Friday, January 16, 2009

நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டு

நேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டை இளையராஜா பாடிருக்காரு, அதுல ஒரு பாட்டுல அவரோட பேரன் யதீஸ்வரனும்(கார்த்திக்ராஜா பையன்) ரெண்டு வரி பாடிருக்காரு. ஒரு பாட்டு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவங்க மொழியிலேயே பாடற பாட்டு, ஒரு பாட்டு யேசுதாஸ் பாடிருக்காரு. கைவீசி நடக்கற காத்தேங்கிற இந்தப் பாட்டும், இளையராஜாவும் அவங்க பேரனும் பாடிருக்கற "ஒரு வாண்டுக் கூட்டமே"ங்கிற பாட்டும் படத்துல இல்லையாம். படத்துல இல்லன்னாலும் இந்த பாட்டு ஒரு ரவுண்டு வரும்னு நான் நெனைக்கிறேன்.

இளையராஜா- பழனிபாரதி கூட்டணி பத்தி சொல்லியே ஆகனும். ராஜாவின் பாடல்களுக்கு அநேகமா வாலி தான் பாட்டெழுதுவாரு. ஆனா எப்பவாச்சும் ஒரு பாட்டு எழுதுற பழனிபாரதி பாட்டுங்க செம ஹிட்டு ஆகிடும். உதாரணத்துக்குச் சொல்லனும்னா - காதலுக்கு மரியாதையில் வர்ற "என்னைத் தாலாட்ட வருவாளா?", பிதாமகன்ல வர்ற "இளங்காத்து வீசுதே" இதையெல்லாம் சொல்லலாம். இந்த பாட்டுலயும் பழனிபாரதியின் வரிகள் ரொம்ப அருமையா இருக்கு. நந்தலாலா படத்துல மத்த பாட்டுகளும் நல்லாருந்தாலும்(எனக்கு பிடிச்சிருந்தாலும்), எல்லாருக்கும் பிடிக்குமாங்கிறது சந்தேகம் தான்...ஏன்னா பாட்டுங்க கொஞ்சம் ஸ்லோவா இருக்கும். ஸ்லோவா இருந்தாலும் திரைக்கதைக்குப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா நான் சொல்லற இந்தப் பாட்டு இசையிலயும் சரி, வரிகள்லயும் சரி, குரல்லயும் சரி எல்லாருக்கும் பிடிக்கும்னு நெனக்கிறேன். கேட்டுப் பாருங்க.

படம் : நந்தலாலா(2009)
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா
பாடியது : விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர்

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
அழகான கிளிக் குஞ்சே மெது மெதுவா கிளையில் நடந்திடப் பழகு

சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழக பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கெடைச்ச குயில்களின் பாட்டை உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கேட்டுப் பாருங்கன்னு சொல்லிட்டு...பாட்டு கேக்கறதுக்கு லிங்க் தரவேயில்லையேன்னு தானே கேக்கறீங்க? சிடி விக்கறதுக்காகத் தான் படத்துல இல்லாத பாட்டைக் கூட சிடில வச்சிருக்காங்க. அதை கூட சுட்டு நெட்டுல போடறது நியாயமா? சிடியில கேட்டுப் பாருங்க. இங்க இருக்கற வரிகள் மாதிரி பாட்டும் அருமை...அதுக்கு நான் கியாரண்டி.

19 comments:

  1. மீ த பர்ஷ்டு??? படிச்சுட்டு வரேன்!

    ReplyDelete
  2. ்நந்தலாசலா(2009

    இது என்ன நந்தலாசலா?? புதுப் பேரா இருக்கு?? பாட்டு தொலைக்காட்சியிலே வந்தால் கேட்டுட்டுச் சொல்றேன்! :)))))))

    ReplyDelete
  3. அண்ணாச்சி சொன்னா அது கண்டிப்பா சூப்பராத்தான் இருக்கும்!

    இளையராஜா நான் கடவுளில்,ரமணமாலையிலும் முழ்கிப்போயிருக்கும் நேரம் அடுத்த மெனு!:)

    ReplyDelete
  4. ஆஹா! தலைவிஜி! உங்களையும் இந்த நோய் தாக்கிடுச்சா? அடியேன் தன்யன் ஆனேன்.
    ;)

    ReplyDelete
  5. //இது என்ன நந்தலாசலா?? புதுப் பேரா இருக்கு?? பாட்டு தொலைக்காட்சியிலே வந்தால் கேட்டுட்டுச் சொல்றேன்! :)))))))//

