"குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்" என்னும் பதிவை அம்மாக்களின் உலகம் வலைப்பூவில் படிச்சேன். குழந்தைகளுக்காக விற்பனைக்கு உள்ள விளையாட்டு பொம்மைகள் தற்போதெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே அதுவும் குறிப்பாக சீனத் தயாரிப்புகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார் ஆகாய நதி. ஆறு மாதக் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் அக்கூற்று சரியானதே என நம்புகிறேன். Fisher Price, Funskool, Mattel ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்கள் தான் இப்போது பல கடைகளிலும் மலிந்துக் கிடக்கிறது.
அந்தப் பதிவைப் படிச்சதும் சங்க காலத்துல தமிழ் இலக்கியங்கள்ல சொல்லிருக்கற பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் திடீர்னு ஞாபகம் வந்தது. ஊஞ்சல், அம்மானை, கழங்கு இப்படின்னு விளையாட்டு பேர்கள் எல்லாம் திடீர்னு ஞாபகம் வந்துச்சு. நம்ம குழந்தையைச் சங்க கால முறைப்படி விளையாட்டுகள் விளையாடச் சொல்லி பழக்குனா என்னன்னு ஒரு ஐடியா தோனுச்சு. அந்த தாய் ஐடியாவை ஒரு வெண்பாவா வடிச்சா எப்படியிருக்கும்னு இன்னொரு பிள்ளை ஐடியா உதிச்சுச்சு. சோ...கவிதை எழுதுறதுக்கே கைடு கேட்டுட்டு இருந்த நான் என் பொண்ணு பொறந்த நேரம் வெண்பா எழுதுற அளவுக்கு முன்னேறிட்டேன். இப்போ அந்த வெண்பாவைப் பாக்கலாமா...
"செம்மீனாடிடு காகமு மாலவன்தாள் தொழுநெடும்
புன்னை பாக்கமுறை கடைபருவ மலையவள்
மொழியாம் புள்ளும்பூவும் பூண்டும் கண்டனன்
இட்டும் தொட்டுமாடி பழக பார்பி பாவை
வேண்டுவ கரும்பனை தடந்தோள் இனிதுயில்
வயிரவன் வெள்ளை கொடியோன் வேல்தீட்டி
வினைசெய் போதினிலி றுத்தான் பிடிநடை
பெண்டிர் முறமது புலிபுறம்பட ஓடுவநாடே
வான்தொடு ஊசலாடி அம்மானைபாடி பின்நல்
தோழியர் களித்திட கழங்காடி மகிழுவ
புல்வேண்டா சிகையினன் இளையவன் பகரவே
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்
வளை தவழ்கையள் கிள்ளை மொழியாள்
லூசாப்பாநீ என்றனள ங்கையற் கண்ணினளே!"
அசை, சீர், தளை எல்லாம் சரியாத் தானிருக்கும்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு அருமையான வெண்பாவைப் படிச்சி புரிஞ்சிக்க உங்களுக்கெல்லாம் கஷ்டமாயிருக்கலாம். அதுக்காகத் தான் நான் எழுதுன வெண்பாவுக்கு நானே கோனார் நோட்ஸ் போட்டுருக்கேன் கீழே -
செந்நிறம் கொண்ட சங்கரா மீன்கள் மூச்செடுக்க கடல்பரப்பின் மீது வரும் போது கொத்தித் தின்னும் நீர் காகங்களும், கடற்கரை கோயிலின் தலவிருட்சமான புன்னை மரம் திருமாலின் கருணையை நினைத்து உருகி அவன் அடி தொடும் பொருட்டு வானம் தொட எண்ணுவதை போல மேல்நோக்கி உயர்ந்து வளரும் கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகிய பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்.
நீர் காகமும், புன்னை மரமும் கருப்பொருளாய்க் கொண்ட நெய்தல் திணை நகரமாகிய சென்னை மாநகரிலே வசிக்கும், பிள்ளைத்தமிழ் பருவங்களில் பெண்பிள்ளைகளின் கடைசிப் பருவம் எனச் சொல்லப்படும் ஊஞ்சலாடு பருவத்தில் இருக்கும் சிறு பெண்குழந்தையவள். அப்பெண் குழந்தையானவள் அறிவிலும் அழகிலும் சிறந்தவளாகப் போற்றப் பெறும் சிவபெருமானின் துணையான மலைமகள் பார்வதி தேவிக்கு ஒப்பானவள்.
