அந்த பெரியவரைச் சில படங்கள் எடுத்து, அந்த படங்களை அவருக்கும் LCD திரையில் காண்பிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அப்படங்களைக் கணினியில் தரவிறக்கம் செய்து பாத்த போது, அவர் மெல்லிதாகச் சிரிப்பது போல எனக்கு பட்டது. ஒரு வித நம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகையைப் போல எனக்கு பட்டது. அந்த படம் உங்கள் பார்வைக்கு.
ஒரு இந்திப் பாடலும் நினைவுக்கு வந்துச்சு. ஆழமான வரிகளைக் கொண்ட இதமான மெட்டினைக் கொண்ட அந்த பாடல் கீழே. என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்குத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழிபெயர்ப்பு, இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
படம் : ஹர்ஜாயி(1982)
பாடல் : நிடா ஃபஸ்லி
இசை : R.D.பர்மன்
பாடியது : கிஷோர் குமார்
Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi
Mujhe tujhse mohabbat hai
விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்
There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart
(Kabhii palkon pe aansoo hain...)
Jo aataa hai vo jaataa hai
Yeh duniya aani jaani hai
Yahaan har shay musafir hai
Safar mein zindagaani hai
Ujaalon ki zaroorat hai
Andhera meri kismat hai
வருபவர் எல்லாம் போவோரே
இவ்வுலகத்தில் போவதும் வருவதும் வாடிக்கை
வாழ்க்கை என்னும் பயணத்தில்
இங்குள்ளோர் அனைவரும் பயணிகளே
வெளிச்சத்தின் தேவை எனக்கிருந்தாலும்
எனக்கு விதிக்கப் பட்டிருப்பது என்னவோ இருட்டு தான்
Whoever comes has to go
This world is full of comings and goings
Here every pawn is a traveller
In the journey of life
There is a need for light
Darkness is in my fate
Kabhii palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai
விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்
There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart
Zaraa aye zindagi tham le
Tera deedaar to kar loon
Kabhii dekha nahin jisko
Use main pyaar to kar loon
Abhi se chhod ke mat jaa
Abhi teri zaroorat hai
வாழ்க்கையே சற்று ஓய்வெடுத்துக் கொள்
உன் திருமுகம் பார்க்கும் வாய்ப்பை எனக்கு கொடுப்பதற்காக
யாரை நான் பார்த்ததே இல்லையோ
அவளைக் காதலித்துக் கொள்வதற்காக
என்னை இப்போதே விட்டு விட்டுச் சென்று விடாதே
உன்னுடைய அருகாமை எனக்கு மிக தேவை
Oh life stop and take a breath
Give me a chance to see you
Let me love the one
I have never seen before
Don't leave me and go
I need you now
Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai
விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்
There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart
Koi anjaan sa chehraa
Ubharta hai phizaon mein
Ye kiski aahatein jaagi
Meri khamosh raahon mein
Abhi aye mauta mat aanaa
Mera veeraan jannat hai
என் கீழ்வானத்தில் நான் அறிந்திராத
முகம் ஒன்று எனக்கு தெரிகிறதே
இது யாருடைய காலடித் தடங்கள்
என் மயானமான பாதையில் கேட்கிறது?
மரணமே என்னை வந்து தொடாதே
என்னுடைய சொர்க்கம் இன்னும் துணையின்றியே இருக்கிறது
Some unknown face is rising in the horizon
Whose footsteps can be heard in my silent path
Death don't come just yet, my heaven is still empty
Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai
விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்
There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart
|
என்னுடைய போன பதிவில் அறிமுகமான நண்பர் பாசகியின் இந்தப் பதிவையும் படிச்சிப் பாருங்க. அருமையா எழுதிருக்காரு.
வாழ்ந்து பாருங்க பாஸ்...
மேலே உள்ள படம் ஜூன் மாதம் PiT புகைப்படப் போட்டிக்கும்.
சூப்பர் படம் தல!
ReplyDeleteமிக அழகிய இடுகை! வாழ்க்கையை, அதன் எளிமையை, அது தரும் நம்பிக்கையை மிக அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!
ReplyDeleteஅர்ச்சனா எப்படி இருக்கா?
ReplyDeleteபடத்தை மட்டும் போடமால் கூட பாட்டும் அந்த அனுபவமும் போட்டு கலக்கிட்டிங்க தல ;)
ReplyDeleteமொழி தெரியாவிட்டாலும் அந்த உணர்வைக் கொண்டு வரும் சக்தி இப்படியான பாடல்களுக்கு இருக்கும், கேட்ட அந்த நிமிடங்கள் மெய்மறந்துட்டேன். பாடலை ஒலிக்கவிட்டே உங்கள் வரிகளைப் பார்க்கும் போது மனசுக்கு இன்னும் அது நெருக்கமாகி விட்டது.
