Monday, February 23, 2009

TN-07 BC-2308

ஹலோ மை டியர் டாட்டர்,

காதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே? என்னம்மா பண்ணறது? சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.

சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா? போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. "நான் ஆன்சைட்ல இருக்கேன்"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி "யூ.எஸ்ஸா?" அப்படின்னு தான். இல்லீங்க...
"சித்தூர்கட்"னோ "அகமதாபாத்"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.

அதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு? "ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.

இப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் "வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.


வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு "அர்ச்சனா ராஜ்"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா? கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. "தாடகா"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு "அர்ச்சனா"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள "அர்ச்சனா"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு பதிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.

அப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது "We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா "ஜனனம்"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். "பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்"னு ஒரு "பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.

உன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.

இது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல குப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.

இது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.

இது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.

60 comments:

  1. so touchy! படங்கள் அழகு!!

    ReplyDelete
  2. //so touchy! படங்கள் அழகு!!//

    முதல் கமெண்டே பப்பு அம்மா கிட்டேருந்து. வாங்க மேடம். ரொம்ப சந்தோஷம். உங்களோட பப்புவைப் பத்திய பல பதிவுகளைப் படிச்சிருக்கேன். சோம்பேறித் தனம் காரணமா கமெண்டு தான் போட்டதில்லை. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. ஹாய் மோகன் ராஜ்

    //கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.//

    ஹாஹாஹாஹாஆஆஆஆஅ...
    அதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.

    ReplyDelete
  4. ஹாய் ராஜ்,
    அட இத நீங்க பத்திரமா வச்சிருங்க, அர்ச்சனா படிக்க ஆரம்பிச்சப்புறமா அவ கிட்ட குடுத்து படிக்க சொல்லி அந்த சந்தோஷத்தையும் அனுபவிங்க.
    நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  5. குழந்தை ரொம்பவே க்யூட்டா இருக்கா. அதிகமா வெளிய கொண்டு வராதீங்க, திருஷ்டி ஆகிடும்.

    ReplyDelete
  6. அர்ச்சனாவுக்கு குட்டிப் பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தல நல்ல டச்சிங்கான பதிவு தல!

    ReplyDelete
  8. //so touchy! படங்கள் அழகு!!//

    சந்தன முல்லை அம்மையாரை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  9. //ஹாஹாஹாஹாஆஆஆஆஅ...
    அதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.//

    ஹி...ஹி...இன்னும் இல்லை
    :)

    ReplyDelete
  10. //ஹாஹாஹாஹாஆஆஆஆஅ...
    அதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.//

    ஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா?

    :))

    ReplyDelete
  11. //ஹாய் ராஜ்,
    அட இத நீங்க பத்திரமா வச்சிருங்க, அர்ச்சனா படிக்க ஆரம்பிச்சப்புறமா அவ கிட்ட குடுத்து படிக்க சொல்லி அந்த சந்தோஷத்தையும் அனுபவிங்க.
    நல்லாவே இருக்கு.//

    கண்டிப்பா மேடம். அப்படியே சுமதி ஆண்ட்டி உன்னை பத்தி அடிக்கடி விசாரிப்பாங்கமா அவங்க கமெண்டையும் பாருன்னும் சொல்லுவேன்.
    :)

    ReplyDelete
  12. //குழந்தை ரொம்பவே க்யூட்டா இருக்கா. அதிகமா வெளிய கொண்டு வராதீங்க, திருஷ்டி ஆகிடும்.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  13. //தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும்.//

    வன்மையாகக் கண்டிக்கிறேன்! ராமாயணம் என்பது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை!

    ReplyDelete
  14. //அர்ச்சனாவுக்கு குட்டிப் பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!//

    நன்றி தள. உங்க எல்லாரோட வாழ்த்துகளும் தேவை அவளுக்கு.

    ReplyDelete
  15. //தல நல்ல டச்சிங்கான பதிவு தல!//

    எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தள.
    வளர நன்னி.

    ReplyDelete
  16. அர்ச்சனாகுட்டி சூப்பரா இருக்க.
    கைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.