அக்குழந்தை சொல்கிறாள் "பறவைகளையும்(புள்), பூக்களையும், செடிகொடிகளையும்(பூண்டு) வேடிக்கை பார்த்து பார்த்து எனக்கு அலுத்து விட்டது. ஆகவே நான் தொட்டு கீழே போட்டு பேசிப் பழகி விளையாட ஒரு பார்பி (Barbie) பொம்மை வாங்கித் தாருங்கள்" என்று கேட்கிறாள்.
யாரிடம் கேட்கிறாள்? கருமையான நிறத்தினைக் கொண்ட பனைமரங்களைப் போன்ற வலிமையான தோள்களையும், அல்வா எனும் இனிப்பினை மதிய உணவுக்குப் பின் உண்டு விட்டு தினமும் தூங்கிய காரணத்தால் செல்லமான தொப்பை விழுந்த வயிறையும் கொண்ட என்றுமே அமைதியையே விரும்பும் வெள்ளை கொடியோன் ஆகிய தன் தந்தையிடம் கேட்கின்றாள்.
வேலினைத் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தன் குழந்தையின் வேண்டுதலுக்கு அத்தந்தையானவன் பதில் சொல்லுகின்றான். நிற்க. அமைதியையே விரும்புபவன் வேல் தீட்டும் காரணம் என்ன என்பதை நீங்கள் இங்கு யோசிக்க வேண்டும். இரவு உணவிற்காக வெங்காயங்களையும், தக்காளிகளையும் நறுக்குவதற்காக மேலிட உத்தரவின் பேரில் கத்தியைத்(வேல்) தீட்டிக் கொண்டிருக்கிறான் என்பது இவ்வரிகளில் புலவர் நமக்கு குறிப்பால் உணர்த்துவது.
காய்கறிகளை அரிந்து கொண்டே குழந்தைக்கு என்ன பதில் சொல்லுகிறான்? "பெண் யானையின் நடையைப் போன்ற ஒயிலைக் கொண்டவர்கள் தமிழ் பெண்கள். ஒயில் கொண்ட பெண்கள் ஆனாலும் வீரத்திலும் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். எத்தகைய வீரம் என்றால் அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்க்கும் புலியை முறத்தைக் கொண்டு அதன் பின்புறத்தில் அடித்து ஓட ஓட விரட்டியடிக்கும் வீரம் கொண்ட பெண்கள். அத்தகைய அழகும் வீரமும் ஒருசேர அமைந்த தமிழ் பெண்கள் கொண்ட நாட்டில் அவர்கள் வழியில் வந்தவள் நீ. பார்பி பொம்மை வைத்து விளையாடுவதற்குப் பதிலாய் வானம் தொடுமாறு ஊஞ்சலாடி, அம்மானை பாடி, தோழியருடன் மகிழ்ந்து கழங்கு ஆடுவாய் ஆனால் புத்துணர்ச்சி பெருகும், குரல் வளம் பெருகும், ஞாபக சக்தியும், செய்யும் செயல்களில் கவனமும் கூடும்" என்று தன் ஆருயிர் மகளுக்கு அறிவுரை சொல்கின்றான். அறிவுரை சொல்கின்றவன் எத்தகையவன் என்றும் பாடலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை. புல்வேண்டா - புல்லினை எப்போதும் விரும்பாத, சிகை- கேசம்...அப்படின்னா புலி + கேசி...புலிகேசி. அதாவது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் வழிவந்த இளையவன் என்று சொல்கிறார்.
தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதாம். அத்தகைய தத்தித் தத்தி நடக்கும் சிறுகால்களைக் கொண்ட சிறிய வளையல்களைத் தன் கையில் அணிந்துள்ள கிளியைப் போன்ற இனிய மொழியினைக் கொண்ட அழகிய பெரிய கண்களைக் கொண்ட அப்பெண் குழந்தை தன் தந்தையைப் பார்த்து கேட்கின்றாள் "லூசாப்பா நீ?".
