Friday, June 12, 2009

நான் பாட்டுக்குச் செவனேன்னு தானேயா போயிக்கிட்டிருந்தேன்?

2009 வருஷத்துலேருந்து மாசத்துக்கு ஒரு பதிவாச்சும்(படமில்லாத பதிவா) எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஏன்னா 2008ல எழுதுன நெறைய பதிவுகள் புகைப்படப் போட்டிக்குப் படத்தைச் சேர்க்கறதுக்குன்னு எழுதுன பதிவுகள். ஏப்ரல் மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு பதிவாச்சும் எப்படியோ எழுதியாச்சு. மே மாசம் தான் அது முடியாமப் போச்சு. காரணம்...மே மாசம் ஒன்னாம் தேதி நடந்த ஒரு சின்ன சாலை விபத்து. அதனால ஏற்பட்ட ஒரு சின்ன எலும்பு முறிவு அதன் காரணமா நடந்த ஒரு சின்ன அறுவை சிகிச்சை அதன் காரணமா எடுக்க வேண்டி இருந்த ஒரு சின்ன விடுப்பு இதெல்லாம்.

மே 1 ஆம் தேதி மதியம் சாப்பிட்டுட்டு நம்ம கேமராவுக்கு சில accessories(polariser, filter) வாங்கலாமேன்னு வீட்டிலிருந்து ஸ்பென்சர்ஸ் ப்ளாசா நோக்கி என்னுடைய பைக்கில் பயணப்பட்டேன். கோட்டூர்புரம், நந்தனம் இதையெல்லாம் தாண்டி தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் சிக்னலை நோக்கிப் போயிக்கிட்டு இருந்தேன். நந்தனத்தில் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் காணாமல் போயிருந்த மாதிரி இருந்தது. இன்னும் இருக்கா இல்லை போயிட்டதான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க. அதன் பிறகு வந்த ஒரு சிக்னல், மஞ்சளிலிருந்து சிகப்பாவதற்கும் அங்கே பணியில் இருந்த போக்குவரத்து காவலர் நிறுத்துமாறு கை காட்டவும், நான் நாலாவது, மூனாவது, இரெண்டாவது, ஒன்னாவது என நியூட்ரலுக்குக் கொண்டு வந்து பைக்கை நிறுத்தவும், சிக்னலில் நிக்காமல் போயிடலாம்னு நெனச்சி என் பின்னாலில் வந்துட்டிருந்த டாட்டா இண்டிகா கார் என் பைக்கின் பின்புறம் வந்து மோதவும் சரியா இருந்துச்சு. என்னுடைய சில பதிவுகளில் நுண்ணரசியல் பேசும் கொத்தனார் அண்ட் கோவுக்கு அவர் கேட்கும் முன்னே நானே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன். சென்னையில எத்தனையோ இடங்கள் இருக்க, எத்தனையோ சாலைகள் இருக்க, எத்தனையோ சிக்னல்கள் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு அண்ணா அறிவாலயம் சிக்னலில் வந்து அடிப்பட்டதின் பின்னாலில் இருக்கும் நுண்ணரசியல் என்னன்னு எனக்கு புரியலிங்கோ. உங்களுக்குப் புரியுதா :)