    ஹி...ஹி...ஒரு சின்ன எழுத்துப் பிழை. படம் பேரு நந்தலாலா. எங்க தலைவரோட இசையில வெளிவந்துருக்கும் படம். இயக்கம் மிஷ்கின்.
    :)

    ReplyDelete
  6. //அண்ணாச்சி சொன்னா அது கண்டிப்பா சூப்பராத்தான் இருக்கும்!//

    என் மேல இம்புட்டு நம்பிக்கையா? ஹி...ஹி...நன்றி ஆயில்ஸ்.
    :)

    //இளையராஜா நான் கடவுளில்,ரமணமாலையிலும் முழ்கிப்போயிருக்கும் நேரம் அடுத்த மெனு!:)//

    நான் கடவுள்ல வர்ற பிச்சை பாத்திரம் பாட்டைப் பத்தி சொல்றீங்களா? ஏன்னா ரமணமாலை வந்து ஒரு 4-5 வருஷமாச்சே? புதுசா தலைவர் இசையில அய்யப்பன் பக்தி பாடல்களான "மணிகண்டன் கீத் மாலா"வும் இப்போ வந்துருக்கு. அது இல்லாம தெலுங்கு மலையாளத்துல ராஜாவோட புது படங்கள் வெளிவர இருக்கு.

    ReplyDelete
  7. இந்த வருஷம் நம்ம ராசா வருஷம் தான் ;))

    முதலில் நான் கடவுள் பாட்டே கேட்டு தீர்ந்தபாடு இல்ல அதுக்குள்ள அடுத்த படம்.

    நந்தலாலா எல்லா பாட்டும் சூப்பரு. எல்லாத்திலும் ஒரு தாய்மை இருக்கு.

    கைவீசி பாட்டு நீங்கள் சொல்வது போலவே வரிகளும் மிக அழகாக வந்திருக்கு. விஜய் ஜேசுதாஸ் குரலும் அருமையாக பொருத்தமாக இருக்கு.

    ReplyDelete
  8. தாலாட்டு கேட்க நானும்...

    இந்த பாட்டை கேட்டிங்களா தல...தெய்வத்தோட குரலும் பாட்டின் இசையும் பல இரவுகளில் பல பேருக்கு தாலாட்டாக அமையும்.

    மிஷ்கினின் உதவி பெண் இயக்குனர் வயிற்றில் நிறைமாதம் குழந்தையுடன் இந்த பாட்டின் ரீ-ரெக்காடிங் கேட்டுயிருக்காங்க.பாட்டை கேட்டு உள்ளுக்குள் குழந்தை அசைந்தாம் அதை அவரே தாய்மையுடன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு தாலாட்டு பாட்டு இந்த பாட்டு ;)))

    ரீரெக்காட்டிங்க நம்ம ராசா பின்னியிருக்கராம். படத்தில் இல்லாத பாட்டுகளை பற்றி மிஷ்கின் சொன்ன காரணத்தை சில பத்திரிக்கைகள் வேற மாதிரி எழுதுறாங்க என்னாத்த சொல்ல..;(

    மிஷ்கின் கூறி இருப்பாதை கேட்க இங்க போயி பாருங்கள் http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/17243.html

    தொடந்து ராசாவோட பாடல்கள் வருவதை நினைக்கும் போது விருமாண்டி படத்தில் வரும் பாட்டோ வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது

    எங்க இசையுலகத்து சாமி வெளியே வா...!!

    எங்க இசையுலகத்து சாமி வெளியே வா...!!

    ;)

    ReplyDelete
  9. \\நான் கடவுள்ல வர்ற பிச்சை பாத்திரம் பாட்டைப் பத்தி சொல்றீங்களா? ஏன்னா ரமணமாலை வந்து ஒரு 4-5 வருஷமாச்சே? புதுசா தலைவர் இசையில அய்யப்பன் பக்தி பாடல்களான "மணிகண்டன் கீத் மாலா"வும் இப்போ வந்துருக்கு. அது இல்லாம தெலுங்கு மலையாளத்துல ராஜாவோட புது படங்கள் வெளிவர இருக்கு.\\

    மணிகண்டன் கீத் மாலா கேட்டுயிருக்கேன் ஆனா இன்னும் வாங்கல..

    தல

    இந்தியில கூடஅபிதாப் & அபிஷேக் நடிக்கும் படத்துக்கு ராசா தான் இசை ;)

    ReplyDelete
  10. //வானம் பூமி எங்கும் தாய்மை இன்பம் கொஞ்சும்//

    வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்

    வார்த்தைய மட்டும் கொஞ்சம் மாறிடுச்சி.

    :)
    கேட்க கேட்க நல்லாருக்கலாம்.