(இப்போ பதிவுக்கும் அதன் தலைப்புக்குமான தொடர்பைச் சொல்லிடறேன். காதலர் தினத்தன்னிக்கு ஸ்பெஷலா முயற்சி பண்ணி எழுதுன வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்)
பதிவு கிடக்கட்டும்ணே, இது வெண்பாவில் எந்த வகை ? கடைசீல சொன்ன எதுவும் ஒத்துக்க மாட்டேன். ஒழுங்கா சரியான வெண்பா எழுதிப் போடும். இல்லாட்டி கொத்தனார் கிட்ட சொல்லி கொத்த சொல்லிருவேன்
ReplyDelete//வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்//
ReplyDeleteதல! இலக்கணப் பிழை!
வெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா!
//கருமையான நிறத்தினைக் கொண்ட பனைமரங்களைப் போன்ற வலிமையான தோள்களையும், அல்வா எனும் இனிப்பினை மதிய உணவுக்குப் பின் உண்டு விட்டு தினமும் தூங்கிய காரணத்தால் செல்லமான தொப்பை விழுந்த வயிறையும் கொண்ட என்றுமே அமைதியையே விரும்பும் வெள்ளை கொடியோன் ஆகிய தன் தந்தையிடம் கேட்கின்றாள்.//
ReplyDeleteஆஹா! தல! தன்னைப் பத்தி தானே எழுதிக்கிறதுக்கு இலக்கணக்குறிப்பு எதுனா இருக்கா தல?
//பதிவு கிடக்கட்டும்ணே, இது வெண்பாவில் எந்த வகை ? கடைசீல சொன்ன எதுவும் ஒத்துக்க மாட்டேன். ஒழுங்கா சரியான வெண்பா எழுதிப் போடும். இல்லாட்டி கொத்தனார் கிட்ட சொல்லி கொத்த சொல்லிருவேன்//
ReplyDeleteஅட! அது கூட தெரியாம வெண்பா எழுதுவோமா? எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். என்ன ஒன்னு கொஞ்சம் கூவிளங்கனி தூக்கலாத் தூவி இருக்கேன். அதான் உங்களுக்குச் சரியா புரியலை போலிருக்கு. வேணும்னா உங்களுக்கும் கொத்ஸுக்கும் தனியா ஒரு க்ளாஸ் எடுத்துடறேன். சரியா?
:)
ஹைய்யா! வெண்பா வாத்தியார் வந்துட்டார்!
ReplyDelete//வேணும்னா உங்களுக்கும் கொத்ஸுக்கும் தனியா ஒரு க்ளாஸ் எடுத்துடறேன். சரியா?//
ReplyDeleteநானும் கிளாஸ்க்கு வரேன் தல!
எனக்கு ஒரு குவார்ட்டர் போதும்! தட்ஸ் மை லிமிட்!
//"செம்மீனாடிடு காகமு மாலவன்தாள் தொழுநெடும்
ReplyDeleteபுன்னை பாக்கமுறை கடைபருவ மலையவள்
மொழியாம் புள்ளும்பூவும் பூண்டும் கண்டனன்
இட்டும் தொட்டுமாடி பழக பார்பி பாவை
வேண்டுவ கரும்பனை தடந்தோள் இனிதுயில்
வயிரவன் வெள்ளை கொடியோன் வேல்தீட்டி
வினைசெய் போதினிலி றுத்தான் பிடிநடை
பெண்டிர் முறமது புலிபுறம்பட ஓடுவநாடே
வான்தொடு ஊசலாடி அம்மானைபாடி பின்நல்
தோழியர் களித்திட கழங்காடி மகிழுவ
புல்வேண்டா சிகையினன் இளையவன் பகரவே
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்
வளை தவழ்கையள் கிள்ளை மொழியாள்
லூசாப்பாநீ என்றனள ங்கையற் கண்ணினளே//
மேலே உள்ள நல்ல பாவிலே எனக்கு நல்லா புரிஞ்ச வரி //லூசாப்பாநீ// என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்!
//
//தல! இலக்கணப் பிழை!
ReplyDeleteவெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா!//
இல்லீங்க. நீங்க சொல்றது பெயரெச்சம்...நான் சொல்றது வினையெச்சம்.