    ReplyDelete
  17. தல,

    பாப்பா ஷோ கியூட்.... :)

    ReplyDelete
  18. //உங்க எல்லாரோட வாழ்த்துகளும் தேவை அவளுக்கு//

    சிபி கொஞ்சம் பெரிய உருவம்தான்! அதுக்காக அவரை பன்மையில் விளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்ட்டோம்!

    ReplyDelete
  19. /அர்ச்சனாகுட்டி சூப்பரா இருக்க.
    கைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.//

    ஆமாம்!

    ReplyDelete
  20. //ஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா?

    :))//

    தள! இதெல்லாம் இப்படியா பப்ளிக்ல போட்டு ஒடைக்கிறது?
    :)

    ReplyDelete
  21. //வன்மையாகக் கண்டிக்கிறேன்! ராமாயணம் என்பது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை!//

    சாரி தாடகை சார்...சாரி...மேடம்...மன்னிச்சுக்கங்க.
    :)

    ReplyDelete
  22. //அர்ச்சனாகுட்டி சூப்பரா இருக்க.
    கைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.//

    கண்டிப்பா நிலா பாப்பா. அந்த சங்கத்தோட ஃபவுண்டர் உங்க அப்புச்சி நந்து சார் தான்னு சொல்ல மறந்துட்டியே.
    :)

    ReplyDelete
  23. // வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.//

    தங்கள் நன்றிக்கொரு நன்றி! உங்கள் மற்ற பதிவுகளைப் போல வாசித்து வெறுமே கடந்துவிட முடியவில்லை என்னால்..இந்தப் பதிவையும்! :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி! :-)

    ReplyDelete
  24. //தல,

    பாப்பா ஷோ கியூட்.... :)//

    ரொம்ப நன்னிப்பா ராயல்.
    :)

    ReplyDelete
  25. ஹாய் ராஜ்,

    //ஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா? //
    அட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா?
    அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை. ஹா ஹா ஹா(சும்மா ஜாலிக்காக)

    ReplyDelete
  26. அருமையான பதிவு... (நான் எப்பவும் சொல்ற மாதிரி) From the heart...

    இதை பாப்பா படிக்கும் போது அட்டகாசமா இருக்கும்...

    பாப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள். She is so cute :)

    ReplyDelete
  27. //அட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா?
    அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை. ஹா ஹா ஹா(சும்மா ஜாலிக்காக)//

    என் வாகனமே அதுதாங்க!

    தினமும் டூ & ஃப்ரோ : அம்பத்தூர் - திருமங்கலம்!

    ஆனாலும் ரிசல்ட் இல்லையே!

    ReplyDelete
  28. //அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ.//

    யோவ் இது எல்லாம் அடுக்குமா... ஸ்கார்பியோ வ ஜீப் சொல்லிட்டியே :(

    SUV சொல்லி பழகுங்க சாமி... ரொம்பவே நொந்துட்டேன் சொல்லிட்டேன்...

    ReplyDelete
  29. //உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.//

    கொஞ்சம் தானா???? :))

    //அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக்.//

    Self Start இல்லையா? இருக்கனுமே...

    ReplyDelete
  30. சரி அது போகட்டும், உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க.. அப்ப அது சும்மா லுல்லூயிக்கா? ;))))

    ReplyDelete
  31. பதிவு பக்கா!

    போட்டோ கலக்கல் :))

    ReplyDelete
  32. அர்ச்சனா பாப்பா சூப்பர்.. பெரியவளானதும் உங்கள் பதிவைப் படித்து நிச்சயம் நெகிழ்ந்து போவாள். :-)

    ReplyDelete
  33. அர்ச்சனா குட்டி அழகு ;)

    பதிவு செம கலக்கல் தல ;)

    ReplyDelete
  34. அருமையான பதிவு. இதே மாதிரி நெறைய எழுது. புகைப்படங்கள் ஏ ஒன். திருஷ்டி சுத்தி போட சொல்லு :-)

    ReplyDelete
  35. அட இதல்லாம் சொல்ல மாட்டீங்க! யோவ்! அர்ச்சனா அருமையா இருக்காய்யா கைப்ஸ்! இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு! என் பொம்முகுட்டி அம்மாக்கு ஆசிகள்!

