Tuesday, October 14, 2008

J&J - அக்டோபர் மாத PIT போட்டிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக நானே(!) பண்ண விளம்பரம் ஒன்னு கீழே இருக்குது பாருங்க. அது தான் இந்த மாச PIT போட்டிக்கான எனது புகைப்படம். நானே படம் எடுத்து, நானே ஒரு கான்செப்ட் தயாரிச்சு, நானே காப்பி எழுதி செஞ்சிருக்கேன். எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தன்மையைப் பற்றியோ அதன் மூலக்கூறுகளைப் பற்றியோ, அல்லது பயன்களைப் பற்றியோ அதிகமாக எதையும் சொல்லாமல், சில சமயம் தாங்கள் எத்தனை பொருட்களைத்(Products) தயாரிக்கிறோம், எங்கள் நிறுவனம் எவ்வளவு பெரிது, எத்தனை நாடுகளில் இருக்கிறோம், எத்தனை வருடங்களாக இருக்கிறோம் என்று சும்மா வெயிட் காட்டுவதற்காகக் கூட பல சமயங்களில் நிறுவனங்கள் சில கேம்பெயின்களை நடத்துவார்கள். அத்தகைய ஒரு வெயிட் காட்டும் விதமான விளம்பரம் தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக என் கற்பனையில் நானே தயாரித்தது. என் மகளுக்காக வாங்கி வைத்திருந்ததை எல்லாம் அடுக்கி ஒரு படம் புடிச்சி ஒப்பேத்தியாச்சு :)


இது முன்ன எடுத்து வைச்சது. சும்மா பார்வைக்கு.


படங்களின் மேலே க்ளிக் செய்து பார்த்தால் இன்னும் பெரிதாகத் தெரியும்.

27 comments:

  1. எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))

    ReplyDelete
  2. கொத்ஸ்ஸ்...ஹி...ஹி...அது உங்க மனபிராந்தி. நான் இன்னும் பெங்களூர்ல தானே இருக்கேன்?
    :)

    ReplyDelete
  3. வளர நன்னி ஜீவ்ஸ் அண்ணாச்சி.

    ReplyDelete
  4. தல,


    கலக்கீட்டீங்க, சூப்பரா வந்திருக்கு...

    ReplyDelete
  5. எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))

    ripeteeeeeeeeeee

    ReplyDelete
  6. பய புள்ளைங்க.. நல்லாவே போட்டோ எடுத்து விளம்பரமா பண்ணுதுங்க..

    ReplyDelete
  7. //இலவசக்கொத்தனார் said...

    எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))


    funny.

    படம் நல்ல இருக்கு.

    ReplyDelete
  8. அருமையான soft lighting மற்றும் முழுமையான விளம்பர அமைப்பு!
    வாழ்த்துகள்!!!

    //
    இலவசக்கொத்தனார் said...
    எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))
    //
    எனக்கும் மைல்டா ஒரு டவுட் இருக்கு:-)

    ReplyDelete
  9. அருமை!
    முதல் ப்ராடக்ட் இப்போதைய பயனுக்கு. அடுத்தது வரும்காலத்துக்கு
    :-))

    ReplyDelete
  10. //எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!!//
    ரிபீட்டே! இவர் சொன்ன மாதிரி உங்க ரெண்டாவது படத்துக்கும் நீங்க முதல் படத்துல போட்டு இருக்க விஷயம் சரியா இருக்கும்(இந்த "babies" தூக்கிட்டா;)

    முதல் படம் கான்செப்ட் அருமை! J&J பார்த்தா காசு கொடுத்து வாங்கிப்பாங்க;)

    ReplyDelete
  11. தாமதத்துக்கு மன்னிக்கனும் நண்பர்களே...

    ReplyDelete
  12. //தல,


    கலக்கீட்டீங்க, சூப்பரா வந்திருக்கு...//

    ரொம்ப நன்றிப்பா ராயலு. சிங்கப்பூர்லேருந்து போடற மொதல் கமெண்டுன்னு நெனக்கிறேன்.
    :)

    ReplyDelete
  13. //எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))

    ripeteeeeeeeeeee//

    வாங்க தலைவிஜி,
    இந்த ரிப்பீட்டேய் கூட வலதுசாரியா ஒத்தைக் கையாலே நீங்க போட்டதுன்னு நெனைக்கும் போழ் உண்மையிலேயே கண்ணு கலங்குது.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

    ReplyDelete
  14. //பய புள்ளைங்க.. நல்லாவே போட்டோ எடுத்து விளம்பரமா பண்ணுதுங்க..//

    நன்னி பூச்சாண்டியாரே...ரயில் வண்டியிலேயா வந்தீங்க?
    :)

    ReplyDelete
  15. ////இலவசக்கொத்தனார் said...

    எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!! :))


    funny.

    படம் நல்ல இருக்கு.//

    வாங்க truth,
    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. //கலக்கல் தல!!//

    நன்னிப்பா கப்பி. ஆபீசுல வளர ஆணியோ? ஜிடாக்ல ஆளையே காணோம் இப்பல்லாம்?

    ReplyDelete
  17. //அருமையான soft lighting மற்றும் முழுமையான விளம்பர அமைப்பு!
    வாழ்த்துகள்!!!//

    ரொம்ப நன்றி அம்பி.

    //எனக்கும் மைல்டா ஒரு டவுட் இருக்கு:-)//

    எல்லாம் இந்த கொத்தனார் கெளப்பி விட்டது.
    :)

    ReplyDelete
  18. //அருமை!
    முதல் ப்ராடக்ட் இப்போதைய பயனுக்கு. அடுத்தது வரும்காலத்துக்கு
    :-))//

    வாங்க திவா சார்,
    ரொம்ப நன்றிங்க.
    :)

    ReplyDelete
  19. ////எனக்கு என்னமோ ரெண்டு படத்தும் தொடர்பு இருக்கற மாதிரி இருக்கே!!//
    ரிபீட்டே! இவர் சொன்ன மாதிரி உங்க ரெண்டாவது படத்துக்கும் நீங்க முதல் படத்துல போட்டு இருக்க விஷயம் சரியா இருக்கும்(இந்த "babies" தூக்கிட்டா;)//

    எல்லா புகழும் கொத்தனார் ஒருவருக்கே. கொத்ஸ்...you stole the show :) உங்க கமெண்ட்னால நல்ல வியாபாரம் இந்த போஸ்ட்டுக்கு. நன்னி.

    //முதல் படம் கான்செப்ட் அருமை! J&J பார்த்தா காசு கொடுத்து வாங்கிப்பாங்க;)//
    மெய்யாலுமா? ரொம்ப நன்றிங்க சத்தியா.
    :)

    ReplyDelete
  20. தல, முத படத்துல முக்யமான ஒன்னை வேணும்னே விட்டுட்டு படம் எடுத்து இருக்கீங்க.

    அதையும் சேர்த்தா ரெண்டாம் படத்துக்கு ஒரு லிங்க் கிடச்சுடும். :))

    முத படம் ரெம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  21. //அருமையான soft lighting மற்றும் முழுமையான விளம்பர அமைப்பு!
    வாழ்த்துகள்!!!

    //

    தல, நான் இப்ப தான் வரேன், நல்லா பாருங்க அது அமல், அம்பி இல்ல. :))

    மனபிராந்தி இப்ப யாருக்கு?னு எனக்கு தெரிஞ்சு போச்சு. :p

    ReplyDelete
  22. //தல, முத படத்துல முக்யமான ஒன்னை வேணும்னே விட்டுட்டு படம் எடுத்து இருக்கீங்க. அதையும் சேர்த்தா ரெண்டாம் படத்துக்கு ஒரு லிங்க் கிடச்சுடும். :))//

    அது எது? மெய்யாலுமே புரியலை அம்பி...மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு...சீக்கிரம் சொல்லுங்க.


    //முத படம் ரெம்ப நல்லா இருக்கு//
    வளர நன்னிங்கங்கோ.

    ReplyDelete
  23. //தல, நான் இப்ப தான் வரேன், நல்லா பாருங்க அது அமல், அம்பி இல்ல. :))//

    அமல், அம்பி உங்க ரெண்டு பேரு கிட்டயும் சாரி கேட்டுக்கறேன். அவசரத்துல ஆள் மாறாட்டம் ஆகிப் போச்சு. க்ஷமிஞ்சண்டி.

    //மனபிராந்தி இப்ப யாருக்கு?னு எனக்கு தெரிஞ்சு போச்சு. :p//

    எல்லாம் எனக்கு தான் மன பிராந்தி, மன விஸ்கி, மன வோட்கா, மன பட்டை சாராயம்...எல்லாமே எனக்கு தான்.
    :)

    ReplyDelete
  24. கைப்ஸ், செய்முறை விளக்கம் ஒண்ணு எழுதி கடுதாசி போடுங்க.

    ReplyDelete
  25. Mr.கைப்புள்ள

    What are You Doing? this is 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 much. Even, your baby is so beauty, so for maintain their beauty use this. But you are fraud & Zealously (english arivu namakku kamminganna, so this word mean " Poramai")

    ReplyDelete