பைக்கோட கீழ விழுந்து கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை. ஆனா நினைவெல்லாம் தப்பலை. அப்புறமா தான் தெரிஞ்சது கார் வந்து இடிச்சி கீழே விழுந்தது. ரோடு காலியாத் தான் இருந்துச்சு, கார் என் பைக்குக்கு வலது புறமாவோ இடது புறமாவோ போயிருக்கலாம். வர்க் ஷாப்புக்கு சர்வீசுக்கு வந்த காரை எடுத்துக்கிட்டு ஒரு மெக்கானிக்கும் அவனோட சொந்தக்கார பசங்களும் ஊரைச் சுத்தலாம்னு கோயம்புத்தூர்ல பதிவான வண்டியை எடுத்துக்கிட்டு வந்திருக்காங்க. யார் வம்புக்கும் போகாம செவனேன்னு போயிக்கிட்டிருந்த என் மேல தான் மோதுவேன்னு அடம் புடிச்சி வந்து மோதிட்டாங்க. அதுக்கப்புறம் விபத்து நடந்ததை பதிவு பண்ணறதுக்காக வாழ்க்கையில முதல்முறையா ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் போனேன். என் கையில ஒரு எக்ஸ்ரே எடுத்தாங்க. எக்ஸ்ரே எடுத்த இடம் ஒரு வர்க் ஷாப் மாதிரி இருந்தது. அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தனியார் மருத்துவமனையில் பணம் செலவழிக்க முடியாத ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையின் தரம் குறித்த கவலை வந்தது. இதுல வேற எக்ஸ்ரே டெக்னீஷியனுக்கும் டியூட்டி டாக்டருக்கும் நடுவுல பாலிடிக்ஸ் போல. எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்து எழுதி கொடுத்த சீட்டு முறைப்படி எழுதப்படவில்லை என்று டாக்டரிடம் திருப்பி அனுப்பிவிட்டார் டெக்னீஷியன். என் கூட என் தம்பி உதவிக்கு இருந்ததாலும், அவன் ஒரு இயற்முறை மருத்துவர்(Physiotherapist) என்பதால் எனக்கு முதல் உதவி செய்திருந்ததாலும், எனக்கு சிரமம் தெரியவில்லை, ஆனால் கை உடைந்து கால் உடைந்து வலியுடன் வருபவர்களை இந்த மாதிரி பந்தாடினால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? அதன் பிறகு நான் ஒரு தனியார் மருத்துவமனை சென்றதும், அங்கு என் வலது கை தோள்பட்டையில் மே 2ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்து ஸ்க்ரூ பொருத்தப் பட்டதும், கேமராவுக்கு Circular Polariser வாங்கப் போய் வலது கை மடக்கப் பட்டு Elbow immobiliser அணிந்து மூன்று வார விடுப்பில் இருக்க நேர்ந்ததும் தனிக் கதை.

விடுப்பில் இருந்த மூன்று வாரங்களில், வரலாற்றுப் பக்கங்களில் எழுதப் படக் கூடிய சில சம்பவங்களை வீட்டில் இருந்தவாறே டிவியில் பார்க்க நேர்ந்தது. ஒரு சில திரைப்படங்களைப் பார்த்தேன் - ஆங்கிலத்தில் Lawrence of Arabia, Omar Mukhtar குறிப்பிடத் தக்கவை. தமிழில் மைக்கேல் மதன காமராஜன், ஆண் பாவம், அவ்வை சண்முகி இதெல்லாம் பார்த்து கொஞ்சம் வலியை மறக்க முடிந்தது. மூன்று வாரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பரவாயில்லை. நான் அடிபட்ட அன்று என் தந்தையார் கண்கலங்கியதையும், இரு நாட்களுக்கு அர்ச்சனா காரணமே இல்லாமல் அழுததையும், சாப்பிட மறுத்ததையும் நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அம்மூன்று வார நினைவுகளில் பசுமையாக நிற்பது தங்கமணி எனக்கு செய்த பணிவிடைகள். கண்டிப்பாக அதை மறக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல விரும்புவது பல வருடங்கள் கழித்து எனக்கு சோறு ஊட்டி விடப்பட்டது. சும்மா சொல்லக் கூடாதுங்க, பொண்டாட்டி கையால சோறு ஊட்டிக்கிட்டாலும் நல்லா ருசியாத் தான் இருக்குது :)

ஒரு நாள் மதியம் எனக்கு தங்க்ஸ் சாதம் ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறீங்க"னு கேட்டாங்க. "நீ சோறு ஊட்டிக்கிட்டே பாடற மாதிரி ஒரு சிச்சுவேசன் சாங் நியாபகம் வந்துடுச்சு...அதான் சந்தோஷப் புன்னகை"ன்னு சொன்னேன். "என்ன பாட்டு"ன்னு கேட்டாங்க.

"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ"ங்கிற பாகப் பிரிவினை படப் பாட்டைச் சொன்னேன்.
இதை கேட்டுட்டு தங்கமணியும் சிரிச்சிட்டாங்க. "நாம நெனச்ச அளவுக்கு நம்ம புருஷன் மக்கு இல்லை, அறிவாளியாத் தான் இருக்காருன்னு"னு முதல் முறையா உணர்ந்து சிரிச்சிருப்பாங்கன்னு நான் நெனைக்கிறேன்.