:)
//ஆஹா! தல! தன்னைப் பத்தி தானே எழுதிக்கிறதுக்கு இலக்கணக்குறிப்பு எதுனா இருக்கா தல?//
ReplyDelete"ஆறு தன் வரலாறு கூறுதல்னு" எதுவும் ஞாபகம் வரலியா உங்களுக்கு?
:)
//இல்லீங்க. நீங்க சொல்றது பெயரெச்சம்...நான் சொல்றது வினையெச்சம்.
ReplyDelete:)//
என்னவோ போங்க!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
//எனக்கு ஒரு குவார்ட்டர் போதும்! தட்ஸ் மை லிமிட்!//
ReplyDeleteகத்துக்கணும்ங்கிற தாகமுள்ள கொத்ஸ், ஜீவ்ஸ் மாதிரி ரெண்டு புள்ளைங்க எனக்கு போதும்...
யூ ஆர் எ பேட் பாய்
:)
ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது மரபுவகைக் கவுஜ சூப்பரா எழுதறீரு
ReplyDeleteவாழ்த்துக்கள்
//"ஆறு தன் வரலாறு கூறுதல்னு" எதுவும் ஞாபகம் வரலியா உங்களுக்கு?//
ReplyDeleteயெஸ் தல!
ஆறாம்பு படிக்கும்போது நிலக்கரி தன் வரலாறு கூறுதல் கட்டுரை கூட படிச்சிருக்கேன்!
//யூ ஆர் எ பேட் பாய்//
ReplyDeleteஅச்சரா! ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!
என்ன இது சின்னப் புள்ளைத் தனமா?
ReplyDelete//யூ ஆர் எ பேட் பாய்//
ReplyDeleteஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தலையின் வளர்ப்பினிலே! தலையின் வளர்ப்பினிலே!
எனக்கொரு கேர்ல் ஃபிரண்ட் வேணும் தல!
ReplyDelete//மேலே உள்ள நல்ல பாவிலே எனக்கு நல்லா புரிஞ்ச வரி //லூசாப்பாநீ// என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்!//
ReplyDelete"லூசாப்பாநீ" -
அதை அடிக்கடி வீட்டுல கேட்டு பழக்கப்பட்ட காரணமாயிருக்கும். கீழே கோனார் நோட்ஸ் போட்டிருக்கேனே...படிக்கலியா?
:)
//லூசாப்பாநீ" -
ReplyDeleteஅதை அடிக்கடி வீட்டுல கேட்டு பழக்கப்பட்ட காரணமாயிருக்கும்//
தல! நீங்க ஒரு திறந்த புத்தகம் தல!
வெண்பா??
ReplyDeleteவேண்டாம்பா!!!!
//ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது மரபுவகைக் கவுஜ சூப்பரா எழுதறீரு
ReplyDeleteவாழ்த்துக்கள்//
இதுல காமெடி கீமெடி எல்லாம் இருக்கு தானே?
:)
//ஆறாம்பு படிக்கும்போது நிலக்கரி தன் வரலாறு கூறுதல் கட்டுரை கூட படிச்சிருக்கேன்!//
ReplyDeleteயெஸ்...அதே தான் இது :)
//எனக்கொரு கேர்ல் ஃபிரண்ட் வேணும் தல!//
ReplyDeleteஅதான் ஏற்கனவே நயன் இருக்காங்களே உமக்கு?
:)
//வெண்பா??
ReplyDeleteவேண்டாம்பா!!!!//
வாங்க ஆதவரே!
கீழே கோனார் நோட்ஸ் போட்டுருக்கேனே படிச்சிப் பாருங்க
:)
வெண்பாவிலே எப்படி ஈரடி வெண்பான்னு பிரிஞ்சதோ... அதே போல இந்த வெண்பாவுக்கு நூறடி வெண்பான்னு பேரு. பின்னே... நூறு அடிகள் கைப்புள்ள வாங்கப் போறாருல்ல.
ReplyDeleteமத்தபடி பாட்டு பெரமாதம்.
// Namakkal Shibi said...
ReplyDelete//வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்//
தல! இலக்கணப் பிழை!
வெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா! //
வெறும்+பா ம்மா வெறுப்பா இல்லையா?