    ReplyDelete
  11. //இந்த வருஷம் நம்ம ராசா வருஷம் தான் ;))//

    வாங்க கோபிநாத்,
    ஆரம்பமே அடிச்சு தூள் கெளப்பிருக்காரு. கேக்கவே ரொம்ப இனிப்பா இருக்கு.

    //
    நந்தலாலா எல்லா பாட்டும் சூப்பரு. எல்லாத்திலும் ஒரு தாய்மை இருக்கு. //

    சந்தேகமே இல்லாம. ரொம்ப நாளைக்கு அப்புறம் ராஜா இசையில் ஜேசுதாஸ் பாடிருக்கற "ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்துல" பாட்டும் ரொம்ப அருமையா இருக்கு.

    //கைவீசி பாட்டு நீங்கள் சொல்வது போலவே வரிகளும் மிக அழகாக வந்திருக்கு. விஜய் ஜேசுதாஸ் குரலும் அருமையாக பொருத்தமாக இருக்கு.//
    இந்த பாட்டை ஒரு வேளைக்கு ஒரு தரமாச்சும் கேட்டுடறேன். அதோட தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கேட்டுப் பாருங்கன்னும் சொல்லிட்டு இருக்கேன். அதுனால தான் இந்த போஸ்ட் கூட போட்டது.
    :)

    ReplyDelete
  12. //தாலாட்டு கேட்க நானும்...

    இந்த பாட்டை கேட்டிங்களா தல...தெய்வத்தோட குரலும் பாட்டின் இசையும் பல இரவுகளில் பல பேருக்கு தாலாட்டாக அமையும். //

    //மிஷ்கினின் உதவி பெண் இயக்குனர் வயிற்றில் நிறைமாதம் குழந்தையுடன் இந்த பாட்டின் ரீ-ரெக்காடிங் கேட்டுயிருக்காங்க.பாட்டை கேட்டு உள்ளுக்குள் குழந்தை அசைந்தாம் அதை அவரே தாய்மையுடன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு தாலாட்டு பாட்டு இந்த பாட்டு ;))) //


    மாட்டுப் பொங்கல் அன்னிக்கு வீட்டு பெரியவங்களுக்குப் படைச்சு கும்பிடறது வழக்கம். பூஜை அப்போ இந்த பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. வழக்கமா பாட்டை எல்லாம் நிறுத்த சொல்ற எங்க அப்பா...அம்மாவைப் பத்தின பாட்டு நல்லாருக்கு ஓடட்டும்னு சொன்னாரு. அம்மா பாட்டு அதுவும் தாலாட்டு பாட்டு எல்லாம் ராஜா சாரோட ஸ்பெஷாலிட்டியாச்சே?
    :)

    //ரீரெக்காட்டிங்க நம்ம ராசா பின்னியிருக்கராம். படத்தில் இல்லாத பாட்டுகளை பற்றி மிஷ்கின் சொன்ன காரணத்தை சில பத்திரிக்கைகள் வேற மாதிரி எழுதுறாங்க என்னாத்த சொல்ல..;(//

    //மிஷ்கின் கூறி இருப்பாதை கேட்க இங்க போயி பாருங்கள் http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/17243.html//

    சுட்டிக்கு நன்றி கோபிநாத். படிச்சிப் பார்க்கறேன்.

    //தொடந்து ராசாவோட பாடல்கள் வருவதை நினைக்கும் போது விருமாண்டி படத்தில் வரும் பாட்டோ வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது

    எங்க இசையுலகத்து சாமி வெளியே வா...!!

    எங்க இசையுலகத்து சாமி வெளியே வா...!!

    ;)
    //

    சூப்பராச் சொன்னீங்க. :)

    ReplyDelete
  13. //தல

    இந்தியில கூடஅபிதாப் & அபிஷேக் நடிக்கும் படத்துக்கு ராசா தான் இசை ;)
    //

    ஆமாம். சீனி கம் படத்தை இயக்குன அதே இயக்குனர் தான். பாலகிருஷ்ணன். படத்தோட பேரு "பா". அப்பா மகன் உறவைப் பத்தின படமாம் இது.

    :)

    ReplyDelete
  14. //வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்

    வார்த்தைய மட்டும் கொஞ்சம் மாறிடுச்சி.

    :)
    கேட்க கேட்க நல்லாருக்கலாம்.//

    ஹி...ஹி...அவசரமா தட்டச்சு செஞ்சதுல தப்பாயிடுச்சு தம்பி. இப்ப சரி செஞ்சிட்டேன். நன்னி ஆஃப் துபாய்.
    :)

    ReplyDelete
  15. சொக்கன் இங்கே இன்னொரு பாட்டை விவரப்படுத்தி இருக்காரு. இங்க பாருங்க.