"சிங்கத்தின் கை(கால்)கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" அப்படிங்கிற அடுத்த வரிகள் நினைவுக்கு வந்தப்போ எனக்கு சிரிப்பும் வந்தது, கொஞ்சம் ஓவராத் தான் போறோமோன்னும் இருந்துச்சு :)

45 comments:

  1. //சிங்கத்தின் கை(கால்)கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" அப்படிங்கிற அடுத்த வரிகள் நினைவுக்கு வந்தப்போ//

    அவ்வ்வ்வ்வ்..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு! :-)

    ReplyDelete
  2. //நான் அடிபட்ட அன்று என் தந்தையார் கண்கலங்கியதையும், இரு நாட்களுக்கு அர்ச்சனா காரணமே இல்லாமல் அழுததையும், சாப்பிட மறுத்ததையும் நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை.//

    :(

    கவலைப்படாதீங்க கைப்ஸ் அண்ணா...we are with you!

    ReplyDelete
  3. //"நாம நெனச்ச அளவுக்கு நம்ம புருஷன் மக்கு இல்லை, அறிவாளியாத் தான் இருக்காருன்னு"னு முதல் முறையா உணர்ந்து சிரிச்சிருப்பாங்கன்னு நான் நெனைக்கிறேன்.//

    நோ சமாளிஃபிகேஷன்!!
    இதையெல்லாம் நாங்க நம்ப மாட்டோம்..அவங்ககிட்டேயே கேட்டுக்கறோம்..:-))

    ReplyDelete
  4. சூப்பரு... :))

    அடிப்பட்டதை எவ்வளவு அழகா நகைச்சுவையா சொல்லிருக்கீங்க...

    :))

    ReplyDelete
  5. //நம்ம புருஷன் மக்கு இல்லை, அறிவாளியாத் தான் இருக்காருன்னு"னு முதல் முறையா உணர்ந்து சிரிச்சிருப்பாங்கன்னு நான் நெனைக்கிறேன்.//

    தல டச்... :))

    நீங்க பதிவுலகத்தை விட்டு பத்திரிக்கை உலகத்துக்கு எழுத போயிறலாம்..

    ரசித்தேன்..

    ஹிஹி.. கோவிச்சிக்காதிங்க தல.. இதுகெல்லாம் தான் இப்போதைக்கு டிரெண்ட் பின்னூட்டம்... :)

    ReplyDelete
  6. "நான் அடிபட்ட அன்று என் தந்தையார் கண்கலங்கியதையும், இரு நாட்களுக்கு அர்ச்சனா காரணமே இல்லாமல் அழுததையும், சாப்பிட மறுத்ததையும் நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை"


    கட்டாயம் கண்கலங்கத்தான் செய்வார்கள். நீங்கள் மீண்டுவந்ததற்கு இறைவனிடம் நன்றி கூறுகிறேன்.

    ReplyDelete
  7. //அறுவை சிகிச்சை நடந்து ஸ்க்ரூ பொருத்தப் பட்டதும்//

    அச்சச்சோ, தலையிலருந்த ஸ்க்ரூவை கழட்டி கைக்கு மாட்டிட்டாங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  8. இப்போ பழயபடி குழந்தைய தூக்க முடியுதா?

    ReplyDelete
  9. ////சிங்கத்தின் கை(கால்)கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" அப்படிங்கிற அடுத்த வரிகள் நினைவுக்கு வந்தப்போ//

    அவ்வ்வ்வ்வ்..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு! :-)//

    ஹி...ஹி...ஆமா. திடீர்னு இந்த மாதிரி ஆகிடுது. ராப் அக்கா சொன்ன மாதிரி தலைல இருந்த ஸ்க்ரூ கைக்கு வந்ததுனாலயோ என்னவோ?
    :)

    ReplyDelete
  10. //:(

    கவலைப்படாதீங்க கைப்ஸ் அண்ணா...we are with you!//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  11. இனிமே மாசத்திற்கு ரெண்டு மூணு பதிவு போடுங்க, சரியானதை கொண்டாட:):):)

    ReplyDelete
  12. //நோ சமாளிஃபிகேஷன்!!
    இதையெல்லாம் நாங்க நம்ப மாட்டோம்..அவங்ககிட்டேயே கேட்டுக்கறோம்..:-))//

    சே...கொஞ்சம் நம்மளே நாமே பாராட்டிக்கிட்டாலும்...அது கூட பொறுக்க மாட்டேங்குதே உங்களுக்கு.
    :(

    ReplyDelete
  13. //சூப்பரு... :))

    அடிப்பட்டதை எவ்வளவு அழகா நகைச்சுவையா சொல்லிருக்கீங்க...