ReplyDeleteஇதோ வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=oy__xqePDD4
ஜி, நிஐமா சொல்றேன் ரொம்ப கூச்சமா இருக்கு, உங்க பதிவுல இருக்கற ஆழமும் உயிர்ப்பும் என்னோட எழுத்துல கண்டிப்பா இல்ல. இருந்தாலும் என்னோட பதிவுக்கு நீங்க இணைப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி!!!
ReplyDeleteபதிவுலக பொறுத்தவரை இந்த நொடி என்னைக்கும் என்னோட நினைவுல இருக்கப்போற மகிழ்ச்சியான தருணம்...
//சூப்பர் படம் தல!//
ReplyDeleteநன்றி தளபதி
//மிக அழகிய இடுகை! வாழ்க்கையை, அதன் எளிமையை, அது தரும் நம்பிக்கையை மிக அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!//
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி முல்லை
//அர்ச்சனா எப்படி இருக்கா?//
ReplyDeleteவாங்க பாபு சார்,
அர்ச்சனா நல்லாருக்கா. ஏதேதோ பேச முயற்சி செய்யறா இப்போவெல்லாம். நன்றி.
:)
//படத்தை மட்டும் போடமால் கூட பாட்டும் அந்த அனுபவமும் போட்டு கலக்கிட்டிங்க தல ;)//
ReplyDeleteரொம்ப நன்றி கோபிநாத்
//மொழி தெரியாவிட்டாலும் அந்த உணர்வைக் கொண்டு வரும் சக்தி இப்படியான பாடல்களுக்கு இருக்கும், கேட்ட அந்த நிமிடங்கள் மெய்மறந்துட்டேன். பாடலை ஒலிக்கவிட்டே உங்கள் வரிகளைப் பார்க்கும் போது மனசுக்கு இன்னும் அது நெருக்கமாகி விட்டது.
ReplyDeleteஇதோ வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=oy__xqePDD4//
உங்கள் பின்னூட்டத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வீடியோ தேடித் தந்ததற்கு ஒரு கூடுதல் நன்றி.
படமும் பாட்டும் சூப்பர் அண்ணே..
ReplyDeleteபட் ஒன் சுமால் கொஸ்டின்
//என்னுடைய புது Panasonic கேமராவை எடுத்துக்கிட்டு நீலாங்கரை கடற்கரைக்குப் போயிருந்தேன்//
உங்களுக்கு இன்னொரு பேர் டாக்டர் ப்ரகாஷா? :))
//2008ல வெண்பா வாத்தியார் ஒளி ஓவியர் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் ஆசிர்வாதத்தோட வாங்கிய//
ReplyDeleteஹைய்ய் அண்ணாச்சி நம்ம சீனியரூ :))
நீங்க எத்தினியாவது விக்கெட் ?
:))
//"உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா"ன்னு கேட்கற தைரியம் எனக்கு எப்போவும் இருந்ததில்லை.//
ReplyDeleteஸேம் ஃபீலிங்க்! :(
பட் அப்படி ஒருவேளை நாம கேட்டா கண்டிப்பா ஒ.கே சொல்லுவாங்கன்னு 90% மனசு சொல்லுது! ஆனா 10% இல்ல எடுக்ககூடாதுன்னு சொல்லிட்டா கேவலப்பட்டுபோய்டுவோமோன்னு அதேமனசு பிரேக் போடுது! :(
மெஜாரிட்டியை விட இங்க மைனாரிட்டி ஜெயிச்சுடுது !
அருமையான பாடல் - தமிழ்ல படிச்சதும், கேட்டதும் ஒரு திருப்தி கொடுத்துச்சு !
ReplyDelete//ஜி, நிஐமா சொல்றேன் ரொம்ப கூச்சமா இருக்கு, உங்க பதிவுல இருக்கற ஆழமும் உயிர்ப்பும் என்னோட எழுத்துல கண்டிப்பா இல்ல. //
ReplyDeleteஇப்படி சொல்றது உங்க பெருந்தன்மை.