//அதே போல இந்த வெண்பாவுக்கு நூறடி வெண்பான்னு பேரு. பின்னே... நூறு அடிகள் கைப்புள்ள வாங்கப் போறாருல்ல.
ReplyDeleteமத்தபடி பாட்டு பெரமாதம்.
//
வாங்க ஜி.ரா,
ஹி...ஹி...ரொம்ப நன்னிங்க.
:)
//வெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா! //
ReplyDeleteவெறும்+பா ம்மா வெறுப்பா இல்லையா?
//
அண்ணே!
பூவை பூன்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம்...நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.
:)
தல,
ReplyDeleteகவுஜ சூப்பரு...
கத்தீயைத் தீட்டிக்கொண்டே புலிகேசி பேசினாராம்மா.
ReplyDeleteஅப்போ அந்தப் பொண்ணு லூசாப்பா நீன்னு கேட்டுதாம்மா?
அதுக்கு ஆறுமாதம் தானே ஆகிறது அரசே:)
வெற்றுப்பாவோ வெண்பாவோ, பெண் பாடலைப் புரிய வைத்ததிற்கு ரொம்ப நன்றிப்பா:)
இது கைப்பிள்ளைப் பெண்பா.!!
தல..எங்கயோ போயிட்டீங்க ;)
ReplyDeleteதல,
ReplyDeleteவெண்பா அருமை..... :)
கொஞ்சமா தளை தட்டுது... நம்ம தள'க்கு அவரு கேட்க்கிறதே வாங்கி ஃபீடிங் பாட்டில்'லே ஊத்திகொடுங்க... அதெ குடிச்சிட்டு அவரு சரி பண்ணிருவாரு.....
ReplyDeleteதல,
அப்புறம் இன்னொரு விஷயம், வெண்பா அறிஞர்கள் ஜீவ்ஸ்,கொத்ஸ்,பொன்ஸ்'ல்லாம் இங்க சவுண்ட் விடுவாங்க....
அதெயெல்லாம் கண்டுக்காமே போயிருங்க.. இல்லான்னா அங்க விருத்தம்,கலிப்பா, புலிப்பால்'னு சம்பந்தம் சம்பந்தமில்லாமே பேசி நம்மளை மாதிரி வளரும் வெண்பா அறிஞர்களை வளரவிடமே பண்ணிருவாங்க..... :)
மி தி எஸ்கேப்பூ இன் எ ஸ்மால் கேப்பூ...
ReplyDelete//இராம்/Raam said...
ReplyDeleteகொஞ்சமா தளை தட்டுது...//
அதுக்குத் தானேப்பா இந்தப் பதிவே!
தல தட்டணும்!
தள தட்டணும்!
எங்கே ரெண்டு பேரையும் தட்டுங்க பார்ப்போம்! :)
//மேலே உள்ள நல்ல பாவிலே எனக்கு நல்லா புரிஞ்ச வரி
//லூசாப்பாநீ//
என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்!//
இதை வழிமொழிப்பாவாக நான் வழிமொழிகிறேன்! :)
//வெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா!//
ReplyDeleteஇல்லை!
வெறும்+பாடல் = வெறுப்பா!
பெறும்+பாடல் = பெறுப்பா!
பொறும்+பாடல் = பொறுப்பா!
தல-கைப்புவின் பாட்டில் பிழை காண நீர் என்ன பெரிய பருப்பா? :))
தல
ReplyDeleteஎனக்கென்னமோ இது வெண்பா மாதிரி தெரியலை!
நிலை மண்டில ஆசரியப்பா....
உம்ம்ம்
இது தல மண்டில ஆசிரியப்பா! :))
தல மண்டையில ஆசிரியப்பா-ன்னும் படிக்கலாம்! :))
ஆசிரியப்பாவுக்குச் சோடியா ஆசிரியம்மா ஒன்னு எடுத்து வுடுங்க தல! :))
//பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்//
ReplyDeleteகீழ்ப்பாக்கம்? :))
//சிறுகால் = தென்றல்;//
ReplyDeleteஇதுக்கு எதுக்கு கேஆரெஸ் பய புள்ளையின் சுட்டியைக் கொடுத்தீங்க? அவன் தான் காதலர் தினத்துல பிசியா இருக்கான்-ல? :)
சரி காதலர் தின வெண்பாவில் காதல் தானே வரணும்! எதுக்கு கத்திரிக்கா நறுக்குவது வந்தது?