    :))//

    வளர நன்னிப்பா ராயல்

    ReplyDelete
  14. //தல டச்... :))

    நீங்க பதிவுலகத்தை விட்டு பத்திரிக்கை உலகத்துக்கு எழுத போயிறலாம்..

    ரசித்தேன்..

    ஹிஹி.. கோவிச்சிக்காதிங்க தல.. இதுகெல்லாம் தான் இப்போதைக்கு டிரெண்ட் பின்னூட்டம்... :)//


    ஹி...ஹி...புரிஞ்சிடுச்சுப்பா. நானும் இதையெல்லாம் பயன்படுத்த ஆரம்பிக்கிறேன்.
    :)

    ReplyDelete
  15. அட.. என்னாட்டமே அடி பட்டிருக்கீங்க :-)

    get well soon!

    ReplyDelete
  16. //2009 வருஷத்துலேருந்து மாசத்துக்கு ஒரு பதிவாச்சும்(படமில்லாத பதிவா) எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஏன்னா 2008ல எழுதுன நெறைய பதிவுகள் புகைப்படப் போட்டிக்குப் படத்தைச் சேர்க்கறதுக்குன்னு எழுதுன பதிவுகள். ஏப்ரல் மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு பதிவாச்சும் எப்படியோ எழுதியாச்சு//
    ஒருவேள அந்த மெக்கானிக் அண்ணன் அந்த பதிவஎல்லாம் படிச்சிருப்பாரோ?:):):)

    கவலைப்படாதீங்க, நம்ம கவுஜ நாலஞ்சை அவரு வீட்டுக்கு போஸ்ட் கார்டுல எழுதி அனுப்பி, டாங்கர் லாரி எபெக்ட் கொடுத்திடுவோம்:):):)

    ReplyDelete
  17. //கட்டாயம் கண்கலங்கத்தான் செய்வார்கள். நீங்கள் மீண்டுவந்ததற்கு இறைவனிடம் நன்றி கூறுகிறேன்.//

    தங்கள் கனிவானச் சொற்களைக் கேட்டு உள்ளம் மகிழ்கிறது வடிவேலன் சார். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  18. //அச்சச்சோ, தலையிலருந்த ஸ்க்ரூவை கழட்டி கைக்கு மாட்டிட்டாங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....//

    Bonjour Rapp Akka!
    மீ த ஃபர்ஸ்ட் போடலன்னாலும் சூறாவளியா சுழன்று சுழன்று அடிக்கிறீங்களே ராப் அக்கா. உங்க கமெண்டு எல்லாத்துக்கும் பதில் சொல்லனும்னா கையில இருக்கற ஸ்க்ரூவைக் கழட்டி திரும்ப பழையபடி மூளையில மாட்டுனாத் தான் முடியும் போலிருக்கே.
    :)

    ReplyDelete
  19. //இப்போ பழயபடி குழந்தைய தூக்க முடியுதா?//

    தூக்க முடியுது. ஆனா பழையபடி இல்லை. கொஞ்சம் கஷ்டப் படனும்.
    :)

    ReplyDelete
  20. //இனிமே மாசத்திற்கு ரெண்டு மூணு பதிவு போடுங்க, சரியானதை கொண்டாட:):):)//

    Done. இன்னிக்கே இன்னொரு பதிவு போடற ஐடியா கூட இருக்கு. பாப்போம்.
    :)

    ReplyDelete
  21. //அட.. என்னாட்டமே அடி பட்டிருக்கீங்க :-)//

    வாங்க சுரேஷ் சார், கொத்தனார் சொன்னாரு உங்களுக்கு அடிபட்டதைப் பத்தி. இப்போ குணமாகியிருப்பீங்கன்னு நம்பறேன்.