//மனுசனோட வாழ்க்கைமுறை வசதிவாய்ப்பு குணநலன் எப்படியிருப்பினும், அவன்(ள்) தாண்டி வந்த சந்தோசமான தருணங்களோட நினைவுகளும், சிறுசிறு விருப்பங்களும்தான் அவங்கவங்க வாழ்க்கைய உயிர்ப்போட வைத்திருக்கிறது.//
இதெல்லாம் சாதாரண சிந்தனனயா? இல்லீங்க. நீங்க உங்க பதிவுல சொல்லிருக்கற அந்த சின்ன சின்ன விஷயங்கள் உங்களுடைய ரசனையைக் காட்டுது.
//இருந்தாலும் என்னோட பதிவுக்கு நீங்க இணைப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி!!!
பதிவுலக பொறுத்தவரை இந்த நொடி என்னைக்கும் என்னோட நினைவுல இருக்கப்போற மகிழ்ச்சியான தருணம்...//
தேவர் மகன் படத்துல ரேவதி சொல்ற மாதிரி சொல்லனும்னா - "நான் தான் தேங்க்ஸ்"
:)
//படமும் பாட்டும் சூப்பர் அண்ணே.. //
ReplyDeleteமிக்க நன்றி சஞ்சய்.
//பட் ஒன் சுமால் கொஸ்டின்
//என்னுடைய புது Panasonic கேமராவை எடுத்துக்கிட்டு நீலாங்கரை கடற்கரைக்குப் போயிருந்தேன்//
உங்களுக்கு இன்னொரு பேர் டாக்டர் ப்ரகாஷா? :))//
இது தான் தருமபுரி குசும்பா? இதெல்லாம் ஓவரு ஆமா.
:)
touching post அண்ணே.. :-)
ReplyDeleteபடமும் அழகு.. பதிவும் அழகு.. பாடலும் அழகு.. அண்ணே, எத்தனை அழகு பாருங்கண்ணே.. :-)
ReplyDelete////2008ல வெண்பா வாத்தியார் ஒளி ஓவியர் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் ஆசிர்வாதத்தோட வாங்கிய//
ReplyDeleteஹைய்ய் அண்ணாச்சி நம்ம சீனியரூ :))
நீங்க எத்தினியாவது விக்கெட் ?
:))//
எனக்கு முன்னாடி எத்தனை விக்கெட்னு தெரியாது. ஆனா ஜீவ்ஸ் அண்ணாச்சி வீழ்த்திய ஒரு முக்கியமான விக்கெட் நிலா அப்பா.
மனுஷன் எல்லாரையும் புகைப்பட உலகுக்கு இழுத்து விட முயற்சி பண்ணாலும் அவரோட முயற்சிகள் "நாரதர் கலகம் நன்மையில் முடியும்"ங்கிற மாதிரி தான் இருக்கும்.
:)
//பட் அப்படி ஒருவேளை நாம கேட்டா கண்டிப்பா ஒ.கே சொல்லுவாங்கன்னு 90% மனசு சொல்லுது! ஆனா 10% இல்ல எடுக்ககூடாதுன்னு சொல்லிட்டா கேவலப்பட்டுபோய்டுவோமோன்னு அதேமனசு பிரேக் போடுது! :(
ReplyDeleteமெஜாரிட்டியை விட இங்க மைனாரிட்டி ஜெயிச்சுடுது !//
வார்த்தைக்கு வார்த்தை சேம் ப்ளட்.
:)
//அருமையான பாடல் - தமிழ்ல படிச்சதும், கேட்டதும் ஒரு திருப்தி கொடுத்துச்சு !//
ReplyDeleteநன்றி ஆயில்ஸ்.
:)
//touching post அண்ணே.. :-)//
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி.
:)
//படமும் அழகு.. பதிவும் அழகு.. பாடலும் அழகு.. அண்ணே, எத்தனை அழகு பாருங்கண்ணே.. :-)//
ReplyDeleteஆமா மொத்தம் நாலு அழகு. அழகாய் கமெண்டு போட்டிருக்கிறீர்கள் பயமாய் இருக்கிறது...
:))
ஹாய்,
ReplyDelete//விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்..//
ஆஹா, எவ்வளவு அற்புதமான வரிகள்.மனச டச்சு பண்ணீட்டீங்க
//கைப்புள்ள said...
ReplyDelete//ஜி, நிஐமா சொல்றேன் ரொம்ப கூச்சமா இருக்கு, உங்க பதிவுல இருக்கற ஆழமும் உயிர்ப்பும் என்னோட எழுத்துல கண்டிப்பா இல்ல. //
இப்படி சொல்றது உங்க பெருந்தன்மை.//
பெருந்தன்மை எல்லாம் இல்லைங்க உண்மையதான் சொன்னேன்..