காதல்=கத்திரிக்கா என்னும் மாபெரும் உட்பொருளை உட்குத்தாகச் சொல்ல முனைகிறாரோ புலவர் கைப்புள்ள? :)
உமது பாடலில் சொற் பிழை இல்லை, இலக்கண பிழையும் இல்லைன்னு தான் நினைக்கிறேன். ஆனா ஒரு பெரிய பொருட் பிழை இருக்கு.
ReplyDeleteநீங்களா கண்டு பிடிக்க கொஞ்சம் டைம் குடுக்கறேன். சாயந்திரம் மீண்டும் வரேன். :))
சந்தடி சாக்குல அல்வா தின்னா தொப்பை வரும்ன்னு உள்குத்து வெச்ச உம்மை நெல்லைகாரங்க எல்லாம் சேர்ந்து உதைக்க போறோம் பாருங்க. :))
//தல,
ReplyDeleteகவுஜ சூப்பரு...//
நன்னிப்பா பாலாஜி
//கத்தீயைத் தீட்டிக்கொண்டே புலிகேசி பேசினாராம்மா.
ReplyDeleteஅப்போ அந்தப் பொண்ணு லூசாப்பா நீன்னு கேட்டுதாம்மா?
அதுக்கு ஆறுமாதம் தானே ஆகிறது அரசே:)
வெற்றுப்பாவோ வெண்பாவோ, பெண் பாடலைப் புரிய வைத்ததிற்கு ரொம்ப நன்றிப்பா:)
இது கைப்பிள்ளைப் பெண்பா.!!//
வாங்க வல்லி மேடம்,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆறு மாச குழந்தையோட தகப்பன் நான்னு தானே சொல்லிருக்கேன். வெண்பால அந்த பெண் குழந்தையோட வயசு ஆறு மாசம்னு எங்கேயாச்சும் சொல்லிருக்கேனா? ஊஞ்சலாடு பருவம்னு தானே சொல்லிருக்கேன்? ஊஞ்சல் ஆடுற குழந்தைங்க பேசுமில்ல?
:))
//தல..எங்கயோ போயிட்டீங்க ;)//
ReplyDeleteஹி...ஹி...கப்பியூர் கிழார், எங்கேயும் போகலீங்க...இங்கேயே தான் இருக்கேன்.
:)
//ஆறு மாச குழந்தையோட தகப்பன் நான்னு தானே சொல்லிருக்கேன். வெண்பால அந்த பெண் குழந்தையோட வயசு ஆறு மாசம்னு எங்கேயாச்சும் சொல்லிருக்கேனா? //
ReplyDeleteதல, அப்படின்னா....? :))
போடுறா போனை அண்ணிக்கு. :p
//கொஞ்சமா தளை தட்டுது... நம்ம தள'க்கு அவரு கேட்க்கிறதே வாங்கி ஃபீடிங் பாட்டில்'லே ஊத்திகொடுங்க... அதெ குடிச்சிட்டு அவரு சரி பண்ணிருவாரு.....//
ReplyDeleteஹி...ஹி...ஆமா...அவருக்கு கேர்ள் ஃப்ரெண்டு வேற வேணுமாம்.
:)
//
தல,
அப்புறம் இன்னொரு விஷயம், வெண்பா அறிஞர்கள் ஜீவ்ஸ்,கொத்ஸ்,பொன்ஸ்'ல்லாம் இங்க சவுண்ட் விடுவாங்க....
அதெயெல்லாம் கண்டுக்காமே போயிருங்க.. இல்லான்னா அங்க விருத்தம்,கலிப்பா, புலிப்பால்'னு சம்பந்தம் சம்பந்தமில்லாமே பேசி நம்மளை மாதிரி வளரும் வெண்பா அறிஞர்களை வளரவிடமே பண்ணிருவாங்க..... :)//
ஹி...ஹி...நன்னிப்பா ராயல். ஆனாலும் என்ன தடை வந்தாலும் நாமெல்லாம் வளர்ந்துருவம்ல?