    //get well soon!//

    Almost Done!
    :)

    ReplyDelete
  22. //ஒருவேள அந்த மெக்கானிக் அண்ணன் அந்த பதிவஎல்லாம் படிச்சிருப்பாரோ?:):):)//

    படிச்சிருக்கலாம். ஆனா அதுக்குன்னு டாட்டா இண்டிகா கார் கொண்டு இடிக்கிற அளவுக்கு நான் வர்த் இல்லியேக்கா :)

    //
    கவலைப்படாதீங்க, நம்ம கவுஜ நாலஞ்சை அவரு வீட்டுக்கு போஸ்ட் கார்டுல எழுதி அனுப்பி, டாங்கர் லாரி எபெக்ட் கொடுத்திடுவோம்:):):)//

    ரைட்! அதான் சரியான பனிஷ்மெண்ட்.
    :)

    ReplyDelete
  23. //தங்கமணி எனக்கு செய்த பணிவிடைகள். கண்டிப்பாக அதை மறக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல விரும்புவது பல வருடங்கள் கழித்து எனக்கு சோறு ஊட்டி விடப்பட்டது. சும்மா சொல்லக் கூடாதுங்க, பொண்டாட்டி கையால சோறு ஊட்டிக்கிட்டாலும் நல்லா ருசியாத் தான் இருக்குது :)//

    இதுக்காகவே சும்மாச் சும்மா அடிபட்டுக்கிட்டு வந்து நிக்காதீங்கனு மனசுக்குள்ளே நினைச்சிருப்பாங்க! :P

    ரொம்ப நாள் கழிச்சு கைப்புள்ள டச்! பதிவிலே! :)))))))))))))))) அதுக்குள்ளே எப்படி இத்தனை பேர் வந்து பின்னூட்டம் போட்டாங்க??? எல்லாரும் உங்க பக்கத்திலேயே நின்னு பார்த்துட்டு இருந்தாங்களா????

    ReplyDelete
  24. //இதுக்காகவே சும்மாச் சும்மா அடிபட்டுக்கிட்டு வந்து நிக்காதீங்கனு மனசுக்குள்ளே நினைச்சிருப்பாங்க! :P//

    அப்படீங்கறீங்க?

    //ரொம்ப நாள் கழிச்சு கைப்புள்ள டச்! பதிவிலே! :)))))))))))))))) //
    நன்னி தலைவிஜி

    //அதுக்குள்ளே எப்படி இத்தனை பேர் வந்து பின்னூட்டம் போட்டாங்க??? எல்லாரும் உங்க பக்கத்திலேயே நின்னு பார்த்துட்டு இருந்தாங்களா????//
    எல்லாம் சொல்லி விடறது தான்.
    :)))

    ReplyDelete
  25. //ok, me the 25th:):):)//

    அட ஆமா...பின்னூட்ட சில்வர் ஜூப்ளி. Merci ராப் அக்கா.
    :)

    ReplyDelete
  26. //ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில இருக்கற உங்க சின்ன சித்தப்பா ஹேமந்த் அவங்க மகளுக்காகன்னு ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. உங்க பெரிய சித்தப்பா முரளிக்கும் எனக்கும் மூனு வயசு வித்தியாசம், ஆனா உங்க சின்ன சித்தப்பாவுக்கும் எனக்கும் பதினெட்டு வயசு வித்தியாசம். ஏன்னா உங்க சின்ன பாட்டிக்கும்(அதாவது ஹேமந்த் சித்தப்பாவோட மம்மி, அதாவது எங்க சித்தி) எனக்குமே பதினோரு வயசு தான் வித்தியாசம். இப்ப எட்டாவது பாஸ் பண்ணிட்டு ஒன்பதாவது போறாரு உங்க சின்ன சித்தப்பு//

    //இரு நாட்களுக்கு அர்ச்சனா காரணமே இல்லாமல் அழுததையும்//

    அடிபட்டப்போ, சும்மாயில்லாம, ஏற்கனவே அத பாத்து கவலையிலிருந்த கொழந்த கிட்ட, இதை படிச்சு காமிச்சீங்க சரியா:):):)

    ReplyDelete
  27. தல

    சிரிப்பை அடக்க முடியல...ஆமா இப்போ எப்படி இருக்கீங்க!? ;)

    ReplyDelete
  28. பழையபடி உடல்நலம் பெறவும், மனோபலம் பெறவும் வேண்டுகிறேன்!!!

    ReplyDelete
  29. இப்போ எப்படி இருக்கு??