//தேவர் மகன் படத்துல ரேவதி சொல்ற மாதிரி சொல்லனும்னா - "நான் தான் தேங்க்ஸ்"//
நானும் தேங்க்ஸ் :)
அப்புறம் புகைப்படகலை பத்தி உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்கணும்-னு ஆசை. ஒண்ணுமே தெரியாம SLR camera வாங்கறதெல்லாம் ஒவருனு மனசாட்சி குறி சொன்னதால Photography பழகலாம்னு Nikon Coolpix L14 வாங்கி வருசம் ஒண்ணு ஆகப்போகுது, இன்னும் உருப்படியா ஒண்ணும் சுடல.(என்னோட profile picture நான் சுட்டது, நல்லாருக்குங்களா :) )
அடுத்தடுத்து போஸ்டா?? இத்தனை நாள் எழுதாம இருந்ததுக்காக???
ReplyDeleteபெரியவர் சிரிக்கிறது யாரைப் பார்த்து? புரியலை, பாட்டும் , சினிமாவும் நல்லா இருக்கும்.
நிகழும் சூன் திங்கள் 13-ம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடும் வலையுலக தல, வருங்கால துணை DCM கைபுள்ளை-க்கு இந்த பின்னூட்ட மாலையை மலர் மலையாக காணிக்கையாக்குகிறேன் என்பதை மிக பணிவன்புடன் இங்கே கூறிக்கொண்டு வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து...
ReplyDeleteடேய், விஷ் யூ எ ஹாப்பி பர்த்டே டா!
//நிகழும் சூன் திங்கள் 13-ம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடும் வலையுலக தல, வருங்கால துணை DCM கைபுள்ளை-க்கு இந்த பின்னூட்ட மாலையை மலர் மலையாக காணிக்கையாக்குகிறேன் என்பதை மிக பணிவன்புடன் இங்கே கூறிக்கொண்டு//
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)
வாழ்க்கையைப் பத்தி அழகா இங்க சொன்னதோட விட்டுடாம, முப்பத்திரெண்டு கேள்விகள் தொடரிலும் கலக்கலா தொடர வாழ்த்துக்கள்:):):)
ReplyDelete//ஆஹா, எவ்வளவு அற்புதமான வரிகள்.மனச டச்சு பண்ணீட்டீங்க//
ReplyDeleteநன்றி சுமதி மேடம்
//அப்புறம் புகைப்படகலை பத்தி உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்கணும்-னு ஆசை. ஒண்ணுமே தெரியாம SLR camera வாங்கறதெல்லாம் ஒவருனு மனசாட்சி குறி சொன்னதால Photography பழகலாம்னு Nikon Coolpix L14 வாங்கி வருசம் ஒண்ணு ஆகப்போகுது, இன்னும் உருப்படியா ஒண்ணும் சுடல.(என்னோட profile picture நான் சுட்டது, நல்லாருக்குங்களா :) )//
ReplyDeleteபுகைப்படக்கலை பழகனும்னா சிம்பிளான ஒரே வழி நெறைய படம் எடுத்துக்கிட்டே இருக்கறது. Flickr.com தளத்துல Last 7 days interesting படங்களளப் பாருங்க. நல்ல ஐடியாக்கள் கிடைக்கும். நம்ம படங்கள் எங்கே நிக்குதுன்னு நமக்கே மெதுவா புரிய ஆரம்பிக்கும். தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் basics படிங்க. வாழ்த்துகள்.
//அடுத்தடுத்து போஸ்டா?? இத்தனை நாள் எழுதாம இருந்ததுக்காக???//
ReplyDeleteஹி...ஹி...ஆமா :)
//பெரியவர் சிரிக்கிறது யாரைப் பார்த்து? புரியலை, பாட்டும் , சினிமாவும் நல்லா இருக்கும்.//
நன்றி மேடம்
//டேய், விஷ் யூ எ ஹாப்பி பர்த்டே டா!//
ReplyDelete//பிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு மற்றும் Rapp
:)
//வாழ்க்கையைப் பத்தி அழகா இங்க சொன்னதோட விட்டுடாம, முப்பத்திரெண்டு கேள்விகள் தொடரிலும் கலக்கலா தொடர வாழ்த்துக்கள்:):):)//
ReplyDeleteரொம்ப நன்றி ராப். 32 கேள்வி-பதில் பதிவும் போட்டாச்சேய்.
:)
அட, ஆமாம் இல்லை, தாமதமான பிறந்தநாள் மற்றும் மணநாள் வாழ்த்துகள். எனக்கு இருக்கும் டென்ஷனில் எப்படியோ மறந்திருக்கேன்.
ReplyDelete