    ReplyDelete
  36. கைப்புவுக்கு தொப்பைதான அழகு :))
    உங்க பேபி நன்னாருக்கு :))

    ReplyDelete
  37. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது.//

    கண்ணிலே நீர் வரும் உணர்வு, அருமையாக வடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த நிமிஷம் சொர்க்கம் கையிலே இருக்கு என்ற எண்ணமே வரும். வாழ்த்துகளும், ஆசிகளும்,.

    ReplyDelete
  38. நெகழ்வான பதிவுங்க...அர்ச்சனா பெரிசானதும் இத படிக்க கொடுங்க.

    ReplyDelete
  39. டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்....

    http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.html

    ReplyDelete
  40. //சிபி கொஞ்சம் பெரிய உருவம்தான்! அதுக்காக அவரை பன்மையில் விளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்ட்டோம்!//

    வாங்க சிபிதாஸர்களே,
    பன்மையில் விளிச்சா அதை கடுமையா கண்ணடிச்சு டீ குடிப்பீங்களாக்கும்.

    ReplyDelete
  41. //தங்கள் நன்றிக்கொரு நன்றி! உங்கள் மற்ற பதிவுகளைப் போல வாசித்து வெறுமே கடந்துவிட முடியவில்லை என்னால்..இந்தப் பதிவையும்! :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி! :-)//

    மறுவருகைக்கு நன்றி. நன்றிக்கொரு நன்றிக்கொரு இன்னொரு நன்றி மேடம்.
    :)

    ReplyDelete
  42. //அருமையான பதிவு... (நான் எப்பவும் சொல்ற மாதிரி) From the heart...//

    ரொம்ப நன்றிப்பா பாலாஜி.

    //இதை பாப்பா படிக்கும் போது அட்டகாசமா இருக்கும்... //
    ஆமா...வெட்டி மாமாவைப் பாத்து காப்பி ஏன் அடிச்சீங்க...சொந்தமா எழுத சரக்கு இல்லையான்னு கேள்வி கேட்டா என்ன சொல்றதுன்னு தான் தெரியலை

    //பாப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள். She is so cute :)//

    டாங்கீஸ்பா.
    :)

    ReplyDelete
  43. //அட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா?
    //

    //என் வாகனமே அதுதாங்க!

    தினமும் டூ & ஃப்ரோ : அம்பத்தூர் - திருமங்கலம்!

    ஆனாலும் ரிசல்ட் இல்லையே!
    //

    எப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும் தள மெனக்கெடனும். சுமதி மேடம் சொல்றது ஃபிசிக்கல் ரியாக்சன் மற்றும் கெமிக்கல் ரியாக்சனைப் பத்தி. அது என்னன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா? அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க. அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை அங்கிட்டு தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து லக்கேஜ் மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு physical reaction.

    இப்ப கெமிக்கல் ரியாக்ஷன் என்னன்னு கேக்கறீங்களா? ஃபுட்போர்ட்ல தொங்கும் போது காத்தும் வெயிலும் ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.

    ஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. உங்களை பத்தி எனக்கு தெரியுமே...உடனே அமலா இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்?
    :)

    ReplyDelete
  44. //யோவ் இது எல்லாம் அடுக்குமா... ஸ்கார்பியோ வ ஜீப் சொல்லிட்டியே :(

    SUV சொல்லி பழகுங்க சாமி... ரொம்பவே நொந்துட்டேன் சொல்லிட்டேன்...//

    சூடான்ல வேணா அது suvயா இருக்கலாம். எங்கூர்லல்லாம் அது ஒரு பெரிய சைஸ் ஜீப்பு தான் ஆமா.
    :)

    ReplyDelete
  45. ////அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக்.//

    Self Start இல்லையா? இருக்கனுமே...//

    ஆமா இதையெல்லாம் மட்டும் வக்கனையா கேளு. Self start இருக்கு...ஆனா காலையில முதல் முறை ஸ்டார்ட் பண்ணும் போது கிக் பண்ணி ஸ்டார்ட் செஞ்சா பேட்டரி சார்ஜ் ஆகுமாம்.
    :)