    ReplyDelete
  30. //அடிபட்டப்போ, சும்மாயில்லாம, ஏற்கனவே அத பாத்து கவலையிலிருந்த கொழந்த கிட்ட, இதை படிச்சு காமிச்சீங்க சரியா:):):)//

    அட கடவுளே! நயினாக்கு அடிப்பட்டுடுச்சேன்னு ஒரு கொழந்தை அழக்கூடாதா என்ன? என் மேல குத்தம் சொல்லறதுக்கு ஒரு கூட்டமே ரெடியாயிருக்கு போல.

    :)

    ReplyDelete
  31. //தல

    சிரிப்பை அடக்க முடியல...ஆமா இப்போ எப்படி இருக்கீங்க!? ;)//

    வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றிங்க கோபி. இப்போ பதிவு போடற அளவுக்கு நல்லாயிட்டேன்னா பாத்துக்கங்களேன்.
    :)

    ReplyDelete
  32. //பழையபடி உடல்நலம் பெறவும், மனோபலம் பெறவும் வேண்டுகிறேன்!!!//

    வாழ்த்துக்கு நன்றி பாசகி.

    ReplyDelete
  33. //இப்போ எப்படி இருக்கு??//

    வாங்க பாபு சார்,
    ரெண்டு வாரமா ஆஃபீஸ் வர ஆரம்பிச்சாச்சு. இப்போ நல்லாருக்கேன். விசாரிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  34. ஒண்ணு சொல்லுவேன். ஆனா சொல்ல மாட்டேன்!!

    ReplyDelete
  35. ஒண்ணு சொல்லுவேன். ஆனா சொல்ல மாட்டேன்!!

    ReplyDelete
  36. நல்ல படியா மீண்டு வந்தமைக்கு ஆண்டவனுக்கு நன்றி! பெருசா எதுவும் நடக்கலைன்னு சந்தோசப்பட்டுக்குங்க.

    ReplyDelete
  37. பெனாத்தலாரும் இப்படி தான் சிக்னல்ல நிக்கும் போது அடிப்பட்டதுனு எழுதியிருந்தார்.

    நல்லபடியா மீண்டு வந்ததுக்கு இறைவனுக்கு நன்றி!

    உடம்பை பார்த்துக்கோங்கண்ணா!!!

    நீங்க நகைச்சுவையா எழுதிருந்தாலும் படிக்க கஷ்டமா தான் இருந்தது...

    ReplyDelete
  38. /2009 வருஷத்துலேருந்து மாசத்துக்கு ஒரு பதிவாச்சும்(படமில்லாத பதிவா) எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஏன்னா 2008ல எழுதுன நெறைய பதிவுகள் புகைப்படப் போட்டிக்குப் படத்தைச் சேர்க்கறதுக்குன்னு எழுதுன பதிவுகள். ஏப்ரல் மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு பதிவாச்சும் எப்படியோ எழுதியாச்சு//

    இதெல்லாம் ஓவர் நக்கல் ஆமாம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  39. தல,
    உங்களை இந்த தொடருக்கு அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  40. //பொண்டாட்டி கையால சோறு ஊட்டிக்கிட்டாலும் நல்லா ருசியாத் தான் இருக்குது :)//

    அண்ணே இத அங்க அப்பவே சொல்லியிருந்தா அப்படியே கொமட்டுல ஒரு குத்து விழுந்திருக்கும் :)

    நீங்க சமைச்சு சாப்பிட்டு சாப்பிட்டு இப்ப புதுசா அண்ணி சமைச்சதால அப்படி இருந்தாலும் இருக்குமுண்ணே :)

    டேக் கேர் அண்ணே. உடம்பு முழுசா சரியான பிறகு பதிவு போட்டா போதும்

    ReplyDelete
  41. //ஒண்ணு சொல்லுவேன். ஆனா சொல்ல மாட்டேன்!!//

    கொத்தனாரே!
    கழுவுற மீன்ல நழுவுற மீனய்யா நீரு
    :)

    ReplyDelete
  42. //நல்ல படியா மீண்டு வந்தமைக்கு ஆண்டவனுக்கு நன்றி! பெருசா எதுவும் நடக்கலைன்னு சந்தோசப்பட்டுக்குங்க.//

    நன்றி விவாஜி

    ReplyDelete
  43. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலாஜி, ராம் & ஆதவன்

    ReplyDelete
  44. :-)

    வாங்க தலைவா வாங்க...

    ReplyDelete