    ReplyDelete
  16. நல்ல பதிவு, நன்றி நண்பரே!

    இரண்டு தகவல்கள்:

    1. ‘இளங்காத்து வீசுதே’ எழுதியது நா. முத்துக்குமார் என்று ஞாபகம், யாரேனும் உறுதி செய்வார்களா? பழநிபாரதி ராஜாவுக்கு நிறைய நல்ல பாடல்கள் எழுதியிருக்கிறார், சட்டென்று நினைவுக்கு வரும் உதாரணங்கள்: காதலுக்கு மரியாதை (எல்லாப் பாடல்களும்), கண்ணுக்குள் நிலவு (எல்லாப் பாடல்களும்), தோள் மேல தோள் மேல (பூமணி) ... அப்புறம் ஒரு லாங் லீவ்ல போயிட்டு உளியின் ஓசையில ஒரு பாட்டுக்குத் திரும்பி வந்தார் (’கல்லாய் இருந்தேன், சிலையாய் ஏன் வடித்தாய்’), இப்போ ’நந்தலாலா’வில் தொடர்கிறார்

    2. 'நந்தலாலா’வில் இன்னொரு பாட்டு, ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து’பற்றி நான் எழுதிய ஒரு பதிவு: http://nchokkan.wordpress.com/2009/01/17/nandhalala/

    ReplyDelete
  17. கடந்த ஒரு வாரமா தொடர்ந்து இந்த ரெண்டு படத்துப் பாட்டுகளைத் தான் கேட்டுக்கிட்டிருக்கேன்.
    'கை வீசி' பாட்டும், 'ஒரு வாண்டு கூட்டமே'யும் சூப்பர்...உற்சாகம் தூண்டும் பாடல் வரிகள் மற்றும் இசை(ராஜாங்கம்)தான்.
    'ஒண்ணுக்கொண்ணு' ஃபாசில்+ராஜா+கே.ஜே. காம்பினேஷன் பாட்டு கேட்கிற மாதிரி அற்புதமா இருக்கு.
    ஆனா ஃபர்ஸ்ட் லிசனிங்லயே புடிச்சது 'மெள்ள ஊர்ந்து' பாடல்தான். வரிகளும், பாடியவிதமும் (காதுக்குள் தாலாட்டுவது போன்ற குரலில்)ஒரு ஐந்து நிமிடப் பயணத்தை ஏற்படுத்திவிடுகிறது. பாடல் கேட்கையில் 'ஹொய்யா புது ரூட்டுல ' பாடலுக்கு வரும் படக்காட்சிகள் வந்து போகின்றது எனக்குள்.('டப டப ஓசை' என வரும் வரிகளை யார் பாடினாலும், வாசித்தது போல் இருக்கும். ராஜா பாடுகையில் ஒரு தனி அனுபவம், வார்த்தையில் சொல்லமுடியவில்லை தீண்டிச்சென்றது).

    'நான் கடவுள்' பாடல்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
    எனக்கு மிகவும் பிடித்த பீஸ், 'கண்ணில் காட்சி' பாடலில் பத்து செகண்டுக்கப்புறம் தொடங்கும் ரிதத்திற்கான ஆரம்ப இசை.
    'பிச்சைப் பாத்திரம்' டாப். சின்னதாகச் சிமிட்டி விட்டுப் போன மதுமிதாவின் ,'மாதா உன் கோயிலில்' பாடல்,நாக்கில் சொட்டிவிட்டுப் போன தேன் துளி.

    ReplyDelete
  18. ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
    அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
    அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

    ReplyDelete
  19. //அம்மா உன்ன பாத்தா வார்த்தை வர்ல மேலே தாலாட்டு பாட இங்க யாரா ராரிராரோ//
    இந்த பாடலை ஹெட்போனை போட்டு இரவில் தனிமையில் கேட்காமல் இருக்க கடவது... என்ன இந்த வயசுக்குமேல கண்ணுல தண்ணிய விட்டு இருந்த ஊரு தப்பா பேசும்... அதுவும் மேலே சொன்ன வரிகளை யாரு அவர அப்படி எல்லாம் பாட சொல்றா.....மனுஷன் வாழறதா இல்லையா... இப்படி மோடி மஸ்தான் வேல பண்ணிட்டு போயர்றார் மனுஷன்....நாம அப்படியே மந்திரிச்சு விட்ட மாதிரி திரியறது...என்ன ஒரு இசைத்தனம்..

    ReplyDelete