:)
//மி தி எஸ்கேப்பூ இன் எ ஸ்மால் கேப்பூ...//
ReplyDeleteஉங்களை எல்லாம் நம்பி தானே வெண்பால்லாம் எழுதிருக்கோம்? நீங்களே இப்படி எஸ்கேப் ஆனா எப்படி?
:)
//இல்லை!
ReplyDeleteவெறும்+பாடல் = வெறுப்பா!
பெறும்+பாடல் = பெறுப்பா!
பொறும்+பாடல் = பொறுப்பா!
தல-கைப்புவின் பாட்டில் பிழை காண நீர் என்ன பெரிய பருப்பா? :))//
ஐயா,
ஏன்யா இப்படி தேவையில்லாம சவுண்டு? க்ரவுடை என் பக்கம் திருப்பி டின்னு கட்டிவிட ப்ளானா?
:)
நானும் மொத தடவை பாக்கும்போது மிரண்டு போயிட்டேன். அப்புறம் கோனார் நோட்ஸ் வச்சிக்கிட்டு படிச்சா நல்லா சிரிப்பு வந்துச்சு. நீ ஆயிரத்தில் ஒரு கவிஞன், இனி "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்று உன்னை பார் போற்றும்!
ReplyDelete//தல
ReplyDeleteஎனக்கென்னமோ இது வெண்பா மாதிரி தெரியலை!
நிலை மண்டில ஆசரியப்பா....
உம்ம்ம்
இது தல மண்டில ஆசிரியப்பா!
தல மண்டையில ஆசிரியப்பா-ன்னும் படிக்கலாம்! :)//
இதோட நிறுத்திக்குவோம். அடுத்தது சீத்தலைச் சாத்தனார் எல்லாம் ஆக்கப்பிடாது.
:)
கைப்பு உமது பாடலே தவரு என்கிரேன் :))
ReplyDelete////பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்//
ReplyDeleteகீழ்ப்பாக்கம்? :))//
சென்னையில எத்தனையோ பாக்கம் இருக்க, கேஆரெஸ் ஆழ்வாருக்கு கீழ்ப்பாக்கம் மட்டும் நினைவுக்கு வரும் நுண்ணரசியல் யாதோ?
:)
//உமது பாடலில் சொற் பிழை இல்லை, இலக்கண பிழையும் இல்லைன்னு தான் நினைக்கிறேன். ஆனா ஒரு பெரிய பொருட் பிழை இருக்கு.
ReplyDeleteநீங்களா கண்டு பிடிக்க கொஞ்சம் டைம் குடுக்கறேன். சாயந்திரம் மீண்டும் வரேன். :))///
டோட்டல் சரெண்டர். கண்டிப்பா எதாச்சும் உள்,வெளி, கீழ், மேல் குத்தெல்லாம் இருக்கும். நீங்களே சொல்லிடுங்க.
//சந்தடி சாக்குல அல்வா தின்னா தொப்பை வரும்ன்னு உள்குத்து வெச்ச உம்மை நெல்லைகாரங்க எல்லாம் சேர்ந்து உதைக்க போறோம் பாருங்க. :))//
அல்வா தின்னா தொப்பை வரும்னு எங்கே சொல்லிருக்கேன். அல்வா தின்னுட்டு மதியம் தூங்குனா தொப்பை வரும்னு தானே சொல்லிருக்கேன்? நல்லா பாருங்க...ஹி...ஹி...
//கைப்பு உமது பாடலே தவரு என்கிரேன் :))//
ReplyDeleteஎன்னங்கங்கோ தவ'ரு' சுப்பு?
:)
//நானும் மொத தடவை பாக்கும்போது மிரண்டு போயிட்டேன். அப்புறம் கோனார் நோட்ஸ் வச்சிக்கிட்டு படிச்சா நல்லா சிரிப்பு வந்துச்சு. //
ReplyDeleteநன்னிப்பா திரு.
//
நீ ஆயிரத்தில் ஒரு கவிஞன், இனி "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்று உன்னை பார் போற்றும்!//
ஏன் உனக்கு இந்த கொலைவெறி?