    ReplyDelete
  46. //சரி அது போகட்டும், உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க.. அப்ப அது சும்மா லுல்லூயிக்கா? ;))))//

    மத்த விஷயமெல்லாம் நல்ல வக்கனையா யோசனையா கேக்கறே? இந்த மாதிரி குடும்பத்துல குழப்பம் உண்டாக்கற விஷயத்துல மட்டும் யோசிக்கவே மாட்டியா? இப்ப பாரு நீ சூடான்ல கரெண்ட் மரம் ஏறுற உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு. ஸ்கார்பியோவை ஜீப்புன்னு சொன்னேங்கிற கடுப்புல தான் நீ தேவை இல்லாம புரளி கெளப்பறேங்கிற உண்மையையும் விவரமா வெளக்க வேண்டியதாப் போச்சு. ஐ ஆம் சாரி யுவர் ஆனர்.
    :)

    ReplyDelete
  47. //பதிவு பக்கா!

    போட்டோ கலக்கல் :))//

    நன்னிப்பா புலி.

    ReplyDelete
  48. //அர்ச்சனா பாப்பா சூப்பர்.. பெரியவளானதும் உங்கள் பதிவைப் படித்து நிச்சயம் நெகிழ்ந்து போவாள். :-)//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க நிலாக்காலம்.

    ReplyDelete
  49. //அர்ச்சனா குட்டி அழகு ;)

    பதிவு செம கலக்கல் தல ;)//

    ரொம்ப நன்றிங்க கோபிநாத்.
    :)

    ReplyDelete
  50. //அருமையான பதிவு. இதே மாதிரி நெறைய எழுது. புகைப்படங்கள் ஏ ஒன். திருஷ்டி சுத்தி போட சொல்லு :-)

    //

    நன்றிப்பா திரு.
    :)

    ReplyDelete
  51. //:-)//

    சிரிச்சதுக்கு நன்னிப்பா கப்பி.

    ReplyDelete
  52. //அட இதல்லாம் சொல்ல மாட்டீங்க! யோவ்! அர்ச்சனா அருமையா இருக்காய்யா கைப்ஸ்! இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு! என் பொம்முகுட்டி அம்மாக்கு ஆசிகள்!//

    அபி அப்பா நன்னிங்கங்கோ.
    :)

    ReplyDelete
  53. //கைப்புவுக்கு தொப்பைதான அழகு :))
    உங்க பேபி நன்னாருக்கு :))//

    ஹி...ஹி...தேங்க்சுங்க சுப்பு.
    :)

    ReplyDelete
  54. //கண்ணிலே நீர் வரும் உணர்வு, அருமையாக வடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த நிமிஷம் சொர்க்கம் கையிலே இருக்கு என்ற எண்ணமே வரும். வாழ்த்துகளும், ஆசிகளும்,.
    //

    வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் ரொம்ப நன்றி மேடம்.

    ReplyDelete
  55. //உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க..//

    சொல்லவே இல்ல கைப்ஸ்.

    எதையும் மறக்காத இந்த ஒரு குணத்துக்காகவே ஒரு ராயல் சல்யூட். :P

    ReplyDelete
  56. \\"We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே\\

    சந்தோஷம் வார்த்தைகளில் பரவுகிறது.

    படங்கள் கொள்ளை அழகு

    ReplyDelete
  57. ரொம்பவே வரிவரியா உணர்ந்து படிச்சேன் தல.

    20 நிமிஷத்துல பாப்பா உங்க கைலயா? குடுத்து வெச்சவங்க நீங்க.

    அர்ச்சனா பாப்பாவுக்கு சுத்தி போடுங்க. முகத்துல நிறையவே உங்க சாயல் தெரியுது.

    ReplyDelete
  58. nice post cute baby

    wishing you and your baby all the very best in the world.

    ReplyDelete
  59. ரெம்ப நாள் கழிச்சு உங்க பக்கத்துக்கு வர்ரேன்.

    ரொம்ப ஸ்வீட்ங்க அர்ச்சனா.

    இந்த அனுபவமெல்லாம் எழுத்துலே
    உண்ர முடியாது சாமி.

    அனுபவிக்கணும்.

    ReplyDelete