத மட்டை தான் எங்குமில்லையா....அட ஹோயா...
:)
//;)))) தல உங்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது தல ;)))
ReplyDeleteநமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)
;)//
கணபதிராமா? அந்த தியேட்டர் இன்னும் இருக்குப்பா. ஆனா இப்பெல்லாம் புதுசா ரிலீஸ் ஆகற தமிழ் படம் தான் போடறாங்க. கடைசியா நான் பாத்தப்போ 'ஈசா' ஓடிக்கிட்டிருந்துச்சு. ஒரு வேளை இப்போ திருந்திட்டாங்களோ என்னவோ?
//இப்படிக்கு
தல'கள் ஊறுன அதை குட்டையில் ஊறுன மட்டை ;)//
:)) வெல்கம்...வெல்கம்.
1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
ReplyDeleteஇன்னைக்கி வரை தல நீ இவ்ளோதானே படிச்சிருக்கே...
முதல்ல துண்டு போட்டு இடத்தை பிடிச்சுக்கறேன்..
ReplyDeleteஎன்னவோ சொல்ல வர்றீங்க.. ஆனா என்னோட பிஞ்சு மூளைக்கு ஒண்ணுமே எட்டலை அங்கிள்! ஓட்ட துண்டை வேணா எடுத்துட்டு ஓடிடட்டுமா? :)
ReplyDeleteரெண்டு சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?! (ஒரு வேளை சம்பந்தமே இல்லங்கறது தான் சம்பந்தமோ?)
//1995 ஆகஸ்டு முதல் - பி.ஈ.முதலாண்டு
ReplyDeleteஇன்னைக்கி வரை தல நீ இவ்ளோதானே படிச்சிருக்கே...//
அட ஆமாம்ல...பதினாலு வருஷமா ஃபர்ஸ்ட் இயர் படிச்ச ஒரே ஆளு உலகத்துல நானா தான் இருப்பேன் போலிருக்கு :)
//ரெண்டு சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?! (ஒரு வேளை சம்பந்தமே இல்லங்கறது தான் சம்பந்தமோ?)//
ReplyDeleteஸ்மார்ட் கேர்ள். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே தாயீ?
:)
//நமக்கும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு. நானும் இந்த மாதிரி தள்ளிவிட பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன் படம் பெயர் சரியாக நினைவில்லை. ஆனா தியோட்டர் கணபாதிராம் (அடையாரில் இருக்கு)
ReplyDelete;)//
ஹி..ஹி நானும் தல :)
//குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)//
ReplyDeleteஎப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க :)
கலக்கல் தல.... :)
ReplyDeletefollow apdingara option ah enable panina inum nerayyaaaaa kathuppen :)
ReplyDelete//எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க :)//
ReplyDeleteபுரிஞ்சுடுச்சுல்ல...சரி...கெளம்பு...கெளம்பு...:)
//கலக்கல் தல.... :)//
ReplyDeleteடாங்கீஸ்பா ராயல்
:)
//follow apdingara option ah enable panina inum nerayyaaaaa kathuppen :)//
ReplyDeleteஆஹா...இதெல்லாம் கத்துக்கற விஷயமில்ல தாயீ...கலவர பூமியில காத்து வாங்க ஆசைபடப்பிடாது...
:)
Dei Machi.... Naama paakka pona padam paeru "THE BITCH".... Andha Poovendhan'thaan unna thalli vittadhu... Kooda francis varala? enakku seriyaa nyabagam illa :-) Namaba last day last show ponadhunaala andha Anand theater'la scene's ellathayum cut pannittan... Nyabagam irukkaa??? Idhukku appuram naama paatha ella kilfansi padam ellaamey Friday, first day, first show... theater kaaranukkey enna scene varappodhunnu theriyaadhu... ENNA ORU STRATEGY :-))) Ippa nenachaa siriuppu thaan varudhu... But andha time'la padam parkkumbodhu irundha edhirpaarppu, scene edhuvum illanna odaney andha frustration ellamey oru thani feeling....
ReplyDelete//...அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை....//
ReplyDeleteha ha ha..... enjoyed the comedy between the lines.
சேம் குட்டை சேம் மட்டை :))
ReplyDeleteதலைப்புல பொருட்குற்றம் இருக்கு தல
:)))
பஸ்ஸுலருந்து தள்ளிவிட்டாலும் டிக்கெட் எடுத்துவச்சிருந்த உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!! ;))
ReplyDeleteதல,
ReplyDeleteஇந்த நேரத்துல இவ்ளோ தைரியமா இந்த பதிவ போட்ட உங்க நேர்மை, தைரியம் எனக்கு பிடிச்சு இருக்கு. :p
பதிவு முழுக்க வார மலர் சினிமா பொன்னையா மாதிரி இப்படி கிசுகிசு எழுதினா இங்க மண்ட காயுது. :))
//அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது
ReplyDeleteஎனக்கு நியாபகம் இருக்குறவரை, அவர் கன்னத்துல தான் முத்தம் குடுத்தார்ன்னு நினைக்கிறேன். 3 செ.மீ தான் வித்யாசம்னாலும்..விளைவு பெரிசா இருக்கே..தப்பா இருந்தா சொல்லுங்க :)
//எனக்கு நியாபகம் இருக்குறவரை, அவர் கன்னத்துல தான் முத்தம் குடுத்தார்ன்னு நினைக்கிறேன். 3 செ.மீ தான் வித்யாசம்னாலும்..விளைவு பெரிசா இருக்கே..தப்பா இருந்தா சொல்லுங்க :)
ReplyDelete//
கன்னம் தானா? இதழ் இல்லையா? அப்போ நானா தான் எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிட்டேனா?
Dirty minds
- நான் என்னையும் என்னோட ஸ்கூல் நண்பனையும் சொல்லறேன் :)