:)
////ஆறு மாச குழந்தையோட தகப்பன் நான்னு தானே சொல்லிருக்கேன். வெண்பால அந்த பெண் குழந்தையோட வயசு ஆறு மாசம்னு எங்கேயாச்சும் சொல்லிருக்கேனா? //
ReplyDeleteதல, அப்படின்னா....? :))
போடுறா போனை அண்ணிக்கு. :p//
ஹலோ...மனுஷன்னா ஒரு நம்பிக்கை வேணுமய்யா :) இந்த வெண்பா ஒரு ஃப்யூச்சர் ப்ராஜெக்ட். என் பொண்ணு இன்னும் கொஞ்சம் பெருசானப்புறம் என்னாகும்னு ஒரு சின்ன கற்பனை இது...போதுமா?
அய்யா கவிஜர் கைப்புள்ளையாரே,
ReplyDeleteஇதுல எகனை மொகனை எங்கே. ஆனாலும் உங்க கவிஜ ரொம்ப நல்லாயிருக்கு.
//அத்தகைய தத்தித் தத்தி நடக்கும் சிறுகால்களைக் கொண்ட//
ReplyDeleteஆறு மாச குழந்தை தவழத் தானே செய்யும்? தத்தி தத்தி நடக்குமா என்ன? :))
//என் பொண்ணு இன்னும் கொஞ்சம் பெருசானப்புறம் என்னாகும்னு //
ஓ அப்படியா? அப்ப உம் பொருள் குற்றம் மன்னிக்கப்பட்டது. :))
இருந்தாலும் மெல்லிசா ஒரு டவுட்டு இருக்கு.
இன்று கட்டுண்டோம். பொறுத்திருப்போம்.
காலம் வரும்.
காட்சிகள் மாறும்!
அன்னிக்கு உங்கள அண்ணி கிட்ட போட்டு குடுத்ருவோம். :))
//இதுல எகனை மொகனை எங்கே. ஆனாலும் உங்க கவிஜ ரொம்ப நல்லாயிருக்கு.//
ReplyDeleteவாங்க பல்லவரே,
எதுகை மோனை எல்லாம் தேடப்பிடாது. இது ஒரு அமெச்சூர் வெண்பா.
:)
//ஓ அப்படியா? அப்ப உம் பொருள் குற்றம் மன்னிக்கப்பட்டது. :))//
ReplyDeleteநன்னி கட்டபொம்மரே :)
//இருந்தாலும் மெல்லிசா ஒரு டவுட்டு இருக்கு.
இன்று கட்டுண்டோம். பொறுத்திருப்போம்.
காலம் வரும்.
காட்சிகள் மாறும்!
அன்னிக்கு உங்கள அண்ணி கிட்ட போட்டு குடுத்ருவோம். :))//
ஏன்யா! ஏன்யா! ஏன் இந்த கொலைவெறி? அமிர் அஜ்மல் கசாப்புக்கு சொந்தக்கார பையன் மாதிரி...ஏன்? ஏற்கனவே ஆஃபீஸ் போய்ட்டு வந்து வேலாயுதம் வச்சி கத்திரிக்காய் நறுக்கிட்டு இருக்கேன்...இன்னும் சூலாயுதம் வச்சி துணி துவைக்கறதையும் பாக்கணும்னு ஆசையா இருக்கோ?
:(
//மேலே உள்ள நல்ல பாவிலே எனக்கு நல்லா புரிஞ்ச வரி //லூசாப்பாநீ// என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்!//
ReplyDeleteஅபி அப்பாவை வழிமொழிகின்றேன். அது சரி, இந்தப் பக்கம் நாங்கல்லாம் வரணுமா வேண்டாமா??
ம்ம்ம்ம்ம்???? அம்பிக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்துடுச்சே??? என்ன செய்யலாம்?? நான் தான் ஊரிலே இல்லைனு பெரிசா போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டுத் தானே போயிருக்கேன். அப்புறம் என்ன தனி மெயிலெல்லாம் அனுப்பிப் பாருனு வேறே சொல்லி இருக்கீங்க?? அவ்வளவு அழகா அப்டேட் பண்ணறீங்க என்னோட பதிவுகளை எல்லாம். :P:P:P:P:P:P:P:P:P